Posted tagged ‘இமாம் கவுன்சில்’

சதாம் ஹுஸ்ஸைன் பீகாரிலிருந்து வந்து பண்ருட்டியில் இமாம் ஆனது, பெண் தொடர்பு விசயத்தில் தகறாரு-விரோதம்-கொலை!

ஓகஸ்ட் 17, 2020

சதாம் ஹுஸ்ஸைன் பீகாரிலிருந்து வந்து பண்ருட்டியில் இமாம் ஆனது, பெண் தொடர்பு விசயத்தில் தகறாருவிரோதம்கொலை!

Imam murder, DM, 17-08-2020
ஏரியில் அடையாளம் தெரியாத பிணம் கிடந்தது (13-08-2020): கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது பெரியப்பட்டு ஏரி. அந்த ஏரிக்கரைப் பகுதியில் நேற்று முன்தினம் மாலை 13-08-2020 அன்று, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கைகள் கட்டப்பட்ட நிலையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்[1]. இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து அந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்[2]. மக்கள் நெருக்கமாக வசிக்கும் நகரங்களில், அவ்வாறு, ஒருவன் காணாமல் போவது, ஏரியில் பிணமாகக் கிடப்பது, அதிலும், “ஒருவர் கைகள் கட்டப்பட்ட நிலையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு பிணமாக” கிடப்பது சாதாரணமான விசயம் இல்லை.

Pallivasal Murasu, 15-08-2020-1

கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தது யார்? (14-08-2020): அடையாளம் குறித்து, நபர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்டவர் கடலூர் மாவட்டம் பண்ருட்டி ரஹ்மத் நகரை சேர்ந்த முகமது பராக் மகன் சதாம் உசேன் (வயது 33) என்பது தெரியவந்தது. மேலும் இவர் பீகார் மாநிலத்தில் இருந்து 10 ஆண்டுகளுக்கு முன்பு பண்ருட்டிக்கு வந்துள்ளார் என்றும் தற்போது பண்ருட்டி ஆர்.எஸ். சம்சுதீன் பள்ளிவாசலில் இமாமாக பணி செய்து வருவதாகவும் தெரியவந்துள்ளது. அதாவது, இப்பொழுதெல்லாம், தமிழகத்தில் இமாமாக இருக்க, பிகாரிலிருந்து எல்லாம் ஆட்கள் வரவழைக்கப் படுகிறார்கள் போலும். இங்கு இருப்பவர்கள், இம்மாம் பயிற்சி கொடுக்கப் படவில்லை போலும். இறந்த சதாம் உசேனுக்கு மனைவி ஷல்பா பானு, 25; மகன்கள் யாகூப், 7; அப்துல், 3; மகள் ஆசியாபானு, 5; ஆகியோர் உள்ளனர்[3]. இவர் கடந்த 13ம் தேதி இரவு முதல் காணவில்லை என அவரது குடும்பத்தினர் தேடி வந்துள்ளனர்[4]. இந்த நிலையில்தான் பெரியபட்டு ஏரியில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இவருக்கு ஷல்பாபானு என்ற மனைவியும், இரு மகன்கள், ஒரு மகன் ஆகியோர் உள்ளனர்.

Pallivasal Murasu, 15-08-2020-2

மருத்துவ பரிசொதனைக்குப் பிறகு உடல் ஒப்படைக்கப் பட்டது: இந்த நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சதாம் உசேன் உடல் பிரேத பரிசோதனை முடிந்து நேற்று மாலை 14-08-2020 அவரது உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் கொலையாளிகளை கைது செய்யாத வரை உடலை வாங்க மாட்டோம் என சதாம் உசேனின் உறவினர்கள் மறுத்துள்ளனர். போலீசார் சமாதான பேச்சு நடத்தியும் சமரசம் ஏற்படாமல் உடலை வாங்காமல் சென்றுள்ளனர். தற்போது போலீசார் கொலையாளியை நெருங்கி விட்டதாக கூறுகின்றனர் விரைவில் கொலையாளிகள் யார் எதற்காக சதாம் உசேன் கொலை செய்யப்பட்டார் என்ற உண்மைகள் வெளிவரும் என்கிறது போலீஸ் தரப்பில். ஜமாத்துக்கு, பள்ளிவாசலுக்கு, இமாம் கவுன்சில் போன்ற அமைப்புகளுக்கு, வெளியூரில் இருந்து வரும் ஆட்கள், இமாம் ஆகி என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று தெரியாதா? மனைவிக்கு, கணவன் செய்து கொண்டிருந்தான் என்று தெரியாதா? பிறகு, எதற்கு இந்த ஆர்பாட்டம் எல்லாம்?

All India Imam Council, Panruti Imam murder 13-08-2020

பள்ளிவாசல் இமாமை கழுத்தை அறுத்து கொலை செய்த வழக்கில், சிறுவன் உட்பட மூன்று பேரை, போலீசார் கைது:  பள்ளிவாசல் இமாமை கழுத்தை அறுத்து கொலை செய்த வழக்கில், சிறுவன் உட்பட மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை தாலுகா, பெரியபட்டு ஏரியில், கடந்த 14ம் தேதி, ஒருவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்[5]. திருநாவலுார் போலீசார் விசாரித்ததில், கொலை செய்யப்பட்டவர், கடலுார் மாவட்டம், பண்ருட்டியை சேர்ந்த சதாம் உசேன், 33, என தெரிந்தது[6]. இவர், பண்ருட்டி எல்.என்.புரம் பள்ளிவாசலில் இமாமாக இருந்துள்ளார். தொடர் விசாரணையில், –

  1. எலவனாசூர்கோட்டை காசிம் அன்சாரி, 35,
  2. அஷரப் அலி, 20,
  3. ………………………………….மற்றும்,
  4. 15 வயது சிறுவன்

உட்பட நான்கு பேர் சேர்ந்து, கொலை செய்தது தெரிந்தது. சிறுவன் உட்பட மூவரை கைது செய்து, மூன்று கத்திகள், ஒரு பைக்கை பறிமுதல் செய்தனர்; ஒருவரை தேடி வருகின்றனர். எஸ்.பி., ஜியாவுல்ஹக் கூறுகையில், “சதாம் உசேன், காசிம் அன்சாரி இடையே, பெண் தொடர்பாக தகராறு ஏற்பட்டு, முன்விரோதம் உள்ளது. இதனால், காசிம் அன்சாரி மற்றும் கூட்டாளிகள் சேர்ந்து, சதாம் உசேனை ஏரிக்கு அழைத்துச் சென்று, கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர்,” என்றார். கொலையாளிகள் கைது செய்யப்பட்டதை அடுத்து, சதாம் உசேன் உடலை, உறவினர்கள் வாங்கி சென்றனர்.

Panruti Imam murder 13-08-2020

ஏதோ இமாமை வேறு யாரோ கொலை செய்து விட்டது போன்ற அறிக்கைக்கள் முதலியன: முஸ்லிம்கள் நிறுவன ரீதியில் கட்டுப் பட்டு செயல்பட்டு வருகின்ற நிலையில், எந்த முஸ்லீமும், தன்னிச்சையாக எதையும் செய்து விட முடியாது. பீகாரிலிருந்து, ஒரு முஸ்லிம் இங்கு வந்து இமாம் ஆகியிருக்கிறான் என்றால், அவர்களுக்கு எல்லாமே தெரிந்திருக்கிறது. அகில் இந்திய இமாம் கவுன்சில் கண்டனம் தெரிவிக்கிறது. முஸ்லிம் தலைவர்கள், வழக்கம் போல, லட்சங்களில் இழப்பீடு, அரசு வேலை கொடுக்க வேண்டும் என்றெல்லாம் கோரிக்கைகள் விடப்பட்டன[7].  அந்த இடங்களில் உள்ள முஸ்லிம்கள் எல்லோரும் பரபரப்புக்கு உள்ளாகினர். என்று செய்தி வெளியிட்டனர்[8]. இமாம் ஏன் இன்னொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தான் என்பதெல்லாம் அவர்கள் கண்டுகொள்ளைல்லை. கோவில் பூஜாரி, பள்ளிவாசல் சாமியார் அவ்வாறு செய்யலாமா என்று தெரியவில்லை. ஆக விவகாரங்களை மறைத்து, இம்மாமை வேறு யாரோ கொலை செய்து விட்டது போன்ற பிரமிப்பை உண்டாக்கும் அறிக்கைகள் ஏன் என்று தெரியவில்லை. எல்லாமே, அவர்களது உள்-பிரச்சினை என்றால், அவ்வாறே இருக்க வேண்டும். ஆனால், போலீஸ் ஷ்டேசனுக்கு வருகிறது, எனும் போது, விவரங்கள்-விவகாரங்கள் தெரியத்தான் செய்யும். செக்யூலரிஸ ரீதியில் தான் செய்திகள் இருக்கும்.

One nation, country, law

செக்யூலரிஸம், கம்யூனலிஸம், சட்டம், பாரபட்சம் முதலியன: செக்யூலரிஸ நாட்டில், இத்தகைய, மதரீதியில் உள்ள நீதிமன்ற போன்ற அமைப்புகள் தடுத்து, ஒழிக்கப் பட வேண்டும். இந்திய குடிமகன்கள் இவ்வாறு, இரண்டுவ்த சட்டதிட்டங்களூக்கு உட்பட்டவராக இருக்க முடியாது. சாதகமாக உள்ளது என்றால், இந்திய சட்டங்களுக்கு வருவது, இல்லையெனில், ஜமாத் என்ற முறையில், எல்லாவற்றாஇயும் மறைத்து இருப்பது, பெரிய பிரச்சினை ஆகும் போது, நீதிமன்றங்களை அணுகுவது, இந்திய சட்டதிட்டங்களுக்குப் படி அடந்து கொள்வேன் என்பது போன்ற நிலைப்பாடு, செக்யூலரிஸத்தை ஏற்கெனவே அறித்து விட்டது. “ஒரே நாடு, ஒரே சட்டம்” என்றெல்லாம் பேசியோ, விளம்பரம் படுத்தியோ, செய்து கொண்டிருப்பதால் ஒன்றும் செயல்படுத்த முடியாது. சட்டங்கள் எல்லா இந்திய பிரஜைகளுக்கும் அமூல்படுத்த வேண்டும். அப்பொழுது தான், உண்மையான செக்யூலரிஸ உருவாகும்.

© வேதபிரகாஷ்

17-08-2020

One nation, country, law-Imam council

[1] நக்கீரன், கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டவர் அடையாளம் தெரிந்ததுபண்ருட்டி அருகே பரபரப்பு, எஸ்.பி. சேகர், Published on 16/08/2020 (20:07) | Edited on 16/08/2020 (20:11),

[2] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/panruti-ulundurpet-incident-police-investigation

[3] தினமலர், திருநாவலுாரில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டவர், Added : ஆக 16, 2020 01:20

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=2595861

[5] தினமலர், இமாம் கொலை: 3 பேர் கைது, Added : ஆக 17, 2020 00:21

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=2596277

[7] பள்ளிவாசல் முரசு, பண்ருட்டியில் இமாம் படுகொலை : ஜனநாயக மக்கள் எழுச்சி கழக தலைவர் காயல் அப்பாஸ் கடும் கண்டனம் !, August 15, 2020 • M.Divan Mydeen.

[8]https://pallivasalmurasu.page/article/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-:-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-!/BxdNu8.html

One nation, country, law-Imam council-2

தாலிபன் மாதிரி நீதிமன்றங்கள் கேரளாவில் செயல்படுவது எப்படி?

ஜூலை 28, 2010

தாலிபன் மாதிரி நீதிமன்றங்கள் கேரளாவில் செயல்படுவது எப்படி?

முஸ்லீம் பிரச்சினைகளுக்கு தனியாக நீதிமன்றங்கள் கேரளாவில் உள்ளனவா? ஜோஸப் தாக்கப்பட்டதற்குப் பிறகு, இத்தகைய வி னா எழுகிறது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆர்யடன் முஹமது, தாலிபன் மாதிரி நீதிமன்றங்களை முஸ்லீம் அமைக்கள் நடத்தி வருவதாக விக்ஷேனம் என்ற நாளிதழில் முதலில் செய்தி வெளி வந்தது[1]. அதற்குப் பிறகு, மாத்ருபூமியில் தொடர்ந்து விவரங்கள் வெளியிடப்பட்டன, என்று குறிப்பிட்டு அரசாங்கத்தின் இதைப் பற்றிய செயல்பாட்டினை கேட்டார்[2]..

தார் உல் கடா நீதிமன்றங்களும், தண்டனைகளும்: தார் உல் கடா என்ற தாலிபன் மாதிரி நீதிமன்றங்களை பாப்புலர் பிரென்ட் கேரளாவில் இணையாக நடத்திவந்தன மற்றும் அவையே முஸ்லீம்கள் சம்பந்தப்பட்டுள்ள வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கி வருகின்றன[3] என்ற குற்றச்சாட்டில், அரசாங்கம் பரிசீலித்து வருகிறது என்று கொடியேரி பாலகிருஷ்ணன் என்ற அமைச்சர் கூறியுள்ளார்[4]. அத்தகைய கமிட்டிகள் சில பகுதிகளில் இருந்தாலும்[5], இதுவரை அரசிற்கு அத்தகைய தகவல் எதுவும் வரவில்லை என்கிறார்[6]. இமாம் கவுன்சில் என்ற பெயரிலும் சில செயல்கள் நடந்து வருகின்றன[7]. நிச்சயமாக அரசாங்கம் அத்தகைய நீதிமுறையை அனுமதிக்காது[8]. மலபார் பகுதிகளில் ஆறு அமைப்புகள் அவ்வாறு செயல்படுகின்றன. ஆனால், அவை அடிக்கடி தமது பெயர்களை மாற்றிக் கொள்கின்றன – கருணா ஃபௌண்டேஷன், சம்ஸ்கார வேதி என பல பல பெயர்களில் உலாவருகின்றன்[9]..


[1] http://economictimes.indiatimes.com/news/politics/nation/Kerala-looking-into-reports-of-Taliban-style-courts/articleshow/6223380.cms

[2] Congress legislator Aryadan Mohammed. Mohammed said the first such report of a Taliban style court appeared in Veekshenam daily this month and was followed by a series of reports in Mathrubhoomi daily.

[3]

[4] http://www.thehindu.com/news/states/kerala/article536784.ece

[5] http://www.hindustantimes.com/Kerala-to-probe-Taliban-courts/Article1-578643.aspx

[6] Popular Front of India that were reported to have organised parallel courts called ‘Dar ul Khada’ in different parts of the State.

[7] he Popular Front of India had claimed that such courts were under the Imam council, which was under the AIMPLB.

[8] http://www.centralchronicle.com/viewnews.asp?articleID=42866

[9] They regularly change names to evade monitoring. Some have benevolent-sounding names such as Karuna Foundation (meaning Compassion Foundation) or Samskara Vedi (an organisation that imparts morals and values).The police said they had found several incriminating documents from the office of Karuna Foundation recently.