Posted tagged ‘இராக்’

மறுபடியும் பாகிஸ்தானில் இன்னொரு ஷியா வழிபாட்டு ஸ்தலத்தின் மீது குண்டுவெடிப்பு தாக்குதல் – 52 பேர் சாவு, 150 படுகாயம், ஐசிஸ் பொறுப்பேற்றுள்ளது!

நவம்பர் 13, 2016

மறுபடியும் பாகிஸ்தானில் இன்னொரு ஷியா வழிபாட்டு ஸ்தலத்தின் மீது குண்டுவெடிப்பு தாக்குதல் – 52 பேர் சாவு, 150 படுகாயம், ஐசிஸ் பொறுப்பேற்றுள்ளது!

explosion-pakistan-718147பல்லாண்டுகளாக ஷியாக்களின் மீது சுன்னிகள் நடத்தி வரும் தாக்குதல்கள்: பாகிஸ்தானில் ஷியா முஸ்லிம்களின் மீதான தாக்குதல் பல்லாண்டுகளாக நடந்து வருகின்றன. ஷியாக்களின் மக்கட்தொகை 10-25% சதவீதங்களில் உள்ளது என்று பாகிஸ்தான் கூறுக் கொள்கிறது. 2015 மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி சுமார் 40 மில்லியன் / நான்கு கோடி ஷியாக்கள் உள்ளதாக சொல்லிக் கொள்கிறது. ஆனால், அவர்கள் இரண்டாந்தர குடிமக்களைப் போலத்தான் நடத்தப் படுகிறார்கள். சுன்னி முஸ்லிம்கள் அவர்களை காபிர்கள் என்றே பிரகடனப் படுத்தி ஜிஹாத் என்ற “புனித போரை” அவர்கள் மீது தொடுத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும். ஷியாக்களின் புனித வழிபாட்டு தினங்களில் அவர்களின் வழிபாட்டு ஸ்தலங்களில் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். முதியவர், பெண்கள், குழந்தைகள் என்று கூடியிருந்தாலும், இரக்கமில்லாமல், குண்டுவெடிப்புகள் மூலம் கொன்று வருகின்றனர்.

pakistan-shrine-731590உலகம் முழுவதிலும் ஷியாக்களின் தாக்குதல் அதிகமாகி வருகின்றது: தலிபான்கள், முஜாஹித்தீன்கள், ஐசிஸ் தீவிரவாதிகள் என்று பல குழுக்கள் வளர்ந்து விட்ட நிலையில், அவர்கள் எல்லோருமே சுன்னிகளாக இருக்கும் பட்சத்தில், ஷியாக்களின் மீதான தாக்குதல்கள் மிகவும் கோரமாக, குரூரமாக, மிருகத்தன்மையுடன் நடத்தப் பட்டு வருகின்றன. இஸ்லாத்தில் இந்த சுன்னி-ஷியா பிளவு சண்டைகள் மொஹம்மது காலத்திலேயே ஆரம்பித்து, தொடர்ந்து நடந்து வருகிறது. முந்தைய இரான்–இராக் சண்டையும் அதனால் தான் நடந்தது. இரானுக்கும், சவுதி அரேபியாவுக்கும் மெக்கா-மெதினா நிர்வகிப்பு விவகாரங்களிலும், இப்பிரச்சினை தலைத் தூக்குவதுண்டு. அதனால், சவுதி அரேபியா இரானைக் கட்டுப் படுத்தி வைக்க எல்லா முறைகளையும் கையாண்டு வருகின்றது.

sufi-shrine-bombed-dawn-1

சனிக்கிழமை 12-11-2016 அன்று மாலை நடத்தப் பட்ட குண்டுவெடிப்பு: வெள்ளிக்கிழமை என்றாலே மசுதிகளில் அல்லது மற்ற இலக்குகளின் மீது குண்டுவெடிக்கும் தாக்குதல் நடக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது. பலோசிஸ்தான் குஜ்தார் மாகாணத்தில் லாஸ்பெல்லாவில் பிரபல தர்கா ஷா நூரனி சூபி வழிபாட்டுத் தலம் உள்ளது[1]. கராச்சியிலிருந்து 150 கிமீ தொலைவில் உள்ளது. இங்கு ஷியாக்கள் அதிகமாக வாழ்கின்றனர் என்பது தெரிந்த விசயமே. பிரதி வெள்ளிக்கிழமை தமால் என்ற சூபி சடங்கை பார்ப்பதற்கு இங்கு ஷியாக்கள் அதிகக் கணக்கில் கூடுவதுண்டு[2]. தமால் என்பது சூபி-நடனமாகும். சூபி பக்தர்கள் சுழன்று கொண்டே ஆடிப் பாடுவர். ஏ. ஆர். ரஹ்மான் சூபி மெட்டுகள் பலவற்றை சினிமா பாடல்களில் உபயோகப்படுத்தியுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது. ஆனால், ஷியாக்கள் தாக்குவதை அவர் கண்டிப்பதாகத் தெரியவில்லை. இங்கு சனிக்கிழமை 12-11-2016 அன்று மாலை சுமார் 500 பேர் தரிசனம் செய்வதற்காக திரண்டிருந்தனர்[3]. அப்போது கோவில் வளாகத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது[4]. இதில், ஏராளமான பக்தர்கள் தூக்கி வீசப்பட்டனர்.

sufi-shrine-bombed-dawn-2

இரவின் இருள், மருத்துவமனை அருகில் இல்லாதது இறப்புகள் அதிகமாக காரணமாகின்றன: சம்பவ இடத்திற்கு போலீசாரும், மீட்புக்குழுவினரும் ஆம்புலன்சுகளுடன் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலர் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தனர். பலர் உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில் உயிருக்குப் போராடினர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்[5]. அருகில் மருத்துவமனைகள் இல்லாத காரணத்தால் காயமடைந்தவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஷியாக்கள் மாகாணம் என்பதால், பாகிஸ்தான் அரசு பாரபட்சத்துடன் நடந்து கொள்கிறதா என்ற சந்தேகமும் எழுகின்றது. இருள் சூழ்ந்த காரணத்தால் மீட்புப் பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது[6]. இந்த குண்டு வெடிப்பிற்கு ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது[7]. ஐ.எஸ் உலகம் முழுவது உள்ள ஷியாக்களை ஒழிப்பதற்கு தயாராக உள்ளது[8]. சிரியாவில் ஷியாக்களைக் கொன்று குவித்து வருகின்றது[9].

sufi-shrine-bombed-dawn-6

52 பேர் சாவு, 150ற்கும் மேற்பட்டவர் படுகாயம்: 12-11-2016 சனிக்கிழமை அன்று 14 வயது சிறுவன், மசூதியில் நடத்திய குண்டு வெடிப்பு தாக்குதலில் குழந்தைகள் உட்பட சுமார் 43 பேர் பலியானதாக அஞ்சப்படுகிறது. நூறுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். நேரமாக-நேரமாக இந்த எண்ணிக்கை அதிகமாகி வருகின்றது. தாக்குதல் நடந்தபோது சுமார் 600 பக்தர்கள் அங்கே இருந்தார்களாம். பாகிஸ்தான் பலுசிஸ்தான் பகுதியில் குண்டு வெடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது[10]. வழக்கம் போல பாக்., அதிபர் நவாஸ் ஷெரிஃப், இம்ரான் கான் போன்றோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்[11].  ஆனால், இதனால், ஷியாக்கள் மீதான தாக்குதல்கள் குறையப் போவதில்லை.

sufi-shrine-bombed-dawn-8

இந்தியாவின் மீது, தமிழகத்தின் மீதான தாக்கம், விளைவு: இந்தியாவில் ஷியாக்கள், சுன்னிகளால் அடக்கி வைக்கப்பட்டுள்ளனர் என்றே தெரிகிறது. தமிழகத்தைப் பொறுத்த வரையில், “ஷிர்க்” என்ற போர்வையில், சுன்னிகள், ஷியாக்களை மிரட்டி வைத்துள்ளனர் எனலாம். ஷியாக்கள் என்று தங்களை அடையாளப் படுத்திக் கொண்டு, யாரும் தங்களது உரிமைகளைக் கேட்பதில்லை. ஆஜ்மீர், நாகூர் போன்ற தர்காக்களில் மொட்டைப் போட்டுக் கொண்டு சென்றலும், அவர்களும், இத்தீவிரவாத-ஜிஹாதி வகையறாக்களைக் கண்டிப்பதில்லை. ஏ. ஆர். ரஹ்மான் போன்றோரும், சுப்பித்துவம், சூபி இசை என்றெல்லாம் பேசி, தனது வியாபாரத்தைப் பெருக்கிக் கொண்டாலும், ஷியாக்கள் தாக்கப்படும் போது, கொல்லப்படும் போது, கண்டு கொள்வதில்லை. கிலாபத் இயக்கத்தை [1919-1922] ஆதரித்ததின் மூலம் காந்தி இந்திய முஸ்லிம்களைப் பிரித்தார். இன்றும் கிலாபத்தை மறுபடியும் நிறுவியதாக கூறிக்கொள்ளும் ஐசிஸ் ஷியாக்களை வேட்டையாடி வருகின்றது. கிலாபத்தை காந்தியும், ஐசிஸும் ஆதரித்தது-ஆதரிப்பது வினோதமே, ஆனால், உண்மை.

 

© வேதபிரகாஷ்

13-11-2016

shia-rights-watch_shia-death-in-july-2015

[1] தினத்தந்தி, பாகிஸ்தானில் பயங்கரம்:பலுசிஸ்தான் மாகாணத்தில் குண்டு வெடிப்பு 30 பேர் பலி, பதிவு செய்த நாள்: சனி, நவம்பர் 12,2016, 7:57 PM IST; மாற்றம் செய்த நாள்: சனி, நவம்பர் 12,2016, 7:57 PM IST.

[2] The Dawn, Tragic scenes at Shah Noorani shrine after bombing, 13th November 2016 | DAWN.COM

http://www.dawn.com/news/1295998/tragic-scenes-at-shah-noorani-shrine-after-bombing

[3] http://www.dailythanthi.com/News/World/2016/11/12195714/Several-feared-dead-in-a-blast-near-Shah-Nooranis.vpf

[4] மாலைமலர், பாகிஸ்தான் வழிபாட்டு தலத்தில் குண்டுவெடிப்பு: 30 பேர் பலி, பதிவு: நவம்பர் 12, 2016 19:58.

[5] http://www.maalaimalar.com/News/World/2016/11/12195838/1050492/At-least-30-killed-in-huge-blast-in-Lasbellas-Shah.vpf

[6] தினமலர், பலுசிஸ்தானில் குண்டுவெடிப்பு: 43 பேர் பலி; பலர் படுகாயம், பதிவு செய்த நாள்: நவம்பர்.12, 2016. 20.00; மாற்றம் செய்த நாள். நவம்பர்.12, 2016.00.34.

[7] http://www.dinamalar.com/news_detail.asp?id=1647324

[8] Express (UK), ISIS bomb at Muslim shrine kills at least 25 people in huge explosion in Pakistan, By KATIE MANSFIELD, 14:17, Sat, Nov 12, 2016 | UPDATED: 20:12, Sat, Nov 12, 2016

[9] http://www.express.co.uk/news/world/731590/explosion-pakistan-shah-noorani-shrine-death-toll-injured

[10] விகடன், பாகிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு – 43 பேர் பலி, Posted Date : 23:16 (12/11/2016); Last updated : 23:15 (12/11/2016).

[11] http://www.vikatan.com/news/world/72258-huge-bomb-blast-in-dargah-shah-noorani-shrine-at-pakistan—43-feared-dead.art

ஏமன் நாட்டு போராளிகள் மெக்காவின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தினரா? அமெரிக்க-சவுதி நாடுகள் ஏமன் நாட்டு உள்விவகாரங்களில் தலையிடுவது.

ஒக்ரோபர் 29, 2016

ஏமன் நாட்டு போராளிகள் மெக்காவின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தினரா? அமெரிக்க-சவுதி நாடுகள் ஏமன் நாட்டு உள்விவகாரங்களில் தலையிடுவது.

huthis-accused-of-attacking-mecca-with-missiles-2

காபாவைக் காப்பவர்கள் யார்?: மெக்காவில் உள்ள காபா, மெதினா முதலியவற்றை இன்று சவுதி அரேபியா தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு நிர்வகித்து வருவதால், இஸ்லாத்தையே தான்தான் காக்கிறது என்பது போல காட்டிக் கொள்கிறது. ஆனால், ஆரம்பத்திலிருந்தே இரானுக்கு இது பிடிக்கவில்லை. ஒவ்வொரு ஹஜ் பயணத்தின் போதும், இந்த வேறுபாடு, ஏதாவது ஒரு வழியில் வெளிப்படும். இரான் முஸ்லிம்கள் பெரும்பாலோர் ஷியா என்பதினால், ஷியா-எதிர்ப்பு மூலம் வெளிப்படும், ஜிஹாதி, இஸ்லாமிய தீவிரவாத கூட்டத்தினர், இயக்கங்கள் முதலியற்றில் அதிகமாக இருப்பது சுன்னிகள் தாம். இதனால் தான், ஐசில் ஜிஹாதிகள் கூட ஷியாக்களைத் தாக்கிக் கொன்று வருகின்றனர். ஒருபக்கம் சுன்னி-ஷியா வித்தியாசம் இருந்தாலும், இவற்றுடன், போராளிகள்-தீவிரவாதிகள் சண்டையும், அமெரிக்க ஆதரவு-எதிர்ப்பு முதலியனவும் பின்னிப் பிணைந்துள்ளன. முன்னர் ஷாவின் ஆட்சியின் போது, அமெரிக்கா இரானுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தது. ஷாவின் ஆட்சி தூக்கியெரியப் பட்டப் பிறகு, அமெரிக்க விரோத கொள்கை பின்பற்ரப்பட்டு வருகின்றது.

houthi-militant

27-10-2016 வியாழக்கிழமை அன்று ஹௌத் போராளிகள் தாக்கினரா?: ஏவுகணையை வீசி தாக்குதல் ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஹவுத்தி இனப்போராளிகளை [Houthi rebels] ஒடுக்க சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் கடந்த ஆண்டு 2015 மார்ச் மாதத்தில் இருந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன[1]. இந்நிலையில், சவுதி அரேபியா நாட்டில் உள்ள இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்காவுக்கு தெற்கில் உள்ள அல்-தைப் [al-Taif] குறிவைத்து இன்று ஏமனில் உள்ள ஹவுத்தி இனப் போராளிகள் சாதா மாகாணத்தில் இருந்து 27-10-2016 வியாழக்கிழமை அன்று ஏவுகணையை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்[2] என்று செய்திகள் வந்துள்ளன.   இந்த ஏவுகணைகள் சி-802 என்ற [Chinese C-802] சைனாவின் கப்பல் தடுப்பு ஏவுகணையின் சிறந்த வகையைச் சேர்ந்ததாகும்.  சைனாவின் ஏவுகணைகள் எப்படி இவர்களுக்குக் கிடைக்கிறது என்பதை கவனிக்க வேண்டும்.

houthi-militant-yemeni-civil-war-position

ஹௌத் என்ற போராளிகள் யார்?: ஹௌத் என்ற போராளிகள் “அன்சார் அல்லா”, கடவுளை ஆதரிப்பவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள், ஷியைத் பிரிவைச் சேர்ந்த ஜெயித் குலத்தைச் சேர்ந்தவர்கள்[3]. சுன்னி முஸ்லிம்களுக்கும், இவர்களுக்கும் சில இறையியல் வித்தியாசங்கள் உள்ளன. 1960களிலிருந்தே, சவுதி அரேபியா, ஏமனின் உள்விவகாரங்களில் தலையிட்டு வருகின்றது. அமெரிக்க-சவுதி அடக்குமுறைகளினால் சுமார் 10,000 மக்கள் இறக்க நேர்ந்துள்ளது. அதில் 4,100 சாதாரண குடிமக்கள் ஆவர். தவிர, 3.2 மில்லியன் / 32,00,000, 32 லட்சம் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். வியாதி போன்றவற்றாலும் பாதிப்புள்ளது[4]. மனித உரிமைகள் பற்றி பேசும் அமெரிக்க இங்கு நடந்துள்ளவற்றிற்கு பொறுப்பேற்பதானால், அமெரிக்கா முதலில் அவ்விடத்தை விட்டு வெளியேற வேண்டும்[5]. சவுதிக்கு ஆதரவு கொடுப்பதையும், ஏமன் நாட்டு விவகாரங்களில் தலையிடுவதையும் நிறுத்திக் கொள்ளவேண்டும் என்றும் விமர்சகர்கள் எடுத்துக் காட்டுகின்றனர்[6].

houthi-militant-attack-mecca

ஏவுகணைகளை உபயோகிப்பதாக ஹௌதி போராளிகளின் மீது குற்றச்சாற்று: ஜூலை 14, 2006 அன்று C-802 ஏவுகணை மூலம் இஸ்ரேலின் ஏவுகணை கப்பலைத் தாக்கி [Israeli missile ship INS Hanit] சேதத்தை ஏற்படுத்தியது என்பதை நினைவு கூற வேண்டும். முதலில் சைனாவின் ஏவுகணைகள் எப்படி, இப்பகுதிகளில் உள்ள தீவிரவாதிகளிடம் வருகின்றன என்பதனை கவனிக்க வேண்டும். தீவிரவாதிகளுக்கு உபயோகமாக அவை உபயோகப்படுத்தப்படுகின்றன என்றால், அமெரிக்கா அதை எதிர்ப்பதில்லை என்பதும் வியப்பான விசயமே. ஆயுத உற்பத்தியைக் குறைக்க வேண்டும் என்று ஒருபக்கம் பிரச்சாரம் செய்தாலும். சைனா போன்ற நாடுகள் ஆயுதங்களை உற்பத்தி செய்து கொண்டுதான் வருகின்றன, அவை, ஜிஹாதிகளுக்கு சென்று கொண்டுதான் இருக்கின்றன. அமெரிக்க-சைன ஆயுத உற்பத்தி, உலகத்தில் எல்லை சண்டைகள், உள்நாட்டு போர்கள், ஜிஹாதி தாக்குதல்கள், ஐசில் போன்ற குரூர கொலைகள்-ஆக்கிரமிப்புகள் முதலியன இருக்கும் வரை, இருந்து கொண்டே இருக்கும். இவர்கள் எல்லோரும் தமது தீவிரவாதத்தை விட்டுவிட்டால், அமெரிக்க-சைன ஆயுத உற்பத்தி தொழிஸ்சாலைகள் எல்லாம் மூடப்படும் நிலை உண்டாகும்!

huthis-accused-of-attacking-mecca-with-missiles

ஹௌதி போராளிகள் குறி வைத்தது மெக்காவா இல்லையா?: ஹௌதி போராளிகள் தாங்கள் மெக்காவைத் தாக்க ஏழுகணைகளை உபயோகித்தனர் என்ற செய்தியை மறுத்துள்ளனர்[7]. இரானும் தங்களுக்கு சம்பந்தம் இல்லை என்று மறுத்துள்ளது. மெக்காவில் இருந்து சுமார் 65 கிலோமீட்டர் [40 miles] தூரத்தில் அந்த ஏவுகணையை சவுதி நாட்டின் விமானப்படைகள் தடுத்துநிறுத்தி, தாக்கி அழித்ததாகவும் சவுதி அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது[8]. சவுதி அரேபியா அமெரிக்க பேட்ரியாட் ஏவுகணைகளை [U.S.-made, surface-to-air Patriot missile batteries]  உபயோகித்தனர். இந்தத் தாக்குதலை உறுதி செய்துள்ள ஹவுத்தி போராளிகள், புனித நகரமான மெக்கா மீது தாக்குதல் தொடுக்கவில்லை என்றும் பரபரப்பாக இயங்கிவரும் ஜெட்டா விமான நிலையத்தைத்தான் குறித்து தாக்குதல் நடத்தியதாகவும் கூறியுள்ளது[9]. மொஹம்மது அல்-பெகைதி [Mohammed al-Bekheity] என்ற ஹௌதி தலைவர், “நாங்கள் மெக்காவுக்கு குறிவைக்கவில்லை. நாங்கள் மக்கம் மற்றும் புனித இடங்களை தாக்குவதில்லை,” என்றார்[10]. இதைப் பற்றி இப்பொழுது சர்ச்சை எழுந்துள்ளது[11].

irans-proxy-missile-as-alleged-by-american-interpretation

ஏமனின் இரானிய எதிர்ப்பு: யாமெனி பிரத மந்திரி அஹமது ஒபெய்த் பின் இத்தகைய தாக்குதலை ஊக்குவிக்க இரானின் மீது குற்றஞ்சாற்றியுள்ளார். “ஏமனில் மார்ச்.26, 2015 அன்று யுத்தம் ஆரம்பித்தது. ஹௌதி போராளிகள் தங்களது அரசியல் போட்டியாளர்கள் மற்றும் அரசிற்கு விரோதமாக போரில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு இரான் அல்லது பெய்ரூட்டிலிருந்து அவர்களுக்கு ஆதரவு கிடைத்து வருகிறது,” என்று பின் தகர் பிரெஞ்சு தூதுவர் ஏமன் கிரிஸ்டியன் திஸ்தியை சந்தித்தபோது கூறினார். இரானின் புரட்சி பாதுகாப்புப் படை [Iranian Revolutionary Guard Corps (IRGC)] மற்றும் ஹிஜ்புல் [Hezbollah] இவ்வாறு செயல்படுவது, அரசியல் திட்டத்தை இவ்வாறு புரட்சியாளர்களின் மூலம் தீர்த்துக் கொள்வதாகத் தெரிகிறது.

houthi-militant-carrying-flag

இரான் நீர்போக்குவரத்து பாதைகளை பிடித்துக் கொண்டு ஆதிக்கம் செல்லுத்த விரும்புகிறாதா?: இரான் பப் அல்-மன்டப் குடாவை [Bab al Mandab Strait] தன்னுடைய ஆதிக்கத்தில் கொண்டு வரவே இத்தகைய செயல்களை செய்து வருகின்றது. ஏனெனில், அதனை பிடித்து விட்டால், சூயஸ் கால்வாயை ஆதிக்கம் செய்யும் நிலை வந்துவிடும்[12]. ஹோர்மூஸ் கால்வாயையும் [Strait of Hormuz] பிடித்து விட்டால், அரேபிய நாடுகளிலிருந்து செல்லும் கப்பல்களை இரன் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடும்[13]. அமெரிக்கா மற்றும் சௌதி அரேபியா பரஸ்பர உடன்படிக்கை 1945லிருந்து 71 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. இத்தகைய நீர்வழி ஆதிக்கத்தின் மூலம், இரான் அந்த ஒப்பந்தத்தை வலுவிழக்கத்தான் திட்டம் தீட்டுகிறது என்று அமெரிக்கா குறை கூறுகிறது[14]. இரான் அமெரிக்காவிற்கு எதிராக தீவிரவாதத்தை உபயோகப்படுத்துகிறது என்று வாஷிங்டன் போஸ்ட் குறைகூறுகிறது.

© வேதபிரகாஷ்

29-10-2016

Middle east - who is for, who is against.jpg

[1] மாலைமலர், மெக்கா நகரம் மீது ஹவுத்தி போராளிகள் ஏவுகணை தாக்குதல்: சவுதி அரேபியா குற்றச்சாட்டு, பதிவு: அக்டோபர் 28, 2016 11:08

[2] http://www.maalaimalar.com/News/TopNews/2016/10/28110835/1047538/Saudi-Arabia-says-Yemen-rebels-fire-missile-toward.vpf

[3] The Houthis, known as Ansar Allah, or “Supporters of God” (who doesn’t claim to be that in the Middle East?), belong to the Zaydi sect, and are Shia-lite, maintaining some theological similarities with Sunnis.

[4] As a result of Washington’s support for Saudi ruthlessness, Yemen has suffered desperately. Roughly 10,000 people, including some 4100 civilians, have died, 3.2 million people (12 percent of the population) have been displaced, pestilence (in the form of Cholera) has hit the capital, and famine approaches, with more than half the population “food insecure,” according to the UN World Food Program. Eight in ten people need some outside aid.

http://www.cato.org/publications/commentary/america-should-quit-saudi-arabias-war-yemen-senseless-killing-must-stop

[5] CATO Institute, America Should Quit Saudi Arabia’s War in Yemen: the Senseless Killing Must Stop, By Doug Bandow, This article appeared in “Forbes” on October 25, 2016.

[6] http://www.cato.org/publications/commentary/america-should-quit-saudi-arabias-war-yemen-senseless-killing-must-stop

[7] The Washington times, Iran’s proxy missile attacks- The Islamic regime seeks control of Middle East waterways, By James A. Lyons – – Tuesday, October 25, 2016

[8] தமிழ்.ஒன்.இந்தியா, மெக்கா மீது ஏவுகணை ஏவிய ஏமன் தீவிரவாதிகள்தடுத்து அழித்த செளதி அரேபியா, By: Amudhavalli, Updated: Friday, October 28, 2016, 20:58 [IST]

[9] http://tamil.oneindia.com/news/international/yemeni-rebels-attack-holy-mecca-265932.html

[10] Mohammed al-Bekheity, a Houthi leader, denied that the missile targeted Mecca. “We do not target civilians and, in turn, we would not target holy areas,” he said.

http://www.aljazeera.com/news/2016/10/yemens-houthis-accused-firing-missile-mecca-161028132859767.html

[11] Al-Jazeera, Yemen’s Houthis accused of firing missiles at Mecca, October.28.11.40 pm

[12] http://www.washingtontimes.com/news/2016/oct/25/irans-proxy-missile-attacks/

[13] IBTimes, Yemen Rebels Target Saudi Holy City Of Makkah; Missile Intercepted And Destroyed, by Marcy Kreiter, 10/27/16 AT 8:48 PM.

[14] http://www.ibtimes.com/yemen-rebels-target-saudi-holy-city-makkah-missile-intercepted-destroyed-2438403

 

ஐசிஸ், அல்-குவைதா, இந்திய முஜாஹித்தீன் – இந்தியாவின் மீதான ஜிஹாதி தாக்குதல் அச்சுறுத்தல் – 712லிருந்து நடந்து வரும் ஜிஹாதிதான் – இந்துக்கள் எதிர்க்கொண்டே ஆகவேண்டிய நிலையாகிறது!

செப்ரெம்பர் 9, 2014

ஐசிஸ், அல்-குவைதா, இந்திய முஜாஹித்தீன் – இந்தியாவின் மீதான ஜிஹாதி தாக்குதல் அச்சுறுத்தல் – 712லிருந்து நடந்து வரும் ஜிஹாதிதான் – இந்துக்கள் எதிர்க்கொண்டே ஆகவேண்டிய நிலையாகிறது!

Propaganda for Jihad in India works differently

Propaganda for Jihad in India works differently

இந்தியாவின் மீது தாக்குதல் நடத்த வீடியோ ஆதாரம் வெளியானது: அய்மன் அல்- ஜவாஹரி [Ayman Al-Zawahari] என்ற அல்-குவைதாவின் படைத்தலைவனின் வீடியோ வெளியானப் பிறகு, இந்தியாவைத் தாக்க ஜிஹாதிகள் ஈடுபட்டுள்ள திட்டங்களைப் பற்றிய விவரங்கள் கிடைத்துள்ளன. ஊடகங்கள் இவற்றை ஏதோ புதியது போல வெளியிட்டு வந்தாலும், இவ்விவரங்கள் கடந்த 60 ஆண்டுகளுக்கு தெரிந்த விசயமே. இந்தியாவை முஸ்லிம் நாடுகளுடன் இணைக்க வேண்டும் என்ற நப்பாசை முஸ்லிம்களுக்கு பாகிஸ்தான் உருவானதிலிருந்தே இருந்து வருகிறது. கஜ்வா-இ-ஹிந்த் [Ghazwa-e-Hind] என்ற பெயரில் இந்தியாவின் மீதான கடைசியான போர் என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளனர். இந்த தீவிரவாத ஜிஹாதி சித்தாந்தம் மூலம் பல முஸ்லிம்களை மதரீதியில் கவர வைத்து, இந்தியாவின் மீதான தாக்குதலை மேற்கொண்டு, அதை காபிர்களின் பிடியிலிருந்து விடுபட வைத்து மறுபடியும், இஸ்லாமிய ஆட்சியை நிறுவ வேண்டும் என்று சொல்லிக் கொண்டு செயல் பட்டு வருகிறது. இந்திய துணைக்கண்டத்தில் ஜிஹாதி அஸ்திவாரம் அமைத்து அதன் மூலம் புனித போரைத் தொடர வேண்டும் [Jamaat Qaidat al-jihad fi’shibhi al-qarrat al-Hindiya or the Organisation of The Base of Jihad in the Indian Sub-Continent] என்று இவ்வியக்கம் தோற்றுவிக்கப் பட்டதாக ஜிஹாதிகள் கூறியிருக்கிறார்கள்[1]. இடைக்காலத்திலிருந்தே முகமதியர் இம்முறையைக் கையாண்டு வந்ததை நினைவுகூர வேண்டும்.

HT news cutting about Jihadi expansion in India

HT news cutting about Jihadi expansion in India

சுன்னிஷியா போராட்டமா, உலகத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலா?: அல்–கொய்தா தலைவன் பின்லேடன் பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத் நகரில் 2011ம் ஆண்டு மே 2–ந் தேதி அமெரிக்க படையினரால் கொல்லப்பட்டான், ஆனால், அவ்வியக்கம் தொடர்ந்து தீவிரவாதத்தை வளர்த்துக் கொண்டுதான் வந்துள்ளது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்பட பல்வேறு மத்திய கிழக்கு பகுதியில் செயல்பட்டு வரும் அல்-கொய்தா தீவிரவாத அமைப்பால்தான் ஐ.எஸ்.ஐ.எஸ். / ஐசிஸ் என்ற தீவிரவாத-பயங்கரவாத இயக்கம் தொடங்கப்பட்டது. அந்த தீவிரவாத இயக்கம் உலக நாடுகளுக்கே பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ். (இஸ்லாமிக் ஸ்டேட் இன் ஈராக் அண்டு சிரியா) என்ற தீவிரவாத இயக்கம் ஈராக் மற்றும் சிரியாவில் நுழைந்து அரசு படைகளை துவம்சம் செய்துவருகிறது. சுன்னி-சன்னி முஸ்லிம்களாக இருக்கும் இவர்கள், ஷியா முஸ்லிம்களைக் கொன்று வருகின்றனர். பாகிஸ்தானிலும் ஷியாக்கள் தொடர்ந்து கொல்லப்பட்டு வருவதை கவனிக்கலாம். இதற்கு பாகிஸ்தானின் ஆதரவும் இருந்து வருகின்றது. முன்பு இராக்-இரான் சணையிட்ட போது, அது உலக யுத்தமாக மாறுமா என்ற யேஷ்யம் இருந்தது. இப்பொழுது, மறுபடியும் இஸ்லாம் தீவிரவாதம் ஐசிஸ் போர்வையில் எல்லைகளைக் கடந்து செயல்பட்டு வருவதாலும், ஷியாக்களைக் கொன்று வருவதாலும், இரான் பதிலுக்கு தாக்குதலை ஆரம்பிக்குமோ என்ற பயம் இருந்து வருகிறது.

Al-Quida plan in India for Jihad

Al-Quida plan in India for Jihad

ஐசிஸ் உலக யுத்தத்திற்கு வழி வகுக்கிறதா?: தற்போது அல்–கொய்தாவை விட மிகவும் கொடிய தீவிரவாத இயக்கமாக கருதப்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தால் ஈராக் தேசமே நிலைகுலைந்து உச்சக்கட்ட குழப்ப நிலையில் தவிக்கிறது. ஐ.எஸ்.ஐ.எஸ்.சின் அபரிமிதமான வளர்ச்சி சவூதி அரேபியா, ஈராக், துருக்கி போன்ற அண்டை நாடுகளின் ஆட்சியாளர்களுக்கும் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால், அந்நாடுகளிலிருந்து தான் அதற்கு பணவுதவி கிடைத்து வருகிறது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். ஹக்கானி என்ற குழுமம் அதிக அளவில் பணவுதவி செய்து வருகிறது என்பது குறிப்பிடட்ய்ஹ் தக்கது[2]. ஒருவேளை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் ஈராக்கை கைப்பற்றி விட்டால் தங்கள் நாட்டின் மீதும் கை வைக்கலாம் என்று கருதி அங்குள்ள ஆட்சியாளர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தை ஒடுக்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறார்கள். அதற்கு எந்த அளவுக்கு பலன் கிடைக்கும் என்பது போகப் போகத்தான் தெரியும். அமெரிக்கா உள்பட உலக நாடுகளும் இந்த புதிய திவீரவாத-ஜிஹாதி தாக்குதல்களை எதிர்க்க களத்தில் இறங்கியுள்ளது.  ஐ.எஸ்.ஐ.எஸ்.சின் வளர்ச்சி மத்திய கிழக்கு பகுதிக்கு மட்டுமின்றி உலக நாடுகளுக்கே அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்று உணரப்பட்டு விட்டது. முஸ்லிம்களும் அதனை உணர்ந்து விட்டார்கள். இந்நிலையில் இந்தியாவில் அல்-கொய்தாவின் கிளை தொடங்கப்படும் என்று அந்த அமைப்பின் தலைவன் அய்மான்-அல்-ஜவாஹிரி மிரட்டல் விடுத்துள்ளான்[3].

IM Al-Quida nexus India

IM Al-Quida nexus India

காலிபைட்டும், இந்தியாவை அதில் சேர்க்க கையாளும் மானசீக முறைகளும்: மியன்மார், அசாம், குஜராத், காஷ்மீரம் முதலிய இடங்களில் முஸ்லிம்களுக்கு இழைக்கப் படும் துன்பங்களுக்கு எதிராக இது செயல்படும் என்று அறிவித்துள்ளார்கள். இது முஸ்லிம்களின் உணர்வுகளைத் தூண்டி விடும் வேலையாக இருக்கிறது. பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பொய்யான புகைப்படங்களை வெளியிட்டு இந்தியாவில் கலவரம் மற்றும் தீவிரவாதத்தையும் வளர்த்து வருகின்றது. அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவன் அய்மான் அல் ஜவாஹிரி பேச்சு அடங்கிய 55 நிமிடம் ஓடுகிற வீடியோ யு-டியுப் உள்ளிட்ட இணையதளங்களில் வெளியாகி உள்ளது[4]. அல் கொய்தா இயக்கத்தின் புதிய கிளை தொடங்கப்பட்டுள்ளது. இது இந்திய துணைக்கண்டத்தில் காயிதத் அல் – ஜிஹாத் என்று அழைக்கப்படும். இது அங்கு புனித போர்க்கொடியை தூக்கிப் பிடிக்கும். இஸ்லாமிய ஆட்சியை திரும்ப கொண்டு வரும். ஷரியத் சட்டத்துக்கு அதிகாரம் வழங்கும். இந்திய துணைக் கண்டத்திற்கு இஸ்லாம் திரும்ப வேண்டும்.

India Today cutting on ISIS-Jihad plot

India Today cutting on ISIS-Jihad plot

ஆசியாவை இஸ்லாம் மயமாக்கும் முயற்சி: ஆக்கிரமிப்புக்கு முன்பு இந்தியா, இஸ்லாமிய உலகின் ஒரு அங்கமாகத்தான் இருந்தது. இந்திய துணைக்கண்டத்தில், பர்மாவில், வங்காளதேசத்தில், அசாமில், குஜராத்தில், ஆமதாபாத்தில், காஷ்மீரில் தீங்குகளிலிருந்து (இஸ்லாமியர்களை) காக்கும். காயிதத் அல் – ஜிஹாத்தில் உள்ள உங்கள் சகோதரர்கள் உங்களை மறக்கவில்லை. அவர்கள் உங்களை அநீதி, ஆக்கிரமிப்பு, துன்புறுத்தல், பாடுகளில் இருந்து விடுவிப்பார்கள். இந்த இயக்கம் இன்றைக்கு தோன்றி விடவில்லை. இது 2 ஆண்டுகளுக்கு மேலாக புனிதப் போராளிகளை திரட்டுவதற்கு எடுத்த முயற்சியின் பலனாக விளைந்திருக்கிறது. இது வெற்றி பெறும். முல்லா உமர் நம்பிக்கையாளர்களின் உத்தரவு இது. ஒசாமா பின்லேடனின் அழைப்பை புதுப்பித்து பிரகடனப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ள அமைப்பு இது. எதிரிகளுக்கு எதிராக புனிதப்போர் தொடுக்க வேண்டும். தனது சொந்த பூமியை மீட்டெடுக்க வேண்டும். தனது இறையாண்மையை மீட்க வேண்டும். என்று வீடியோவில் கூறப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. அல் கொய்தா இயக்கம் புதிய கிளையை தொடங்கியுள்ளது. என்று அமெரிக்க மீடியா மற்றும் உளவுத்துறை தெரிவித்துள்ளது.

Osama and Ayman Al-Zawahari

Osama and Ayman Al-Zawahari

இந்தியாவில் தற்கொலைப் படை உருவாக்கும் முயற்சிகள்: அல்-குவைதா, இந்தியாவில் உள்ள இந்திய முஜாஹித்தீன் மற்றும் தடை செய்யப்பட்டுள்ள சிமி இவற்றின் உதவி கொண்டு ஃபிதாயீன் என்ற தற்கொலைப் படை அமைத்து இந்திய முக்கிய நகரங்களைத் தாக்கும் திட்டம் தெரிய வந்துள்ளது[5]. செயிக் என்ற இந்திய முஜாஹித்தீனின் தொழிற்நுட்ப ஆள் சஹரன்பூர் ரெயில் நிலைத்தில் வெள்ளிக்கிழமை (05-09-2014) அன்று பிடிபட்டான். தில்லி அதில் முக்கிய இடமாக உள்ளது, என்று அவனிடம் விசாரித்ததில் தெரிய வந்துள்ளது[6]. யாசின் பட்கல் பிடிபட்டபோது, இவன் நேபாளத்திற்கு ஓடிச் சென்று விட்டான். 2010ல் ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்பில் உபயோகப்படுத்திய வெடிப்பொருட்களை தான் பெற்றுக்கொண்டதாகவும் ஒப்புக்கொண்டுள்ளான். ஜம்மு-காஷ்மீர், கேரளா, அசாம், குஜராத், தமிழ்நாடு முதலிய மாநிலங்களில் அவர்களுக்கு உதவி கிடைத்து வர் உவதாகவும் தெரிகிறது. இதனால் அம்மாநிலங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கேரளா-காஷ்மீர் ஜிஹாதி இணைப்பு ஏற்கெனவே பல உண்மைகளை வெளிக்காட்டியுள்ளது. அதில் தமிழகத்தின் பங்கும் இருப்பது கவனிக்கத் தக்கது.

Isis targets India

Isis targets India

தேடப்பட்டு வரும் உலக குற்றவாளிகளை தெய்வீக மயமாக்கும் இஸ்லாமிய இறையியல்: அமெரிக்காவால் தேடப்படும் தீவிரவாதிகளின் பட்டியலில் இருக்கும் முதல் நபர் அல்–கொய்தா இயக்கத்தின் தலைவன் அய்மான் அல்–ஜவாஹிரி. இரண்டாவது இடத்தில் இருப்பவன் வேறு யாரும் அல்ல, ஈராக், சிரியா அரசுகளின் கண்களில் விரலை விட்டு ஆட்டிக் கொண்டிருக்கும் அபுபக்கர் அல்–பாக்தாதி தான். சன்னி பிரிவைச் சேர்ந்த இவன், அடுத்த ஒசாமா பின்லேடன் என்று அழைக்கப்படுகிறான். ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு தலைமை தாங்கும் 43 வயதான அல்–பாக்தாதி, பெரும்பாலும் தனது முகத்தை வெளிக்காட்டுவது இல்லை. தனது இயக்க தளபதிகள் மத்தியில் பேசும் போது கூட முகத்தை மூடிக் கொண்டிருப்பான். இதனால் இவரை மாயாவி ஷேக் (‘இன்விசிபிள் ஷேக்’) என்றும் கூறுகிறார்கள்[7]. இவ்வாறுதான் தீவிரவாத இறையியலை பயங்கரவாதிகள் வளர்த்து வருகிறார்கள். இது இஸ்லாமை சித்தாந்தமாகக் கொண்டு வளர்ந்து வரும் இளைஞர்களை எளிதில் ஜிஹாதில் ஈடுபட்டு, ஷஹீதுகளாக மாற வைக்கிறது.

Pan-Islamic jihadi and state assumed

Pan-Islamic jihadi and state assumed

இந்துக்களைக் கொல்ல தயாக இருக்கும் குரூர ஜிஹாதிகள்: ஜிஹாதிகள் இவ்வாறு வெளிப்படையாக இந்தியாவைத் தாக்க வேண்டும், இந்துக்களைக் கொல்ல வேண்டும் என்றெல்லாம் வெளிப்படையாக மிரட்டிக் கொண்டிருந்தாலும், முஸ்லிம் அமைப்புகள் ஏதோ தங்களுக்கு ஒன்றும் தெரியாது என்பது போல ஒரு புறம் ஜிஹாதிகளைக் கண்டிப்பது, மற்றும் இன்னொருப் பக்கம், ஆஹா இதெல்லாம் பிஜேபிக்குத்தான் சாதகமாக அமையும் என்றும் பேசுவதும்[8] படுவேடிக்கையாக இருப்பதுடன், அவர்களது போலியான மனப்பாங்கையும், இரட்டை வேடங்களையும் வெளிப்படுத்திக் காட்டுகிறது. இந்தியாவைப் பொறுத்த வரையில், பெரும்பாலான முஸ்லிம்களின் எண்ணங்களில் ஒரு பக்கம் சந்தோஷமும், அதே நேரத்தில் சுன்னி-ஷியா போராட்டங்கள், அதிகமான ஷியாக்கள் கொல்லப் படுவது, இரானை உசுப்பிடுமோ என்றும் பயந்து கொண்டிருக்கிறார்கள். ஷியாக்கள் பெரும்பான்மையாகக் கொண்ட இரான், இது வரையிலும் அமைதியாக இருப்பது கவனிக்கத் தக்கது.

முஸ்லிம்கள் கோவில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

முஸ்லிம்கள் கோவில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

குரூர ஜிஹாதித்துவத்தை மறைக்க இந்துத்வத்தின் போடும் பழிகள்: இந்துத்வவாதி மோடியின் கீழுள்ள பிஜேபி ஆட்சி இருப்பதினால், “இந்து ராஷ்ட்ரா” என்ற அவர்களது திட்டத்திற்குத்தான் இது உதவும் என்றும் திரித்து முஸ்லிம் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன[9]. சையீத் நக்வி என்றவரும் “ஏற்கெனவே மதரீதியில் பிளவு பட்டுள்ள இந்து-முச்லிம்களிடையே இது மேலும் தீயை வளர்க்கும்”, என்று இதே தோரணையில் எழுதியுள்ளார்[10]. ஆனால், இந்தியாவின் மீது எப்படி முகமதியர்கள் 712லிருந்து தாக்குதல்களை நடத்தியிருக்கிறார்கள் என்ற சரித்திரத்தைப் படித்துப் பார்த்தால், முஸ்லிம்களின் குரூரக்கொலை திட்டம், இந்துக்களை தாக்கியது, கொடுமைப்படுத்தியது, கோவில்களை இடித்தது என்ற பல உண்மைகள் வெளி வரும். ஆகவே, முகமதியர்கள் / முஸ்லிம்கள் ஏதோ சாத்துவிக சித்தர்கள், அஹிம்சை புத்தர்கள் என்ற ரீதியில் இவர்கள் வக்காலத்து வாங்கிக் கொண்டு வருவது மிகக்கேவலமான பிரச்சாரம் ஆகும். முதலில் இத்தகைய ஜிஹாதிகளை ஒழிக்க வேண்டும் என்று அவர்கள் குரல் கொடுக்க வேண்டுமே தவிர மறைமுகமாக அவர்களது குரூரச் செயல்களை நியாயப்படுத்துவது அவர்களுடன் சேர்ந்து செயல்படுவது போலத்தான் ஆகும்.

 Yasin Bhatkal arrested

712லிருந்து நடந்து வரும் ஜிஹாதிதான்இந்துக்கள் எதிர்க்கொண்டே ஆகவேண்டிய நிலையாகிறது!: இடைக்காலத்தில் இந்தியர்களின் / இந்துக்களின் ஆட்சியாதிக்கம் மத்தியத் தரைக் கடல் பகுதிகளில் இருந்து வந்துள்ளது. இஸ்லாம் வளர்ந்து கிழக்குப் பக்கம் பரவ ஆரம்பித்த போது, அது இந்தியர்களின் ஆதிக்கத்தைக் குறைக்க ஆரம்பித்தது. திடீரென்று தாக்கி கொள்ளை-கொலைகளில் ஈடுபட்டு வந்த முகமதிய படைகள் என்றுமே வஞ்சக முறைகளைத் தான் கையாண்டு வந்துள்ளன. 700 ஆண்டுகள் ஆட்சி, ஐரோப்பியர்கள் / இங்கிலாந்துவாசிகளிடம் சென்று, விடுதலைப் பெற்றப் பிறகு, இந்தியாவை காலிபைட்டில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் முஸ்லிம்களுக்கு இருந்து வந்துள்ளது. இதற்கு “கிலாபத் இயக்கத்திற்கு” காந்தி ஆதரவு தெரிவித்ததும் தீயில் எண்ணையை வார்த்தது போலாகியது. இப்பொழுதைய காலக் கட்டத்தில் ஐசிஸ் கிலாபத்தை மறுபடியும் நிலைநிறுத்த பாடுபடுவதும், காந்திய ஆதரவையும் கூர்மையாக ஆராய வேண்டியுள்ளது. செக்யூலரிஸவாதிகள் மேற்குறிப்பிட்டபடி, இந்துத்வத்தை குறைகூறி, இந்த குரூர-பயங்கரவாதத்தை ஆதரிக்க இப்பொழுதே ஆரம்பித்து விட்டன. இனி இந்திய ஊடகங்களில் அத்தகைய பிரச்சாரங்கள் அதிகமாகும். வழக்கம் போல கம்யூனிஸ்டுகளும் தங்களது வலையை வீச ஆரம்பிப்பார்கள். இஸ்லாமிய நிதியுதவி, வழ்க்ஷக்கம் போல கிடைக்கும். எனவே இந்துக்கள் தங்களது மீதான தாக்குதலை, புதிய யுத்தமுறையை நன்றாகப் புரிந்து கொண்டு, இத்தகைய விஷமப்பிரச்சாரவாதிகளை வெளிக்காட்ட வேன்டும், தனிமைப் படுத்த வேண்டும்.

வேதபிரகாஷ்

08-09-2014

[1] http://www.firstpost.com/india/al-qaeda-threat-not-just-kashmir-kerala-could-be-a-terror-hot-spot-too-1700487.html

[2] Gretchen Peters, Haqqani Network Financing: The Evolution of an Industry, Harmony Program, Combating Terrorism Centre, USA, 2012.

[3] http://www.dailythanthi.com/News/World/2014/09/04084404/Al-Qaeda-Announces-India-Wing—Ayman-al-Zawahri.vpf

[4] http://www.dailythanthi.com/News/India/2014/09/05144641/We-are-prepared-to-face-al-Qaeda-threat-IAF-chief.vpf

[5] http://www.deccanchronicle.com/140908/nation-crime/article/al-qaeda-plans-raise-suicide-squads-india-help-im-and-banned-simi

[6] http://www.deccanchronicle.com/140908/nation-crime/article/indian-mujahideen-operative-reveals-delhi-was-next-hit

[7] http://www.dailythanthi.com/News/World/2014/09/04084404/Al-Qaeda-Announces-India-Wing—Ayman-al-Zawahri.vpf

[8] http://gulfnews.com/opinions/columnists/al-zawahiri-s-call-will-only-make-things-easier-for-bjp-1.1381940

[9] Saeed Naqvi, Al Zawahiri’s call will only make things easier for BJP, Published: 20:00 September 7, 2014, http://gulfnews.com/opinions/columnists/al-zawahiri-s-call-will-only-make-things-easier-for-bjp-1.1381940

[10] http://www.risingkashmir.com/can-zawahiri-add-to-communal-cauldron-already-full/