10 நாட்களில் 3-வதுசோதனை 10 நாட்களில் 3-வதுசோதனை – விட்டு–விட்டுநடக்கும்சோதனைகள்: சோதனை 20-11-2022 சனிக்கிழமை அன்று கார் வெடிப்பு வழக்குத் தொடா்பாக சென்னை, திருச்சியில் 6 இடங்களில் போலீஸார் சோதனை செய்து, பென்டிரைவ், மடிக்கணினி, கைப்பேசிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்[1]. 10-11-2022 மற்றும் 15-11-2022 என்று சோதனைகள் நடந்து கொண்டிருக்கின்றன[2]. கோவை உக்கடம் கோட்டைமேடு ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த அக். 23-ஆம் தேதி சென்ற ஒரு காரில் இருந்த சிலிண்டா் வெடித்தது. இந்த சம்பவத்தில் அந்த காரை ஓட்டி வந்த அந்தப் பகுதியைச் சோ்ந்த ஜமேஷா முபீன் என்ற இளைஞா் உயிரிழந்தார். இது தொடா்பாக ஜமேஷா முபீன் கூட்டாளிகள் 6 பேரை கோவை போலீஸார் கைது செய்தனா். இந்த வழக்குத் தொடா்பாக என்ஐஏ தமிழகம்,கேரளம் ஆகிய இரு மாநிலங்களில் 43 இடங்களில் கடந்த 10ஆம் தேதி [10-11-2022] ஒரே நேரத்தில் சோதனை செய்தது. இந்த வழக்கை விசாரித்த என்ஐஏ, ஐஎஸ் பயங்கரவாத உறுதி மொழி ஏற்ற ஜமேஷா முபீன், தற்கொலை தாக்குதலுக்கு திட்டமிட்டிருந்ததாக தெரிவித்தது. அதில் பல்வேறு முக்கிய ஆவணங்களும் கைப்பற்றியதாகவும் கூறப்பட்டது. அதேபோல், இந்த சம்பவத்தின்போது உயிரிழந்த முபினின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 75 கிலோ நாட்டு வெடிகுண்டுகள்தயாரிக்க பயன்படும் வேதிப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றை ஆன்லைன் மூலமாக வாங்கியதாக கைதானவர்கள் தரப்பில் முன்பு தெரிவிக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்திருந்தனர்[3]. இருப்பினும் அதில் சில பொருட்களை சிவகாசியில் உள்ள பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைகளில் இருந்து வாங்கியிருக்கலாம் எனஎன்ஐஏ அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது[4]. இந்த வெடிப்பொருட்கள்-ரசாயனங்கள் பற்றி ஏற்கெனவே வாத-விவாதங்கள் காரசாரங்களில் முடிந்துள்ளன.
15-11-2022 அன்றுசோதனையில்ஆவணங்கள்பறிமுதல்: என்ஐஏ வழக்கின் விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையிலும், ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடா்பு இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையிலும் சென்னை பெருநகர காவல்துறையினா் கடந்த 15ஆம் தேதி 5 இடங்களில் சோதனை செய்து, வெளிநாட்டு பணம்,ஆவணங்களை பறிமுதல் செய்தனா்.
20-11-2022 சனிக்கிழமைஅன்றுசென்னையில்சோதனை: இந்நிலையில் இரண்டாவது கட்டமாக சனிக்கிழமை 4 இடங்களில் போலீஸார் ஒரே நேரத்தில் சோதனை செய்தனா்[5].
இச் சோதனை –
சென்னை ஓட்டேரி எஸ்.எஸ்.புரத்தில் வசிக்கும் சாகுல் ஹமீது (31) வீடு[6],
வேப்பேரி ஈவெரா பெரியார் சாலையில் உள்ள குடியிருப்பில் வசிக்கும் எஸ்.எம்.புஹாரி (57) வீடு,
ஏழு கிணறு பகுதியில் பிடாரியார் கோவில் தெருவில் உள்ள உமா் முக்தார் (33) வீடு,
வி.வி.எம்.தெருவில் உள்ள முகமது ஈசாக் கெளத் (33) வீடு
ஆகிய இடங்களில் நடைபெற்றது. பல மணி நடைபெற்ற சோதனையில் 4 வீடுகளிலும் இருந்து 12 பென் டிரைவ்கள், 14 கைப்பேசிகள்,ஒரு மடிக்கணினி, 2 கையடக்க கேமராக்கள், ஒரு சிறிய ரக சூட்கேஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சென்னை காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இவை அனைத்தும் தடயவியல்துறை ஆய்வுக்காக அனுப்பப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் அடிப்படையில் அந்தந்த பகுதி காவல் நிலையங்களில் குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 102-கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெறுகிறது[7]. கடந்த 10 நாட்களில் 3-வது முறையாக சென்னையில் என்ஐஏ சோதனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது[8].
20-11-2022 சனிக்கிழமைஅன்றுதிருச்சியில்சோதனை: கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடா்பாக திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த இருவா் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது[9]. இதில், –
ஷாகுல் ஹமீத் (வயது 25)- இனாம்குளத்தூா் நடுத்தெருவில் வசிக்கும் ஆவின் நிறுவன ஒப்பந்த தொழிலாளி,
என இருவா் மீது சந்தேகத்தின்பேரில் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்தனா். இருவரும் கடந்த 2019 ஆம் ஆண்டு ஐ.எஸ் அமைப்பின் முகநூல் பக்கத்தை லைக் செய்ததாகக் கூறப்படுகிறது[10].
இதையடுத்து, ஜீயபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் பாரதிதாசன் தலைமையில், இரண்டு காவல் ஆய்வாளா்கள், 13 உதவி ஆய்வாளா்கள், வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸார் மோப்பநாய் உதவியுடன் இனாம்குளத்தூருக்கு சனிக்கிழமை வந்தனா். சந்தேகப்படும் நபா்கள் இருவா் தங்கியிருந்த வீடுகளிலும், அதன் சுற்றுப் பகுதிகளிலும் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். இரு இடங்களிலும், சுமார் 2 மணிநேரத்துக்கும் மேலாக சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் இருவரது வீடுகளில் இருந்து எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை. இருப்பினும், இருவரது சமூக வலைதள பகிர்வுகள் குறித்தும், தொலைபேசி தொடா்புகள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனா். “இச்சோதனையில் ஹார்டு டிஸ்க்குகள், 2 செல்போன்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது,” என்று நக்கீரன் குறிப்பிடுகிறது.
17-11-2022 முதல் 19-11-2022 வரைகம்பத்தில்சோதனை–விசாரணை: கம்பத்தில் பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சோ்ந்த நிர்வாகிகள் 5 பேரிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 18-11-2022, வெள்ளிக்கிழமை அன்று விசாரணை நடத்தினா்[11]. தீவிரவாதிகள் அமைப்புடன் தொடா்பு இருப்பதாக பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகளில் என மாநிலத்தில் 16-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை போலீஸார் கடந்த செப். 22-இல் சோதனை நடத்தினா். இதில் அந்த அமைப்பின் மண்டலச் செயலாளா் பொறுப்பில் இருந்த தேனி மாவட்டம், கம்பம் தாத்தப்பன்குளத்தைச் சோ்ந்த யாசா் அராபத் (32) என்பவரைக் கைது செய்தனா். அதன் பின்னா் கம்பத்தில் செயல்பட்ட மாவட்ட அலுவலகத்துக்கும் ‘சீல்’ வைக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த 2 நாள்களாக கம்பத்தில் அந்த அமைப்பைச் சோ்ந்த 5 பேரிடம் தேசிய புலனாய்வு முகமை காவல் ஆய்வாளா் அருண் மகேஷ் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில், 3-ஆவது நாளாக 19-11-20022 அன்று வெள்ளிக்கிழமையும் அவா்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதுகுறித்து என்ஐஏ அதிகாரிகள் கூறியதாவது: “கம்பத்தில்ஏற்கெனவேகைதுசெய்யப்பட்டவருடன், சிலருக்குத்தொடா்புஇருப்பதுதெரியவந்தது. அதனடிப்படையில், கம்பத்தில் 5 பேரிடம்விசாரணைநடத்திவருகிறோம். முக்கியஆவணங்கள்கிடைத்துள்ளன. தொடா்ந்துவிசாரணைநடைபெறும்,” என்றனா்[12].
[1] தினமணி, கார்வெடிப்புவழக்கு: சென்னை, திருச்சியில்போலீஸார்சோதனை, By DIN | Published On : 19th November 2022 11:15 PM | Last Updated : 20th November 2022 04:51 AM.
[3] தமிழ்.இந்து, கோவைகார்சிலிண்டர்வெடிப்பு: மேலும் 5 பேரிடம்என்ஐஏவிசாரணை, செய்திப்பிரிவு, Published : 19 Nov 2022 06:21 AM; Last Updated : 19 Nov 2022 06:21 AM.
[7] தமிழ்.இந்து, 3-வதுமுறையாகசென்னையில் 4 இடங்களில்என்ஐஏசோதனை: ஐஎஸ்ஐஎஸ்உடன்தொடர்பாஎனவிசாரணை, செய்திப்பிரிவு, Published : 20 Nov 2022 04:20 AM; Last Updated : 20 Nov 2022 04:20 AM
[9] நக்கீரன், என்.ஐ.ஏதிடீர்சோதனை; மூன்றுமணிநேரசோதனைக்குப்பிறகுஹார்டுடிஸ்க்குகள்பறிமுதல், நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 19/11/2022 (20:30) | Edited on 19/11/2022 (20:46).
[11] தினமணி, கம்பத்தில்பாப்புலா்ஃப்ரண்ட்ஆஃப்இந்தியாநிா்வாகிகள் 5 பேரிடம்என்ஐஏவிசாரணை, By DIN | Published On : 18th November 2022 11:36 PM | Last Updated : 18th November 2022 11:36 PM.
2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகி மாநிலங்களை தாண்டியதால் என்ஐஏவுக்கு ஒப்படைக்கப் பட்ட நிலை (4)
எஸ்.ஐ., உட்பட 27 பேருக்குவெகுமதி: கோவை, கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், அக்., 23ல் நடந்த கார் குண்டு வெடிப்பில், சதிச்செயலுக்கு திட்டமிட்ட ஜமேஷா முபீன் பலியானார். வழக்கு விசாரணையில் சிறப்பாக பணியாற்றிய, 27 பேருக்கு, நேற்று டி.ஜி.பி., சைலேந்திரபாபு பாராட்டு சான்றிதழ், வெகுமதி வழங்கினார்[1], என்று ஊடகங்கள் கூருகின்றன.. சம்பவம் நடந்த நாளன்று, உக்கடம் எஸ்.ஐ., செல்வராஜன், ஏட்டு தேவக்குமார், காவலர் பாண்டியராஜா ஆகியோர், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள், முதல் நிலைக் காவலர், மூத்த புகைப்படக் கலைஞர் ஒருவர் என மொத்தம் 34 பேருக்கு விருது வழங்கப்பட்டது[2]. இந்த பட்டியலில் உள்ளவர்கள் உளவுப்பிரிவு சைபர் கிரைம் சிறப்பு பிரிவு ஆகிய பிரிவுகளை சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது[3]. அதன் காரணமாகவே, ஜமேஷா முபீன், காரில் தொடர்ந்து செல்ல வாய்ப்பின்றி போயிருக்கலாம் என, போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. பெரியளவில் ஏற்பட இருந்த பாதிப்பை தடுக்க உதவியதாக, வாகன தணிக்கையில் ஈடுபட்ட எஸ் .ஐ., ஏட்டு, காவலருக்கு பாராட்டு சான்றிதழ், வெகுமதி வழங்கப்பட்டது.
பந்தை குறிவைப்பது அரசியலாகிறது: வரும், 31ம் தேதி கோவை மாநகரில் அறிவிக்கப்பட்டுள்ள பந்த்தை முன்னிட்டு, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும், வாகன போக்குவரத்துக்கும், அத்தியாவசிய பொருட்களின் வினியோகத்துக்கும் எந்தவித குறைபாடும் நேராமல் இருக்க, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்று, மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர். நிச்சயமாக பொறுப்புடன் வேலை செய்த போலீஸாரை எல்லோருமே பாராட்ட வேண்டிய நிலையில் தான் உள்ளார்கள். இங்கு கூட, அந்த குண்டுவெடிப்பு செயல் அரைகுறையாக முடிந்ததால், யார் நடத்த வேண்டும் என்று நினைத்தானோ, அவன் மட்டும் பலியாகியுள்ளான் என்பது நோக்கத் தக்கது.
மத்தியஉளவுத்துறையும், தமிழகபோலீஸாரும்: தென்னிந்தியாவில், தீவிரவாதம் பரவி, சிறந்த முறையில், தொழிற்நுட்பத்துடன், பாண்டித்தியத்துடன் நடந்து கொன்டிருப்பதால், வழக்குகள் தொடர்ந்து நடந்து கொன்டிருக்கின்றன. மேலும், அரசியல்வாதிகளின் தொடர்பு மற்றும் இதர பணப் போக்குவரத்து, சட்டமீறல் போக்குவரத்துகளுடன் திறமையாக செயல் பட்டு வருவதால், வழக்குகளும் இழுத்தப் படுகின்றன. இதனால் தான், காவல்துறை இந்த தகவலை தெரிந்தவுடன், பாதுகாப்பை உஷார் செய்தவுடன், இவர் திடீரென மாயமாகிவிட்டார் என்றும் கூறப்படுகிறது. மத்திய உளவுத்துறை காவல்துறையினர் ஜமிஷா தொடர்பான பல்வேறு தகவல்களுடன் அவரை கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்து தமிழக அரசுக்கு 2018ம் ஆண்டு முதன் முதலில் தகவல் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது[4]. தமிழக காவல்துறையினர் இதனை பெரிதாக கருதவில்லை என்று கூறப்படுகிறது[5]. தேசிய புலனாய்வு முகமை 2019ம் ஆண்டு ஜமேஷா முபினை நேரடியாகவே விசாரணைக்கு அழைத்தது. தேசிய புலனாய்வு முகமை நடத்திய விசாரணையில் இந்தியாவிலும், இலங்கையிலும் நடைபெற்ற பல்வேறு வெடிகுண்டு சம்பவங்களில் அவருக்கு இருக்கின்ற தொடர்பு சம்பந்தமான வலுவான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனாலும் அவரை தமிழக காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். தமிழகத்தை நாசமாக்கும் எண்ணத்துடன் பயங்கரவாத செயல்களில் ஈடுபட 96 பேர் தயாராக இருக்கின்றன என்ற பட்டியலை மத்திய உளவுத்துறை தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தது என்றும், அதில் இவர் இடம்பெற்றிருந்தார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது[6]. இதனை தமிழக அரசு எப்படி கோட்டைவிட்டது என்று கேள்வி எழுந்துள்ளது[7]. சம்பவம் நடந்த பிறகு தமிழக அரசு சார்பில் விளக்க அறிக்கை உட்பட பல்வேறு தகவல்கள் சரியாக பொதுமக்களிடையே சொல்லப்படவில்லை என்று கூறப்படுகிறது. அந்த பட்டியலில் 89 ஆவது நபராக ஜமேஷா முஃபின் இடம்பெற்றுள்ளார். இந்த நிலையில் தான் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை மத்திய அரசு தடை செய்தது. இதற்கு எதிர்வினை இருக்கும் என்று மத்திய அரசு ஏற்கனவே எதிர்பார்த்து இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆகவே இனி வரும் காலங்களிலாவது மத்திய உளவுத்துறை எச்சரிக்கைகளை தமிழக அரசு தன்னுடைய முழு கவனத்தில் எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசியலமயமாக்கப்படும்தீவிரவாதம்: திமுக ஆட்சியில்லாமே “பாஸ்ட் ஃபுட்” ரேஞ்சில், வேகத்தில், அதிரடியாகத்தான் நடக்கும் போலிருக்கிறது. கார் காஸ் சிலிண்டர் விபத்து, தீவிரவாத கார் காஸ் சிலிண்டர் வெடிப்பாகி, கார் குண்டு வெடிப்பாகியுள்ள நிலையில், அமைதிகாத்த திராவிடிய ஸ்டாக் முதலமைச்சர், திடீஎன்று கூட்டம் கூடி, இந்த விபத்து வழக்கை என்.ஐ.ஏ.க்கு ஒப்படைக்க அறிவித்து விட்டார். போலீஸ் துறைக்கும் அவர் பொறுப்பேற்றுள்ளதால், இவ்வழக்கின் பாரத்தை, தீவிரவாதத்தை அறிந்து, மாற்றி விட்டார் என்று தெரிகிறது. அதுமட்டுமல்லாது, சம்பந்தப் பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு வெகுமதி அளிக்கப் பட்டு பாராட்டும் தெரிவிக்கப் பட்டது. கோவையில் புதியதாக மூன்று காவல் நிலையங்களும் உருவாக்கப் பட்டுள்ளன. டிவி செனல்களிலேயே வாதவிவாதங்கள் படுஜோர். பேச்சாளர்கள், நேரிடையாக அரசியலாக்கி, அரசியல் மயமாக்கி, திராவிட மாடலா- குஜராத் மாடலா ரேஞ்சில் இறங்கி விட்டனர். திமுக-பிஜேபி நேரிடையாக இந்த மோதலில் ஈடுபட்டுள்ளன எனலாம்.
தமிழகத்தில்முதன்முதலாகஎன்.ஐ.ஏ. செய்துள்ளவழக்கு: முதன்முதலாக என்.ஐ.ஏ. ஏஜென்சி சென்னையில் அலுவலகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது போலீஸ் நிலையத்திற்கு சமமாகும். இது போன்ற மற்ற நிறுவனங்கள் இதனுடன் சேர்ந்து ஒத்துழைத்து செயல்பட வேண்டும். தீவிரவாதம், பயங்கரவாதம் போன்றவை சமூக, பொருளாதார, மற்றவற்றை பெரிதும் பாதிப்பதால், இது மனித வாழ்க்கைக்கு எதிராக செயல்படுகிறது. மேலும், எல்லைகளைக் கடந்து, இவை செயல் படுவதால், மற்ற நாடுகளும் இவற்றை கடுமையாக எதிர்க்கிறார்கள். பதிவு செய்துள்ள இந்த முதல் வழக்கே தமிழகத்தின் இறுதி வழக்காக இருக்க வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பு, விருப்பமாகும், எனும் நிலையில், இத்தகைய கும்பல்கள் வேறருக்கப் பட வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்..
[2] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், கோவைகார்வெடிப்புவிவகாரம்… சிறப்பாகபணியாற்றியகாவலர்களுக்குடிஜிபிபாராட்டு!!, Narendran S, First Published Oct 27, 2022, 6:00 PM IST, Last Updated Oct 27, 2022, 8:42 PM IST.
[4] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், உளவுத்துறை ‘அன்றே’ கொடுத்தசிக்னல்!.. கிடப்பில்போடப்பட்டதா ? கோவைகார்குண்டுவெடிப்புசம்பவம், Raghupati R, First Published Oct 28, 2022, 7:56 PM IST; Last Updated Oct 28, 2022, 8:34 PM IST.
2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகி மாநிலங்களை தாண்டும் நிலை (3)
26-10-2022 (புதன்கிழமை): தலைமை செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடந்தது. எல்லைக் கடந்த தீவிரவாத இணைப்புகளால், தமிழக முதல்வர் வழக்கை என்.ஐ.ஏக்கு மாற்ற பரிந்துரைத்தார்.
என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வின்சென்ட் சாலையில் உள்ள அப்சல்கான் வீட்டுக்கு சென்றனர். லாப்டாப்பைக் கைப்பற்றினர்.
இந்த நிலையில், கார் வெடிப்பு சம்பவத்தில் 6-வது நபராக அப்சர்கான் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கார் வெடித்த போது உயிரிழந்த ஜமேஷா முபினின் உறவினர் அப்சர்கான் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 5 பேரிடமும் 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
27-10-2022 (வியாழன்கிழமை): தமிழகம் இந்த வழக்கை, என்.ஐ.ஏவிடம் (NIA) ஒப்படைத்தது. வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ. விசாரணை அதிகாரியாக காவல் ஆய்வாளர் விக்னேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்[1]. என்.ஐ.ஏ எப்.ஐ.ஆர் (FIR) போட்டது. என்.ஐ.ஏ பதிவு செய்து விசாரித்து வரும் இந்த வழக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது[2]. கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது. அதில் அபாயகரமான 109 பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
28-10-2022 (வெள்ளிக்கிழமை): கைது செய்யப்பட்டுள்ளவர்களில் ஒருவன் – பெரோஸ் இஸ்மாயில் தான், ஈஸ்டர் குண்டுவெடிப்பில் சம்பந்தப் பட்டு கைதாகி, கேரளா சிறையில் இருக்கும் மொஹம்மது ஹஸாருத்தீன் மற்றும் ரஷீத் அலி இருவரையும் சந்தித்தாக ஒப்புக் கொண்டான். இவர்களுக்கு ஐசிஸுடனும் [Islamic State of Iraq and Syrai (ISIS),] தொடர்பு உள்ளது[3].
109 பொருட்கள்பறிமுதல் – அவற்றின்எடை 60, 70 கிலோவா, 100 கிலோவா?: முதலில் எச்சரிக்கையாக அமுக்கி வாசித்த ஊடகங்கள், பிறகு, பெரிய “துப்பறியும் சாம்பு” ரேஞ்சில் செய்திகளை வெளியிட ஆரம்பித்து விட்டன[4]. 109 ஐட்டங்களை பட்டியல் போடவில்லை என்றாலும், எடை போட ஆரம்பித்த விட்டன. ஹராசு சரியில்லையா, நிருபர்களுக்கு எடை பார்க்கத் தெரியவில்லையா என்று தெரியவில்லை. 60, 70, 100 என்று குறிப்பிடுகின்றன[5]. பலியான ஜமேஷா முபின் மற்றும் முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகிய 7 பேர் மீதும் 120 பி, 153 ஏ., உபா சட்டப்பிரிவு 16 மற்றும் 17 ஆகிய 4 பிரிவுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது[6]. இதில், வெடி விபத்தை ஏற்படுத்த ஜமேஷா முபின் திட்டமிட்டதாகவும், அவரின் வீட்டில் இருந்து 76.5 கிலோ பொட்டாசியம் நைட்ரேட், பிளாக் பவுடர், ஆக்ஸிஜன் சிலிண்டர், அலுமினியம் பவுடர், சிவப்பு பாஸ்பரஸ், 2 மீட்டர் நீளம் உள்ள திரி, கண்ணாடி துகள்கள், சல்பர் பவுடர், பேட்டரிகள், வயர், பேக்கிங் டேப், கையுறை, நோட்டு புத்தகம், ஜிஹாத் தொடர்பான குறிப்பு அடங்கிய டைரி, கியாஸ் சிலிண்டர் உள்பட 109 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது[7]. மொத்த வெடிப்பொருட்களின் எடையை 65, 75, 100 கிலோ என்று பலவிதமாக ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன[8]. 76.5 கிலோ பொட்டாசியம் நைட்ரேட் என்றால், மீதி 33.5 கிலோ மற்றப் பொருட்கள் இருக்க வேண்டும், ஆக மொத்தம் 100 கிலோ என்று கணக்குப் போட்டிருக்க வேண்டும்[9].
கார்கள்பறிமுதல்: கோவையில் வெடி விபத்து ஏற்பட்ட பகுதியைச் சுற்றியுள்ள இடங்களில் கடந்த ஒரு வாரமாக நின்றிருந்ததாக கூறப்படும் 12 கார்களை போலீசார் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்[10]. வின்சென்ட் சாலையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த 7 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சதி வேலைகளுக்காக காரை பயன்படுத்தியது போல இரு சக்கர வாகனங்களையும் பயன்படுத்தலாம் என்ற கோணத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது[11]. இதில், 7 கார்களின் உரிமையாளர்கள் நேரில் ஆஜராகி உரிய ஆவணங்களை சமர்ப்பித்ததையடுத்து அந்த கார்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. மீதமுள்ள 5 கார்களின் உரிமையாளர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் கோவையில் கரும்புக்கடை, சுந்தராபுரம் மற்றும் கவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் புதிதாக 3 காவல் நிலையங்கள் உருவாக்கப்பட முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கோவையில் குண்டு வெடிப்பு, கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக, திருச்சியில் கேட்பாரற்று சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்து 10 கார்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்[12]. விழிப்புணர்வு அதிகமாகவே இருக்கிறது போலும்[13]. எல்லா நகரங்களிலும், எல்லா இடங்களிலும், இவ்வாறு வாகனங்கள் நிறுத்தப் பட்டுள்ளன. ஆனால், கார் வெடித்தால் இவ்வாறான, அதிரடி நடவடிக்கை வேற்கொள்வார்களா என்று தெரியவில்லை. போலீஸார், திடீரென்று, இவ்வளவு எச்சரிக்கையாக இப்பொழுது செயல்படுவது தான் ஆச்சரியமாக இருக்கிறது. இருப்பினும், அவர்களது முயற்சிகளை பாராட்டலாம். நம்மை போன்று அவர்களும் கடமையுடன் செயல்படுகிறார்கள்.
கோவைகார்காஸ்சிலிண்டர்வெடிப்புமுதல்கார்குண்டுவெடிப்புவரை: “கோவை கார் சிலிண்டர் வெடிப்பு விபத்து…….” என்று ஆரம்பித்து, ஊடகங்கள், “கோவை காரில் காஸ் சிலிண்டர் வெடிப்பு விபத்து..”, மற்றும், “கோவை காரில் இரண்டு காஸ் சிலிண்டர்களில் ஒன்று வெடித்து விபத்து………”, .“கோவை மாருதி காரில் காஸ் சிலிண்டர் வெடித்த விபத்து………”, “கோவை மாருதி காரில் காஸ் சிலிண்டர் வெடித்த வழக்கு” என்றெல்லாம் குறிப்பிடப் பட்டு, “கோவை கார் குண்டு வெடிப்பு வழக்காக” மாறியுள்ளது. போலீஸாருக்கு விருது, பாராட்டு………………ஊடகங்களுக்கு, மெத்தப் படித்து, தமிழகத்தில் ஊறிப்போன நிருபர்களுக்கு, இதெல்லாம் தெரியாதது போல தலைப்பிட்டு செய்திகளை போடுவதிலிருந்து, ஒன்று அவர்களும் விசயங்களை மறைக்கிறார்கள் அல்லது யாருக்கோக் கட்டுப் பட்டு, அவ்வாறான செய்திகளை வெளியிடுகிறார்கள் என்றாகிறது. பிறகு, அவர்களது நடுநிலைத் தன்மை, ஊடக தருமம், பத்திரிக்கா தொழில் நியாயம், செக்யூலரிஸ சித்தாந்தம் முதலியவை பற்றி சந்தேகங்கள் எழத்தான் செய்யும்.
[3] Police sources, on Friday, October , said that one of the six accused in the Coimbatore blast case, confessed during interrogation that he met two men in a Kerala prison who had links with terror group Islamic State of Iraq and Syrai (ISIS), who were involved in the Easter bombings in Sri Lanka. Feroz Ismail confessed that he had met Mohammed Azharuddin and Rashid Ali, lodged in a prison in the neighbouring state and further questioning is on to ascertain the motive behind the meeting, they said. Azharuddin and Ali are in jail in connection with a case against them in Kerala.
[4] தமிழ்.இந்து, கோவை | ஜமேஷாமுபின்வீட்டில் 60 கிலோவெடிமருந்துபறிமுதல்? – போலீஸ்கண்காணிப்பால்மிகப்பெரியநாசவேலைதவிர்ப்பு, செய்திப்பிரிவு, Published : 26 Oct 2022 06:50 AM; Last Updated : 26 Oct 2022 06:50 AM
[12] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், கோவைசம்பவம்எதிரொலி: திருச்சியில்அனாதையாகநின்ற10 கார்கள்பறிமுதல், Written by WebDesk, Updated: October 28, 2022 3:10:41 pm
2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகி மாநிலங்களை தாண்டும் நிலை (2)
24-10-2022 (திங்கட்கிழமை): ஜமேஷா முபினுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 7 பேரை பிடித்து போலீஸார் விசாரித்தனர். தீவிரவாத தொடர்புகளால் ஐந்து பேர் கைது செய்யப் பட்டனர். கார் வெடிப்பில் ஜமேசா உயிரிழந்த நிலையில், அவருக்கு உடைந்தையாக இருந்த –
முகமது தல்கா (25),
முகமது அசாருதீன் (23),
முகமது ரியாஸ் (27),
ஃபிரோஸ் இஸ்மாயில் (27),
முகமது நவாஸ் இஸ்மாயில் (26)
ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது உபா (சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம்) சட்டமும் பாய்ந்தது.
ஜமேஷாமுபினின்உடலைஅடக்கம்செய்யஜமாத்நிர்வாகத்தினரும்முன்வரவில்லை: பிரேதப் பரிசோதனைக்கு பிறகு அவரது குடும்பத்தினரிடம் 4-10-2022 அன்று மாலை உடல் ஒப்படைக்கப்பட்டது. சதிச் செயலுக்கான பின்புலத்தில் இருந்ததால், ஜமேஷா முபினின் உடலை அடக்கம் செய்ய கோவையைச் சேர்ந்த எந்த ஜமாத் நிர்வாகத்தினரும் முன்வரவில்லை[1]. இதுகுறித்து பேசிய ஜமாத் நிர்வாகி ஒருவர்[2], “நாங்கள்அமைதியையும், சமூகநல்லிணக்கத்தையும்விரும்பிகிறோம். இதனால்பலரும்அவரதுஉடலைஅடக்கம்செய்யஅனுமதிஅளிக்கவில்லைஎனதெரிவித்தார். மேலும், ஒருவரதுஉடலைஅடக்கம்செய்யவேண்டுமானால், ஏதாவதுஒருஜமாத்தில்உறுப்பினராகஇருக்கவேண்டும், அவர்உறுப்பினராகஇல்லைஎன்பதால், அவரைஅடக்கம்செய்யஅனுமதிகடிதம்கொடுக்கப்படவில்லை,” என கூறினார்[3]. இதனால் என்ன செய்வது எனத் தெரியாமல் அவரது குடும்பத்தினரும், போலீஸாரும் தவித்தனர். பின்னர், போலீஸாரின் பேச்சுவார்த்தைக்கு பின்னர், மனிதாபிமான அடிப்படையில் மேட்டுப்பாளையம் சாலை, பூ மார்க்கெட் அருகே உள்ள திப்புசுல்தான் பள்ளிவாசலில், லங்கர்கானா அடக்கஸ்தலத்தில் ஜமாத் மூலம் உடல் அடக்கம் செய்யப்பட்டது[4].
அமைதியைவிரும்பினால், இளஞர்கள்திசைமாறாமல்பார்த்துக்கொள்ளவேண்டும்: இதிலிருக்கும் மதநம்பிக்கையை விடுத்து, “குண்டு வெடிப்பு” கோணத்தில் அலசினால், மனைவி ஏன் கடிதம் கொடுக்கவில்லை, அவர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. “பிரேதப்பரிசோதனைக்குபிறகுஅவரதுகுடும்பத்தினரிடம் 4-10-2022 அன்றுமாலைஉடல்ஒப்படைக்கப்பட்டது,” எனும் பொழுது, அவர்கள் நிச்சயமாக, பொறுப்பேற்று கடிதம் கொடுத்திருக்கலாம். கொரோனா காலத்திலேயே, முஸ்லிம் உடல்கள் எப்படியெல்லாம் புதைக்கப் படவேண்டும் போன்ற வாத-விவாதங்கள் வெளியாகியுள்ளன. அதே போல, கடந்த காலங்களிலும், தீவிரவாதிகள் உடல்கள் அடக்கம் செய்யப் பட்டுள்ளன. ஆதவே இதில் என்ன பிரச்சினை இருக்கிறது என்று புரியவில்லை. “நாங்கள்அமைதியையும், சமூகநல்லிணக்கத்தையும்விரும்பிகிறோம், “ என்றால், அவ்வாறே முஸ்லிம் இளைஞர்கள் ஐசிஸ் போன்ற அமைப்புகளுடம் இணையாமல் இருக்க, பெற்றோர்-மற்றோர் கவனிக்கலாம், தடுக்கலாம், அறிவுரை கூறலாம். ஆனால், தொடர்ந்து நடக்கின்றன என்பதால், இதில் என்ன பிரச்சினை என்றும் புரியவில்லை.
முகமதுதல்கா(25): உக்கடத்தைச் சேர்ந்தவன்; கைது செய்யப்பட்டவர்களில் முகமது தல்கா என்பவர் தடை செய்யப்பட்ட அல் உம்மா இயக்க தலைவர் பாட்ஷாவின் சகோதரர் நவாப்கான் என்பவரின் மகன் ஆவார். நவாப்கான் 1988 கோவை குண்டு வெடிப்பு வழக்கில், ஆயுள் கைதியாக மத்திய சிறையில் இருப்பவர். தடை செய்யப்பட்ட அல்-உம்மா அமைப்பின் தீவிர உறுப்பினராக இருந்தவர்[5]. நவாப் கான், கடந்த மார்ச் மாதம் சிறையில் இருந்து பரோலில் வந்தபோது யாரை எல்லாம் சந்திதார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது[6]. தல்கா மூலம் தான் முபினுக்கு கார் கை மாறியுள்ளது.
முகமதுஅசாருதீன்(23): உக்கடத்தைச் சேர்ந்தவன்; கைது செய்யப்பட்ட மற்றொருவரான முகமது அசாருதீன் ஏற்கெனவே கடந்த 2019-ம் ஆண்டு இலங்கை வெடிகுண்டு வழக்கின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர். அப்போது கேரளா சிறையில் இருந்த அசாருதீனை முபின் சந்தித்தத் தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.
முகமதுரியாஸ்(27): ஜி.எம். நகரைச் சேர்ந்தவன்; ஜமேசா முபின் நண்பன். இஸ்லாமிய அடிப்படைவாதம் போன்றவற்றில் நம்பிக்கைக் கொண்டவன்.
ஃபிரோஸ்இஸ்மாயில்(27): ஜி.எம். நகரைச் சேர்ந்தவன்; ஜமேசா முபின் நண்பன். நண்பன். இஸ்லாமிய அடிப்படைவாதம் போன்றவற்றில் நம்பிக்கைக் கொண்டவன்.
முகமதுநவாஸ்இஸ்மாயில்(26): ஜி.எம். நகரைச் சேர்ந்தவன்; ஜமேசா முபின் நண்பன். நண்பன். இஸ்லாமிய அடிப்படைவாதம் போன்றவற்றில் நம்பிக்கைக் கொண்டவன்.
25-10-2022 (செவ்வாய்கிழமை): இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் போலீஸார் உயிரிழப்பு, வெடிப்பொருள் தடைச்சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்தனர். மேலும், உயிரிழந்த ஜமேஷா முபின் வீட்டிலும் போலீஸார் சோதனை செய்தனர். அவரது வீட்டில் இருந்து பல கிலோ நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்கான வேதிப்பொருட்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். சோதனையில் 75 கிலோ வெடிப்பொருட்கள் – ரசாயனங்கள் கண்டெடுக்கப் பட்டன. கோவை காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் ஒரு செய்தி நிறுவனத்திற்கு அளித்தபேட்டியில், ” முபினின் வீட்டில் கைப்பற்றப்ட்ட மூலப்பொருட்கள் குறைந்த திறனுடைய வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படுபவையாகும். அவர் மேலும் நிறைய வெடிகுண்டுகளை தயாரிக்க திட்டமிட்டிருந்தது தெரியவருகிறது. அவரது வீட்டில் இருந்த மூலப்பொருட்களின் மாதிரிகளை தடயவியல் துறையினர் சோதனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அதன் அறிக்கை வந்தால் மட்டுமே எந்த மாதிரியான வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டது என்பது விசாரணையில் தெரியவரும்[7]. வெடிப்பொருள்களை முபின் எப்படி வாங்கினார் என்பதை கண்டறிய முயன்ற போது அவை ஆன்லைன் வணிக நிறுவனங்களான அமேசான், ஃபிளிப்கார்ட்டில் வாங்கப்பட்டுள்ளது தெரியவந்தது[8]. கடந்த 2 ஆண்டுகளாக ஆன்லைன் மூலமாக வெடிபொருட்களை வாங்கி தனது வீட்டில் முபின் சேமித்து வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது என்றும்[9], முபின் தடை செய்யப்பட்ட பல இஸ்லாமிய இயக்கங்களின் அதிகாரபூர்வ இணையதளப் பக்கங்களை அவர் பார்வையிட்டதற்கான தடயங்களும் கிடைத்துள்ளன என்று போலீசார் தெரிவித்தனர்[10].
[3] News.18.Tamil, ஜமோஷாமுபினின்உடலைஅடக்கம்செய்யமுன்வராதஜமாத்நிர்வாகங்கள்.. கோவையில்பரபரப்பு..!, Published by:Anupriyam K, First published: October 26, 2022, 08:52 IST; LAST UPDATED : OCTOBER 26, 2022, 08:52 IST.
2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகிய நிலை (1)
22-10-2022 (சனிக்கிழமை) முதல் 24-10-2022 (திங்கட்கிழமை) வரைநடந்துள்ளவைஎன்ன?: 24-10-2022 அன்று தீபாவளி என்பதால், துணிமணி, பட்டாசு, ஸ்வீட் வாங்க வேண்டும், எல்லோருமே ஊருக்குச் செல்ல வேண்டும், வாங்கியதை குடும்பத்தோடு பகிர்ந்து கொள்ள வேண்டும், சந்தோஷமாக கொண்டாட வேண்டும், என்று லட்சக்கணக்கில் மக்கள் வாகனங்களில், பேருந்துகளில், ரெயில்களில் சென்று கொண்டிருந்தனர். அவரவர் பொருளாதார நிலைக்கு ஏற்ப, பட்ஜெட்டில் தீபாவளி கொண்டாட திட்டத்துடன் இருப்பர், சென்று கொண்டிருந்தனர். ஆனால், அப்பொழுது, கோயம்புத்தூரில் சிலர் வேறு விதமாக திட்டம் போட்டிருந்தனர் போலும். வெகுஜன மக்கள் மகிழ்ச்சியுடன் தீபாவளியை நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது, ஊடகங்களில் வழக்கம் போல, தீபாவளி எதிர்ப்பு, பட்டாசு மறுப்பு, நாத்திக-நராகாசுரன் ஆதரவு செய்திகள் வந்து கொண்டிருந்தன[1]. பட்டாசு வெடிக்க வேண்டாம், குறிப்பிட்ட நேரங்களில் தான் வெடிக்க வேண்டும், மீறினால், வழக்கு, புகார், தண்டனை என்றெல்லாம் பெரிய போலீஸ் அதிகாரிகள் மிரட்டியதாக செய்திகள்[2]. அதே நேரத்தில் பட்டாசு விற்பனை பெருக்க வேண்டும் போன்ற பிரச்சாரமும் இருக்கிறது. இன்னொரு பக்கமோ, கடைகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது போன்ற செய்திகள்.
இந்நிலையில்தான்கோவைகார்குண்டுவெடிப்புசம்பவம்–செய்திகள்வரஆரம்பித்தன: 22-10-2022 (சனிக்கிழமை) முதல் 24-10-2022 (திங்கட் கிழமை) வரை நடந்துள்ள நிகழ்ச்சிகளை கூர்ந்து கவனித்தால், இந்த கோவை கார் குண்டு வெடிப்பு திட்டமிட்டு நடந்துள்ள-நடத்தப்பட்ட செயல் என்று அறிந்து கொள்ளலாம். பிறகு, மற்ற செய்திகள் எல்லாம் வெளிவர ஆரமித்துள்ளன. ஊடகங்களின் பாரபட்சமிக்க, செய்தி வெளியீட்டுப் போக்கும், “ஆபத்திலிருந்து” மெதுவாக, “குண்டு வெடிப்பு” என்று முடிந்துள்ளது. இருப்பினும் இந்த தீவிரவாதிகள், பயங்கரவாதிள் எல்லோருமே மரியாதையுடன் தான் குறிப்பிடப் படுகிறார்கள். மத்திய உளவுத்துறை காவல்துறையினர் ஜமிஷா தொடர்பான பல்வேறு தகவல்களுடன் அவரை கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்து தமிழக அரசுக்கு 2018ம் ஆண்டு முதன் முதலில் தகவல் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது[3]. தமிழக காவல்துறையினர் இதனை பெரிதாக கருதவில்லை என்று கூறப்படுகிறது[4].
22-10-2022 (சனிக்கிழமைஇரவு): சனிக்கிழமை இரவு 11.25 மணிக்கு ஜமேஷா முபின் வீட்டில் இருந்து அவர் உட்பட 5 பேர் மர்மபொருளை தூக்கி செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. முதற்கட்ட விசாரணையில், முபின் தன்னுடைய வீட்டை காலி செய்ய வேண்டும் என்று கூறியதாகவும், அந்தப் பெட்டியில் ஸ்கிரேப் பொருள்கள் இருந்ததாக முபின் விளக்கம் அளித்ததாக கூறியுள்ளனர். அந்த சிசிடிவி காட்சிகளில் உள்ள மற்ற நபர்கள் 4 பேர் யார் என்பது குறித்து பிறகு தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர், என்றெல்லாம் செய்திகள் பிறகு வெளி வந்தன. அப்படியென்றால், இவர்களும் முன்னமே இக்காரியங்களில் ஈடுபட்டுள்ளனர். சுற்றியுள்ளவர்கள், இவர்களது நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்டு, எச்சரித்திருக்கலாம், புகார் கொடுத்திருக்கலாம். ஆனால், முஸ்லிம்கள் எனும் போது, அமைதியாக இருந்து விட்டனர் போலும். ஒரு ஊடகத்தால், அங்கு செய்தி-விவரங்கள் சேர்க்கச் சென்றபோது, ஜன்னல் கதவுகளை அடைத்துக் கொண்டனர், யாரும் பேச முன்வரவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.
23-10-2022 (ஞாயிற்றுக்கிழமை): அதிகாலை சுமார் 4:45 மணி அளவில், கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு பெரும் வெடிச் சத்தம் கேட்டதையடுத்து, அப்பகுதி மக்கள் அங்கு வந்து பார்த்துள்ளனர். முதலில், ஏதோ பட்டாசு சத்தம் என்று கூட நினைத்திருக்கலாம். அந்த பரபரப்பு சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. அதிகாலை 4 மணி அளவில் சாலையில் கார் செல்வது, கார் நிற்பது பின்பு வெடித்து சிதறும் காட்சிகள் வெளியாகி உள்ளது. விடியற்காலை காரில் உள்ள காஸ் சிலிண்டர் வெடித்து ஒரு ஆள் இறந்தான். செல்போன் உதவியுடன் இறந்தவன் அடையாளம் காணப் பட்டான். வெடித்து சிதறிய காரில் இன்னொரு வெடிக்காத சிலிண்டர் மற்றும் சுற்றிலும் ஆணிகள், பால்ரஸ் போன்றவையும் சிதறிக் கிடந்ததை போலீஸார் கண்டுபிடித்தனர். சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட தடயவியல் துறையினர் காரிலிருந்து 2 முதல் 3 கிலோ 1.5 இன்ச் ஆணிகள் மற்றும் பால்ரஸ் குண்டுகளைக் கண்டறிந்துள்ளனர். ஆணி, பால்ரஸ் வேறு பணிக்காக கொண்டு செல்லப்பட்டதா அல்லது வெடி விபத்தை நிகழ்த்தும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டவையா என்பதை நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர். ஆக, நிச்சயமாக கோவை போலீஸார் சென்னை உயர் அதிகாரிகளுக்கு தெரியப் படுத்தி, விசயம் முதலமைச்சருக்குச் சென்றிருக்கும்.
பிற்பகல் – 23-10-2022 (ஞாயிற்றுக்கிழமை): தொடக்கத்தில் சம்பவம் நடைபெற்ற இடத்தை கோவை மாநகரக் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து, சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி தாமரைக் கண்ணன் ஆய்வு மேற்கொண்ட நிலையில், இந்தச் சம்பவத்தின் நிலைமை அறிந்து சென்னையிலிருந்து டி.ஜி.பி சைலேந்திர பாபு விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கோவைக்கு வந்தார். வெடி விபத்து நிகழ்ந்த பகுதியை ஆய்வு செய்தார். அதாவது, விசயம் சாதாரணமானது அல்ல என்பது தெரிந்து விட்டது. பிரசித்தி பெற்ற உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு மட்டுமின்றி, தீபாவளியையொட்டி, இப்பகுதியில் துணி எடுப்பதற்காக அதிக அளவில் மக்கள் கூடும் நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது கோவை மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க கோவை மாவட்டம் முழுவதும் உள்ள மசூதிகள் முன்பு போலீஸார் பாதுகாப்புப்பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
கார்குண்டுவெடித்தலில்இறந்தவன்ஜமேசாமுபின்: போலீஸார் செல்போன், கார் எண் முதலியவற்றை வைத்துக் கொண்டு விவரங்களை சேகரித்தனர். ஜமேசா முபின் என்பவன் தான் இறந்திருக்கிறான் எனூ முடிவானது. அவன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்தவர். அப்பா இல்லை. அம்மா மட்டும் தான். அவர் மனைவிக்கு செவி மற்றும் பேச்சுத்திறன் இல்லை. இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஜமேசாவுக்கும் இதயம், கண் ஆகியவற்றில் சில பிரச்னைகள் உள்ளன. முன்பு பழைய புத்தகக் கடை நடத்தி வந்தவர், பிறகு துணி வியாபாரம் செய்து வந்திருக்கிறார். ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர். அதனால்தான் கடந்த 2019ம் ஆண்டு இலங்கை குண்டு வெடிப்புச் சம்பவத்துக்கு பிறகு ஜமேசா முபினிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். இந்த கார் வெடிப்புச் சம்பவத்துக்குப் பிறகு போலீஸ் அவர் வீட்டில் நடத்திய சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதில் ஒரு கடிதத்தில் சுற்றிப் பார்க்கவுள்ள சுற்றுலா தலங்கள் என எழுதி ஆட்சியர் அலுவலகம், ரயில் நிலையம், ஆணையர் அலுவலகம், ரேஸ்கோர்ஸ், விக்டோரியா ஹால் (மாநகராட்சி அலுவலகம்) ஆகிய பகுதிகளை குறிப்பிட்டுள்ளனர். இதன் மூலம், இந்தப் பகுதிகளை குறி வைத்து தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இப்படி செய்திகள்……
வாட்ஸ்–ஆப்பதிவு, இறப்புஉண்மைஎன்றால், அதுதற்கொலைகுண்டுவெடிப்புஆகிறது: விபத்து நடந்தக் காரை ரூ.10,000க்கு தல்காவிடம் இருந்து வாங்கியுளளார். இப்படி கைது செய்யப்பட்ட அனைவரும், இந்த சதித் திட்டத்தில் ஒவ்வொரு பணியைச் செய்துள்ளனர். ஜமேசா அவ்வபோது கேரளா சென்று, அங்கு ஏற்கெனவே என்.ஐ.ஏவால் கைது செய்யப்பட்டுள்ள அசாருதீன் என்பவரைச் சந்தித்து வந்துள்ளார். ஆங்காங்கே சிறுக சிறுக சேகரித்து 75 கிலோ வெடி மருந்துக்கான வேதிப் பொருள்களை வாங்கியுள்ளனர். வெடி பொருள் தயாரிப்பது எப்படி என்பதை யூ-ட்யூபில் தேடிப் பார்த்திருக்கிறார். கைது செய்யப்பட்டவர்கள் இல்லாமல், இதில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கிறது.” என்றனர். …….’வாட்ஸ்ஆப்ஸ்டேட்டஸில், என்னுடையஇறப்புசெய்திஉங்களுக்குதெரியும்போதுஎனதுதவறைமன்னித்துவிடுங்கள், குற்றங்களைமறந்துவிடுங்கள்எனதுஇறுதிசடங்கில்பங்கேறுங்கள். எனக்காகபிரார்த்தனைசெய்யுங்கள்,” என்று பதிவிட்டு உள்ளார். இதற்கான புகைப்படத்தை அவர் பதிவேற்றி இருக்கிறார். இதை பற்றி விசாரிக்க வேண்டும். இது ஐஎஸ்எஸ் தொடர்புடைய வாசகம். அவர்கள்தான் தற்கொலை தாக்குதல்களுக்கு முன்பாக இப்படி எல்லாம் போஸ்ட் செய்வார்கள்…..இப்படியும் செய்திகள்! வாட்ஸ்-ஆப் பதிவு, இறப்பு உண்மை என்றால், அது தற்கொலை குண்டு வெடிப்பு ஆகிறது, “சூஸைட் பாம்பர்” என்றாகிறது!
[1] திக-திமுகவினர் தொடர்ந்து தங்களது ஊடகங்களில் இத்தகைய பிரச்சாரங்களை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், உலகம் முழுவதும் கொண்டாடப் பட்டு, உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்.
[2] சுவாசிக்கும் காற்று மாசு படுகிறது என்ற கோணத்தில் உச்சநீதி மன்றமே வரையறை கொடுத்திருப்பதால், அதன் மீது, மாநில அரசுகள் மற்றும் இதர நிறுவனங்கள், இயக்கங்கள் இதை பெரிது படுத்தி, பிரச்சாரம் செய்கின்றன.
[3] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், உளவுத்துறை ‘அன்றே’ கொடுத்தசிக்னல்!.. கிடப்பில்போடப்பட்டதா ? கோவைகார்குண்டுவெடிப்புசம்பவம், Raghupati R, First Published Oct 28, 2022, 7:56 PM IST; Last Updated Oct 28, 2022, 8:34 PM IST.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் முஸ்லிம்களுடனான உரையாடல் – உலகின் மிகப் பெரிய இமாம்களுக்கான அமைப்பான அகில இந்திய இமாம் அமைப்பு ஆர்எஸ்எஸ் தலைவருக்கு அழைப்பு விடுத்தது (2)
இமயமலை முதல் குமரி வரை இந்தியா ஒன்றுதான். அதில் உள்ள அனைவரின் பாதைகளும் மதிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு உயிரும் பாதுகாக்கப்பட வேண்டும்: சந்திப்பில் மதரஸாவில் பயிலும் குழந்தைகளிடம் பேசிய மோகன் பாகவத், நாட்டின் மீதான அன்பையும் மனித வாழ்க்கையின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். குழந்தைகளுக்கு மதரஸாவில் குரான் கற்பிக்கப்படுவது போல், இந்து மத வேதமான பகவத் கீதையையும் ஏன் கற்பிக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய அவர், “இமயமலை முதல் குமரி வரை இந்தியா ஒன்றுதான். அதில் உள்ள அனைவரின் பாதைகளும் மதிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு உயிரும் பாதுகாக்கப்பட வேண்டும்,” என்று பேசினார். தொடர்ந்து மதரஸா நிர்வாகிகளிடம், “மதரஸாக்களில் கல்வி கற்கும் முஸ்லிம் சிறார்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இந்தி தெரியாததால், விமான நிலையம், ரயில் நிலையம் போன்றவற்றில் படிவத்தை அவர்களால் நிரப்ப முடியவில்லை. மதரஸாக்களில் நவீன அறிவைக் கற்பிக்க வேண்டும். ஒருமித்த கருத்து இல்லாத பிரச்சினைகள் விவாதிக்கப்பட வேண்டும். நாம் அனைவரும் ஒன்றாக வாழ விரும்புகிறோம் என்பதே அனைவராலும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது,” என்று பாகவத் பேசினார்.
மோகன்பகவத்மற்றும்ஐந்துமுஸ்லீம்சமூகதலைவர்களிடையேஅண்மையில்நடைபெற்றசந்திப்பு: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் ஐந்து முஸ்லீம் சமூக தலைவர்களிடையே அண்மையில் சந்திப்பு நடைபெற்றது[1]. பசுவதை, இழிவாக பேசுதல் உள்பட இரு சமூக முக்கிய பிரச்சனைகள் குறித்து பேசப்பட்டது[2]. தொடர்ந்து இது போன்ற சந்திப்புகள் நடத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் ஐந்து முஸ்லீம் சமூக தலைவர்களிடையே அண்மையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அரை மணி நேரம் திட்டமிடப்பட்ட சந்திப்பு 75 நிமிடங்கள் நீடித்தது. ஆர்எஸ்எஸ்யின் தற்காலிக டெல்லி அலுவலகமான உதாசீன் ஆசிரமத்தில் நடைபெற்ற கூட்டத்தில், பகவத், சங்கத்தின் சா சர்கார்யவா கிருஷ்ண கோபால், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ். ஒய் குரைஷி, முன்னாள் டெல்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங், முன்னாள் AMU துணைவேந்தர் மற்றும் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) ஜமீர் உதீன் ஷா, ஆர்எல்டி தலைவர் ஷாகித் சித்திக், தொழிலதிபர் சயீத் ஷெர்வானி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பசுவதைமற்றும்காஃபிர் (முஸ்லீம்அல்லாதவர்களுக்குகுறிக்கபயன்படும்சொல்) போன்றபிரச்சனைகள்குறித்துபேசப்பட்டது: குரைஷி மற்றும் சித்திக் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசுகையில், “பேச்சுவார்த்தைசுமூகமானசூழலில்நடைபெற்றது. கூட்டத்திற்குப்பிறகு, முஸ்லிம்சமூகத்துடன்தொடர்ந்துதொடர்பில்இருக்கநான்குமூத்ததலைவர்களைபகவத்நியமித்தார். எங்கள்பக்கத்தில், ஆர்எஸ்எஸ்உடனானபேச்சுவார்த்தையைதொடரமுஸ்லீம்மூத்ததலைவர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள்மற்றும்தொழில்வல்லுநர்களைநாங்கள்நியமிக்கஉள்ளோம்.” பசுவதை மற்றும் காஃபிர் (முஸ்லீம் அல்லாதவர்களுக்கு குறிக்க பயன்படும் சொல்) போன்ற பிரச்சனைகள் குறித்து பேசப்பட்டது[3]. பசுவதை மற்றும் காஃபிர் குறித்து மக்கள் மகிழ்ச்சியடையவில்லை என்று பகவத் கூறினார்[4]. அதற்கு பதிலளித்த நாங்கள், “அதன்மீதுஎங்களுக்கும்அக்கறைஉள்ளது. பசுவதையில்ஈடுபட்டால், சட்டத்தின்கீழ்தண்டிக்கப்படவேண்டும்என்றுகூறினோம். காஃபிர்என்பதுஅராபியமொழியில்நம்பிக்கையற்றவர்களைகுறிக்கபயன்படுத்துவது. இதுதீர்க்கப்படமுடியாதபிரச்சினைஅல்லஎன்றுஅவரிடம்கூறினோம். அதேபோல்இந்தியமுஸ்லீம்களைபாகிஸ்தானியர்அல்லதுஜெகாதிஎன்றுகூறும்போதுநாங்கள்வருத்தமடைகிறோம்,” என்று கூறினோம்.
நூபுர் ஷர்மா விவகாரம் மற்றும் தொடர்ந்த வன்முறை: ஆர்எல்டி தேசிய துணைத் தலைவர் சித்திக் கூறுகையில், “நூபுர் ஷர்மா விவகாரம் நடந்தபோது ஆர்எஸ்எஸ் உடன் சந்திப்பை நாடினோம். பல இடங்களில் வன்முறை நடந்தது. முஸ்லீம் சமூகத்துக்குள்ளும் அசாதாரண சூழல் உருவாகியிருந்தது. மோகன் பகவத் சந்திப்பதற்கான தேதியை பெற்ற நேரத்தில், நூபுர் ஷர்மா சம்பவம் நடந்து ஒரு மாதமாகிவிட்டது. அது சற்று ஓய்ந்திருந்தது. எனவே இரு சமூகத்தினருக்கும் இடையிலான வகுப்புவாத நல்லிணக்க விவகாரங்கள் குறித்து நாங்கள் விவாதித்தோம் என்று அவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார். இத்தகைய சந்திப்புகள், உரையாடல்கள், தொடரவேண்டும், அமைதி நிலவ வேண்டும், மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
நல்லிணக்கத்தைவலுப்படுத்தவும், உள்உறவுகளைமேம்படுத்தவும்முஸ்லீம்மதகுருகளைதலைவர்களைசந்தித்துவருகிறார்: பகவத்தின் திடீர் விசிட் குறித்து ஆர்எஸ்எஸ் செய்தித்தொடர்பாளர் பிரமுக் சுனில் அம்பேகர் வெளியிட்ட அறிக்கையில், “சர்சங்கசாலக் அனைத்து தரப்பு மக்களையும் சந்திக்கிறார். இது ‘சம்வத்’ செயல்முறையின் ஒரு பகுதியாகும்” என்று கூறினார்[5]. ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் கடந்த சில நாட்களாக மத நல்லிணக்கத்தை வலுப்படுத்தவும், உள் உறவுகளை மேம்படுத்தவும் முஸ்லீம் மதகுருகளை தலைவர்களை சந்தித்து வருகிறார்[6].. மாற்று மதம் மற்றும் நம்பிக்கை கொண்டவர்களுடன் தொடர்பு ஏற்படுத்துவது என்ற நோக்கில் இந்த சந்திப்பு நடந்தது[7]. அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது[8]. மேலும் இது தொடர்ச்சியான இயல்பான சம்வத் செயல்முறையின் ஒரு பகுதியாகும் என்றும் அவர் தெரிவித்தார்[9]. ஆனால் கடந்த மாதமும் ஐந்து முஸ்லிம் தலைவர்களை பகவத் சந்தித்தார். அப்போது நாட்டில் நல்லிணக்க சூழல் நிலவுவது குறித்து விவாதிக்கப்பட்டது. முன்னதாக இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, பகவத் சமீபத்தில் டெல்லியின் முன்னாள் லெப்டினன்ட் கவர்னர் நஜீப் ஜங், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரைஷி, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஜமீர் உதின் ஷா, முன்னாள் எம்.பி. ஷாகித் சித்திக் மற்றும் தொழிலதிபர் சயீத் ஆகியோரை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது[10].
தீவிரவாததொடர்புகள்நீங்கவேண்டும்: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பின் நிர்வாகிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் என கேரளா கோழிக்கோடு, டில்லி, மும்பை, அசாம், தெலுங்கானா, பெங்களூரூ, லக்னோ, சென்னை, கோல்கட்டா உள்ளிட்ட 13 மாநிலங்களில் தேசிய புலனாய்வு படையினர் நாடு முழுவதும் அதிரடி சோதனை மேற்கோண்டனர். அதனுடன் தொடர்பு கொண்டுள்ளவர்கள், குறிப்பாக சட்டவிரோதமான தொடர்புகள், நிதியுதவி பெறுபவர்கள், தீவிரவாத சம்பந்தம் உள்ளவர்கள் தண்டிக்கப் பட வேண்டும், மற்றவர்கள் அவர்களிடமிருந்து விலக வேண்டும். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவை, சேர்ந்த 106 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. கேரளா, தமிழகம், தெலங்கானா போன்ற மாநிலங்களில் வன்முறைச் செயல்களும் ஆரம்பித்துள்ளன. இந்நிலையில், அமைதி காக்க, இத்தகைய உரையாடல்கள் அந்தந்த மாநிலங்களிலும் ஆரம்பிக்க வேண்டும். மக்களுக்கு ஏற்றமுறையில் நெருங்கி வர உரையாடல்கள் அமைய வேண்டும். அப்பொழுது தான், பதட்டம் நீங்கி, நட்பு, உறவுகள் மேன்படும். இந்திய முஸ்லிம்கள் இந்தியாவின் பொருளாதார, மற்ற முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும்.
[3] தமிழ். இந்தியன்.எக்ஸ்பிரஸ், மோகன்பகவத்– முஸ்லிம்தலைவர்கள்சந்திப்பு: பசுவதைஉட்படமுக்கியபிரச்னைகள்பற்றிபேச்சு, Written by WebDesk, Updated: September 22, 2022 6:53:34 pm.
அக்டோபர் 2021ல்அப்துல்லாமீதுகுற்றப்பத்திரிக்கைத்தாக்கல்: இஸ்லாமிய தேசம் ஒன்றை இந்தியாவில் தனியாக உருவாக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் மதுரையை சேர்ந்த அப்துல்லா (என்ற) சரவணகுமார் (31), என்பவர் ஆதரவு திரட்டியதாகக் கூறப்படுகிறது[1]. இவர் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக மதுரை போலீசாரால் சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். பின்னர் இந்த வழக்கு தேசிய புலனாய்வு சிறப்பு போலீசாருக்கு (என்ஐஏ) மாற்றப்பட்டது. இந்த வழக்கு பூந்தமல்லி தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சரவணகுமார் மீது என்ஐஏ அதிகாரிகள், 5 வது செஷன்ஸ் நீதிபதி முன்பு நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்[2]. அப்துல்லா, அப்துல்லாவாகத்தான் செயல்படுகிறான், சரவணன் என்பதால், இந்தியாவை ஆதரிக்கவில்லை. மற்ற இந்துபெயர்கள் கொண்டவர்களும், தமிழகத்தில், இந்தியவிரோதிகளாகத் தான், பேசியும், எழுதியும் வருகின்றனர். பிறகு, இவ்விரு கூட்டங்களுக்கு எந்த வித்தியாசமும் இல்லை.
இஸ்லாமியஅடிப்படைவாதம்தூண்டும்துண்டுபிரசுரங்கள்: சாதிக் பாஷா மற்றும் அவரது கூட்டாளிகள், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததற்கான சில ஆதாரங்கள் கிடைத்து இருப்பதாக, என்.ஐ.ஏ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மயிலாடுதுறை, திருச்சி, கோவை என, பல இடங்களில் ரகசிய கூட்டங்கள் நடத்தி, துண்டு பிரசுரங்களை வழங்கி உள்ளனர். இவர்களிடம் எப்போதும் துப்பாக்கி இருக்கும். அதேபோல, ஒரு கைவிலங்கு, அதற்குரிய இரண்டு சாவிகளும் வைத்திருப்பர். காரில் மடிக்கணினி, ‘பவர் பாங்க், வீடியோ பேனா’ உள்ளிட்ட பொருட்களையும் வைத்திருப்பர். இவர்கள், பயங்கரவாத அமைப்புக்கு, சமூக வலைதளம் வாயிலாக, ஆட்களை திரட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர் என்பதும் தெரிய வந்துள்ளது. இவர்களுக்கு நிதியுதவி செய்து வந்த நபர்கள் யார், அவர்கள் பின்னணி என்ன, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு நேரடி தொடர்பு உள்ளதா என்பதற்கான ஆதாரங்களை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் திரட்டி வருகின்றனர். இத்தனையும் தமிழக போலீஸாருக்குத் தெரியாமல் நடக்கின்றனவா அல்லது முஸ்லிம்கள் என்றதால், கண்டுகொள்ளாமல் இருக்கப் படுகிறதா?
கிலாபத்இயக்கம்நடத்தும்அடிப்படைவாதமுஸ்லிம்கள்: ஐ.எஸ் இயக்கத்தில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், தஞ்சாவூரில் மூன்று பேரின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் 12-02-2022 அன்று சோதனை நடத்தினர்[3]. கிலாபத் இயக்கத்தைச் சேர்ந்த மதுரை அப்துல்காதர் என்பவருக்கு ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாகவும், இந்துக்கள் குறித்து சமூக வலைதளங்களில் தவறான கருத்துகளைப் பரப்பியதாகவும் ஓராண்டுக்கு முன்புதேசிய புலனாய்வு அமைப்பினரால் (என்ஐஏ) கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்[4]. இதேபோல, மன்னார்குடியைச் சேர்ந்த பாபா பக்ருதீன் என்பவரும் நான்கு மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், கிலாபத் இயக்கத்தில் உள்ள –
தஞ்சாவூர் மகர்நோன்புசாவடி கீழவாசல் தைக்கால் தெருவைச் சேர்ந்த மெக்கானிக் அப்துல்காதர் (49),
அதே பகுதியை சேர்ந்த முகமதுயா சின் (30),
காவேரி நகரைச் சேர்ந்த அகமது (37)
இதனை தொடர்ந்து, தஞ்சை மகர்நோன்புசாவடியில் உள்ள அப்துல்காதர், முகமதுயாசின் மற்றும் காவேரி நகர் முகமது ஆகியோர் வீட்டுக்குள் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழுவாக பிரிந்து சென்றனர். ஆகியோரின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். வீட்டில் இருந்து யாரும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. வீட்டை பூட்டி சோதனை நடத்தினர்.
என்.ஐ.ஏ சோதனை எதிர்த்து ஆர்பாட்டம் செய்த முஸ்லிம்கள்: இந்த சோதனை அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கி காலை 10 மணி வரை நடைபெற்றது. அப்போது, மூன்று பேரின் செல்போன்கள், ஆதார், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், பிப்.16-ல் சென்னையில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் மூன்று பேரையும் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி நோட்டீஸ் கொடுத்துவிட்டு, புறப்பட்டுச் சென்றனர். இதற்கிடையே மகர்நோன்புசாவடியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள், உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்[5]. ஆதாரம் இன்றி சோதனை நடந்து வருவதாகவும், அவர்கள் மூன்று பேருக்கும் தொடர்பு இல்லை என்றும் கோஷமிட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்[6]. அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள் சோதனையும், பொதுமக்கள் ஆர்ப்பாட்டமும் நடப்பதால் பாதுகாப்புக்காக கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் தஞ்சையில் பதட்டமான சூழல் நிலவுகிறது.
போலீஸாரை மிரட்டும் அளவுக்கு முஸ்லிம்களுக்கு தைரியம் கொடுப்பது எது, யார்?: இந்த அளவுக்கு முஸ்லிம்களுக்கு தைரியம் கொடுப்பது யார்? என்,ஐ,ஏ.வையே எதிர்த்து ஆர்பாட்டம் செய்வது, கேள்விகள் கேட்பது எல்லாம் எந்த அளவுக்கு மோசமானது, ஏன் ஆபத்தானது என்பதனை அறிந்து கொள்ளலாம். முஸ்லிம்கள் ஓட்டு கிடைக்கும், மறைமுகமாக வேறு பலன்கள் கிடைக்கும் என்றெல்லாம் அரசியல் கட்சிகள் செயல் படலாம். ஆனால், அவையெல்லாம் தேசவிரோதமாகத்தான் முடியும். இவ்வாறு, முஸ்லிம்களுக்கு தகுந்த நடவடிக்கைகள் எடுக்காமல் இருப்பதே, ஊக்கம் கொடுப்பதற்கு சமம் ஆகும். மேலும் “தொப்புள் கொடி உறவுகள்” என்றெல்லாம் பேசும் போது, எங்களை ஒன்றும் செய முடியாது, அரசே ஆதரவாக உள்ளது என்ற தொரணையும் வரும். அதுதான், மயிலாடுதுறை போலீஸாரைப் பார்த்து அந்த முஸ்லிம்கள் திமிருடன் கேட்டது.
போலீஸார் உதவியுடன் என்.ஐ.ஏ சோதனை: முன்னதாக, அப்துல்காதர் மற்றும் முகமது யாசின் வீடுகளில் என்ஐஏ சோதனை நடத்துவதை கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட முஸ்லிம்கள் 50-க்கும் மேற்பட்டோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. தஞ்சாவூர் ஏடிஎஸ்பி பிருந்தா தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். சோதனை முடிந்து வெளியில் வந்த என்ஐஏ அதிகாரிகளை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சூழ்ந்துகொண்டு, முழக்கம் எழுப்பினர். அவர்களை போலீஸார் கலைந்து போகச் செய்தனர். இதேபோல, காரைக்கால் நகராட்சி சந்தைத் திடலுக்கு எதிரே உள்ள ராவணன் நகர் பகுதியில் வசிக்கும் உணவக உரிமையாளரான அப்துல்அமீன் என்பவரின் வீட்டிலும் என்ஐஏஅதிகாரிகள் 12-02-2022 அன்று அதிகாலை 5மணி முதல் பகல் 1 மணி வரை சோதனை நடத்தினர்.
14-03-2022 அன்று, கீழ்கண்டவர்கள்மீதுவழக்குத்தொடரப்பட்டது[7].
பாவா பஹ்ருத்தீன் என்கின்ற மன்னார் பாவா, சம்சுதீன் மகன், வயது 41, மன்னார்குடி, தஞ்சாவூர் ( Bava Bahrudeen @ Mannai Bava s/o Samsudeen,aged 41 yrs, r/o Mannargudi, Tiruvarur District, Tamil Nad) மற்றும்
ஜியாவுத்தீன் ஜாகுபார் மகன், வயது 40, கும்பகோணம், தஞ்சாவூர் ( Ziyavudeen Baqavi, s/o Jagubar, aged 40 yrs, r/o Kumbakonam, Thanjavur Dt),
இசமா சாதிக் எனப்படுகின்ற சாதிக் பாட்சா இத்தகைய தேசவிரோத நடவடிக்கைகளுடன், மனித நீதி பாசறை என்ற அமைப்பின் உறுப்பினருமாகவும் உள்ளார். அது இப்பொழுது போப்புலர் பிரென்ட் ஆப் இன்டியரேன்றழைக்கப் படுகிறது. எப்.ஐ.ஆர்,ன் படி இந்த ஐந்து நபர்களும், இஐசிஸ் சித்தாந்தத்தைப் பரப்பி, தேசவிரோதத்தை வளர்த்து வருகின்றனர். இந்தியாப் பகுதிகளைத் துண்டாடி அவற்றை இந்தியாவிலிருந்து பிரிக்க வேண்டும் அல்லது “பிரச்சினை உள்ள பகுதி” என்று அறிவிக்கப் படும் வகையில் தீவிரவாதத்தை உண்டாக்கவேண்டும் என்று, “இந்திய கிலாபா கட்சி (Khilafah Party of India),” “இந்திய கிலாபா முன்னணி (Khilafa Front of India),” “இந்திய அறிவிஜீவி மாணவர் (Intellectual Students of India),” “இந்திய மாணவர் கட்சி (Student Party of India),” என்றெல்லாம் உருவாக்கி, செயல்பட திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.
[3] தமிழ்.இந்து, 3 பேருக்குஐ.எஸ்உடன்தொடர்பு? – தஞ்சையில்என்ஐஏசோதனை: முஸ்லிம்கள்போராட்டத்தால்பரபரப்பு, செய்திப்பிரிவு, Published : 13 Feb 2022 11:22 AM; Last Updated : 13 Feb 2022 11:22 AM
சட்டத்திருத்த உறுதிமொழியில்முகமதுநபியேகடைசிதூதர்என்றுகுறிப்பிடும்வாசகம்விடுபட்டதால், பாகிஸ்தானில் கலாட்டா, கலவரம், துப்பாக்கி சூடு!
ஜிஹாதி–இஸ்லாமிஸ்டுகளின்தீவிரவாதங்களினின்றுதப்பசீர்திருத்தங்கள்அவசியம்என்றநிலையில்கலவரம்உண்டானது: 1947ல் இந்தியாவிலிருந்து துண்டாகி உருவான பாகிஸ்தான், சாவுகள், ரத்தம் சிந்தல், கலவரம் முதலியவற்றுடன் தான் இருந்தது. இஸ்லாமிய நாடாக இருந்து, ஜனநாயக ஆட்சியில்லாமல், ராணுவமும், இஸ்லாமிய முல்லாக்கள், காஜிக்கள், மததலைவர்கள் என்று தான் ஆதிக்கம் செல்லுத்தப் பட்டு ஆட்சி நடந்து வருகின்றது. ஜனநாயகம் என்றாலும் பெயரளவுக்குத் தான் இருக்கிறது. நகரங்களில் மட்டும்நாகரிகமாக, இக்காலத்தவர் போன்று மக்கள் நடந்து கொண்டாலும், மற்ற இடங்களில் அவர்கள் அவ்வாறு நடந்து கொள்ள முடியாது. இருப்பினும் மற்ற நாடுகளுடன் இயைந்து செல்ல வேண்டிய நிலையில் சீர்திருத்தம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் தள்ளப் பட்டனர். உலகம் முழுவதும் ஜிஹாதி-இஸ்லாமிஸ்டுகளின் தீவிரவாதங்கள் நகரங்களை அழித்து, மக்களைக் கொன்று, குரூரங்களையே உருவாக்கி வருவதால், அதனை எதிர்க்க இஸ்லாமிய நாடுகள் ஆரம்பித்துள்ளான. சவுதி அரேபியாவே, அத்தகை சீர்திருத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு செயல்படுத்த ஆரம்பித்து விட்டது. அந்நிலையில், சில மாறுதல்களை பாகிஸ்தான் கொண்டு வரலாம் என்று முயலும் நிலையில், இப்பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
பிரதிநிதிகள்சத்தியபிரமாணம்பற்றியசட்டத்திருத்தமும், உண்டானபிரச்சினையும்: பாகிஸ்தானில் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள் சத்திய பிரமாணம் செய்யும்போது அதில் சில வரிகளை மாற்றி பிரமாணம் எடுக்கலாம் என சட்டத்துறை மந்திரி ஜஹித் ஹமீது சமீபத்தில் ஒரு சட்டத்திருத்தம் [the Electoral Reforms Bill 2017] கொண்டுவர முயன்றார்[1]. அதாவது, மசோதா நிலையில் இது விவாதத்திற்குட்பட்டதாக இருக்கிறது. பலரிடத்தில் கருத்துக் கேட்கப் பட்டு வருகின்றது. ஆனால், பல கட்சிகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. முஸ்லிம் அல்லாதோருக்கு இடவொதிக்கீடு என்பதை இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்கள் எதிர்த்து வருகிறன. இவ்வாறிருக்கும் நிலையில் தான் பிரச்சினை வேறு வழியில் திருப்பட்டது. தேர்தல் சீர்திருத்தச் சட்டம் 2017ல் செய்யப்பட்ட திருத்தத்துக்கு எதிராக ஏற்பாடு செய்யப்பட்ட இப் போராட்டம் 20 நாளாக நடந்து வந்தது. இந்த சட்டத் திருத்தத்தின்படி நடாளுமன்ற உறுப்பினர்கள் எடுக்கவேண்டிய ஓர் உறுதிமொழியில் முகமது நபியே இறைவனின் கடைசி தூதர் என்று குறிப்பிடும் பழைய வாசகம் ஒன்று விடுபட்டிருந்தது என போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், அது தற்செயலானது, பிழை என்று அரசு விளக்கம் அளித்தது. இந்த வாசகம் விடுபட்டது இஸ்லாமிய மறுப்பு எனவும், மத நிந்தனை எனவும் விமர்சிக்கப்பட்டது. இஸ்லமிய பாகிஸ்தானில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை உலகமே கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது. சட்ட அமைச்சர் ஜாஹித் ஹமீத்தை பதவி நீக்கவேண்டும் என்று கடும்போக்கு இஸ்லாமியவாத அமைப்பான டெஹ்ரீக்-ஐ-லபைக் யா ரசூல் அல்லா கட்சியின் அஷ்ரஃப் ஜலாய் அணியும், சுன்னி டெஹ்ரீக் அமைப்பும் கோரி வருகின்றன. கவனத்துக்கு வந்தவுடனேயே இந்தப் பிழையினை சரி செய்யப்பட்டுவிட்டதாக அரசு விளக்கமளித்தாலும், இதை கடும்போக்காளர்கள் ஏற்கவில்லை. நவம்பர் 6-ம் தேதி லாகூரில் இருந்து ‘நீண்ட பயணமாகத்’ தொடங்கிய இந்தப் போராட்டம் இஸ்லாமாபாத்தில் முற்றுகையாக மாறித் தொடர்ந்தது. அதாவது உட்கார்ந்து செய்த போராட்டம் தெருக்களில் நடக்க ஆரம்பித்தது.
பைஸாபாதில்ஆரம்பித்தபோராட்டம், மற்றநகரங்களுக்கும்பரவிகலவரமானது: முதலில் பைஸாபாதில் இப்பிரச்சினை ஆரம்பித்தது[2]. “உட்கார்ந்து செய்யும் போராட்டம்மென்று ஆரம்பித்து, வன்முறையில் இறங்கினர்.
தெஹ்ரீக் –இ-லபைக் யா ரஸூல் அல்லா [Tehreek-e-Labaik Ya Rasool Allah (TLYR) led by firebrand cleric Khadim Hussain Rizvi] கதீம் ஹுஸைன் ரிஸ்வி என்ற அழுத்தமான அடிப்படைவாதியின் கீழ் இயங்கும் இயக்கம்,
பாகிஸ்தான் சுன்னி தெஹ்ரீக் [Pakistan Sunni Tehreek (PST)], இன்னொரு அடிப்படைவாத இயக்கம்,
தெஹ்ரீக்-இ-கடம்-இ-நபுவத் [Tehreek-e-Khatam-e-Nabuwat] என்ற இன்னொரு அடிப்படைவாத இயக்கம்.
இந்த மூன்றும் தான், கலவரத்தை பெரிய அளவுக்கு உண்டாக்கக் காரணமாக இருந்தன[3]. பைஸாபாத், ராவல் பின்டி, லாஹுர் என்று பரவியதற்கு, அவர்களது தூண்டுதல்கள் தான் காரணம்[4]. அங்கேயே அதனை அடக்கியிருந்தால் மற்ற நகரங்களுக்குப் பரவியிருக்காது[5]. உண்மையில் அங்கு பலத்தை உபயோகப் படுத்தி, அடக்கத்தான் பார்த்தது, ஆனால், அடிப்படைவாத இயக்கத்தினர், வன்முறையில் ஈடுபட்டதால், கட்டுப்பாட்டை மீறியது[6]. அடிப்படைவாதிகள், தீவிரவாதிகளைப் போல கல்லெறி கலாட்டா மற்றும் இரும்பு கம்புகளைக் கொண்டு தாக்கினர். இதனால், போலீஸ், பாதுகாப்புப் படையினர் என்றில்லாமல், பொது மக்களும் தாக்கப்பட்டனர். இதனால், கலவரம் பெரிய அளவில் மாறியது[7].
கலவரம்ஏற்பட்டபிறகுஅறிவுரைகூறும்எதிர்கட்சிகள்: பிடிஐயின் தலைவர்-இம்ரான் கான், ஜமாத்-இ-இஸ்லாமி தலைவர்-சிராஜுல் ஹக் முதலியோர், சட்டம் ஒழுங்குமுறை சீர்கெட்டுள்ளதை சுட்டிக் காட்டினர். ஆயுதங்களோடு அடக்குமுறையில் ஈடுபட்டதை தவிர்த்து, உரையாடல் மூலம் பிரச்சினையை அணுகியிருக்கலாம் என்று கருத்துத் தெரிவித்தனர்[8]. அதனால், அரசு அங்கேயே அதனை சரிசெய்திருந்தால் மற்ற நகரங்களுக்கு ஆர்பாட்டம் பரவியிருக்காது என்றும், அரசு வேண்டுமென்றே அலட்சியமாக இருந்தது என்றும் எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன[9]. மேலும் ஜஹித் ஹமீது ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்[10]. இதற்கு பாகிஸ்தானில் செயல்பட்டுவரும் சில இஸ்லாமிய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்[11]. குறிப்பாக, இதனால் அவர் பதவி விலகக்கோரி தலைநகர் இஸ்லாமாபாத்தில் கடந்த ஒரு வார காலமாக தெஹ்ரிக் இ லபாயிக் ரா ரசூல் அல்லா அமைப்பினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்[12]. இதில் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்காததால் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் அதிருப்தி அடைந்து அரசின்மீது கடும் கண்டனம் தெரிவித்தன.இதனால் பல லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்[13].
பேச்சுவார்த்தைகள்தோல்வியில்முடிவடைந்ததால்தான்துணைராணுவம்அழைக்கப்பட்டது: பேச்சு வார்த்தைகள் நடத்தாமல் இல்லை, இருப்பினும், மேலே குறிப்பிட்ட அடிப்படைவாத இயக்கங்கள் ஒப்புக் கொள்வதாக இல்லை. தலைவர்களிடமும் விளக்கப்பட்டது. ஆனால், இஸ்லாமிய அரசாக இருப்பதால், அது எல்லா முறைகளையும் தான் கையாண்டு பார்த்தது. இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தன. இதையடுத்து தான், பாகிஸ்தான் போலீஸ் மற்றும் துணை ராணுவம், போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி, தடியடி நடத்தி விரட்டும் நடவடிக்கையை நேற்று முதல் ஆரம்பித்துள்ளது. இந்த நடவடிக்கையின் போது, போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் மோதல் வெடித்தது. போராட்டக்காரர்கள் பாதுகாப்பு படையினரை நோக்கி கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் போராட்டம் நடைபெற்ற இடம் போர்க்களமானது.
பாகிஸ்தான்தனதுநிலையைபாதுகாத்துக்கொள்ளஊடகசென்சார்உத்தரவுபோட்டது: ஹாவிஸ் சையது விடுதலை சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அமெரிக்கா வேறு அவனை மறுமடியும் கைது செய்யப்பட வேண்டும் என்று அறிவித்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் தனது நிலையை பாதுகாத்துக் கொள்ள முயல்கிறது. ஆனால் போராட்டக்காரர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையை நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடாது என்று பாகிஸ்தானில் உள்ள தனியார் தொலைக்காட்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு டிவி சேனல்களில் அரசியல் தொடர்பான விவாதங்கள்தான் காட்டப்படுகின்றன. போராட்டத்தை ஒடுக்கும் நடவடிக்கையை நேரடியாக ஒளிபரப்புக்கூடாது என்ற உத்தரவை பாகிஸ்தானில் மின்னணு ஊடகங்கள் ஒழுங்கு முறை ஆணையமான ‘பெம்ரா’ பிறப்பித்துள்ளது. சமூக வலைதளங்களான பேஸ்புக், டுவிட்டர், யூடியூப் போன்ற சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன[14]. போராட்டக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை ஒளிபரப்பக்கூடாது என்ற உத்தரவை மீறியதாகக் கூறி எல்லா செய்தி தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பையும் பாகிஸ்தான் மின்னணு ஊடக முறைப்படுத்தல் ஆணையம் துண்டித்துள்ளது[15]. அரசுத் தொலைக் காட்சியான பாகிஸ்தான் டிவி தவிர எந்த தொலைக்காட்சி சேனலும் தற்போது செயல்படவில்லை. இந்தக் கலவரத்தைப் பற்றி செய்தி சேகரிக்கச் சென்ற பல பத்திரிகையாளர்களும் காயமடைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன[16].
உயிரிழப்பு, காயம்முதலியன: இந்த போராட்டத்தினால் ஏற்பட்ட கலவரங்களில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாகவும், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் உண்மையான செய்திகள், நிலவரங்களைத் தெரிந்து கொள்ளாத நிலைதான் உள்ளது. இதனால், பாகிஸ்தானில் அவசர காலநிலை பிறப்பிக்கப்பட்டதை போன்ற சூழல் உருவாகியுள்ளது. நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருவதையடுத்து அதை சமாளிப்பதற்காக ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். மொத்தத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது[17].
[8] Expressing concerns over the deteriorating law and order situation in the federal capital, PTI chairman Imran Khan and Jamaat-i-Islami chief Sirajul Haq insisted that instead of launching an armed operation the government should have tried to reach a solution through dialogue.
[9] Dawn, JI, PTI lamblast fedral govt for failing to maintain its writ, November 26, 2017.
தேசிய புலனாய்வு துறை படிப்படியாக ஆதாரங்களைக் கொண்டு ஜாகிர் நாயக்கின் நிறுவனங்களை சோதித்தது, ஆவணங்களைக் கைப்பற்றியது மற்றும் மீது வழக்கு தொடுத்தது.
ஒரேநேரத்தில் 12 இடங்களில்நடந்தசோதனைகள்: இதைத்தொடர்ந்து மும்பையில் அவரது தொண்டு நிறுவனத்துக்கு சொந்தமான பைகுல்லா, டோங்கிரி, பைதோனி உட்பட [Byculla, the IRF’s offices in Dongri and Pydhonie] 10க்கும் மேற்பட்ட இடங்களில் சனிக்கிழமை 19-11-2016 அன்று தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்[1]. தவிர கேரளாவில் உள்ள சில அமைப்புகளிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. உள்ளூர் போலீசாரின் உதவியுடன் நடத்தப்பட்ட இந்த சோதனையில் குற்றத்தை நிரூபிக்க உதவும் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது[2]. முன்னதாக ஜாகிர் நாயக்கின் ஆதரவாளர்கள் சிலரை தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் கைது செய்து இருந்தனர்[3]. இதனால் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருக்கும் ஜாகிர் நாயக் நாடு திரும்பாமல் அங்கேயே தங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது[4]. ஐ.ஆர்.எப், டாக்யார்ட் ரோடில் நடத்தி வரும் “அனைத்துலக இஸ்லாமிய பள்ள்ளி”யை [Islamic International School (IIS)] அரசே ஏற்று நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது[5]. மஹாராஷ்ட்ர மாநில்ல கல்வி மந்திரி, சட்டப்படி, இதற்கானவை செய்யப்படும் எட்ன்று அறிவித்தார்[6].
19-11-2016 அன்றுவெளியிட்டஎன்.ஐ.ஏ.வின்அறிக்கை: சட்டத்திற்குப் புறம்பாக நடக்கும் வேலைகளை தடுக்கும் சட்டம் 1967ன் கீழுள்ள 3 (3) பிரிவின் கீழ் இந்திய அரசு ஆணை எண். Order F. No. 11034/17/2016-IS-VI & S.O.3460 (E) dated 17/11/2016 மூலம் ஐ.ஆர்.எப். பவுண்டேஷன், தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டது. அப்துல் கரீம் நாயக் என்பவரின் மகனான, ஜாகிர் நாயக் மேற்குறிப்பிடப்பட்ட இயக்கத்தின் தலைவராக இருந்து கொண்டு, முஸ்லிம் இளைஞர்கள் மற்றும் தீவிரவாதிகளைத் தூண்டி விட்டு, இந்தியாவில் உள்ள பலதரப்பட்ட மத நம்பிக்கையாளர்களிடம் வெறுப்பு, துவேசம் தூண்டும் வகையில், பல இடங்களில், பேசியும், சொற்பொழிவாற்றியும், தீவிரவாத செயல்களில் ஈடுபடும் படி செய்து வருவதாக ஆதாரப் பூர்வமான தகவல்கள் கிடைத்துள்ளன. இத்தகைய செயல்கள் இந்திய அரசுக்கு பிடிக்காமல் இருப்பதுடன், பொது அமைதிக்கு ஊறுவிளைவித்து, பலவித நம்பிக்கையாளர்களிடையே வெறுப்பை வளர்க்கும் விதாமக இருப்பதாக கருதுகிறது[7].
குற்றத்தின்தன்மைமற்றும்அதன்உலகளவில்உண்டாக்கும்விளைவுகளைகருதிஇந்தியஅரசுநடவடிக்கைஎடுத்துள்ளது: குற்றத்தின் தன்மை மற்றும் அதன் உலகளவில் உண்டாக்கும் விளைவுகளை கருதி, இந்திய அரசு அதனால் தான், உள்துறி அமைச்சகத்தின் ஆணை எண். Order F. No. 11034/17/2016-IS-VI & S.O.3460 (E) dated 17/11/2016 மூலம் ஐ.ஆர்.எப். பவுண்டேஷனை தடை செய்தது. அதன்படி தேசிய புலானாய்வு ஏஜென்சியை, இவ்வழக்கை எடுத்துக் கொண்டு நடத்துமாறு ஆணையிட்டது. அதன்படியே 18/11/2016 அன்று, FIR No. 05/2016 dated 18/11/2016 பதிவு செய்யப்பட்டு, பிரிவுகள் 153A of IPC மற்றும் பிரிவுகள் 10, 13 and 18 சட்டத்திற்குப் புறம்பாக நடக்கும் வேலைகளை தடுக்கும் சட்டம் 1967ன் படி மும்பை போலீஸ் நிலையத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது[8].
சோதனைகளில்தகவல்தொழிற்நுட்பவல்லுனர்களும்இந்தசோதனைகளில்பங்குகொண்டனர்: தேசிய புலானாய்வு ஏஜென்சி அதன்படியே இஸ்லாமிக் ரெசெர்ச் பவுண்டேசனின் 12 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனையிட்டு, சட்டமீறல்களை எடுத்துக் காட்டும் ஆவணங்கள், கோப்புகள், மின்னணு தகவல் சேமிக்கும் கருவிகள், ஜாகிர் நாயக் மற்றும் ஐ.ஆர்.எப்பின் சொத்துகள் முதலியவற்றைப் பற்றிய விவரங்கள் முதலியனவும் கைப்பற்றப்பட்டன. தகவல் தொழிற்நுட்ப வல்லுனர்களும் இந்த சோதனைகளில் பங்கு கொண்டனர். சோதனை நடந்து கொண்டிருக்கின்றன[9].
சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமானால், ஜாகிர் நாயக் இந்தியாவுக்கு வரவேண்டும் அல்லது கொண்டுவரப்பட வேண்டும்: ஜாகிர் நாயக் இந்த நடவடிக்கைகளை அறிந்திருப்பார். இனி, ஒன்று சட்டப்படி அணுக வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இந்தியாவும், ஜாகிர் நாயக் தங்கியுள்ள நாட்டை அறிந்ததும், முறைப்படி அவரை இந்தியாவிற்கு நாடு கடத்த, உரியன செய்யப்படும். அவ்வாறு இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டால், கைது செய்யப் பட்டு, நடவடிக்கைகள் தொடரப்படும். இந்திய சட்டங்களை மீறியுள்ள நிலையில், ஜாகிர் நாயக் இந்தியாவிற்குக் கொண்டு வரப்பட்டால் தான், சட்டப்படி நடவடிக்கை எடுக்க் முடியும். இல்லையென்றால், தாவூத் இப்ராஹிம், ஹாவிஸ் சையது வழக்குகள் மாதிரி ஆகி விடும். ஏனெனில், அவர்கள் அயல்நாடுகளில் இருக்கும் வரை, இந்தியா ஒன்று செய்ய முடியாது. ஒத்துழைக்கிறேன் என்று சொன்னதால், முறை அவ்வாறு இருக்கும், இல்லையென்றால், இந்திய அரசாங்கம் வேறு வழிகளை ஆராய வேண்டியிருக்கும்.
இந்தியா பொருளாதார வீழ்ச்சி, நிதிப்பிரச்சினைகள் முதலிய நிலைகளிலிருந்து மீள வேண்டுமானால், தீவிரவாதத்தை, இரும்புக்கரம் கொண்டு அடக்கத்தான் வேண்டியுள்ளது: ஐரோப்பிய யூனியன் நாடுகள், அமெரிக்கா என்று எல்லா நாடுகளும், இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராக குரல் கொடுத்துள்ளன. அமெரிக்காவில், தலைமை மாறியுள்ளதால், உலக நாடுகள், எந்த வழியிலும், தீவிரவாதத் தாக்குதல்கள் நடத்தப் படக் கூடாது என்று கண்காணித்து வருகிறது. அந்நிலையில், இந்தியா இன்னும் மென்மையான தாக்குதலுக்கு உட்பட ஏதுவாக இருக்கிறது என்பதை அனைவரும் அறிந்துள்ளனர். அதனால், இந்தியா மூலமாகவும் தீவிரவாதிகள் செயல்படக்கூடாது என்று உறுதியாக இருக்கின்றன. ஆனால், அதே நேரத்தில், இந்தியாவிலிருந்து வரும் முஸ்லிம்கள் தான் தீவிரவாதிகளாக மாறி குறிகளைத் தாக்கி வருகிறார்கள் என்று தொடர்ந்து அறியப்பட்டால், தீவிரவாதம் வளர்க்கும் நாடுகளில் இந்தியாவும் சேர்க்கப் படும். அந்நிலையில், இந்தியாவின் பொருளாதாரம் அதிக அளவுக்கு பாதிக்கப் படும். அத்தகைய நிலை உண்டாக்க வேண்டும் என்றுதான், தீவிரவாத அமைப்புகள் கங்கனம் கட்டிக் கொண்டு பலவழிகளில் செயல் பட்டு வருகின்றன. ஆகவே, இந்தியா, இத்தகைய இக்கட்டான நிலைகளிலிருந்து மீள வேண்டுமானால், தீவிரவாதத்தை, இரும்புக்கரம் கொண்டு அடக்கத்தான் வேண்டியுள்ளது.
[7] The Government of India, Ministry of Home Affairs vide its Order F. No. 11034/17/2016-IS-VI & S.O.3460 (E) dated 17/11/2016 has declared the Islamic Research Foundation (IRF) as an unlawful association under sub-section (3) of Section 3 of the Unlawful Activities (Prevention) Act, 1967. Credible information has revealed that Dr. Zakir Abdul Karim Naik, S/o Abdul Karim Naik, the President of IRF and his associates have been promoting enmity and hatred between different religious groups in India through his public speeches and lectures on various platforms, and inciting Muslim youths and terrorists in India and abroad to commit unlawful activities and terrorist acts. These activities of Dr. Zakir Abdul Karim Naik and his associates are causing disaffection against the Govt. and are prejudicial to the maintenance of harmony among various communities and likely to disturb the public tranquillity.
[8] 2. Considering the gravity of the offence and its international ramification, MHA vide its order No. 11011/34/2016-IS-IV dated 18/11/2016 directed the National Investigation Agency, to register a suo motu case and investigate the matter. Accordingly, on 18/11/2016, a case vide FIR No. 05/2016 dated 18/11/2016 under section 153A of IPC and sections 10, 13 and 18 of Unlawful Activities (Prevention) Act, 1967 has been registered at Police Station, NIA, Mumbai Branch.
[9] 3. Subsequently, on 19/11/2016, 09 NIA teams conducted raid and search operation at 12 premises connected to Islamic Research Foundation (IRF) in Mumbai simultaneously and seized incriminating documents / files, electronic storage devices and about Rs.12 lakh in cash. The recovered documents relate to various activities including financial transactions and property details of Zakir Naik and IRF. To assist the search teams, a team of IT experts has been sent from NIA HQ Delhi to Mumbai. The searches are still going-on and are likely to continue till late in the night.
தீவிரவாதத்தை ஊக்குவிக்கும், ஆதரிக்கும் மற்றும் வளர்க்கும் ஜாகிர் நாயக்கின் மீது முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் விதம்.
இஸ்லாமியஆராய்ச்சிபவுண்டேசனின்நடவடிக்கைகள்: மும்பையில் இஸ்லாமிக் ஆராய்ச்சி அறக்கட்டளை (ஐஆர்எப்) [Islamic Research Foundation (IRF)] நடத்தி வந்தவர் மதபோதகர் ஜாகிர் நாயக். இவர் தனது அறக்கட்டளைக்கு வெளிநாடுகளில் இருந்து வந்த நிதிகளை எல்லாம் ‘பீஸ் டிவி’ என்ற சேனலுக்கு வழங்கி தனது பேச்சுக்களை ஒளிபரப்பச் செய்தார்[1]. இவரது பேச்சுக்கள் தீவிரவாதத்தை தூண்டும் வகையில் இருந்ததால், அதை ஒளிபரப்ப இங்கிலாந்து, கனடா, மலேசியா ஆகிய நாடுகளில் தடை விதிக்கப்பட்டது[2]. இப்போது இந்தியாவிற்கு வெளியில் இருக்கும் ஷாகிர் நாயக், ஒவ்வொரு முஸ்லிமும் தீவிரவாதியாக இருக்க வேண்டும் என்றும், அதாவது அமெரிக்காவை எதிர்த்துப் போராட வேண்டும் என்றும் முன்பு பல பிரசாரங்களில் கூறியிருக்கிறார்[3]. அனைத்து விசாரணைகளுக்கும் ஷாகிர் நாயக் ஒத்துழைப்பார் என்று அவருடைய செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்[4]. இருப்பினும் வெளிநாடு சென்ற நாயக் இந்தியாவுக்கு திரும்பி வரவில்லை[5]. சென்ற வாரம் தனது தந்தை இறந்த போது கூட, வந்தால், கைது செய்யப் படுவோம் என்று அஞ்சி வராமல் தவிர்த்தார் என்று சொல்லப்பட்டது. இதையெல்லாம் கவனிக்கும் போது, வெளிநாட்டில் இருக்கும் நாயக்கிற்கு, விசயங்கள் சென்று சேர்ந்து வருகின்றன என்று தெரிகிறது.
மாநிலமத்தியஅரசுகள்நடவடிக்கைஎடுத்தது: மஹாராஷ்ட்ரா அரசு முஸ்லிம் இளைஞர்களை மதவாதிகளாக்கி, தீவிரவாதத்தில் ஈடுபடுத்துகிறார் என்று வழக்குகள் பதிவு செய்துள்ளது[6]. மும்பை சிறப்புப் பிரிவு [Special Branch (SB) போலீஸார், Mumbai police] மற்றும் பொருளாதார குற்றப் பிரிவு [Economic Offences Wing (EOW)] முதலிய அதிகாரிகள், மேற்குறிப்பிடப்பட்ட அலுவலங்களில் சோதனையிட்டு, குற்றஞ்சாட்டப்படக் கூடிய வகையில் உள்ள ஆவணங்களைக் கைப்பற்றினர்[7]. அயல்நாட்டு பணம் வரவு கட்டுப்பாடு சட்டத்தின் பிரிவுகளை மீறி பணம் பெறப்பட்டதும் தெரிந்தது. அதை தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்தியது[8]. விசாரணையில் வெளிநாட்டு அன்பளிப்பு கட்டுப்பாடுகள் சட்டத்தை (எப்சிஆர்ஏ) ஐஆர்எப் கல்வி அறக்கட்டளை மீறி செயல்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது[9]. இந்திய ரிசர்வ் வங்கியின் [RBI] முன்னனுமதி இல்லாமல் பணம் பெற்றதும் உறுதி செய்யப்பட்டது[10]. அந்த அமைப்புக்கு சட்ட விரோதமாக வெளிநாடுகளில் நிதி வருவது ஆதாரப்பூரமாக தெரியவந்தது. மேலும், பயங்கரவாதத்திற்கு ஆதரவாக பரப்புரை செய்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக, உளவுத் துறை அளித்துள்ள பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் ஜாகீர் நாயக் நடத்தும் என்ஜீஓ நிறுவனம் சட்டத்திற்கு புறம்பான நிறுவனம் என அடையாளப் படுத்தப்படுவதாக உறுதியானது.
19-11-2016 அன்றுநடந்தசோதனைகள்: மத போதகர் ஜாகிர் நாயக் மீது வழக்கு பதிவு செய்த தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் [National Investigation Agency], அவரது தொண்டு நிறுவனங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர். மும்பையை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் மதபோதகர் ஜாகிர் நாயக், தனது வெறுப்பு பேச்சுக்கள் மூலம் இளைஞர்களை பயங்கரவாதிகளாக மாற்றுவதாக புகார் எழுந்தது. அந்தவகையில் மும்பை புறநகர் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலரை ஜாகிர் நாயக் ஐ.எஸ். அமைப்பில் இணைய வைத்ததாக கூறப்பட்டது. வங்காளதேசத்தில் கடந்த ஜூலை மாதம் 2016 நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட பயங்கரவாதி ஒருவர், ஜாகிர் நாயக்கின் பேச்சுக்களால் தான் கவரப்பட்டதாக தெரிவித்து இருந்தார். பங்களாதேசமே இதை அறிவித்து, தடை செய்யுமாறுஈந்தியாவைக் கேட்டுக் கொண்டது. இதனால் அவரது உரைகளை இங்கிலாந்து, கனடா மற்றும் மலேசியா நாடுகள் தடை செய்துள்ளன. இதைத்தொடர்ந்து ஜாகிர் நாயக் நடத்தி வரும் தொண்டு நிறுவனம் மற்றும் அவரது கல்வி அறக்கட்டளைகள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்திய மராட்டிய போலீசார் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பினர்.
முறைப்படிமேற்கொள்ளப்படும்சட்டநடவடிக்கைகள்: ஊடகங்கள் தினமும், அரசு நடவடிக்கைகளை பலவிதமாக வர்ணித்து செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. முக்கிய பிரச்சினைகளை விடுத்து, ஜாகிர் நாயக்கின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் படும், கைது செய்யப் பட்டால் என்ன செய்வார், ய்ஜடை செய்யப் பட்டால் மேல்முறையீடு செய்வாரா, என்றெல்லாம் விவாதம் என்ற பெயரில் நாயக்கிற்கு சாதகமாக செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. தீவிரவாத செயல்களை உலகளவில் கட்டுப் படுத்த எல்லா நாடுகளும் இறங்கியுள்ளன. இந்தியாவில் ஜி.எஸ்.டி அமூல் படுத்தியவுடன், அந்நிய நாடுகளின் முதலீடு அதிகமாகி, தொழிற்சாலைகள் நிறுப்பப்படும். அந்நிலையில், தீவிரவாதிகள் ஒன்றும் செய்யக் கூடாது. அத்தகைய, சுமூகமான நிலையை இந்தியா ஏற்ப்டுத்த வேண்டியுள்ளது. ஆகவே, ஜாகிர் நாயக்கின் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க அரசு தீர்மானித்தது.
முறைப்படி விசாரணை, ஆதாரங்கள் முதலியவற்றுடன் வழக்கு பதிவு செய்த விதம்: சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதனால், ஜாகிர் நாயக்கின் ஐ.ஆர்.எப். நிறுவனத்தில் வேலை செய்பவஎகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நாயக்கின் பேச்சுகள் அடங்கிய வீடியோக்கள், புத்தகங்கள் முதலியவை கொண்டு வரப்பட்ட முழுமையாக அலசிப் பார்க்கப்பட்டது. இஸ்லாமிய அடிப்படைவாதத்தை போதிக்கிறேன் என்ற போர்வையில், எவ்வாறு முஸ்லிம்-அல்லாதர்களின் மீது ஜிஹாத் என்ற போரை நடத்துவது, போன்ற தீவிரவாதத்தை போதிக்கும் போக்கு அறியப்பட்டது. இவரால் ஈர்க்கப் பட்டு, ஐசிஸ்.சில் சேர்ந்து, ஓடி வந்தவர்களிடம் விசாரித்து திட்டத்தையும் அறியப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த தொண்டு நிறுவனத்தை சட்ட விரோத அமைப்பு என மத்திய அரசு கடந்த 15–ந்தேதி [செவ்வாகிழமை 15-11-2016] அறிவித்தது[11]. மேலும் இந்த அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டது. இதில் அடுத்த நடவடிக்கையாக ஜாகிர் நாயக் மீது இந்திய தண்டனை சட்டம் 153 ஏ (மத அடிப்படையில் பகை வளர்த்தல் மற்றும் நல்லிணக்கத்துக்கு கேடு விளைவித்தல்) மற்றும் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் [ Unlawful Activities (Prevention) Act and the Indian Penal Code] பல்வேறு பிரிவுகளின் கீழ் வெள்ளிக்கிழமை 18-11-2016 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டது[12]. தேசிய புலனாய்வுத்துறையின் மும்பை பிரிவு அதிகாரிகள் இந்த வழக்கை பதிவு செய்தனர்.
[11] தினத்தந்தி, தொண்டுநிறுவனங்களில்சோதனை: மதபோதகர்ஜாகிர்நாயக்மீதுவழக்குபதிவுதேசியபுலனாய்வுத்துறைஅதிகாரிகள்அதிரடி, பதிவு செய்த நாள்: ஞாயிறு, நவம்பர் 20,2016, 2:26 AM IST; மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, நவம்பர் 20,2016, 3:45 AM IST
அண்மைய பின்னூட்டங்கள்