Posted tagged ‘இந்திய விரோதி ஜிலானி’

காஷ்மீர இந்துக்கள் பிரிவினைவாதி-இந்திய விரோதி ஜிலானியை நக்கலடித்து, கோஷங்கள் எழுப்பினர்!

ஒக்ரோபர் 21, 2010

காஷ்மீர இந்துக்கள் பிரிவினைவாதி-இந்திய விரோதி ஜிலானியை நக்கலடித்து, கோஷங்கள் எழுப்பினர்!

காஷ்மீர் இந்துக்களுக்கு சுரணை வந்துள்ளது: இந்துக்களுக்கு இப்பொழுதுதான் சுரணையே வருகிறது போல இருக்கிறது. அதுவும் காஷ்மீர இந்துக்களுக்குத்தான் வந்துள்ளது. தில்லியில் மண்டி ஹவுஸ் எனப்படுகின்ற இடத்தில், எல்.டி.ஜி. அரங்கத்தில் ஒரு கருத்தரங்கத்தில் பங்கு கொள்ள பிரிவினைவாதி-இந்திய விரோதி சையது அலி ஷா ஜிலானி வந்திருந்தபோது, இந்தியாவிற்கு எதிராக பிரிவினைவாத கோஷ்டி முழக்கமிட்டது[1]. அப்பொழுது அங்கு இந்திய மூவர்ண கொடியுடன் வந்த காஷ்மீர இந்துக்கள் இந்தியாவிற்கு சார்பாக “பாரத் மாத கி ஜெய், வந்தே மாதரம்” கோஷமிட்டதுடன்[2], பிரிவினைவாதி-இந்திய விரோதி ஜிலானியை “வெளியே போ” நக்கலடித்தனர்[3]. இப்படி இந்துக்கள் செய்ததைக் கண்டு, ஒரு நிமிடம் பிரிவினைவாதிகள் திகைத்து விட்டனர்.

பிரிவினைவாதிகளின் இந்திய விரோத கோஷங்கள்: தலைநகரில் வந்து, இவ்வாறு பிரிவினைவாதிகள் கோஷமிட்டு கலாட்டா செய்வது பலருக்கு பிரமிப்பாக இருந்தது. ஹுரியத் மாநாட்டின் தலைவரான பிரிவினைவாதி-இந்திய விரோதி ஜிலானி பேசுவதாக இருந்தது. ஆனால் பேசுவதற்கு முன்னமே, இத்தகைய ஆதரவு-எதிர்ப்பு கோஷங்கள் கிளம்பின. அப்பொழுது யாரோ வீசிய செருப்பு மேடையை நோக்கி வந்தது! ஆகையால் போலீஸார் இந்துக்களை அரங்கத்திலிருந்து வெளியேற்றினர்.

ஆஜாதிதான் ஒரே வழி”: “ஆஜாதிதான் ஒரே வழி” என்ற தலைப்பில் பிரிவினைவாதிகள் கருத்தரங்கத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். குருசரண்சிங் என்பவர் ஜிலானியை வரச்சொல்லியிருந்தாராம்[4]. பேராசிரியர் சுஜாதா ராவ் என்பவர் காஷ்மீரத்திற்கு விசேஷ அந்தஸ்து கொடுக்கவேண்டும் என்று பேசியதாகத் தெர்கிறது. மேலும் அரசியில் ரீதியாக கைது செய்யப்பட்டுள்ள கைதுகள் விடுவிக்கப்படவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப் பட்டது. வழக்கம் போல காஷ்மீர இந்துக்களைப் பற்றி யாரும் கண்டுக்கொள்ளவில்லை, பேசவில்லை. சிதம்பரம் எப்படி அனுமதி அளித்தார் என்பது வேடிக்கைதான்.

ஜெய்ஸ்-இ-மொஹம்மது  தீவிரவாதிகள்: ஜெய்ஸ்-இ-மொஹம்மது (Pakistan-based Jaish-e-Mohammad militant) தீவிரவாதிகள் ஸ்ரீநகருக்கு அருகிலுள்ள பகுதியில் புகுந்து பயங்கரவாத வேலைகளை ஆரம்பித்தபோது, ராணுவவீரர்கள் போராடி சுட்டுக் கொன்றனர்[5]. இன்னும் ஒரு பயங்கரவாதி மறைந்துள்ளதாகத் தெரிகிறது.