Posted tagged ‘எதிர்ப்பு’

“தலித்-முஸ்லிம்” மோதல்களிலிருந்து [24-04-2018 மற்றும் 05-05-2018] செக்யூலரிஸ ரீதியில் அறியப்படுவது, புரிவது என்ன?

மே 6, 2018

தலித்முஸ்லிம்மோதல்களிலிருந்து [24-04-2018 மற்றும் 05-05-2018] செக்யூலரிஸ ரீதியில் அறியப்படுவது, புரிவது என்ன?

Dalit-muslim clash near Theni, The Hindu 06-05-2018

தேனி சுற்றியுள்ள பகுதிகளில்இருதரப்புமோதல்கள் என்பது, அவ்வப்போது, செய்திகளில் வந்து கொண்டிருக்கின்றன: ஜனவரி 2016ல் பொங்கல் சமயத்தில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது[1]. காணும் பொங்கலையொட்டி நடந்த கலைநிகழ்ச்ச்சியில் தகராறு ஏற்பட்டதால், மோதல் ஏற்பட்டது. காவலர்களும் தாக்கப்பட்டனர்[2]. டிசம்பர் 2017ல் தேனியில் அருகில் இருக்கும் ஊர்களுக்கு பேருந்து வசதி இல்லாத காரணத்தால், ஷேர் ஆட்டோக்கள் மூலம் தான் அதிக அளவில் போக்குவரத்து நடைபெறுகிறது. இதனால் அங்கு, நிறைய ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. அந்த ஷேர் ஆட்டோக்களில் ஒவ்வொரு முறையும் அதிக எண்ணிக்கையிலான பயணிகளை ஏற்றுவதில் இருதரப்பு ஆட்டோ ஓட்டுநர்களிடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பினருக்கும் மோதம் முற்றியதில் அதில் ஒரு தரப்பினர், பெட்ரோல் குண்டுகளை வீசினர்[3]. இதனால் அங்கு இருந்த கார்களின் கண்ணாடிகள் உடைந்து பாதிக்கப்பட்டன. தெருவிளக்குகள் உடைந்தன.. இந்த மோதலைத் தடுக்க வந்த போலீசாரையும் அவர்கள் தாக்கினர். இதனால் அந்த பகுதியே கலவர பூமிபோல் காணப்பட்டது. இதையடுத்து, போலீசார் 30 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்[4].ஜனவரி 16-01-2018 அன்று தேவாரம் அருகே இருசக்கர வாகனங்கள் ஓட்டிச்சென்றதில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. தம்மிநாயக்கன்பட்டியில் இருபிரிவினரும் கல்வீசித் தாக்குதல் நடத்தியதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது[5]. இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். இருசக்கரவாகனத்தை ஓட்டிச்சென்றவர் உட்பட 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்[6]. போலீஸாரைத் தாக்குதல், பெட்ரோல் குண்டுகள் வெடிப்பது, பொங்கலை அடுத்து கலவரங்கள் ஏற்படுத்தல் என்பன, ஒரு திட்டமிட்ட போக்கை எடுத்துக் காட்டுகிறது. நிச்சயமாக அதில் எஸ்.சிக்களுக்கு பங்கில்லை.

Periyakulam, Muslims attack Hindu houses-news cutting english

ஏப்ரலில் [24—004-2018] பிணம் எடுத்துச் சென்றபோது கலவரம்: தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே பொம்மிநாயக்கன்பட்டியில் பள்ளிவாசல் தெருவில் வசிப்பவர்களுக்கும், காலனி தெருவை சேர்ந்தவர்களுக்கும் முன்விரோதம் இருந்து வந்தது[7]. ஏப்ரலில் “காலனி தெரு”வை சேர்ந்த வேலு மனைவி வன்னியம்மாள் (62) இறந்து விட்டார். இதனையடுத்து அவரது உடலை அடக்கம் செய்ய மயானம் கொண்டு செல்லப்பட்டது. அப்போது, மயானம் செல்லும் வழியில் திருமண விழாவிற்கான பந்தல் போடப்பட்டிருந்ததால், வேறு ஒரு சமூகத்தினர் வசிக்கும் பாதை வழியாக உடல் கொண்டு செல்லப்பட்டது. இதெல்லாம் கிராமங்களில் அனுசரித்து நடந்து கொள்ளும் பழக்க-வழக்கங்கள் ஆகும். இவரது உடலை மயானத்திற்கு “முஸ்லிம் தெரு” வழியாக எடுத்து செல்லும்போது, முஸ்லிம்கள் தடுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீஸார் தலையிட்டு, சமரசம் செய்தலால், இறுதி சடங்கு நடத்தி முடிக்கப் பட்டது[8]. முதலில் தெருவுக்கு “ஜாதி” பெயர் இருக்கக் கூடாது என்ற நிலை இருக்கும் போது, “முஸ்லிம் தெரு” என்று பெயர் உள்ளதே வகுப்புவாதத்தை வளர்க்கும் கோஷ்டிகள் அங்கிருப்பது தெருகிறது. அதே போல “காலனி தெரு” என்று குறிப்பிட வேண்டிய அவசியமும் இல்லை. சடங்கு நடந்த பிறகு, இரு பிரிவினரிடையே கலவரம் வெடித்தது[9].  இறப்பு முதல்லிய சடங்குகளில் முகமதியர் அந்த அளவுக்கு கடுமையாக இருந்திருக்கக் கூடாது. அமைதியாக இருந்திருந்தால், சாதாரண பிரச்சினை, இவ்வாறான மோதல்-கலவரத்தில் முடிந்திருக்காது. இதில் சில கடைகள், வீடுகள் சேதமானது. 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுதொடர்பாக ஜெயமங்கலம் போலீசார் 100 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதன்காரணமாக இரு சமூகத்தினருக்குமிடையே பிரச்சனை ஏற்பட்டு, 10 நாட்களாக அடங்காமல் இன்று விஸ்வரூபமெடுத்து கலவரமாக வெடித்தது[10].

Periyakulam, Muslims attack Hindu houses-6

மே 2018 [05-05-20118] மாதத்தில் நடந்த கலவரம்: இந்நிலையில் 05-05-2018 அன்று காலை பள்ளிவாசல் தெருவை சேர்ந்த ஒருவர் காலனி தெரு வழியாக தனது தோட்டத்திற்கு சென்றார். “அன்று பிணம் என்றும் பார்க்க்காமல், ஈவு-இரக்க்ம் இல்லாமல், தடுத்தாயே, நீ எப்படி இன்று இந்த வழியாக செல்கிறாய், வேறு வழியாகச் செல்ல வேண்டியது தானே?,” என்ற கேள்வி நிச்சயமாக எழுந்திருக்கும். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு, இருதரப்பினரிடையே மீண்டும் கலவரமாக மாறியது[11]. இருதரப்பினரும் கற்கள், கம்பி, அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் தாக்கிக்கொண்டனர். இதில் கலைச்செல்வன், வேலுத்தாய், ஆரிப்ராஜா, அக்கீம் உட்பட 50 பேர் காயமடைந்தனர். இவர்கள் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருதரப்பிலும் 50 வீடுகள் சேதமடைந்தன. ஒரு கார், டூவீலர், ஆட்டோ, ஸ்டூடியோ, கம்ப்யூட்டர் பழுது பார்க்கும் கடைக்கு தீ வைக்கப்பட்டது. தகவலறிந்ததும் திண்டுக்கல் சரக டிஐஜி ஜோசி நிர்மல் குமார், மாவட்ட எஸ்பி பாஸ்கரன் மற்றும் போலீசார் வந்து கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பொம்மிநாயக்கன்பட்டியை போலீசார் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். இதனிடையே, கலவரத்தில் ஈடுபட்டதாக 100 பேரை ஜெயமங்கலம் போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். இவற்றை இவ்வீடியோவில் காணலாம்[12].

Periyakulam, Muslims attack Hindu houses-2

சமதர்மம், சமத்துவம் பேசினால் மட்டும் போறாது, கடைப் பிடிக்க வேண்டும்: சமரசப் பேச்சிற்குப் பிறகும், எச்சரிக்கையாக போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது[13]. மேலும் இப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ள போலீஸார் 24 மணி நேரம் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்[14]. போலீஸ் நடவடிக்கைக்கு பயந்து, பலர் ஓடிவிட்டதாகவும் தெரிகிறது. ஏப்ரலில் தொல்.திருமாவளவனின் படம் தாக்கப்பட்டதிலிருந்து, இருதரப்பினருக்கும் விரோதம் இருப்பதாக, உள்ளூரில் சொன்னதாக, “தி இந்து” குறிப்பிடுகிறது[15]. “மனித நேயம்” என்றெல்லாம் பெயரை வைத்துக் கொள்வது, மேடைகளில் பேசுவது, பிரச்சாரம் செய்வது என்றெல்லாம் இருந்து, நடப்பு வாழ்க்கையில், இவ்வாறு பிணம் விசயத்தில் கூட, கொடூரமாக நடந்து கொண்டது, திகைப்பாக இருக்கிறது. செக்யூலரிஸ நாட்டில், இந்தியர், எங்கு வேண்டுமானாலும், வீடு வாங்கலாம், வாழலாம், என்றெல்லாம் சட்டங்கள் இருக்கும் போது, இவ்வாறு, “எங்கள் தெருவுக்கு வராதே……” என்ற நிலை இருப்பது, சமதர்மம் ஆகாது. “தலித்-முஸ்லிம் மோதல்”, தேனி அருகில் – தி இந்து – அடித்தது, ஒரே கல்லில் இரண்டு மாங்காய், செக்யூலரிஸப் பழமாக அழுகிய செய்தியைக் கொடுத்துள்ளது! ஏனெனில், “தலித்” என்ற பிரயோகம் சட்டப்படி கூடாது என்றாலும், உபயோகித்தது மற்றும் இதுவரை “இரு பிரிவினர் மோதல்” என்று தலைப்பிட்டு, யார்-யார் மோதிக்கொண்டார்கள் என்று மறைக்கும் நிலையில், அவ்வாறு குறிப்பிட்டு, தலைப்பிட்டு போட்டுள்ளது திகைப்பாக இருக்கிறது. ஏனெனில், “தி இந்து” அவ்வாறு செய்யாது, ஆனால், இப்பொழுது செய்துள்ளது. எனவே இதன் பின்னணி என்ன என்பதும் ஆராய வேண்டும்.

 

© வேதபிரகாஷ்

05-05-2018

Periyakulam, Muslims attack Hindu houses-5

[1] புதியதலைமுறை, தேனி அருகே இரு பிரிவினரிடையே திடீர் மோதல்: கலை நிகழ்ச்சியின் போது வன்முறை, Web Team, Published : 18 Jan, 2016 01:21 pm

[2] http://www.puthiyathalaimurai.com/news/districts/463-clash-between-two-groups-in-theni.html

[3] தமிழ்.ஒன்.இந்தியா, தேனி.. ஆட்டோவில் பயணிகளை ஏற்றுவதில் மோதல்பெட்ரோல் குண்டு வீச்சு! – வீடியோ, Posted By: Suganthi Published: Wednesday, April 12, 2017, 10:47 [IST]

[4]  https://tamil.oneindia.com/news/tamilnadu/auto-drivers-throw-petrol-bomb-theni-279543.html

[5] தினகரன், தேனி அருகே இருதரப்பினரிடையே மோதல்: 2 பேர் கைது, 2018-01-17@ 08:35:34

[6] http://www.dinakaran.com/News_detail.asp?Nid=367818

[7] தினகரன், தேனி தேவதானப்பட்டி அருகே இருதரப்பு மோதல்: 50 வீடுகள் சேதம் : வாகனங்கள், கடைகளுக்கு தீவைப்பு, 2018-05-06@ 02:24:15.

[8] According to the police, when Vanniammal, an aged Dalit woman, died on April 24, her relatives and friends decided to take out the funeral procession through Muslim Street in Bomminaickanpatti village near Periyakulam. They chose the new route as there was another death ritual going on in their regular route. When the procession entered the Muslim Street, some residents protested and a minor clash followed. The police pacified both sides and the Dalits managed to complete the funeral that day. Later, the village witnessed minor skirmishes between the two groups.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/dalit-muslim-clash-near-theni/article23791161.ece

[9] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=399384

[10] தமிழ்.ஒன்.இந்தியா, பெரியகுளம் அருகே இரு சமூகத்தினர் மோதல்: வாகனங்கள் தீக்கிரை.. போலீசார் குவிப்பு, Posted By: Hemavandhana Published: Sunday, May 6, 2018, 10:47 [IST]

[11] https://tamil.oneindia.com/news/tamilnadu/car-vehicles-were-set-on-fire-riots-near-periyakulam-318931.html

[12] தேனி மாவட்டத்தில் இரு பிரிவினருக்கிடையே மோதல்: போலீசார் ,Published on May 5, 2018; https://www.youtube.com/watch?v=RX_wlPP3bO8

[13] தினமணி, பெரியகுளம் அருகே இருதரப்பினர் மோதல்: வீடுகள், வாகனங்களுக்கு தீவைப்பு: 20 பேர் கைது, By DIN | Published on : 06th May 2018 09:16 AM

[14] http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/may/06/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-20-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2914420.html

[15] The locals said the two groups had been harbouring enmity against each other ever since a portrait of VCK leader Thol. Thirumavalavan was damaged last month.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/clash-between-dalits-and-muslims-near-theni/article23789937.ece?utm_source=tp-tamilnadu&utm_medium=sticky_footer

கஞ்சி தொட்டி மாரியம்மன் கோவில் ஆடித் திருவிழாவை துலுக்கர் எதிர்த்த காரணம் என்ன? செக்யூலரிஸ நாட்டில் இந்துக்களின் உரிமைகளைப் பறிக்க முடியுமா? (2)

ஓகஸ்ட் 7, 2017

கஞ்சி தொட்டி மாரியம்மன் கோவில் ஆடித் திருவிழாவை துலுக்கர் எதிர்த்த காரணம் என்ன? செக்யூலரிஸ நாட்டில் இந்துக்களின் உரிமைகளைப் பறிக்க முடியுமா? (2)

Salem - Hindu festival opposed- why then shops put-up-3-08-2017

திருவிழாவை நடத்த விடமாட்டோம் என்றும் கூறி கோஷங்களை எழுப்பினர்:  இதுபற்றிய தகவல் அப்பகுதியில் வேகமாக பரவியதால் இருதரப்பினரை சேர்ந்த ஏராளமானோர் அங்கு திரண்டனர். இதுகுறித்து அறிந்த போலீஸ் துணை கமிஷனர் சுப்புலட்சுமி, உதவி கமிஷனர் அன்பு, இன்ஸ்பெக்டர்கள் சரவணன், குமார், குமரேசன் மற்றும் போலீசார் அங்கு வந்தனர். பிறகு இரு தரப்பினரிடமும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் ஒரு தரப்பினர் கோவிலில் திருவிழாவை நடத்துவோம் என்றும், அதற்கு மற்றொரு தரப்பினர் திருவிழாவை நடத்த விடமாட்டோம் என்றும் கூறி கோஷங்களை எழுப்பினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. அப்போது ஒரு தரப்பினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  இதுதான் துலுக்கரின் லட்சணம் என்று தெரிந்து விட்டது! செக்யூலார் நாட்டில் துலுக்கருக்கு உரிமைகள் இருந்தால், இந்துக்களுக்கு இல்லை என்று எப்படி இருக்கலாம். இதனால் தான் அடக்கப் படும் இந்துக்கள் பொங்கி எழுகிறார்கள்.

Muslims participated in Kumbabisekam - July 2016

ஜூன் 2016ல் முஸ்லிம்கள் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டது[1]: இந்தியா, விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே தம்பிபட்டி சந்தன மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் பூஜை பொருட்களுடன் முஸ்லிம்கள் பங்கேற்றனர். தம்பிபட்டி சந்தன மாரியம்மன் கோயில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஜமாத்தலைவர் மீராமுகைதீன், மசூதி இமாம் ஜாபர்அலி தலைமையில் முஸ்லிம்கள், பூஜைக்கு உரிய தட்டுகளுடன் கோயிலுக்கு வந்தனர். கோயில் நிர்வாகிகள் அவர்களை ஆரத்தழுவி வரவேற்றனர். முஸ்லிம்கள், யாகசாலை பந்தலுக்கு முன் அமர வைக்கப்பட்டனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இக்கோயிலுக்கு கிறிஸ்தவ, முஸ்லிம் மதத்தினரும் நன்கொடை வழங்கி உள்ளனர். ஜமாத் தலைவர் மீரா முகைதீன், ‘மத பாகுபாடு இன்றி ‘மாமா’, ‘அண்ணன்’ என்ற உறவு முறை சொல்லித் தான் இன்று வரை பழகி வருகிறோம். இல்ல விழாக்களில் இருமதத்தினரும் பங்கேற்க தவறுவது இல்லை. இந்த உறவு என்றும்தொடரும்,’ என்றார். மசூதி இமாம் ஜாபர் அலி கூறுகையில், ‘ரமழான் நோன்பு காலத் தடையை கடந்து கோயிலுக்கு வந்துள்ளோம். எங்களுக்கும், அவர்களுக்கும் உள்ள உறவு எவ்வளவு வலுவானது என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ளலாம்,’ என்றார். ஆனால், இதை பதிவு செய்த முஸ்லிம் கேட்பது[2], “எங்கே செல்கிறது முஸ்லிம் சமூகம்?”!  அதாவது, “இந்து-முஸ்லிம்” வளர்க்கலாம் என்றாலும், தூண்டிவிடும் முஸ்லிம்கள் இருக்கிறார்கள் என்று தெரிகிறது.

Why Muslims oppose festivals celebrated over 60 years-03-08-2017

60 ஆண்டுகளுக்கு மேலாக கஞ்சி தொட்டி மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா நடத்தி வரும் போது, தற்போது மட்டும் எதிர்ப்பு தெரிவிக்க என்ன காரணம்?: இது ஒருபுறம் இருக்க, கிச்சிபாளையம் மெயின்ரோட்டில் ஒரு தரப்பினரும், பிரிவு ரோட்டில் மற்றொரு தரப்பினரும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் மீண்டும் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது. அந்த பகுதியில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதனிடையே மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் சம்பவ இடத்திற்கு வந்து இரு தரப்பினரிடமும் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், சேலம் உதவி கலெக்டர் குமரேஸ்வரன், தாசில்தார் (பொறுப்பு) மாதேஸ்வரன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளும் அங்கு வந்தனர். அப்போது, சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக கஞ்சி தொட்டி மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா நடத்தி வருவதாகவும், ஆனால் தற்போது மட்டும் எதிர்ப்பு தெரிவிக்க என்ன காரணம் என்று ஒரு தரப்பினர் போலீசாரிடம் தெரிவித்தனர். இதை கேட்ட போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார், அந்த தகவலை மற்றொரு தரப்பினரிடம் தெரிவித்தனர்.

Muslims received Hindus with garlands 03-08-2017-Vikatan

மதவாத காரணங்கள் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: அவர்கள் சொல்லியது மதவாதமாக இருந்தது. ஆண்டாண்டுகளாக கோவில்கள் இருக்கும் போது, திடீரென்று முஸ்லிம்கள் வந்து, முழுத் தெருவையும் ஆக்கிரமித்துக் கொண்டு, எங்கள் தெருவின் வழியாக வராதே என்பது எப்படி சட்டப் படி சரியாகும். அவர்களைத் தானே, போலீஸார் முதலில் தடுத்திருக்க வேண்டும்? அதைத்தொடர்ந்து இரு தரப்பிலும் தலா ஐந்து பேர் வீதம் பேச்சுவார்த்தைக்கு வருமாறும், இந்த பிரச்சினையை பேசி தீர்த்துக்கொள்ளலாம் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது[3]. இதனால் சமாதானம் அடைந்த இரு தரப்பினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்[4]. இந்த விவகாரம் தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் இருதரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இருதரப்பினரும் மோதிக்கொள்ளும் சூழல் உருவானதையொட்டி கிச்சிபாளையம் பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்[5]. மறியலில் ஈடுபட்டு, மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக, 85 பேர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்[6].

Muslims received Hindus with garlands - August 2011- Ervadi Dargah

ராமநாதபுரம், ஏர்வாடி அம்மன் முளைப்பாரி ஊர்வலங்களை வரவேற்கும் முஸ்லிம்களைப் போல சேலம் முஸ்லிம்கள் ஏன் செயல்படவில்லை?: மனித நேயம், மத நல்லிணக்கம், ஒற்றுமை, அமைதி என்றால் பேசினால் வந்து விடாது. மக்களை மக்களாக மதிக்கத் தெரியாமல் இருந்தால், முஸ்லிம்களும் அமைதியாக மற்றவரோடு வாழ முடியாது. இதனால் தான் முஸ்லிம்கள் தேசிய நீரோட்டத்துடன் கலக்க வேண்டும், இந்தியன் என்ற உணர்வு இருக்க வேண்டும் என்று எடுத்துக் காட்டப் படுகிறது. விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே தம்பிபட்டி சந்தன மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் பூஜை பொருட்களுடன் முஸ்லிம்கள் பங்கேற்றதை போல மற்ற முஸ்லிம்கள் ஏன் செய்ய முடியவில்லை. ராமநாதபுரம், ஏர்வாடி அம்மன் முளைப்பாரி ஊர்வலங்களை வரவேற்கும் முஸ்லிம்களைப் போல சேலம் முஸ்லிம்கள் ஏன் செயல்படவில்லை. மாறாக தடுக்க, எதிர்க்க, அவதூறு செய்ய ஏன் அவ்வாறு செயல்பட்டிருக்க வேண்டும். அதன் பின்னணி என்ன? அதிலும் முஸ்லிம் பெண்கள் எதிர்த்தார்கள் என்பது அதிர்ச்சியாக இருக்கிறது.

© வேதபிரகாஷ்

06-08-2017

Muslims received Hindus with garlands - August 2017-Ramanathapuram Daily Thanthi

[1] ஜைஜில் நியூஸ், எங்கே செல்கிறது நம் சமூகம்? கோயில் கும்பாபிஷேகத்தில் முஸ்லிம்(?)கள், By  admin3, June 18, 2016

[2] http://www.zajilnews.lk/37777

[3] The Hindu, Timely intervention by police prevents clash between two groups in Salem, SPECIAL CORRESPONDENT, SALEM,AUGUST 03, 2017 07:11 IST, UPDATED: AUGUST 03, 2017 07:12 IST.

[4] http://www.thehindu.com/news/cities/Coimbatore/timely-intervention-by-police-prevents-clash-between-two-groups-in-salem/article19412808.ece

[5] தினமலர், திருவிழா நடத்துவதில் மோதல்: சேலத்தில் 85 பேர் மீது வழக்கு, பதிவு செய்த நாள். ஆகஸ்ட்.4, 2017, 07:17.

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1826492

கஞ்சி தொட்டி மாரியம்மன் கோவில் ஆடித் திருவிழாவை துலுக்கர் எதிர்த்த காரணம் என்ன? செக்யூலரிஸ நாட்டில் இந்துக்களின் உரிமைகளைப் பறிக்க முடியுமா? (1)

ஓகஸ்ட் 7, 2017

கஞ்சி தொட்டி மாரியம்மன் கோவில் ஆடித் திருவிழாவை துலுக்கர் எதிர்த்த காரணம் என்ன? செக்யூலரிஸ நாட்டில் இந்துக்களின் உரிமைகளைப் பறிக்க முடியுமா? (1)

Salem - Hindu festival opposed by mohammedan women- 3-08-2017

கஞ்சி தொட்டி மாரியம்மன் கோவில் ஆடித் திருவிழா: சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா நடைபெறும் நாட்களில் கஞ்சி தொட்டி மாரியம்மன் கோவிலிலும் “ஒரு தரப்பினர்” திருவிழா நடத்துவது வழக்கம். அதன்படி 02-08-2017 அன்று [புதன் கிழமை] மதியம் 2 மணியளவில் “கரீம் காம்பவுண்ட்” தெருவில் வசிக்கும் “ஒரு தரப்பினரை” சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்று சேர்ந்து கஞ்சி தொட்டி மாரியம்மன் கோவிலில் உள்ள அம்மனுக்கு மஞ்சள் பூசி, விளக்கு வைத்து பூஜையில் ஈடுபட்டனர்[1]. இதற்கு “மற்றொரு பிரிவு பெண்கள்” எதிர்ப்பு தெரிவித்தனர். தவிர, எதிர்ப்பு தெரிவித்து, அங்கிருந்த பெண்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், அம்மன் கோவிலில் திருவிழா நடத்தக்கூடாது என்று கூறியதால் “இரு தரப்பினருக்கும்” இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியது[2]. இதனால் ஆவேசம் அடைந்த “பெண்கள்” திடீரென தங்களது வீடுகளில் இருந்து மண்எண்ணெய் கேன்களை எடுத்து வந்தனர்[3]. பின்னர், அவர்கள் கோவில் முன்பு அமர்ந்து உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது[4].

Salem - Hidu festival opposed- Hindu women tried to self-immolate-3-08-2017

ஊடகங்கள் செக்யூலரிஸ முறையில் சொல்ல வருவது என்ன?: வழக்கமாக ஊடகங்கள்,

  1. “ஒரு தரப்பு”,
  2. “கரீம் காம்பவுண்ட்” தெருவில் வசிக்கும் “ஒரு தரப்பினர்”
  3. “மற்றொரு பிரிவு பெண்கள்”
  4. “இரு தரப்பினர்”
  5. ஆவேசம் அடைந்த “பெண்கள்”
  6. அவர்கள் கோவில் முன்பு அமர்ந்து உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

என்றெல்லாம், செய்திகளை வெளியிட்டபோது, படிப்பவர்களுக்கு என்ன புரியும், புரிந்தது என்று தெரியவில்லை. “கரீம் காம்பவுண்ட்” தெருவில் வசிக்கும் “ஒரு தரப்பினர்” என்பதால் “முஸ்லிம்கள்” மற்றும் “அவர்கள் கோவில் முன்பு அமர்ந்து உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்” என்பதால், “இந்துக்கள்” என்று எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற நிலை போலிருக்கிறது. இதுதான், அவர்களது “பத்திரிகா தர்மமா”, அப்படித்தான் அவர்களுக்கு படிக்கும் போது சொல்லிக் கொடுத்தார்களா இல்லை, இப்பொழுது வேலை செய்யும் ஊடக நிறுவனத்தில் அவ்வாறு குறிப்பிடப்பட வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டதா, செக்யூலரிஸ முறையில் அவ்வாறு செய்கிறார்களா என்று பல கேள்விகள் இங்கு எழுகின்றன. ஆக, இங்கு முஸ்லிம் பெண்கள், இந்து பெண்களின் பாரம்பரிய வழிப்பாட்டை எதிர்த்தார்கள், கலவரம் ஏற்பட தூண்டினார்கள் என்றுதான் தெரிந்து கொள்ள வேண்டுயுள்ளது.

Salem - Hidu festival opposed by Muslims- 03-08-2017. Minmurasu

இந்துபெண்களின் வழிபாட்டை, முஸ்லிம்  பெண்கள் எதிர்ப்பது: இந்தியாவில் இதுவரை இத்தகைய நிகழ்ச்சி ஏற்படவில்லை எனலாம். ஏனெனில், கடந்த 60-100 ஆண்டுகளில் அத்தகைய செய்தி வந்ததில்லை / வரவில்லை. ஆனால், இப்பொழுது, “இந்துபெண்களின் வழிபாட்டை, முஸ்லிம் பெண்கள் எதிர்ப்பது” என்பது ஆச்சரியமாகவும், விசித்திர்மாகவும், திகைப்பாகவும், அதிர்ச்சியடைய செய்வதாகவும் உள்ளது. சமீக காலங்களில் முஸ்லிம் பெண்கள் இந்து கோவில்களுக்கு செல்கிறார்கள், வேண்டிக் கொள்கிறார்கள், போன்ற புகைப்படங்கள், வீடியோக்கள் எல்லாம் வந்து கொண்டிருக்கின்றன. பொதுவாக, அத்தகைய நிகழ்ச்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இப்பொழுது, செல்போன், கேமரா வசதி முதலியவை வந்து விட்டதால், பலர் அத்தகைய நிகழ்ச்சிகளை படமெடுத்து, சமூக வளைதளங்களில் போட்டு வருகிறார்கள். இதெல்லாம் இந்து-முஸ்லிம் ஒற்றுமையை வளர்க்கும் என்று கூட சமூக வளைதளங்களில் பதிவு செய்து வருகிறார்கள். திருமலைக்கு, முஸ்லிம் பெண்கள் செல்வது சாதாரணமான விசயமாக உள்ளது. குறிப்பாக, அவர்களது கண்வன்மார்களுக்குத் தெரிந்து தரிசனம் செய்து வருகின்றனர். அதேபோல, திருக்கருகா ஊரில், குழந்தை பாக்கியம் இல்லாத முஸ்லிம் பெண்கள், குடும்பத்தாரோடு வந்து, கஞ்சி வைத்து வழிபடுவது சாதாரணமான நிகழ்வாக உள்ளது. அந்நிலையில், முஸ்லிம் பெண்கள், இந்து பெண்களை எதிர்த்தனர் என்பது திகைப்பாக இருக்கிறது.

Salem - Hidu festival opposed by Muslims- 03-08-2017.The TOI news

துலுக்கரின் வக்கிரமும், கோரத்தனமும்: முகமதியர் ஒன்றும் ஆகாசத்தில் வந்து குதித்து வந்துவிடவில்லை, கடந்த நூற்றாண்டுகளில் மதம் மாறிய இந்துக்கள் தாம் அவர்கள். இதனால், அவர்கள் தங்களது 50-300 ஆண்டுகளுக்கு முந்தைய வேர்களை அறுத்துக் கொண்டு ஓடிவிட முடியாது. இன்றைய நிலையில், தீவிரவாதம், பயங்கரவாதம் என்றெல்லாம் தமிழகத்திலேயே வளர்த்து, அமைதியை சீர்குலைத்து வரும் போது, கொஞ்சம் கூட வெட்கம், மானம், சூடு, சொரணை, பொறுப்பு, சகிப்புத் தன்மை, மனிதத்தன்மை என்று எதுவும் இல்லாமல், இவ்வாறு பெண்கள் நடத்தும் விழாவின் மீது மிருகங்கள் போல பாய்வது கேவலத்திலும்-கேவலமானது. அதிலும் முகமதிய பெண்டிர் எதிர்த்துள்ளது அவர்களது கோரமான வக்கிரத்தை எடுத்துக் காட்டியுள்ளது. இந்து பெண்கள் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று தான், வேண்டிக் கொள்கிறார்கள், விரதம் இருக்கிறார்கள், முகமதியரைப் போல, மற்றவர் நாசமாக வேண்டும் என்று தொழுவதில்லை. ஆக முஸ்லிம் பெண்கள் எதிர்த்தார்கள் என்றால், அவர்களை அந்த அளவுக்கு, முஸ்லிம்கள் வக்கிரத்துடன் தயார் படுத்தியிருக்கிறார்கள் என்று தெரிகிறது. அதாவது, இளைஞர்களை தீவிரவாதிகளாக, பயங்கரவாதிகளாக, ஜிஹாதிகளாக மாற்றுவதில் பெருமைப் பட்டுக் கொள்வது போல, இப்படி தமது மனைவிகளை தயாரிக்கிறார்கள் போலும்.  முதலில், செக்யூலரிஸப் பழங்கள், பெண்ணியப் போராளிகள், உரிமை சித்தாந்திகள், ரத்தம் சொரியும் பெண்ணியங்கள் முதலியோர் இப்போக்கை கவனிக்க வேண்டும்.

Salem - Hidu festival opposed by Muslims- 03-08-2017.

சகிப்புத் தன்மை அற்ற முகமதியர்கள்: சேலம் கிச்சிபாளையம் கரீம் காம்பவுண்ட் தெருவில் கஞ்சி தொட்டி மாரியம்மன் கோவில் உள்ளது[5]. இந்த கோவில் இருக்கும் பகுதியில் ஒரு தரப்பினரை சேர்ந்த 100 குடும்பத்தினரும், மற்றொரு பிரிவினரை சேர்ந்த 13 குடும்பத்தினரும் வசித்து வருகின்றனர்[6]. டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் [Times of India] ஆடி கொண்டாடங்களில் இருதரப்பினர் இடையே மதகலவரம் வெடித்தது என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டது[7]. முஸ்லிம்கள் அதிகமாக உள்ள தெருவின் வழியாக சென்றபோது, அவர்கள் தடுத்தனர், அதனால், பிரச்சினை உண்டானது, என்றும் விளக்கமாக செய்தி வெளியிட்டுள்ளது[8]. தமிழ்.ஒன்.இந்தியா[9], “சேலம் கச்சிபாளையம் பகுதியில் உள்ளது கரீம்காம்பவுண்ட் என்னும் குடியிருப்பு. இங்கு இந்துக்களும் இஸ்லாமியர்களும் சம அளவில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கரீம் காம்பவுண்டில் உள்ள மாரியம்மன் கோயிலில் ஆடித்திருவிழா நடத்த அங்குள்ள இந்துக்கள் ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால், இஸ்லாமியர்களோ ஆடித்திருவிழா நடத்தக் கூடாது என கூறியுள்ளனர். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் உண்டாகியுள்ளது,” என்று தெளிவாக செய்தி வெளியிட்டுள்ளது[10].

© வேதபிரகாஷ்

06-08-2017

Salem - Hidu festival opposed by Muslims- with angry faces-03-08-2017.

[1] தினமலர், கோவில் திருவிழா நடத்துவதில் மோதல் அபாயம்: பதற்றத்தால் போலீஸ் குவிப்பு, பதிவு செய்த நாள். ஆகஸ்ட்.3, 2017, 07:18.

[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=1825856

[3] தினச்சுடர், கோவிலில் திருவிழா நடத்த எதிர்ப்பு: இரு தரப்பினர் வாக்குவாதம்பெண்கள் தீக்குளிக்க முயற்சி, August 3, 2017

[4]http://dinasudar.co.in/Dinasudar/%EF%BB%BF%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/

[5] தினத்தந்தி, கோவிலில் திருவிழா நடத்த எதிர்ப்பு: இரு தரப்பினர் வாக்குவாதம்பெண்கள் தீக்குளிக்க முயற்சி, ஆகஸ்ட் 03, 2017, 04:45 AM

[6]

http://www.dailythanthi.com/News/Districts/2017/08/03024347/Opposition-to-conduct-festival-in-temple-Both-parties.vpf

[7] The Times of India, Communal clash erupts during Aadi celebrations, TNN | Aug 3, 2017, 12:46 AM IST.

[8] Tension prevailed at Kitchipalayam in Salem city after a clash erupted between members of two communities when a group was preparing to celebrate Aadi festival in temples at Karim Compound street here on Wednesday evening. City police commissioner Sanjay Kumar intervened and pacified the groups. According to Kitchipalayam police, the clash erupted when a section tried to celebrate Aadi festival at an Amman temple at Karim Compound street. To worship the deity, functionaries of an outfit tried to enter the street. It is alleged that residents belonging to another community prevented them from entering the street. An argument ensued and ended in the clash. Meanwhile, the Kitchipalayam police, who were informed by some residents, rushed to the spot and tried to pacify the groups. But their attempts were in vain. They alerted the commissioner of police who rushed to the spot and initiated peace talk between the groups. After two hours of dialogue, both the groups agreed to settle the issue amicably.More than 50 police personnel have been deployed at the spot to maintain peace in the area.

http://timesofindia.indiatimes.com/city/salem/communal-clash-erupts-during-aadi-celebrations/articleshow/59889116.cms

[9] தமிழ்.ஒன்.இந்தியா, சேலம் மாரியம்மன் ஆடித்திருவிழாஇரு சமூகத்தினர் மோதலால் பதற்றம்வீடியோ,Posted By: Suganthi, Published: Thursday, August 3, 2017, 13:21 [IST].

[10] http://tamil.oneindia.com/news/tamilnadu/hindu-muslims-clash-salem-katchipalayam-291676.html

2016ல் ஜாகிர் நாயக்கை ஆதரித்து சென்னையில் தமிழக முஸ்லிம்கள் ஆர்பாட்டம் நடத்துவது ஏன் – 2009ல் எதிர்த்தது ஏன்?

ஜூலை 17, 2016

2016ல் ஜாகிர் நாயக்கை ஆதரித்து சென்னையில்  தமிழக முஸ்லிம்கள் ஆர்பாட்டம் நடத்துவது ஏன் – 2009ல் எதிர்த்தது ஏன்?

நாயக் ஆதரவு - அனைத்து இஸ்லாமிய கட்சிகள் கூட்டமைப்பு - மோடி விரோதம்

23 இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்: கூட்டத்தில் கீழ்கண்டவர் கலந்து கொண்டு பேசினர்.  23 இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்[1].

  1. மனித நேய மக்கள் கட்சி தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா,
  2. எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாக்கவி,
  3. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில தலைவர் ஜெ.எஸ்.ரிபாயி,
  4. மக்கள் சிவில் உரிமை கழக தேசிய குழு உறுப்பினர் டி.எஸ்.எஸ்.மணி,
  5. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் மாநில தலைவர் ஏ.முகம்மது இஸ்மாயில்,
  6. ஐ.என்.டி.ஜெ. தலைவர் எஸ்.எம்.பாக்கர்,
  7. மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் தலைவர் அ.ச.உமர் பாரூக்,
  8. இந்திய தேசிய லீக் தலைவர் பசீர் அகமது,
  9. ஜம்மியத் உலமாயே ஹிந்து தலைவர் மன்சூர் காஸிபி,
  10. வெல்பேர் பார்ட்டி தலைவர் எஸ்.என்.சிக்கந்தர்,
  11. ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் தலைவர் ஷப்பீர் அகமது,
  12. முஸ்லிம் லீக் தலைவர் பாத்திமா முஸப்பர்,
  13. இஸ்லாமிய விழிப்புணர்வு கழக தலைவர் முகம்மது கான் பாக்கவி

இப்படி, முஸ்லிம் அல்லாத இயக்கங்கள், பொட்டு வைத்த பெண்கள் முதலியோர் இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளது வியப்பாக உள்ளது. உண்மையிலேயே அவர்கள் விசயம் அறிந்து கலந்து கொண்டுள்ளனரா அல்லது தமிழகத்திற்கே உரிய “கூட்டம் சேர்க்கும்” முறையில் கலந்து கொண்டார்களா என்று அவர்கள் தாம் சொல்ல வேண்டும்.

img_2005-1

அரசியல் நிர்ணய சட்டம் பிரிவு 25ன் கீழுள்ள உரிமைகள்: தாங்கள் ஜாகிர் நாயக்கைப் பற்றி புலன் விசாரணை மேற்கொள்வதில் தலையிடுவதில்லை என்றாலும், தீவிரவாதத்திற்கும், அவருக்கும் தொடர்பிருப்பது போன்று சித்தரிப்பதை எதிர்ப்பதாக கூறினர்[2]. அரசியல் நிர்ணய சட்டம் பிரிவு 25ன் கீழ், எல்லோருக்கும், தமது மதத்தைப் பின்பற்றவும், போற்றவும், பிரச்சாரம் செய்ய உரிமை இருக்கிறது என்றும், அதனை அரசு தடுக்கக் கூடாது என்றும் ஆர்பாட்டம் செய்தனர்[3]. மத்திய மற்றும் மஹாராஷ்ட்ரா அரசுகளை எதிர்த்து பலவித கோஷங்களை எழுப்பினர்[4]. பிரிவு 25ன் கீழ், எல்லோருக்கும், தமது மதத்தைப் பின்பற்றவும், போற்றவும், பிரச்சாரம் செய்ய உரிமை இருக்கிறது என்றாலும், அவை மற்றவர்களின் உரிமைகளை மீறக்கூடாது,  பொது அமைதியை பாதிக்கக்கூடாது என்றெல்லாம் கூட உள்ளன. அவற்றை மறந்து, மறைத்து, மறுத்து ஆர்பாட்டம் செய்வது வேடிக்கைதான்.

ஜாகிர் ஆதரவு போராட்டம் - 16-07-2016 - த.த.ஜா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமாஅத் ஆர்பாட்டத்தை அறிவித்து, பிறகு நிறுத்துக் கொண்டது: முன்னர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமாஅத் பட்டுக்கோட்டையில், “ஜாகிர் நாயக் அவர்களின் இஸ்லாமிய பிரச்சாரத்தை முடக்க சதி செய்யும் மத்திய பாஜக அரசை கண்டித்து”ம் மற்றும் ஜாகிர் நாயக்கிற்கு ஆதரவாக போராட்டம் என்று அறிவித்தது[5]. பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ஜாகிர் நாயக்-கிற்கு ஆதரவாக நடைபெற இருந்த அனைத்து மாவட்ட ஆர்ப்பாட்டங்களும் ரத்து என்று அறிவித்தது. ஜாகிர் நாயக்கை கைது செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என மும்பை காவல்துறை தெரிவித்ததை தொடர்ந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்த அனைத்து கண்டன ஆர்ப்பாட்டங்களும் ரத்து செய்யப்பபடுகிறது என்றது[6]. அதாவது ஒதுங்கவில்லை, ஜாகிர் நாயக்கே அடுத்த ஆண்டுதான் இந்தியாவுக்கு வரப்போகிறார் எனும்போது, இப்பொழுது என்ன ஆர்பாட்டம் வேண்டியிருக்கிறது, “வேஸ்ட்” தான் என்று தீர்மானித்திருக்கும். ஆனால், மற்ற கூட்டத்தினர் அவ்வாறில்லை, அவர்களுக்கு “மோடியை” எதிர்க்க வேண்டும் என்ற திட்டம் இருக்கிறது. கேரளா, காஷ்மீர், பங்களாதேசம், பாரீஸ், துருக்கி…..என்று எங்கு என்ன நடந்தாலும் அவர்களுக்குக் கவலை இல்லை, எப்படியாவது “மோடியை” தாக்க வேண்டும்.

muslims-against-zakirnaik

2009ல் ஜாகிர் நாயக்கை எதிர்த்தவர்கள் இப்பொழுது – 2016ல் ஆதரிப்பதேன்? (ப்ழைய கட்டுரையிலிருந்து): பீஸ் அமைப்பைச் சேர்ந்த ஜாகிர் நாயக் என்பவர், வன்முறையை தூண்டும் வகையில் பிரசாரம் செய்து வருவதாகக் கூறி ஐஸ் அவுஸ் காவல் நிலையம் எதிரே சுன்னத் ஜமாத் பேரவையினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், அதே நேரத்தில் சிலர் ஆதரித்து, நாயக்கின் கூட்டங்களை எடெற்பாடு செய்தனர். இணைதளத்தில் தேடியபோது, கீழ்கண்ட விவரம் கண்ணில் பட்டது[7]:

சென்னையில் டாக்டர் ஜாகிர் நாயக்

ஜனவரி 10, 2009, 3:37 பிற்பகல்
கோப்பு வகை: டாக்டர் ஜாகிர் நாயக்

இஸ்லாம் அல்லாத மக்களுக்காக உலகம் முழுதும் சென்று, இஸ்லாத்தின் செய்தியை எத்தி வைத்து வரும் சகோதரர் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள், இன்ஷா அல்லாஹ், வரும் ஜனவரி பதினேழாம் தேதி,சனிக்கிழமை,பதினெட்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் (JANUARY 17TH AND 18TH 2009) சென்னையில் உரையாற்ற இருக்கிறார்கள்.
சென்னையில் கிழக்கு கடற்கரை சாலையில், ஈஞ்சம்பாக்கத்தில் அமைந்துள்ள இஸ்லாமிக் இண்டெர்நேஷனல் பள்ளி வளாகத்தில், மாலை ஆறு மணி அளவில் நடைபெற உள்ளது. (ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் வீ ஜி பி கோல்டன் பீச் அமைந்துள்ளது.
எல்லா மத மக்களும் வரவேற்கப்படுகிறார்கள், அனுமதி இலவசம். பெண்களுக்கு தனி இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலதிக விவரம் வேண்டுவோர் கீழ்காணும் முகவரியில் தொடர்புகொள்ளவும்.
IRF CHENNAI,TEL: 42148804/05, EMAIL: IRFCHENNAI@GMAIL.COM
சகோதரர்களே,
உங்கள் மாற்று மத நண்பர்களையும் அழைத்து செல்லுங்கள்!
தூய மார்க்கத்தை எடுத்து சொல்லுங்கள்!!
அல்லாஹ்விடம் நற்கூலி வெல்லுங்கள்!

ஜாகிர்நாயக்கின் பெயர் சொல்லி முஸ்லிம்கள் ஒருபக்கம் அதிரடி பிரசாரம் செய்கின்றனர்! மறுபுறம் “சுன்னத் ஜாமாத்” என்று இவ்வாறு எதிர்க்கின்றனர்!
ஒன்றும் புரியவில்லையே?

© வேதபிரகாஷ்

17-07-2016

IRF - Islamic research Centre, Mumbai - The Hindu

[1] http://ns7.tv/ta/muslims-protest-against-central-government-chennai.html

[2] http://www.thenewsminute.com/article/islamic-groups-protest-chennai-demand-govt-cease-portraying-zakir-naik-terrorist-46610

[3] The Business Standard, Muslim outfits rally behind Zakir Naik, hold protest, Press Trust of India, Chennai July 16, 2016 Last Updated at 16:32 IST

[4] http://www.business-standard.com/article/current-affairs/muslim-outfits-rally-behind-zakir-naik-hold-protest-116071600502_1.html

[5] http://adiraipirai.in/?p=26723

[6] http://adiraipirai.in/?p=26767

[7]https://markaspost.wordpress.com/2009/01/10/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0/