மதுரையில், தமிழகத்தில் துலுக்கர் வருகை, ஆதிக்கம் மற்றும் விளைவுகள்: திருப்பரங்குன்றத்தின் மீது தர்கா உண்டானது, தீபம் ஏற்றுவது தடைப் பட்டது (3)
துருக்கரின் குரூர மாபாதக செயல்கள் – இபின் பதூதாவின் புத்தகத்தின்படி[1]: இபன்பதூதா மொராக்கா நாட்டைச் சேர்ந்தவன். சிறந்த கல்வியாளன் ஆவான். இவன் பல நாடுகளைச் சுற்றி விட்டுக் கி.பி. 1333இல் டெல்லி வந்தான். இவன் தம்கானியினது மனைவியின் சகோதரியை மணந்தவன் ஆவான். இவன் கி.பி.1334 முதல் 1342 வரை இந்திய நகரங்கள் பலவற்றைச் சுற்றிப் பார்த்துவிட்டு இறுதியில் மதுரை வந்தான். தம்கானியின் நெருங்கிய உறவினனாக இருந்தாலும், தம்கானி பாண்டிய நாட்டில் கொடுங்கோல் ஆட்சி புரிந்ததைத் தனது குறிப்பில் இபன்பதூதா விரிவாகக் கூறியுள்ளான். தம்கானி இந்துப் பெண்களைக் கொன்று குவித்தான்; ஆண்களைக் கழுவில் ஏற்றினான்; தாயின் மார்பிலே பால் உண்டு கொண்டிருந்த பச்சிளங் குழந்தைகளை வாளால் வெட்டிக் கொன்றான். தான் கொன்று குவித்த மக்களின் தலைகளைக் கொய்து மாலைகளாகக் கோத்துச் சூலங்களில் தொங்க விட்டான். இவற்றை எல்லாம் இபன்பதூதா தனது குறிப்பில் விவரித்துள்ளான். கடைசிக் காலத்தில் தம்கானி காலராநோய் வாய்ப்பட்டு இறந்தான். கொடுமைகள் நிறைந்த கியாஸ் உதீன் தம்கானிக்குப் பின்பு நாசீர்உதின், அடில்ஷா, பக்ருதீன் முபாரக் ஷா, அலாவுதீன் சிக்கந்தர்ஷா ஆகியோர் ஆண்டனர். இவர்களது ஆட்சி கி.பி.1345 முதல் 1378 வரை மதுரையில் நடந்தது.
மதுரை சூரையாடியதைப் பற்றி கங்காதேவியின் விளக்கம்[2]: கங்கா தேவி தனது மதுரா விஜயம் என்ற நூலில், இவ்வாறு மதுரைவாசிகளின் நிலையை பதிவு செய்துள்ளார்[3], “கோவில்கள் கவனிப்பாரற்றுக் கிடந்தன, அவற்றில் வழிபாடுகளும் நிறுத்தப்பட்டன. ……….மதுரையைச் சுற்றியுள்ள தோட்டங்கள் எல்லாம் சீரழிந்து கிடந்ததைப் பார்க்கும் போது மிக்கத் துயராமாக இருந்தது. ………………….எல்லா புறங்களிலும் வரிசையாக கொம்புகள் நடப்பட்டிருந்தன, அவற்றில் மனித மண்டையோடுகள் செருகப்பட்டிருந்தன. ……………..தாமிரபரணி ஆற்றில் பசுக்களின் ரத்த ஓடிக் கொண்டிருந்தது. வேதங்கள் மறக்கப்பட்டன நீதி ஓடிவொளிந்து கொண்டது……………திராவிடவாசிகளின் முகங்களில் சோகமு அப்பிக் கொண்டிருந்தது.” அந்நூல் பாண்டியரது மிகப்பழமை வாய்ந்த, பாரம்பரிய அரசு கத்தி எவ்வாறு கம்பண்ணாவிடம் சென்று விட்டது என்பதையும் குறுப்பிடுகிறது. பாண்டியர் தமது சக்தியை இழந்ததால், அகத்தியர் கொடுத்த கத்தி, கம்பண்ணாவிடம் சென்று விட்டது. பாண்டியரால் முடியாததால், மதுரையை துலுக்கர்களிடமிருந்து மீட்கும் பணிக்காக அது அவனிடம் சென்று சேர்ந்தது[4]. ஆக மொத்தத்தில், மதுரை மற்றும் சுற்றியுள்ள இடங்களில் உள்ள கோவில்கள் துலுக்கரால் கொள்ளையடிக்கப் பட்டது, இடிக்கப்பட்டது, நிரூபனமாகிறது.
விஜயநகர பேரரசு [1336-1646] முதல் நாயக்கர் காலம் வரை: விஜயநகர பேரரசு 1336-1646 வரை சிறந்து விளங்கி, துலுக்கரால் அழிக்கப்பட்ட, ஆயிரக்கணக்கான கோவில்கள் புனர் நிர்மாணம் செய்யப்பட்டன. 300 வருட ஆட்சியில், தென்னிந்தியா பல வழிகளில் சிறந்தோங்கியது. துலுக்கர்களுக்கும் படை, அரசு முதலியவற்றில் வேலைகள் கொடுக்கப்பட்டது. அவர்கள் நாணயமாக செயல்பட்டனரா அல்லது ரகசியங்களை அவ்வப்போது, துலுக்க அரசுகளுக்கு தெரிவித்தனரா என்பது கேள்விக்குரியது. இருப்பினும், 1565ல் தலைக்கோட்டைப் போரில், பீஜப்பூர், பீடார், பேரார், அஹமது நகர், கோல்கொண்டா, முதலிய கூட்டு சுல்தான் படைகளால், விஜயநகர பேரரழு வீழ்த்தப்பட்டது, நகரமே சூரையாடப் பட்டது. பொதுவாக இவர்களின் ஆட்சியில் சமயச்சார்பின்மை காணப்பட்டது என்று இக்காலத்து செக்யூலரிஸ எழுத்தாளர்கள் பறைச்சாற்றிக் கொண்டலும்[5], 1347-1527 வரை நடந்த இவர்களது ஆட்சியில், தக்காணப் பகுதியிலுள்ள பகுதிகள், அதிக அளவில் சூரையாடப்பட்டன. அவ்விழிவிகளிலிருந்து தான், இப்பொழுதைய சரித்திரமே எழுதப் பட்டுள்ளது. பிறகு நாயக்கர்கள் ஆட்சியில், ஓரளவிற்கு, உயிர்த்தெழுந்தது. அவர்களால் மறுபடியும் கோவில்கள் புனர் நிர்மாணம் செய்யப்பட்டன. பிறகு ஆங்கிலேயர் ஆட்சி வந்தாலும், ஓரளவிற்கு, சுரண்டல்கள் அவர்களின் யுக்திகளில் நடந்தேறின. சுதந்திரம் பிறகும் நிலைமை மாறாவில்லை.
சுதந்திரத்திற்குப் பிறகு செக்யூலரிஸமும், ஜிஹாதி பயங்கரவாதமும் சேர்ந்த நிலை: அப்பொழுது துலுக்கர் குதிரைகள் மீது வந்து கொள்ளையடித்தனர் என்றால், இப்பொழுது, கடைகள் வைத்துக் கொண்டு, கள்ளக்கடத்தல், பதுக்கல், போலிப் பொருட்கள், கள்ளப்பணம், ஹவாலா, வரியேய்ப்பு முதலியவற்றில் ஈடுபட்டு பொருளாதாரத்தை சீரழித்து வருகின்றனர். அரசியல்வாதிகள், அதிகாரிகள் முதலியோரை வளைத்துப் போட்டு, தங்களது சட்டமீறல் காரியங்களுக்கு உபயோகப்படுத்திக் கொள்கின்றனர். கோவில் கொள்ளை இப்பொழுது, வேறு விதமாக நடந்து வருகிறது. முதலில், கிராமப் புறங்கள், ஒதுக்குப் புறமாக இருக்கும் கோவில்களுக்கு அருகில் குடிசை போட்டுக் கொண்டு வாழ ஆரம்பிக்கின்றனர். பிறகு மின்சார இணைப்பு முதலியவற்றைப் பெற்று, பட்டா வாங்கிக் கொள்கின்றனர். குடிசை வீடுகளாகி, மசூதியும் கட்டிக் கொள்கின்றனர். கோவில் நிலம், அருகில் உள்ள மண்டபங்கள் முதலியவற்றை அப்படியே ஆக்கிரமித்துக் கொண்டு மாற்றி விடுகின்றனர். கடந்த 150 ஆண்டுகளாக, இந்த முறைதான் கையாளப்பட்டு வருகின்றது, இனி, திருப்பரங்குன்ற தர்கா விசயத்தைப் பார்ப்போம்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் ‘குதிரை சுனை திட்டு’ எனும் பகுதியில் ஒரு பெரிய விளக்குத் தூண்: இவ்விவரங்கள் “விஜய பாரதம்” இதழில் வந்துள்ளது என்று இணைய தளத்தில் உள்ளதை அப்படியே எடுத்துக் கொண்டு அலசப் படுகிறது. திருப்பரங்குன்றம், அறுபடை வீடுகளின் முதல் படைவீடு. முருகப்பெருமான் தெய்வயானையைத் திருமணம் செய்து கொண்ட புனிதத் தலம். இங்குள்ள மலை உச்சியில் கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்ற வேண்டும் என்ற ஹிந்து சமுதாயத்தின் அபிலாஷையை பிரதிபலிக்கும் வகையில் ஹிந்து முன்னணி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது. இது பற்றிய விபரங்களை ஹிந்து முன்னணி மாநிலச் செயலாளர் மதுரை முத்துக்குமாரிடம் கேட்டபோது அவர் தெரிவித்த கருத்துக்கள்…. – ஆசிரியர் [விஜயபாரதம்].
நின்றுபோன கார்த்திகை தீபம்: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் ‘குதிரை சுனை திட்டு’ எனும் பகுதியில் ஒரு பெரிய விளக்குத் தூண் இன்றும் உள்ளது. பல்லாண்டுகளாக அந்த விளக்குத் தூணில்தான் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வந்தது. இரண்டாம் உலகப்போர் நடைபெற்றபோது, அன்றைய ஆங்கிலேய அரசு, மலை உச்சியில் தீபம் ஏற்றுவதைத் தடை செய்தது. அதனால், அந்த வருடம் அந்த இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றவில்லை. மலை ஏறுவதில் சிரமம் இருந்ததால், அடுத்து வந்த ஆண்டுகளில் நமது கோயில் சிவாச்சாரியார்கள் கார்த்திகை தீபம் ஏற்றுவதையே நிறுத்திவிட்டார்கள்.
மலையில் பச்சை பிறைக் கொடி: முஸ்லிம்கள் சிலர் மலை மீதேறி சில பகுதிகளை ஆக்கிரமிக்கத் துவங்கினர். ‘சிக்கந்தர்’ என்பவருடைய பிணத்தைப் புதைத்து, அங்கு ஒரு தர்காவைக் கட்டி சிக்கந்தர் தர்கா என்று பெயர் சூட்டினர். அதுமட்டுமல்லாமல், மலைப் பகுதிகளையே சிக்கந்தர் மலை என்று அழைக்கத் துவங்கினர். மலை உச்சியில் உள்ள மரங்களில் முஸ்லிம்களின் பச்சை நிற பிறைக் கொடியைப் பறக்கவிட்டனர். அன்றைய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் சின்ன கருப்பத் தேவர் மக்களைத் திரட்டி மலை மீது சென்று, பச்சைக் கொடிகளை அகற்றிவிட்டு தேசியக் கொடியை ஏற்றிவிட்டு வந்தார். திருப்பரங்குன்ற மலை மீதுள்ள முஸ்லிம்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, தொடர்ந்து அவரது தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்றது. 700 பேர் கைதானார்கள். சட்டம், ஒழுங்கு பிரச்சினை உருவாகிறது என்றவுடன் முதல்வர் ஆந்திர கேசரி பிரகாசம் நேரில் வந்து சின்ன கருப்பத் தேவரை சந்தித்து மிரட்டி போராட்டத்தை வாபஸ் வாங்க வைத்தார்.
© வேதபிரகாஷ்
06-12-2017
[1] http://www.tamilvu.org/courses/degree/a031/a0313/html/a0313333.htm
[2] Madurā Vijayam (Sanskrit: मधुरा विजयं), meaning “The Conquest of Madurai”, is a 14th-century C.E Sanskrit poem written by the poet Gangadevi. It is also named Vira Kamparaya Charitham by the poet. It chronicles the life of Kumara Kampanna Udayar or Kumara Kampanna II, a prince of the Vijayanagara Empireand the second son of Bukka Raya I.
[3] K. A. Nilakanta Sastri, The Pandyan Kingdom – from the Earliest times to the sixteenth century, Luzac & Co., London, 1929, p. 242
[4] K. V. Raman, Some aspects of Pandyan History in the light of Recent Discoveries, University of Madras, Madras, 1971, p.37.
[5] Wikipedia – போன்றவையும் சேர்த்து.
அண்மைய பின்னூட்டங்கள்