Posted tagged ‘ஆவணம்’

அலிகர் முஸ்லிம் பல்கலை மாணவர்கள் ஏன் வன்முறையில் ஈடுபடுகின்றனர் – இஸ்லாம் ஏன் அவர்களை “அமைதியாக” வைத்திருக்கவில்லை?

ஏப்ரல் 25, 2016

அலிகர் முஸ்லிம் பல்கலை மாணவர்கள் ஏன் வன்முறையில் ஈடுபடுகின்றனர் – இஸ்லாம் ஏன் அவர்களை “அமைதியாக” வைத்திருக்கவில்லை?

rk24amuviolence3

Burnt documents seen at the proctor office after the violence in two students group, at Aligarh Muslim University in Aligarh on April 24th 2016.Express photo by Ravi Kanojia.

 

பல்கலைக்கழகம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது:23-04-2016 சனிக்கிழமை இரவன்று அலிகர் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரு மாணவர்கள் கொல்லப்பட்டனர். அதில் ஒருவர் வெளி-மாணவன். ‘மாணவர் விடுதியில் தங்கியுள்ள, வெளிநபர்களை வெளியேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என, பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அப்படியென்றால், வெளியாட்கள் ஏன், எப்படி, எவ்வாறு மாணவர்கள் விடுதியில் வந்து தங்குகிறார்கள் என்று தெரியவில்லை. இந்த மோதலில் காயமடைந்த மற்றொரு இளைஞர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். ஆக உயிரிழந்த இவர்கள் மெஹ்தப் (22) மற்றும் மொஹம்மது வாகப் (18) [Mehtab (22) and Mohammad Waqif (18) ] என்று தெரியவருகிறது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றார் கோவிந்த் அகர்வால் என்கின்ற போலீஸ் அதிகாரி[1].

rk24amuviolence5

A burnt two wheeler at the proctor office after the violence in two students group, at Aligarh Muslim University in Aligarh on April 24th 2016.Express photo by Ravi Kanojia.

நுழைவு தேர்வு நடைபெறுகின்ற வேளையில் நடந்த கொலைகள், கலவரம்:த்தகைய கலவரம், தீவைப்பு, கொலை போன்ற சூழ்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (24-04-2016) அன்று பல்கலைக்கழகத்தின் பொறியல் கல்லூரிக்கான நுழைவு தேர்வு பலத்த பாதுகாப்புடன் அமைதியான முறையில் நடைபெற்றது. இதில், பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த சுமார் 22,000 மாணவர்கள் கலந்து கொண்டனர். நாளை திங்கள் கிழமை மாணவர்கள் கலவரம் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக அஞ்சப்படுகிறது. இதனால், மத்திய பாதுகாப்புப் படையினர் வளாகத்தில் குவிக்கப்பட்டு பதட்டம் நீடிக்கிறது. குண்டுபட்ட மற்றவரான வாசீப் இப் பல்கலையின் மாணவர் அல்ல. அவரது உயிருக்கும் ஆபத்து நீடிப்பதால் அவர் டெல்லியின் கங்காராம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்[2].

rk24amuviolence6

A burnt vahicle at the proctor office after the violence in two students group, at Aligarh Muslim University in Aligarh on April 24th 2016.Express photo by Ravi Kanojia.

இறப்பையும் வைத்து கலவரத்தை உண்டாக்கும் இஸ்லாமிய முறை: அதாவது, இறப்பை வைத்துக் கொண்டும் கலவரத்தை உருவாக்கும் யுக்தியை முஸ்லிம்கள் செய்து வருவதை மறைமுகமாக எடுத்துக் காட்டப்படுகிறது. காஷ்மீரத்தில் முதலில் ஒரு நொண்டி சாக்கை வைத்து கலவரத்தை ஆரம்பிப்பர். அதில் யாராவது இறந்தால், அந்த உடலை எடுத்துச் செல்ல ஆர்பாட்டம் செய்வர். பிறகு அதனை ஊர்வலமாக எடுத்துச் சென்று ரகளை செய்ய திட்டமிடுவர். அதனைப் புதைத்தப் பிறகு, ஊர்வலமாகத் திரும்பி வரும் போது, இன்னொரு கலவரத்தை செய்வர். “கல்லடி கலாட்டா” போன்ற யுக்திகளைப் பின்பற்றி சிறுவர்கள் மற்றும் பெண்களை முன்னிருத்து, அத்தகய கலவரங்களை மேற்கொள்வர். இதனால், “ராபிட் ஆக்ஸன் போர்ஸ்” என்ற கலவரத்தை அடக்கும் போலீஸார் வரவழைப்பட்டு, பாதுகாப்பாக “வஜ்ரா” போன்ற வண்டிகள் நிற்க வைக்கப்பட்டுள்ளன.

rk24amuviolence9

Rapid Action Force (RAF) deployed inside the campus, after the violence in two students group, at Aligarh Muslim University in Aligarh on April 24th 2016.Express photo by Ravi Kanojia.

முஸ்லிம் பிரச்சினையை பொதுப்பிரச்சினை மற்றும் அரசியலாக்கும் போக்கு: துணை வேந்தர் ஜமீர் உத்தீன் ஷா [Vice Chancellor Lt Gen Zameer Uddin Sha] இந்த மோதலை கடுமையாகக் கண்டித்துள்ளார். மற்ற விசயங்களுக்கு இவர் வீரதீரமான அறிக்கைகள் எல்லாம் விடுவார், ஆனால், இப்பிரச்சினையில் அடக்கியே வாசித்துள்ளார். ஆனால், இவரும் செய்திகளில் வந்துள்ள விசயங்களைத் தவிர வேறு எதையும் கூறவில்லை. வளாகத்தில் இணைதளவசதியும் முடக்கப்பட்டுள்ளது. அதாவது, இணைதளங்களில் தவறான செய்திகள் மற்றும் வதந்திகளைப் பரப்பி கலவரங்களை உண்டாக்குவது, சமீப காலத்தில் அடிப்படைவாத முஸ்லிம்களின் யுக்தியாக இருந்து வருகிறது. இப்பொழுதே, அலிகர் பல்கலைக்கழகத்தின் நிலை மறந்து, இதற்கும் பிஜேபி அரசு, மோடி, ஆ.எஸ்.எஸ் தான் காரணம் என்று சிலர் ஆரம்பித்துள்ளனர். ஆனால், சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெயர்கள் எல்லாமே முஸ்லிம்கள் என்பதனால், அடக்கி வாசிக்கின்றனர்.

rk24amuviolence12

Rapid Action Force (RAF) deployed inside the campus, after the violence in two students group, at Aligarh Muslim University in Aligarh on April 24th 2016.Express photo by Ravi Kanojia.

ஆஸம்கர் நகர், சம்பல் நகர், காஜிப்பூர் மாணவர்களிடையே பிரச்சினை என்ன?: எல்லோருமே முஸ்லிம்கள் என்றால், இஸ்லாம் ஏன் அவர்களை இணைக்கவில்லை. இஸ்லாம் என்றால் அமைதி என்றால், ஏன் அவர்களுக்கு இஸ்லாம், அமைதியைக் கொடுக்கவில்லை. இரு முஸ்லிம் மாணவர்கள் ஏன் சுட்டுக் கொண்டு இறக்க வேண்டும். நாளைக்கு இவர்களையும் ஷஹீத் என்று அறிவித்து பிரச்சினையை முடித்து வைப்பார்களா? “ஈகோ பிரச்சினை” என்று ஆங்கில ஊடகங்கள் நாஜுக்காகக் கூறுகின்றன. அப்படியென்ன முஸ்லிம்களுக்குள் ஈகோ / தான் என்ற அகம்பாவம், திமிர் வரமுடியும்? அல்லாவுக்கு முன்னர் எல்லோரும் சமம் என்றால், எப்படி அத்தகைய மாற்று எண்ணங்கள், பிரிவினை சிந்தனைகள், சகோதரனை அடிக்க வேண்டும், துப்பாக்கி வைத்து சுட வேண்டும் போன்றவை வரமுடியும்? அப்படியென்றால் தவறு எங்கு இருக்கிறது? அதனை கண்டுபிடித்து தடுக்க வேண்டாமா? இன்றைக்கு இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள், அவர்களது தீவிரவாத கலவரங்கள், வன்முறைகள், குண்டுவெடிப்புகள். முதலியன பெரிய அச்சுருத்தலாக இருந்து வருகின்றன. மனித சமுதாயத்திற்கே எதிராக செயல்படும் நிலையும் அறியப்பட்டு விட்டது.

AMU VCமுஸ்லிம்கள் ஏன் முஸ்லிம்களைக் கொன்று கொண்டிருக்கிறார்கள்?: ஐ.எஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகள் முஸ்லிம்களையே கொன்று வருகின்றனர். பிறகு, இஸ்லாம் பெயரில் என்னதான் நடக்கிறது என்ற புதிர், குழப்பம் மற்றும் சந்தேகங்கள் எழுந்து கொண்டிருக்கின்றன. அதற்கு காரணம் இஸ்லாம் என்றால், இனி அதனை சீர்திருத்த வேண்டும் அல்லது விட்டுவிடும் நிலைமையும் ஏற்படலாம். மனிதர்கள், “மனிதர்கள்” என்று மதிக்கப்படாமல், “முஸ்லிம்கள்” மற்றும் “காபிர்கள்” என்று பிரித்து வைத்து, நாங்கள் எல்லோரையும் “முஸ்லிம்கள்” ஆக்குவோம் இல்லை ஒழித்துக் கட்டுவோம் என்றால் அது மதம் ஆகாது. இது சாதாரண முஸ்லிம் மக்களுக்கும் புரிந்து விட்டது. இருப்பினும், அடிப்படைவாத, பயங்கரவாத, தீவிரவாத சக்திகள் அவர்களை மிரட்டி, அடக்கி வைத்துள்ளன. இந்நிலை மாறினால் தான் அந்த அடக்கப்படும் முஸ்லிம்களுக்கு வாழ்வு ஏற்படும் இல்லை அழிவுதான் என்று அந்த இயக்கங்களே தெளிவாக்கி வருகின்றன. பல்கலைக்கழகங்கள் இப்படி தொடர்ந்து, கலவர நிலை, துப்பாக்கி சூடு, தேச-விரோத ஆர்பாட்டங்கள் என்ற சூழ்நிலைகளில் செயபட்டுக் கொண்டிருந்தால், மாணவர்களின் படிப்பு முதலியவை என்னாகும் என்று யோசிக்க வேண்டியுள்ளது.

© வேதபிரகாஷ்

25-04-2016

[1]http://www.dinamani.com/india/2016/04/25/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88.%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D/article3398102.ece

[2]http://tamil.thehindu.com/india/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article8516087.ece