Posted tagged ‘ஆலோசனை’

கோவையில் திடீரென்று  ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு கொண்ட 100 இளைஞர்களை கண்டு பிடித்து விட முடியுமா? உளவியல் ஆலோசனை தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் அடங்குமா? (3)

நவம்பர் 7, 2022

கோவையில் திடீரென்று  ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு கொண்ட 100 இளைஞர்களை கண்டு பிடித்து விட முடியுமா? உளவியல் ஆலோசனை தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் அடங்குமா? (3)

பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் அழிப்புவாதம் எவ்வாறு வளர்க்கப் படுகின்றன?: அத்தகைய போதனைகள், சின்னங்கள் மற்றும் வேறுபாடுகள் மூலம், சாதாரண தினசரி வாழ்க்கையினையே நடத்த முடியாமல் செய்து, மக்களை அஞ்சி நடுங்க வைத்து கட்டுப் படுத்தி வைக்கும் நிலையாகும். இறுதியாக யதேச்சதிகார, சர்வாதிகார. பாசிஸ, நாசிஸ அடக்குமுறைகள் மூலம் அரசாளும் நிலைக்குக் கொண்டு செல்ல போடும் திட்டமாகும். இதற்கு, பெரும்பாலும், மதம், மதநூல்கள், அவற்றில் குறிப்பிட்டுள்ள வாசகங்களை ஆணைகளாக ஏற்றுக் கொண்டு நடந்து கொள்வதும் தீவிரவாதம் ஆகிறது. அவற்றின் மூலம், எதிர்ப்பவர்களை மிகக் கொடுமையான மத தண்டனைகள் மூலம் சித்திரவதை, குரூரமாக கொல்லுதல், அவற்றை படங்கள், வீடியோக்களாக எடுத்துப் பரப்புதல், பார்ப்பவர்களுக்கு, “எங்களை எதிர்த்தால், உங்களுக்கும் இதே நிலை ஏற்படும்,” என்று பயமுருத்தல் முதலியனவும் அடங்கும்.  அவர்கள் குறிப்பிட்ட சொற்கள், சின்னங்கள், குறியீடுகளை அடையாளங்களாக பயன்படுத்துவதால், அந்தந்த சித்தாந்தம், மதநம்பிக்கை மற்றும் தீவிரவாத சார்பு, ஆதரவு, பரிவு, உணர்வு, கொண்ட மக்களும் உதவுவது உண்டு. இதனால், அவர்களுக்கு பலவழிகளில் உதவிகளும் கிடைத்து வருகின்றன.

பயங்கரவாத எதிர்ப்பு, தீவிரவாத அழிப்பு முறைகள் யாவை?: பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் அழிப்புவாதங்கள் செயல்படும் போது, அதற்கு எதிராக மக்களை பாதுகாக்க வழிமுறைகளையும் கையாள வேண்டியுள்ளன. பயங்கரவாத எதிர்ப்பு (தீவிரவாத எதிர்ப்பு என்றும் முதலியன), இது பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட அல்லது ஒழிக்க அரசாங்கங்கள், சட்ட அமலாக்கம், வணிகம் மற்றும் உளவுத்துறை நிறுவனங்கள் பயன்படுத்தும் நடைமுறைகள், இராணுவ தந்திரங்கள், நுட்பங்கள் மற்றும் உத்திகளை உள்ளடக்கியது. பயங்கரவாத எதிர்ப்பு என்பது பயங்கரவாதிகளை ஒழுங்குபடுத்தி, மனங்களில் பதிந்துள்ள தீவிரவாதங்களை நீக்கி, நடுநிலையாக்குவதற்கும் முடிவாக கைப்பற்றுவதற்கும் எடுக்கப் படும் முயற்சிக்கள் ஆகும். தேசிய சக்தியின் கருவிகளைப் பயன்படுத்துவதற்கான அரசாங்கத்தின் உந்துதல், அவர்கள் வைத்திருக்கும் இந்த அமைப்புக்கள் மற்றும் இந்த நெட்வொர்க்குகள் அவர்களை அட்டுப்படுப்படுத்டும் பயத்தை ஏற்படுத்துவதற்கும், அரசாங்கத்தை அல்லது குடிமக்களை அவ்வாறே தீவிரவாதிகளுக்குத் துணை போகாமல் இருக்க வற்புறுத்துவதற்கும் ஏற்கொள்ளும் வழிமுறைகள் ஆகும்.

முன்னரே அறிந்து நிகழாமல் தடுக்க செயல்பட வேண்டும்: இந்த பயங்கரவாதிகளின் இலக்குகளுக்கு ஏற்ப, அவற்றை முன்னரே அறிந்து நிகழாமல் தடுக்க செயல்பட வேண்டும். அத்தகைய அடிப்படைவாத எண்ணங்களிடன் பேசி, எழுதி வரும், கூட்டங்கள் சேர்க்கும் நபர்கள் தொடர்ந்து கண்காணிக்கப் படவேண்டும். தடை செய்யப் பட்ட இயக்கங்கள், அவற்றின் உறுப்பினர்கள் கூட தொடர்பு வைத்திருப்பது என்பது சாதாரண விசயம். தகவல் கொடுப்போர், இத்தகைய ஆட்களைப் பற்றி ரகசியமாக விவரங்கள் தரும் நபர்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டும். விவரஙளையும் சரிபார்த்து மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பயங்கரவாதத்தின் வரையறைகள் பரந்த கிளர்ச்சி, கலவரம், அழிவை உண்டாக்கும் போக்கின் ஒரு பகுதியாக இருந்தால், பயங்கரவாத எதிர்ப்பு கிளர்ச்சிக்கு எதிரான துரிதமாக தகுந்த நடவடிக்கைகளைப் பயன்படுத்தலாம். ஆயுதப் படைகள் வெளிநாட்டு உள்நாட்டுப் பாதுகாப்பு என்ற வார்த்தையை கிளர்ச்சி, சட்டமின்மை அல்லது நாசத்தை அடக்குவதற்கு அல்லது தேசிய பாதுகாப்புக்கு இந்த அச்சுறுத்தல்கள் உருவாகக்கூடிய நிலைமைகளைக் குறைக்கும் முயற்சிகளில் மற்ற நாடுகளுக்கு ஆதரவளிக்கும் திட்டங்களுக்கு பயன்படுத்துகின்றன..

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை, செயல்முறை ஆரம்பம்: அயர்லாந்து தனிநாடாக இருக்க வேண்டு என்று, ஐரிஸ் ரிபளிக் பார்ட்டி என்ற அமைப்பு போராடி வருகிறது. அது, இதுவரை உருவாக்கப்பட்ட முதல் பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பு பெருநகர காவல்துறையின் சிறப்பு ஐரிஷ் கிளை ஆகும், பின்னர் அது ஃபெனியன் பயங்கரவாதத்தின்[1] மீதான அதன் நோக்கத்தைத் தாண்டி அதன் நோக்கத்தை விரிவுபடுத்திய பின்னர் சிறப்புப் பிரிவு என்று மறுபெயரிடப்பட்டது. சட்ட அமலாக்க முகவர் இங்கிலாந்திலும் பிற இடங்களிலும் இதே போன்ற பிரிவுகளை நிறுவினர். 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால், பயங்கரவாத எதிர்ப்புப் படைகள் விரிவடைந்தன. குறிப்பாக, செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு, மேற்கத்திய அரசாங்கங்கள் பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகளுக்கு முன்னுரிமை அளித்தன, இதில் அதிக வெளிநாட்டு ஒத்துழைப்பு, சிவப்பு அணிகளை உள்ளடக்கிய மாற்றும் தந்திரங்கள், மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவை அடங்கும். வளர்ந்த நாடுகளில் பரபரப்பான தாக்குதல்கள் ஊடக கவனத்தைப் பெற்றாலும், பெரும்பாலான பயங்கரவாதம் குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளில் நிகழ்கிறது. பயங்கரவாதத்திற்கு அரசாங்கத்தின் பதில்கள், சில சந்தர்ப்பங்களில், கணிசமான எதிர்பாராத விளைவுகளுக்கு வழிவகுக்கும்

வேதபிரகாஷ்

07-11-2022


[1] The word Fenian served as an umbrella term for the Irish Republican Brotherhood (IRB) and their affiliate in the United States, the Fenian Brotherhood, secret political organisations in the late 19th and early 20th centuries dedicated to the establishment of an independent Irish Republic.

கோவையில் திடீரென்று  ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு கொண்ட 100 இளைஞர்களை கண்டு பிடித்து விட முடியுமா? தொடர்ந்து ஏன் கண்காணிக்கப் படவில்லை? (2)

நவம்பர் 7, 2022

கோவையில் திடீரென்று  ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு கொண்ட 100 இளைஞர்களை கண்டு பிடித்து விட முடியுமா? தொடர்ந்து ஏன் கண்காணிக்கப் படவில்லை? (2)

ஐஎஸ் ஆதரவு இளைஞர்களுக்கு உளவியல் ஆலோசனை: இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கோவை மாநகரில் கார் வெடிப்பு தினத்தில் இருந்து தீவிர பாதுகாப்பு மற்றும் வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். உக்கடம் சங்கமேஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் தற்போது வரை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். உயர் அதிகாரிகளின் உத்தரவு படி, உளவுத்துறை போலீசார் தீவிரமாக பலரை கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், கோவை மாநகரில் .எஸ். அமைப்பின் மீது ஈடுபாடு கொண்ட 60க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளனர்[1]. அவர்களது பட்டியலை தயார் செய்து வைத்துள்ளோம்[2]. அவர்களுக்கு கவுன்சலிங் கொடுக்க முயற்சி செய்து வருகிறோம். மேலும் மருத்துவ குழு சார்பில், அவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கவும் திட்டமிட்டு வருகிறோம். அவர்களை நல்வழிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்………[3] மேலும் உலாமாக்கள், உளவியல் நிபுணர்கள் மூலம் அவர்களுக்கு தவறான செயல்களில் ஈடுபடக்கூடாது, .எஸ். இயக்கத்தின் மோசனமான செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து எடுத்து கூறி, நல்ல கருத்துகளை போதித்து அவர்களை நல்ல குடிமகனாக மாற்றும் திட்டம் செயல்படுத்த உள்ளோம். இதற்காக அனுபவம் வாய்ந்த உளவியல் நிபுணர்களை தயாராக உள்ளோம்[4]…………..…………..…,’’ என்றார்.

தீவிரவாதம் வளர்ந்து இந்நிலை அடைந்தது எப்படி?: கீழ்கண்ட நிகழ்வுகளிலிருந்து, அத்தகைய நிலை, நிச்சயமாக ஒரே நாளில் உருவாகி விட முடியாது:

  1. போலீஸார் கோவை மாநகரில் ஐ.எஸ். அமைப்பின் மீது ஈடுபாடு கொண்ட 60க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளனர்.
  2. அவர்களது பட்டியலை தயார் செய்து வைத்துள்ளனர்.
  3. அவர்களுக்கு கவுன்சலிங் கொடுக்க முயற்சி செய்து வருகின்றனர்.
  4. மேலும் மருத்துவ குழு சார்பில், அவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கவும் திட்டமிட்டு வருகிறது.
  5. அவர்களை நல்வழிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்………
  6. மேலும் உலாமாக்கள், உளவியல் நிபுணர்கள் மூலம் அவர்களுக்கு தவறான செயல்களில் ஈடுபடக்கூடாது, ஐ.எஸ். இயக்கத்தின் மோசனமான செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து எடுத்து கூறி, நல்ல கருத்துகளை போதித்து அவர்களை நல்ல குடிமகனாக மாற்றும் திட்டம் ……….செயல்படுத்த முடிவு.
  7. இதற்காக அனுபவம் வாய்ந்த உளவியல் நிபுணர்களை தயாராக்க உள்ளோம்…..

அதனால், பல நாட்களாக, ஆண்டுகளாக நடந்து வரும் நிகழ்வுகளை எப்படி, ஏன், எவ்வாறு கவனிக்கப் படாமல் இருக்கிறது, என்பதும் நோக்கத்தக்கது.

உளவியல் ஆலோசனை எப்படி, யாரால், எவ்வாறு எங்கே நடக்கும்?: இதுவரை வெளிவந்துள்ள செய்திகளை கூர்மையாகப் படித்து, திரட்டி, அதில் உள்ள அம்சங்களை கீழ் கண்டவாறு கொடுக்கப் படுகிறது:

  1. கவுன்சலிங் கொடுக்க முயற்சி செய்தல்
  2. உலாமாக்கள், உளவியல் நிபுணர்கள் மூலம் அவர்களுக்கு தவறான செயல்களில் ஈடுபடக்கூடாது
  3. ஐ.எஸ். இயக்கத்தின் மோசனமான செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து எடுத்து கூறி,
  4.  நல்ல கருத்துகளை போதித்து அவர்களை நல்ல குடிமகனாக மாற்றும் பிரத்யேகமான திட்டம்
  5. அத்திட்டத்தை செயல்படுத்துதல்

பொதுவாக தமிழக ஊடகங்கள், பிரச்சினைகளை அலசுவதில்லை, பல்லாண்டுகளாக இத்தகைய தீவிரமான சிக்கல்கள் மற்றும் தொடரும் கேள்விக்குரிய விஷயங்கள் இருந்தாலும், ஏதோ காரணங்களுக்காக செய்திகளாக வெளியிட்டு அமைதியாகி விடுகின்றனர்.

06-11-2022 அன்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனை அவரது அலுவலகத்தில் ஜவஹிருல்லா சந்தித்தார். பின்னர், அவர் கூறியபோது[5], “கடந்த, 1998ல் நடந்த குண்டு வெடிப்பால், கோவை மக்கள் பாதிக்கப்பட்டு, மீண்டும் சகஜநிலை திரும்ப பல ஆண்டுகளானது. கார் வெடிப்பு போல், வேறு சம்பவங்கள் நடக்க கூடாது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஒற்றை நபரை இயக்கியது யார், இவ்வளவு பெரிய சம்பவத்தை நடத்துவதன் பின்னணி என்ன, என்பது குறித்து உண்மை வெளிக்கொண்டு வரவேண்டும். .எஸ்..எஸ்., அமைப்பே இஸ்லாமிய சமூகத்தை சீர்குலைக்க கூடிய நோக்கில் செயல்படக்கூடியது[6]. அதன் ஆதரவாளர்களாக இருப்பவர்கள், அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் செயல்படுகின்றனர்[7]. இதுபோன்ற மன நிலையில் உள்ளவர்களுக்கு உளவியல் ரீதியான கவுன்சிலிங் கொடுக்க போலீஸ் தயாராக உள்ளது[8]. போலீசார் சிறப்பாக செயல்படுகின்றனர்[9]. கார் வெடிப்பு சம்பவத்தை என்..., எப்படி விசாரிக்கப் போகிறது என்பது கேள்விக்குறிதான். தமிழக போலீசாரே விசாரிக்க வேண்டும்,” இவ்வாறு அவர் கூறினார்[10].

பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் அழிப்புவாதம் என்றால் என்ன?: பயங்கரவாதம் எனும்பொழுதே சில மனிதர்கள் குறிப்பிட்ட அடிப்படைவாத சித்தாந்தம், கொள்கைகள் மற்றும் ஏற்றுக்கொள்ளப் பட்ட திட்டம், ஆணை மற்றும் உந்துதல், அவற்றின் மூலம் குறிப்பிட்ட மனிதர்கள், மனித குழுமங்கள் மற்றும் நாடுகளைத் தாக்குதல், குண்டுவெடிப்புகள் நடத்துதல், பீதியை உண்டாக்குதல் என்றாகிறது. இவையெல்லாம் ஒரே நாளில் வந்து விடாது. சிறு வயதிலிருந்தே சில அறிவுரைகள், போதனைகள், சித்தாந்தங்கள் முதலியவை படிப்படியாக கற்பிக்கப் படவேண்டும். உலகிலுள்ள மக்களை “ஏற்றுக் கொள்ளப் பட்டவர்கள்” மற்றும் “ஏற்றுக் கொள்ளப் படாதவர்கள்” என்று பிரித்து, அவ்வாறே அந்த பேதம், வித்தியாசம் மற்றும் வேறுபாடுகளை அறிய-புரிய வைத்து வெருப்பை மனங்களில் வளர்ப்பது முதல் பணியாக அமைகிறது. பிறகு, “நாம் உயர்ந்தவர்கள்” ஆனால், அவர்கள் “தாழ்ந்தவர்கள்” எனவே, அவர்கள், “நம்முடன் வாழத் தகுதியற்றவர்கள்” என்று பிரித்து அடையாளம் காண வைப்பது. இல்லை, தங்களை குறிப்பிட்ட சின்னங்களுடன் இணைத்து, பிரித்து அடையாளம் காண வைப்பது என்பதிலும் முடியலாம்.

வேதபிரகாஷ்

07-11-2022


[1] தினகரன், கோவை மாநகரில் .எஸ். தீவிரவாத ஈடுபாடு வாலிபர்கள் கண்டுபிடிப்பு: உளவியல் ஆலோசனை வழங்க திட்டம், 2022-11-05@ 14:48:42.

[2] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=811771

[3] தினத்தந்தி, .எஸ். இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட 100 பேர் கண்டுபிடிப்பு, நவம்பர் 6, 12:15 am (Updated: நவம்பர் 6, 12:15 am).

[4] https://www.dailythanthi.com/News/State/is-discover-100-people-inspired-by-movement-830407

[5] தினமலர், ஒற்றை நபரை இயக்கியது யார்: கோவையில் ஜவஹிருல்லா கேள்வி, Updated : நவ 07, 2022  07:06 |  Added : நவ 07, 2022  07:04

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=3164210

[7] மின்னம்பலம், இஸ்லாமிய சமூகத்தை சீர்குலைக்கும் .எஸ்..எஸ்: ஜவாஹிருல்லா, நவம்பர் 6, 2022. 21:41 PM IST.

[8] https://minnambalam.com/political-news/isis-will-disrupt-the-islamic-community-jawahirullah/

[9] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், இஸ்லாமிய சமூகத்தை சீர்குலைக்கும் ஐஎஸ்ஐஎஸ்..! ஜமீஷா முபீனை இயக்கியது யார்..? ஜவாஹிருல்லா கேள்வி  , Ajmal Khan, First Published Nov 7, 2022, 8:36 AM IST; Last Updated Nov 7, 2022, 8:36 AM IST

[10] https://tamil.asianetnews.com/politics/jawahirullah-urged-to-find-out-who-is-behind-the-coimbatore-car-blast-rkyjbb

கோவையில் திடீரென்று  ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு கொண்ட 100 இளைஞர்களை கண்டு பிடித்து விட முடியுமா? (1)

நவம்பர் 7, 2022

கோவையில் திடீரென்று  ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு கொண்ட 100 இளைஞர்களை கண்டு பிடித்து விட முடியுமா? (1)

கோவை கார் குண்டு வெடிப்பிற்குப் பிறகு தொடரும் விசாரணை, சோதனை முதலியன: கோவையில் ஐ.எஸ். இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட 100 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நிபுணர்கள் மூலம் உளவியல் ஆலோசனை வழங்க உள்ளதாக மாநகர போலீசார் தெரிவித்தனர், என்று செய்திகள் வெளிவர ஆரம்பித்துள்ளன. கோவை உக்கடம் சங்கமேஸ்வரர் கோயில் முன்பு கடந்த 23ம் தேதி கார் வெடிப்பில் ஜமேஷா முபின் (23) பலியானார். கோவை மாநகர தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி சதித்திட்டம் தீட்டியதாக ஜமேஷா முபினின் உறவினர்கள் முகமது அசாருதீன், அப்சர்கான் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர். அவர்கள் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தற்போது என்.ஐ.ஏ. வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. சிறையில் உள்ள 6 பேரிடமும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர். கோவை மாநகர தனிப்படை போலீசார் கோவையில் சந்தேக நபர்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். உக்கடம், ஜி.எம்.நகர் உள்ளிட்ட பகுதிகளில் பல பேரின் வீடுகளில் சோதனை நடத்தி விசாரணை நடத்தினர்[1]. மேலும் போலீசார் நடத்திய விசாரணையின் படி, ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் பால் ஈடுபாடு கொண்ட நபர்கள் குறித்த பட்டியலை போலீசார் திரட்டினர்[2].

யார் இந்த 53 அல்லது 100 பேர் இளைஞர்கள்?: 53, 100 பேர் என்றெல்லாம் குறிப்பிடப் படும் இந்த இளைஞர்கள் யார் என்று குறிப்பிடப் படவில்லை. அவர்களது பெயர்களும் தெரிவிக்கப் படவில்லை. நல்லது, ஏனெனில், விசாரணை நடந்து வரும் பொழுது, எல்லா விவ்ரங்களையும் வெளிப்படையாக சொல்லி விடமுடியாது. ஆனால், உலாமாக்களை வைத்து கவுன்சிலிங், ஆலோசனை என்றெல்லாம் குறிப்பிடும் பொழுது, அவர்கள் முஸ்லிம்கள் என்றாகிறது. ஏனெனில், உலாமாக்கள் அவ்வாறு மற்றவர்களுக்கு கவுன்சிலிங், ஆலோசனை சொல்ல மாட்டார்கள். ஆகவே, செக்யூலரிசத் தனமாக, இவ்விவரங்கள் ஊடகங்களில் எளியிடப் படுகின்றன என்பது தெரிகிறது. ஒன்று பாதுகாப்பு, ரகசியம் காக்கப் படவேண்டும் என்றால், அதற்கான முறைகளை அரசாங்கம் தொடந்து செய்து கொண்டிருக்க வேண்டும். குறிப்பிட்ட பகுதியில், முஸ்லிம்கள் அதிகமாக உள்ளனர், அங்கு, சந்தேகிக்கப் படும் வகையில் ஏதோ நடக்கிறது எனும் போது, அதை கவனிக்கப் பட வேண்டும். தொடர்ந்து வெடிகுண்டு சம்பந்தப் பட்ட ரசாயனங்கள் விற்கப் படுகின்றன, வாங்கப் படுகின்றன என்றாலும், கவனிக்கப் படவேண்டும். குவாரி போன்றவற்றிக்கு என்று வாங்கி, மற்ற காரியங்களுக்கு உபயோகிக்கப் படுகின்றன எனும்பொழுதும், அவை கவனிக்கப் படவேண்டும். இவையெல்லாம் தாண்டித் தான், இத்தகைய வெடிப்புகள் நிகழ்கின்றன.

உளவுத்துறை போலீசார் நடத்திய விசாரணை: என்.ஐ.ஏ இவ்வழக்கை எற்றுக் கொண்டதாக ஏற்கெனவே செய்தி வந்து விட்டது. ஆனால், உளவுத்துறை போலீசார் நடத்திய விசாரணையில் கோவை மாநகரில் 70 பேர் முதல் 100 பேர் வரை ஐ.எஸ். இயக்க செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு உள்ளது தெரியவந்தது[3]. தற்போது போலீசார் அவர்களை அடையாளம் கண்டுள்ளனர்[4]. அவர்களது பட்டியல், விவரங்களும் தயாரிக்கப் பட்டு வருகின்றன[5]. இதையடுத்து அவர்களுக்கு உலாமாக்கள், உளவியல் நிபுணர்கள் மூலம் உளவியல் ஆலோசனை வழங்க திட்டமிட்டு உள்ளனர்[6], போன்ற செய்திகளும் தொட்ர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. சாதாரணமாக, செய்திகள் வாசிக்கும் வாசகர்களுக்கு, மத்திய அல்லது மாநில உளவுத்துறை போலீசார், அல்லது என்.ஐ.ஏ அல்லது யார் விசாரணை நடத்துகிறார்கள் என்ற குழப்பம் ஏற்படலாம். ஒருவேளை விசாரணை நடக்கும் பொழுது, அவர்களால், முழுவிவரம் கொடுக்கப் படாதல் நிலை இருக்கலாம். அப்பொழுது, ஊடகங்கள் முரண்பட்ட செய்திகளை வெளியிடக் கூடாது.

ஏற்கனவே கைதான ஆம்பூர் மாணவன் வீட்டில் சோதனை[7]: திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நீலிக்கொல்லையை சேர்ந்தவர் மீர் அனாஸ் அலி (22). இவர் தனியார் பொறியியல் கல்லூரில் 2ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த ஜூலை 30ம் தேதி இவரது வீட்டில் மத்திய உளவு துறையினர் திடீர் சோதனை நடத்தினர். அப்போது மீர் அனாஸ் அலி தனது லேப்டாப்பை உடைத்ததாக தெரிகிறது[8]. உளவுதுறையினர் அந்த லேப்டாப் மற்றும் அவரது இரு செல்போன்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக மீர் அனாஸ் அலி செயல்பட்டு வந்ததும், வெளிநாட்டு தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தததும் தெரியவந்தது. இதைதொடர்ந்து அவரை ஆம்பூர் டவுன் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், நேற்று ஆம்பூரில் உள்ள அனாஸ் அலி வீட்டிற்கு திருப்பத்தூர் மாவட்ட ஏடிஎஸ்பி புஷ்பராஜ் தலைமையிலான போலீசார் வந்து சோதனை செய்தனர். வீட்டில் இருந்த பென் டிரைவ் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ஆய்வுக்காக போலீசார் பறிமுதல் செய்தனர்.

அனாஸ் அலி வீட்டில் பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டதா, இல்லையா?: ஆனால், தமிழ்.இந்து, இது போல செய்தி வெளியிட்டுள்ளது[9], “கோவையில் கார் சிலிண்டர் வெடித்த விபத்தை தொடர்ந்து இந்த சோதனை நடைபெறுவதாக தகவல் பரவியது. அவரது வீட்டுக்கு அருகில் ஏராளமானவர்கள் திரண்டதால் அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக இந்த சோதனை நடைபெற்றது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: மிர் அனாஸ் அலி 90 நாட்களுக்கு மேலாக சிறையில் உள்ளார். அவருக்கு ஜாமீன் நிராகரிக்கப்பட்டுள்ளது.அவரது வீட்டில் வழக்கு தொடர்பாக வருவாய்த் துறையினர் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது. இது குறித்த விவரங்கள் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும். எங்கள் சோதனையில் எந்தவித தடை செய்யப்பட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்படவில்லை[10] என்றனர்.” அதாவது, தினகரன், “வீட்டில் இருந்த பென் டிரைவ் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ஆய்வுக்காக போலீசார் பறிமுதல் செய்தனர்” என்றும், தமிழ்.இந்து, “எங்கள் சோதனையில் எந்தவித தடை செய்யப்பட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்படவில்லை,” என்று போலீஸார் சொன்னதாகவும் செய்திகள் வந்துள்ளன. கோவை கும்பலுக்கும், இவனுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற நிலைதான் தெரிகிறது.

தென்னகத்தில் உள்ள தீவிரவாத இணைப்புகள், சம்பந்தங்கள், உரையாடல்கள் முதலியவை கண்காணிக்கப்பட வேண்டும்: தீவிரவாதம் தமிழகம், கேரளா, கர்நாடகா என்றெல்லாம் இணைந்துள்ளது என்பது கடந்த குண்டுவெடிப்புகளிலிருந்து அறிந்து கொள்ளலாம். விசாரணையின் போது, இந்த மூன்று மாநில போலீசார், என்ஐஏ போன்றோர் வந்து செல்வது அறிந்த விசயமே. இதே போல தெலிங்கானா-ஆந்திரா தொடர்புகலும் உள்ளன. இந்த மூன்று மாநில எல்லைகள் அருகிலுள்ள இடங்களில் காடுகள், மறைவான இடங்கள், ரிசார்ட்டுகள் என்றெல்லாம் இருப்பது தெரிந்த விசயமே. கனிமங்கள், மரங்கள் தொடர்ந்து கடத்தப் பட்டு, கேரளாவுக்குச் சென்று கொண்டிருக்கின்றன. ஐஎஸ் தீவிரவாத சார்பு கொண்டவர்கள், விருப்பம் மிக்கவர்கள், மனதளவில், சித்தாந்த ரீதியில் ஆதரிப்பவர்கள், …………………………..போன்றவர்கள் சமூக ஊடகங்களில் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்குள் இணைப்புகள், சம்பந்தங்கள், உரையாடல்கள் முதலியவற்றை கண்காணிக்க முடியுமா-முடியாதா என்பதை சாதாரண மக்கள் ஆராய்ச்சி செய்ய முடியாது.

வேதபிரகாஷ்

07-11-2022


[1] தமிழ்.இந்து, கோவையில் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள 53 இளைஞர்களை கண்டறிந்து போலீஸ் கண்காணிப்பு, செய்திப்பிரிவு, Published : 06 Nov 2022 06:48 AM, Last Updated : 06 Nov 2022 06:48 AM.

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/893049-police-surveillance-of-53-youths-in-coimbatore-for-pro-isis-stance-3.html

[3] தீக்கதிர், கோவையில் ஐஎஸ்ஐஎஸ் இயக்க ஆதரவான 50 இளைஞர்கள் கண்டுபிடிப்பு, வாவட்ட செய்திகள், நவம்பர் 5, 2022.

[4]https://theekkathir.in/News/districts/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/turmeric-price-hike-makes-farmers-happy

[5] தமிழ்.முரசு, 60 இளையர்களுக்கு நல்வழிப் பயிற்சி, 7 Nov 2022 05:30

[6] https://www.tamilmurasu.com.sg/tamilnadu/story20221107-99204.html

[7] தினகரன், கோவையில் ஐஎஸ் தீவிரவாத ஆதரவு வாலிபர்கள் சிக்கினர்: உளவியல் ஆலோசனை வழங்க திட்டம், 2022-11-06@ 00:37:1.

[8] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=811864

[9] தமிழ்.இந்து, ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பில் இருந்து கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம்பூர் இளைஞர் வீட்டில் சோதனை, செய்திப்பிரிவு, Published : 06 Nov 2022 07:00 AM; Last Updated : 06 Nov 2022 07:00 AM

[10] https://www.hindutamil.in/news/tamilnadu/893045-ambur-youth-house-raided-with-links-to-isis-2.html