Posted tagged ‘எம். எஃப். ஹுஸைன்’

“திருமணம் என்னும் நிக்காஹ்” படம், ஷியா முஸ்லிம்கள் எதிர்ப்பு, முஸ்லிம் பண்டிகைகள் சினிமாவில் காட்டுவதில் என்ன பிரச்சினை?

மே 30, 2014

“திருமணம்  என்னும் நிக்காஹ்”  படம்,  ஷியா முஸ்லிம்கள் எதிர்ப்பு,  முஸ்லிம் பண்டிகைகள் சினிமாவில் காட்டுவதில் என்ன பிரச்சினை?

திருமணம் என்னும் நிக்காஹ்.2

திருமணம் என்னும் நிக்காஹ்.2

இந்து பையன், முஸ்லிம் பெண் காதல் முதலியன:  “திருமணம் என்னும் நிக்காஹ்” என்ற தலைப்பும்,  அது எதைப் பற்றிய கதை என்ற தகவலும் வெளியானதிலிருந்தே,  அந்தப் படத்துக்கு ஏதாவது ஒரு இஸ்லாமிய அமைப்பு ஆட்சேபணை தெரிவிக்கும் என எதிர்ப்பார்க்கப் பட்டது[1] என்று “தமிள்.ஒன்.இந்தியா” போட்டு வைத்தது.  சென்ற வருடமே வெளிவந்திருக்க வேண்டிய படம் வெளிவரவில்லை,  காரணமும் சொல்லப் படவில்லை[2]. மே 15  வெளிவருகிறது என்று அறிவித்தார்கள்,  ஆனால்,  தேதி தள்ளிவைக்கப்பட்டது என்றார்கள்[3]. “தி இந்துவில்”  வந்த விமர்சனம் இப்படத்தின் கதையை அலசியுள்ளது.  ஒரு இந்து பிராமண பையன், முஸ்லிம் பெண்ணைக் காதலிக்கிறான்.  இரு குடும்பங்களை மையமாக வைத்துக் கொண்டு விவரணங்கள் செல்கின்றன.  இத்தகைய படங்களை எடுப்பதில் அபாயம் இருக்கிறாதா என்ற கேள்வியை எழுப்பி, படத்தில் சரிசமமாக எல்லாவற்றையும் வைத்துக் கொள்ள வேண்டும். இப்படத்தில் மொஹ்ஹரம்,  ரம்ஜான் மற்றும் நிக்காஹ் விழாக்கள் விவரமாகக் காட்டப்படுகின்றன. அதேபோல, ஆவணிஆவட்டம்,  நவராத்திரி, கொலு போன்ற விழாக்களும் சித்தரிக்க ப்பட்டுள்ளன.  இது தவிர முர்ஸீத் என்ற இஸ்லாமிய கொலு போன்ற விழா பற்றியும் விளப்படுகிறது[4]

 

Indian Express photo

Indian Express photo

ஷியா முஸ்லிம்கள் இயக்கம் எதிர்ப்பு, நீதிமன்றத்தில் மனு: இம்மாதம்  14ம் தேதி வெளியிடுவதாக இருந்தது,  வெளிவரவில்லை[5].  ஆனால், கதை தொடர்ந்தது.  நஸ்ரியாவுக்கு இது திருப்புமுனை என்றெல்லாம் அளந்தார்கள்.  அந்நிலையில் தான், ஷியா முஸ்லிம் அமைப்பினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். நடிகர் ஜெய்,  நடிகை நஸ்ரியா நடித்துள்ள திருமணம் என்னும் நிக்காஹ் படத்தை ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார், அனீஸ் இயக்கியுள்ளார். “திருமணம் எனும் நிக்காஹ்’  திரைப்படத்துக்கு தடைவிதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு சென்னை போலீஸ் ஆணையர்,  திரைப்பட மத்திய தணிக்கைக் குழு மற்றும் ஆஸ்கார் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது[6].  இது தொடர்பாக தமிழ்நாடு ஷியா முஸ்லிம் ஜமாத்தின் துணைத்தலைவர் டேப்லெஸ் /  டப்ளஸ்  அலிகான் உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: “திருமணம் எனும் நிக்காஹ்’  திரைப்படத்தை ஆஸ்கார் பிலிம் நிறுவனம் தயாரித்துள்ளது. அதன்  உரிமையாளர் வி. ரவிசந்திரன்.  அதை மே மாதம் 30-ஆம் தேதி திரையிடவும் முடிவு செய்யப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.  அந்தத் திரைப்படத்தில் முஸ்லிம்கள் தரக்குறைவாக சித்திரிக்கப் பட்டுள்ளனர்.  அதிலும்,  ஷியா பிரிவு முஸ்லிம்களை மிகவும் இழிவு படுத்தி சித்திரித்துள்ளனர். இதனால் மதக்கலவரம் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது.  எற்கெனவே,  இந்த படத்தின் தயாரிப்பாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனரிடம் கடந்த 20–ந்தேதி புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப் படவில்லை[7].எனவே,  இந்த திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்”, என மனுவில் கோரப் பட்டுள்ளது.

 

Muharram festival

Muharram festival

விடுமுறை  நீதிமன்ற  இடைக்கால  நடவடிக்கை:  இந்த மனு விடுமுறைக் கால நீதிபதி எஸ். வைத்தியநாதன் முன்பு வியாழக்கிழமை (மே 29) விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, ஜூன் 3- ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு சென்னை போலீஸ் ஆணையர்,  திரைப்பட மத்திய தணிக்கைக் குழு மற்றும் ஆஸ்கார் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்[8]. மனுவுக்கு ஜூன் 4– ந் தேதிக்குள் பதிலளிக்கும்படி போலீஸ் கமிஷனருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்[9].  போற போக்கைப் பார்த்தால் எல்லா தமிழ்ச் சினிமாவையும் இனிமேல் கோர்ட்டு தான் ரிலீஸ் செய்யும் போலிருக்கு..  திருமணம் என்னும் நிக்காஹ் படத்துக்கு தடைகேட்டு இன்றைக்கு கோர்ட் படியேறியிருக்கிறது, ஒருகூட்டம்[10] என்று காட்டமாகக் கூட ஒரு இணைதளம் கமென்ட் அடித்துள்ளது.

 

M2U00474

M2U00474

சினிமா தயாரிப்பாளர் விளக்கம்[11]: பட சர்ச்சை குறித்து ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் கூறுகையில்,  ‘‘படத்துக்கு தணிக்கைக் குழு ‘யு’  சான்றிதழ் தந்துள்ளது.  குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுபடுத்தி படம் எடுத்திருந்தால் தணிக்கைக் குழு அனுமதிக்குமா? இது இஸ்லாம் மதத்துக்கு பெருமை சேர்க்கும் படம்.  படத்தை இயக்கியவர்,  இசையமைத்தவர், குறிப்பிட்ட நடிகர்கள் எல்லோரும் இஸ்லாம் மதத்தைச் சார்ந்தவர்கள்.  படம் வெளிவரும் முன்பே அவதூறாக கூறியாரும் விளம்பரம் தேடக்கூடாது. திட்டமிட்டபடி படம் வெளிவரும்.  எப்போது ரிலீஸ் என்பதை சனிக்கிழமை அறிவிப்போம்’’  என்றார்.

 

Muharram Hyderabad 2009

Muharram Hyderabad 2009

முஸ்லிம் பண்டிகைகள் சினிமாவில் காட்டுவதில் என்ன பிரச்சினை?:  ஷியா முஸ்லிம்கள் இப்படத்தை எதிர்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது.  மொஹரம்,  ரம்ஜான் மற்றும் நிக்காஹ் முதலியவை சினிமாவில் காட்டுவதில் என்ன எதிர்ப்பு இருக்கிறது என்று தெரியவில்லை!   முதலில் இவற்றிற்கெல்லாம் விடுமுறை கூட இல்லை, ஆனால், செக்யூலரிஸ ஆட்சியாளர்கள் விடுமுறை அளித்து,  பிறகு அவற்றை தேசிய விடுமுறைகளாக்கினர். முஸ்லிம் நாடுகளிலேயே அவ்வாறு விடுமுறை அளிப்பது கிடையாது.  இப்படத்தில் மொஹ்ஹரம்,  ரம்ஜான் மற்றும் நிக்காஹ் விழாக்கள் விவரமாகக் காட்டப் படுகின்றன. அதேபோல,  ஆவணி ஆவட்டம்,  நவராத்திரி, கொலு போன்ற விழாக்களும் சித்தரிக்கப் பட்டுள்ளன.  இது தவிர முர்ஸீத் என்ற இஸ்லாமிய கொலு போன்ற விழா பற்றியும் விளப்படுகிறது[12].  ஆக  அந்த “முர்ஸித் / கொலு” தான் பிரச்சினை போலும்! ஒருவேளை, சுன்னி முஸ்லிம்கள் தூண்டி விட்டு, ஷியாக்கள் எதிர்த்திருக்கலாம். “மாரடி விழா” முதலிய ராயப்பேட்டையிலேயே மக்கள் பார்த்திருக்கிறார்கள். ஹைதரபாதில் விமரிசையாகக் கொண்டாடுவார்கள். மற்ற வட இந்திய நகரங்களில் அமர்க்களமாகக் கொண்டாடுவார்கள். ஆகவே, இவற்றைக் காண்பிப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆகவே, வேறு பிரச்சினையை மதப்பிரச்சினையாக்கி, இவ்வாறு செய்கிறார்களா என்று தெரியவில்லை.

 

திருமணம் என்னும் நிக்காஹ்.3

திருமணம் என்னும் நிக்காஹ்.3

© வேதபிரகாஷ்

30-05-2014

[1] http://tamil.oneindia.in/movies/news/petition-seeks-ban-on-thirumanam-ennum-nikkah-202275.html

[2] http://www.deccanchronicle.com/140514/entertainment-kollywood/article/thirumanam-ennum-nikkah-release-soon

[3] http://www.kollytalk.com/video/video-news/jai-nazriyas-thirumanam-ennum-nikkah-postponed-153313.html

[4] Are there any risks in making such a film? “The key is to ensure there is balance. While the film features the Muharram, Ramzan and Nikkah festivities in great detail, it also features Avani Avattam and Navarathiri Golu celebrations. In fact, I have even showcased a lesser known festival, the Murshid, which I believe is the Islamic equivalent of the Golu and celebrated privately in homes.” In fact, this is one of the reasons the film has been delayed so much. “I had to wait for these festivals,” he says.

http://www.thehindu.com/features/cinema/marriage-by-any-name/article5996427.ece

[5]Rumours were rife that Anis’s Thirumanam Ennum Nikkah, starring Jai and Nazriya, was postponed from May 15, the date slated for release, due to certain issues. However, when DC quizzed the director on it, he said, “There were plans of postponing it owing to trivial reasons. However, going by the present scenario, it is highly likely that the movie might release on the fixed date itself.” Thirumanam Ennum Nikkah, produced by Aascar Ravichandran, bagged a ‘U’ certificate recently. The songs scored by Ghibran has already topped the charts.

[6]தினமலர்,  “திருமணம்எனும்நிக்காஹ்திரைப்படத்துக்குதடைகோரிவழக்கு, By dn, சென்னை, First Published : 30 May 2014 03:09 AM IST

[7]தினத்தந்தி,திருமணம்என்னும்நிக்ஹாபடத்துக்குதடைவிதிக்கவேண்டும்; சென்னைஐகோர்ட்டில்வழக்கு, பதிவுசெய்தநாள் : May 30 | 12:20 am

[8]http://www.dinamani.com/cinema/2014/05/30/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/article2253242.ece

[9] http://www.dailythanthi.com/2014-05-30–marriage-nikha-film-to-be-banned-case-in-the-madras-hc

[10] http://www.tamilcinetalk.com/some-muslims-ask-ban-on-thirumanam-ennum-nikkah/

[11]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D/article6064424.ece

[12] Are there any risks in making such a film? “The key is to ensure there is balance. While the film features the Muharram, Ramzan and Nikkah festivities in great detail, it also features Avani Avattam and Navarathiri Golu celebrations. In fact, I have even showcased a lesser known festival, the Murshid, which I believe is the Islamic equivalent of the Golu and celebrated privately in homes.” In fact, this is one of the reasons the film has been delayed so much. “I had to wait for these festivals,” he says.

http://www.thehindu.com/features/cinema/marriage-by-any-name/article5996427.ece

காஷ்மீர இஸ்லாத்தின் நிஜ-உருவம் வெளிப்படுகிறது – I

மார்ச் 14, 2010

காஷ்மீர இஸ்லாத்தின் நிஜ-உருவம் வெளிப்படுகிறது – I

வேதபிரகாஷ்

“காஷ்மீர” அடை-மொழிகளில் உலா வரும் இந்திய-விரோத சித்தாந்தங்கள்: “காஷ்மீரியத்” என்ற போர்வையில், முகமதிய-இஸ்லாமிய அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள், ஜிஹாதிகள், ஏதோ ஒரு அமைதியான, ஒட்டுமொத்த காஷ்மீரத்தின் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், நாகரிகம் முதலியவற்றைப் பேணிக் காப்பது போலவும், பாதுகாக்கத் துடிப்பது போலவும் நடித்துக் கொண்டிருக்கும் அந்தக் கொடியவர்களின் உண்மையான முகம் பலமுறை தெரிந்தாலும் மற்ற இந்தியர்கள் அவற்றைப் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள் அல்லது, “இவையெல்லாம் எங்கோ தூரத்தில் நடக்கின்றன, ஆகையால் அவற்றை நாம் அறிந்து கொண்டு என்ன செய்ய”, என்ற நிலையிலும் இருக்கலாம்[1]. ஆனால், எப்படி அந்த முகமதிய-இஸ்லாமிய அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள், ஜிஹாதிகள், முதலியோரது நோக்கம் வெளிப்படுகிறது என்பதனைப் புரிந்துகொள்ள இன்னொமொரு முக்கியமான விஷயம் வெளிப்படுகிறது.

காஷ்மீரப் பெண்களும், சொத்துகளும், சொத்துரிமைகளும்: இப்பொழுதையப் பிரச்சினையே இதுதான். முன்பே எடுத்துக் காட்டியபடி, காஷ்மீர இஸ்லாம் உலக மற்றும் இந்திய வீர-சைவத்தை முழுங்கியது, அழித்தது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும்[2]. அந்த குரூரமான செயல்பாடுகளில் இந்து பெண்கள் லட்சக்கணக்கில் பலவந்தமாக தங்களது பெற்றோரிடத்திலிருந்து, சகோதரர்களிடமிருந்து, கணவன்மார்களிடமிருந்து, காதலர்களிடமிருந்து, குழந்தைகளிடமிருந்துப் பிரித்திருக்கின்றது; அவர்கள் முன்பே அப்பெண்களின் கற்பு சூரையாடப்பட்டிருக்கிறது; அதனால் பல இந்து பெண்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்; எதிர்த்தவர்கள்-பணியாதவர்கள், கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்; …………….[3]

அமர்நாத் யாத்திரிகர்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலமும், அதை இஸ்லாம் எதிர்த்த நிலையும்: சுமார் இரண்டாண்டுகளுக்கு முன்பு, அமர்நாத் யாத்திரிகர்களுக்கு அளிக்கப் பட்ட நிலத்தின் விஷயமாக முகமதிய-இஸ்லாமிய அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள், ஜிஹாதிகள், மிகவும் கடுமையாக, கொடுமையாக எதிர்த்தனர், கலவரம் செய்தனர். செக்யூலரிஸ-சமதர்ம-சமத்துவ பேர்வழிகள்-சிதாந்திகள் இந்தியா முழுவதும், ஏன் உலகம் முழுவதிலும் பொத்திக் கொண்டிருந்தன. மற்ற நேரங்களில் ஊலையிடும் இந்த நரிக்கூட்டங்கள், நாக்குகளில் நரம்பில்லாமல், மனங்களிலே நமைத்துக் கொண்டிருந்தன. அதாவது, லட்சக் கணக்கான யாத்திரிகர்களின் வசதிக்காக செய்யப்படும் நிரந்தரமற்ற தங்குமிடங்கள், கழிப்பிடங்கள், குளியலறைகள் முதலியவற்றைக் கட்டக் கூடாது என்று அரக்கத்தனமாக தங்களது குரூரத்தைக் காட்டி முகமதிய-இஸ்லாமிய அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள், ஜிஹாதிகள், கருவின. அப்பொழுது கொதிப்படைந்த இந்துக்கள் முதல் முறையாக வீதிகளுக்கு வந்தனர். சாலைகளை மறித்து போராடினர். அரசாங்கம், அந்த போலி-மனித உரிமைக் கூட்டங்கள், சித்தாந்த நரிக்கூட்டங்கள் திகைத்தன. என்ன இது, இந்த காஃபிர் கூட்ட்டத்திற்கு இவ்வளவு தைரியமா என கொக்கரித்தன.

அமைதி அரக்கன் அப்துல்லா முதல் அந்தக் கொடியக் கூனி பூதனை மெஹ்பூபா முஃப்டி வரை, வேடமிட்டு நடித்தனர். அந்த குரூர முகமதிய-இஸ்லாமிய அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள், ஜிஹாதிகள், முதலியோரோ வேறு விதமாக பேசினர்! எதுவும் எடுபடாமல் போகவே, தங்களுக்கு மருந்துகள் கூடக் கிடைக்கவில்லை என அலற ஆரம்பித்தனர்! உடனே எழும்பிவிட்டது அந்த அருந்ததி ராய் என்ற பலத்தாரப் புரட்சி[4] வீராங்கனை!! ஆனால், வெட்கமற்ற அவள் வேசித்தன பேச்சு என்னவென்றால், அந்த முகமதிய-இஸ்லாமிய அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள், ஜிஹாதிகள், முதலியோருக்கு ஆதரவாகப் பேசியதுதான். அவளுக்கு அதே காஷ்மீரத்தின் இந்துக்களின் உரிமைகளைப் பற்றிக் கவலையிலை! அப்பொழுதுகூட – அதாவது லட்சக் கணக்கான யாத்திரிகர்களின் வசதிக்காக செய்யப்படும் நிரந்தரமற்ற தங்குமிடங்கள், கழிப்பிடங்கள், குளியலறைகள் முதலியவற்றைக் கட்டக் கூடாது என்று அரக்கத்தனமாக தங்களது குரூரத்தைக் காட்டி முகமதிய-இஸ்லாமிய அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள், ஜிஹாதிகள், கருவியது கூட அவளுக்குப் புரியவில்லை!

காஷ்மீரப் போர்வையில் இந்து பெண்களின் உரிமைகளைப் பரிக்க எடுத்து வரப்படும் மசோதா: காஷ்மீரப் பெண் ஒருத்தி அம்மாநிலத்திற்கு வெளியே யாரையாவது மணந்து கொண்டால், அவளுக்கு அம்மாநிலத்தில் சொத்துரிமை மற்றும் வேலையுரிமை பரிக்கப் படவேண்டும் என்று ஒரு தனிப்பட்ட நபர் எடுத்து வந்த சட்டமசோதாவை எதிர்த்து பிஜேபி உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்[5]. அந்த தனி நபர் வேறு யாரும் இல்லை – அந்த கொடியக் கூனி பூதனை மெஹ்பூபா முஃப்டியின் கட்சியைச் சேர்ந்த முர்தாஜா கான் (PDP legislator Murtaza Khan, People’s Democratic Party) என்பவன் தான்! எதிர்பார்த்தபடி, அறிமுகநிலையிலேயே அந்த மசோதா எதிர்ப்பு இல்லாமல் “அறிமுகப்படுத்தப் பட்டது”! அந்தக் கட்சி, அம்மசோதா காஷ்மீர மாநிலத்தின் பெண்களின் அடையாளத்தைக் காப்பாதாக”, வினோதமாக வாதிடனர்! அதாவது, இப்பொழுதும் இந்துக்கள், இந்துப் பெண்கள் கொல்லப்படுவது, கற்பழிக்கப் படுவது, அவர்களது அடையாளங்கள் ஒட்டுமொத்தமாக அழிக்கப் படுவது, முதலியன அந்தக் குருடர்களுக்குத் தெரியவில்லை போலும்!  அக்கட்சி தொடர்ந்து வாதிட்டது என்னவென்றால், “காஷ்மீரப் பெண்கள் அவ்வாறு செய்ய ஆரம்பித்தால் அம்மாநிலத்திற்கென்று அளிக்கப் பட்டுள்ள 370 சரத்தின் மகத்துவம் குறைவது மட்டுமல்லாது, அவ்வாறு அம்மாநிலமற்ற குடிமகன்களை மணந்து கொண்டு, அம்மாநிலத்தின் குடியுரிமையை பெற்றிருந்தால், அது அச்சரத்தையே நீர்த்து விடும். ஆகையால் காஷ்மீரப் பெண்கள் காஷ்மீர ஆண்களைத் தான் மணந்து கொள்ளவேண்டும்”, என்பதுதான்! அதாவது இந்து பெண்மணிகள் கூட தமக்கு தம் சொத்துரிமை, வேலையுரிமை வேண்டுமென்றால், காஷ்மீர ஆணைத் தான் மணந்து கொள்ளவேண்டும், அதாவது இந்து கிடைக்காவிட்டால் முஸ்லீமை மணந்துகொள்ளவேண்டும். இல்லையென்றால்…………………………………….

பெண்கள் தினத்தன்று பெண்களின் உரிமைஅளைப் பரிக்கக் கள்ளத்தனமாக நுழைக்கப்பட்ட மசோதா: காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராமன் பல்லா என்ற நிதியமைச்சர் கூறியதாவத்கு, “பெண்கள் மசோதாவைப் பற்றி நாங்கள் எங்களது நிலையை ஏற்கெனவவ தெரியப்படுத்திவிட்டோம். ராஜ்ய சபாவில் அது நிறைவேறியது அறிந்ததே”, என்று பொதுவாகப் பேசி தப்பித்துக் கொள்ள பார்த்தது நன்றகவே தெரிந்தது. மேலவையில் அம்மசோதா அறிமுகப்படுத்தப்பட்டதால், கீழவையில் அதைப் பற்றி விவாதிக்கமுடியவில்லை என்று நிஜாமுத்தீன் பட்[6] என்ற PDP ஆள் எடுத்துக் காட்டியது வேடிக்கைதான்! ஆகவே ஹர்ஷ தேவ் சிங் என்ற உறுப்பினர், அந்த கள்ளத்தனத்தை எடுத்துக் காடியதும்[7], எல்லொரும் மௌனிகளாகி விட்டனர்!

NOT IN TUNE: Bill will end permanent resident status of  women who marry outside the state.

தோற்றுப்போன மசோதாவையே மறுபடியும் எடுத்து வரும் மர்மம், கள்ளத்தனம், நரித்தனம்: இதே மசோதா 2004ல் “எதிரிகள் என்று நடித்து வரும்” அந்த இரண்டு நரிக்கூட்டங்களும் (arch rivals National Conference and the PDP)  சேர்ந்து கொண்டு அறிமுகப்படுத்தியது[8]. ஆனால் பிறகு, அம்மசோதாவின் உள்-நோக்கத்தை எடுத்துக் காட்டியதும் சட்ட சபையில் தோல்வியடந்தது.    மறுபடியும் அத்தகைய தோல்வியடைந்த மசோதாவை அப்துல்லா கோஷ்டியினர் ஆதரிப்பார்கள் என்ற நோக்கில் நுழைத்துள்ளனர். ஜம்மு வழக்கறிஞர் சங்கம் / Jammu Bar Association எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்ல, எப்படி ஒரு 2002 நீதிமன்ற தீர்ப்பு அத்தகைய பாரபட்சத்தன்மைய எடுத்துக் காட்டி, பெண்ணின் குடியுரிமையை காக்க அளித்துள்ளது என்பதனையும் எடுத்துக் காட்டப்பட்டது. ஆகவே, இம்மசோதா அந்த நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரானதும், முரண்பாடானதும் ஆகும். ஒரு பெண் தன் குடியுரிமை இழக்கிறாள் என்றால் அவள் ஓட்டுரிமை மற்ற எல்ல உரிமைகளையும் இழக்கிறாள் என்பதாகிறது! அதாவது, ஜம்மு-காஷ்மீர் “தனிநாடு” போல ஆகிறது! இங்கும்தான் வெளிப்படுகிறது, அவர்களின் நரித்தனம்!

சரீயத்தை மறைமுகமாக எடுத்து வரச் செய்யும் சதிதான் இது: சமன்லால் குப்தா என்ற பிஜேபி உறுப்பினர், “இது பெண்களுக்கு எதிரானது. காஷ்மீரப் பெண் ஒருத்தி அம்மாநிலத்திற்கு வெளியே யாரையாவது மணந்து கொண்டால், அவளுக்கு அம்மாநிலத்தில் சொத்துரிமை மற்றும் வேலையுரிமை பரிக்கப் படவேண்டும் என்பது ஒவ்வொரு காஷ்மீரப் பெண்ணின் பெண்மகளின் மூதாதையரது நிலம்,சொத்து, வேலை முதலிவற்றின் மீதான அவர்களது பாரம்பர உரிமைகளை மறுக்கும் விதமாக உள்ளது”, என்று எடுத்துக் காட்டினார். அரசியல்வாதிகள் என்னபேசினாலும், முஸ்லீம்கள் “இந்தியர்கள்” என்ற நிலையில் பேசுவதில்லை என்பது எல்லொருக்கும் தெரியும், அதுவும் இந்துக்கள் என்று சொல்லிவிட்டால் தேவையே இல்லை, உடனே உலகமே அவர்களுக்கு எதிராகத் திரண்டு விடும். ஆகவே இந்நிலையில் நிச்சயமாக அந்த குரூர முகமதிய-இஸ்லாமிய அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள், ஜிஹாதிகள், சரீயத்தை மறைமுகமாக எடுத்து வரச் செய்யும் சதிதான் இது என வெளிப்படையாகவே தெரிகின்றது!

பார்ப்போம், என்ன நடக்கும் என்று!

வேதபிரகாஷ்

14-03-2010


[1] ஆனால் கருணாநிதியே அவ்வாறு இல்லை, தனது பாராட்டுவிழாவில், பிரிவினையைப் பற்றி பேசும்போது, அவரது கள்ளத்தனமும் வெளிப்படுகிறது என்பதை இங்கு நினைவு கூர வேண்டும்,. அதாவது, இந்தியாவை எதிர்த்து க் செயல்படும்போது, நாங்கள் எப்படி அந்நியோன்னமாக கூடி வேலை செய்கிறோம் என்று அவரே சொல்லிய்ருப்பதையும் நினை கூரவேண்டும்!

[2] காஷ்மீர சைவம் மட்டுமல்ல, அங்கிருந்த கோவில்கள் அனைத்தையும் ஒட்டு மொத்தமாக அழித்தது தான் இஸ்லாம் என்பதனைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் இவர்கள்தாம் எதோ கலைக்காவலர்கள் என்றெல்லாம் வேடமிட்டுக் கொண்டு அலைகிறர்கள், திரிகிறார்கள். அவர்களுக்கு உலகளவில் பட்டங்கள் கொடுக்கப் பட்டு அவர்களது குரூர முகங்களை அழகு படுத்துகிறார்கள்!

[3] இதைப் பற்றி படித்தவன், பண்பாளன், நீதிமான், நியாயவான், தர்மவான், கனவான்…………..என்றெல்லாம் கூறித்திரியும் கூட்டங்களும் எழுதில்லை, பேசுவதில்லை, மூச்சுக் கூட விடுவதில்லை!

[4] இது ஏதோ அவளைப் பற்றிய தனிமனித விமர்சனம் அல்ல, இன்றளவில் அவள் இந்திய நாட்டிற்கு எதிராக மாவோயிஸ்டுக்களுக்குப் பேச உரிமையளிக்கப் பட்டுள்ள “இந்திய-பிரஜ உரிமைக் கொண்ட பெண்” தான் என்பதனை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அதுவும், முகத்தில் பொட்டுக் கூட வைத்துக் கொண்டு, இல்லை சமயத்தில் சேலைக் கட்டிக்கொண்டு “இந்து வேடம்” போடும் பெண்-ஏமாற்று-வர்க்கத்தில் ஒரு ஜீவன்!

[5] டைம்ஸ் ஆஃப் இந்தியா, Row over bill denying rights to women marrying outside J&K, TIMES NEWS NETWORK & AGENCIES, Mar 14, 2010, 03.56am IST, மேலும் விவரங்களுக்கு,

http://timesofindia.indiatimes.com/india/Row-over-bill-denying-rights-to-women-marrying-outside-JK/articleshow/5681323.cms

[6] வெட்கங்கெட்ட இந்த மதமாறிகளுக்கு இன்னும் இந்த அடையாளங்கள் – பட், சௌத்ரி, படேல், நாயக்………………..தேவைப் படுகின்றன. ஆனால் மற்ற நேரங்களில் ஏதோ இஸ்லாத்தையே பேத்து-எடுத்து வந்தவர்கள் மாதிரி பேசுவார்கள், நடிப்பார்கள்! அந்த “ஜஹிர் நாயக்” கூட இதைச் சொல்லிப் பெருமைப் பட்டுக் கொள்கிறான்!

[7] http://beta.thehindu.com/news/states/other-states/article244309.ece

http://beta.thehindu.com/news/states/article244131.ece

http://www.ndtv.com/news/india/protest-in-jk-over-anti-women-bill-17646.php

http://ibnlive.in.com/news/jk-bill-discriminates-against-women/111426-37.html

[8] Pawan Bali / CNN-IBN, J-K bill discriminates against women, மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்:

http://ibnlive.in.com/news/jk-bill-discriminates-against-women/111426-37.html

ஜாகிர் நாயக் வன்முறையை தூண்டும் வகையில் பிரசாரம்: சுன்னத் ஜமாத் ஆர்பாட்டம்!

ஜனவரி 13, 2010

சென்னை முஸ்லீம்களே ஜாகிர் கானை எதிர்க்கும்போது, இங்கிலாந்து தடை செய்வதில் என்ன ஆச்சரியம்?

பீஸ் அமைப்பைச் சேர்ந்த ஜாகிர் நாயக் என்பவர், வன்முறையை தூண்டும் வகையில் பிரசாரம் செய்து வருவதாகக் கூறி ஐஸ் அவுஸ் காவல் நிலையம் எதிரே சுன்னத் ஜமாத் பேரவையினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இணைதளத்தில் தேடியபோது, கீழ்கண்ட விவரம் கண்ணில் பட்டது:

http://markaspost.wordpress.com/2009/01/10/சென்னையில்-டாக்டர்-ஜாகிர/

சென்னையில் டாக்டர் ஜாகிர் நாயக்

ஜனவரி10, 2009, 3:37 பிற்பகல்
கோப்பு வகை: டாக்டர் ஜாகிர் நாயக்

இஸ்லாம் அல்லாத மக்களுக்காக உலகம் முழுதும் சென்று,இஸ்லாத்தின் செய்தியை எத்தி வைத்து வரும் சகோதரர் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள்,இன்ஷா அல்லாஹ்,வரும் ஜனவரி பதினேழாம் தேதி,சனிக்கிழமை,பதினெட்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் (JANUARY 17TH AND 18TH 2009 ) சென்னையில் உரையாற்ற இருக்கிறார்கள்.

சென்னையில் கிழக்கு கடற்கரை சாலையில்,ஈஞ்சம்பாக்கத்தில் அமைந்துள்ள இஸ்லாமிக் இண்டெர்நேஷனல் பள்ளி வளாகத்தில்,மாலை ஆறு மணி அளவில் நடைபெற உள்ளது.(ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் வீ ஜி பி கோல்டன் பீச் அமைந்துள்ளது.

எல்லா மத மக்களும் வரவேற்கப்படுகிறார்கள், அனுமதி இலவசம்.பெண்களுக்கு தனி இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலதிக விவரம் வேண்டுவோர் கீழ்காணும் முகவரியில் தொடர்புகொள்ளவும்.
IRF CHENNAI,TEL: 42148804/05, EMAIL: IRFCHENNAI@GMAIL.COM

சகோதரர்களே,
உங்கள் மாற்று மத நண்பர்களையும் அழைத்து செல்லுங்கள்!
தூய மார்க்கத்தை எடுத்து சொல்லுங்கள்!!
அல்லாஹ்விடம் நற்கூலி வெல்லுங்கள்!

ஜாகிர்நாயக்கின் பெயர் சொல்லி முஸ்லிம்கள் ஒருபக்கம் அதிரடி பிரசாரம் செய்கின்றனர்!

மறுபுறம் “சுன்னத் ஜாமாத்” என்று இவ்வாறு எதிர்க்கின்றனர்!

ஒன்றும் புரியவில்லையே?

ஸாகிர் நாயக் பிரிட்டனுக்குள் நுழைவதற்கு அந்நாட்டு அரசு தடை(ஜூன் 19, 2010): இந்திய பிரபல மதபிரச்சாரகர் ஸாகிர் நாயக்கிற்கு பிரிட்டனுக்குள் நுழைவதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் தடை விதித்துள்ளதாக பி.பி.சி. இணைய சேவை செய்தி வெளியிட்டுள்ளது. எமது நாட்டின் பொது நலனுக்கு பொருத்தமற்றவர்கள் நாட்டுக்குள் நுழைய தாம் அனுமதிக்க மாட்டோம் என்று பிரிட்டிஷ் உள்துறை அமைச்சர் கூறியுள்ளார். மேலும், ஏற்க முடியாத நடத்தை என்று தாம் கருதும் நடத்தை உடையவர் ஸாகிர் நாயக். அதன் காரணமாகவே இவருக்கான விசா நிராகரித்துள்ளதாக பிரிட்டிஷ் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. ஸாகிர் நாயக் லண்டனிலும், வடக்கு இங்கிலாந்திலும் பல உரைகளை நிகழ்த்தவிருந்தார். இதேவேளை, ஸாகிர் நாயக் அண்மையில் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இவரது உரையை கேட்பதற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் கொழும்பில் கூடியமை குறிப்பிடத்தக்கது. ஸாகிர் நாயக் இஸ்லாம் குறித்து ஆளுமை கொண்டவர் என அங்கீகரிக்கப்பட்டவர். எனினும், ஏனைய மதங்களை நிந்திக்கும் வகையிலான கருத்துக்களை வெளியிடுபவர் என்று  பிபிசி செய்தியாளர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

Radical-Zakir-naik

Radical-Zakir-naik

Zakir-aggressive

Zakir-aggressive

ஒவ்வொரு முஸ்லீமும் தீவிரவாதியாக வேண்டும் என்று பேசிவரும் ஜாகிர் நாயக்: இப்படியும் ஆங்கிலப் பத்திரிக்கைகள் குறிப்பிடுகின்றன. ஒஸோமா பின் லேடனைப் புகழும், தீரவாதக் கொள்கையையுடைய ஜாகிர் நாயக்கை தடைசெய்யப்பட்டார், என்றும் கூறுகிறது. அந்நாட்டு உள்துறை செயலர், “டிவி மதப்பிரச்சாரகர் தூண்டிவிடும் வகையில் பேசுவதாலும் அவருடைய ஏற்றுக்கொள்ளமுடியாத நடத்தையினாலும் தடைசெய்யப்படுவதாகக் குறிப்பிடுகிறார் “.

சட்டப்பிடியிலிருந்து தப்பி வாழும் முஸ்லீம்களை இந்தியாவிற்கு வரவழைத்தால் “செக்யூலரிஸம்” ஆகுமா?

நவம்பர் 7, 2009

சட்டப்பிடியிலிருந்து தப்பி வாழும் முஸ்லீம்களை இந்தியாவிற்கு வரவழைத்தால் “செக்யூலரிஸம்” ஆகுமா?

 

நிர்வாண ஓவியர்: எம். எஃப். ஹுஸைன் [maqbool fida hussain – மக்பூல் ஃபிதா ஹுஸைன்], இந்து கடவுளர்களை நிர்வாணமாக வரைந்தது மட்டுமல்லாது, மிகவும் ஆபாசமாக சித்தரித்ததால், அவரது சித்திரங்களுக்கு எதிராக பல எதிர்ப்புகள்-போராட்டங்கள் நடந்தன. ஆனால், அரசு “செக்யூலரிஸ” போர்வையில், மெதுவாகவே செயல்பட்டது. அதனால், அவர்மீது பல நீதிமன்றங்களில் வழக்குகள் பதிவு செய்யப் பட்டன. அவரின் அவதூறு செயலிற்காக அவரது சொத்துகளை ஜப்தி செய்யவும் ஆணையிடப்பட்டது[1]. ஆகவே சட்டப்பிடியிலிருந்து தப்பித்துக் கொள்ள 2005ல் துபாயிற்கு சென்று விட்டார்[2].

 

கம்யூனிஸ-காங்கிரஸின் “செக்யூலரிஸக் கூட்டுத் விளையாடல்கள்”: இவை இவ்விஷயத்தில் நிறையவே இருக்கின்றன. 2007ல் ராஜா ரவிவர்மா விருது இவருக்கு அளிக்கப்பட்டது ஆனால் கேரளா உயர் நீதிமன்றம் தடை விதித்தது. கேரள அரசு விடவில்லை, உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்வோம்[3] என்றது! அகில் சிபல் ஹுஸைனுடைய வக்கில், இவர் கபில் சிபலுடைய மகன்.

 

உள்துறை சூழ்ச்சிகள்: “டைம்ஸ் நௌவ்” டிவி-செனலில் காண்பிக்கப் பட்ட நேற்றைய நேர்காணலே போலித்தனமானது அல்லது கருத்துருவாக்கம் ஏற்படசெய்யும் வேலை என்று நன்றாகவேத் தெரிகிறது. ஏனெனில், ஏற்கெனவே காங்கிரஸ் சுப்ரீம் கோர்ட்டில் உள்ள வழக்குகளை அவருக்கு சாதகமாக முடித்து, இஎதியாவிற்கு வர ஏற்பாடுகள் செய்து வருகிறது[4]. [Home Ministry sources said cases filed against Husain across the country over his controversial paintings should be brought to a logical end and that the Centre was contemplating to move the Supreme Court for their expeditious disposal to ensure his early return.].

 

“டைம்ஸ் நௌவ்” டிவி-செனலில் 01-11-2009 அன்று இரவு 8.30 முதல் 9 வரை, துபாயில் ஒரு நேர்காணலில், எம். எஃப். ஹுஸைன் பல கேள்விகளுக்கு பதில் கொடுத்ததில், அவரது நிலையை அறிந்து கொள்ளலாம்:

 

* உங்களுடைய ஓவியங்கள் எதிர்ப்பு பற்றி………

அவர்கள் என்னுடைய கலையை அறிந்துகொள்ளவில்லை. நவீனகால ஓவியமுறை அவர்களுக்குப் புரியவில்லை

 

* இந்தியாவின் பெரும்பான்மையான கலைஞர்கள் உம்மை ஆதரிக்கவில்லை?

அவர்கள் தம்முடைய எண்ணங்களுடன் செயல்படுகிறார்கள். அவர்கள் மீது நான் குற்றம் சொல்லமாட்டேன்.

 

* உம்மை எதிர்ப்பவர்களுக்கு என்ன சொல்கிறீர்கள்?

நான் எதுவும் சொல்லவிரும்பவில்லை.

 

* நீங்கள் தனிமைப் படுத்தப் பட்டதாக நினைக்கிறீர்களா?

என்னுடைய வேலைதான், என்னை தனிமைப் படுத்தியுள்ளதே தவிர,

 

* உங்கள் கலை மக்களைப் புண்படுத்தியுள்ளது பற்றி என்ன சொல்கிறீர்கள்?

நானும் என்னுடைய சித்திரங்களுக்கு எதிர்ப்புள்ளதற்கு வருத்தப்படுகிறேன்!

 

* சட்டப்படி, நீங்கள் போராட விரும்புகிறீர்களா?

நான் மேலும் போராட விரும்பவில்லை, நான் வசதியான வாழ்க்கை வாழ விரும்புகிறேன். [ஆனால் தன் மீதுள்ள வழக்குகள் எல்லாம் வாபஸ் வான்கி விட்டால் இந்தியாவிற்கு வருவேன் என்று வேறு இடத்தில் பேட்டி அளித்துள்ளார்[5]].

 

நான் வலது அல்லது இடது எதைப் பற்றியும் கவலைப் படவில்லை. அவைகளைப் பற்றி எனக்கு ஒன்றும் புரியவில்லை.

 

* நீங்கள் எப்பொழுது இந்தியாவிற்கு வருவீர்கள்?

என்னுடைய (சித்திர)வேலையை இந்தியாவில் தொடரமுடியாது. என்னுடைய வேலை முடிந்தவுடன்தான், நான் இந்தியாவிற்கு வரமுடியும். அதற்கு இரண்டு வருடங்கள் ஆகலாம். என்னுடைய வேலை முடிந்தபிறகு, இந்தியாவிற்கு வருவேன். இந்திய மக்கள் என்னை விரும்புகிறார்கள். வேறு இடத்தில் சொல்வதோ இப்படியிருக்கிறது! {He had said[6], “If right now I get a call from Mr Chidambaram (Union Home Minister), I will take the first flight to India and congratulate him that the government has done really good.”}. சிதம்பரம் சொன்னால் போதும், பிளேன் பிடித்துக் கொண்டு ஓடி வந்துவிடுவேன்[7]. செய்த நல்லகாரியத்திற்கு நன்றி சொல்வேன்!

 

* உமக்கு பாதுகாப்பு அளித்தால், இந்தியாவிற்கு வருவீர்களா?

எனக்கு எந்தவிதமான பாதுகாப்பும் தேவையில்லை. அச்சுருத்தல்களுக்கு அஞ்சவில்லை.

 

பாலுஹுட்டைப் பற்றிய உங்களது எண்ணம் என்ன? மாதுரியைப் பற்றி பேச ஆரம்பித்துவிட்டார்!

 

புதிய இந்திய செக்யூலரிஸம்! தஸ்லிமா நஸ்-ரீன் மற்றும் ஹுஸைன் இருவரையும் இந்தியாவிற்கு திரும்ப அனுமதி அளிப்பதன் மூலம்[8] காங்கிரஸ் “செக்யூலரிஸம்” பின்பற்றுவதாக செய்திகளும் பரப்ப ஆரம்பித்து விட்டனர்! [In order to balance the scale of secularism, it is high time another equally eminent celebrity Taslima Nasreen should also be allowed to return to India. She was forced to flee the country by the Congress government and the Muslim extremists protesting her modern and progressive writings.] இரு முஸ்லீம்களுக்கு அடைக்கலம் / சட்டம் தளர்ப்பது / நீர்ப்பது செய்தால் செக்யூலரிஸம் ஆகும் என்றால் என்ன அது?

 

 


[1] http://www.dawn.com/2007/05/09/int8.htm

[2] http://www.timesnow.tv/Ill-be-back-soon-MF-Husain/articleshow/4331445.cms

[3] http://www.hindu.com/2007/09/14/stories/2007091460170400.htm

[4] http://www.deccanherald.com/content/33607/todays-letters.html

[5] http://www.timesnow.tv/Ill-be-back-soon-MF-Husain/articleshow/4331445.cms

[6] http://spicezee.zeenews.com/articles/story45587.htm

[7] http://www.beviga.com/1590/m-f-hussain-the-homecoming/

[8] http://www.dnaindia.com/speakup/report_facilitate-taslima-s-entry-with-husain_1306860