Posted tagged ‘உடைந்து விழுதல்’

மசூதியின் மினாரெட் விழுந்து மொரோக்கோவில் 41 பேர் சாவு!

பிப்ரவரி 20, 2010

மசூதியின் மினாரெட் விழுந்து மொரோக்கோவில் 41 பேர் சாவு!

20 February 2010 in News

http://english.aljazeera.net/news/middleeast/2010/02/2010219211348139645.html

morocco.minaret.afp

தொழுகை செய்து கொண்டிருக்கொம்போதே மினாரெட் உடைந்து விழுந்தது: கெய்ரோ ஒரு இஸ்லாமிய நாடு அதன் தலைநகர்  ரபத்: வெள்ளிக்கிழமை  19-02-2010 அன்று   மொரோக்கோவில் உள்ள ஒரு பழைய லல்லா னெனாடா (Lalla Khenata) மசூதியின் மினாரெட் என்ற உச்சிப்பகுதி திடீரென்று உடைந்து விழுந்து நொறுங்கியதில் 41 பேர் நசுங்கி பரிதாபமாக பலியானார்கள்.  தொழுகை செய்து கொண்டிருக்கும்போதே அந்நிகழ்சி நடந்ததாக பார்த்தவர்கள் சொல்கிறார்கள்.

Mosque-மினெரெட்-collapsed-Morocco

Mosque-மினெரெட்-collapsed-Morocco

பயங்கரமான நிகழ்சி, பார்த்தவர்கள் சத்தம் கேட்டு பீதியோடு ஓடினர்: தலைநகர் ரபத்திலிருந்து 90 மைல் தொலைவிலிருந்து மெகன்ஸ் என்ற நகரித்திலிருந்து வந்த இப்ராஹிம் கூறுவதாவது, “இடிந்துவிழுகின்ற சத்தம் கேட்டது. பயந்து நாங்கள் ஓட ஆரம்பித்தோம். அந்த கோபுரம் கீழே விழ ஆரம்பித்தது. அதைப் பார்க்கும்போது பீதியாக இருந்தது”, என்றான் [“We just heard a cracking sound and I began to run away when the tower began to fall. It was so scary,”]. “எப்படி நடந்தது என்பது எனக்குத் தெரியாது, இருப்பினும் ஏதோ எங்களுக்குத் தெரிந்ததை நாங்கள் இழந்துவிட்டோம் என்பது மட்டும் புரிகிறது. நாங்கல் மிகவும் வருத்தமாக உள்ளோம்”.  அரசாங்க செய்தி பிரிவு அறிப்பதாவது, “நூற்றுக்கணக்கானவர் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக வந்திருந்தபோது இந்த நிகழ்சி ஏற்பட்டது. சுமார் 75 பேர் காயமடைந்தார்கள்.  அதில் 17 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.  இடிபாடுகள் நகற்றப்படுகின்றன.  அதில் உயிருடன் அகப்பட்டுள்ளவர் யாராவது இருக்கிறார்களா என்று பார்க்கிறார்கள்”.

உள்பகுதியிலும்-சேதம்-மொரோக்கோ-மசூதி

உள்பகுதியிலும்-சேதம்-மொரோக்கோ-மசூதி

மினாரெட் உடைந்ததற்கான காரணம்: மக்கள் அதிக அளவில் மழை பெய்தது தான் மிக்னாரெட் உடைந்ததற்கு காரணம் என்று கூறுகிறார்கள்.  பொழைத்தவர்களை மக்கள் பாதுகாப்பாக மசூதியிலிருந்து வெளியே எடுத்துச் சென்றனர். அந்நாட்டு அரசன் மொஹம்மது VI அந்த 400 வருடகால மசூதி மறுபடியும் கட்டப்படும் என அறிவித்தான். “இது மிகவும் பயங்கரமான நிகழ்சிதான், ஆகையால் இதை மறக்கமுடியாது. இருப்பினும் இனிமேல் அரசாங்கம் மக்களுடைய பாதுகாப்பு குறித்து கவனம் செல்லுத்தும் என்று நம்புகிறோம்”, என்ரு மக்கள் சொல்கிறார்கள்!

மசூதி-மினாரெட்-இடிபாடுகள்-மொரோக்கோ

மசூதி-மினாரெட்-இடிபாடுகள்-மொரோக்கோ

பழைய கட்டிடங்கள், வழிபாட்டுத் தளங்கள்: எச்சரிக்கை தேவை: இனி உலகமெங்கும் நம்பிக்கையாளர்கள் நினைத்துப் பார்க்க வேண்டிய முக்கியமானது -பழைய கட்டிடங்கள், வழிபாட்டுத் தளங்கள் என்றால் எச்சரிக்கை தேவை. முந்நூறு-ஐநூறு ஆண்டுகள் ஆகிவிட்டன என்றால், அதிலும், இப்படி மழையில் நன்றாக நனைந்திருக்கும் நிலையில் என்றால் அவை விழக்கூடிய வாய்ப்பிருக்கிறது. ஆகவே, அங்கு வழிபாடு செய்யப் போகும்போது ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். இத்தகைய மினாரெட், கூம்பு, முதலிய கட்டிட-அமைப்புகளின் கீழ் மக்கள் கூடுவது தவிர்க்கப் படவேண்டும். தொலைவிலிருந்தே வழிபடுவது நல்லதுதான்.

ஆண்டவனுடைய எச்சரிக்கையாகக் கூட இருக்கலாம்: இத்தகைய நிகழ்சிகள் நம்பிக்கையாளர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகக் கூட இருக்கலாம். நாளுக்கு நாள் நம்பிக்கையாளர்கள் நம்பிக்கையின் பெயரிலேயே மற்ற நம்பிக்கையாளர்களை “நம்பிக்கையற்றவர்கள்” என்று குறிப்பிட்டு “நம்பிக்கையோடு” துன்புறுத்துகிறார்கள்; கொல்கிறார்கள்; குண்டு வெடித்து மனித உடல்களை சிதறவைக்கிறார்கள்;  ரத்தத்தை உறிஞ்சுகிறார்கள்; உடல் உறுப்புகளை கொய்கிறார்கள் அல்லது குண்டால் சிதற அடைக்கிறர்கள்;……………………….இதெல்லாம், இப்படியான இயர்கை நிகழ்சிகள் அல்ல. மனிதன் தெரிந்தே செய்யும் குற்றம் ஆகும்.