Posted tagged ‘இந்திய யூனியன் முஸ்லிம் லீக்’

நள்ளிரவில் நோயாளி சிகிச்சைக்குச் சென்றபோது, ஹிஜாப் பற்றிய விவாதம் ஏன், நோயாளி இறந்தது எப்படி? (2)

மே 30, 2023

நள்ளிரவில் நோயாளி சிகிச்சைக்குச் சென்ற போது, ஹிஜாப் பற்றிய விவாதம் ஏன், நோயாளி இறந்தது எப்படி? (2)

மருத்துவர் மீது ஏதாவது நடவடிக்கை உண்டா?: அப்போதுபோராட்டத்தில் ஈடுபட்டவர்கள் புவனேஸ்வர்ராமை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசாரோ அவரை இதுவரை கைது செய்யவில்லை என்றும் மருத்துவர் மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டிற்கு மருத்துவகுழுமூலம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் போராட்டக்காரர்கள் சடலத்தை எடுத்து சென்று அடக்கம் செய்தனர். ஆனால், இன்னொரு பக்கம் தலைமறைவாக இருந்தவரை, தேடி பிடித்து கைது செய்தனர் என்றுள்ளது. அதே நேரத்தில் அந்த மருத்துவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டது என்று தெரியவில்லை.  இந்த விவகாரத்தில் சட்ட நடவடிக்கையை எடுக்குமாறு மாவட்ட வருவாய் அதிகாரிக்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார் என்றும் உள்ளது.

முஸ்லிம் தலைவர், முஸ்லிம் போன்றே அறிக்கை விட்டுள்ளது: “ஹிஜாப் அணிந்த மருத்துவரை மிரட்டிய பாஜக நபரை சட்டத்தின் அடிப்படையில் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்” என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்[1]. இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்[2], ”நாகை மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் நேற்று இரவு பணியிலிருந்த முஸ்லிம் பெண் மருத்துவர் ஹிஜாப் அணிந்திருந்தார் என்ற காரணத்தால் பாஜகவைச் சேர்ந்த புவனேஸ்வர ராம் என்பவர் முஸ்லிம் பெண் மருத்துவரிடம் தகராற்றில் ஈடுபட்டார் எனச் செய்திகள் மூலம் தெரியவருகிறது. இரவு நேரத்தில் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்ட நோயாளி ஒருவரைப் பரிசோதித்த முஸ்லிம் பெண் மருத்துவர், நோயின் தீவிரத்தை அறிந்து உடனே நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவை சேர்ந்த புவனேஸ்வர ராம் இரவு நேரப் பணியிலிருந்த ஒரு பெண் மருத்துவரிடம் வாக்குவாதம் செய்வது போன்ற காணொலி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

ஜவாஹிருல்லா கூறியது:ஒரு பெண் மருத்துவரிடம் இதுபோன்ற வெறுப்பு பேச்சைப் பேசுவதும், அவர் ஹிஜாப் அணிந்திருந்த காரணத்தால் அவரை மிரட்டுவதும் பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படுத்தும் செயலாகும். மேலும், மருத்துவர்கள், மருத்துவ சேவைப் பணியாளர்கள் மத்தியில் அமைதியின்மையை உருவாக்கி, அப்பகுதியில் நிலவிவரும் சமூக நல்லிணக்கதை சீர்குலைக்கும் நோக்கத்தில் இந்த பிரச்சினை எழுப்பப்பட்டுள்ளது. எனவே, பெண் மருத்துவரை மிரட்டிய நபரை தமிழ்நாடு மருத்துவ சேவைப் பணியாளர்கள் மற்றும் மருத்துவ சேவை நிறுவனங்கள் (வன்முறை மற்றும் சேதம் அல்லது சொத்து இழப்பு) சட்டம் 48/2008ன் கீழ் மற்றும் மத ரீதியான வெறுப்பு பேச்சுகளைப் பேசி பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படுத்த முயன்ற காரணத்தாலும் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்,” என்று ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்[3]. சீமானும் இதே போன்ற கருத்தை வெளியிட்டுள்ளார்[4].

சீமானின் இஸ்லாம் அதரவு அறிக்கை: நாகப்பட்டினம் மாவட்டத்தில் அரசு மருத்துவர் ஜன்னத்தை ஹிஜாப் விவகாரத்தில் மிரட்டிய பாஜக நிர்வாகிக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார். மேலும் திமுக அரசு, ஆர்.எஸ்.எஸ். ஆதரவு போக்குடன் செயல்படுவதாகவும் சீமான் குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பான சீமான் அறிக்கை: நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வரும் அன்புச்சகோதரி ஜன்னத் அவர்களை கடந்த 24 ஆம் நாள் இரவுநேரப் பணியின்போது அப்பகுதியை சேர்ந்த பாஜக நிர்வாகி புவனேஷ் ராம் மருத்துவமனையில் ஹிஜாப் அணியக்கூடாது என்று மிரட்டியுள்ளதோடு, ஹிஜாப்பை கழற்ற வேண்டுமென கூறி பணி செய்யவிடாமல் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. நாகை மாவட்டம் தமிழ்நாட்டில் இருக்கிறதா? அல்லது உத்தரபிரதேசத்தில் இருக்கிறதா? தமிழ்நாட்டை ஆள்வது திமுகவா? அல்லது பாஜகவா? என்று சந்தேகப்படும் அளவுக்கு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழ்நாட்டில் இந்துத்துவ அமைப்புகளின் மதவெறிச்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மதவெறியர்களின் மனிதவெறுப்புச் செயல்களை தடுத்து நிறுத்தாமல், அதற்கு துணைபோகும் திமுக அரசின் ஆர்எஸ்எஸ் ஆதரவுப்போக்கு வன்மையான கண்டத்திற்குரியது. உணவு, உடை, வழிபாடு உள்ளிட்டவை அடிப்படை தனிமனித உரிமையாகும். அதில் தலையிடுவதென்வது அருவறுக்கத்தக்க மனித வெறுப்பின் உச்சமாகும். வட இந்தியாவிலும், பாஜக ஆளும் மாநிலங்களிலும் மட்டுமே நிகழ்ந்த அத்தகைய மதவெறுப்பு கொடுஞ்செயல்கள் தற்போது தமிழ்நாட்டிலும் தொடங்கியிருப்பது வெட்கக்கேடானது.

லிஸ்ட் போட்டு ஆதரவு கொடுக்கும் சீமான்[5]:

  • என்ஐஏ கொடுஞ்சட்டத்தை நாடாளுமன்றத்தில் ஆதரித்தது,
  • நீண்டகால இசுலாமிய சிறைவாசிகள் விடுதலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது,
  • ஆர்எஸ்எஸ் சாகா வகுப்புகளை அனுமதித்தது,
  • பாஜகவின் கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்த துடிப்பது,
  • இசுலாமியர் மீதான வெறுப்பை விதைக்கும் திரைப்படங்களுக்கு பாதுகாப்பளிப்பது,
  • மாட்டுக்கறி உணவிற்கு தடைவிதிப்பது

என்று இசுலாமியர்களுக்கு எதிராக திமுக அரசு மேற்கொண்டுவரும் பச்சைத் துரோகச்செயல்களின் தொடர்ச்சியே, ஹிஜாப் அணியக்கூடாது என்று மிரட்டும் அளவிற்கு மிக மோசமான நிலையை தமிழ்நாடு எட்டுவதற்கு முக்கிய காரணமாகும். இந்துத்துவத்திற்கு ஆதரவான இத்தகைய நடவடிக்கைகள் அனைத்தும் பாஜகவின் பினாமி அரசாகவே திமுக அரசு செயல்படுவதையே வெளிப்படுத்துகிறது. அதுமட்டுமின்றி அரசு அலுவலகத்திற்குள் புகுந்து அரசு அலுவலரை கொலை செய்தது, அரசு மருத்துமனைக்குள் புகுந்து அரசு மருத்துவரை மிரட்டுவதென தொடரும் சமூக விரோதிகளின் வன்முறை வெறியாட்டங்கள் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்குலைந்துள்ளது என்பதையே காட்டுகிறது. ஆகவே, அடிப்படை மனித உரிமைக்கு எதிராக மதவெறியுடன் இழிசெயலில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி புவனேஷ்ராமிற்கு கடும் தண்டனைப் பெற்றுத்தர வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்[6].

29-05-2023 ‘மருத்துவ சீருடையில் பணிக்கு வராமல், ‘ஹிஜாப்அணிந்து வந்த பெண் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: 29-05-2023 அன்று, ‘மருத்துவ சீருடையில் பணிக்கு வராமல், ‘ஹிஜாப்’ அணிந்து வந்த பெண் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, பாரத் இந்து முன்னணி வலியுறுத்தி உள்ளது[7]. அதன் மாநில ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன், தலைமைச் செயலர் இறையன்புவிடம் அளித்துள்ள மனுவில் இதனை வலியுறுத்தியுள்ளார்[8]. மருத்துவ மனை, நொயாளி, நள்ளிரவில் சிகிச்சைக்கு வந்தது, நோயாளி சிகிச்சை பலனின்றி இறந்தது, முதலியவற்றைப் பற்றி எந்த விவரங்களையும் எந்த ஊடகமும் கொடுக்கவில்லை. சிகிச்சை பலனின்றி இறந்தார் என்றுள்ளது. குறிப்பிட்ட மருத்துவர் சண்டை போடுவதிலும், வீடியோ எடுப்பதிலும், அதனை உடனடியாக யாருக்கோ அனுப்புவதிலும் தான் மும்முறமாக இருந்தது தெரிகிறது. பிறகு, ஆவண தோரணையுடன், கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டு செல்போனில் பார்த்துக் கொண்டிருக்கிறார். மருத்துவர் போன்றே கணப்படவில்லை.

© வேதபிரகாஷ்

30-05-2023


[1] தமிழ்.இந்து, ஹிஜாப் அணிந்த மருத்துவரை மிரட்டிய பாஜக நபர் மீது சட்டப்படி நடவடிக்கை: ஜவாஹிருல்லா வலியுறுத்தல், செய்திப்பிரிவு, Published : 26 May 2023 02:44 PM, Last Updated : 26 May 2023 02:44 PM

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/996833-threatening-doctor-wearing-hijab-should-be-punished-according-to-law-jawahirullah.html

[3] தமிழ்.இந்துஸ்தான் டைம்ஸ், Hijab: ஹிஜாப் அணியக்கூடாது என மருத்துவரை மிரட்டிய பாஜக நிர்வாகிக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல், Pandeeswari Gurusamy, 27 May 2023, 16:55 IST

[4] https://tamil.hindustantimes.com/tamilnadu/seeman-insists-that-the-bjp-executive-who-threatened-the-doctor-not-to-wear-hijab-should-be-severely-punished-131685186096080.html

[5] தமிழ்.ஒன்.இந்தியா, ஹிஜாப் விவகாரம்: ஆர்.எஸ்.எஸ். ஆதரவுப் போக்கில் திமுக அரசு.. 6 பாயிண்டுகளை முன்வைக்கும் சீமான்!, By Mathivanan Maran Updated: Saturday, May 27, 2023, 11:21 [IST]

[6] https://tamil.oneindia.com/news/tamilnadu/hijab-row-seeman-blames-dmk-govt-support-to-rss-513636.html?story=1

[7] தினமலர், பெண் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க மனு, பதிவு செய்த நாள்: மே 30,2023 03:59

[8] https://m.dinamalar.com/detail.php?id=3334072

வக்ஃப் போர்ட், அரசியல், நீதிமன்றத்திற்கு செல்லுதல், மேல்முறையீடு – இறுதியில் என்ன? [1]

ஓகஸ்ட் 29, 2020

வக்ஃப் போர்ட், அரசியல், நீதிமன்றத்திற்கு செல்லுதல், மேல்முறையீடு – இறுதியில் என்ன? [1]

 

வக்ஃப் போர்ட், உறுப்பினர் நியமனம் முதலியன: முஸ்லிம் மக்கள், அவர்களின் சொத்துகளை வக்ஃப் பத்திரம் மூலம் பொதுக் காரியங்களுக்கும், மசூதிகளுக்கும் எழுதிக் கொடுக்கும் வழக்கம் உண்டு. அவ்வாறு இந்தியாவில் மட்டும் தானமளிக்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு, குறைந்தது ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை இருக்கும். இப்படி தானமளிக்கப்படும் வக்ஃப் சொத்துக்களைப் பராமரிக்க, பொது மற்றும் தனியார் வக்ஃப் அமைப்புகள் உள்ளன. இவற்றைக் கண்காணித்து, நடுநிலைமையோடு வழிநடத்தி, நிதியை நிர்வகித்து, வக்ஃப் பிரச்னைகளைத் தீர்த்துவைப்பது போன்ற பணிகளைச் செய்ய வக்ஃப் வாரியம் செயல்படுகிறது. இந்திய அரசியலமைப்பிற்கு உட்பட்டு, 1995 ஆம் ஆண்டு வக்ஃப் சட்டம் இந்தியா முழுமைக்கும் அமலில் இருக்கிறது. இந்த வக்ஃப் வாரியத்தில் – 11 / 12 உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததையொட்டி 2017ல் தேர்தல் மூலம் 6 பேரும், நியமனம் மூலம் 4 பேரும் உறுப்பினராயினர். பார் கவுன்சில் உறுப்பினர்கள் இல்லாததால், இரு மூத்த வழக்கறிஞர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். 

  1.  தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களாக (elected) இரண்டு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,
  2. இரண்டு முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்கள்,
  3. இரண்டு முத்தவல்லிகள் (மசூதி மேற்பார்வைத் தலைவர்)
  4. இரண்டு முஸ்லிம் பார் கவுன்சில் உறுப்பினர்கள் மற்றும்
  5. அரசால் நியமிக்கப்பட்ட (nominated) உறுப்பினர்கள் பலர் உள்ளனர்.

எந்தவொரு சமயத்திலும், நியமிக்கப்பட்ட உறுப்பினர்களைவிட தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அதிகம் இருக்க வேண்டும் என்று வக்ஃப் வாரிய சட்டம் சொல்கிறது. ஆனால், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், வக்ஃப் வாரிய தலைவராக இருந்த அன்வர் ராஜா போட்டியிடாததால், அவர் உறுப்பினரல்லாது போனார். உறுப்பினர் இடங்கள் பல காலியாக இருந்ததால், தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர்களாகப் புதியவர்களைத் தேர்வுசெய்து, வாரியத்தின் செயல்பாடுகள் தொடர்ந்திருக்க வேண்டும். ஆனால், அப்படிச் செய்யாமலே சிறப்பு அதிகாரியை ஆளுநர் நியமித்திருக்கிறார்.

வக்ஃப் போர்ட் கலைக்கப் படவில்லை, அரசு கட்டுப்பாட்டில் போய் விடுமோ என்ற அச்சத்தில் பிரச்சினை: வக்ஃப் போர்ட் கலைக்கப் படவில்லை, இப்பொழுதைய ஆளும் அரசு, உறுப்பினரை நொயமித்துள்ளது. அதனை மற்றவர் எதிர்க்கின்றனர். மேலும், வக்ஃப் வாரிய வழக்கு பற்றி உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வெ.ஜீவகிரிதரன் பேசுகையில்[1], “இதில் கவனிக்கப்படவேண்டியது என்னவென்றால், வக்ஃப் வாரியத்தைத் தொடர்ந்து செயல்படவைக்க வேண்டும். வக்ஃப் வாரியத்தை கலைக்கக்கூடாது அனைத்து வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் சார்பிலும் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ, மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கு,18.09.2019 அன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி கோவிந்தராஜ், தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் தற்போதையை நிலையே (status quo) தொடர வேண்டும், வக்ஃப் வாரிய சிறப்பு நிர்வாக அதிகாரி நியமனம் தொடர்பாக எந்த முடிவும் எடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டார். வழக்கு நிலுவையில் இருந்து, நீதிமன்றத்தின் நேரடி உத்தரவு இருந்தும் வாரியத்தைக் கலைத்திருப்பதால், ஆளுநர் ஆணையின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயக் கூடும்,” என்றார்[2].

அதிமுக-திமுக அதிகார போட்டியாக மாறிவிட்ட பிரச்சினை: இதுகுறித்துப் பேசிய, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளரும், சட்டமன்ற கட்சித் தலைவருமான சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், “தமிழக அரசு, சிறுபான்மையினர் நலன்களுக்கு எதிரானதாகவே இருக்கிறது. ஜனநாயக முறையில் மக்களதிகாரத்தில் இருக்கும் ஒரு வாரியத்தை முறையின்றிக் கலைத்து, பல கோடி ரூபாய் சொத்துக்களை நிர்வகிக்கும் அனைத்து அதிகாரத்தையும் ஒரு அதிகாரியிடம் ஒப்படைப்பது, அரசுக்கு முஸ்லிம் மக்கள்மீது அக்கறை இல்லாததையே காட்டுகிறது. பல கோடி ரூபாய் முஸ்லிம் மக்களின் நன்கொடையை நிர்வகிக்கும் அமைப்பைக் கலைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. வாரியம் உறுப்பினர்களோடு செயல்படும்போது மட்டுமே, ஊழலற்ற நியாயமான தீர்வுகளை எட்ட முடியும். தமிழக அரசின் இந்த முடிவு, அவர்களின் விருப்பத்துக்கு உகந்தவர்களை வாரியத் தலைவர்களாக நியமிக்க முடியாத காரணத்தினால் நடக்கிறது. எதிர்க்கட்சியினராக இருந்தாலும், ராஜ்யசபாவுக்கு அ.தி.மு.க சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முஹம்மது ஜான் எம்.பி, வாரியத் தலைவராக இருந்து, வாரியத்தின் செயல்பாடுகள் தொடரட்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கை. ஆனால், அரசு எதற்குமே செவிசாய்க்காமல், வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே, ஒரு தனி நபரை வாரியத்தின் அதிகாரியாக நியமித்திருப்பது நிச்சயம் ஜனநாயகத்திற்கு, சிறுபான்மையினருக்கு எதிரானதே,” என்றார்.

கடந்த ஆறு மாத காலமாக வக்பு வாரியம் செயல்படவில்லை.: கடந்த 2019 செப். 18 அன்று வக்பு வாரியத்தில் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களை விட நியமன உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாகக்கூறி வக்பு வாரியத்தை கலைத்து தமிழக அரசு உத்தரவிட்டது[3]. மேலும் தமிழக நிதித்துறை செலவின செயலரான சித்திக்கை வக்பு வாரியத்தின் சிறப்பு அதிகாரியாக நியமித்து உத்தரவிட்டது[4]. தமிழக அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பசலூர் ரஹ்மான் என்பவர் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கில் வக்பு வாரியத்தில் முத்தவல்லிகள் பிரிவில் தேர்தல் மூலமாக தேர்வு செய்யப்பட்ட எஸ். செய்யது அலி அக்பர், ஹாஜா கே.மஜீத் ஆகியோரும் இடையீட்டு மனுதாரர்களாக வழக்கு தொடர்ந்து இருந்தனர். அரசுத் தரப்பில் ஆஜராகிய கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன், நீதிமன்றத்தில் நான் சொன்னதுதான் எங்கள் தரப்பு கருத்து எனக்கூறி, அதை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். “கடந்த ஆறு மாத காலமாக வக்பு வாரியம் செயல்படவில்லை. இதனால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்ப்பதற்காகவே இடைக்காலத்துக்கு மட்டும் சிறப்பு அதிகாரி  நியமிக்கப்பட்டுள்ளார், வேறு எந்த நோக்கமும் இல்லை” என்றார். மேலும், 23.09.2019 நடந்த வழக்கு விசாரணையின்போது, சிறப்பு அதிகாரியாக சித்திக் தற்போதைக்கு பதவி ஏற்றுக்கொள்ள மாட்டார் என்று அரசுத் தரப்பில் விளக்கமளிக்கப் பட்டதைத் தொடர்ந்து, வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப் பட்ட பிரச்சினை: அதில், ”பார் கவுன்சில் உறுப்பினர்களில் இஸ்லாமியர்கள் எனும் பட்சத்தில் வக்பு வாரியத்துக்கு நியமிக்கப்பட்ட இஸ்லாமியர்களாக உள்ள 2 மூத்த வழக்கறிஞர்களையும் வக்பு வாரிய சட்டத்தின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களாகவே கருத வேண்டும். அவர்களும் தங்களின் பதவியை ராஜினாமா செய்துவிட்ட நிலையில் வக்பு வாரியத்தை கலைத்தது சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என்றும், இதுதொடர்பாக அரசு பிறப்பித்துள்ள உத்தரவுகளை ரத்து செய்து வக்பு வாரியத்திடமே அதிகாரங்களை ஒப்படைக்க வேண்டுமென கோரப்பட்டு இருந்தது. இந்த வழக்கு விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள் எம். எம். சுந்தரேஷ், ஆர். ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது மனுதாரரான பசுலூர் ரஹ்மான் சார்பில் வழக்கறிஞர் எச்.ஆறுமுகம், மற்றும் இடையீட்டு மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் மகமூத் பராச்சர், இ.அப்ரார் முகமது அப்துல்லா, எச்.முகமது கவுஸ் ஆகியோரும், வக்பு வாரியம் தரப்பில் வழக்கறிஞர் வி.லட்சுமிநாராயணன் ஆகியோரும் ஆஜராகி வாதிட்டனர்.

தேர்தெடுக்கப் பட்ட உறுப்பினர்கள், பதவியில் இருக்கும்போதே வக்பு வாரியத்தை கலைத்து தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது சட்டவிரோதம்: அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வக்பு வாரியத்தில் முறைப்படி தேர்தல் மூலமாக கடந்த 2017-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட எஸ். செய்யது அலி அக்பர், ஹாஜா கே.மஜீத் ஆகியோரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் என்பதால் அவர்களின் சட்டப்படியான உரிமை நிலைநாட்டப்படுகிறது. எனவே அவர்கள் பதவியில் இருக்கும்போதே வக்பு வாரியத்தை கலைத்து தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது சட்டவிரோதம் என்பதால் தமிழக அரசின் உத்தரவு பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. அவர்கள் இருவரையும் தவிர்த்து மற்ற உறுப்பினர்களின் பதவியை நிரப்ப தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கலாம் என தீர்ப்பளித்துள்ளனர். வக்ஃபு வாரிய உறுப்பினா் தோ்தலில் திமுகவைச் சோ்ந்த மக்கள் பிரதிநிதிகள் 3 பேரும், அதிமுகவைச் சோ்ந்த ஒருவரும் தோ்வு செய்யப்பட உள்ளனா்[5]. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. மேலும், எம்.எல்.ஏ.,க்களில் திமுகவைச் சோ்ந்த முகமது அபுபக்கா், கே.எஸ்.மஸ்தான் ஆகியோரும் மனு அளித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் இடம்பெறக் கூடிய தலா இரண்டு இடங்களுக்கு இரண்டு போ் மட்டுமே போட்டியிடுவதால் அவா்கள் போட்டியின்றி தோ்வு செய்யப்பட இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது[6]. வக்ஃபு வாரியத்தில் எம்.பி.,க்கள் இரண்டு பேரும், எம்.எல்.ஏ.,க்கள் இரண்டு பேரும் உறுப்பினா்களாக தோ்வு செய்யப்படுவா் என்பது குறிப்பிடத்தக்கது.

வேதபிரகாஷ்

29-08-2020


[1] விகடன், `ஒரு லட்சம் கோடி சொத்துக்களை நிர்வகிக்க ஒற்றை அதிகாரி!’- வக்ஃப் வாரிய விவகாரத்தில் என்ன நடக்கிறது, ஜெனிஃபர்.ம.ஆ; செ.சல்மான் பாரிஸ், Published:26 Sep 2019 7 PMUpdated:26 Sep 2019 7 PM

[2] https://www.vikatan.com/news/judiciary/only-one-person-to-manage-one-lakh-crore-worth-assets-whats-happening-in-waqf-board

[3] தமிழ்.ஒன்.இந்தியா, தமிழ்நாடு வக்பு வாரியத்தை கலைத்த தமிழக அரசு உத்தரவு ரத்து.. ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு, By Sivam | Published: Monday, August 17, 2020, 21:25 [IST]

[4] https://tamil.oneindia.com/news/chennai/dissolving-the-tamil-nadu-tamil-nadu-wakf-board-as-it-is-illegal-high-court-394804.html

[5] தினமணி, வக்ஃபு வாரிய உறுப்பினா் தோ்தல்: திமுக 3, அதிமுகவில் ஒருவருக்கு வாய்ப்பு, By DIN | Published on : 01st August 2020 06:18 AM

[6] https://www.dinamani.com/tamilnadu/2020/aug/01/waqf-board-member-dotal-opportunity-for-one-in-dmk-3-aiadmk-3444028.html

வண்ணாரப் பேட்டை முஸ்லிம் ஆர்பாட்டம், அரங்கேற்றப் பட்ட நாடகமா, ஆதரவு, செயல்படும் சக்தி மற்றும் பின்னணி எது-யார்? [1]

பிப்ரவரி 21, 2020

வண்ணாரப் பேட்டை முஸ்லிம் ஆர்பாட்டம், அரங்கேற்றப் பட்ட நாடகமா, ஆதரவு, செயல்படும் சக்தி மற்றும் பின்னணி எது-யார்? [1]

Washermenpet Muslim poster Feb 2020- BBC Tamil

வண்ணாரப் பேட்டை முஸ்லிம் பிரச்சினையா, அரசியலா?: சென்னை வண்ணாரப்பேட்டை பிரச்சினை ஆழமாக அலசிப் பார்த்தால், அது வண்ணாரப்பேட்டை, சென்னை, தமிழ்நாடு அல்லது இந்தியாவிற்கான பிரச்சினை அல்ல என்று தெரிகிறது. எல்லை மாநிலங்கள் போலான ஊடுருவல்கள், அயலாட்டவர் இங்கு இருக்கிறார்கள் என்ற பட்சத்தில் அவர்களது நிலைப்பாடு உள்ளது என்றால், அது திகைப்படையச் செய்கிறது. ஏற்கெனவே ஐசிஸ் தொடர்புள்ள தீவீரவாதிகள், அவர்களுக்கு உதவியவர்கள் இப்பகுதிகள் மற்றும் சென்னையின் மற்ற பகுதிகளிலிருந்து கைது செய்யப் பட்டுள்ளனர். அப்படியென்றால், இவர்களுக்கு ஏதோ விசயம் தெரியும் போலிருக்கிறது. அமைதியாக “போராட்டம்” நடத்துகிறோம் என்றால், இத்தகைய சூழ்நிலை உருவாகி இருக்காது. குறிப்பிட்ட தெருக்களில் உள்ளவர்கள் நிச்சயமாக “ஹவுஸ் அரெஸ்ட்” நிலையில் இருந்திருக்கிறார்கள். அல்லது அவர்கள் தயாராக இருந்தார்கள் என்றாக வேண்டும். ஆனால், இஸ்லாமியர் திட்டமிட்டு, அதனை உருவாக்கியுள்ளனர் என்றும் தெரிகிறது. எனவே, இது எப்படியாவது ஏதோ ஒரு விதத்தில், அமைதியைக் குலைக்க வேண்டும் அல்லது ஊடக கவனம் பெற வேண்டும் போன்ற யுக்தியுடன் ஆரம்பித்ததாக தெரிந்தது. உடனடியாக அரசியல் நுழைந்தது, வேறுவிதமாக உள்ளது.

Washermenpet Muslim poster Feb 2020

போலீஸாரை ஒருதலைப் பட்சம்மாக குறை கூறும் ஊடகங்கள்: சொல்லி வைத்தால் போல, எதிர்கட்சிகள் எல்லாமே, ஒரே மாதிரி போலீஸார் நடவடிக்கையை எதிர்த்து அறிக்கை விடுப்பது, ஆளும் அரசை குறை சொல்வது போன்ற விதங்களில் அதிரடி பிரச்சார வேலைகளை முடுக்கியுள்ளார்கள். மின் மற்றும் அச்சு ஊடகங்கள் அவர்கள் மற்றும் அத்தகைய சித்தாந்தக்காரர்களிடம் இருப்பதால், ஆங்கில ஊடகங்களும் பாரபட்சமாகத்தான் இருக்கின்றன. தி இந்து மற்றும்பிரென்ட் லைன் படித்தால் விளங்கும். போலீஸார் பெண்களை, சிறுவர்களை அடித்தார்கள் என்று, பெண்கள் சொன்னதாக, நிருபர்கள் செய்தியை, அப்பத்திரிக்கைகள் வெளியிட்டுள்ளன[1]. பிறகு, போலீஸார் சொல்வதையும் வெளியிட வேண்டுமே, ஆனால், அதை செய்யவில்லை.  பிரென்ட்லை விடும் கதை கொஞ்சம் ஓவராகவே உள்ளது, ஏனெனில், அதற்கு ஆதாரம் இல்லை. ஜீப்பில் வைத்து அடித்தார்கள் என்றால் யார் பார்த்தார்கள் என்று சொல்லவில்லை. ஆனால், இவற்றையெல்லாம் செய்தி என்று பக்கம்-பக்கமாக போட்டிருக்கிறது[2].

caa demo politicized viduthalai 16-02-2020

தினத்தந்தி டிவி தொலைக் காட்சியில், எஸ்டிபிஐ உறுப்பினர் போலீஸாருக்கு எதிராக பயங்கரமான புகார் சொன்னது: 15-02-2020 அன்று தினத்தந்தி டிவி தொலைக் காட்சியில், எஸ்டிபிஐ சார்பாக பேசியவர், போலீஸார், பெண்களின் மர்ம உறுப்புகளில் லத்தியை நுழைத்து….. என்றெல்லாம் பேசியது திகைப்பாக இருந்தது. இதை தந்தி-ஒருங்கிணைப்பாளர் தடுக்கவில்லை. ஒரு பத்திரிக்கையாளர் எடுத்துக் காட்டிய பிறகும், அவர் பிடிவாதமாக, மனித உரிமை ஆணையத்திற்கு புகார் கொடுப்போம் என்றெல்லாம் வாதித்தார். போலீஸாரை எதிர்த்து அப்படி பேசுகிறார்களே என்ற உணர்வே அவர்களுக்கு இல்லை என்ற போக்கு தான் காணப் பட்டது. பார்ப்பவர்களுக்கே, அது எரிச்சலை ஊட்டுவதாக இருந்தது. அனுமதி எல்லாமல், பொது மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படும் வகையில் சாலைகளை மறித்து, ஆக்கிரமித்து, சட்டங்களை மீறி, “அமைதியான போராட்டம்” என்று பெண்கள்-சிறார்களை முன்னே வைத்து கலாட்டாவில் ஈடுபட்டதே, முஸ்லிம்களின் விசமத் தனத்தைக் காட்டுகிறது. ஒருதலைப் பட்சமாக இப்படி ஊடகங்கள் போலீஸாரை குறைகூறுவதும் விசமத் தனமாக உள்ளது. “டெக்கான் குரோனில்” ஒரு பெண் ஜாயின்ட் கமிஷனர், இரண்டு பெண் போலீஸார் மற்றும் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் போராட்டக் காரர்கள் கற்களை வீசியதில் காயமடைந்தனர் என்று போலீஸார் சொன்னதாக, செய்தி வெளியிட்டுள்ளது[3]. மற்ற படி, பிடிஐ என்று செய்தியை அப்படியே வெளியிட்டுள்ளது[4]. ஏன் நிருபர்கள் ஆஸ்பத்திரிக்குச் சென்று உண்மை அறிந்து செய்தி போடவில்லை என்று தெரியவில்லை.

Tiruma visiting hospital-16-02-2020

திருமாவளவன் உளறுவது [14-02-2020]: அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வன்முறை தாக்குதல்களை நடத்தி ஒரு உயிரிழப்புக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறோம்[5]. சிஏஏவுக்கு எதிராக அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வன்முறை தாக்குதல்களை நடத்தி ஒரு உயிரிழப்புக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்[6]. அந்த அறிக்கையில், “குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகைப் பதிவேடு, தேசிய குடியுரிமைப் பதிவேடு ஆகியவற்றைத் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தியும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக் கோரியும் சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் மக்கள் அறவழியில் கூடி போராட்டம் நடத்தியுள்ளனர். பெண்களின் போராட்டம் வெற்றிகரமாக நடப்பதை சகித்துக்கொள்ளமுடியாமல் அவர்கள் மீது காவல்துறை வன்முறையை ஏவி இருக்கிறது. அங்கு இருந்த பெண்கள் மீது தாக்குதல் நடத்தியதை பார்த்த ஆண்கள் அவர்களுக்கு பாதுகாப்பாக அங்கே வந்துள்ளனர். அவர்களைத் கடுமையாக காவல்துறையினர் தாக்கியுள்ளனர். அந்த நெரிசலில் சிக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நூற்றுக்கும் மேற்ப்பட்டவர்களைக் காவல் துறை கைது செய்துள்ளது. இந்தச் செய்தியை அறிந்ததும் நேற்றிரவு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன் பிறகு சென்னை போலீஸ் கமிஷனர் பேச்சுவார்த்தை நடத்தி, கைது செய்தவர்களை விடுவித்துள்ளார். இதனால் சாலை மறியல் போராட்டங்கள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன….” இந்த அளவுக்கு முஸ்லிம்களுக்கு வக்காலத்து வாங்கியுள்ளது திகைப்பாக உள்ளது.

Muslims propagating false-police-16-02-2010

உண்மை மறைத்து விமர்சிக்கு போக்கு: திருமா வளவன் அறிக்கைக் கூறுவது, “பெற்றோரின் பிறந்த தேதி, பிறந்த இடம் ஆகிய விவரங்களைச் சேகரிக்கச் சொல்லும் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு நடவடிக்கையை மேற்கொள்ள முடியாது என்று பாஜகவின் கூட்டணிக் கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பிஜு ஜனதா தளம் ஆகியவை தெரிவித்துள்ள நிலையில் அதனால் எந்த பாதிப்பும் இல்லை, அதை நாங்கள் நடைமுறைப்படுத்துவோம் என்று இங்கே உள்ள அதிமுக அரசு கூறி வருகிறது. குடியுரிமை மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்து அதை சட்டமாக நிறைவேற்றி இன்று இந்தியா முழுவதும் அமைதியற்ற சூழல் நிலவுவதற்கு வழிவகுத்த அதிமுக, தமிழ்நாட்டை உத்தரப்பிரதேசத்தைப் போல வன்முறை பூமியாக மாற்றுவதற்கு திட்டமிட்டு செயல்பட்டுவருகிறது. அமைதியான அறவழிப் போராட்டங்களைக் காவல்துறையை வைத்து ஒடுக்குவதற்கு முயல்கிறது. அதன் ஒரு வெளிப்பாடுதான் நேற்று நடந்த சம்பவம். இதை ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் அனுமதிக்க முடியாது”.

© வேதபிரகாஷ்

21-02-2020

Muslim demo-politicized0Viduthalai 16-02-2020

[1] The protesters claimed that the police entered the area in large numbers and started beating the youths who had been organising protests against the CAA in the city. In the melee women and children were beaten. Jannathul Pradesh, one of the women injured in the police violence said: “I told them [the police] not to beat us and the children. We were very peaceful and disciplined. But they were inhuman and resorted to indiscriminate beatings. Many women suffered injuries. We got treated in local hospitals here.”

Frontline, Women, children injured in police lathi-charge against anti-CAA protesters in north Chennai, ILANGOVAN RAJASEKARAN, Published : February 15, 2020 18:37 IST
https://frontline.thehindu.com/dispatches/article30829834.ece

[2] A number of women Frontline spoke to on Saturday said that men outnumbered women in the police force that arrived there. “It was to terrorise the people, especially women, to discourage them from joining such protests in future. We were manhandled and beaten. The State wants to serve a warning to us—not to come out of our houses to defend our rights,” said Jannathul. Many women alleged that they were beaten inside the police vans by policemen and wanted the government to take action against the erring police personnel who unleashed violence against them.

[3] Police claimed that four of their personnel—a woman joint commissioner, two women constables and a sub-inspector—were injured in stonepelting by the protesters.

[4] Deccan Chronicle, Washermanpet violence triggers protests in Tamil Nadu, DECCAN CHRONICLE / PTI, Published: Feb 15, 2020, 6:21 pm IST; UpdatedFeb 15, 2020, 6:33 pm IST

https://www.deccanchronicle.com/nation/politics/150220/friday-night-anti-caa-clash-triggers-protests-in-tamil-nadu.html

[5] ஏசியா.நெட்.நியூஸ், இஸ்லாமியரை சாகடித்தவர்கள் மீது கொலை வழக்குப்போடுங்ககொந்தளிக்கும் திருமாவளவன்..!, By Thiraviaraj RM, Tamil Nadu, First Published 15, Feb 2020, 3:35 PM IST; Last Updated 3:35 PM IST.

[6] https://tamil.asianetnews.com/politics/murder-of-the-muslims-who-killed-the-file-case-says-thirumavalavan-q5qmow