ஆம்பூர் மதரஸாவில் உபி தீவிரவாதி தங்கியிருந்தது எப்படி? மருத்துவமனைக்கு குண்டுவெடிப்பு மிரட்டல் விடுத்தது ஏன் ? (2)
சையத் அகமது அலி கொடுத்த வாக்குமூலம்[1]: விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலம் வருமாறு: “திரிபுரா மாநிலம் உன்னுகுட்டி கைலா ஜெகர் பகுதி, தலியார் கந்தி கிராமம்தான் எனது ஊர். என்னுடைய மனைவி பெயர் லுக்பாபேகம். எங்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். நான் எனது வீட்டின் அருகே காய்கறி வியாபாரம் செய்து வந்தேன். கடந்த 2000–ம் ஆண்டு எனக்கும் எனது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதில் எனது மனைவி போலீசில் புகார் கொடுக்க சென்றார். அதனால் நான் மண்எண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளித்தேன். பின்னர் என்னை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். உடல்நிலை தேறியதும் நான் மீண்டும் காய்கறி வியாபாரம் செய்து வந்தேன். இந்த நிலையில் சிறிது நாட்கள் கழித்து எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் அசாமில் உள்ள மருத்துவமனையிலும், பின்பு திரிபுரா மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றேன். அப்போது என்னை பரிசோதனை செய்த டாக்டர்கள் உனக்கு புற்றுநோய் உள்ளது என்றனர்.
மே, ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களில் 2015 சென்னைக்கு வந்து சென்றது: அப்போது எனது பக்கத்து வீட்டுக்காரர் பையிம் ஜமான் என்பவரின் அக்காவிற்கு சிகிச்சை அளிப்பதற்காக அவர்களுடன் சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு கடந்த மே மாதம் வந்தேன். அங்கு டாக்டர்கள் எனக்கு புற்றுநோய் இருப்பதை உறுதி செய்தனர். பின்னர் சி.எம்.சி. மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவதற்காக எனது தம்பியுடன் ஆகஸ்டு மாதம் வேலூருக்கு வந்தேன். அப்போது சி.எம்.சி. அருகில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கினேன். பின்பு வேலூர் சைதாப்பேட்டை பள்ளிவாசல் அருகே அறை எடுத்து தங்கினேன். அதைத்தொடர்ந்து உத்தரபிரதேசம் அலிகாரில் உள்ள மருத்துவமனையிலும், சென்னை அப்பல்லோ மருத்துவமனையிலும் சிகிச்சை எடுத்துக்கொண்டேன். இதையடுத்து சென்னையில் இருந்து மீண்டும் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சை பெற கடந்த 13–ந் தேதி இரவு பீகாரை சேர்ந்த ஹாலித்து என்பவருடன் காட்பாடிக்கு வந்தேன். பின்னர் ஹாலித் எதுவும் கூறாமல் என்னை விட்டு சென்று விட்டார். விடியும்வரை நான் சி.எம்.சி.க்கு எதிரே உள்ள பள்ளிவாசல் அருகே தங்கினேன். 14–ந் தேதி காலை 7–45 மணி அளவில் டாக்டரை பார்க்க நான் சி.எம்.சி.க்கு சென்றேன். அப்போது டாக்டரை பார்க்க விடாமல் காவலர்கள் என்னை தடுத்தனர். இதனால் நான் ஆத்திரமடைந்தேன். அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்க முடிவு செய்தேன். இதையடுத்து நான் காலை 8 மணி அளவில் சி.எம்.சி. மருத்துவமனைக்கு போனில் தொடர்பு கொண்டேன். அவர்கள் வேறு ஒரு தொலை பேசி எண்ணை கொடுத்து அதில் தொடர்பு கொள்ளுமாறு கூறினர். பின்பு நான் 8–15 மணி அளவில் எனது தொலைபேசி எண்ணில் இருந்து தொடர்பு கொண்டு மருத்துவமனையில் வெடிகுண்டுகள் உள்ளது எனவும், அவை சரியாக 10 மணிக்கு வெடிக்கும் என்று கூறி போனை துண்டித்தேன். இதே ஏற்கனவே நான் ஆக்ராவிலும், அலிகாரிலும், லக்னோவிலும், ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர், மும்பையில் உள்ள கண்ட்ரோல் அறைக்கும் போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளேன்”, இவ்வாறு அவர் கூறினார்.
விசாரணைக்குப் பிறகு ஜெயிலில் அடைப்பு: சென்னை, ஆம்பூர், வேலூர் என்று பல இடங்களுக்கு பலமுறை சர்வ சகஜமாக வந்து போவது, எப்படி என்பதும் வியப்பாக இருக்கிறது. தீவிரவாத செயல்கலில் ஈடுபட்டவர்கள் வந்து செல்கின்றனர் எனும் போது, நிச்சயமாக உள்ளூர் ஆட்கள் உதவி செய்கிறார்கள் என்றாகிறது. அதைத்தொடர்ந்து சையத் அகமது அலியை, துணை போலீஸ் சூப்பிரண்டு பன்னீர்செல்வம் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் பலத்த காவலுடன் அணைக்கட்டில் இருந்து வேலூர் கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். இங்கு ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு எண்–1 கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு மீனாசந்திரா முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அதன்படி சையத் அகமது அலி வேலூர் ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
குற்றவாளிகள், பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் முதலியோர் பல மாநிலங்களுக்குச் சென்று வர யார் உதவுகிறார்கள்?: சையத் அகமது அலி உண்மையிலேயே மருத்துவ சிகிச்சைக்காக சென்னைக்கு வந்து போகலாம், போயிருக்கலாம். இப்பொழுது பார்ப்பதற்கே பாவமகத்தான் இருக்கிறான். ஆனால், அவன் தீவிரவாதியாக இருக்கிறான். குற்றவாளிகள், பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் முதலியோர்களுக்கு நோய் வரக்கூடாது, சிகிச்சை எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதில்லை. ஆனால், உடல்நிலை ஆரோக்கியமாக மாறியதும், அவர்கள் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவது தான் பிரச்சினையாக இருக்கிறது. இங்கும் தனக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஆனதால், குண்டுவெடிப்பு மிரட்டல் விடுத்திருக்கிறான் என்பது வேடிக்கையாக இருக்கிறது. மருத்துவமனைகளில் காத்துக் கிடப்பது என்பது சர்வ-சகஜமான விசயம் தான். “அப்போது டாக்டரை பார்க்க விடாமல் காவலர்கள் என்னை தடுத்தனர். இதனால் நான் ஆத்திரமடைந்தேன். அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்க முடிவு செய்தேன்”, என்பது இன்னும் விசித்திரமாக இருக்கிறது. மேலும், தீவிரவாத-பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவன் எனும்போது, உ.பி, அசாம், மேகாலயா என்ற பல மாநிலங்களுக்குச் சென்று சிகிச்சைப் பெறுவது, மற்றும் தமிழகதுக்கு வந்து செல்வது என்பது, நிச்சயமாக மற்றவர்கள் உதவியுடன் வந்து செல்ல முடியாது. அதற்காக நிறைய பணமும் செலவாகிக் கொண்டிருக்கும். ஆனால் போலீஸ் பிடியில் சிக்காமல் பல்வேறு மாநிலங்களில் விதவிதமான கெட்டப்பில் சையது முகம்மது அலி சுற்றித்திரிந்து வந்தார் எனும்போது, தனது அடையாளத்தையும் மறைத்துள்ளார் என்றாகிறது. குற்றமுள்ள நெஞ்சு குறு-குறுத்துள்ளது. ஆனால், அதிலும் தன்னலம், அதாவது, மருத்துவ சிகிச்சைப் பெற வேண்டும் என்ற நிர்பந்தம் இருப்பதினால், அடங்கிப் போயிருக்கிறார். இங்கும், தன்னை எதிர்த்தபோது, வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருக்கிறார்.
குற்றவாளிகள், பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் முதலியோர் மதரஸாக்களில் தங்க முடியுமா?: மதரஸாக்களில், பள்ளிவாசல்களில் தங்குவது என்பது அவ்வளவு சாதாரணமான விசயமா அல்லது யாராவது போன் செய்து அறிவித்தார்களா, கடிதங்களை கொண்டுவந்து, தங்கினார்களா என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால், இவையெல்லாமே நடந்தன எனும் போது, அவர்களுக்கு உள்ள பணபலம், நட்பு அல்லது வேறெந்த பலமோ உள்ளது என்பதைக் காட்டுகிறது. இன்றைய நிலையில் அறிமுகத்துடன் சென்றாலே, பலவித கேல்விகள் கேட்கப்படுகின்றன. லாட்ஜுகளில் அடையாள அட்டைகளை கேட்கிறார்கள், அவற்றை நகலும் எடுத்து வைத்துக் கொள்கிறார்கள். முகவரி, செல்போன் நம்பர் போன்ற விவரங்களையும் எடுத்து வைத்துக் கொல்வதால், இவற்றையும் மீறி, தங்க வேண்டுமானால், மதரஸா, பள்ளிவாசல் போன்ற இடங்களில் தான் தங்க வேண்டும். அவ்வாறு தங்கினால், விவரங்கள் மறைக்கப்படும் அல்லது அவ்வளவு சுலபமாக மற்றவர்களுக்குக் கிடைக்காது. ஆகவே, ஒன்று முஸ்லிம்கள் என்ற நிலையில் அல்லது தீவிரவாதிகள் என்று தெரிந்தும், முஸ்லிம்கள் என்பதால் உதவுவது என்பதுள்ளது என்று தெரியவருகிறது. அதனால், குற்றவாளிகள், பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் முதலியோர்களின் அடையாளங்கள் மறைக்கப்படுகின்றன. சித்தூரில் அல்-உம்மா தீவிரவாதிகள் தங்கியிருந்தது, சுற்றி வளைத்து பிடிக்கப்பட்டது, அப்பொழுதும், போலீஸாருடன் துப்பாக்கிச் சண்டையில், ஈடுபட்டது போன்ற விவரக்களும் வெளிவருகின்றன. ஆம்பூரில் சமீபத்தில் தான் கலவரம் ஏற்பட்டுள்ளது. போலீஸாரே தாக்கப்பட்டுள்ளனர். அந்நிலையில் தீவிரவாதிகள் அடிக்கடி வந்து செல்கின்றனர், மதரஸாக்களில் தங்க இடம் கொடுக்கப்படுகிறது என்பதெல்லாம் நிச்சயமாக வேறெந்த விசயத்தையோ மறைப்பதாக உள்ளது.
© வேதபிரகாஷ்
17-10-2015
[1] தினத்தந்தி, சி.எம்.சி. மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்: கைதான தீவிரவாதி கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைப்பு, மாற்றம் செய்த நாள்: சனி, அக்டோபர் 17,2015, 5:00 AM IST; பதிவு செய்த நாள்: சனி, அக்டோபர் 17,2015, 1:46 AM IST.
அண்மைய பின்னூட்டங்கள்