Posted tagged ‘ஊரடங்கு உத்தரவு’

காஷ்மீரில் சிறுவன் இறந்த விவகாரம்: அறிக்கை கேட்கிறது தேசிய மனித உரிமை ஆணையம்!

ஜூலை 19, 2010

காஷ்மீரில் சிறுவன் இறந்த விவகாரம்: அறிக்கை கேட்கிறது தேசிய மனித உரிமை ஆணையம்!

ஆங்கில பத்திரிக்கைகளில் வந்துள்ள செய்தி[1]: ராதாகாந்த திரிபாடி என்ற மனித உரிமை போராட்ட வக்கீல் மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஜூன் 27, 2010 அன்று ஊரடங்கு உத்தரவை மீறி, வன்முறையில் இறங்கி, கல்லெரிந்து கலவரத்தில் ஈடுபட மக்களின் மீது ரப்பர் புல்லட்களினால் சுட்டபோது மக்பூல் வானி என்பவரின் மகன் பிலால் வானி என்ற சிறுவன் இறந்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தவிர மற்ற ஒரு சிவிலியனும் கலவத்தில் இறந்துள்ளாத தெரிகிறது. இத்தகைய நிகழ்வுகளை தடுத்து இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தகுந்த இழப்பீடு கொடுக்குமாறும் புகார்-மனு கொடுத்திருந்தார். இதை ஆதாரமாக வைத்துக் கொண்டு மனித உரிமை ஆணையம் உள்துறை அமைச்சகத்தை இதைப் பற்றிய அறிக்கையை 4 வாரங்களுக்குள் தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. அவ்வாறு அறிக்கையை தாக்கல் செய்யத் தவறினால் தனது நடவடிக்கையை அது துவங்கும் என்றும் எச்சரித்துள்ளது

தமிழ் பத்திரிக்கைகளில் வந்துள்ள செய்தி: புது தில்லி, ஜூலை 18, 2010: காஷ்மீரைச் சேர்ந்த சிறுவனை மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) வீரர்கள் துப்பாக்கியால் சுட்ட விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்எச்ஆர்சி) அறிக்கை கேட்டுள்ளது[2]. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் வட காஷ்மீரிலுள்ள சோபோர் நகரத்தில் ஜூன் 27-ம் தேதி ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தபோது வன்முறை ஏற்பட்டது. அப்போது துப்பாக்கியால் சுடப்பட்டு சிறுவன் பிலால் வானி என்பவன் இறந்தான்[3]. இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியது சிஆர்பிஎஃப் வீரர்கள்தான் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ராதாகாந்த திரிபாதி என்ற வழக்கறிஞர் மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்துள்ளார். இதைத் தொடர்ந்து அறிக்கையை 4 வாரங்களுக்குள் தாக்கல் செய்யுமாறு மத்திய உள்துறை அமைச்சகத்தை என்எச்ஆர்சி கேட்டுக் கொண்டுள்ளது. அவ்வாறு அறிக்கையை தாக்கல் செய்யத் தவறினால் தனது நடவடிக்கையை என்எச்ஆர்சி துவங்கும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


[1] http://www.dnaindia.com/india/report_national-humans-rights-commission-seeks-report-from-home-ministry-on-alleged-firing-by-crpf-in-kashmir_1411291

[2] தினகரன், http://www.dinakaran.com/indiadetail.aspx?id=10794&id1=1

[3] காஷ்மீரில் சிறுவன் இறந்த விவகாரம்: அறிக்கை கேட்கிறது தேசிய மனித உரிமை ஆணையம், First Published : 19 Jul 2010 12:00:00 AM IST

http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=India…..0%AF%8D