Posted tagged ‘இந்து’
மே 13, 2018
“தலித்–முஸ்லிம்” மோதல்கள் [24-04-2018, 05-05-2018], இழப்பீடு அறிவிப்பு 07-05-2018 மற்றும் 12-05-2018 அன்று திருமாவளவனின் தாமதமான விஜயம் (3)

07-05-2018 அன்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு அறிவிக்கப் பட்டது[1]: தேசிய ஆதி திராவிட ஆணையத்தின் துணைத் தலைவர், எல்.முருகன், 07-05-2018, திங்கள்கிழமை விசாரணை நடத்தினார், அன்றே அவர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு அறிவித்தார்[2]. ஆனால், ஊடகங்களை இச்செய்தியை அமுக்கி வாசித்தன. ஆங்கில ஊடகங்கள் அடுத்த நாள் செய்தியாக வெளியிட்டன. அதாவது, அரசு தரப்பில், உடனடியாக நடவடிக்கை எடுத்தாகி விட்டது. மேலும், இவர் பிஜேபியின் சார்பில் நியமிக்கப் பட்டவர் என்று தெரிகிறது. இருப்பினும், இதெல்லாம் சகஜமான விசயம் தான், ஏனெனில், அந்தந்த அரசு பதவிக்கு வரும்போது, இத்தகைய “நியமனங்கள்” எல்லாம் எல்லாதுறைகளிலும், பரிந்துரை பேரில் நடந்து வருகிறது. 70 ஆண்டுகளாக மத்தியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், முஸ்லிம் மற்றும் மாநிலங்களில் திராவிடக் கட்சிகள் அந்த பலனை அனுபவித்துள்ளன. ஆனால், திருமாவளவன், அந்த நேரத்தில் தில்லிக்கு, அரசியல் செய்ய, கூட்டணி பேரம் பேச சென்று விட்டதால், இங்கு வரத் தயங்கினார். அதே நேரத்தில், கிருஷ்ணசாமி வேறு, தங்களது ஜாதியினருக்கு “பட்டியிலின” அந்தஸ்து தேவையில்லை என்று அறிவித்தார்[3]. புதிய தமிழகம் கட்சியின் மாநில மாநாடு, விருதுநகர் மாவட்டம் பட்டம்புதூர் பகுதியில் 06-05-2018 அன்று, கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்றது. இதில், எஸ்.சி பட்டியலில் இருந்து தேவேந்திர குல வேளாளர் வெளியேற வேண்டும் எனப் பிரகடனம் வெளியிடப்பட்டது[4]. இதெல்லாம் திருமா-துலுக்கக் கூட்டை அதிர வைத்தது. ஆக, அவர்கள், போலீஸாரிடம் புகார் கொடுப்போம் என்று கிளம்பினர்.

09-05-2018 அன்று போலீஸாரிடம் புகார் கொடுக்க வந்த அரசியல் கட்சியினர்: தேவதானப்பட்டி அருகே பொம்மிநாயக்கன்பட்டி கிராமத்தில், கடந்த 24-04-2018 மற்றும் 05-05-2018 தேதிகளில் “தலித்-துலுக்கர்” இடையே மோதல் ஏற்பட்டு, கல்வீச்சு சம்பவம் நடந்தது. திருமாவளவனே, “துலுக்கப்பட்டி” என்ற உண்மையை ஒப்புக் கொண்டுவிட்டதால், இனி, “துலுக்கர்” என்று கூட உபயோகிக்கலாம். பட்டியல் இனத்தவர், எஸ்சி, தலித் வசிக்கும் இடம் காலனி என்றால், துலுக்கர் வசிக்கும் இடம் துலுக்கப்பட்டி ஆகிறது. ஆனால், ஊடகங்கள், “இதுதொடர்பாக இருதரப்பினர் மீதும் தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்”, என்று தான் எழுதுகின்றன. இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் எல்லாளன், தேனி பாராளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ்வாணன், மாவட்ட செயலாளர் நாகரத்தினம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் அகமது முஸ்தபா மற்றும் நிர்வாகிகள் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு 09-05-2018 அன்று வந்தனர்[5]. விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இஸ்லாமிய நலக் கூட்டமைப்பு சார்பில் அவர்கள், பொம்மிநாயக்கன்பட்டி பிரச்சினை தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.

மாவட்ட கலெக்டர் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்ய கோரிக்கை: அந்த மனுவில், ‘பொம்மிநாயக்கன்பட்டி கிராமத்தில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தால் போலீஸ் துறைக்கு பயந்து இருதரப்பிலும் ஆண்கள் வெளியூர்களுக்கு சென்று விட்டனர். இரு பகுதியிலும் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மட்டும் இருக்கிறார்கள். இக்கிராமத்தில் இயல்பு நிலைக்கு திரும்ப இருதரப்பு மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் மாவட்ட கலெக்டர் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்’ என்று கூறியிருந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க சென்றனர். கலெக்டரிடம் மொத்தமாக சென்று மனு அளிக்க அனுமதி வழங்கப்படவில்லை என்றும், மூன்று பேர் மட்டும் மனு அளிக்க அலுவலகத்துக்குள் செல்லுமாறும் அங்கிருந்த அலுவலர்கள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே கலெக்டர் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார். இதனால், மனு அளிக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இந்து மக்கள் கட்சி, இந்து எழுச்சி முன்னணி சார்பில் மனுக்கள்: இதேபோல், இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ராம.ரவிக்குமார் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் ஒரு மனு அளித்தனர். அப்போது இந்து எழுச்சி முன்னணி மாவட்ட தலைவர் ராமராஜ் மற்றும் நிர்வாகிகளும் உடன் இருந்தனர். அந்த மனுவில், ‘பொம்மிநாயக்கன்பட்டி கிராமத்தில் இறந்த பெண்ணின் இறுதி ஊர்வலத்தை தடுத்து நிறுத்தும் நோக்கத்தோடு தாக்குதல் நடத்தி, கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்துக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்து அமைதியாக வாழ வழிவகை செய்யவேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தனர். முன்னதாக, கலவரத்தில் காயம் அடைந்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிற கலைச்செல்வனை, இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ராம.ரவிக்குமார் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்[6]. பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, “இருபிரிவினருக்கிடையே நடந்த மோதலில் காயமடைந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். சேதமடைந்த கடைகள், வீடுகளை சீரமைத்து கொடுக்க வேண்டும். கலவரத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் தாக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களை நேரில் சந்தித்து திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. நடிகர் ரஜினிகாந்த் உரிய நேரத்தில் அரசியல் அறிவிப்பை வெளியிடுவார். அவரது கட்சி சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை இந்து மக்கள் கட்சி ஆதரிக் கும்”, என்றார்[7].

12-05-2018 அன்று திருமாவளவன் விஜயம்: 01-05-2018 அன்று ராகுல், யச்சூரி முதலியவர்களை சந்தித்தப் பிறகு, கூட்டணி பற்றி பேசுவதற்கே நேரமில்லாத திருமாவுக்கு, பொம்மிநாயக்கன்பட்டியில், எஸ்சிக்கள் கொதித்து போயிருக்கிறார்கள் என்பதனை அறிந்தார். எப்படியாவது, அவர்களை சென்று பார்க்க வேண்டி முக்கியமான செயலர்கள் மற்றும் தொண்டர்கள் அறிவித்தனர். ஆனால், முஸ்லிம் தரப்பில் அவரைத் தடுக்க பார்த்தனர். இந்நிலையில், கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று ஆறுதல் தெரிவிப்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் 12-05-2018 அன்று காலை 10.15 மணி அளவில், பொம்மிநாயக்கன்பட்டி சென்றார். அவருடன் ஏராளமான நிர்வாகிகளும், கட்சி தொண்டர்களும் இந்திராகாலனிக்கு சென்றனர். பாதிக்கப்பட்ட தலித் மற்றும் இஸ்லாமிய மக்களை நேரில் சந்தித்தார். பாதிக்கப்பட்ட தலித் மக்களிடம் நடந்த கலவரத்துக்கு வருத்தம் தெரிவித்ததுடன், ஆறுதலும் கூறினார். அப்போது அங்கு கூடியிருந்த பெண்கள் சிலர், அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கலவரம் நடந்து ஒரு வாரத்துக்கு மேல் ஆனநிலையில் தற்போது தான் வழி தெரிந்ததா? இவ்வளவு நாள் எங்கே சென்றீர்கள்? என்று அவரிடம் கேள்வி கேட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து திருமாவளவனுடன் வந்த தொண்டர்கள், அந்த பெண்களை சமதானப்படுத்தினர். இங்கு திருமா சேரில் உட்கார்ந்திருக்கிறார், இருக்கமான முகத்துடன் கையைக் காட்டி பேசுகிறார். அவர்கள் எல்லோரும், தனது தொண்டர்கள் என்ற மனப்பாங்கில் நடந்து கொண்டது தெர்கிறது.

மசூதிக்கு சென்று குல்லா போட்டு சந்தித்த திருமாவளவன்: பின்னர் அங்கிருந்து பகல் 12.45 மணி அளவில் புறப்பட்ட திருமாவளவன் பள்ளிவாசலுக்கு சென்றார். அங்கு அவரை ஜமாத்தார்கள் வரவேற்றனர். “துலுக்க குல்லா” போட்டு அவர் பேசியது விசித்திரமாக இருந்தது. “இந்துக்களிடம்” பேசும்போது, அத்தகைய சின்னங்களை தரித்துக் கொள்ளாத நபர், துலுக்கரிடம் செல்லும் போது குல்லா போடுவது, செக்யூலரிஸத்தை ஏமாற்றுகிறது. மேலும் சுமார் 4ஒ நிமிடங்கள் முஸ்லிம்கள் சூழ மசூதியில் தரையில் உட்கார்ந்து கொண்டு, ஒரு முஸ்லிம் தலைவர் சொல்லியதை சாகவாசமாக உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்ததை ஒரு வீடியோ எடுத்துக் காட்டுகிறது[8]. இடது பக்கம் சாய்ந்து உட்காருவது, தண்ணீர் குடிப்பது போன்றவற்றைக் கவனிக்கலாம். முஸ்லிம் “இந்துக்கள்”, மீது அளந்த குற்றச்சாட்டுகளைக் கேட்டுக் கொண்டிருந்தார். பிறகு, இறுதியில், திருமா “அந்த பக்கம் நாலுன்னா, இந்த பக்கம் ரெண்டுன்னு பேசித்தான் இருப்பாக்க…….நாம் தான் சுமுகமாக இருக்கணும்,” என்ற ரீதியில் பேசும் போது, அவ்வீடியோ முடிந்து விடுகிறது. பின்னர், அப்பகுதி மக்களை நேரில் சந்தித்து திருமாவளவன் ஆறுதல் கூறினார். அதேபோல பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மக்களின் வீடுகளுக்கும் சென்று அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார். சுமூக முடிவு எடுக்க அறிவுறுத்தல் இரு தரப்பு மக்களின் குறைகளையும் கேட்டறிந்த பின்னர் சம்பவம் தொடர்பாக அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் எடுக்க உள்ளதாக நம்பிக்கை அளித்தார். மேலும் இரு தரப்பினரும் தங்களின் உள்ளார்ந்த பிரச்சினைகளை நயமாக பேசி தங்களுக்குள் சுமூக முடிவுகளை எடுத்து கொள்ளுமாறும் திருமாவளவன் அறிவுறுத்தினார்[9].
© வேதபிரகாஷ்
13-05-2018

[1] Business Standard, Theni clashes: Compensation for Dalit victims announced, ANI | Theni (Tamil Nadu) [India], Last Updated at May 10, 2018 00:45 IST.
[2] In the aftermath of the recent clashes between Dalits and Muslims in Tamil Nadu’s Theni district, the National Scheduled Cast Commission (NSCC) has announced a compensation for the damages caused to Dalit houses by police while conducting searches and security drills in the area.
http://www.business-standard.com/article/news-ani/theni-clashes-compensation-for-dalit-victims-announced-118051000027_1.html
[3] விகடன், ”எனக்கும் பி.ஜே.பி–க்கும் எந்தத் தொடர்பும் கிடையாது” மாநில மாநாட்டில் கிருஷ்ணசாமி பேச்சு!, அருண் சின்னதுரை அருண் சின்னதுரை ஆர்.எம்.முத்துராஜ், Posted Date : 05:30 (07/05/2018) Last updated : 07:30 (07/05/2018).
[4] https://www.vikatan.com/news/tamilnadu/124297-krishna-samy-says-he-has-no-link-with-bjp.html
[5] தினத்தந்தி, கலவரம் நடந்த பொம்மிநாயக்கன்பட்டியில் கலெக்டர் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், மே 10, 2018, 04:00 AM.
[6] https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/05/10002941/In-pomminayakkanpatti-Riots-The-peace-talks-should.vpf
[7] இந்த உதிரிகட்சியும் அரசியல் நோக்கில் வந்துள்ளது என்ரு தெரிகிறது. ஏனெனில், ரஜினி அரசியலை இங்கு சேர்த்துப் பேச வேண்டிய அவசியம் இல்லை.
[8] https://www.youtube.com/watch?v=Ujt3-PordME
[9] இவ்வீடியோவில் விவரங்களை பார்க்கலாம் – https://www.youtube.com/watch?v=CNt8Rq9My2Y
பிரிவுகள்: அடிமைத்தனம், அடையாளம், அரசு நிதி, அவதூறு, இந்து எழுச்சி முன்னணி, சமரசம், துலுக்கப்பட்டி, தேனி, பள்ளிவாசல், பிண ஊர்வலம், பேச்சு வார்த்தை, பேச்சுவார்த்தை, பொம்மிநாயக்கன்பட்டி, மசூதி தெரு, மதமாற்றம், மதவாதம், முஸ்லிம் காலனி, முஸ்லிம் தெரு, முஸ்லிம் பெண்கள், முஸ்லீம்களின் வெறித்தனம், முஸ்லீம்தனம், மோதல், வன்முறை, விசாரணை, விடுதலை சிறுத்தை
Tags: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, இந்து, இந்து மக்கள் கட்சி, இஸ்லாம், கிருஷ்ணசாமி, தலித், தலித் அரசியல், தலித் இந்து, தலித் முஸ்லீம், திருமா வளவன், திருமாவளவன், துலுக்கப்பட்டி, தேனி, தேவதானப்பட்டி, தேவேந்திரகுலம், பொம்மிநாயக்கன்பட்டி, விடுதலை சிறுத்தை
Comments: Be the first to comment
ஏப்ரல் 13, 2014
இந்து-முஸ்லிம் திருமணங்கள் – முஸ்லிம் பெண் இந்துவை காதலித்துத் திருமணம் செய்து கொண்டால் எதிர்ப்பது, குரூரமாகத் தாக்கப் படுவது, கொலை செய்யப்படுவது ஏன்?

சமீரா பானு கணவன் குழந்தைகள் 2014
இந்து – முஸ்லிம் திருமணங்கள் ஒருவழியாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்த முடியாது: விஜய் டிவியில் பிரமாதமாக ஒரு நிகழ்ச்சி நடப்பட்டது. அதில் முஸ்லிம் பையன்கள் இந்து பெண்களை திருமணம் செய்து கொண்டு வாழ்கின்றதைப் பற்றி விவாதிக்கப் பட்டது. அப்பொழுது, ஒரு இந்துப்பெண் எப்படி தான் தனது குடும்பத்தை விட்டு, மூலங்களை விட்டு பிரிக்கப் பட்டாள், வேர்களை வெட்டி தனிமைப் படுத்தப்பட்டாள் என்று அழாத குறையாக விவரித்தாள். அதாவது, அப்பெண் தனது பெற்றோர், உற்றோர், மற்றோர், நண்பர்கள், மதம், நம்பிக்கைகள், கலாச்சாரம், பாரம்பரியம், என அனைவற்றையும் விடுத்து புதிய ஒரு குடும்பத்தில், வேறு பட்ட பழக்க-வழக்கங்கள், மதம், நம்பிக்கைகள், கலாச்சாரம் முதலியவற்றை ஏற்றுக் கொண்டு காதலுக்காக தான் செய்த தியாகத்தைச் சொல்லி, அந்த முஸ்லிம் கணவனுக்காக வாழ்வதைச் சொன்னாள். அந்த முஸ்லிம் கணவன் தான் அவளை விரும்புவதாகச் சொன்னானே தவிர, அவளது ஈரங்கொண்டவிழிகளுக்கு, அவளது விவரணத்திற்கு எதுவும் சொல்லவில்லை, கண்டுகொள்ளவில்லை. அதாவது, ஒரு இந்துபெண், முஸ்லிமை காதலித்துத் திருமணம் செய்து கொண்டால் நிலைமை அப்படியுள்ளது. இப்பொழுது, ஷமீராபானு குரூரமாக வெட்டப்பட்ட நிகழ்ச்சிக்கு வருவோம்.

சஷமீரா பானு தாக்கப் பட்டாள் 2014
காதல் கலப்பு திருமணம்: நாகர்கோவிலில் காதல் கலப்பு திருமணம் செய்த இளம்பெண்ணை, ‘ஹெல்மெட்’ அணிந்து வந்த ஆசாமிகள் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்[1] என்று தினத்தந்தியில் செய்தி வந்துள்ளது. இளம் பெண் கொலை முயற்சி என்று தினமணியில் செய்தி வந்துள்ளது[2]. ஆனால், 12 வருடங்களுக்கு பின்னர் ஏன், அந்த முஸ்லிம் பெண் தாக்கப்படவேண்டும் அல்லது கொலை செய்ய முயற்சி செய்யப் படவேண்டும் என்று ஊடகங்கள் அலசவில்லை. ஒரு முஸ்லிம் பெண் இந்துவை கல்யாணம் செய்து கொண்டு 11 வருடங்களாக வாழ்ந்து, இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்து வாழ்ந்து கொண்டிருக்கும் போது அவளை கொலை செய்யவேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது என்றும் ஆராயவில்லை.

வாக்காளர் பட்டியல் 2014
வாசலில் தண்ணீர் தெளித்து கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்ணைத் தாக்குபவர்கள் மனிதர்களா?: நாகர் கோவிலில் நேற்று காலை நடந்த இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு என்று தினத்தந்தி விவரிக்கிறது: நாகர்கோவில் கோட்டார் பட்டாரியார் நெடுந்தெருவில் வசிப்பவர் ராஜாராம் ( வயது 34), ஆட்டோடிரைவர். இவருடைய மனைவி வெள்ளாடிச்சிவிளைச் சேர்ந்த ஷமீராபானு (29). இவர்கள் இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள். 11 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு உமாபாரதி, சங்கீர்த்தனா என்ற 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையி ல் 11-04-2014 காலை 7 மணி அளவில் ஷமீராபானு வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்து கோலம் போட்டுக் கொண்டு இருந்தார். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் ‘ஹெல்மெட்’ அணிந்து வந்தனர். அவர்கள் ஷமீராபானுவின் அருகில் சென்றனர். ஹெல்மெட்டால் முகத்தை மறைத்திருந்த இருவரும் சமீராபானுவிடம் வந்து ஒரு பேப்பரை காட்டி இந்த முகவரி எங்கு இருக்கிறது? என கேட்டனர்.
முகவரி கேட்டு அரிவாள் வெட்டு: இதனால் சந்தேகம் அடைந்த ஷமீரா பானு பின்னால் விலகிச் செல்ல முயன்றார். இதற்கிடையே மோட்டார் சைக்கிளில் இருந்த ஒரு ஆசாமி திடீரென்று கீழே இறங்கி கம்பால் ஷமீராபானுவை தாக்கினார். உடனே, மற்றொரு ஆசாமி அரிவாளை எடுத்துக் கொண்டு ஓடிவந்து ஷமீரா பானுவை வெட்ட முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஷமீராபானு, ‘‘என்னைக் காப்பாற்றுங்கள்…’’ என்று கூச்சலிட்டபடியே எதிரே உள்ள வீட்டை நோக்கி ஓடினார். இருப்பினும் அவரை துரத்திச் சென்ற அந்த ஆசாமிகள் அரிவாளால் சரமாரியாக வெட்டினார்கள். இதில் ஷமீராபானுவின் 2 கைகள், பின்கழுத்து, தலை என 5 இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்தது . இதில் வலதுகை துண்டானது. இதனைத் தொடர்ந்து அந்த 2 ஆசாமிகளும் மோட்டார் சைக்கிளில் ஏறிதப்பிச் சென்று விட்டனர். இதற்கிடையே ஷமீராபானுவின் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்த ராஜாராம் வெளியே ஓடிவந்தார். அங்கு ரத்தவெள்ளத்தில் மனைவி கிடப்பதை பார்த்து, கதறி அழுதார். உடனே உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உதவியுடன் அவரை வாகனத்தில் ஏற்றி இடலாக்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிரசிகிச்சை அளித்து வருகின்றனர்[3].
கைத் துண்டிக்க வெட்டிய கசாப்புக்காரர்கள் யார்?: அந்த அளவிற்கு ஒரு பெண்ணை வெட்டிய நபர்கள் யாராக இருக்க முடியும்? இதற்கிடையே, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் வரும் சமீரா பானுவை பா. ஜனதா மூத்ததலைவர் எம்.ஆர்.காந்தி, நகரசபை தலைவி மீனாதேவ், மாவட்ட துணைதலைவர் தேவ், நக ரதலைவர் ராகவன், இந்துமுன்னணி மாவட்டபொது செயலாளர் மிசா சோமன், மாவட்ட தலைவர் குழிச்சல் செல்லன், நகர தலைவர் ராஜா, பா.ஜ. பிரசார அணிதலைவர் எஸ்.எஸ் .மணி, தாமரை பாபு, இந்து முன்னணி நிர்வாகிகள் நம்பிராஜன், ராஜேஷ் உள்ளிட்டோர் பார்த்து ஆறுதல் கூறினர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சமீராபானு கூறியதாவது:– “காலை 7 மணிக்கு கோலம் போட வந்த போது ஹெல்மெட் அணிந்த 2 பேர் என் அருகே வந்தனர். குறுந்தாடியுடன் காணப்பட்ட அவர்கள் மீது எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே நான் வீட்டுக்குள் செல்ல முயன்ற போது அந்த வாலிபர்கள் இருவரும் முகவரி கேட்பது போல அருகே வந்து என்னை சரமாரியாக கம்பால் தாக்கினர். நான் தப்பித்து ஓடிய போது விடாமல் விரட்டி என்னை அரிவாளால் வெட்டினர். இதனால் நான் மயங்கி விழுந்து விட்டேன். கண்விழித்து பார்த்த போது நான் ஆஸ்பத்திரியில் இருக்கிறேன்”, இவ்வாறு அவர் கூறினார்.
எதிர் வீட்டில் வசிப்பவர்கள் யார்?: சமீராபானுவை வாலிபர்கள் கம்பால் தாக்கிய போது அவரது வீட்டுக்கு எதிரே உள்ள வீட்டுக்குள் நுழைய முயன்றார். அப்போது அந்த வாலிபர்கள் சமீராபானுவின் கையை பிடித்து இழுத்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதனால் வீட்டுதிண்ணை முழுவதும் ரத்தவெள்ளமாக காட்சியளித்தது . இதையடுத்து எதிர்வீட்டுக்காரர்கள் அந்த ரத்தத்தை தண்ணீர் ஊற்றி கழுவினார்கள். சம்பவம் தொடர்பாக விசாரித்த ஏ.டி. எஸ்.பி. இளங்கோ எதிர்வீட்டுக்காரர்களிடமும் விசாரணை நடத்தினார்[4]. பட்டாரியர்தெரு என்பது பட்டாரியர் புதுத்தெரு மற்றும் பட்டாரியர் நெடுந்தெரு என்று இரண்டு உள்ளது. இவற்றில் இந்துக்கள், முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர்[5]. திருத்தப் பட்டவாக்காளர் பட்டியலில் சமீராபானுவின் பெயர் உள்ளது. பட்டாரியர் நெடுந்தெரு புதிய / பழைய வீட்டு எண் 64A / NA என்று கொடுக்கப் பட்டுள்ளது[6].
ராஜாராம்- ஏற்கெனவே தாக்குதலில் உள்ளார்: முன்னர் இவரது ஆட்டோ இரண்டு முறை மர்ம ஆசாமிகளால் சேதப்படுத்தப் பட்டது[7]. இந்தநிலையில் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு ராஜாராம் வீட்டு முன்பு நிறுத்தியிருந்த ஆட்டோவை மர்ம நபர்கள் தீவைத்து எரித்தனர். அதன் பிறகு 7 மாதத்திற்கு பின் மீண்டும் ஒரு முறை வீட்டு முன்பு நிறுத்திய ஆட்டோவை மர்ம நபர்கள் பிளேடால் கிழித்து சேதப்படுத்தி இருந்தனர். இது தொடர்பாக ராஜாராம் கோட்டார் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்[8].
திருமணத்திற்கு எதிர்ப்பு இருந்தது: இது பற்றி தகவல் அறிந்ததும், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோ, நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு பேச்சிமுத்து பாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது ராஜாராம் ஆசாத் நகரை சேர்ந்த ஷமீராபானுவை காதலித்து திருமணம் செய்து கொண்ட போதே எதிர்ப்பு இருந்ததாகவும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டு முன் நிறுத்தியிருந்த ராஜாராம் ஆட்டோ தீவைத்து எரிக்கப் பட்டதாகவும் தெரிய வந்தது. இதுபற்றி கோட்டார் போலீசில் ராஜாராம் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்தனர்.
5 தனிப்படை அமைப்பு: இந்த வழக்கில் துப்புதுலக்க கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோ மேற்பார்வையில் , துணை போலீஸ் சூப்பிரண்டு பேச்சிமுத்து பாண்டியன் தலைமையில், கோட்டார் இன்ஸ்பெக்டர் சங்கர்கண்ணன், சப்–இன்ஸ்பெக்டர்கள் விஜயன், ரவிச்சந்திரன், சுஜீத் ஆனந்த், மோகன அய்யர் ஆகியோர் அடங்கிய 5 தனிப்படைகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் அமைத்துள்ளார். இந்ததனிப்படை போலீசார் கொலை முயற்சியில் ஈடுபட்ட 2 ஆசாமிகள் குமரிமாவட்டத்தை சேர்ந்தவர்களா? அல்லது வெளிமாவட்டங்களில் இருந்து வந்தவர்களா? என்று விசாரணை நடத்தி, அவர்களை தேடி வருகிறார்கள்.
முஸ்லிம் பெண்களை இந்துக்கள் கல்யாணம் செய்து கொண்டால் அவர்களைத் தாக்கும் நபர்கள் யார், நோக்கம் என்ன?: 2012ல் இதே கோட்டாறு பகுதியில் வேறொரு மதப்பெண்ணைத் திருமணம் செய்த ஆட்டோடிரைவர் ரமேஷ் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்[9]. அச்சம்பவம் பெரும் பதட்டத் தைஏற்படுத்தியது. தற்போது மீண்டும் அதே பாணியில் காதல் திருமணம் செய்த பெண்ணை வெட்டிக் கொலை செய்ய முயன்ற இச்சம்பவம் மீண்டும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது[10]. முன்னரே குறிப்பிட்டப்படி, உண்மையில் காதலித்துத் திருமணம் செய்து கொண்டால், அவர்களை விட்டுவிட வேண்டும். ஏனெனில், அவர்கள் ஏற்கெனவே பல எதிர்ப்புகளில் வாழவேண்டிய கட்டாயம் உள்ளது . 10-12 வருடங்கள் வாழ்ந்தாகி விட்டது எனும் போது, அதிலும் இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் எனும்போது, அவர்களைத் தாக்குவது என்பது குரூரமான செயலாகும். இதற்கு மதம் ரீதியிலான திரிபுவாதம், நியாயப்படுத்தும் தன்மை முதலியவை கூடாது. அவ்வாறு ஒருவேளை முஸ்லிம் அமைப்புகள் செய்து வருவதாக இருந்தால், செக்யூலரிஸம் பேசிவரும் நாட்டில், போலீஸார் தகுந்த நடவடிக்கை எடுத்து அத்தகைய காட்டுமிராண்டித்த னத்தை, கசாப்புத் தனத்தை அறவே ஒழித்துக் கட்ட வேண்டும்.
© வேதபிரகாஷ்
13-04-2014
[1]தினத்தந்தி, காதல்கலப்புதிருமணம்செய்தஇளம்பெண்ணுக்குசரமாரியாகஅரிவாள்வெட்டு ‘ஹெல்மெட்’ அணிந்துவந்தஆசாமிகள்வெறிச்செயல், 12-04-2014.
[2]http://www.dinamani.com/edition_thirunelveli/kanyakumari/2014/04/12/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AE/article2163505.ece
[3] http://www.dailythanthi.com/2014-04-11-Mixed-marriages-Kanyakumari-News
[4]மாலைமலர்,நாகர்கோவில்: இளம்பெண்ணைஓடஓடஅரிவாளால்வெட்டியவாலிபர்கள், 11-04-2014
[5] http://www.elections.tn.gov.in/pdf/dt30/ac230/ac230227.pdf
[6] http://www.seithy.com/breifNews.php?newsID=107441&category=IndianNews&language=tamil
[7] http://www.tutyonline.net/view/31_65505/20140412183413.html
[8] http://www.maalaimalar.com/2014/04/11123725/young-women-attack-the-person.html
[9] http://www.tutyonline.net/view/31_65505/20140412183413.html
[10] http://www.maalaimalar.com/2014/04/11123725/young-women-attack-the-person.html
பிரிவுகள்: இந்து-முஸ்லிம், காதல், சமீரா பானு, சமீராபானு, பானு, வெட்டிக் கொலை, ஷமீரா பானு, ஷமீராபானு
Tags: இந்து, இஸ்லாம், கல்யாணம், காதல், குத்து, கொலை, சமீரா பானு, சமீராபானு, திருமணம், பட்டாரி தெரு, மநாகர் கோவில், ராஜாராம், வெட்டு, ஷமீரா பானு, ஷமீராபானு
Comments: Be the first to comment
செப்ரெம்பர் 5, 2013
தலிபான் ஜிஹாதிகள் சுஷ்மிதா பானர்ஜி (கணவரைக் கட்டிப் போட்டு) என்ற எழுத்தாளரை சுட்டுக் கொன்றுள்ளனர்!

தலிபான் ஜிஹாதிகளால் கொலை செய்யப்பட்ட சுஷ்மிதா பானர்ஜி
தலிபான் ஜிஹாதிகள் சுஷ்மிதா பானர்ஜி என்ற எழுத்தாளரை, வீட்டுக்குள் நுழைந்து கணவரைக் கட்டி வைத்து விட்டு, வெளியே கொண்டு சென்று சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு, உடலை மதரஸா அருகில் போட்டுச் சென்றதாக செய்திகள் வந்துள்ளன[1].

ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பியது” என்ற பெயரில் இவர் எழுதிய நாவல்
சையது பானர்ஜி என்கின்ற சுஷ்மிதா பானர்ஜி, ஜான்பாஸ் கான் என்ற, ஆப்கானிஸ்தான் வியாபாரியைத் திருமணம் செய்து கொண்டு பக்டிகா மாகாணத்தில், கரனா என்று ஊரில் வசித்து வந்தார். “ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பியது” என்ற பெயரில் இவரது நாவல், திரைப்படமாக 2003ல் எடுக்கப்பட்டது[2]. இந்நாவலை இவர் 18 வருடங்களுக்கு முன்னர் எழுதியிருந்தார்[3]. இவரது மைத்துனரும் கல்கத்தாவில் சில ஆண்டுகளுக்கு முன்னர் கொலை செய்யப்பட்டார்[4].
© வேதபிரகாஷ்
05-09-2013
[2] The report, quoting Afghan police officials, said Taliban militants arrived at her home in, Kharana, capital of Paktika province, tied up her husband and other members of the family, took Banerjee out and shot her. They dumped her body near a religious school. No militant group has yet said it killed Banerjee, 49, also known as Sayed Kamala, who was married to an Afghan businessman Jaanbaz Khan. She earned fame for her memoir, A Kabuliwala’s Bengali Wife, recounting her life in Afghanistan and her escape in 1995. The memoir was made into ‘Escape from Taliban’, a Bollywood film starring Manisha Koirala. The film was touted as a “story of a woman who dares [the] Taliban”. The deceased had recently moved back to Afghanistan to live with her husband, the report said. In an article in Outlook magazine in 1998, she had written that “life was tolerable until the Taliban crackdown in 1993” when the militants ordered her to close a dispensary she was running from her house and “branded me a woman of poor morals”.
http://www.hindustantimes.com/India-news/NewDelhi/Indian-diarist-Sushmita-Banerjee-shot-dead-in-Afghanistan/Article1-1117939.aspx
பிரிவுகள்: ஃபத்வா, அடையாளம், அமைதி, அல் - உம்மா, அல் - காய்தா, ஆப்கானிஸ்தான், இந்தியா, இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமிய நாடு, கலவரம், கழுத்தறுப்பு, காஃபிர், காஃபிர்கள், காபிர், குண்டு, குண்டு வெடிப்பது, குரான், குரூரம், குரோதம், கொடூரம், கொலை, சரீயத் சட்டம், சிரச்சேதம், சுஷ்மிதா பானர்ஜி, சூழ்ச்சி, சையது பானர்ஜி, ஜான்பாஸ் கான், ஜிஹாதி, ஜிஹாதி குருரக் குணம், ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாத், தலிபான், தலிபான் அமைப்பினர் தண்டனைகள், தலை, தலைவெட்டி, தஸ்லிமா, தாலிபான், பர்தா, மத தண்டனை
Tags: அடிமை, ஆப்கானிஸ்தான், இந்து, கரம், காந்தஹார், காந்தாரம், குரான், கொடுமை ப்பட்டுத்துதல், கொலை, சிரம், சுடுதல், சுஷ்மிதா பானர்ஜி, சையது பானர்ஜி, ஜான்பாஸ் கான், தண்டனை, தலிபான், தாலிபான், துண்டு, துப்பாக்கி, பெண், பெண்ணுறிமை, மத தண்டனை, முண்டம், முஸ்லிம், வெட்டு, ஷரீயத், ஹதீஸ்
Comments: 1 பின்னூட்டம்
மார்ச் 15, 2013
இந்துக்களின் மீது குரூர-கொடுமை-வன்முறைகளைத் தூண்டிவிட்டதாக, இஸ்லாமிய அடிப்படைவாதி கைது செய்யப்பட்டுள்ளானாம்!
இஸ்லாமிய அடிப்படைவாதி கைது: இஸ்லாமிய வெறியர்களின் குரூரக்கொலைகளைக் கண்டும் இனி காணாமல் இருக்க முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டதும், இந்துக்களின் மீது குரூர-கொடுமை-வன்முறைகளைத் தூண்டிவிட்டதாக, பங்களாதேசத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதி கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது. வியாழக்கிழமை 14-03-2013 அன்று ஜமாத்-இ-இஸ்லாமி [Jamaat-e-Islami (JI)] என்ற அந்த அடிப்படைவாத இயக்கத்தின் மாநிலத் துணைத்தலைவனான, சிட்டகாங்கில் இந்துக்கள் மற்றும் கோவில்களைத் தாக்கியதற்குத் தூண்டுதலாக இருந்த ஆலம்கீர் கபீர் சௌத்ரி என்பவன் கைது செய்யப்பட்டிருக்கிறான்.
தொடரும் குற்றங்கள்: ஜமாத்தின் இளைஞர் இயக்கமான இஸ்லாமி சத்ரா ஷிபிர் முன்னரே குறிப்பிட்டபடி பல இடங்களில் இந்துக்களைத் தாக்கி, அவர்களது, உடமைகள், வீடுகள், கோவில்கள் என்று அனைத்தையும் சூரையாடினர்[1]. போலீஸ் மற்றும் குற்றத்தடுப்பு விரைவு நடவடிக்கை படையினர் சேர்ந்து அவனை கைது செய்தனராம்[2]ளதாவது அந்த அளவிற்கு முஸ்லீம் அடிப்படைவாதிகள் உள்ளனர் என்று தெரிகிறது. பங்சாலி என்ற இடத்தில் நடந்த தாக்குதல்களில் 70ற்கும் மேற்பட்ட கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலும் இந்துக்கள் ஆவர்[3]. 1971 குற்றங்களுக்கு ஒரு வெறியன் தண்டிக்கப்படுகிறான் என்றால், அதை வைத்துக் கொண்டு, அதே மாதிரியான குற்றங்களை முஸ்லீம்கள் செய்துள்ளனர்[4]. இந்துக்களால் அழத்தான் முடியும் போலிருக்கிறது[5]. விவரங்களுக்கு இங்கே பார்க்கவும்[6].
இன்னும் இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை: காஜல் தேவ்நாத், பங்களா பூஜா உட்ஜாபன் பரிஷத்தின் தலைவர், “அப்பகுதியில் இருக்கும் இந்துக்கள் இன்னும் பீதியில் தான் வாழ்ந்து வருகின்றனர். உள்ளூர் எம்.பி மற்றும் இதர முஸ்லீம்கள் அத்தகைய குரூரத் தாக்குதல்கள் நடத்த ஆதரவாக இருந்தனர். அவாமி லீக் மற்றும் முக்கிய எதிர் கட்சியான பி.என்.பி Bangladesh Nationalist Party (BNP) கட்சியினரும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருக்கின்றனர்”, என்று கூறியுள்ளார்[7].
இந்துக்களைப் பற்றிப் பேச யாரும் இல்லை: இந்தியாவில் ராஜ்யசபாவில் பி.ஜே.பி மட்டும் தான் இந்துக்களைக் காக்கும் படி, கோரிக்கையை வைத்தது, தாக்குதல்கள் பற்றியும் பேசியுள்ளது[8]. கோவில்கள் தாக்கப்படுவது, இன்னும் தொடர்ந்து வரவதாக செய்திகள் வந்துக் கொண்டிருக்கின்றன[9]. இவ்வளவு நடந்தும், நடந்து கொண்டிருந்தாலும், போர்க்குற்றங்கள் நடந்ததற்கான சாட்சிகள் நம்பகமாக இல்லை என்று குற்றவாளிகள் சார்பில் வாதம் புரிகின்றனர்[10].
வேதபிரகாஷ்
15-03-2013
[2] “Police and (elite anti-crime Rapid Action Battalion) RAB teams jointly arrested Banshkhali upazila chairman Alamgir Kabir Chowdhury on charges of inciting violence against Hindu community and attack on their temples and property,” a police official in the port city of Chittagong told PTI by phone.
[3] Banskhali was one of the areas where the followers of the Hindu faith came under attacks during the recent violence which saw deaths of over 70 people, including six policemen, while several dozen Hindu temples were vandalized.
[7] “A sense of fear is still there among the Hindu community although no fresh violence was reported in the past two days … we are disappointed that the lawmakers of the (ruling) Awami League and main opposition BNP and peoples representatives at local levels are not taking initiatives for social and political resistance,” Bangladesh Puja Udjapon Parishad vice-president Kazal Debnath told PTI.
பிரிவுகள்: 1971, 786, ஃபத்வா, அடி உதை, அடித்து சித்ரவதை, அடிப்படைவாதம், அடிமை, அடையாளம், அப்சல் குரு, அவதூறு, அவமதிக்கும் இஸ்லாம், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய விரோதத் தன்மை, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்து கோவில்கள் தாக்கப்படுவது, இந்துக்களின் உரிமைகள், இந்துக்களைக் கொல்வது, இந்துக்கள், இந்துக்கள் கொடுமைப் படுத்தப்படல், இந்துக்கள் கொல்லப்படுதல், இமாம்கள், இரட்டை வேடம், இஸ்லாமிய இறையியல், இஸ்லாமும் இந்தியாவும், இஸ்லாம், உருவ வழிபாடு, உலமாக்கள், ஓட்டு, ஓட்டுவங்கி, கசாப்புக்காரத்தனம், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்கள், காங்கிரஸ், சரீயத், சரீயத் சட்டம், சிறுபான்மையினர், சுன்னத், சுன்னி, ஜமாத், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, தலிபான், தலிபான் அமைப்பினர் தண்டனைகள், தலைவெட்டி, மதகலவரம், மத்ரஸா, முஜாஹித்தீன், முஜிபுர், முஜிபுர் ரஹ்மான், முண்டம், முஸ்லீம்களின் அடிப்படைவாதம், முஸ்லீம்களின் தீவிரவாதம், முஸ்லீம்களின் வெறித்தனம், முஸ்லீம்களில் சிறுபான்மையினர்
Tags: ஃபத்வா, அவமதிக்கும் இஸ்லாம், ஆலம்கீர், ஆலம்கீர் கபீர், ஆலம்கீர் கபீர் சௌத்ரி, ஆலம்கீர் சௌத்ரி, இந்து, இந்துக்களின் உரிமைகள், இந்துக்களைக் கொல்வது, இந்துக்கள், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாம், உடைப்பு, உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், கபீர், காஃபிர், காஃபிர்கள், காபிர், காஷ்மீரம், காஷ்மீர், கொலை, கோயில், கோவில், கோவில் சிலை உடைப்பு, சிறுபான்மையினர், சௌத்ரி, ஜிஹாத், பங்க பந்து, பங்களாதேசம், முகமதியர், முஸ்லிம்கள், முஸ்லிம்கள் சிலை உடைப்பு, மோமின்-காஃபிர்
Comments: 1 பின்னூட்டம்
மார்ச் 2, 2013
முஸ்லீம்களின் வெறியாட்டம் – பங்களாதேசத்தில் இந்துக்கள் கொல்லப்பட்டனர், வீடுகள் சூரையாடப்பட்டன, கோவில்கள் எரியூட்டப்பட்டன!

ஜமாத்-இ-இஸ்லாமிய கலவரத்தில் இந்து கோவில்கள் எரியூட்டப்பட்டன, இந்துக்கள் தாக்கப்பட்டனர், கொல்லப்பட்டுள்ளவர்களில் இந்துக்களும் அடங்குவர், ஆனால் செக்யூலரிஸ இந்தியர்கள் கண்டுகொள்வதாக இல்லை!

முஸ்லீம் கலவரத்தில் இந்துக்கள் தாக்கப்படுவது, கொல்லப்படுவது: முஸ்லீம்களுக்குள்ளான விவகாரத்தில் கலவரம் வெடித்து அது இந்துக்களைத் தாக்குவதுதான், ஜிஹாதித்துவமாக இருக்கின்றதுகிஸ்லாம் என்றால் அமைதி என்று மார்தட்டிக் கொள்ளும் முஸ்லீம்கள் இந்துக்களுக்கு கொடுக்கும் அமைதி இதுதான்! ஜமாத்-இ-இஸ்லாமிய கலவரத்தில் இந்து கோவில்கள் எரியூட்டப்பட்டன, இந்துக்கள் தாக்கப்பட்டனர், கொல்லப்பட்டுள்ளவர்களில் இந்துக்களும் அடங்குவர் பங்களா போலீஸார் இப்பொழுதுதான் இதனை எடுத்துக் காட்டியுள்ளனர். நவகாளி மற்றும் சிட்டகாங் பகுதிகளில் அவ்வாறு இந்துக்களின் வீடுகள்-கோவில்கள் தாக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்[1]. ஆனால், செக்யூலரிஸ இந்தியர்கள் கண்டுகொள்வதாக இல்லை! காலம் மாறினாலும், யுத்தமுறைகள் மாறினாலும், மாற்றங்களை இந்துக்கள் புரிந்து கொள்வதாக இல்லை[2]. வெளிநாட்டு கத்தோலிக்க சோனியாவிற்கு, 2014ல் ஆட்சியை எப்படி மறுபடியும் பிடிக்க வேண்டும் என்றுள்ளதால், இதைப்பற்றிக் கவலைப்படுவதும் இல்லை[3]. இந்து தொழிலதிபர்களை அடையாளங்கண்டு மிரட்டினாலும், அதன் உள்ளர்த்தத்தை புரிந்து கொள்வதில்லை[4]. மமதா அம்மையாரும் இதனை கண்டுகொள்வதாக இல்லை, மாறாக முஸ்லீம்களைத்தான் அவர் ஆதரித்து வருகின்றார்.

தீவிரவாதிக்குத் தூண்டு தண்டனை அளித்ததால் கலவரம்: டெலாவார் ஹொஸைன் சையீது (Delawar Hossain Sayedee, a leader of Jamaat-e-Islami, an Islamist party) என்ற இஸ்லாமியக் கட்சி மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமியின் தலைவருக்கு 1971 போர் குற்றங்களுக்காக சிறப்புப் போர் குற்றங்களை ஆராயும் நீதிமன்றம் தூக்குத் தண்டனை[5] விதிக்கப்பட்டுள்ளது! இதனால் ஜிஹாதிகளை ஆதரிக்கும் மற்றும் எதிர்க்கும் முஸ்லீம் குழுமங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஆனால், ஜமாத்-இ-இஸ்லாமிகாரர்கள் இரண்டு நாட்களாக கலவரங்களில் ஈடுபட்டு, பதிலுக்கு போலீஸார் கட்டுப்படுத்த துப்பாக்கி சூடும் நடத்தியுள்ளது. இவ்வாறு கலவரங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

கலவரங்களில் இந்துக்களும் தாக்கப்படுகின்றனர் என்ற செய்தி இப்பொழுது வெளிவருவது: முதலில் ஏதோ முஸ்லீம்களுக்குள் சண்டைப் போட்டுக் கொள்கிறார்கள், கலவரம் செய்து கொள்கிறார்கள் என்று தான் செய்திகள் வந்தன. இப்பொழுது சம்பந்தமே இல்லாமல் இந்துக்களைத் தாக்க ஆரம்பித்துள்ளனர். சுமார் 10 இந்து கோவில்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளன[6]. 50 இந்துக்களின் வீடுகளும் எரிக்கப்பட்டன[7]. இதனை படமெடுத்த ஊடகக் கரர்களை, அவற்றை வெளியிட்டால் கொன்று விடுவோம் என்று மிரட்டியும் உள்ளனர். என்றேல்லாம் செய்திகள் வந்தவண்ணம் உள்ளது.
அருந்ததி ராய், ஜிலானி, லோனி, செதல்வாத் முதலியோர் இப்பொழுது வாயைத் திறக்கமாட்டார்கள்.
© வேதபிரகாஷ்
01-03-2013
பிரிவுகள்: ஃபத்வா, அல் அர்பி, அல் முஹம்மதியா, அல் ஹதீஸ், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இந்து கோவில்கள் தாக்கப்படுவது, இந்துக்கள், இந்துக்கள் கொடுமைப் படுத்தப்படல், இந்துக்கள் கொல்லப்படுதல், இந்துக்கள் சித்திரவதை, இஸ்லாமிய நாடு, இஸ்லாமும் இந்தியாவும், இஸ்லாம், உள்ளூர் தீவிரவாத கும்பல், உள்ளே நுழைவது, ஊடக வித்தைகள், ஊரடங்கு உத்தரவு, கலவரங்கள், கலவரம், கல்லடி ஜிஹாத், கல்லெரிந்து கலவரம், கல்லெறி வெறிக்கூட்டம், கல்வீச்சு, காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்கள், சரீயத், சரீயத் சட்டம், சிறுபான்மையினர், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, தடை, முஸ்லீம்களிடம் ஊடல், முஸ்லீம்களின் அடிப்படைவாதம், முஸ்லீம்களின் தீவிரவாதம், முஸ்லீம்களின் வெறித்தனம், முஸ்லீம்கள், முஸ்லீம்தனம், வங்காள தேசம், வங்காள மொழி
Tags: ஃபத்வா, அவமதிக்கும் இஸ்லாம், இந்து, இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், கோவில், ஜமாத், ஜமாத்-இ-இஸ்லாம், பங்களாதேசம், முகமதியர், முஜாஹித்தீன், முஸ்லீம்கள், வங்காள தேசம், வங்காளம், வீடு
Comments: 13 பின்னூட்டங்கள்
பிப்ரவரி 22, 2013
ஐயோ–வெடிக்கும், அதிரும், அலறும்பாத் – ஐதராபாத்!
நவீனகாலத்தில் ஜிஹாதிகளின் வெடிகுண்டு தாக்குதல்: ஐதராபாத்தில் இந்துக்களைக் கேவலமாகப் பேசிய ஒவைஸியின் சகோதரர் கைதாகிய விஷயம் ஆறுவதற்குள்[1], இரண்டு குண்டுகள் வெடித்து 16 பேர்களை பலிகொண்டதுடன், 100ற்கும் மேற்பட்டவர்களை காயமடையச் செய்துள்ளது. வழக்கம் போல அதே மாதிரியான, சைக்கிள்-டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகள், கோவிலைக் குறிபார்த்தது, தியேட்டர்களில் வெடித்துள்ளன. இந்திய முஜாஹித்தீன் கைவரிசை என்று விசாரணையில் ஈடுபட்டுள்ள அதிரிகாரிகள் கூறுகிறார்கள்[2]. இடைக்காலத்தில், ஜிஹாதிகள் குதிரைகளின் மீது கத்திகளோடு வந்து, இந்தியர்களைத் தாக்கிக் கொள்ளையிட்டு, தீவிரவாதத்தில் ஈடுபட்டனர். பிறகு வெடி மருந்து உபயோகப்படுத்தி, பீரங்கள் மூலம் கோட்டைகளைத் தாக்கி, கொன்று அட்டூழியம் செய்தனர். அப்பொழுது எந்த யுத்ததர்மத்தையும் கடைபிடிக்கவில்லை. இந்தியர்கள் காலையிலிருந்து மாலை வரைத்தான் சண்டையிடுவார்கள். பிறகு அமைதி காப்பார்கள், ஆனால், முகமதியர்களோ வஞ்சகமாக இரவு நேரங்களிலும் தாக்கினர். நவீன காலத்தில் துப்பாக்கி வந்ததும், அதனைப் பயன்படுத்தி எல்லைகளில் தாக்கி வந்தனர். இப்பொழுது ஏ.கே.47 மற்றும் வெடிகுண்டுகளை வைத்துத் தாக்கி வருகின்றனர்.
உபயோகமற்ற உள்துறை அமைச்சர்: எல்லாம் நடந்த பிறகு, ஐதராபாத்தில் குண்டு வெடிப்பு நடந்த இடங்களை மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே இன்று காலை பார்வையிட்டு விசாரணை நடத்தியுள்ளதாக செய்திகள் வருகின்றன. முன்னமே விஷயம் தெரியுனம் என்று வேறு கூறுகிறார். பிறகு என்ன செய்து கொண்டிருந்தார் என்று தெரியவில்லை. இந்த இடங்களில் வெடித்தது சக்தி வாய்ந்த தாமதித்து வெடிக்கும் டைமர் குண்டுகள் என தெரியவந்துள்ளது[3]. இது குறித்து ஆந்திர போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள தில்சுக் நகரில் நேற்று அடுத்தடுத்து 3 இடங்களில் குண்டுகள் வெடித்துச் சிதறின. உவசி மூன்று என்று இப்படித்தான் சொல்லி, பிறகு இரண்டு என்று மாற்றிக் கொண்டார். அங்குள்ள கொனார்க் தியேட்டர் அருகே 7.01 மணிக்கு முதல் குண்டு வெடித்தது. அடுத்த 5 நிமிடத்தில் கொனார்க் தியேட்டர் பின்புறம் உள்ள வெங்கடாத்ரி தியேட்டரில் 2வது குண்டு வெடித்தது. 15 நிமிட இடைவெளியில் அங்குள்ள ஒரு ஓட்டலில் 3வது குண்டு வெடித்தது. இதில் மொத்தம் 16 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பலியானவர்களில் 5 பேர் மாணவர்கள். சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு தயார் செய்வதற்கு புத்தகங்கள் வாங்க வந்துள்ளனர்[4]. அப்போது குண்டு வெடிப்பில் சிக்கி பலியாகி உள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஏராளமான கடைகள் சேதமடைந்தன.
இந்திய முஜாஹித்தீன் கைவரிசை: பயங்கரவாதி கசாப்பிற்குப் பிறகு, நாடாளுமன்ற தாக்குதலில் முக்கிய குற்றவாளியான அப்சல் குரு, சமீபத்தில் தூக்கிலிடப்பட்டாரன். அதனால், இந்திய முஜாஹித்தீன் மும்ஐ, பெஙளூரு, கோயம்புத்தூர், ஐதராபாத் முதலிய இடங்களைத் தாக்குதல் நடத்தலாம் என்று ரகசிய விவரங்கள் வந்துள்ளனவாம். இப்பொழுதோ, இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த குண்டுவெடிப்பு நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது வேடிக்கைதான்! சைக்கிளில் டிபன்பாக்ஸ் பேக்குகள் மூலம் மிக சக்திவாய்ந்த டைமர் குண்டுகளை வைத்து வெடிக்கச் செய்துள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அது முந்தைய வெடுகுண்டுகளைப் போல, உள்ளுக்குள் வெடித்து சிதறும் (Internall Explosive Devices) வகையைச் சேர்ந்தவை. வெடிகுண்டு சம்பவத்துக்கு இதுவரை எந்தவொரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே இன்று காலை ஐதராபாத் வந்து, குண்டு வெடிப்பு நடந்த இடங்களை அவர் பார்வையிட்டார். அவருடன் கவர்னர் நரசிம்மன், முதல்வர் கிரண்குமார் ரெட்டி, மாநில உள்துறை அமைச்சர் சபீதா இந்திரா ரெட்டி மற்றும் டிஜிபி தினேஷ் ரெட்டி ஆகியோரும் இருந்தனர்.
ஒத்திகைப் பார்த்ததும், கேமரா வயர்களை அறுத்ததும்: கடந்த அக்டோபரில் கைதான சயீத் மக்பூல் மற்றும் இம்ரான் கான், தாங்கள் ஜூலை 2012ல் திசுக் நகருக்கு வந்து இடங்களைப் பார்த்துவிட்டு சென்றதாக ஒப்புக்கொண்டுள்ளனர்[5]. ரியாஸ் பட்கல் என்ற இந்திய முஜாஹித்தீன் தலைவனின் ஆணைப்படி இவ்வாறு ஒத்திகைப் பார்த்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். நான்கு நாட்களுக்கு முன்னர் தான் அங்கிருந்த கேமராவின் வயர்கள் அறுக்கப்பட்டதாக கூறுகிறார்கள்[6]. இவ்விவரம் போலீசாருக்குத் தெரிந்தேயுள்ளது. அமெரிக்க நாளிதழே இதைப் பற்றி வெளியிடும் போது[7], உள்துறை அமைச்சருக்கு தெரியாமலா இடருக்கும்? “காவி தீவிரவாதம்” என்றெல்லாம் பேசும் ஷிண்டே இதைப் பற்றி தெரிந்தும் ஏன் மௌனியாக இருந்தார்? சிதம்பரம் பாதையில் சென்று கழுத்தை அறுக்கிறார் போலும்!
மூன்று நாட்களுக்கு முன்பு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கொடுத்தது: மக்கள் நெருக்கம் அதிகமுள்ள பகுதியில் 5 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்புகள் குறித்து ஷிண்டேவிடம் டிஜிபி விளக்கினார். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் உயரதிகாரிகளிடம் ஷிண்டே விசாரித்தார். பின்னர், குண்டு வெடிப்பில் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களை ஷிண்டே நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, “ குண்டு வெடிப்பு குறித்து மாநில அரசு துப்பு துலக்க தொடங்கியுள்ளது. ஏற்கனவே மூன்று நாட்களுக்கு முன்பு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கொடுத்தது உண்மைதான். ஆனால் எந்த இடத்தில் இதுபோன்ற சம்பவம் நடக்கும் என்று சரியாக கணிக்க முடியவில்லை. இந்த சம்பவத்தை தொடர்ந்து ஆந்திரா மட்டுமின்றி நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் எச்சரிக்கை செய்யப்பட்டு உள்ளது. குண்டு வெடிப்பில் ஈடுபட்ட தீவிரவாத அமைப்பு குறித்து முழு விசாரணை நடத்தி வருகிறோம்.” இவ்வாறு ஷிண்டே கூறினார்.
ஐதராபாத் சாய்பாபா கோயிலை குறிவைத்த குண்டுகள்: இதற்கிடையே, போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஐதராபாத் சாய்பாபா கோயில் அருகே தீவிரவாதிகள் குண்டுகளை வெடிக்க செய்ய திட்டமிட்டு, பின்னர் இடத்தை மாற்றியது தெரியவந்துள்ளது. ஐதராபாத் சாய்பாபா கோயிலில் குண்டு வைக்கத்தான் சதிகாரர்கள் முதலில் திட்டமிட்டுள்ளனர். நேற்று அங்கு நடந்த சிறப்பு பூஜையில் மாநகர போலீஸ் கமிஷனர் அமர்சிங் கலந்து கொண்டார். இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போலீஸ் கெடுபிடி அதிகமாக இருந்ததால் மர்ம நபர்கள், தங்கள் திட்டத்தை கைவிட்டு, வேறு இடங்களில் குண்டு வைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. வியாழக்கிழமை என்பதால் சாய்பாபா கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அங்கு குண்டு வெடித்திருந்தால் ஏராளமான பக்தர்கள் உயிரிழந்திருக்கக் கூடும்.
இரண்டாவது முறையாக குண்டு வெடிப்பில் சிக்கியவர்: ஐதராபாத்தில் உள்ள மெக்கா மசூதி வாசலில் 2007ம் ஆண்டு குண்டு வெடித்தது. இதில் 11 பேர் கொல்லப்பட்டனர். மிர்சா அப்துல்வாசி என்ற கல்லூரி மாணவர் படுகாயமடைந்தார். அவரது கழுத்து, கால்கள் மற்றும் வயிறு பகுதியில் காயம் ஏற்பட்டது. தீவிர சிகிச்சைக்கு பிறகு அவர் குணமடைந்தார். கல்லூரி படிப்பை முடித்த மிர்சா, சரியான வேலை கிடைக்காததால் கடந்த மாதம் ஐதராபாத் தில்சுக் நகரில் கொனார்க் தியேட்டர் அருகே உள்ள கடை ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். தில்சுக் நகரில் நேற்று நடந்த குண்டு வெடிப்பிலும் மிர்சா அப்துல்வாசி சிக்கினார். அவருக்கு முதுகு, இடதுபக்க விலா பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை யசோதா மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அப்துல்வாசியின் தந்தை முகமது அசாமுதீனுக்கு தகவல் தரப்பட்டது. தனது மகன் 2வது முறையாக தீவிரவாத தாக்குதலுக்கு ஆளானதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
[1] ஆந்திராவில் கடந்த 2005ம் வருடம் மேடக் மாவட்டத்தின் அப்போதைய கலெக்டரை தவறாக பயன்படுத்தியது தொடர்பான வழக்கின் முக்கிய குற்றவாளி ஆசாதுதீன் ஒவைசி இன்று மேடக் கோர்ட்டின் முன் ஆஜரானார். அவரது சகோதரர் அக்பருதீன் ஒவைசி நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.
[5] Sayed Maqbool and Imran Khan, both of whom hail from Nanded district in Maharashtra, told police during interrogation after their arrest in October that they both did a recee of Dilsukhnagar, Begum Bazar and Abids in the Andhra Pradesh capital on a motorcycle in July 2012. “About a month before Ramzan in 2012, Maqbool helped Imran in doing a recce of Dilsukhnagar, Begum Bazar and Abids in Hyderabad on a motorcycle. This was done on the instruction of Riyaz Bhatkal,” the officials said.
http://www.dnaindia.com/india/report_pune-blasts-accused-did-a-recce-of-blast-site-other-hyderabad-areas_1803092
பிரிவுகள்: 2008 குண்டு வெடிப்பு, அல் - உம்மா, அல் - காய்தா, அல் - கொய்தா, அல் அர்பி, அல் முஹம்மதியா, அல் ஹதீஸ், ஆயுதச் சட்டம் மற்றும் வெடிமருந்து சட்டம், இணைதள ஜிஹாத், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய யூனீயன் முஸ்லீம் லீக், இந்திய விரோதத் தன்மை, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இரட்டை வேடம், உருது மொழி, உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், உள்ளூர் தீவிரவாத கும்பல், உள்ளே நுழைவது, ஊரடங்கு உத்தரவு, ஐதராபாத், ஒவைஸி, ஓட்டு, ஓட்டுவங்கி, கத்தி, கலவரம், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்கள், காங்கிரஸ், குஜராத், குண்டி, குண்டு தயாரிப்பு, குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு வழக்கு, கைது, கையெறி குண்டுகள், செக்யூலார் அரசாங்கம், ஜமாத்-உத்-தாவா, ஜஹல்லியா, ஜிஹாதி குருரக் குணம், ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், டெட்டனேட்டர்கள், தக்காண முஜாஹித்தீன், தருமம், தர்மம், தில்ஷுக், தில்ஷுக் நகர், துப்பாக்கி, தேச விரோதம், தேசிய ஜிஹாதி தீவிரவாதம், தேசிய புலனாய்வு இயக்குனர், தேசிய புலனாய்வு துறை, நூருல் ஹூடா, பட்கல், பட்டகல், பட்டக்கல், பள்ளிவாசல், பழமைவாதம், பீரங்கி, புனிதப் போர், பென்டா எரித்ரிடோல் டிரைநைட்ரேட், பேட்டரி கட்டைகள், மக்கா, மஜ்லிச்துல் முஸ்லிமீன், மும்பை குண்டு வெடிப்பு, முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம் ஓட்டுவங்கி, முஸ்லீம்களின் தீவிரவாதம், முஸ்லீம்களின் வெறித்தனம், யுத்ததருமம், யுத்ததர்மம், ரத்தம், ரமலான், ரமழான், ரமஷான், ரம்ஜான், வஞ்சகம், வெடிகுண்டு பொருட்கள், வெடிகுண்டுகள், வெடிக்கச் செய்யும் கருவிகள், வெடிபொருள் வழக்கு
Tags: இந்திய முஜாஹித்தீன், இந்து, இந்துக்கள், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாம், ஐதராபாத், ஒவைசி, ஒவைஸி, கத்தி, குண்டு, குண்டு வெடிப்பு, கேமரா, கொலை, கொலைவெறி, கோயில், கோவில், சய்பாபா, சாய், சிறுபான்மையினர், செக்யூலரிஸம், ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாத், துப்பாக்கி, பட்கல், பட்டகல், பாபா, பீரங்கி, புனிதப்போர், மதம், மருந்து, முஜாஹித்தீன், முஸ்லிம்கள், முஸ்லீம், ரத்தம், ரியாசுதீன், வெறி
Comments: 3 பின்னூட்டங்கள்
அண்மைய பின்னூட்டங்கள்