Posted tagged ‘உறவு’

கணவன் அக்பரை மனைவி பாத்திமுத்து கொலை செய்தது – கணவன்-மனைவி சண்டையா, கள்ளக்காதல் சீர்கேடா, பெண்ணியப் பிரச்சினையா, சமூக சீர்கேடா?

ஓகஸ்ட் 17, 2016

கணவன் அக்பரை மனைவி பாத்திமுத்து கொலை செய்தது – கணவன்-மனைவி சண்டையா, கள்ளக்காதல் சீர்கேடா, பெண்ணியப் பிரச்சினையா, சமூக சீர்கேடா?

அக்பர் கொலை 16-08-2016.பாத்தமுத்து

மர்மமான முறையில் கொலைசெய்யப்பட்டுக் கிடந்த மண்ணடி இரும்பு வியாபாரி அக்பர்: சென்னை மண்ணடி என்றாலே, இரும்புப் பொருட்கள், கழிவுகள் போன்றவைதான் ஞாபகம் வரும். வண்ண்டிகளால் அடைந்து கிடக்கும் தெரு, மக்கள் இப்படியும், அப்படியும் சென்று கொண்டிருக்கும் நிலை. இங்கு பெரும்பாலான வியாபாரிகள் முஸ்லிம்கள் தாம். சென்னை பிராட்வே மண்ணடி கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் அக்பர் (வயது 54). இரும்பு வியாபாரி. இவருடைய மனைவி பாத்திமுத்து (48). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். 16-08-2016 அன்று காலை வீட்டின் படுக்கையறையில் தொழில் அதிபர் அக்பர் கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்தார்[1]. உடனே, பாத்திமுத்து சத்தம் போட்டு, பக்கத்து வீட்டுக்காரர்கள் மற்றும் மைத்துனர் சையதிடம் விசயத்தைக் குறினார். சையது போலீஸாரிடம் புகார் கொடுத்தார். இது பற்றி தகவல் அறிந்த வடக்கு கடற்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அக்பர் பிணமாக இருந்த அறையில் சோதனை மேற்கொண்டனர். தொழில் அதிபர் அக்பர் வசித்து வந்த வீடு 3 மாடிகளை கொண்டது. இந்நிலையில், 3-வது மாடியில் வசித்து வந்த அக்பர் வீட்டிலேயே படுக்கை அறையில் கொலை செய்யப்பட்டிருப்பது மர்மமாக உள்ளது[2].

industrialist-murder-Mannady-Chennai-police-investigation_அக்பரை கொலை செய்த மனிதன் வெளியே இருந்து வரவில்லை: இரவு மர்ம நபர்கள் வீட்டிற்கு வந்து அவரை கொலை செய்து விட்டு தப்பி சென்றுள்ளனர் என்று முதலில் சொல்லப்பட்டது. அக்பர் கொலையுண்ட படுக்கையில் ரத்த கறை படிந்துள்ளது. அதனையும் போலீசார் சேகரித்துள்ளனர்[3]. படுக்கையில் இருந்த கைரேகைகளையும் பதிவு செய்தனர்[4]. கொலையாளிகள் யார் என்பது தெரியவில்லை. அக்பரின் வீட்டில் கொள்ளை அடிக்கும் நோக்கத்தில் யாரேனும் புகுந்து அவரை கொன்று விட்டு நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது[5]. ஆனால், பிறகு வீட்டில் எதுவும் திருடப்படவில்லை என்று தெரிந்தது. வியாபார போட்டியும் இருக்கலாம் என்றும் சொல்லப்பட்டது[6]. பெண் தகராறில் அக்பர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகப்படுவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது[7]. கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையை போலீசார் முடுக்கி விட்டுள்ளனர். வீட்டில் கொள்ளை அடிக்க வந்த மர்ம நபர்கள் கொலை செய்தார்களா? அல்லது அக்பருக்கு தெரிந்த நபர்கள் அவரை கொலை செய்தார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது[8]. வீடு உள்ளே பூட்டப்பட்டிருந்தது என்றும் தெரிந்தது. மேலும், மோப்ப நாய் சோனா வரவழைக்கப்பட்டது. அது வீட்டிலிருந்து தெரு வரை ஓடி சென்று நின்றுவிட்டது[9]. இதனால், கொலையாளி வெளியே இருந்து வரவில்லை அல்லது உள்ளேயிருந்தவர் உதவியுடன் வெளியாள் கொலை செய்திருக்க வேண்டும் என்று போலீஸார் தீர்மானித்தனர்.

அக்பர் கொலை 16-08-2016“சென்னையில் தொழில் அதிபர் கொலை நகைபணம் கொள்ளை” என்று ஆரம்பித்து “கள்ளக்காதலை கைவிட மறுத்த தொழில் அதிபர் கொலை கழுத்தை அறுத்துக் கொன்ற மனைவி கைது” என்று முடிந்துள்ள செய்திகள்:  நேற்று, “சென்னையில் தொழில் அதிபர் கொலை நகை-பணம் கொள்ளை” என்று தான் செய்திகள் வந்தன. பிறகு, “கள்ளக்காதலை கைவிட மறுத்த தொழில் அதிபர் கொலை கழுத்தை அறுத்துக் கொன்ற மனைவி கைது” என்று செய்திகள் முடிந்துள்ளன. அதாவது, தாம்பத்திய உறசு முறைக்கு அப்பாற்பட்ட கள்ளக்காதல்-தொடர்பு தான் கொலைக்குக் காரணம் என்பது தெரிந்திருக்கிறது, இருப்பினும், “முஸ்லிம்கள் சமாச்சாரம்” என்று செய்தியாளர்கள் ஜாக்கிரதையாக இருந்து, “நகை-பணம் கொள்ளை” என்று கதையினை ஆரம்பித்து வைத்தார்கள். பெண் தகராறில் அக்பர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகப்படுவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது[10] என்று முன்னரே கூறப்பட்டது. பிறகு, அதனை ஏன் இன்னும் விளக்கவில்லை என்று தெரியவில்லை. கள்ளக்காதலால், மனைவி கணவனை கொலை செய்தாள், கணவன் மனைவியைக் கொலை செய்தான், ஏன் ஆட்களை வைத்தே கொலை செய்தாள் / செய்தான் என்றெல்லாம் செய்திகள் வந்துள்ளன, வந்துக் கொண்டிருக்கின்றன. அந்நிலையிலும், சமூக ஆர்வலர்கள், பெண்ணிய வீராங்கனைகள், மனநல வல்லுனர்கள் என்று யாரும் இதைப் பற்றிக் கவலைப்படவில்லை. வழக்கம் போல ஊறுகாய் ;போடுவது எப்படி, எந்த கடையில் எந்த புடவை வாங்கலாம், லிங்கின்ஸைப் போடுவது எப்படி என்று தான் வாத-விவாதங்களை செய்து கொண்டிருந்தனர். பெண்ணிய அரசியல்வாதிகளும் கண்டுகொள்ளவில்லை.

அக்பர் கொலை 16-08-2016.தினத்தந்திபோலீசார் விசாரணையில் கிடைத்த தகவல் வருமாறு: தூத்துக்குடி காயல்பட்டினத்தை சேர்ந்தவர் அக்பர் (50). இவர் சென்னை மண்ணடி கிருஷ்ணன் கோயில் தெருவில் உள்ள வீட்டின் 3வது மாடியில் வாடகைக்கு வசித்தார். தொழிலதிபரான இவர், மண்ணடி பகுதியிலேயே இரும்பு கடை நடத்தி வந்தார். இவரது மனைவி பாத்திமுத்து (45). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். அக்பருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது[11]. கள்ளக்காதலை கைவிடக்கோரி பாத்திமுத்து பலமுறை கெஞ்சியும் அக்பர் மறுத்து விட்டார். சில வாரங்களுக்கு முன்பு கள்ளக்காதலியுடன் இருந்த அக்பரை, பாத்திமுத்து கையும், களவுமாக பிடித்து எச்சரித்தார். அடித்து உதைத்தனர் என்றும் இன்னொரு ஊடகம் குறிப்பிட்டது. 15-08-2016 இரவு அன்று 12.30 மணியளவில் குடிபோதையில் வந்த அக்பரிடம், பாத்திமுத்து கள்ளக்காதலை கைவிட கூறியபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது[12].  ‘‘ஏன் இப்படி செய்கிறீர்கள்? என்னையும் குழந்தைகளையும் நினைத்துப் பாருங்கள். நீங்கள் செய்வது நியாயமா’’ என்று பாத்திமுத்து அழுது புலம்பினார். ஆனால் அவரோ பாத்திமுத்துவை எட்டி உதைத்தார். பிறகு போதையில் தனது அறையில் படுத்துள்ளார்.  அவரைப் பார்க்கக் பார்க்க ஆத்திரமுற்ற பாத்திமுத்து வீட்டிலிருந்த இளநீர் வெட்டும் அரிவாளை எடுத்து அவரது கழுத்தில் சராமாரியாக 3 முறை வெட்டியுள்ளார்[13]. மேலும் ரத்தம் கொட்டியதை பார்த்ததும் பாத்திமுத்துக்கு மயக்கம் வந்துவிட்டது. அரிவாளை துணியில் சுற்றி பீரோவுக்கு அடியில் தள்ளிவிட்டு அவர் இறந்ததை உறுதி செய்த பிறகு தன்னுடைய அறைக்கு சென்று தூங்கினார்.

© வேதபிரகாஷ்

17-08-2016

[1] தினத்தந்தி, கள்ளக்காதலை கைவிட மறுத்த தொழில் அதிபர் கொலை கழுத்தை அறுத்துக் கொன்ற மனைவி கைது, பதிவு செய்த நாள்: புதன், ஆகஸ்ட் 17,2016, 1:08 AM IST; மாற்றம் செய்த நாள்: புதன், ஆகஸ்ட் 17,2016, 2:45 AM IST.

[2] தமிழ்.ஒன்.இந்தியா, சென்னையில் தொழிலதிபர் கொலை.. வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது கொடூரம்!, By: Ganesh Raj, Published: Tuesday, August 16, 2016, 17:48 [IST]

[3] தினத்தந்தி, சென்னையில் தொழில் அதிபர் கொலை நகைபணம் கொள்ளை, பதிவு செய்த நாள்: செவ்வாய், ஆகஸ்ட் 16,2016, 3:19 PM IST; மாற்றம் செய்த நாள்: செவ்வாய், ஆகஸ்ட் 16,2016, 3:19 PM IST

[4] மாலைமலர், சென்னை மண்ணடியில் தொழில் அதிபர் படுகொலை: நகைபணம் கொள்ளை?, பதிவு: ஆகஸ்ட் 16, 2016 12:03.

[5] http://www.dailythanthi.com/News/State/2016/08/16151929/Kill-the-industry-leaders-in-Chennai-5-kg-jewel-robbery.vpf

[6] http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=96671

[7] http://www.maalaimalar.com/News/TopNews/2016/08/16120317/1032870/industrialist-murder-Mannady-Chennai-police-investigation.vpf

[8] http://tamil.oneindia.com/news/tamilnadu/businessman-murdered-chennai-260381.html

[9] தமிழ்முரசு, மண்ணடியில் பயங்கரம்கழுத்து அறுத்து தொழிலதிபர் படுகொலை; மனைவி, கள்ளக்காதலியிடம் போலீசார் தீவிர விசாரணை, 8/16/2016 . 3:33:44 PM

[10] http://www.maalaimalar.com/News/TopNews/2016/08/16120317/1032870/industrialist-murder-Mannady-Chennai-police-investigation.vpf

[11] The Times of India, Woman kills sleeping hubby, tells children to wake him up, TNN, Chennai edition, Aug 17, 2016, 04.17 AM IST.

[12] http://timesofindia.indiatimes.com/city/chennai/Woman-kills-sleeping-hubby-tells-children-to-wake-him-up/articleshow/53731735.cms

[13] தினகரன், கள்ளக்காதலியுடன் ஓட முயன்ற கணவனை அரிவாளால் வெட்டிக் கொன்றார் மனைவி, Date: 2016-08-17@ 00:38:58

சோயப் மாலிக்கின் உறவால் கர்ப்பமானார் ஆயிஷா – இதிலென்ன பிரச்சினை?

ஏப்ரல் 6, 2010

சோயப் மாலிக்கின் உறவால் கர்ப்பமானார் ஆயிஷா – உறவினர்

செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 6, 2010, 9:57[IST]

http://thatstamil.oneindia.in/news/2010/04/06/ayesha-was-pregnant-says-relative.html

ஹைதராபாத்: சோயப் மாலிக்குடன் ஏற்பட்ட உறவால் ஆயிஷா கர்ப்பமடைந்தார். ஆனால் பின்னர் கர்ப்பம் கலைந்து விட்டது. இது சோயப்புக்கும் தெரியும் என்று கூறியுள்ளார் ஆயிஷாவின் உறவினர்.

இதுகுறித்து ஆயிஷாவின் உறவினரான ஷம்ஸ் பாபர் கூறுகையில், சோயப் மாலிக், ஆயிஷா திருமணம் நடந்த்துடன் அனைத்தும் முடிந்து விடவில்லை. மாறாக சோயப் மூலம் ஆயிஷா கர்ப்பமடைந்தார். ஆனால் அது பின்னர் கலைந்து விட்டது. இது சோயப்புக்குத் தெரியும்.

இருவரும் கணவன், மனைவியாக வாழ்ந்தனர். இருவரும் 14 முறை சந்தித்துள்ளனர்.

ஆயிஷாவை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நிறைய துன்புறுத்தினார் சோயப் மாலிக் என்றார் ஷம்ஸ்.

சோயப்புக்கு எதிராக வலுவான ஆதாரம் – ஆயிஷா வக்கீல்

இதற்கிடையே, சோயப் மாலிக் மீது பாகிஸ்தான் கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டும். கல்யாணத்தை நிறுத்த தீவிரமாக முயற்சித்து வருகிறோம் என்று ஆயிஷாவின் பாகிஸ்தான் வக்கீல் பாரிஸ்டர் பரூக் ஹசன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், எங்களது முக்கிய குறிக்கோள், சோயப் மாலிக்கின் மோசடியை அம்பலப்படுத்துவதுதான். அவருக்கும், சானியா மிர்ஸாவுக்கும் இடையே நடக்கவுள்ள திருமணத்தை தடுத்து நிறுத்த முயன்று வருகிறோம். இடைக்காலத் தடையை நிச்சயம் பெறுவோம்.

சோயப் – சானியா கல்யாணத்தை தடுத்து நிறுத்தத் தேவையான வலுவான ஆதாரம் என்னிடம் உள்ளது என்றார் ஹசன்.

சோயப் பாஸ்போர்ட் முடக்கம்; கைது ஆவாரா? அதிரடி திருப்பங்கள்
ஏப்ரல் 06,2010,00:00  IST

http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=7129

Front page news and headlines today

ஐதராபாத் : டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை மணக்க உள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கின் பாஸ்போர்ட்டை, ஐதராபாத் போலீசார் பறிமுதல் செய்து முடக்கினர். வரதட்சணை கொடுமை, மிரட்டல், திருமண மோசடி உள்ளிட்ட குற்றங்களின் கீழ் மாலிக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் கைது செய்யப்படவும் வாய்ப்புகள் உள்ளன.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக், வரும் 15ம் தேதி டென்னிஸ் நட்சத்திரம் சானியாவை திருமணம் செய்து கொள்ள உள்ளார். இந்த நேரத்தில் ஐதராபாத்தைச் சேர்ந்த ஆயிஷா சித்திக் என்ற பெண் சர்ச்சையை கிளப்பினார்.தனக்கும், சோயப் மாலிக்கிற்கும் இடையே, 2002ல் தொலைபேசி மூலம் திருமணம் நடந்ததாகக் கூறி பரபரப்பு ஏற்படுத்தினார். தன்னை முறைப்படி சோயப் மாலிக் விவாகரத்து செய்யாவிட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.ஆயிஷாவின் தந்தை சித்திக் ஐதராபாத், பஞ்சாரா ஹில்ஸ் போலீசாரிடம் அளித்த புகாரின் அடிப்படையில், அச்சுறுத்தல் (506), திருமண மோசடி(420), வரதட்சணை கொடுமை (498, ஏ) உள் ளிட்ட பிரிவுகளில் மாலிக் மீது குற்றச் சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

‘பாஸ்போர்ட்’ பறிமுதல்: இதில் அதிரடித் திருப்பமாக, திருமணம் தொடர்பாக கலந்து ஆலோசிக்க, சானியா வீட்டுக்கு வந்த சோயப் மாலிக்கிடம் போலீசார் நேற்று விசாரணை நடத்தினர்.

இது குறித்து ஐதராபாத் போலீஸ் கமிஷனர் திருமலா ராவ் கூறியதாவது: மாலிக் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில், அவரிடம் இரண்டு மணி நேரம் விசாரணை நடந்தது. சானியா வீட்டில் உள்ள மாலிக், போலீசாருக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு அளித்தார். அப்போது சானியாவும் உடனிருந்தார்.மாலிக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவரது ‘பாஸ்போர்ட்’ மற்றும் மொபைல்போன் தற்போது எங்கள் வசம் உள்ளது. அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளதை விமான நிலைய மற்றும் குடியேற்ற அதிகாரிகளிடம் தெரியப்படுத்தியுள்ளோம்.மாலிக் மீது பதிவு செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு இரண்டு முதல் ஏழாண்டு வரை சிறை தண்டனை அளிக்க முடியும். இப்பிரச்னைக்கு 15ம் தேதிக்குள் தீர்வு காண வேண்டியுள்ளது.இவ்வாறு திருமலா ராவ் கூறினார்.

அதே சமயம் மாலிக் மீது குற்றம் சாட்டியுள்ள ஆயிஷாவிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மாலிக்கை ஆயிஷா திருமணம் செய்து கொண்டதற்கான சான்றிதழ் உண்மை தானா என்பதை கண்டறிய இந்த சான்றிதழ், நாசிக்கில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட உள்ளது. ஆயிஷா, 2000ம் ஆண்டு மாலிக்கை சந்தித்தது தொடர்பான, ‘சிடி’க்கள் போலீசிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளன.

ஆயிஷாவுக்கு கருச்சிதைவு: சோயப்புடன், ஆயிஷா உடலுறவு கொண்டுள்ளார். இதன் காரணமாக அவர் திருமணத்துக்கு முன்னதாகவே கருவுற்று பின்னர் அபார்ஷன் செய்து கொண்டார். கர்ப்பம், கருச்சிதைவு செய்து கொண்டது இதற்கான ஆதாரங்கள் உள்ளன. இவற்றை நாங்கள் போலீசிடம் அளித்துள்ளோம் என, ஆயிஷாவின் உறவினரும் டாக்டருமான ஷாம்ஸ் பாபர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ‘சோயபும், ஆயிஷாவும் ஐதராபாத் ஓட்டலில் தங்கியிருந்த போது, முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீனும் அவரது மனைவி சங்கீதாவும், சோயப்புக்கு வாழ்த்து தெரிவித் துள்ளனர். சோயப் மாலிக்கிடமிருந்து நாங்கள் பணமோ, வேறெந்த உதவியையோ எதிர்பார்க்கவில்லை. ஆயிஷாவை மணந்து கொண்டதை ஒப்புக்கொண்டு முறைப்படி விவாகரத்து செய்யட்டும். நாங்கள் அவர் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெற்றுக்கொள்கிறோம்’ என்றார்.

ஆயிஷாவின் வக்கீல் டபிள்யு ரஹ்மான் குறிப்பிடுகையில், ‘ஆயிஷாவை சந்தித்ததேயில்லை என்கிறார் மாலிக். ஆனால், இருவரும் 2002ம் ஆண்டு முதல் 12 முறை சந்தித்துள்ளனர். இதற்கான ஆதாரங்களை போலீசிடம் சமர்ப்பித்துள்ளோம்’ என்றார். ஆயிஷாவுடன் சோயப் இருக்கும் போட்டோ படங்களையும் நிருபர்களிடம் காட்டினார்.

ஆனால் சோயப் மாலிக் நிருபர்களிடம், ‘ நான் ஒன்றும் ஆயிஷாவிடம் மன்னிப்பு கேட்கமாட்டேன், 10 ஆண்டுகளுக்கு முன் என் வயது 18, அப்போது ஆயிஷாவை ‘ஆபா’ (அக்காள் என்று அர்த்தம்) என்று தான் அழைப்பேன். அவர் ஏன் நிருபர்களை சந்திக்க மறுக்கிறார்’ என்று கேட்டார்.

அருகில் இருந்த சானியா , எங்களுக்கு எல்லா உண்மைகளும் தெரியும். எதிர்காலக் கணவர் பற்றி இப்படி எல்லாம் தகவல் வெளிவருவது பரபரப்பாக இருக்கிறது’ என்றார்.

ஒத்துழைப்பு: சோயப் மாலிக் குறிப்பிடுகையில், ‘போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன். அதுவரை இந்தியாவை விட்டு செல்ல மாட்டேன். நானும், சானியாவும் கவுரவமான குடும் பத்தைச் சேர்ந்தவர்கள். ஆயிஷாவுடன் திருமணமானது தொடர்பான கேள் விக்கு பதில் சொல்வது, எங்களுக்கு கஷ்டமாக உள்ளது’ என்றார்.

பாக்., உதவ தயார் : சோயப் மாலிக்குக்கு எந்த உதவியையும் செய்ய அந்நாட்டு அரசு காத்திருக்கிறது என, பாகிஸ் தான் வெளியுறவுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். மாலிக் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் விவரங்களை இந்திய ஹைகமிஷனிடம் அந்நாட்டு அரசு கோரியுள்ளது.இதற்கிடையே ஆயிஷாவின் தந்தையின் சார்பில் பாகிஸ்தான் கோர்ட்டிலும் மாலிக் மீது திருமண மோசடி வழக்கு தொடரப் பட்டுள்ளது. பாகிஸ்தானில் இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் மாலிக்குக்கு ஓராண்டு சிறை தண்டனை கிடைக்கும்.மாலிக் தான் செய்த ஊழல் பணம் ஒன்பது கோடி ரூபாயை சானியாவிடம் கொடுத்துள்ளதாக, பாகிஸ்தான் பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.