Posted tagged ‘எஸ்டிபிஐ’

கரோனா வைரஸ் / கோவிட்-19 தொற்று வியாதியும், முஸ்லிம்களும், தனிமைப்படுத்தலும், நோய்தீர்க்கும் முயற்சிகளும், முஸ்லிம் நோயாளிகளின் அடாவடித் தனங்களும்! [2]

ஏப்ரல் 7, 2020

கரோனா வைரஸ் / கோவிட்-19 தொற்று வியாதியும், முஸ்லிம்களும், தனிமைப்படுத்தலும், நோய்தீர்க்கும் முயற்சிகளும், முஸ்லிம் நோயாளிகளின் அடாவடித் தனங்களும்! [2]

Ghaziabad hospital, Tabiq men roam nude, India Today

நாடு முழுவதும் தப்லீக் ஜமாத் உறுப்பினா்கள் 25,500-க்கும் மேற்பட்டோர் அவா்களுடன் தொடா்பில் இருந்தவா் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனா்: நாடு முழுவதும் தப்லீக் ஜமாத் உறுப்பினா்கள் 25,500-க்கும் மேற்பட்டோரும் அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்[1]. மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலா் புண்ய சலீலா ஸ்ரீவாஸ்தவா, இந்தத் தகவலை தெரிவித்தார். இதுகுறித்து அவா், செய்தியாளா்களிடம் 06-04-2020, திங்கள்கிழமை மேலும் கூறியதாவது[2]: தில்லியில் கடந்த மாதம் நடைபெற்ற மாநாட்டில் நாடு முழுவதும் இருந்து 9,000 போ் கலந்து கொண்டனா். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டினா் பலரும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனா். அவா்கள் மூலமாக பிறருக்கு தொற்று பரவி, மாநாடு முடிந்து ஊா் திரும்பியவா்களால், பலருக்கும் நோய்த் தொற்று வேகமாக பரவியது. இதனிடையே, ஹரியாணாவில் உள்ள 5 கிராமங்களில் தப்லீக் ஜமாத் உறுப்பினா்கள் தங்கியிருந்தனா். இதையடுத்து, அந்த கிராமங்களுக்கு சீல் வைக்கப்பட்டதுடன், அங்கு வசிப்பவா்கள் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனா்.

25,500 Tabliq members quarantined, Dinamani, 07-04-2020

தப்லீக் ஜமாத் உறுப்பினா்கள் தனிமைப் படுத்தப் படுவது: மேலும், நாடு முழுவதும் தப்லீக் ஜமாத் உறுப்பினா்கள் 25,500-க்கும் மேற்பட்டோரும் அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களும் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனா். இந்த மாநாட்டில் வெளிநாடுகளைச் சோ்ந்த 2,083 உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். அவா்களில், 1,750 போ் கருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனா். மத்திய, மாநில அரசுகளின் மாபெரும் தேடுதல் வேட்டைக்குப் பிறகு தில்லி ஜமாத் உறுப்பினா்களும் அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களும் அடையாளம் காணப்பட்டனா். அவா்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ உதவிகள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உள்துறைச் செயலா் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார். மேலும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்குமாறும் அவா் அறிவுறுத்தியுள்ளார் என்றார் ஸ்ரீவாஸ்தவா. அதாவது, இங்கு அவர்களை நோயாளிகளாகத்தான் மதிக்கிறார்களே தவிர, மதரீதியில் பார்க்கவில்லை.

Tabliq affected more,hindustan times, 05-04-2020

முஸ்லிம்கள் மீது ஏன் குற்றாஞ்சாட்டப் படுகிறது?:  இதேபோல மற்ற மாநிலங்களிலும், தப்லீக் உறுப்பினர்கள் ஆஸ்பத்திரிகளில் தாகாத செயல்களில் ஈடுபடுவதாக செய்திகள் வந்தன. உடனே, ஏதோ ஒட்டு மொத்தமாக ஊடகங்கள் இஸ்லாத்திற்கு எதிரானது போன்ற கூக்குரல்களும் எழுந்தன. இஸ்லாம் அரசியல் கட்சிகளுக்கு சார்பாக உள்ள அரசியல்கட்சிகள் அதற்கு ஆதரவு தெரிவித்து, அறிக்கைகள் விட்டன. அசாம் மாநில சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் ஹிமந்தா பிஸ்வா சர்மா. அசாமில், கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக தீவிர நடவடிக்கைளை எடுத்து வருகிறார். இந்நிலையில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 8 பேருடன் தொடர்புடைய 42 பேர், குவாஹாட்டிக்கு அருகிலுள்ள கோலாகாட் பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனையில் தனிமையில் வைக்கப்பட்டிருந்தனர். அந்த 8 பேரும் டெல்லி நிஜாமுதீனில் நடந்த முஸ்லிம்மத நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tabliq muslims spit in hospital , Tamil Hindu 05-04-2020 - 2

கௌஹாத்தியில் அமைச்சர் வருகைக்கு முன்னதாக தனிமை வார்டில் இருந்தவர்கள் எச்சில் துப்பியதால் பரபரப்பு: இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை 03-04-2020, மருத்துவமனைக்கு அமைச்சர் ஹிமந்தா வருவதாக இருந்தார். ஆனால் அதற்கு முன்னதாக தனிமை வார்டில் இருந்தவர்கள் மருத்துவமனை வளாகம் முழுவதும் எச்சில் துப்பினர்[3]. மேலும் ஜன்னல் வழியாகவும் எச்சிலைத் துப்பினர். எச்சில் மூலம் நோய் பரவும் என்பதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தடுக்க வந்த டாக்டர்கள், செவிலியர்கள் மீதும் அவர்கள் எச்சில் துப்பினர்[4]. இதுகுறித்து அமைச்சர் ஹிமந்தா கூறும்போது, “இங்கு தனிமை வார்டில் வைக்கப்பட்ட 42பேரும் தங்களுக்கு நோய் இல்லை என்று நம்புகின்றனர். ஆனால் சந்தேகத்தின் பேரிலேயே அவர்களை நாங்கள் கட்டாயப்படுத்தி அழைத்து வந்துள்ளோம். இப்படி துப்பினால் மற்றவர்களுக்கும் நோய் பரவும் என்பதைஅவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். அவர்கள் வீட்டைச் சேர்ந்தபெரியவர்கள் இதை அவர்களுக்கு புரியவைக்கவேண்டும். அவர்கள் எச்சில் துப்புவதைத் தடுக்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்றார். இங்கும், அத்தனை நடந்தும் அவர்களை நோயாளிகள் போலத்தான் நடத்தப் பட்டனர். “இப்படி துப்பினால் மற்றவர்களுக்கும் நோய் பரவும் என்பதைஅவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். அவர்கள் வீட்டைச் சேர்ந்தபெரியவர்கள் இதை அவர்களுக்கு புரியவைக்கவேண்டும்,” என்று சொன்னதை கவனிக்க வேண்டும்.

Tabliq misbehave, spit, etc, Dinamani, 05-04-2020

06-04-2020 முஸ்லிம் இயக்கங்கள் கூடி தீர்மானங்கள் போட்டது, ஊடகங்களுக்கு அறிவித்தது: ஊடரங்கு நீக்கப்படும்வரை பள்ளிவாசல்களில் கூட்டு தொழுகை நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது[5]. இதுதொடர்பாக இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது- தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், எஸ்டிபிஐ மற்றும் தப்லீக் ஜமாஅத் ஆகிய அமைப்புகளின் தலைவர்கள் பங்கு கொண்ட ஆலோசனை கூட்டம் சென்னை பெரியமேட்டில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்[6]:

  1. நமது வாழ்நாளில் இதுவரை காணாத கொடிய கொரோனா நோய் கிருமி முழு உலகத்தையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் நமது சமூக மக்கள் அனைவரும் தொடர்ந்து அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம். தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் பல்வேறு சமுதாய இயக்கங்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று தமிழகத்தில் அனைத்து பள்ளிவாசல்களிலும் எவ்வித தொழுகையும் நடைபெறுவதில்லை. இதே நிலை முழுமையான முடக்கம் நீக்கப்படும் வரை தொடர வேண்டுமென்று அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகளையும் மக்களையும் கேட்டுக் கொள்கிறோம்.
  2. கொரோனா அவசர நிலையில் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள், காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு எம் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். கொரோனா எதிரொலியாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களும் தனிமைப்படுத்தப்பட்டவர்களும் மருத்துவர்கள் உள்பட அனைத்து அரசு துறையினருக்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். கொரோனா தொடர்பாக தமிழக அரசு நல்வாழ்வு துறையின் சார்பாக வீடுதோறும் நடைபெறும் ஆய்வுக்கு மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு வலியுறுத்துகிறது.
  3. கொரோனா நோய், அதன் பரவல், அதனால் பாதிக்கப்பட்டவர்கள் முதலியவை பற்றி சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றது. சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் அனைத்தும் நம்பகத்தன்மை உடையது அல்ல. எனவே கேட்டதையெல்லாம் ஆய்வில்லாமல் பரப்புவது ஒரு முஸ்லிமின் பண்பு அல்ல. இந்த அடிப்படையில் சமூக வலைத்தளங்களில் வருபவை அனைத்தையும் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.
  4. கொரோனாவின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள், தனிமைப்படுத்தப்படும் நிலையில் உள்ளவர்கள் தாங்கள் சந்திக்கும் இடர்பாடுகள் குறித்து சமூக ஊடகங்களில் பரப்பாமல் 7373736085 என்ற கொரோனா அவசர உதவி மையத்தின் எண்ணுக்குத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். இந்த எண்ணில் பதிவு செய்யும் தகவல்கள் அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு இடர்பாடுகள் நீக்கப்பட வழி வகை காண்பதற்கு இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

© வேதபிரகாஷ்

07-04-2020

Corona danger from the foreigners hiding in the Delhi mosque, Tamil Hindu 05-04-2020 - 1

[1] தினமணி, தப்லீக் ஜமாத் உறுப்பினா்கள் 25,500 போ் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனா்: மத்திய உள்துறை அமைச்சகம் தகவல், By DIN | Published on : 07th April 2020 02:44 AM

[2] https://www.dinamani.com/india/2020/apr/07/25500-tabliq-jamaat-members-have-been-rehabilitated-home-ministry-3395938.html

[3] தமிழ்.இந்து, அமைச்சர் வருகைக்கு முன்னதாக தனிமை வார்டில் இருந்தவர்கள் எச்சில் துப்பியதால் பரபரப்பு, செய்திப்பிரிவு, Published : 05 Apr 2020 08:12 am, Updated : 05 Apr 2020 08:12 am

[4] https://www.hindutamil.in/news/india/547986-corona-patients-spitting.html

[5] என்.டி.டி.வி.தமிழ், ஊடரங்கு முடியும்வரை மசூதிகளில் கூட்டு தொழுகை நடைபெறாது‘ – இஸ்லாமிய அமைப்புகள் அறிவிப்பு, Written by MusthakUpdated: April 06, 2020 10:52 pm IST.

[6] https://www.ndtv.com/tamil/mass-prayer-will-not-be-conducted-in-masjids-till-the-lock-down-end-said-tamilnadu-all-islamic-movem-2207184

தேவிபட்டினம் கோவில் திருவிழாவில் முஸ்லிம்கள் கல்வீச்சு, ரகளை

ஜூன் 3, 2013

தேவிபட்டினம் கோவில் திருவிழாவில் முஸ்லிம்கள் கல்வீச்சு, ரகளை

SDPI Muslims attack while others looka at 31-05-2013

ஸ்ரீமுனியப்பன்கோவில்திருவிழா, காவடி, ஊர்வலம்: ராமநாதபுரத்தில் உள்ள தேவிபட்டினம் கோவில் விழாவில் ஹிந்துக்களின் மேல் த.மு.மு.க முஸ்லிம்கள் கண்மூடித்தனமான தாக்குதல் என்றும், எஸ்டிபிஐ [Social Democratic Party of India (SDPI)] தாக்கியது என்றும் செய்திகள் வந்துள்ளன. அதாவது ஒன்று முஸ்லிம்கள் அத்தகைய ஒன்றிற்கு மேற்பட்ட அடையாளங்களை வைத்துள்ளனர் போலும். தமிழ் நாட்டின் தெற்கே தேவிபட்டினம் என்ற ஊர், ராமநாதபுரத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமம். ஹிந்துக்களின் புகழ் பெற்ற நவபாஷணம் கோவில் அமைந்து உள்ள பகுதி. அந்த பகுதியில், இந்துக்களான, வன்னியர் படையாட்சி சமூக மக்கள் அதிகமாக வசிக்கும் இடம். 100 ஆண்டுகளுக்கு மேல் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் ஸ்ரீமுனியப்பன் கோவில் திருவிழா இந்த ஆண்டும், வைகாசி நாளில் சீரும் சிறப்புமாக தொடங்கியது. முதல் நாள் நிகழ்ச்சியாக அம்மன் திருவீதி உலா குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என பக்தி பரவசத்துடன் ஊர்வலம் தொடங்கியது. அப்போது பக்தர்கள் பால்குடம் எடுத்து கிழக்கு தெரு வழியாக மேள தாளத்துடன் ஊர்வலமாக சென்றனர்.

ஒப்புக்கொண்டமுஸ்லிம்கள்எதிர்த்தல், தாக்குதல்: ஊர்வலம் தொடங்கிய 30 நிமிடங்களில் நாம் அதே பகுதியில் உள்ள பள்ளி வாசல் அருகே சென்ற போது ஆரம்பித்தது பிரச்சனை. ஏற்கெனவே மாலை 6.45ற்குள் மசூதியைக் கடந்து செல்ல வேண்டும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது[1]. ஆனால், திடீரென்று மேளதாளங்களை வாசிக்கக் கூடாது என்று எஸ்டிபிஐ முஸ்லீம்கள் எதிர்ப்புத் தெரிவித்து, ஊர்வலத்தை நிறுத்தினர்[2]. இஸ்லாமியர்கள் சாமி ஊர்வலம் அந்த வழியாக செல்ல கூடாது என்றலார்பாட்டம் செய்ய ஆரம்பித்தனர். ஊர்வலம் பள்ளி வாசல் அருகே சென்ற போது பட்டாசு வெடித்ததாக கூறப் படுகிறது[3]. உடனடியாக போலீஸார் பிரச்சினையைத் தீர்க்கப் பேசிப்பார்த்தனர். ஆனால், அதற்குள், 60-70 எஸ்டிபிஐ முஸ்லீம்கள் கோயில் அருகே விழா நடக்கும் இடத்திற்குச் சென்று கூட்டத்தின் மீது கற்களை வீசி தாக்க ஆரம்பித்தார்கள். இதனை யாரும் எதிர்பார்க்கவில்லை. முதலில் பயந்து போன திருவிழா கூட்டத்தினர், பிறகு சுதாரித்துக் கொண்டு, திரும்ப தாக்க யத்தனித்தபோது, போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டனர்[4].

கோவிலுக்குஅருகில்சென்றுஇந்துக்களைத்தாக்கியமுஸ்லிம்கூட்டம்: நியாயம் கேட்டவர்களை அடிக்க ஆரம்பித்து விட்டனர். ஊர்வலத்தில் வந்த குழந்தைகள், பெண்கள், முதியவர் என்று பார்க்காமல் எல்லோரையும் தாக்க தொடங்கினர். கோவிலுக்கு சென்ற அப்பாவி ஹிந்துக்கள் அடிபட்டு திரும்ப ஆரம்பித்தனர். மேளதாளங்கள் கிழிக்கப்பட்டன, எல்லாவற்றையும் கற்களால் அடிக்க தொடங்கினர்[5]. அப்பாவி பெண்கள், முதியோர் என்ன செய்வது என்று தெரியாமல் ஓட தொடங்கி விட்டனர். இதை கண்டு கொதித்த அந்த பகுதி ஹிந்துக்கள் ஒன்று இணைந்து பதில் தாக்குதலில் இறங்கிய பின்னர் தான் இஸ்லாமியர்களின் தாக்குதல் அடங்கியது. அங்கு MLA மற்றும் பஞ்சாயத்து தலைவர் இருவரும் இஸ்லாமியர்கள் என்பதால் நியாயம் இல்லாமல் தவித்தனர் ஹிந்துக்கள். இது முற்றிலும் அரசியல் வாதிகளின் துணையோடு நடந்த தாக்குதல் என்றும் கோவில் நிர்வாகிகள் மட்டும் பொது மக்கள் குரல். அப்பாவி ஹிந்துக்கள் அடி பட்டு, காயப்பட்டு உயிர் பிழைக்க ஓடியது கொடுமை. பெரும்பான்மை சமூகம் ஒரு நாட்டில் அடிமைப் பட்டு கிடப்பது இந்த தேசத்தில் மட்டும் தான்[6] (இது இந்துக்கள் தரப்பில் சொல்லப்பட்டதாக எடுத்துக் கொள்ளப்படுகிறது).

போலீஸார்வானத்தைநோக்கிதுப்பாக்கிசூடு: ராமநாதபுரம் அருகே நடந்த கோயில் திருவிழாவின் போது ஏற்பட்ட கலவரத்தை அடக்க போலீஸார் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் அங்கே பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. ராமநாதபுரம் அருகே உள்ள தேவிபட்டினத்தில் முனியசாமி கோயில் ஒன்று உள்ளது. அந்த வருடாந்திர கோயில் திருவிழாவில் நேற்று காவடி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. வேல் காவடி மற்றும் பால் காவடி எடுத்த பக்தர்கள் தேவிபட்டினம் தெற்கு தெரு வழியாக சென்றுள்ளனர். அந்த பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றின் அருகில் இருந்த சிலர் காவடி எடுத்து வந்த பக்தர்கள் மீது கற்களை வீசியுள்ளனர். இதையடுத்து காவடி எடுத்து வந்தவர்களும் பதிலுக்கு கல்வீசியுள்ளனர். இதனால் இரு தரப்பினரும் பலமாக மோதிக்கொண்டுள்ளனர். இதையடுத்து போலீஸார் தலையிட்டும் அமைதி ஏற்படவில்லை. இதனால் கலவரத்தை கட்டுபடுத்த போலீஸார் வானத்தை நோக்கி 3 முறை துப்பாக்கியால் சுட்டு கலவரத்தில் ஈடுபட்டவர்களை விரட்டினர்[7]. இதன் பின் தேவிபட்டணத்தில் அமைதி திரும்பியது.

புகார்கொடுக்கப்பட்டதால்தேவிபட்டினம்பஞ்சாயத்துதலைவர்ஜாகிர்உசேன்உட்படபலர்கைது: இந்த கலவரத்தில் காயம் அடைந்த செய்யது அகமதுல்லா, முகம்மதுசலீம், நல்ல முகமது, முனியசாமி, பெரியசாமி, பால்சாமி உள்ளிட்ட 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இக்கலவரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள தேவிபட்டினம் போலீஸார் 11 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் ஜாகீர் ஹுஸைன் [Zakhir Hussain] என்பவர் மனிதநேய மக்கள் கட்சியின் உள்ளூர் தலைவர் ஆவர். மேலும் தேவிபட்டினம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் தேவிபட்டினம் பஞ்சாயத்து தலைவர் ஜாகிர் உசேன் மதகலவரத்தை தூண்டி வருவதாக கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் அவரை தலைவர் பதவியில் இருந்து நீக்கவும் கூறி தேவிபட்டினம் படையாச்சி சமுதாயத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று காலை மனு கொடுத்துள்ளனர்[8]. இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி தேவிபட்டினம் படையாச்சி தெரு மகளிர் கூட்ட மைப்பினர் நேற்று மாவட்ட கலெக்டர் நந்தகுமாரை சந்தித்து மனு கொடுத்தனர்[9]. கனகராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில், தேவிபட்டினம் ஊராட்சி தலைவர் ஜாகிர் உசேன் [S. Zakhir Hussain] உட்பட, ஐந்து பேர் மற்றும் முகம்மது அசாருதீன் புகாரின் அடிப்படையில், ஆறு பேரை கைது செய்த போலீசார், பத்துக்கும் மேற்பட்டோர் மீது, வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்[10].

ஊர்வலத்தின்மீதுதாக்குதல்பற்றிமுரண்பட்டஅறிவிப்பு, விளக்கம்: பெயர் குறிப்பிடப்படாத, லேலப்பள்ளிவாசலில் உள்ள 23வயது நபர் ஊர்வலம் மாலை தொழுகையின் போது சென்றது. நாங்கள் கண்ணடி கதவுகளைக் கூட மூடிக் கொண்டோம்.  ஆனால், அவர்கள் தாரை-தப்பட்டை அடித்து நடனம் ஆடி எங்களது தொழுகைக்கு இடைஞ்சல் செய்தனர், என்று குற்றஞ்சாட்டினார். இதற்குப் பிறகு ஏற்பட்ட வாக்குவாதம் தான் கலவரத்தில் முடிந்தது என்று அவர் கூறினார்[11] (இது முஸ்லிம்கள் தரப்பில் சொல்லப்பட்டதாக எடுத்துக் கொள்ளப்படுகிறது). ஆனால், வி. வடிவேலு என்ற படையாச்சி சமூகத்தலைவர் மற்றவர் இதனை மறுத்தனர். ஊர்வலம் இரண்டு மசூதிகள் வழியாகவும் தொழுகைக்கு முன்பாகவே சென்று விட்டது. கோவிலையும் அடைந்து விட்டது. ஆனால், ஊர்வலம் கடந்த பின்னர், பின்னால் வந்து கொண்டிருந்த சில பெண்கள் மீது கற்கள் எரியப்பட்டன. தெருவில் இரைந்து கிடந்த கற்கள், உடைந்த குழல்விளக்குகள் முதலியவற்றை அவர்கள் காட்டினர்[12]. இருபது வருடங்களுக்கும் மேலாக இந்த திருவிழா, ஊர்வலங்கள் அமைதியாக நடந்து வந்துள்ளன. இப்பொழுது தான் இப்பிரச்சினை வந்துள்ளது. குறிப்பாக ஜாகிர் உசேன் பஞ்சாயத்துத் தலைவரானப் பிறகுத்தான் ஏற்படுகிறது. ஏனெனில் அவர் குப்பத்தில் உள்ள சில இளைஞர்களைத் தூண்டி விட்டுக் கொண்டு, வன்முறையைத் தூண்டி விட்டுக் கொண்டிருக்கிறார் மற்றும் சமூக நல்லிணக்கத்தையும் கெடுக்கிறார் என்று குற்றஞ்சாட்டினார்[13].

கலவரத்தில்ஈடுபட்டதுஎஸ்டிபிஐமுஸ்லிம்களாஅல்லது.மு.மு.முஸ்லிம்களா: தேவிபட்டினம் கோவில் விழாவில் ஹிந்துக்களின் மேல் த.மு.மு.க முஸ்லிம்கள்[14] கண்மூடித்தனமான தாக்குதல் என்றும், எஸ்டிபிஐ [Social Democratic Party of India (SDPI)] தாக்கியது[15] என்றும் செய்திகள் வந்துள்ளன. சொல்லிவைத்தால் போல, இப்பொழுது எஸ்டிபிஐ தங்களுக்கு இதில் எந்த தொடர்பும் இல்லை என்றும் போலீஸார் வேண்டுமென்றே எஸ்டிபிஐ பெயரை இவ்விஷயத்தில் இழுக்கிறார்கள் என்றும் தலைவர் எம். ஐ. நூர் ஜியபுத்தீன் [M.I.Noor Jiyabudeen] கூறுகிறார். எஸ்டிபிஐ ஊர்வலத்தைத் தடுக்கவும் இல்லை, அதன் மீது கற்களை வீசவும் இல்லை என்று வாதிக்கிறார். உள்ளூர் எம்.எல்.ஏ எம். எச். ஜவாஹிருல்லா [M.H.Jawahirullah] தங்கள் மீது பொய் வழக்குப் போட்டுள்ளதாக, முதலமைச்சருக்கு மனு கொடுத்துள்ளார்[16]. முஸ்லிம்கள் இந்து ஊர்வலத்தைத் தாக்கியுள்ளனர் என்பது உண்மை. அதில் இந்த முஸ்லிம்கள் தாக்கினரா, அந்த முஸ்லிம்கள் தாக்கினரா என்பது திசைத்திருப்பும் முயற்சியாகும். அப்படி முஸ்லிம்கள் பிரச்சினை வரக்கூடாது என்று நினைத்திருந்தால், சுமுகமாக சென்றிருக்கலாம்.

ஜாகிர் உசேனின் – இரு முகங்கள் – வெளிச்சம் தராத “ஹைமாஸ்’ விளக்கு இருளில் தவிக்கும் சுற்றுலாப் பயணிகள்[17]: ராமநாதபுரம் அருகே தேவிபட்டினம் பஸ் ஸ்டாண்டில் “ஹைமாஸ்’ விளக்கு எரிதாததால் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள தேவிபட்டினத்தில் நவபாஷான கடற்கரை கோயில் அமைந்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி வட மாநிலங்களிலிருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். பக்தர்கள் சிலர் நாகதோஷம், புத்திர தோஷம் உள்ளிட்ட பல தோஷங்கள் நிவர்த்தியாவதற்கு பரிகார பூஜைகள் செய்கின்றனர். இதனால், இந்த கடற்கரையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். இங்கிருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பக்தர்களின் வசதிக்காக, பஸ் ஸ்டாண்டில் “ஹைமாஸ்’ (உயர் கோபுர விளக்கு) விளக்கு அமைக்கப்பட்டது. இதனால் இரவு நேரங்களில் விளக்கு வெளிச்சத்தில் பஸ் ஸ்டாண்ட் ஜொலித்தது. நாளடைவில் இந்த விளக்கு வெளிச்சம் தரமறுத்ததால் பஸ் ஸ்டாண்ட் இருளில் மூழ்கி வருகிறது. இதனால் இரவு நேரங்களில் வெளியூர் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் அச்சத்துடன் நிற்கவேண்டிய பரிதாப நிலை நீடித்துள்ளது.இது குறித்து தேவிபட்டினம் ஊராட்சி தலைவர் ஜாகிர் உசேன்’கூறியதாவது: “ஹைமாஸ்’ விளக்கு பழுது ஏற்பட்டால், அதை சரி செய்வதற்கு பராமரிப்பு என்று எந்த  நிதியும் இல்லை. ஊராட்சி நிதி பற்றாக்குறையாக இருப்பதால், இதை சரி செய்வதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனினும், இந்த விளக்கு பக்தர்களின் வசிக்காக விரைவில் சரிசெய்யப்டும், என்றார். கோவில் விஷயம் என்பதால் தயங்குகிறாரா அல்லது மறுக்கிறாரா என்று தெரியவில்லை.


[1] As per the existing arrangement, the group passed though the places of worship well before the prayer time at 6 45 p.m., but a section objected to the drum beating and dancing, the police said.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/police-disperse-clashing-groups-at-devipattinam/article4772025.ece

[4] Immediately, the police intervened and sorted out the issue, but about 50 to 60 members of the SDPI went to the temple site where the festival was going on and started throwing stones at the gathering. Tension ensued when the other group retaliated, forcing the police to take action.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/police-disperse-clashing-groups-at-devipattinam/article4772025.ece

[11] Speaking on condition of anonymity, a 23-year-old man at Mela Pallivasal alleged that the other group timed their procession to pass through their place of worship when the evening prayer was going on. “We shut all the glass doors and were praying to avoid any problem, but they continued to beat drums and dance, disturbing the prayers,” he alleged. On being provoked, they questioned them, resulting in a wordy duel and subsequent violence, he toldThe Hindu.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/11-arrested-normalcy-returns-to-devipattinam/article4775002.ece

[12] V.Vadivelu, leader of the Padayachi community, and others, however, denied the allegation. They said the procession passed through the two places of worship well ahead of the prayer time and trouble broke out when the other group attacked a few women who were coming at end of the procession. “All of us have reached the temple, half a km away from the mosque, when they came to our area and threw stones,” they said, showing their street strewn with stones and broken tube lights.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/11-arrested-normalcy-returns-to-devipattinam/article4775002.ece

[13] They said they had been maintaining cordial relations with the other group and had been celebrating the festival for the past two decades without any trouble. Problems began to surface only after Mr.Hussain became the village president, they alleged. The panchayat president was instigating violence and disturbing religious harmony with the connivance of the youth settled in Kuppam area, they alleged.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/11-arrested-normalcy-returns-to-devipattinam/article4775002.ece

[14] A day after violence broke out in Devipattinam following clashes between two groups, police on Saturday launched a crackdown and arrested 11 persons, including village panchayat president S. Zakhir Hussain and two juveniles. Zakhir Hussain is a local leader of Manithaneya Makkal Katchi (MMK), the police said.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/11-arrested-normalcy-returns-to-devipattinam/article4775002.ece

[15] It all started with a group taking out a procession in connection with an annual temple festival. Trouble broke out when members of the Social Democratic Party of India (SDPI) objected to a religious group taking out the procession beating drums and dancing.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/police-disperse-clashing-groups-at-devipattinam/article4772025.ece?css=print

[16] The Social Democratic Party of India (SDPI) denied its involvement in the violence. The SDPI was nowhere in the picture and the police had unnecessarily dragged its name into the controversy, said SDPI district president M.I.Noor Jiyabudeen. “Our members neither prevented the procession nor indulged in stone throwing,” he said, and condemned the police for trying to project the SDPI in bad light. Local MLA and MMK leader M.H.Jawahirullah, in a petition to Chief Minister J.Jayalalithaa, alleged that the police had foisted a case against Mr.Hussain and demanded a fair investigation and arrest of those involved in violence.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/11-arrested-normalcy-returns-to-devipattinam/article4775002.ece