Posted tagged ‘இந்திய யூனியன்’

தமிழகத்தில் முஸ்லிம் கட்சிகள் உருவானது, மாறியது, கூட்டணியில் செயல்பட்டது (1960-2013) – பிஜேபியுடன் முஸ்லிம் கட்சி கூட்டு பற்றி ஒரு அலசல் கட்டுரை (2)

திசெம்பர் 17, 2013

தமிழகத்தில் முஸ்லிம் கட்சிகள் உருவானது, மாறியது, கூட்டணியில் செயல்பட்டது (1960-2013) – பிஜேபியுடன் முஸ்லிம் கட்சி கூட்டு பற்றி ஒரு அலசல் கட்டுரை (2)

kather01 (2)அனைத்து  இந்திய  முஸ்லிம்  முன்னேற்ற  கழகம்  பிஜேபிக்கு  ஆதரவு  கொடுப்பது[1]: அனைத்து இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம் கட்சியின் தலைவர் சதக்கத்துல்லா, சென்னை பா.ஜனதா அலுவலகமான கமலாலயத்தில் வெள்ளிக்கிழமை (13-12-2013) நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் பொன். ராதாகிருஷ்ணனிடம் தனது கட்சியின் ஆதரவு கடிதத்தை வழங்கினார்[2]. இந்த நிகழ்ச்சியின் போது, காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன், பா.ஜனதா மாநில செயலாளர் வானதி சீனிவாசன், செயற்குழு உறுப்பினர் கே.டி. ராகவன் ஆகியோர் உடன் இருந்தனர். இது குறித்து பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:

பா.ஜனதா தலைமையிலான தேசிய  ஜனநாயக  கூட்டணியில் சதக்கத்துல்லா  தலைமயிலான  அனைத்து  இந்திய  முஸ்லிம் முன்னேற்ற கழகம்  இணைந்துள்ளதுவரும் பாராளுமன்ற தேர்தலில்  நரேந்திர  மோடிக்கு  ஆதரவாக  முஸ்லிம்  மக்களிடம் அவர்கள்  ஆதரவு  திரட்டுவார்கள் டிசம்பர்  1-ஆம் தேதி தொடங்கிய  வீடுதோறும்  மோடிஉள்ளம் தோறும்  தாமரைஎன்ற  பாத யாத்திரைக்கு  தமிழகத்தில்  பெரும்  வரவேற்பு கிடைத்துள்ளதுஇதுவரை  700-க்கும் அதிகமான  கிராம பஞ்சாயத்துக்களில்  இந்த  யாத்திரை  நிறைவு  பெற்றுள்ளது. வீடுகள் தோறும்  சென்று  மக்களை  நேரடியாகச்  சந்திக்கும் போது மக்களின்  பிரச்னைகள்கிராமங்களின்  பிரச்னைகளை அறிந்து கொள்ள  முடிகிறதுஇந்த  பாத யாத்திரை வரும்  22-ஆம் தேதி வரை நடைபெறும்”, இவ்வாறு அவர் கூறினார்[3]. “அனைத்து இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம் இந்த நிலையில் பாரதிய ஜனதா கூட்டணியில் சேர்ந்துள்ளது[4] தமிழகத்தில் மட்டுமல்ல தேசிய அளவிலும், முஸ்லிம்களின் அணுகுமுறையில் மாற்றம் இருப்பதைக் காணமுடிகிறது. ஆனால், முஸ்லிம்கள் மற்ற விசயத்தில் ஜாக்கிரதையுடன் தான் பிஜேபியை அணுகுவார்கள் என்பதை அறியலாம். அப்பாஸ் நக்வி போன்ற முஸ்லிம் தலைவர்கள் பிஜேபியில் நெடுங்காலமாக இருந்து வருகின்றனர். ஆனால், திராவிடப் பின்னணியில், ஒரு முஸ்லிம் கட்சி, பிஜேபியுடன் எப்படி செயல்படும் என்று பார்க்கவேண்டும்”, என்று முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன்[5]. பொதுவாகவே, முஸ்லிம்கள் தங்களது வட்டட்த்தில் இருந்து வெளியே வரமாட்டார்கள், வந்தால் இருபக்கத்திலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் முதல் முறையாக முஸ்லிம் கட்சி ஒன்று பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்திருப்பது, அந்த கட்சியினருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது[6]. தமிழ்நாட்டில் முதல் முறையாக முஸ்லிம் கட்சி ஒன்று பாஜகவுக்கு ஆதரவு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது[7].
kather01இந்திய  யூனியன்  முஸ்லிம்  லீகிலிருந்து  யாரும்  பிரிந்து   செல்லவில்லைசதக்கத்துல்லா என்ற  நபர்  லீகை  சார்ந்தவரும்  அல்ல: பாரதீய ஜனதா கட்சியை முஸ்லிம் சமூகத்தில் எவரும் ஆதரிப்பார்கள் என்பது பகல் கனவே என குறிப்பிட்டுள்ள முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெயரை இது போன்ற விஷமத்தனமான செயல்களுக்கு பயன்படுத்துவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும் தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் இருந்து ஒரு நபர் பிரிந்து சென்று புதிய கட்சியை தொடங் கியுள்ளதாகவும், அது நாடாளு மன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி கூட்டணியை ஆதரிக்க போவதாகவும் சில நாளிதழ்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. அச்செய்திகளில் குறிப்பிடப் பட்டுள்ளவாறு இந்திய யூனியன் முஸ்லிம் லீகிலிருந்து எவரும் பிரிந்து செல்லவும் இல்லை சதக்கத்துல்லா என்ற நபர் இந்திய யூனியன் முஸ்லிம் லீகை சார்ந்தவரும் அல்ல. 1972ல் முகமது இஸ்மாயில் இறந்தபோது, திமுக இரண்டாக உடைந்தது, அதிமுக உருவானது. அதேபோல, “இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்” இரண்டாகி, “இந்திய தேசிய லீக்” [Indian National League (INL)] உருவானது. இவற்றிற்கு முறையே அப்துல் சமத் மற்றும் அப்துல் லத்தீப் தலைவர்களாக இருந்தனர். அப்துல் லத்தீப் கருணநிதிக்கு வேண்டியவராக இருந்தார். எப்படியாகிலும், இரண்டும் திராவிடக் கட்சிகளுடன் கூட்டு வைத்துக் கொண்டு காலம் தள்ளின. எனவே, லீக் ஒரு தனித்துவம் வாய்ந்த கட்சி அல்லது குழுமம் என்று ஒப்புக்கொள்ள முடியாது.

இந்த தகவல் அவரை பா.. அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளதாக குறிப்பிடப் பட்டுள்ள காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் அவர்களிடம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலை[8]மையகத்திலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது[9].kather02

பாஜகவுக்கு  ஆதரவு  கடிதம்  கொடுத்த   “சதாம்  என்.கே.எம்.  சதக்கத்துல்லாஎங்கள்  ஆள்  இல்லை: சதாம் என்.கே.எம்.சதக்கத்துல்லா, நிறுவனத் தலைவர், அகில இந்திய முஸ்லிம் முன்னேற்றக் கழகம், 66 மரைக்காயர் லெப்பை தெரு, மண்ணடி சென்னை -1 என முகவரியிட்டு 9677843231 என தொலைபேசி எண்ணையும் குறிப்பிட்டு லெட்டர் பேட் தயாரித்து பா...,வுக்கு ஆதரவுக் கடிதம் அளிக்கப் பட்டிருப்பதாக எங்களிடம் தெரிவிக்கப்பட்டது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகை பொறுத்த வரை மாநில மாவட்ட நிர்வாகிகளில் என்.கே. எம்.சதக்கத்துல்லா என்ற பெயரில் ஒருவரும் இல்லை. எங்களின் துணை அமைப்புகளான முஸ்லிம் யூத் லீக், முஸ்லிம் மாணவர் பேரவை, சுதந்திர தொழிலாளர் யூனியன் போன்றவற்றிலும் இந்த பெயரில் எந்த நிர்வாகியும் இல்லை. ஒரு முஸ்லிம் இவ்வாறு செய்யலாமா, கூடாதா என்ற நிலையை உருவாக்க பார்க்கிறார்கள். ஆனால், ஏற்கெனவே தமிழக முஸ்லிம்கள் திராவிடக் கட்சிகளுக்குப் பிரிந்து தான் ஓட்டளிக்கின்றனர், ஆனால் பலன்களை மட்டும் அனுபவித்து வருகின்றனர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெயரை பயன்படுத்தியது உண்மையாக இருக்குமே யானால் அது பாரதீய ஜனதா கட்சி தலைமையை ஏமாற்றுவதற்காக செய்யப்பட்ட திட்ட மிட்ட மோசடி செயலேயாகும்.kather01 (1)

 இது  போன்ற  காரியங்களுக்கு  இந்திய  யூனியன்  முஸ்லிம்  லீக்  பெயரை  மோசடியாக  பயன்  படுத்துவோர் மீது  சட்டநடவடிக்கை  எடுக்கப்படும்: மதசார்பற்ற, சமூக நீதியை நிலைநாட்டும் ஜனநாய சக்திகளே நாட்டை ஆளும் வகையில் நாடாளுமன்ற தேர்தலில் அவர்களை ஒருங்கிணைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெரும் முயற்சி மேற்கொண்டுள்ளது. ஒட்டு மொத்த தமிழக முஸ்லிம் சமுதாயமும் இத்தேர்தலில்

ஒருமுக முடிவெடுக்க வலியுறுத்தும் வகையில் எதிர் வரும் 28 – ம் தேதி திருச்சியில் மாபெரும் மாநாட்டையும், இளம்பிறை எழுச்சி பேரணியையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்துகிறது. அதில் பள்ளிவாசலை மையமாகக் கொண்ட 12 ஆயிரம் மஹல்லா ஜமாஅத் நிர்வாகிகள், உலமா பெருமக்கள் பல்லாயிரக் கணக்கில் கலந்து கொள்கின்றனர். ஒட்டு மொத்தமாக முஸ்லிம்கள் இவ்வாறு ஜமாத் போன்ற முறையில் தீர்மானம் செய்யலாம், ஆனால், எப்படி இந்தியக் கட்சிகளில் முஸ்லிம்கள் பிரிந்து கிடக்கின்றனரோ, அதே போல, தமிழக முஸ்லிம்களும் தங்களது விருப்பங்களுக்கு ஏற்ப அரசியல் கட்சியை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். திராவிடக்கட்சிகளை ஆதரிக்கும் போது, அவ்வாறுதான் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் பா...,விற்கு முஸ்லிம் சமுதாயம் ஆதரவளிக்கும் என்று வெளிவரும் செய்தி பகல் கனவேயாகும். இதுபோன்ற காரியங்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெயரை மோசடியாக பயன்படுத்துவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் படும்.” இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.

IUML General secretary Iqbalசையது  இக்பால், இந்திய  தவ்ஹித்  ஜமாத்  பொது  செயலாளரின்  கடுமையான  தாக்கு[10]: ஆள் கிடைக்கமால் அனாதை ஒருவனை பிடித்து மாமா மணியன் செய்த மாமா வேலை தான் இந்த பிஜே பி உடன் சேருந்த முஸ்லிம் கட்சி நாடகம் இந்திய தவ்ஹித் ஜமாத் பொது செயலாளர் இக்பால் சத்தியம் தொலைக்காட்சியில் பரபரப்பு பேச்சு:

சத்தியம்டிவி: இப்படி முஸ்லிம் கட்சி பிஜேபி க்கு ஆதரவை கொடுத்ததை நீங்கள் எப்படி பார்க்கிரிர்கள் ஆனால் உங்கள் முஸ்லிம் அமைப்புகளின் வெப் சைட்டுகள் எல்லாம் தேடி விட்டோம் இப்படி ஒரு இயக்க பெயரை இல்லையே !!! சையதுஇக்பால்அவர்கள்: நான் நீண்ட அரசியல் வரலாற்றை நான் படித்தவன் .பயணித்தவன் என்ற முறையில் தமிழ் நாட்டில் இதுவரை இப்படி ஒரு முஸ்லிம் அமைப்பு பெயரைவோ? இப்படி அயோக்கிய நபரையோ? பார்த்தது இல்லை. மாறாக கந்தியாவதி போல் தன்னை காட்டி கொண்டு பிஜேபிக்கு ஆள் பிடிக்கும் புரோக்கராக மாறியுள்ள மணியன்! தமிழ் நாடு முழுவதும் சுற்றி பார்த்தார் யாருமே பிஜேபிக்கு ஆதரவு அளிப்பது போல் இல்லை. அதனால் ஒரு முஸ்லிம் பெயர் தாங்கி வேண்டும் என்று அநாதை ஒருவரை பிடித்து வந்து முஸ்லிம் இயக்கம் ஆதரவு என்று இப்படி ஈன வேலையே பார்த்து உள்ளார்.

நரபலி  மோடியால்  அல்லாஹ்வை  உண்மையாக  வணங்ககூடிய  உண்மையான  முஸ்லிம்களை  ஆதரவு  என்ற  வலையில்  வீழ்த்த   முடியாது: அவரால் இல்லை நரபலி மோடியால் அல்லாஹ்வை உண்மையாக வணங்க கூடிய உண்மையான முஸ்லிம்களை ஆதரவு என்ற வலையில் வீழ்த்த முடியாது. அப்படி ஒரு முஸ்லிமும் ஆதரவு தர மாட்டான். உதாரணதுக்கு ததஜ என்ற அமைப்பில் உள்ள ஒரு நிருவாகி 10 %

இட ஒதிக்கீடு அளித்தால் பிஜேபிக்கு ஆதரவு அளிப்போம் என்று அறிவிப்பு செய்தற்கு முஸ்லிம் சமுதயாத்தில் இருந்து பெரிய கண்டனங்கள் எழுந்தன. அதனால், நாங்கள் பாராளமன்றத்தில் இன்ஷா அல்லாஹ் யாரை அமரவைப்பது என்பதை விட யாரை அமர விடகூடாது என்ற விசயத்தில் தெளிவாக இருக்கிறோம். முஸ்லிம் லீக் தலைவர் எங்கள் அமைப்புக்க களங்கம் விளைவித்து விட்டதாக அந்த அயோக்கியன் சதக்கத்துல்லாவை சொல்லி உள்ளார் நாங்கள் சொல்லுகிறோம். ஆக, பேரம் பேசி பாஜகவுடன் கூட்டு சேர முஸ்லிம்கள் தயாராக உள்ளார்கள் என்பது நிதர்சனமாகத்தான் உள்ளது. ஆகவே, யாரை பிரதம மந்திரியாக்க வேண்டும் என்ற சக்தியே எங்களிடம் தான் உள்ளது என்று ஆணவத்துடன் இப்படி பேசுவது, மற்ற இந்தியர்களும் கவனிக்கத்தான் செய்வார்கள். கடவுளின் பெயரால், ஆளுக்கு ஆள் ௐஇளம்பி விட்டால், செக்யூலரிஸ நாட்டில், மற்றவர்கள் ஒன்றும் செய்ய முடியாதே!

அவன் ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் களங்க படுத்தும் வேலையே மணியன் செய்ய தொடங்கி உள்ளார் அதுவும் இல்லாமல், இந்த நாடகம் எப்படி மோடி குல்லாவும் புர்க்காவும் விலைக்கு வாங்கி கூட்டத்தை கூட்டி முஸ்லிம்கள் ஆதரவு நாடகத்தை நடத்தினாரோ அதன் தொடர்ச்சி இது அந்த அயோக்கியனை ஒரு போதும் பிரதமராக முஸ்லிம்கள் வர விட மாட்டோம்”, என்று கடுமையாக பதில் அளித்துள்ளார்[11].

வேதபிரகாஷ்

© 17-12-2013


[3] தினமணி,பாஜககூட்டணியில்முஸ்லிம்முன்னேற்றக்கழகம், By dn, சென்னை, First Published : 14 December 2013 03:29 AM IST

[6] மாலைமலர், தமிழ்நாட்டில்முதல்முறையாகபா.ஜனதாகூட்டணியில்முஸ்லிம்கட்சி: பொன். ராதாகிருஷ்ணன்முன்னிலையில்சேர்ந்தது, பதிவு செய்த நாள்: சனிக்கிழமை, டிசம்பர் 14, 10:21 AM IST.

[9] முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ், முஸ்லிம்லீக்பெயரைக்களங்கப்படுத்துவோர்மீதுசட்டநடவடிக்கை: எச்சரிக்கை!, 16-12-2013, 2:16 PM

 

முஸ்லிம் மாணவர்களுக்கு தனி மருத்துவக் கல்லூரி வேண்டும்: IUMLன் கோரிக்கை!

திசெம்பர் 13, 2010

முஸ்லிம் மாணவர்களுக்கு தனி மருத்துவக் கல்லூரி வேண்டும்: IUMLன் கோரிக்கை!

IUMLன் தமிழ் மாநில மாநாடு: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தமிழ் மாநில மாநாடு சென்னை தாம்பரத்தில் சனிக்கிழமையன்று (11-12-2010) நடைபெற்றது. இம்மாநாட்டில் கருணாநிதிக்கு, “நானிலம் போற்றும் நல்லிணக்க நாயகர்” விருதும் வழங்கப்பட்பட்டது. விழாவில் கலந்து கொண்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவரும், மத்திய ரெயில்வே இணை அமைச்சருமான இ .அகமது `இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இலக்கு 2020′ என்ற நூலை வெளியிட்டு ஆற்றிய சிறப்புரையில், “கலைஞர் கருணாநிதி ஒரு குறிப்பிட்ட கட்சிக்கோ, குறிப்பிட்ட சமுதாயத்துக்கோ மாத்திரம் தலைவர் அல்ல. அவர், முஸ்லிம் நண்பராகவும், ஒற்றுமை, ஒருமைப்பாட்டை கட்டிக் காக்கும் தலைவராகவும் இருப்பதால் மட்டுமே முதல்வராக இருக்கவில்லை. அவருக்கு காயிதே மில்லத்தின் பரிபூரண ஆசி இருக்கிறது” என்று தெரிவித்தார்.

IUML தலைவர் காதர் மொய்தீன் பேசியது: மாநாட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் காதர் மொய்தீன் பேசியதாவது[1]: “தமிழகத்தில் உள்ள 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜமாத்துகள் ஒருங்கிணைந்து பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதை, அவர் நிறைவேற்றுவார் என்று நம்புகிறோம். முஸ்லிம் சமுதாயத்திற்காக தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும். நாங்கள் பல கோரிக்கைகளை முதல்வரிடத்தில் வைத்திருக்கிறோம். அதை நிறைவேற்ற சட்டத்திலே இடம் இருக்கிறதோ இல்லையோ. முதல்வர் இதயத்திலே எங்களுக்கு இடம் கொடுத்து, பல கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்துள்ளார். இந்த ஆட்சியின் சாதனைகளை விளக்கி இந்திய யூனியன் முஸ்லிக் லீக் கட்சி, வரும் ஜனவரி முதல் தமிழகத்தில் யாத்திரை நடத்த உள்ளது. சிறையில் இருக்கும் முஸ்லிம் சமுதாய இளைஞர்களை, அவர்களின் நன்னடத்தையை பொறுத்து விடுதலை செய்ய, முதல்வர் ஆவண செய்ய வேண்டும். அவர்களால் சமுதாயத்திற்கு மீண்டும் எந்த ஒரு தீங்கும் வராது. அதற்கு நான் முழு பொறுப்பேற்றுக் கொள்கிறேன்”, இவ்வாறு காதர் மொய்தீன் பேசினார்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் சில: முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகிதமாக இருக்கும் இடஒதுக்கீட்டை 5 சதவிகிதமாக உயர்த்தித் தரவேண்டும்; சமச்சீர் கல்வித்திட்டத்தில் உருது மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்கள், அதனை கட்டாயமாகப் பயிலவும், தேர்வு எழுதவும் அரசுக்கு வழிகாட்ட வேண்டும், சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு அரசு நிதி வழங்க வேண்டும்; வெளிநாடு வாழ் தமிழர் நலனுக்கு தனி துறையை உருவாக்க வேண்டும், 10 ஆண்டுகளுக்கு மேல் ஆயுள் சிறைக்கைதிகளாக உள்ளவர்களை, விடுதலை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன[2].

நிறைவேற்ற சட்டத்திலே இடம் இருக்கிறதோ இல்லையோ: கோரிக்கைகளை வைத்துக் கொண்டே இருப்போம், “நிறைவேற்ற சட்டத்திலே இடம் இருக்கிறதோ இல்லையோ. முதல்வர் இதயத்திலே எங்களுக்கு இடம் கொடுத்து, பல கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்துள்ளார்”,  இப்படியெல்லாம் பேசியது வேடிக்கையாக இருந்தது. முந்தைய உள்-உதுக்கீடு பிரச்சினை கூட அவ்வாறுதான் செய்யப்பட்டு, விவகாரமாக்க பட்டது. முதலில் செய்து விடுவோம், பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற ரீதியில், செயல்படுவது, எதில் சேர்த்தி எனபது தெரியவில்லை.

IUMLன் விநோத கோரிக்கை: முஸ்லிம்களுக்கு தமிழகத்தில் தனி மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும்: முஸ்லிம் சமுதாயத்திற்காக தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும். நாங்கள் பல கோரிக்கைகளை முதல்வரிடத்தில் வைத்திருக்கிறோம். அதை நிறைவேற்ற சட்டத்திலே இடம் இருக்கிறதோ இல்லையோ. முதல்வர் இதயத்திலே எங்களுக்கு இடம் கொடுத்து, பல கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்துள்ளார். இப்படியும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதில் என்ன அர்த்தம் என்று தெரியவில்லை. படிப்பில் தனியாக இருக்கவேண்டும் என்றால், அதை ஆரம்பநிலையிலிருந்தே செய்யலாமே? இனி முஸ்லிம் / இஸ்லாமிய குழந்தைகள் பள்ளி, முஸ்லிம் / இஸ்லாமிய பொறியியல் கல்லூரி என்று ஆரமபித்து என்ன செய்ய போகிறார்கள்? நாளைக்கு வேலை என்றாலும் தனியாக அவர்களுக்கு என்று பிரத்யேகமாக “முஸ்லிம் / இஸ்லாமிய வேலைகள்” உருவாக்கப்படுமா?

என் மீது என்ன கோபம் உங்களுக்கு? இன்னும் 40 ஆண்டு காலம் கஷ்டப்படு என்கிறீர்களே. இயலாது – இயற்கை இடம் தராது – இடம் தருகின்ற வரையிலே மட்டும் சில காலம் இருந்து இந்த மக்களுக்கு, சமுதாய மக்களுக்கு என்னலான பணிகளைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருப்பேன் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி[3].

சென்னை தாம்பரத்தில் நேற்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநில மாநாடு நடைபெற்றது. இதில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டார். அப்போது அவருக்கு நானிலம் போற்றும் நல்லிணக்க நாயகர் விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டது.

கருணாநிதி பேசியதாவது: “மாநாட்டுத் தலைவர் காதர் மொகிதீன், விருதினை எனக்கு வழங்கும்போது அவருடைய அழகான முத்து முத்து போன்ற இனிய தமிழால் அதைப் படித்தளித்தார். எனக்கொரு குறை. பெரியாருடைய பெரும் தொண்டன், அண்ணாவின் அருமை தம்பி நான் என்பதையும் வாழ்த்திலே எழுதியிருக்கிறார்கள். ஆனால், ஒன்றை விட்டுவிட்டார்கள். ஏன் என்று தெரியவில்லை? காயிதே மில்லத்தினுடைய அடியொற்றி நடந்தவன் நான் என்ற அந்த வாசகத்தை ஏன் விட்டு விட்டார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை தன்னுடைய இயக்கத்தைப் பற்றிச் சொன்னால், அது சுயவிளம்பரமாகி விடும் என்று கருதி விட்டுவிட்டார்களோ – என்னவோ தெரியவில்லை. ஆனாலும், எனக்கு பெரிய மனக்குறை அது. பெரியாரை, அண்ணாவை தமிழகத்திலே நினைவு படுத்துகிற நேரத்தில் காயிதே மில்லத்தை மறந்து விட்டால் நான் நம்முடைய பேராசிரியர் பெரியவர் என்பதால் இந்த வார்த்தைகளை ஜாக்கிரதையாகச் சொல்லுகிறேன் – மன்னிக்க முடியாத குற்றம். இரவு வீட்டுக்குச் சென்றாலும் அவருக்கு தூக்கம் வராது. எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டோம் என்பதை நினைத்து நினைத்து மனம் உருகுவார் என்பதும் எனக்குப் புரியும். அதனால் தான் அவர் படிக்கும்போது மாத்திரமல்ல – படித்து முடித்த பிறகும்கூட – எடுத்து திரும்பத் திரும்ப பார்த்தேன். காயிதே மில்லத் பெயர் இருக்குமா; என்று. இல்லை என்பதற்காக நான் மீண்டும் என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

நல்லிணக்க நாயகர் பட்டம்: “இதற்கிடையே நல்லிணக்க நாயகர் என்கின்ற பெயர் எனக்கு வைக்கப்பட்டிருக்கின்றது. பட்டங்களை அளித்தவர்கள் என்ன உள்ளத்தோடு, எத்தகைய நம்பிக்கையோடு இதை வழங்கியிருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்த்து அவர்களுடைய உள்ளமும் மகிழ்கின்ற அளவிற்கு நடந்து காட்ட விரும்புகின்றவன் நான். அப்படி நடந்து காட்டுவேன் என்பதை இந்த நேரத்திலே, இந்த மாபெரும் மாநாட்டிலே உறுதியோடு நான் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.

உருது மொழிக்கு உரிய பாதுகாப்பு வேண்டும்: இந்த மாநாட்டில் சில கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. அவைகளையெல்லாம் நிறைவேற்றித் தர வேண்டும் என்று பேசியவர்கள் குறிப்பிட்டார்கள். அதை நிறைவேற்றுவேன் என்ற நம்பிக்கையோடுதான் நீங்கள் இந்தத் தீர்மானங்களையெல்லாம் இன்றைக்கு எனக்கு அளித்திருக்கிறீர்கள். முதல் தீர்மானம் – சமச்சீர் கல்வியில் உருது மொழிக்கு உரிய பாதுகாப்பு வேண்டும் என்ற தீர்மானமாகும். “நமது” மொழியான உருது மொழிக்கு பெருமை சேர்க்க அதை சிறப்பு செய்ய, அதற்கு உரிமைகளைப் பெற்றுத் தர எத்தகைய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமோ அவற்றையெல்லாம் இந்த அரசு அல்ல – இன்றைக்கு இந்த அரசு இருக்கலாம், நாளைக்கு வேறு அரசு வரலாம். (நீங்கள்தான் முதல்வராக வருவீர்கள் என்று, கூட்டத்தில் இருந்து குரல்) அது உங்களுடைய ஆசை. 40 ஆண்டுகள் நான்தான் முதலமைச்சராக இருப்பேன் என்று இங்கே மாநாட்டுத் தலைவர் “சாபம்”கூட விட்டார். நான் அதை சாபமாகத்தான் கருதுகிறேன்.

இயற்கை இடம் தராது: 40 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்து நான் இன்னும் கஷ்டப்பட வேண்டும் – படாதபாடுபட வேண்டும் என்று நம்முடைய மாநாட்டினுடைய தலைவர் அவர்கள் விரும்புகிறார் என்றால், நான் என்ன சொல்வது?  என் மீது என்ன கோபம் உங்களுக்கு? இன்னும் 40 ஆண்டு காலம் கஷ்டப்படு என்கிறீர்களே என்றால், இயலாது – இயற்கை இடம் தராது – இடம் தருகின்ற வரையிலே மட்டும் சில காலம் இருந்து இந்த மக்களுக்கு, சமுதாய மக்களுக்கு என்னலான பணிகளைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருப்பேன்.

குப்பையையெல்லாம் எங்களுக்கு அளிக்கப்படுகின்ற பன்னீர்க் குளியல்: ஒரு சில அம்மையார்கள் எங்கள் தலையிலே குப்பை கொட்டத் தயாராக இருக்கிறார்கள். அப்படிக் கொட்டப்படுகிற குப்பையையெல்லாம் நாங்கள் எங்களுக்கு அளிக்கப்படுகின்ற பன்னீர்க் குளியல் என்றுதான் எண்ணிக் கொண்டிருக்கின்றோம். அதை நாங்கள் பொருட்படுத்துவதில்லை – ஏற்றுக் கொள்கிறோம். எங்கள் தலையிலே குப்பை கொட்டியவர்களுக்கு அறிவு புகட்டுவோமே தவிர, நாங்கள் ஆத்திரப்பட்டு, எரிச்சல்பட்டு, அவர்கள் மீது கோபப்பட்டு, கொந்தளித்து, அதன் காரணமாக அமைதி இழந்து, நல்லெண்ணத்தை பரப்புவதற்கு பதிலாக, நச்சுக் கருத்துக்களைப் பரப்புகின்ற குற்றத்திற்கு ஆளாகி விடுவோம் என்பதை நாங்கள் மிக நன்றாக உணர்ந்தவர்கள்.

சொல்லப்பட்ட இந்தக் கருத்துக்கள்கோரிக்கை வடிவிலே வந்திருக்கிறது: எனவேதான், இங்கே சொல்லப்பட்ட இந்தக் கருத்துக்கள் – கோரிக்கை வடிவிலே வந்திருக்கிறது. அதிலே ஒரு கோரிக்கைதான் – உருது மொழிக்கு உரிய பாதுகாப்பு வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. அனைத்துத் தரப்பிலிருந்தும் தெரிவிக்கப்பட்ட பொதுகருத்துக்கள்; பாடத்திட்டத்தில் சிறுபான்மை மொழிகள் கற்பிப்பதற்கு 4 பாடவேளைகள் ஒதுக்கீடு செய்தல்; அனைத்து மொழிப்பாடங்கள் மற்றும் சிறுபான்மை மொழி வழியில் கற்பிக்கப்படும் பாடங்களுக்கான பாடநூல்கள் தயாரித்தல்; சிறுபான்மை மொழிப்பாடங்களுக்கான தேர்வு நடத்துதல்; மதிப்பெண் பட்டியலில் சிறுபான்மை மொழிப் பாடங்களுக்கான மதிப்பெண் இடம் பெறச் செய்தல் – இதன்மீது உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளும் என்ற உறுதியை இந்த மாநாட்டிலே தெரிவித்துக் கொள்கிறேன்.

வெளிநாடு வாழ் தமிழர் நலனுக்காகத் தனித்துறை: தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏராளமானோர் வெளிநாடுகளில் பணிபுரிவதால் அவர்களின் நலனுக்காகவும், வெளிநாடுகளில் பணிபுரிகின்றபோது அங்கு அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளில் இருந்து அவர்களை மீட்டிடவும், வெளிநாடு வாழ் தமிழர் நலனுக்காகத் தனித்துறையை ஏற்படுத்திட வேண்டும் எனும் கோரிக்கையை ஏற்கும் வகையில், மறுவாழ்வுத்துறை இயக்குநரகத்தை, அகதிகள் மறுவாழ்வு மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்களின் நல ஆணையரகம் எனப் பெயர் மாற்றம் செய்திடவும், அந்த ஆணையரகத்தின்கீழ், வெளிநாடு வாழ் தமிழர்கள் நலவாரியம் ஒன்றை ஏற்படுத்திடவும் இந்த அரசு முடிவு செய்துள்ளது. வெளிநாட்டிலே இருக்கின்ற – இங்கிருந்து சென்ற தமிழர்கள் கூட அல்ல, அங்கே உள்ள தமிழர்கள் – அவர்கள் தங்களுடைய உரிமைகளுக்காகப் போராடினால், தங்களுடைய நலன்களுக்காகப் போராடினால், அவர்களுக்காக குரல் கொடுக்கக்கூடிய இயக்கமாக இருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் – அந்த அரசின் சார்பில் நான் இங்கே சொல்லுகின்றேன் – “அகதிகள் மறுவாழ்வு மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்களின் நல ஆணையரகம்” எனப் பெயர் மாற்றம் செய்திடவும், அந்த ஆணையரகத்தின்கீழ், “வெளிநாடு வாழ் தமிழர்கள் நலவாரியம்” ஒன்றை ஏற்படுத்திடவும் இந்த அரசு முடிவு செய்யும்.

கூட்டணி கட்சி: இந்த அணி தொடரும் அப்படிக் காப்பாற்று வதிலே நாங்கள் கொண்ட அந்தப் பிடிவாதத்தை, புரிந்து கொண்ட காரணத்தினால்தான் இன்றைக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நண்பர்கள் என் பக்கத்தில் அமர்ந்திருக்கின்ற காட்சியை நீங்கள் காணுகிறீர்கள். என்றென்றும் நிலையாக இந்த அணி இருக்கும். இந்த அணியிலே எந்தக் கட்சி வந்து சேர்ந்தாலும், பிரிந்து சென்றாலும், இந்த அணி அப்படியே ஒட்டுமொத்தமாக நிலைத்து இருக்கின்ற அணி. எந்த இடர் வரினும் அந்த இடரை இடறி எறிந்து விட்டு தொடரும் தொடரும் தொடரும் என்பதை எடுத்து சொல்லி, வாழ்க உங்களது ஒற்றுமை வளர்க உங்களுடைய உள்ள உறுதி என்று கூறி விடைபெறுகிறேன்.

அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் கிளைகள்: உலகப் புகழ் பெற்ற அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் கிளைகள் மேற்கு வங்கம், கேரள மாநிலங்களில் அமைப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதைப்போல, தமிழகத்திலும் அமைக்க மத்திய அரசை, தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று ஒரு தீர்மானம். நிச்சயமாக மத்திய அரசை இதற்காக வலியுறுத்துவோம் – வெற்றி பெறுவோம் என்பதை தெரிவிக்க விரும்புகிறேன்.

தமிழ்வளர்த்த முஸ்லிம் தமிழறிஞர்: தமிழ்வளர்த்த முஸ்லிம் தமிழறிஞர்களைக் கண்டறிந்து அவர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கி, அவர்கள் மரபுரிமையர்க்குப் பரிவுத் தொகை வழங்கி வருகிறது. இவ்வகையில் கா.மு. ஷெரிப், புலவர் முகம்மது நயினா மரைக்காயர் ஆகியோரின் மரபுரிமையர்களுக்குத் தலா 5 லட்சம் ரூபாய்; புலவர் குலாம் காதிறு நாவலரின் மரபுரிமையர்க்கு 6 லட்சம் ரூபாய்; சதாவதானி செய்குத் தம்பிப் பாவலர், மணவை முஸ்தபாவின் மரபுரிமையர்களுக்குத் தலா 10 லட்சம் ரூபாய்; டாக்டர் எஸ்.எம். கமால் அவர்களின் மரபுரிமையர்க்கு 7 லட்சம் ரூபாய் என மொத்தம் 43 லட்சம் ரூபாய் பரிவுத் தொகையாக வழங்கப்பட்டு; 6 முஸ்லிம் தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, மேலும் கோரிக்கைகள் வரப்பெறுமாயின் அதற்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் கருணாநிதி.

முஸ்லிம்களுக்கும் எனக்கும் தொப்புள் கொடி உறவு உள்ளதுதுணை முதல்வர் மு..ஸ்டாலின்[4]: இந்த நிகழ்ச்சியில், முன்னிலையுரையாற்றிய துணை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், முஸ்லிம்களுக்கும் எனக்கும் தொப்புள் கொடி உறவு உள்ளது என்று முதல் அமைச்சர் கலைஞர் கூறுவார். அந்த உறவுக்கு அடையாளமாக இந்த விருதினை வழங்கி உள்ளார்கள். ஆட்சியில் இருந்தாலும், இல்லா விட்டாலும் தி.மு.க.வினரும், கலைஞரும் சிறு பான்மையினருக்காக தொடர்ந்து குரல் கொடுப் பார்கள் என்றார்.

முஸ்லீம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொஹைதீன் உள்ளிட்ட பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், மைதீன்கான், தா.மோ.அன்பரசன், அப்துல் ரகுமான் எம்.பி, சட்டமன்ற உறுப்பினர் அப்துல் பாசித், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் முகம்மது அபுபக்கர், செயலாளர் காயல் மகபூப், பொருளாளர் வடக்குக்கோட்டையார், கேரள மாநிலத் தலைவர் ஹைதர் அலி சிகாப்தங்கள், தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் அப்துர் ரகுமான் உள்ளிட்ட பலர் பேசினார்கள். முன்னதாக, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்ட பேரணி நடைபெற்றது.

விமர்சனம்: முஸ்லிம்கள் “தேசிய நீரோட்டத்தில் கலக்க வேண்டும்” என்று அடிக்கடி சொல்வார்கள், ஏனெனில், அவர்கள் எப்பொழுது பார்த்தாலும், தாங்கள் ஏதோ தனிப்பட்டவர்கள், மற்ற மனிதர்களைப் போல / இந்தியர்களைப் போல இல்லை என்ற ரீதியில் பிரிவினையை எடுத்துக் காட்டுவதைப் போல நடந்து கொள்கிறார்கள் என்ற எண்ணம், மற்றவர்கள் அவர்களைப் பார்க்கும் போதே தோன்றுகிறது. இப்பொழுது முஸ்லீம் மாணவர்களுக்கு தனி மருத்துவக் கல்லூரி வேண்டும் என்று கேட்க ஆரம்பித்துள்ளனர். அப்படியென்றால், நாளைக்கு முஸ்லீம் மாணவிகளுக்கு தனி மருத்துவக் கல்லூரி வேண்டும் என்று கேட்க ஆரம்பித்து விடுவார்கள். ஏற்கெனெவே, இந்தியாவிலேயே முஸ்லீம்கள் ஏன் இப்படி “பிரிவினை, பிரிவினை-எண்ணம், பிரிவினை தன்மை, பிரிவினை-மனப்பாங்கு” முதலியவற்றை வளர்க்கின்றனர் என்பதற்காக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவர்கள் தாழ்வு மனப்பான்மை, உயர்வு மனப்பான்மை, தனித்திருக்கும் மனப்பான்மை, தனித்திருக்கும் தன்மையை உரிமையாகக் கேட்கும் மனப்பான்மை முதலியவை கலந்த மனப்பாங்குடன் இருப்பதாக தெரியவந்தது.

வேதபிரகாஷ்

© 13-12-2010


[1] முஸ்லிம் மாணவர்களுக்கு தனி மருத்துவக் கல்லூரி வேண்டும் டிசம்பர் 11,2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=143950