Posted tagged ‘இஸ்ரத் ஜஹான்’

சிதம்பரத்தின் முகமூடி கிழிகிறது: இஸ்ரத் ஜஹான் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிதான்: சொல்வது தீவிரவாதி டேவிட் ஹெட்லி!

ஜூலை 5, 2010

சிதம்பரத்தின் முகமூடி கிழிகிறது: இஸ்ரத் ஜஹான் லஷ்கர் தொய்பா தீவிரவாதிதான்: சொல்வது தீவிரவாதி டேவிட் ஹெட்லி

ஜிஹாதித் தீவிரவாதியே ஃபிதாயீன்  என்று ஒப்புக்கொள்கிறான்: அகமதாபாத்தில் காவல்துறையினர் நடத்திய என்கவுண்டரில் கொல்லப்பட்ட இஸ்ரத் ஜஹான் என்ற பெண், லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிதான் என்று அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட தீவிரவாதி டேவிட் ஹெட்லி தெரிவித்துள்ளான. மும்பையை சேர்ந்த இஸ்ரத் ஜஹான், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் காவல்துறையினரால் என்கவுண்டரில் கொல்லப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இஸ்ரத் ஜஹான் லஷ்கர் இயக்கத்தை சேர்ந்தவர் என்று குஜராத் மாநில காவல்துறையினர் தெரிவித்திருந்தனர். ஆனால் அதனை மறுத்திருந்த இஸ்ரத் ஜஹான் குடும்பத்தினர், அவள் கல்லூரி மாணவி மட்டுமே என்று கூறியிருந்தனர்.  இந்நிலையில், மும்பை தாக்குதலில் தொடர்புடையவனும், அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட தீவிரவாதியுமான டேவிட் ஹெட்லியிடம், அண்மையில் இந்தியாவில் இருந்து சென்ற தேசிய புலனாய்வு ஏஜென்சி மற்றும் சட்டத்துறையை சேர்ந்த நான்கு பேர் கொண்ட குழு விசாரணை நடத்தியது.  அப்போது இஸ்ரத் ஜஹான் என்ற பெண், லஷ்கர் இ தொய்பா தற்கொலை தீவிரவாதிதான் என்று ஹெட்லி கூறியதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன[1].

இஸ்ரத்-தீவிரவாதிகளுடன்-கொல்லப்பட்டது

இஸ்ரத்-தீவிரவாதிகளுடன்-கொல்லப்பட்டது

சிதம்பரம் பொய் சொன்னாரா, உள்துரை அமைச்சரின் புரட்டா இல்லை, தீவிரவாதிகளுக்கு ஆதரவா? இஸ்ரத் ஜஹான் லஸ்கர்-இ-தொய்பாவின் ஆள்தான் என்று டேவிட் ஹெட்லி ஒப்புக்கொண்டது, சிதம்பரம் பொய் சொன்னதாக ஆகிறது. முஜாம்மில் என்ற இந்திய லஷ்கர் பொறுப்பாளி தான் அவளை அத்தகைய தீவிரவாத வேலைக்கு ஆள் எடுத்ததாக ஒப்புக்கொண்டான். இவளைத்தவிர மேலும் நான்கு பெண்களை மனித வெடிகுண்டுகளாக – ஃபிதாயீன் – தேர்ந்தெடுத்தான்[2]. ஹெட்லுக்கு இந்த எல்லா பெண்களிடமும் தொடர்பு இருந்ததாகவும், அவன் தான் அத்தகைய தீவிரவாத வேலைகளுக்கு அனுப்பிவைத்ததாகவும் ஒப்புக் கொண்டான்[3]. இனி சிதம்பரம் மற்ற அறிவு ஜீவிகள் என்ன சொல்லப் போகிறார்கள் என்று பார்க்க வேண்டும்.

Gopinatha_pillai_Javeds-father

Gopinatha_pillai_Javeds-father

ஜேவித் ஷேய்க் (பிராணேஷ் பிள்ளை)கின் பெற்றோர்கள் தொலைக்காட்சி செனல்களில் பேசியதை நினைவில் கொள்ளவெஏண்டும் : இஸ்ரத் ஜஹான், ஜேவித் ஷேய்க் (பிராணேஷ் பிள்ளை) மற்றும் இரண்டு பாகிஸ்தானிய ஆட்கள் – அஜ்மத் அலி மற்றும் ஜிஷான் ஜோஹர் அப்துல் கனி முதகியோர் ஜூன் மாதம் 15, 2004ல் போலீஸாரால் சுட்டுக் கொள்ளப்பட்டனர். அப்பொழுது போலீஸாருக்கு, இவர்கள் சதிதிட்டம் தீட்டி நரேந்திர மோடியைக் கொலைசெய்ய புறப்பட்டு வந்ததாக செய்தி கிடைத்தது[4]. அப்பொழுது பிராணேஷ் பிள்ளையின் பெற்றோர் தமது பிள்ளை தீவிரவாதி கிடையாது என்றேல்லாம் வாதாடினர்[5]. அவர்கள் தமது மகன் ஏதோ “இந்து” என்ற ரீதியில்தான் தொலைக்காட்சி செனல்களுக்கும் பரபரப்பாக பேட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது தீஸ்தா செதல்வாத் என்ற செக்யூலரிஸ தீவிரவாதிதான், அவர்கள் தீவிரவாதிகள் இல்லை, பால்குடுக்கும் குழந்தைகள், அநியாயமாக என்கவுண்டர் என்று போட்டுத் தள்ளீவிட்டனர் என்றெல்லாம் கத்திக் கொண்டிருந்ததையும் நினைவில் கொள்ள வேண்டும். இதற்கு சவுதி அரேபியாவில் உள்ள கூட்டத்திற்கும் காங்கிரஸுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது. இஸ்ரத்தின் தாயார் ஷமிமா கௌஸர் ஷேய்க் வாசனைத் திரவியகங்கள் என்ற கம்பெனியின் வியாபார வளர்ச்சியாளராக இருந்ததாக குஜராத் நீதிமன்றத்தில் கூறியிருந்தார்[6].

இஸ்ரத்-ஜஹான்-அழகிய-வெடிகுண்டு2

இஸ்ரத்-ஜஹான்-அழகிய-வெடிகுண்டு2

மத்திய அரசின் புலனாய்வுத் தகவல்களை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு மாநில அரசுகள் முடிவுகட்டிவிடக் கூடாது: வாஷிங்டன், செப். 11, 2009:   போலியான என்கவுன்டர் மூலம் இஸ்ரத் ஜஹான் கொல்லப்பட்டதற்கு குஜராத் மாநில அரசுதான் காரணம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் குற்றம் சாட்டினார்[7]. அமெரிக்காவுக்கு நான்கு நாள் பயணமாக வந்திருந்த அவர், வாஷிங்டனில் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டனைச் சந்தித்து பேசிய பிறகு செய்தியாளர்கள் சந்திப்பின்போது இதைக் குறிப்பிட்டார்.

இஸ்ரத்-ஜஹான்-அழகிய-வெடிகுண்டு

இஸ்ரத்-ஜஹான்-அழகிய-வெடிகுண்டு

சிதம்பரத்தின் வக்காலத்து: குஜராத் மாநிலத்தில் 2004-ம் ஆண்டு நடைபெற்ற என்கவுன்டர் ஒன்றில் இஸ்ரத் ஜஹான் மற்றும் அவரது சகாக்கள் மூன்று பேர் போலீஸôரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது தொடர்பான விசாரணையில் இது போலி என்கவுன்டர் என்பது தெரியவந்தது. நீதிமன்றத்தில் மத்திய புலனாய்வு அமைப்பு அளித்த தகவலின் அடிப்படையில்தான் இது மேற்கொள்ளப்பட்டதாக குஜராத் மாநில அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. குஜராத் மாநிலத்தில் நடத்தப்பட்ட போலி என்கவுன்டர் குறித்த கேள்விக்கு அவர் அளித்த பதில்: “மத்திய அரசின் புலனாய்வுத் தகவல்களை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு மாநில அரசுகள் முடிவுகட்டிவிடக் கூடாது. அதுவே இறுதியான ஆதாரமாகவும் ஆகிவிடாது. மத்திய புலனாய்வு அமைப்பானது தங்களுக்குக் கிடைக்கும் தகவல்களை சம்பந்தப்பட்ட மாநிலங்களிடம் பகிர்ந்து கொள்ளும் அந்த வகையில்தான் குஜராத் மாநிலத்துக்கும் தகவல்கள் தரப்பட்டன. இதையே இறுதி முடிவாக எடுத்துக் கொண்டு அம்மாநில அரசு செயல்பட்டால் அது மிகவும் துரதிருஷ்டவசமானது. மத்திய புலனாய்வு அமைப்பு அளித்த தகவலின் அடிப்படையில்தான் ஒருவரைக் கொலை செய்வதாகக் கூறுவதை எப்படி ஏற்க முடியும் என்றார் சிதம்பரம்.

ishrat-jahan-family

ishrat-jahan-family

மத்திய புலனாய்வு அமைப்பு அளித்த தகவலின் அடிப்படையில்தான் ஒருவரைக் கொலை செய்வதாகக் கூறுவதை எப்படி ஏற்க முடியும்: அதாவது சிதம்பரத்தைப் போல, மத்திய புலனாய்வு அமைப்பு கூட தவறான தகவல் அளிக்கும் என்றால், அது அந்த அமைப்பையே கேவலப்படுத்துவது போலல்லவா இருக்கிறது? எந்த நாட்டிலாவது, ஒரு உள்துறை அமைச்சர் இப்படி மத்திய புலனாய்வு அமைப்பு பற்றி இவ்வளவு கேவலாமாக பேசியிருக்க முடியாது. தனது மாநில போலீஸார் வரம்பு மீறி மேற்கொண்ட செயலை நியாயப்படுத்தும் வகையில் மத்திய அரசு மீது குஜராத் மாநில அரசு பழிசுமத்தியுள்ளது. இது மிகவும் மோசமான முன்னுதாரணம். குஜராத் மாநிலத்தில் போலீஸ் நிர்வாகம் எந்த அளவுக்கு உள்ளது என்பதை இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். நீதிமன்றத்தில் குஜராத் மாநில அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், இஸ்ரத் ஜஹான் மற்றும் அவரது சகாக்கள் மூவரும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் குஜராத் மாநிலத்தில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகக் கூறியிருப்பதையும் சுட்டிக் காட்டியுள்ளது. இதனாலேயே மாநில காவல்துறையினர் என்கவுன்டர் மூலம் அவர்களை சுட்டுக் கொன்றதாகக் குறிப்பிட்டனர். புலனாய்வுத் தகவலை முடிவான ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது. அது வெறும் தகவல்தான். மத்திய புலனாய்வு அமைப்பு தகவலை மாநில அரசிடம் பகிர்ந்து கொண்டுள்ளது. அதுவே ஆதாரமாகாது என்றார் சிதம்பரம். 2004-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி முதல்வர் நரேந்திர மோடியைக் கொல்வதற்கு வந்ததாக இஸ்ரத் ஜாவேத், குலாம் ஷேக் என்கிற பிரானேஷ் குமார் பிள்ளை, அம்ஜத் அலி என்கிற ராஜ்குமார், அக்பர் அலி ராணா என்கிர ஜிசான் ஜோஹர் அப்துல் கனி ஆகியோரை போலீஸôர் நகருக்கு வெளியே சுட்டுக் கொன்றனர்.


[1] http://www.24dunia.com/tamil-news/shownews/……..%AE%BF/409719.html

[2] http://www.indianexpress.com/comments/ishrat-wouldbe-modi-assassin-was-an-let-fidayeen-headly/642435

[3] http://indiatoday.intoday.in/site/Story/104236/India/headley-claims-ishrat-was-lashkar-operative.html

[4] http://www.ndtv.com/article/india/ishrat-jahan-was-an-let-suicide-bomber-headley-to-nia-35665?from=rightpanel

[5] Read more at: http://www.ndtv.com/article/india/ishrat-jahan-was-an-let-suicide-bomber-headley-to-nia-35665?from=rightpanel&cp

[6] http://www.indianexpress.com/news/ishrat-wouldbe-modi-assassin-was-an-let-fidayeen-headly/642435/

[7] தினமணி, புலனாய்வு தகவல்களை மட்டும் வைத்து என்கவுன்டர் நடத்தக் கூடாது‘: சிதம்பரம், First Published : 12 Sep 2009 12:07:00 AM IST

http://www.dinamani.com/edition/story.aspx?Title=……………..MainSectionID=131&SEO=&SectionName=World