ஆம்பூர் மதரஸாவில் உபி தீவிரவாதி தங்கியிருந்தது எப்படி? மருத்துவமனைக்கு குண்டுவெடிப்பு மிரட்டல் விடுத்தது ஏன் ? (1)
“ஆம்பூர் உமர் சாலையில் மதரஸா” என்ற இடத்தில் கைதா அல்லது மதரஸாவில் கைதா? – தமிழ்.ஒன்.இந்தியாவின் உண்மை மறைப்பு செய்தி[1]: ஆம்பூரில் பதுங்கியிருந்த 2 வட மாநில தீவிரவாதிகளை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்கள் வைத்திருந்த 5 சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் நடத்திய விசாரணையில் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது அவர்கள்தான் என தெரிய வந்துள்ளது[2]என்கிறது தமிழ்.ஒன்.இந்தியா. வேலூர் மாவட்டம் ஆம்பூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் சுற்றித்திரிந்து கொண்டு இருப்பதாக ஆம்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது[3]. இதையடுத்து போலீசார் நேற்று மாலை ஆம்பூர் உமர் சாலையில் மதரஸா என்ற இடத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அங்கு பதுங்கியிருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அவர் சரிவர பதிலளிக்காததால் போலீசார் அவரை ஆம்பூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். “ஆம்பூர் உமர் சாலையில் மதரஸா” என்று குறிப்பிடுவது வேடிக்கையாக இருக்கிறது. மதராஸவில் தங்கியிருந்த பயங்கரவாதி கைது என்று உண்மையை வெளியிட ஏன் மறைப்பு என்று தெரியவில்லை. மதரஸாக்கள் பயங்கரவாதத்திற்கு / தீவிரவாதங்களுக்கு உதவுகின்றன என்ற உண்மையினை மறைக்க அவ்வாறு செய்தியை வெளியிட்டிருக்கலாம். பி.டி.ஐ ஏற்கெனவே அவ்வுண்மையினை வெளியிட்டுள்ளது[4]. அச்செய்தி மற்ற ஆங்கில ஊடகங்களிலும் வெளியாகியுள்ளன[5].
உ.பி.போலீஸ் நிலையங்களில் வெடிகுண்டு மிரட்டல், வெடிகுண்டு வைத்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட பயங்கரவாதிகள்[6] / தீவிரவாதிகள்[7]: உத்தரபிரதேச ஆக்ரா தாலியான் காண்டி பகுதியை சேர்ந்தவர் சையது மாமூன் அலி. இவரது மகன் சையது முகம்மது அலி (வயது 37). இவர் மீது உத்தரபிரதேச மாநிலம் போலீஸ் நிலையங்களில் வெடிகுண்டு மிரட்டல், வெடிகுண்டு வைத்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவாகி உள்ளது. ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால், தர்கா, மற்றும் நிறுவனம் முதலியவற்றிற்கு தீவிரவாத தாக்குதல் மிரட்டல் விடுத்ததால் வழக்குகள் பதிவாகி உள்ளன[8]. ஆக்ரா, ஜெய்ப்பூர் குண்டுவெடிப்புகளிலும் தொடர்பு உள்ளது[9]. ஒரு இது தொடர்பாக சையது முகம்மது அலியை போலீசார் தேடி வந்தனர். ஆனால் போலீஸ் பிடியில் சிக்காமல் பல்வேறு மாநிலங்களில் விதவிதமான கெட்டப்பில் சையது முகம்மது அலி சுற்றித்திரிந்து வந்தார். இதனால் தீவிரவாதிகளுடன் சையத்துக்கு தொடர்பு இருக்கலாம் என்று அம்மாநில போலீசார் தேடப்படும் முக்கிய குற்றவாளியாக அவரை அறிவித்தனர். மேலும் சையத்தின் குடும்பத்தினர், நண்பர்கள் என அவரை சுற்றியுள்ளவர்களின் செல்போன் எண்ணின் டவரை போலீசார் தினமும் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் சையத் தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் சுற்றித்திரிவது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக தமிழக உள்துறைக்கு, உத்தரபிரதேச போலீசார் தகவல் கொடுத்தனர். உள்துறை அதிகாரிகள் உளவு துறை மூலம் வேலூர் மாவட்ட போலீசாரை உஷார்படுத்தினர்[10]. “புதிய தலைமுறை” டிவி பயங்கரவாதிகள் என்றே குறிப்பிடுகின்றது.
ஆம்பூர் மதரஸாவில் தங்கியிருந்த தீவிரவாதி கைது: எஸ்.பி. செந்தில்குமாரி உத்தரவின்பேரில் ஆம்பூர் டி.எஸ்.பி. கணேசன் தலைமையிலான போலீசார் சையது முகம்மது அலியின் அடையாளங்களை சேகரித்து, அவரை தேடி வந்தனர். இதற்கிடையில் ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையம் பின்புறம் உமர் ரோட்டில் சையத் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ஒரு மதரஸாவில் தங்கியிருந்தான் என்று பி.டி.ஐ கூறுகிறது[11]. இதையடுத்து டி.எஸ்.பி. கணேசன் தலைமையிலான போலீசார் அந்த பகுதியை நேற்றிரவு தங்கள் வளையத்துக்குள் கொண்டு வந்தனர். இதையடுத்து சையத்தை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவரை கைது செய்த அணைக்கட்டு காவல் போலீசார் ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், நேற்று முன்தினம் வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது சையத் என்பது தெரியவந்தது. கடந்த 14–ந் தேதி அடுத்தடுத்து 2 முறை இந்தி, ஆங்கில மொழியில் மாறி, மாறி போனில் மிரட்டல்கள் வந்தன. இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் சென்னை உள்பட பல்வேறு இடங்களை தொடர்பு கொண்டு விசாரணை மேற்கொண்டனர்[12].
ஆம்பூருக்கு அல்லது தமிழகத்திற்கு என்ன தொடர்பு?: எதற்காக சி.எம்.சி. ஆஸ்பத்திரிக்கு சையத் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்தார் என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதனால் சையத் தீவிரவாதிகளின் சிலிபர் செல் எனப்படும் உள்நாட்டு குழுக்களை சேர்ந்தவராக இருக்கலாம் எனவும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் சையத்துடன் தொடர்புடைய நபர்கள் வேறு யாராவது? தமிழகத்தில் பதுங்கியுள்ளனரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சையத் கைது செய்யப்பட்டது குறித்து உத்தரபிரதேச போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அம்மாநில போலீசார் வேலூருக்கு விரைந்துள்ளனர். பிடிபட்ட சையத் உத்தரபிரதேச போலீசாரிடம் ஒப்படைக்கப்படுவார் என தெரிகிறது. சையத் பிடிபட்டபோது அவரிடம் இருந்து 5 சிம்கார்டுகள், செல்போன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. செல்போன் எண் பட்டியலையும் சேகரித்த போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் வெளியாகும் குழப்பமான விவரங்கள்: காவல்நிலையத்தில் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ‘திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த முகமது மாமுன் அலி என்பவரின் மகன் சையது முகமது அலி என்றும் சிகிச்சை பெறுவதற்கு வேலூரில் தங்கியிருந்ததாகவும் அவன் தெரிவித்துள்ளான். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதற்கான எவ்வித ஆவணங்களும் அவனிடம் இல்லை. மேலும் அவனிடம் 5 சிம்கார்டுகள் இருந்தன. இவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். சிம் கார்டுகளை ஆய்வு செய்தபோது அதிலிருந்த ஒரு சிம்கார்டு மூலம் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவனை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அணைக்கட்டு காவல் நிலையத்திற்கு நேற்றிரவு போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு விடிய விடிய விசாரணை நடத்தினர். எஸ்பி செந்தில்குமாரி நேரில் சென்று விசாரணை நடத்தியதில், சையது முகமது அலி ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பேசினான். இதனையடுத்து இந்தி தெரிந்தவர்கள் வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடத்தியதில் வேலூர் சிஎம்சி அருகே உள்ள லாட்ஜில் தனது நண்பருடன் தங்கியிருந்தது தெரியவந்தது.
வேலூர் லாட்ஜுகளில் சோதனை: இதனையடுத்து, நேற்றிரவு வேலூரில் உள்ள ஒரு சில லாட்ஜ்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். லாட்ஜ்களில் தங்கியிருப்பவர்களின் விவரங்களை தீவிரமாக சேகரித்தனர். இதில் வட இந்திய நபருடன் தங்கியிருந்தவனை கைது செய்தனர். இருவரிடமும் நடத்திய விசாரணையில், இவர்களுக்கு ராஜஸ்தான், ஆக்ரா உள்ளிட்ட 3 இடங்களில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்பு இருப்பதாகவும், வேலூரில் வெடிகுண்டு வைக்க சதித்திட்டம் தீட்டியதாகவும் தெரிய வந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், இருவரையும் ரகசிய இடத்தில் வைத்து மேலும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். வேலூரில் யார் அவர்களுக்கு உதவி செய்தது? இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? இவர்களுக்கு வேறு எந்த அமைப்புடன் தொடர்பு உள்ளது? மேலும் இவர்களின் சதித்திட்டம் என்ன? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட சிம் கார்டுகளில் உள்ள செல்போன் எண்களை சைபர் கிரைம் பிரிவு போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். தொடர்ந்து நடைபெறும் விசாரணையில் வேலூரில் இருந்து அவர்களுக்கு உதவி செய்த பலர் சிக்குவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நோயாளிகள் போர்வையில் தங்கியிருந்து வேலூரில் குண்டுகள் வைக்க சதித்திட்டம் தீட்டிய தீவிரவாதிகள் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© வேதபிரகாஷ்
17-10-2015
[1] தமிழ்.ஒன்.இந்தியா, வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஆம்பூரில் 2 தீவிரவாதிகள் கைது, Posted by: Mayura Akilan, Published: Friday, October 16, 2015, 16:59 [IST].
[2] Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/2-terrorists-nabbed-near-ambur-237880.html
[3] http://tamil.oneindia.com/news/tamilnadu/2-terrorists-nabbed-near-ambur-237880.html
[4] http://www.ptinews.com/news/6626972_Man-wanted-for-making-terror-threats-in-UP-held-in-TN.html
[5] Business Standard, Man wanted for making terror threats in UP held in TN, Press Trust of India , Vellore (TN) October 16, 2015 Last Updated at 22:22 IST.
[6] https://www.youtube.com/watch?v=PWxP66jhXx0
[7] மாலைமலர், சி.எம்.சி. ஆஸ்பத்திரிக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஆம்பூரில் பிடிபட்ட வாலிபர் தீவிரவாதியா? – ரகசிய இடத்தில் விசாரணை, பதிவு செய்த நாள் : வெள்ளிக்கிழமை, அக்டோபர் 16, 12:06 PM IST
[8] Syed Ahmed Ali had allegedly made terror threats to Taj Mahal in Agra, a dargah besides an institution in Lucknow. He had arrived here two days ago and stayed in a Madrasa in Ambur. http://www.business-standard.com/article/pti-stories/man-wanted-for-making-terror-threats-in-up-held-in-tn-115101601463_1.html
[9] தினகரன், ஆக்ரா, ஜெய்ப்பூரில் குண்டுவெடிப்பில் தொடர்பு: வேலூரில் கைதான தீவிரவாதியிடம் விசாரணை, அக்டோபர்.17, 20125. http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=173391
[10] http://www.maalaimalar.com/2015/10/16120645/CMC-hospital-bomb-threat-Ambur.html
[11] Intelligence Bureau officials alerted Tamil Nadu police about the presence of Ali in Ambur in a Madrasa. “We immediately began our probe and with the help of local people we identified Ali…Now Uttar Pradesh police are on their way to take this man into their custody through court,” the official added.
[12] http://www.dailythanthi.com/News/Districts/Vellore/2015/10/17014634/CMC-Hospital-bomb-threat.vpf
அண்மைய பின்னூட்டங்கள்