Posted tagged ‘ஏமன்’

ஏமன் நாட்டு போராளிகள் மெக்காவின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தினரா? அமெரிக்க-சவுதி நாடுகள் ஏமன் நாட்டு உள்விவகாரங்களில் தலையிடுவது.

ஒக்ரோபர் 29, 2016

ஏமன் நாட்டு போராளிகள் மெக்காவின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தினரா? அமெரிக்க-சவுதி நாடுகள் ஏமன் நாட்டு உள்விவகாரங்களில் தலையிடுவது.

huthis-accused-of-attacking-mecca-with-missiles-2

காபாவைக் காப்பவர்கள் யார்?: மெக்காவில் உள்ள காபா, மெதினா முதலியவற்றை இன்று சவுதி அரேபியா தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு நிர்வகித்து வருவதால், இஸ்லாத்தையே தான்தான் காக்கிறது என்பது போல காட்டிக் கொள்கிறது. ஆனால், ஆரம்பத்திலிருந்தே இரானுக்கு இது பிடிக்கவில்லை. ஒவ்வொரு ஹஜ் பயணத்தின் போதும், இந்த வேறுபாடு, ஏதாவது ஒரு வழியில் வெளிப்படும். இரான் முஸ்லிம்கள் பெரும்பாலோர் ஷியா என்பதினால், ஷியா-எதிர்ப்பு மூலம் வெளிப்படும், ஜிஹாதி, இஸ்லாமிய தீவிரவாத கூட்டத்தினர், இயக்கங்கள் முதலியற்றில் அதிகமாக இருப்பது சுன்னிகள் தாம். இதனால் தான், ஐசில் ஜிஹாதிகள் கூட ஷியாக்களைத் தாக்கிக் கொன்று வருகின்றனர். ஒருபக்கம் சுன்னி-ஷியா வித்தியாசம் இருந்தாலும், இவற்றுடன், போராளிகள்-தீவிரவாதிகள் சண்டையும், அமெரிக்க ஆதரவு-எதிர்ப்பு முதலியனவும் பின்னிப் பிணைந்துள்ளன. முன்னர் ஷாவின் ஆட்சியின் போது, அமெரிக்கா இரானுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தது. ஷாவின் ஆட்சி தூக்கியெரியப் பட்டப் பிறகு, அமெரிக்க விரோத கொள்கை பின்பற்ரப்பட்டு வருகின்றது.

houthi-militant

27-10-2016 வியாழக்கிழமை அன்று ஹௌத் போராளிகள் தாக்கினரா?: ஏவுகணையை வீசி தாக்குதல் ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஹவுத்தி இனப்போராளிகளை [Houthi rebels] ஒடுக்க சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் கடந்த ஆண்டு 2015 மார்ச் மாதத்தில் இருந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன[1]. இந்நிலையில், சவுதி அரேபியா நாட்டில் உள்ள இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்காவுக்கு தெற்கில் உள்ள அல்-தைப் [al-Taif] குறிவைத்து இன்று ஏமனில் உள்ள ஹவுத்தி இனப் போராளிகள் சாதா மாகாணத்தில் இருந்து 27-10-2016 வியாழக்கிழமை அன்று ஏவுகணையை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்[2] என்று செய்திகள் வந்துள்ளன.   இந்த ஏவுகணைகள் சி-802 என்ற [Chinese C-802] சைனாவின் கப்பல் தடுப்பு ஏவுகணையின் சிறந்த வகையைச் சேர்ந்ததாகும்.  சைனாவின் ஏவுகணைகள் எப்படி இவர்களுக்குக் கிடைக்கிறது என்பதை கவனிக்க வேண்டும்.

houthi-militant-yemeni-civil-war-position

ஹௌத் என்ற போராளிகள் யார்?: ஹௌத் என்ற போராளிகள் “அன்சார் அல்லா”, கடவுளை ஆதரிப்பவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள், ஷியைத் பிரிவைச் சேர்ந்த ஜெயித் குலத்தைச் சேர்ந்தவர்கள்[3]. சுன்னி முஸ்லிம்களுக்கும், இவர்களுக்கும் சில இறையியல் வித்தியாசங்கள் உள்ளன. 1960களிலிருந்தே, சவுதி அரேபியா, ஏமனின் உள்விவகாரங்களில் தலையிட்டு வருகின்றது. அமெரிக்க-சவுதி அடக்குமுறைகளினால் சுமார் 10,000 மக்கள் இறக்க நேர்ந்துள்ளது. அதில் 4,100 சாதாரண குடிமக்கள் ஆவர். தவிர, 3.2 மில்லியன் / 32,00,000, 32 லட்சம் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். வியாதி போன்றவற்றாலும் பாதிப்புள்ளது[4]. மனித உரிமைகள் பற்றி பேசும் அமெரிக்க இங்கு நடந்துள்ளவற்றிற்கு பொறுப்பேற்பதானால், அமெரிக்கா முதலில் அவ்விடத்தை விட்டு வெளியேற வேண்டும்[5]. சவுதிக்கு ஆதரவு கொடுப்பதையும், ஏமன் நாட்டு விவகாரங்களில் தலையிடுவதையும் நிறுத்திக் கொள்ளவேண்டும் என்றும் விமர்சகர்கள் எடுத்துக் காட்டுகின்றனர்[6].

houthi-militant-attack-mecca

ஏவுகணைகளை உபயோகிப்பதாக ஹௌதி போராளிகளின் மீது குற்றச்சாற்று: ஜூலை 14, 2006 அன்று C-802 ஏவுகணை மூலம் இஸ்ரேலின் ஏவுகணை கப்பலைத் தாக்கி [Israeli missile ship INS Hanit] சேதத்தை ஏற்படுத்தியது என்பதை நினைவு கூற வேண்டும். முதலில் சைனாவின் ஏவுகணைகள் எப்படி, இப்பகுதிகளில் உள்ள தீவிரவாதிகளிடம் வருகின்றன என்பதனை கவனிக்க வேண்டும். தீவிரவாதிகளுக்கு உபயோகமாக அவை உபயோகப்படுத்தப்படுகின்றன என்றால், அமெரிக்கா அதை எதிர்ப்பதில்லை என்பதும் வியப்பான விசயமே. ஆயுத உற்பத்தியைக் குறைக்க வேண்டும் என்று ஒருபக்கம் பிரச்சாரம் செய்தாலும். சைனா போன்ற நாடுகள் ஆயுதங்களை உற்பத்தி செய்து கொண்டுதான் வருகின்றன, அவை, ஜிஹாதிகளுக்கு சென்று கொண்டுதான் இருக்கின்றன. அமெரிக்க-சைன ஆயுத உற்பத்தி, உலகத்தில் எல்லை சண்டைகள், உள்நாட்டு போர்கள், ஜிஹாதி தாக்குதல்கள், ஐசில் போன்ற குரூர கொலைகள்-ஆக்கிரமிப்புகள் முதலியன இருக்கும் வரை, இருந்து கொண்டே இருக்கும். இவர்கள் எல்லோரும் தமது தீவிரவாதத்தை விட்டுவிட்டால், அமெரிக்க-சைன ஆயுத உற்பத்தி தொழிஸ்சாலைகள் எல்லாம் மூடப்படும் நிலை உண்டாகும்!

huthis-accused-of-attacking-mecca-with-missiles

ஹௌதி போராளிகள் குறி வைத்தது மெக்காவா இல்லையா?: ஹௌதி போராளிகள் தாங்கள் மெக்காவைத் தாக்க ஏழுகணைகளை உபயோகித்தனர் என்ற செய்தியை மறுத்துள்ளனர்[7]. இரானும் தங்களுக்கு சம்பந்தம் இல்லை என்று மறுத்துள்ளது. மெக்காவில் இருந்து சுமார் 65 கிலோமீட்டர் [40 miles] தூரத்தில் அந்த ஏவுகணையை சவுதி நாட்டின் விமானப்படைகள் தடுத்துநிறுத்தி, தாக்கி அழித்ததாகவும் சவுதி அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது[8]. சவுதி அரேபியா அமெரிக்க பேட்ரியாட் ஏவுகணைகளை [U.S.-made, surface-to-air Patriot missile batteries]  உபயோகித்தனர். இந்தத் தாக்குதலை உறுதி செய்துள்ள ஹவுத்தி போராளிகள், புனித நகரமான மெக்கா மீது தாக்குதல் தொடுக்கவில்லை என்றும் பரபரப்பாக இயங்கிவரும் ஜெட்டா விமான நிலையத்தைத்தான் குறித்து தாக்குதல் நடத்தியதாகவும் கூறியுள்ளது[9]. மொஹம்மது அல்-பெகைதி [Mohammed al-Bekheity] என்ற ஹௌதி தலைவர், “நாங்கள் மெக்காவுக்கு குறிவைக்கவில்லை. நாங்கள் மக்கம் மற்றும் புனித இடங்களை தாக்குவதில்லை,” என்றார்[10]. இதைப் பற்றி இப்பொழுது சர்ச்சை எழுந்துள்ளது[11].

irans-proxy-missile-as-alleged-by-american-interpretation

ஏமனின் இரானிய எதிர்ப்பு: யாமெனி பிரத மந்திரி அஹமது ஒபெய்த் பின் இத்தகைய தாக்குதலை ஊக்குவிக்க இரானின் மீது குற்றஞ்சாற்றியுள்ளார். “ஏமனில் மார்ச்.26, 2015 அன்று யுத்தம் ஆரம்பித்தது. ஹௌதி போராளிகள் தங்களது அரசியல் போட்டியாளர்கள் மற்றும் அரசிற்கு விரோதமாக போரில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு இரான் அல்லது பெய்ரூட்டிலிருந்து அவர்களுக்கு ஆதரவு கிடைத்து வருகிறது,” என்று பின் தகர் பிரெஞ்சு தூதுவர் ஏமன் கிரிஸ்டியன் திஸ்தியை சந்தித்தபோது கூறினார். இரானின் புரட்சி பாதுகாப்புப் படை [Iranian Revolutionary Guard Corps (IRGC)] மற்றும் ஹிஜ்புல் [Hezbollah] இவ்வாறு செயல்படுவது, அரசியல் திட்டத்தை இவ்வாறு புரட்சியாளர்களின் மூலம் தீர்த்துக் கொள்வதாகத் தெரிகிறது.

houthi-militant-carrying-flag

இரான் நீர்போக்குவரத்து பாதைகளை பிடித்துக் கொண்டு ஆதிக்கம் செல்லுத்த விரும்புகிறாதா?: இரான் பப் அல்-மன்டப் குடாவை [Bab al Mandab Strait] தன்னுடைய ஆதிக்கத்தில் கொண்டு வரவே இத்தகைய செயல்களை செய்து வருகின்றது. ஏனெனில், அதனை பிடித்து விட்டால், சூயஸ் கால்வாயை ஆதிக்கம் செய்யும் நிலை வந்துவிடும்[12]. ஹோர்மூஸ் கால்வாயையும் [Strait of Hormuz] பிடித்து விட்டால், அரேபிய நாடுகளிலிருந்து செல்லும் கப்பல்களை இரன் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடும்[13]. அமெரிக்கா மற்றும் சௌதி அரேபியா பரஸ்பர உடன்படிக்கை 1945லிருந்து 71 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. இத்தகைய நீர்வழி ஆதிக்கத்தின் மூலம், இரான் அந்த ஒப்பந்தத்தை வலுவிழக்கத்தான் திட்டம் தீட்டுகிறது என்று அமெரிக்கா குறை கூறுகிறது[14]. இரான் அமெரிக்காவிற்கு எதிராக தீவிரவாதத்தை உபயோகப்படுத்துகிறது என்று வாஷிங்டன் போஸ்ட் குறைகூறுகிறது.

© வேதபிரகாஷ்

29-10-2016

Middle east - who is for, who is against.jpg

[1] மாலைமலர், மெக்கா நகரம் மீது ஹவுத்தி போராளிகள் ஏவுகணை தாக்குதல்: சவுதி அரேபியா குற்றச்சாட்டு, பதிவு: அக்டோபர் 28, 2016 11:08

[2] http://www.maalaimalar.com/News/TopNews/2016/10/28110835/1047538/Saudi-Arabia-says-Yemen-rebels-fire-missile-toward.vpf

[3] The Houthis, known as Ansar Allah, or “Supporters of God” (who doesn’t claim to be that in the Middle East?), belong to the Zaydi sect, and are Shia-lite, maintaining some theological similarities with Sunnis.

[4] As a result of Washington’s support for Saudi ruthlessness, Yemen has suffered desperately. Roughly 10,000 people, including some 4100 civilians, have died, 3.2 million people (12 percent of the population) have been displaced, pestilence (in the form of Cholera) has hit the capital, and famine approaches, with more than half the population “food insecure,” according to the UN World Food Program. Eight in ten people need some outside aid.

http://www.cato.org/publications/commentary/america-should-quit-saudi-arabias-war-yemen-senseless-killing-must-stop

[5] CATO Institute, America Should Quit Saudi Arabia’s War in Yemen: the Senseless Killing Must Stop, By Doug Bandow, This article appeared in “Forbes” on October 25, 2016.

[6] http://www.cato.org/publications/commentary/america-should-quit-saudi-arabias-war-yemen-senseless-killing-must-stop

[7] The Washington times, Iran’s proxy missile attacks- The Islamic regime seeks control of Middle East waterways, By James A. Lyons – – Tuesday, October 25, 2016

[8] தமிழ்.ஒன்.இந்தியா, மெக்கா மீது ஏவுகணை ஏவிய ஏமன் தீவிரவாதிகள்தடுத்து அழித்த செளதி அரேபியா, By: Amudhavalli, Updated: Friday, October 28, 2016, 20:58 [IST]

[9] http://tamil.oneindia.com/news/international/yemeni-rebels-attack-holy-mecca-265932.html

[10] Mohammed al-Bekheity, a Houthi leader, denied that the missile targeted Mecca. “We do not target civilians and, in turn, we would not target holy areas,” he said.

http://www.aljazeera.com/news/2016/10/yemens-houthis-accused-firing-missile-mecca-161028132859767.html

[11] Al-Jazeera, Yemen’s Houthis accused of firing missiles at Mecca, October.28.11.40 pm

[12] http://www.washingtontimes.com/news/2016/oct/25/irans-proxy-missile-attacks/

[13] IBTimes, Yemen Rebels Target Saudi Holy City Of Makkah; Missile Intercepted And Destroyed, by Marcy Kreiter, 10/27/16 AT 8:48 PM.

[14] http://www.ibtimes.com/yemen-rebels-target-saudi-holy-city-makkah-missile-intercepted-destroyed-2438403