Posted tagged ‘எஸ். தமிழ்வாணன்’

சிறுமிகளின் திருமணத் தடுப்புச் சட்டம் 2006 (the Prohibition of Child Marriage Act, 2006) முஸ்லிம்களுக்கு செல்லுபடியாகுமா, ஆகாதா?

மார்ச் 10, 2015

சிறுமிகளின் திருமணத் தடுப்புச் சட்டம் 2006 (the Prohibition of Child Marriage Act, 2006) முஸ்லிம்களுக்கு செல்லுபடியாகுமா, ஆகாதா?

Saudi Arabian women slavery

முஸ்லிம்கள்  திருமணம்

தி இந்து 07-03-2015 அன்று முஸ்லிம்கள் திருமணத்தில் அதிகாரிகள் தலையிடுவதை நிறுத்தக் கோரி வழக்கு என்றும், சட்டம் அனைத்து மதத்தினருக்கும் பொதுவானது என்றும், இரு செய்திகள் போன்று வெளியிட்டது. 05-03-2015 அன்று சென்னை உயர்நீதி மன்றம் சிறுமிகளின் திருமணத் தடுப்புச் சட்டம் 2006 (the Prohibition of Child Marriage Act, 2006 )  எல்லொருக்கும் பொதுவானது, ஏனெனில், அது பெண்குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் பெண்களின் உடல்நலன் முதலியவற்றைக் கருத்திற்கொண்டு உருவாக்கப்பட்ட சட்டமாகும், என்று நீதிபதி சி.டி.செல்வம் எடுத்துக் காட்டினார்[1]. கடந்த நவம்பர் 23, 2012 அன்று நடைபெறவிருந்த அப்துர் காதிர் என்பவருடைய பெண்ணின் திருமணம், பெண்ணிற்கு 17 வயதுதான் ஆகிறது என்பதால், மாநில நலத்துறை அதிகாரி தடுத்து நிறுத்தினார். இதையெடுத்து மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டுக்கு செல்ல, அதிகாரியின் செயல் சரிதான் என்று தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து தொடர்ந்த அப்பீல் தான் அன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் வந்தது, அப்பொழுது, அப்பீல் தள்ளுபடி செய்யப்பட்டது. மதுரையில் அத்தகைய வழக்கம் அதிகம் இருப்பதினால், அதனைப் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடைபெற்றுவருகின்றன[2].

திருமணம் என்னும் நிக்காஹ்.3

திருமணம் என்னும் நிக்காஹ்

மதுரை நெல்பேட்டையைச் சேர்ந்த எம்.முகமது அப்பாஸ், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு[3]: முஸ்லிம் மதத்தினரின் திருமணங்கள் இஸ்லாமிய திருமணச் சட்டத்தின்கீழ் நடைபெறுகின்றன. இச்சட்டத்தின்கீழ், பெண் பருவம் அடைந்துவிட்டால் அவர் திருமணம் செய்து கொள்ளலாம். இஸ்லாமியச் சட்டப்படி பருவம் அடைவதும், மேஜராவதும் ஒன்றுதான். ஆனால், தமிழகத்தில் 15 முதல் 18 வயதுடைய முஸ்லிம் பெண்களுக்கு திருமணம் நடைபெறுவதை சமூக நலத் துறை அதிகாரிகள் தடுக்கின்றனர். முஸ்லிம் சட்டப்படி நடைபெறும் திருமணங்களை அதிகாரிகள் தடுக்க முடியாது. ஸ்ரீவில்லிபுத்தூர் மகாராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது நிரம்பிய ஆயிஷாபானுவுக்கு நாளை (8-ம் தேதி) திருமணம் நடக்கவுள்ளது. ஆனால், கடந்த 2-ம் தேதி மாவட்ட சமூக நலத் துறை அதிகாரிகள், போலீஸாருடன் எங்கள் வீட்டுக்கு வந்து ஆயிஷாபானுவை அழைத்துச் சென்றுவிட்டனர். அச்சிறுமியைக் காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர். அவரை பெற்றோர் சந்திக்க அனுமதிப்பதில்லை. முஸ்லிம் பெண்களின் திருமணத்தைத் தடுக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை. ஆயிஷாபானுவை விடுவிக்கவும், ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும். தமிழகத்தில் முஸ்லிம்கள் தனிச் சட்டப்படி நடைபெறும் திருமணங்களை, குழந்தைகள் திருமண தடைச் சட்டத்தை மேற்கோள் காட்டி தடுக்கக் கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் எஸ். தமிழ்வாணன், வி.எஸ். ரவி இஸ்லாமிய திருமணச் சட்டம் ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பீட்டர் ரமேஷ்குமார் வாதிட்டார். விசாரணைக்குப் பின், சிறுமி ஆயிஷாபானுவை மார்ச் 9-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர்[4]. அன்று நீதிமன்றம் விசாரித்து, பெண்ணை பெர்றோரிடம் ஒப்படைக்குமாறு ஆணையிட்டது. வழக்கையும் மார்ச் 1 வரை ஒத்திவைத்தது[5].

Saudi women wait for their drivers outsiகுழந்தைகள் திருமணத் தடைச் சட்டம் அனைத்து மதத்தினருக்கும் பொதுவானது என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது[6]. இஸ்லாம் தோன்றிய ஆரம்பக் காலங்களில் சூழ்நிலை காரணமாகவும் மற்ற பல்வேறு காரணங்களுக்காகவும் இஸ்லாமியர்களிடம் குழந்தைத் திருமணம் நடைபெற்றிருக்கலாம். அதுவே, இஸ்லாமியச் சட்டம் கிடையாது. இப்போது குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் என்பது ஒரு மதச்சார்பற்ற இந்தியச் சட்டம். இதில் குழந்தைகளின் உடல்நலன், கவுரவம், முன்னேற்றம், மனநிலை ஆகியவைதான் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. இந்த விஷயத்தில் மதத்தை இணைத்துப் பார்ப்பதும் முஸ்லிம்களுக்கு இந்தச் சட்டம் பொருந்தாது என்று வாதிடுவதும் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல[7]. மத்திய திருமணத் தடுப்புச் சட்டம் மதங்களுக்கு அப்பாற்பட்டது என்பதைச் சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும். கே.பி.எச். முகம்மது முஸ்தபா சொல்லிவிட்டார். என்னவாகும் என்று பார்க்க வேண்டும். அப்படியே விட்டுவிடுவார்களா அல்லது மொஹம்மது அஹம்மது கான் மற்றும் ஷா பானு (Supreme Court of India- Mohd. Ahmed Khan vs Shah Bano Begum And Ors on 23 April, 1985; Equivalent citations: 1985 AIR 945, 1985 SCR (3) 844) உச்சநீதி மன்ற தீர்ப்பு மாதிரி ஆகிவிடுமா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்!

Sha bano divorced in 1978

Sha bano divorced in 1978

சிறுமிகளின் திருமணத் தடுப்புச் சட்டம் 2006 (the Prohibition of Child Marriage Act, 2006) எங்களுக்கு செல்லுபடியாகாது: 1987களில் குறிப்பிட்ட

மற்றும் ஷா பானு வழக்கில், சிவில் முறை (Code of Civil Procedure) சட்டப்பிரிவு 125ன் படி, விவாகரத்து செய்யப்படும் மனைவுக்கு, ஜீவனாம்சம் கொடுக்கப்படவேண்டும் என்றுள்ளது. ஆனால், மொஹம்மது அஹம்மது கான் அவ்வாறு தரமுடியாது என்றபோது, ஷா பானு எதிர்த்து மேல்முறையீடு செய்தபோது, உச்சநீதிமன்றம் தகுந்த ஜீவனாம்சம் கொடுக்கப்படவேண்டும் என்று உறுதி செய்தது[8]. இதனையடுத்து முஸ்லிம்கள் தங்கள் மதவிவகாரங்களில் அரசு தலையிடக்கூடாது என்று ஆர்பாட்டம் செய்தனர். முஸ்லிம்களை தாஜா செய்ய, அப்பொழுதைய ராஜிவ் காந்தி அரசு, ஒரு புதிய சட்டத்தை எடுத்து வந்தது. அதேபோல, இப்பொழுதும், சிறுமிகளின் திருமணத் தடுப்புச் சட்டம் 2006 (the Prohibition of Child Marriage Act, 2006) எங்களுக்கு செல்லுபடியாகாது, எங்கள் சட்டப்படிதான், நாங்கள் திருமணம் செய்து வைப்போம் என்றால் அரசு என்ன செய்யும் என்று நோக்கத்தக்கது. மேலும், இப்பொழுது மோடி அரசு இருப்பதால், பிரச்சினை அடக்கித்தான் வாசிக்கப்படும்.

முஸ்லிம் விவாகரத்தில் உண்டாகும் பிரச்சினைகள்

முஸ்லிம் விவாகரத்தில் உண்டாகும் பிரச்சினைகள்

முஸ்லிம்களுக்கு சிவில் சட்டம் தனியாக இருக்கிறது: மதச்சார்பற்ற இந்தியாவில் கிரிமினல் சட்டங்கள் மட்டுமே அனைவருக்கும் பொதுவாக இருக்கின்றன. ஆனால் சிவில் சட்டங்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் ஆகியோ​ருக்குத் தனித்தனியாக இருக்கின்றன. இதில் கிறிஸ்தவர்களுக்கு திருமணப் பதிவு மற்றும் விவாகரத்து தவிர மற்ற அனைத்தும் இந்திய சிவில் சட்ட வரம்போடு இணைந்துகொள்கின்றன. ஆனால், முஸ்லிம் தனிநபர் சிவில் சட்டம் மட்டுமே வித்தியாசமானது.

  1. உயிலிலா இறக்கம் (Intestate succession)
  2. திருமணம் (Marriage)
  3. திருமண இழப்பு (Dissolution of Muslim Marriage)
  4. மணமகன் மணமகளுக்கு அளிக்கும் திருமணக் கொடை(mahar)
  5. ஜீவானாம்சம் (Maintenance).
  6. பெண்கள் சிறப்புச் சொத்து (Special Property of females)
  7. காப்பாளர் பொறுப்பு (Guardianship)
  8. கொடை (Gift)
  9. வக்ஃபு (wakf)
  10. அறக்கட்டளை அமைப்பும் அதன் சொத்தும் (Trust and Trust properties).

மேற்கண்ட 10 அம்சங்களின் அடிப்படையில்தான் முஸ்லிம் தனிநபர் சட்டம் இந்தியாவில் இன்னும் தொடர்கிறது. சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்தியாவில் இதுகுறித்த பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டதால், 1973-ல் அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் (All India muslim personal law board) ஏற்படுத்தப்பட்டது. இதில் இந்தியாவின் முன்னணி மத அறிஞர்கள் மற்றும் பெண்கள் உட்பட 200 மேற்பட்டோர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இதன் பணி, முஸ்லிம் தனிநபர் சட்டத்தைக் காப்பதுடன் அதன் அமலாக்கத்தைக் கண்காணிப்பது[9].

இந்திய முஸ்லிம்கள் பொதுசட்டத்திற்கு ஒப்புக்கொள்வார்களா?: இந்தியாவைப் பொறுத்தவரை முஸ்லிம் தனிநபர் சட்டத்தை அமலாக்குவதும், அதைத் தொடர்ந்து செயல்படுத்துவதும் ஊர் கூட்டமைப்பு என்றழைக்கப்படும் ஜமாஅத்துகள். அதன் பின்புலமாக இருக்கும் மத அறிஞர்கள் மற்றும் அரசாங்கத்தால் நியமிக்கப்படும் காஜிகள். இந்த அதிகாரபூர்வமற்றக் கட்டமைப்பு இந்தியாவில் தொடர்ந்த நிலையில் பல இஸ்லாமிய குடும்பம் சார்ந்த சிக்கல்கள் பலமுறை நேரடியாக நீதிமன்றங்களுக்குச் சென்றிருக்கின்றன. அதில் பெண்களே பெரும்பாலும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பாதிக்கப்படுகிறார்கள். நீதிமன்றங்கள் தலையிட்டு தார்மீக மற்றும் சட்ட நெறி​முறையிலான தீர்ப்புகளைச் சொன்ன சம்பவங்களும் இருக்கின்றன[10]. இந்தியாவில் முஸ்லிம் பெண்கள் சார்ந்த பிரச்னைகள் பலமுறை நீதிமன்றங்களுக்குச் சென்றிருக்கின்றன. குடும்ப நீதிமன்றங்களின் தேவையும் தவிர்க்க முடியாதது. இதற்கான குரல்கள் இந்தியா முழுவதும் பலதரப்பினராலும் எழுப்பப்படுகின்றன. சமூகப் பொருளாதார நிலைமைகளில் இந்திய முஸ்லிம்கள் மிகவும் பின்தங்கி இருக்கும் சூழலில், அவர்களின் முன்னேற்றத்துக்கு  சட்டப் பாதுகாப்பு மிகஅவசியம். எல்லோரும் இதுகுறித்து யோசிக்க வேண்டிய தருணம் இது என்று எச்.பீர்முஹம்மது என்பவர் ஜூனியர் விகடனில் எழுதியிருந்தார்[11].

வேதபிரகாஷ்

© 10-03-2015

[1] http://zeenews.india.com/news/india/child-marriage-prevention-act-secular-in-nature-hc_1557096.html

[2] http://www.thehindu.com/news/cities/Madurai/police-on-zero-child-marriage-campaign/article5420719.ece

[3]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/article6968917.ece?utm_source=vuukle&utm_medium=referral

[4] தி இந்து, முஸ்லிம்கள் திருமணத்தில் அதிகாரிகள் தலையிடுவதை நிறுத்தக் கோரி வழக்கு, Published: March 7, 2015 09:47 ISTUpdated: March 7, 2015 10:06 IST

[5] http://www.business-standard.com/article/pti-stories/hc-directs-madurai-officials-to-hand-over-rescued-girl-to-115030901322_1.html

[6] கே.பி.எச். முகம்மது முஸ்தபா, திருநெல்வேலி சட்டம் அனைத்து மதத்தினருக்கும் பொதுவானது, Published: March 7, 2015 10:37 IST; Updated: March 7, 2015 10:54 IST.

[7]http://tamil.thehindu.com/opinion/letters/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81/article6969002.ece

[8] http://indiankanoon.org/doc/823221/

[9] http://www.vikatan.com/article.php?aid=33524

[10] அதில் புகழ்பெற்றது ஷாபானு வழக்கு. ஷாபானு வழக்கின் தீர்ப்பை விமர்சித்தவர்கள் அந்த பெண் ஏன் நீதிமன்றத்திற்கு சென்றாள்? அவளை செலவுசெய்து நீதிமன்றத்துக்கு செல்ல நிர்பந்தப்படுத்திய சூழல் எது என்பது குறித்து எதுவும் பேசுவது இல்லை. விவாதிப்பதும் இல்லை என்று எடுத்துக்காட்டினார். Supreme Court of India, Mohd. Ahmed Khan vs Shah Bano Begum And Ors on 23 April, 1985; Equivalent citations: 1985 AIR 945, 1985 SCR (3) 844.

[11] எச்.பீர்முஹம்மது, முஸ்லிம் பெண்களும் கோர்ட்டுக்கு வர வேண்டும்!, ஜூனியர் விகடன் – 19 Jun, 2013.