Posted tagged ‘இந்துக்கள் கொடுமைப் படுத்தப்படல்’

மசூதிக்கு வெளியே தண்ணீர் குடித்த இந்து சிறுவன் அடித்து நொறுக்கப்பட்டான், மற்ற இந்துக்களும் அடித்து விரட்டப்பட்டனர்

ஜூலை 11, 2010

மசூதிக்கு வெளியே தண்ணீர் குடித்த இந்து சிறுவன் அடித்து நொறுக்கப்பட்டான், மற்ற இந்துக்களும் அடித்து விரட்டப்பட்டனர்

இந்துக்களைக் கொல்லும் அமைதியான இஸ்லாம்: இஸ்லாம் என்றால் அமைதி என்றேல்லாம் எப்பொழுதும் தம்பட்டம் அடித்துக் கொள்வது முஸ்லீம்களின் வழக்கம். ஆனால், இஸ்லாத்திலேயே ஏன் அந்த அமையில்லை என்ற மர்மத்தை அவர்கள் என்றும் விளக்கியதில்லை. இந்தியாவில் முஸ்லீம்கள் செய்யும் கலாட்டாக்களை சொல்லமாளாது. ஆனால், பாகிஸ்தானில் உள்ள இந்துக்களின் நிலைமையை யாரும் நினைத்துக்கூடப் பார்ப்பது கிடையாது. பல கோடிகளில் இருந்த இந்துக்களின் மக்கட்தொகை 1947லிருந்து, இப்பொழுது, அப்படியே குறந்து விட்டது.

அமைதியாக இருக்கும் இந்திய செக்யூலார் ஊடகங்கள்: ‘Hounded’ Hindus take shelter in Karachi cattle pen after drinking water from mosque என்று கூகுள் தேடலில் ஏகப்பட்ட விஷயங்கள் வெளிவருவது, வியப்பாக இருக்கிறது. அமைதியாக இருக்கும் இந்திய செக்யூலார் ஊடகங்கள், ஆமாம் “இஸ்லாமாக” இருக்கும் அவற்றிடம் எதையும் எதிர்பார்க்கமுடியாதுதான். அதனால்தான், அப்ஸல்குரு உன்னுடைய மாப்பிள்ளையா என்று கேட்டால் இந்தியாவில் கோபம் வருகிறது போலும்!

கராச்சியில் இந்துக்கள் தாக்கப்பட்டது: 09-07-2010 வெள்ளிக்கிழமையன்று கராசியில் நடந்த சம்பவம், முஸ்லீம்கள் இந்துக்களின்மீது எவ்வளவு துவேஷத்தைக் கொண்டுள்ளனர் என்று மெய்ப்பிக்கிறது. கராச்சியில் மெமோன் கோத் என்ற இடத்தில் வசிக்கும் 60 இந்துக்கள் தங்களது பெண்கள், குழந்தைகளுடன் அங்கியிருந்து வெளியேற்றப்பட்டனர். காரணம், மசூதிக்கு வெளியே இருந்த குளிர்ந்த தண்ணீரரை ஒரு இந்து சிறுவன் குடித்துவிட்டானாம், அதனால் அவன் அடித்து நொறுக்கப்பட்டான். பிறகு, அங்கிருந்த முஸ்லீம்களின் வெறி மற்ற இந்துக்களின்மீது பாய்ந்தது. உடனே முஸ்லீம்கள் பல இந்துக்களை அடித்து விரட்டினர். எல்லோரும் பயந்து ஓடி அருகிலிருந்த மாட்டுக்கொட்டையில் அலைக்கலம் புகுந்தனர்.

இந்துக்களின் அடிப்படை உரிமைகள் காக்கப்படும் லட்சணம்: மீருமல் என்ற அந்தப் பகுதியைசேர்ந்த இந்து கூறுவதாவது, “ஒரு பண்ணையில் கோழிக்குஞ்சுகளை பாதுகாக்கும் வேலையில் உள்ள என்னுடைய மகன் தினேஷ் மசூதிக்கு வெளியே இருந்த குளிர்ந்த தண்ணீரரை குடித்துவிட்டானாம். உடனே நரகமே இங்கு வந்துவிட்டது போலயிருந்தது. அவனை அங்கிருந்தவர்கள் அடித்து உதைத்தனர்”.

“பிறகு 150 ஆட்கள் வந்து எங்களை அடித்ததில், ஏழு பேர் படுகாயம் அடைந்தனர். அனர்கள் ஜின்னா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்”, என்று விளக்கினார்.

அடிபட்டா ஹீரா சொல்வதாவது, அங்கிருக்கும் 400 குடும்பங்களையும், முஸ்லீம்கள், அவரவர் இருப்பிடங்களை விட்டுவிட்டு, அங்கிருந்து சென்று வேறு இடத்திற்கு சென்றுவிடுமாறு மிரட்டுகிறார்கள். நாங்கள் எங்களது வீடுகளுக்குக் கூடச் செல்ல பயந்து, இந்த மாட்டுக் கொட்டகையில் பயந்து வாழ்கிறோம். ஏனெனில் அவர்கள் எங்களைக் கொன்றுவிடுவதாகக் கூட மிரட்டியிருக்கிறார்கள்”.

கண்டுகொள்ளாத போலீஸ்காரர்கள்: போலீஸ்காரர்களுக்கு இவ்விஷயங்கள் எல்லாமே தெரியும், ஆனால், இந்துக்களுக்கு எதிராக இழைக்கப்படும் தீமைகளை, குற்றங்களை தடுக்க எந்தவிட நடவடிக்கையும் எடுப்பதில்லை. ஆமாம், அங்கிருக்கும் போலீஸார் எல்லாமே முஸ்லிம்கள், பிறகு அவர்கள், எப்படி நியாயமாக நடந்து கொள்வார்கள்?

பாகிஸ்தானில் அதிகரித்துவரும் கொடுமைகள், சித்திரவதைகள், கொலைகள்: இந்துக்கள் தாங்கமுடியாத அளவிற்கு, பாகிஸ்தானில் கொடுமைப்படுத்தப்படுகின்றனர்.

பாகிஸ்தானிய-இந்துக்கள்-இந்திய-பிரஜைகளாக-விருப்பம்

பாகிஸ்தானிய-இந்துக்கள்-இந்திய-பிரஜைகளாக-விருப்பம்

இதனால், அவர்கள், இந்திய பிரஜ உரிமையைப் பெறத் துடிக்கின்றனர்.

அமர்நாத் யாத்திரிக்கைக்கு ஜிஹாதிகளின் அச்சுருத்தல்!

ஜூலை 10, 2010

அமர்நாத் யாத்திரிக்கைக்கு ஜிஹாதிகளின் அச்சுருத்தல்!

அமர்நாத் யாத்திரைத் தொடங்கியது: ஸ்ரீநகர், ஜூலை.1, 2010: இந்த ஆண்டிற்கான அமர்நாத் யாத்திரை ஜம்மு-காஷ்மீரில் இன்று தொடங்கியது. 7000த்துக்கும் மேற்பட்டோர் பல்தால் பகுதியிலிருந்து தங்களின் யாத்திரையைத் தொடங்கியதாகவும், 1,100 பேர் பல்தால் செல்வதற்காக மணிகாம் முகாமிலிருந்து புறப்பட்டிருப்பதாகவும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அனைத்து யாத்ரீகர்களும் பத்திரமாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், பல்தால், மணிகாம் மற்றும் யாத்திரைப் பாதையில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

உரடங்கு மற்றும் தெரு கலாட்டா-கலவரம் சாக்கு வைத்துக் கொண்டு தாக்க திட்டம்: ஜூலை 10, 2010: தீவிரவாதிகள் அமர்நாத் யாத்திரிகர்களைத் தாக்க திட்டமிட்டிருப்பதாக, அவர்களின் ரகசிய உரையாடல்களினின்று அறியப்படுகிறது[1]. காஷ்மீரத்தில் மற்ற இடங்களில் கலாட்டா செய்து, திசைத் திருப்பி, அமர்நாத் யாத்திரிகர்களைத் தாக்கவிருப்பதாக, அதே மாதிரியான, தீவிரவாதிகளின் பேச்சுகளை இடைமறித்து, ரகசியமாகக் கேட்டபோது தெரியவந்துள்ளது[2]. இதனால், யாத்திரிகர்களுக்கு பாதுபாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது[3].

தீவிரவாதிகள் தாக்குவது, பக்தர்களைக் கொல்வது என்பது அவர்களைப் பொறுத்த வரைக்கும் வாடிக்கையான விஷயம்: ஜிஹாதி, இஸ்லாமிய, பயங்கரவாத, தீவிரவாத கும்பல்களுக்கு இந்துக்களைக் கொல்வது என்பது புண்ணிய காரியமாகக் கருதுகின்றனர். ஏனெனில், அவஎகளைப் பொறுத்த வரைக்கும் காஃபிர்களைக் கொல்வது, குரானின் படி அவ்வாறு கருதப்படுகிறது என்பர். உதாரணத்திற்கு, 2002ல் நடந்த நிகழ்சி கீழே கொடுக்கப் படுகிறது.

kashmir-siva-temple-2010

kashmir-siva-temple-2010

ஒரு சிவன் கோவில் தாக்கப்பட்டது: ஒரு சிவன் கோவில் தாக்கப்பட்டது என்ற செய்தி வந்ததும், பக்தர்கள் கவலைப்பட்டனர். அமர்நாத் சங்கர்ஸ சமிதி பந்திற்காக 03-07-2010 அன்று அழைப்பு விடுத்தது[4]. பிரச்சினை வேண்டாம் என்று போலீஸார் அந்த பக்தர்கள் மற்றும் பிஜேபி.காரர்களை கைது செய்தது. முழுவிவரங்கள் வெளியிடாமல், சென்ஸார்ஷிப் அமூலில் உள்ளதை இந்து இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்[5]. காஷ்மீரத்தில் கோவில்கள் தாக்கப் படுவது, இடிக்கப்படுவது, இஸ்லாமிய தீவிரவாதிகள்-ஜிஹாதிகளுக்கு வழக்கமாக இருந்து வந்துள்ளது[6].

Siva-temple-NO-ADMISSION-2010

Siva-temple-NO-ADMISSION-2010

கோவிலின் மீது “அனுமதி இல்லை” என்று எழுதி மிரட்டுவது தான் காஷ்மீர் முஸ்லிம்கள், இந்துக்களின் உரிமைகளைக் காக்கும் லட்சணம்! மற்ற மாநிலங்களில் உள்ள முஸ்லீம்கள், தங்களது அருமை-பெருமைகளை மட்டும் இணைதளங்களில் போட்டு, பாராட்டிக் கொள்கிறார்களே, இத்தகைய கொடுமைகளுக்கு ஏன் பதில் சொல்லாமல் இருக்கிறார்கள்? குறிப்பாக தமிழ்-முஸ்லீம்கள் கூட கண்டு கொள்ளாமல் இருப்பது, அவர்களது ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கைத்தான் காட்டுகிறது

இதே போக்குதான், அமர்நாத் யாத்திரை விஷயத்திலும் உள்ளது. அமர்நாத் யாத்திரையினால், கோடிகளில் பலனடைவது முஸ்லீம்கள்தான். கடைகள் வைத்திருப்பது, யாத்திரிகர்களை குதிரை மீது ஏற்றி அழைத்துச் செல்வது, தங்க இடம் கொடுப்பது………………….என்று எல்லாவற்றையும் ஒட்டு மொத்தமாக குத்தகை எடுத்துக் கொண்டு கொள்ளையடிக்கின்றனர்.


[1] http://www.hindustantimes.com/Terror-attack-feared-during-Amarnath-Yatra/Article1-563611.aspx

[2] http://www.indiablooms.com/NewsDetailsPage/newsDetails100710k.php

[3] The Hindu, Government sounds alert for Amarnath Yatra, dated 10-07-2010, http://www.thehindu.com/news/national/article509523.ece

[4] http://www.telegraphindia.com/1100704/jsp/nation/story_12644189.jsp

[5] http://www.groundreport.com/Business/Hindu-organisations-condemned-the-action-of-the-go_2/2925456

[6] http://www.kashmir-information.com/Atrocities/Temples/temples3.html