23-09-2022 அன்று கோவையில் கார் குண்டு வெடித்தது, சென்னையில் விசாரணை தொடர்ந்து நடந்து வருவது, 07-02-2023 அன்று வெடிப்பொருட்கள் செயலிழக்கச் செய்தது!

23-09-2022 அன்று கோவையில் கார் குண்டு வெடித்தது, சென்னையில் விசாரணை தொடர்ந்து நடந்து வருவது: கோவை கோட்டை சங்கமேஸ்வரா் கோயில் அருகே கடந்த ஆண்டு அக்டோபா் 23ஆம் தேதி 23-09-2022 அன்று கார் குண்டு வெடித்தது. இதில் அந்த காரை ஓட்டி வந்த ஜமேஷா முபீன் அங்கேயே உயிரிழந்தார். இதுதொடா்பாக என்ஐஏ குழுவினா் நடத்தி வரும் விசாரணையில் இதுவரை 11 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்நிலையில் இந்த வழக்கில் கைதாகி உள்ள முகமது அசாருதீன், அஃப்சா்கான், ஃபெரோஸ்கான், முகமது தெளபீக், ஷேக் இதயத்துல்லா, சனோஃபா் அலி, முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 7 பேரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ அதிகாரிகள் பூந்தமல்லி என்ஐஏ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனா். அதாவது, சென்னையில் தான் இந்த நீதிமன்ற வழக்கு விசாரணைகள் எல்லாம் நடந்து வருகின்றன. ஆனால், ஊடகங்கள் இவற்றைப் பற்ரியெல்லாம் கண்டு கொள்ளாமல், வேறு விவகாரங்களை ஐத்துக் கொண்டு வாத-விவாதங்கள், பட்டி மன்றங்கள் நடத்திக் கொண்டிருக்கின்றன.

சட்டப் படி நடந்து வரும் நீதிமன்ற விசாரணைகளில் காலதாமதம் ஏற்படுவது: இவ்வாறு சட்டப் படி வழக்குகளை விசாரிப்பது, கைது செய்யப் பட்டவர்களை விசாரிப்பது, வாக்குமூலம் வாங்குவது, அதை வைத்து, மறுபடியும் குறிப்பிட்ட இடங்களுக்குச் சென்று சோதனை செய்வது, விசாரிப்பது போன்றவை தொடர்ந்து நடந்து வருகின்றன. இவற்றில் இடையே காலதாமதம் ஏற்படுகிறது. செப்டம்பர் 2022ல் நடந்த குண்டுவெடிப்பிற்குப் பிறகு, நிச்சயமாக சம்பந்தப் பட்டவர்கள் உஷாராகியிருப்பர். இருக்கும் ஆதாரங்களை அழித்திருப்பர். ஆகவே, இவற்றையெல்லாம் மீறி, விசாரணை நடத்தி உண்மையை நிலை நாட்ட என்ஐஏ போன்றோர் மிக கடினமாக வேலை செய்ய வேண்டியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்த வரையில் முஸ்லிம்கள் என்ஐஏவையே எதிர்த்து ஆர்பாட்டம் செய்கின்றனர். சோதனைக்கு வந்தால், கலாட்டா செய்கின்றனர். இதனால், தமிழக போலீஸாரும் கூட வர வேண்டியுள்ளது. இதெல்லாம் இப்பொழுது வழக்கமாகி விட்டது. இதையெல்லாம் யாரும் கண்ட்ப்பதும் இல்லை. மிக சாதாரணமாக எடுத்துக் கொ/ல்கின்றனர் அல்லது கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றனர். இப்பொழுது கூட, இந்த விவகாரங்களை சில ஊடகங்கள் தான் வெளியிட்டுள்ளன.

பட்டாசு வாங்கிய கடையில் என்ஐஏ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை 07-02-2023 அன்று சோதனை: கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தொடா்புடைய அசாருதீன் பட்டாசு வாங்கிய கடையில் என்ஐஏ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை 07-02-2023 அன்று சோதனை நடத்தினா். மனுவை விசாரித்த நீதிபதி அந்த 7 பேரையும் 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். அதன்படி அவா்கள் 7 பேரையும் கோவைக்கு வியாழக்கிழமை 02-02-2023 அன்று அழைத்து வந்தனா். கோவையில் அவா்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடா்ந்து ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். அப்போது கார் வெடிப்பு சம்பவம் தொடா்பான திட்டம் குறித்தும், ஜமேஷா முபீன் குறித்தும், இதில் வேறு எவருக்கேனும் தொடா்பு உள்ளதா என்பது குறித்தும் அவா்களிடம் விசாரணை நடத்தியதோடு, அவா்கள் தெரிவித்த தகவல்களை விடியோவாகவும் பதிவு செய்து கொண்டனா்.

23-09-2022 அன்று குண்டு வெடித்தது என்றால், 07-02-2023 அன்று செல்லும் பொழுது நிலை: அவா்கள் 7 பேரில் அசாருதீன் என்பவா் கோவையிலுள்ள ஒரு பட்டாசுக் கடையில் பட்டாசுகளை வாங்கி அவற்றிலிருந்து திரிகளை மட்டும் எடுத்துவிட்டு அந்த பட்டாசு மருந்துடன் வேறு ரசாயனங்களைச் சோ்த்து புதிதாக வெடிபொருள் தயாரித்திருந்தது விசாரணையில் தெரியவந்தது[1]. இதையடுத்து அசாருதீன் பட்டாசு வாங்கிய கடைக்கு அவரை செவ்வாய்க்கிழமை 07-02-2023 அன்று நேரில் அழைத்துச் சென்று என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினா்[2]. 23-09-2022 அன்று குண்டு வெடித்தது என்றால், 07-02-2023 அன்று செல்லும் பொழுது நிலை எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்க்கலாம். இதையெல்லாம், என்ஐஏவுக்கு கடினமாக இருந்தாலும், மற்றவர்களுக்கு சாதமாக இருக்கும். இத்தகைய அடைமுறை விவகாரங்களை சட்ட ஓட்டைகளாக்கி தப்பித்துக் கொள்ள முயல்வர்.

வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தப் பட்டுள்ள ரசாயனங்கள் முதலியன பறிமுதல், சோதனைக்கு உட்படுத்தப்பட்டன: கார் வெடிப்பு நடந்த பின்னர் ஜமேஷா முபின் வீட்டில் நடந்த சோதனையில் 120 கிலோ எடையிலான வெடி பொருட்கள் இருந்தன. 109 வகையான அந்த பொருட்களை தேசிய புலனாய்வு முகமையினர் பறிமுதல் செய்தனர். இதில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படும் ரசாயன பொருட்களும் அடங்கும்[3]. இந்த ரசாயன மூலப் பொருட்களில் பொட்டாசியம் நைட்ரேட், நைட்ரோ கிளிசரின், ரெட் பாஸ்பரஸ், பிஇடிஎன் பவுடர் (பென்டேரித்ரிட்டால் டெட்ராநைட்ரேட் பவுடர்), அலுமினியம் பவுடர் ஆகியவை இருந்தன. தவிர, வயர்கள், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு ஆதரவு பொருட்கள் உள்ளிட்டவையும் இருந்ததை கண்டறிந்து பறிமுதல் செய்யப்பட்டது.வெடி பொருட்கள் ஆய்வக சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது[4]. அவையெல்லாம் வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படுத்தப் படும் பொருட்கள், ரசாயனங்கள் என்று நிரூபிக்கப் பட்டன. இருப்பினும், அவையெல்லாம் எப்படி தீவிரவாதிகள் வசம் செல்கின்றன என்பது புதிராக இருக்கிறது. உதாரனத்திற்கு நைரோ செல்லுலோஸ் வெடிகுண்டுகள் மலை, மலைபாறை, குவாரிக்களில் உபயோகிக்க, சாலைப் பணி முதலியவற்றிற்கும் விற்கப் படுகின்றன. ஆனால், அத்தகைய பொருள் முன்னர் சந்திர பாபு நாயுடு செல்லும் போது உபயோகப் படுத்தப் பட்டன.

ரசாயனங்கள் செயலிழக்கப் பட்டன: பறிமுதல் செய்த வெடி பொருட்கள் அவினாசி ரோட்டில் உள்ள என்ஐஏ தற்காலிக முகாம் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது[5]. நேற்று என்ஐஏ எஸ்பி ஸ்ரீஜித், வெடிகுண்டு அழிக்கும் நிபுணர் பாண்டே தலைமையிலான அதிகாரிகள் வெடி பொருட்கள் எடுத்து செல்லும் சிறப்பு வாகனத்தில் பறிமுதலான வெடிபொருட்களை கோவை மாவட்டம் சூலூர் தாலுகாவில் உள்ள சுல்தான்பேட்டையை அடுத்த கந்தம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தின் வெடி மருந்து குடோனிற்கு கொண்டு சென்றனர்[6]. அங்கு வெடி பொருட்கள் அழிக்கப்பட்டன[7]. வெடி பொருட்கள் அழித்தது தொடர்பான ஆதாரங்களை போலீசார் பதிவு செய்தனர். குறிப்பிட்ட சில வகையான வெடி பொருட்கள் தீ வைத்தும், சில பொருட்கள் மண்ணில் மூடியும் அழிக்கப்பட்டதாக தெரிகிறது[8]. வெடி பொருட்கள் அழிக்கப்பட்டபோது அந்த வளாகத்தில் தொழிலாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை[9]. வெளியே தெரியாமல் மிகவும் ரகசியமாக வெடி மருந்துகளை கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்பட்டது. இது தொடர்பாக அந்த வெடிமருந்து தொழிற்சாலையின் மேலாளர் கூறுகையில், “கோவையில் கைப்பற்றப்பட்ட வெடி பொருட்கள் எங்கள் தொழிற்சாலையில் வைத்து செயல் இழக்கச் செய்யப்பட்டன. காவல்துறையின் முக்கிய அதிகாரிகள் உட்பட 18 பேர் வந்திருந்தனர்,” என்றார்[10]. நீதிமன்ற வழிகாட்டுதலின்படி வெடிபொருட்களை செயலிழக்க செய்துள்ளனர்.
© வேதபிரகாஷ்
08-02-2023.

[1] தினமணி, கோவை பட்டாசுக் கடையில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை, By DIN | Published On : 08th February 2023 12:00 AM | Last Updated : 08th February 2023 12:00 AM
[2] https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2023/feb/08/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%90%E0%AE%8F-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-3997001.html
[3] தந்தி டிவி, கோவை கார் வெடிப்பு சம்பவம் – 120 கிலோ வெடிபொருட்கள் என்.ஐ.ஏ முன் அழிப்பு, By 6 பிப்ரவரி 2023 8:30 PM
[4] https://www.thanthitv.com/latest-news/coimbatore-car-blast-incident-120-kg-explosives-destroyed-before-nia-166187
[5] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், கோவை வெடி விபத்தில் கைப்பற்றப்பட்ட வெடி மருந்துகள் அழிப்பு; என்ஐஏ நடவடிக்கை, Velmurugan s, First Published Feb 7, 2023, 11:41 AM IST, Last Updated Feb 7, 2023, 11:41 AM IST.
[6] https://tamil.asianetnews.com/tamilnadu-coimbatore/coimbatore-car-blast-issue-nia-officers-demolish-the-raw-materials-of-bom-rpp575
[7] தமிழ்.இந்து, கோவை | கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 120 கிலோ வெடிகுண்டு மூலப் பொருட்கள் அழிப்பு , Published : 07 Feb 2023 07:03 AM
Last Updated : 07 Feb 2023 07:03 AM.
[8] https://www.hindutamil.in/news/tamilnadu/940102-coimbatore-car-blast.html
[9] தினகரன், கோவை கார் வெடிப்பு வழக்கு: பறிமுதலான வெடிபொருட்கள் வெடிக்க வைத்து செயலிழப்பு, 2023-02-07@ 21:21:37
[10] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=837081


அண்மைய பின்னூட்டங்கள்