Posted tagged ‘ஆம்பூர்’

தமிழக முஸ்லிம் கட்சிகள் பிளவுப்பட்ட நிலை – இரட்டை வேடங்களா, நிறைய சீட்டுகளைப் பெற ஆடும் நாடகமா – திராவிட கட்சிகளின் தாஜா செய்யும் போக்கு தொடர்கிறது!

ஏப்ரல் 20, 2016

தமிழக முஸ்லிம் கட்சிகள் பிளவுப்பட்ட நிலை – இரட்டை வேடங்களா, நிறைய சீட்டுகளைப் பெற ஆடும் நாடகமா – திராவிட கட்சிகளின் தாஜா செய்யும் போக்கு தொடர்கிறது!

16-04-2016 னிக்ஹ்ட் Taking-the-opposition-coalition-dmk-protest-in-vaniyambadiதிமுகவினருக்கும், முஸ்லிம்களுக்கும் என்ன பிரச்சினை?: உளுந்துார்பேட்டையை போல வாணியம்பாடி தொகுதியை, அண்ணா அறிவாலயத்தில், ‘சரண்டர்’ செய்து விடு’ என, முஸ்லிம் லீக் வேட்பாளருக்கு, தி.மு.க.,வினர் மிரட்டல் விடுத்த தகவல் வெளியாகி உள்ளது[1] என்ற செய்தி வியப்பாக உள்ளது. என்ன மீலாது நபி விழாக்களில் கலந்து கொண்டு, ரம்ஜான் நோன்பு விழாக்களில் நன்றாக சாப்பிட்டு முஸ்லிம்களை புகழ்ந்த திராவிடர்களா, முஸ்லிம்களை எதிர்க்கிறார்கள் என்ற கேள்வி எழுகின்றது. வேலுார் மாவட்டத்தில், மொத்தமுள்ள, 13 தொகுதிகளில், 10ல் தி.மு.க., போட்டியிடுகிறது; மூன்று தொகுதிகளில், கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றன. சோளிங்கர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியும், ஆம்பூர் தொகுதியில் மனித நேய மக்கள் கட்சியும், வாணியம்பாடி தொகுதியில் முஸ்லிம் லீக் கட்சியும் போட்டியிடுகிறது[2]. வாணியம்பாடி தொகுதியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில், முகமது பாரூக் போட்டியிடுகிறார்.

Fight among the mohammedan parties in Tamilnaduஉளுந்தூர்பேட்டை தொகுதியை திமுகவிடம் ஒப்படைத்தது ஏன்?: திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.ம.க.வுக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கப் பட்டது. அதில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதியை திமுக-விடம் ஒப்படைத்தது[3]. இந்தத் தொகுதியில் திமுக சார்பில் ஜி.ஆர்.வசந்தவேல் போட்டியிடுவார் என்று திமுக அறிவித்துள்ளது.  இதையடுத்து, அந்தத் தொகுதிக்கு வேட்பாளரை திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தார்[4]. ம.ம.க.தலைவர் ஜவாஹிருல்லா வெள்ளி மாலை திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசிய பின்பு உளுந்தூர்பேட்டை தொகுதியை திமுக வசம் அளித்ததாகத் தெரிவித்தார். எனினும் அதற்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை. ஒரு தொகுதியை திமுகவுக்கு விட்டுக் கொடுத்துள்ள நிலையில் ம.ம.க போட்டியிடும் தொகுதிகள் நிலவரம்:

  1. ராமநாதபுரம்: ஜவாகிருல்லா.
  2. தொண்டாமுத்தூர்: எம்.ஏ.சையது முகமது.
  3. நாகப்பட்டிணம்: ஏ.எம்.ஜபருல்லா.
  4. ஆம்பூர்: வி.எம்.நஜீர் அகமது.

தொகுதி உடன்பாடு பிரச்சனையில் திமுக கூட்டணியிலிருந்து எஸ் .டி.பி.ஐ.கட்சி வெளியேறியமை குறிப்பிடத்தக்கது[5]. ஆகவே, சீட்டு எண்ணிக்கையினால் எஸ்.டி.பி.ஐ.கட்சி விலகியது என்று சொல்வதில் அர்த்தமில்லை.

கருணாநிதி முஸ்லிம்களுடன். எஸ்.டி.பி.ஐவாணியம்பாடி திமுகவுக்கே: கடந்த, 37 ஆண்டுகளாக, கூட்டணி கட்சிகளுக்கே, வாணியம்பாடி ஒதுக்கப்பட்டு வந்துள்ளதால், இந்த முறை வாய்ப்பு கிடைக்கும் என, தி.மு.க.,வினர் எதிர்பார்த்திருந்தனர். தொகுதி முழுவதும், சுவர்களில் உதயசூரியன் சின்னத்தை வரைந்து வைத்திருந்தனர். ஆனால், இந்த முறையும் தொகுதி கைமாறியதால், தி.மு.க.,வினர் அதிருப்தி அடைந்தனர்[6]. நேற்று முன்தினம் இரவு, ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய தி.மு.க.,வினர், வேலுார் மேற்கு மாவட்ட தி.மு.க., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தி.மு.க., போட்டியிட வலியுறுத்தி, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்[7]. இதற்கிடையில், தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் மனிதநேய மக்கள் கட்சி, உளுந்துார்பேட்டை தொகுதியை, தி.மு.க.,விடம் சரண்டர் செய்தது[8]. அதேபோல், வாணியம்பாடி தொகுதியையும் சரண்டர் செய்ய வேண்டும் என, முஸ்லிம் லீக் வேட்பாளர் முகமது பாரூக்கை, தி.மு.க.,வினர் மிரட்டியதாக, 16-04-2016 அன்று தகவல் பரவியது[9].

SDPI, MMK, IUML all in DMK 2016முஸ்லிக் லீக் நிர்வாகி திமுகவினருக்கும், முஸ்லிம்களுக்கும் உள்ள பிரச்சினை பற்ரி கூறுவது: இது குறித்து, முஸ்லிம் லீக் நிர்வாகி ஒருவர் கூறியதாவது: இதன் பின்னணியில், வேலுார் மேற்கு மாவட்ட தி.மு.க., செயலர் தேவராஜ் உள்ளார். அவரது மைத்துனர் அசோகன், ஆலங்காயம் ஒன்றிய செயலராக இருக்கிறார். அவரது துாண்டுதலில் தான், தி.மு.க.,வினர் போராட்டம் நடத்துகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். ஆம்பூரிலும் எதிர்ப்பு: ஆம்பூர் தொகுதியை, மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கியதைக் கண்டித்து, தி.மு.க.,வினர் போராட்டத்தில் குதித்தனர். ஆம்பூர் நேதாஜி சாலையில் மறியல் நடத்திய, 100க்கும் மேற்பட்ட தி.மு.க.,வினர், பின், நகர தி.மு.க., அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, ‘ஆம்பூர் தொகுதியில், தி.மு.க.,வே போட்டியிட வேண்டும்; இல்லையெனில், தேர்தல் பணியில் ஈடுபட மாட்டோம்’ என, கோஷமிட்டனர். தகவலறிந்து வந்த தி.மு.க. நிர்வாகிகள் போராட்டக்காரர்களை சமரசம் செய்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்[10].

IUML splinter groupsதங்களது மக்கட்தொகைக்கு அதிகமாக முஸ்லிம்கள் சீட்டுகள் பெறுவது: தமிழக மக்கட்தொகை சுமார் 7.3 கோடி அல்லது 730 லட்சங்கள், அதில் முஸ்லிம்கள் சுமார் 43 லட்சங்கள் இருக்கிறார்கள். அப்படிப் பார்த்தால், அவர்களுக்கு 6% என்ற கணக்கில் ஒன்று அல்லது இரண்டு இடங்கள் தான் கொடுக்கப்பட வேண்டும் ஆனால் 12 முதல் 15 சீட்டுகள் கொடுக்கப்படுகிறன. இது தவிர “தேர்தெடுக்கும் முறையில்” ஒரு எம்.பி பதவியையும் சேர்த்து பேரத்தில் பேசி வருகிறார்கள். தவிர அரசு ஒதுக்கீடு இடங்கள், கடைகள், குத்தகைகள் முதலியவற்றி;உம் முஸ்லிம்கள் கணிசமான இடங்களைப் பெறுகிறார்கள், கோடிகளை அள்ளுகிறார்கள். இதெல்லாம், மற்ற திராவிட அரசியல்வாதிகளை பாதிக்கின்றன. 30-50 ஆண்டுகள் என்று உழைத்து வந்து கொண்டிருக்கின்ற நிலையில், நேற்று வந்தவர்கள் சீட் பெற்று பதவிக்கு வருவதை அவர்கள் விரும்பவில்லை என்றே தெரிகிறது. இது தவிர மற்ற கட்சிகளில் உள்ள முஸ்லிம் வேட்பாளர்கள் முஸ்லிம்களாகத்தான் செயல்பட்டு வருகிறார்களே தவிர இந்துக்களைப் போல நாத்திகர்கள், செக்யூலரிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள் என்றெல்லாம் செயல்படுவதில்லை. திராவிடக் கட்சித் தலைவர்கள் அவர்கள் மூலம் ஆதாயம் பெறுகின்றனரே தவிர மற்றவர்களுக்கு, தொண்டர்களுக்கு எந்த லாபமுன் இல்லை.

கரு முஸ்லிம் லீக், குழுக்களுடன்தமிழகத்தில் முஸ்லிம் அரசியல் நிலை என்ன?: 1948 முதல் 1972 வரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐ.யூ.எம்.எல்), திமுகவுடன் கூட்டு வைத்துக் கொண்டு இரண்டு கட்சிகளும் பரஸ்பர ஆதாரங்கள் பெற்றன. 1970-80களில் வளைகுடாவுக்கு வேலைக்குச் சென்றது, இலங்கை (மலேசியா, சிங்கப்பூர் முதலியவற்றைச் சேர்த்து) வியாபார இணைப்புகள், தங்கம், போதை மருந்து கடத்தல் போன்றவற்றில் கோடிகளை அள்ளினர். இதற்காகத்தான் அவர்களது அரசியல் உறவுகள் உதவின. பணம் அதிகமாக வரவர, மசூதிகள், டிரஸ்டுகள், நிறுவனங்கள் அதிகமாகின. அதற்கேற்றப்படி, முக்கியஸ்தர்கள் அரசியல் ஆதாயம் பெற விரும்பினர். சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு 1987ல் ஷாபானு வழக்கு உதவியது. இதை வைத்துக் கொண்டு, ஐ.யூ.எம்.எல் அடக்கி வாசிக்கிறது, இந்துத்த்வத்திற்கு துணை போகிறது என்று குற்றஞ்சாட்ட ஆரம்பித்தன. 1992ல் ராமஜென்பபூமி விவகாரம் அவர்களுக்கு பெரிதும் உதவியது. இதனால், 1995ல் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தை ஆரம்பித்தனர். 1997ல் கோயம்புத்தூரில் கான்ஸ்டெபில் செல்வராஜ் முஸ்லிம்களால் கொலை செய்யப் படுகிறார். பிப்ரவரி 14, 1998ல் கோயம்புத்தூர் குண்டுவெடிப்புகள் நடக்கின்றன. அதில் 58 பேர் கொல்லப்படுகின்றனர், 200ற்கும் மேலானவர்கள் படுகாயம் அடைகின்றனர். 2009ல் மனிதநேயக் கட்சி தோன்றியது. இப்படியாக முஸ்லிம் கட்சிகள் தீவிரவாத அரசியலில் இறங்கின.

ஆம்பூர் - தினமலர் - 02_07_2015_002_015

ஆம்பூர் – தினமலர் – 02_07_2015_002_015

முஸ்லிம் கட்சிகளினால் தமிழகத்திற்கு கிடைத்த பலன் என்ன?: ஒவ்வொரு திராவிட கட்சி அமைச்சர், எம்.பி, எம்.எல்.ஏ, தான் பதவியில் இருந்த காலத்தில், தான் மக்களுக்காக இதை செய்தேன் – அதை செய்தேன் என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால், இந்த முஸ்லிம்கள் பதவிக்கு வந்தால், தமிழக மக்களுக்கு என்ன செய்திருக்கிறார்கள் என்பதை இதுவரை யாரும் கேட்கவில்லை என்றே தோன்றுகிறது. அரசியல் கட்சி வேட்பாளராக நின்று வெற்ற்ப்பெற்றப் பிறகும், அவர்கள் முஸ்லிம்களாக இருந்து, தங்களது நலன்களை பெருக்கிக் கொண்டார்களே தவிர மற்ற மக்களின் நலன்களைப் பற்றிக் கவலைப்படவில்லை. ராமேஸ்வரம், நாகப்பட்டினம், கும்பகோணம் போன்ற தொகுதிகளில் தங்களது ஆதிக்கத்தைச் செலுத்தி வந்தாலும், அங்குள்ள கோவில்களை, கோவில் சொத்துகளை பாதிக்கும் வகையில் தான் நடந்து கொள்கின்றனர். கோடிக்கணக்கில் வருகின்ற பக்தர்கள் மூலம், வியாபாரங்களில் லாபங்களை அள்ளுகின்றனரே தவிர, பதிலுக்கு அவர்கள் எந்த வசதிகளையும் செய்து தருவதில்லை. பிறகு அரசியல் மற்றும் அரசியல் இல்லாத நிலைகளில் அவர்களினால் தமிழக மக்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை எனும் போது, விகிதாசாரத்திற்கு அதிகமாக அவர்களாஇத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருப்பதனால் என்ன பலன்?

© வேதபிரகாஷ்

20-04-2016

[1] தினமலர், தொகுதியை சரண்டர் செய்‘: முஸ்லிம் லீக்கிற்கு தி.மு.., மிரட்டல், ஏப்ரல்,18,,220016.011:22..

[2] மாலைமலர், கூட்டணிக்கு ஒதுக்கியதற்கு எதிர்ப்பு: வாணியம்பாடியில் தி.மு..வினர் போராட்டம், பதிவு: ஏப்ரல் 17, 2016 16:37, மாற்றம்: ஏப்ரல் 17, 2016 16:40.

[3] இன்னேரம்.காம், மனிதநேய மக்கள் கட்சியின் ஒரு தொகுதி திமுகவிடம் ஒப்படைப்பு!, சனிக்கிழமை, 16 April 2016 00:44.

[4]http://www.dinamani.com/tamilnadu/2016/04/16/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95/article3382392.ece

[5] http://www.inneram.com/news/tamilnadu/8641-mmk-one-seat-submitted-to-dmk.html

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1503913

[7] தினமணி, உளுந்தூர்பேட்டையை விட்டுக் கொடுத்தது மமக; திமுக வேட்பாளரும் உடனே அறிவிப்பு, By  சென்னை, First Published : 16 April 2016 12:47 AM IST

[8] தமிழ்.ஒன்.இந்தியா, மமக அறிவிப்பை தொடர்ந்து .பேட்டையில் திமுக போட்டி..ஜி.ஆர்.வசந்தவேல் வேட்பாளராக அறிவிப்பு, By: Karthikeyan, Updated: Friday, April 15, 2016, 20:32 [IST].

[9] http://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-contest-ulundurpet-constituency-251346.html

[10] http://www.maalaimalar.com/News/TopNews/2016/04/17163725/1005449/cni-47.vpf

ஆம்பூர் மதரஸாவில் உபி தீவிரவாதி தங்கியிருந்தது எப்படி? மருத்துவமனைக்கு குண்டுவெடிப்பு மிரட்டல் விடுத்தது ஏன் ? (2)

ஒக்ரோபர் 17, 2015

ஆம்பூர் மதரஸாவில் உபி தீவிரவாதி தங்கியிருந்தது எப்படி? மருத்துவமனைக்கு குண்டுவெடிப்பு மிரட்டல் விடுத்தது ஏன் ? (2)

உபி தீவிரவாதி வேலூரில் கைது

உபி தீவிரவாதி வேலூரில் கைது

சையத் அகமது அலி  கொடுத்த வாக்குமூலம்[1]: விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலம் வருமாறு: “திரிபுரா மாநிலம் உன்னுகுட்டி கைலா ஜெகர் பகுதி, தலியார் கந்தி கிராமம்தான் எனது ஊர். என்னுடைய மனைவி பெயர் லுக்பாபேகம். எங்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். நான் எனது வீட்டின் அருகே காய்கறி வியாபாரம் செய்து வந்தேன். கடந்த 2000–ம் ஆண்டு எனக்கும் எனது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதில் எனது மனைவி போலீசில் புகார் கொடுக்க சென்றார். அதனால் நான் மண்எண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளித்தேன். பின்னர் என்னை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். உடல்நிலை தேறியதும் நான் மீண்டும் காய்கறி வியாபாரம் செய்து வந்தேன். இந்த நிலையில் சிறிது நாட்கள் கழித்து எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் அசாமில் உள்ள மருத்துவமனையிலும், பின்பு திரிபுரா மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றேன். அப்போது என்னை பரிசோதனை செய்த டாக்டர்கள் உனக்கு புற்றுநோய் உள்ளது என்றனர்.

 

புதியதலைமுறை - ஆக்ரா, ஜெய்ப்பூர் குண்டுவெடிப்புகளில் தொடர்பு

புதியதலைமுறை – ஆக்ரா, ஜெய்ப்பூர் குண்டுவெடிப்புகளில் தொடர்பு

மே, ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களில் 2015 சென்னைக்கு வந்து சென்றது: அப்போது எனது பக்கத்து வீட்டுக்காரர் பையிம் ஜமான் என்பவரின் அக்காவிற்கு சிகிச்சை அளிப்பதற்காக அவர்களுடன் சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு கடந்த மே மாதம் வந்தேன். அங்கு டாக்டர்கள் எனக்கு புற்றுநோய் இருப்பதை உறுதி செய்தனர். பின்னர் சி.எம்.சி. மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவதற்காக எனது தம்பியுடன் ஆகஸ்டு மாதம் வேலூருக்கு வந்தேன். அப்போது சி.எம்.சி. அருகில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கினேன். பின்பு வேலூர் சைதாப்பேட்டை பள்ளிவாசல் அருகே அறை எடுத்து தங்கினேன். அதைத்தொடர்ந்து உத்தரபிரதேசம் அலிகாரில் உள்ள மருத்துவமனையிலும், சென்னை அப்பல்லோ மருத்துவமனையிலும் சிகிச்சை எடுத்துக்கொண்டேன். இதையடுத்து சென்னையில் இருந்து மீண்டும் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சை பெற கடந்த 13–ந் தேதி இரவு பீகாரை சேர்ந்த ஹாலித்து என்பவருடன் காட்பாடிக்கு வந்தேன். பின்னர் ஹாலித் எதுவும் கூறாமல் என்னை விட்டு சென்று விட்டார். விடியும்வரை நான் சி.எம்.சி.க்கு எதிரே உள்ள பள்ளிவாசல் அருகே தங்கினேன். 14–ந் தேதி காலை 7–45 மணி அளவில் டாக்டரை பார்க்க நான் சி.எம்.சி.க்கு சென்றேன். அப்போது டாக்டரை பார்க்க விடாமல் காவலர்கள் என்னை தடுத்தனர். இதனால் நான் ஆத்திரமடைந்தேன். அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்க முடிவு செய்தேன். இதையடுத்து நான் காலை 8 மணி அளவில் சி.எம்.சி. மருத்துவமனைக்கு போனில் தொடர்பு கொண்டேன். அவர்கள் வேறு ஒரு தொலை பேசி எண்ணை கொடுத்து அதில் தொடர்பு கொள்ளுமாறு கூறினர். பின்பு நான் 8–15 மணி அளவில் எனது தொலைபேசி எண்ணில் இருந்து தொடர்பு கொண்டு மருத்துவமனையில் வெடிகுண்டுகள் உள்ளது எனவும், அவை சரியாக 10 மணிக்கு வெடிக்கும் என்று கூறி போனை துண்டித்தேன். இதே ஏற்கனவே நான் ஆக்ராவிலும், அலிகாரிலும், லக்னோவிலும், ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர், மும்பையில் உள்ள கண்ட்ரோல் அறைக்கும் போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளேன்”, இவ்வாறு அவர் கூறினார்.

UP Terrorist arrested in Ambur PTI 17-10-2015

UP Terrorist arrested in Ambur PTI 17-10-2015

விசாரணைக்குப் பிறகு ஜெயிலில் அடைப்பு: சென்னை, ஆம்பூர், வேலூர் என்று பல இடங்களுக்கு பலமுறை சர்வ சகஜமாக வந்து போவது, எப்படி என்பதும் வியப்பாக இருக்கிறது. தீவிரவாத செயல்கலில் ஈடுபட்டவர்கள் வந்து செல்கின்றனர் எனும் போது, நிச்சயமாக உள்ளூர் ஆட்கள் உதவி செய்கிறார்கள் என்றாகிறது. அதைத்தொடர்ந்து சையத் அகமது அலியை, துணை போலீஸ் சூப்பிரண்டு பன்னீர்செல்வம் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் பலத்த காவலுடன் அணைக்கட்டில் இருந்து வேலூர் கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். இங்கு ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு எண்–1 கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு மீனாசந்திரா முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அதன்படி சையத் அகமது அலி வேலூர் ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

ஆம்பூர் மதரஸா - உதாரணம்

ஆம்பூர் மதரஸா – உதாரணம்

குற்றவாளிகள், பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் முதலியோர் பல மாநிலங்களுக்குச் சென்று வர யார் உதவுகிறார்கள்?: சையத் அகமது அலி உண்மையிலேயே மருத்துவ சிகிச்சைக்காக சென்னைக்கு வந்து போகலாம், போயிருக்கலாம். இப்பொழுது பார்ப்பதற்கே பாவமகத்தான் இருக்கிறான். ஆனால், அவன் தீவிரவாதியாக இருக்கிறான். குற்றவாளிகள், பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் முதலியோர்களுக்கு நோய் வரக்கூடாது, சிகிச்சை எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதில்லை. ஆனால், உடல்நிலை ஆரோக்கியமாக மாறியதும், அவர்கள் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவது தான் பிரச்சினையாக இருக்கிறது. இங்கும் தனக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஆனதால், குண்டுவெடிப்பு மிரட்டல் விடுத்திருக்கிறான் என்பது வேடிக்கையாக இருக்கிறது. மருத்துவமனைகளில் காத்துக் கிடப்பது என்பது சர்வ-சகஜமான விசயம் தான். “அப்போது டாக்டரை பார்க்க விடாமல் காவலர்கள் என்னை தடுத்தனர். இதனால் நான் ஆத்திரமடைந்தேன். அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்க முடிவு செய்தேன்”, என்பது இன்னும் விசித்திரமாக இருக்கிறது. மேலும், தீவிரவாத-பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவன் எனும்போது, உ.பி, அசாம், மேகாலயா என்ற பல மாநிலங்களுக்குச் சென்று சிகிச்சைப் பெறுவது, மற்றும் தமிழகதுக்கு வந்து செல்வது என்பது, நிச்சயமாக மற்றவர்கள் உதவியுடன் வந்து செல்ல முடியாது. அதற்காக நிறைய பணமும் செலவாகிக் கொண்டிருக்கும். ஆனால் போலீஸ் பிடியில் சிக்காமல் பல்வேறு மாநிலங்களில் விதவிதமான கெட்டப்பில் சையது முகம்மது அலி சுற்றித்திரிந்து வந்தார் எனும்போது, தனது அடையாளத்தையும் மறைத்துள்ளார் என்றாகிறது. குற்றமுள்ள நெஞ்சு குறு-குறுத்துள்ளது. ஆனால், அதிலும் தன்னலம், அதாவது, மருத்துவ சிகிச்சைப் பெற வேண்டும் என்ற நிர்பந்தம் இருப்பதினால், அடங்கிப் போயிருக்கிறார். இங்கும், தன்னை எதிர்த்தபோது, வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருக்கிறார்.

தினமலர் - வேலூர் கைது

தினமலர் – வேலூர் கைது

குற்றவாளிகள், பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் முதலியோர் மதரஸாக்களில் தங்க முடியுமா?: மதரஸாக்களில், பள்ளிவாசல்களில் தங்குவது என்பது அவ்வளவு சாதாரணமான விசயமா அல்லது யாராவது போன் செய்து அறிவித்தார்களா, கடிதங்களை கொண்டுவந்து, தங்கினார்களா என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால், இவையெல்லாமே நடந்தன எனும் போது, அவர்களுக்கு உள்ள பணபலம், நட்பு அல்லது வேறெந்த பலமோ உள்ளது என்பதைக் காட்டுகிறது. இன்றைய நிலையில் அறிமுகத்துடன் சென்றாலே, பலவித கேல்விகள் கேட்கப்படுகின்றன. லாட்ஜுகளில் அடையாள அட்டைகளை கேட்கிறார்கள், அவற்றை நகலும் எடுத்து வைத்துக் கொள்கிறார்கள். முகவரி, செல்போன் நம்பர் போன்ற விவரங்களையும் எடுத்து வைத்துக் கொல்வதால், இவற்றையும் மீறி, தங்க வேண்டுமானால், மதரஸா, பள்ளிவாசல் போன்ற இடங்களில் தான் தங்க வேண்டும். அவ்வாறு தங்கினால், விவரங்கள் மறைக்கப்படும் அல்லது அவ்வளவு சுலபமாக மற்றவர்களுக்குக் கிடைக்காது. ஆகவே, ஒன்று முஸ்லிம்கள் என்ற நிலையில் அல்லது தீவிரவாதிகள் என்று தெரிந்தும், முஸ்லிம்கள் என்பதால் உதவுவது என்பதுள்ளது என்று தெரியவருகிறது. அதனால், குற்றவாளிகள், பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் முதலியோர்களின் அடையாளங்கள் மறைக்கப்படுகின்றன. சித்தூரில் அல்-உம்மா தீவிரவாதிகள் தங்கியிருந்தது, சுற்றி வளைத்து பிடிக்கப்பட்டது, அப்பொழுதும், போலீஸாருடன் துப்பாக்கிச் சண்டையில், ஈடுபட்டது போன்ற விவரக்களும் வெளிவருகின்றன. ஆம்பூரில் சமீபத்தில் தான் கலவரம் ஏற்பட்டுள்ளது. போலீஸாரே தாக்கப்பட்டுள்ளனர். அந்நிலையில் தீவிரவாதிகள் அடிக்கடி வந்து செல்கின்றனர், மதரஸாக்களில் தங்க இடம் கொடுக்கப்படுகிறது என்பதெல்லாம் நிச்சயமாக வேறெந்த விசயத்தையோ மறைப்பதாக உள்ளது.

© வேதபிரகாஷ்

17-10-2015


[1]  தினத்தந்தி, சி.எம்.சி. மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்: கைதான தீவிரவாதி கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைப்பு, மாற்றம் செய்த நாள்: சனி, அக்டோபர் 17,2015, 5:00 AM IST; பதிவு செய்த நாள்: சனி, அக்டோபர் 17,2015, 1:46 AM IST.

ஆம்பூர் மதரஸாவில் உபி தீவிரவாதி தங்கியிருந்தது எப்படி? மருத்துவமனைக்கு குண்டுவெடிப்பு மிரட்டல் விடுத்தது ஏன் ? (1)

ஒக்ரோபர் 17, 2015

ஆம்பூர் மதரஸாவில் உபி தீவிரவாதி தங்கியிருந்தது எப்படி? மருத்துவமனைக்கு குண்டுவெடிப்பு மிரட்டல் விடுத்தது ஏன் ? (1)

உபி தீவிரவாதி வேலூரில் கைது

உபி தீவிரவாதி வேலூரில் கைது

ஆம்பூர் உமர் சாலையில் மதரஸாஎன்ற இடத்தில் கைதா அல்லது மதரஸாவில் கைதா? – தமிழ்.ஒன்.இந்தியாவின் உண்மை மறைப்பு செய்தி[1]: ஆம்பூரில் பதுங்கியிருந்த 2 வட மாநில தீவிரவாதிகளை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்கள் வைத்திருந்த 5 சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் நடத்திய விசாரணையில் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது அவர்கள்தான் என தெரிய வந்துள்ளது[2]என்கிறது தமிழ்.ஒன்.இந்தியா. வேலூர் மாவட்டம் ஆம்பூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் சுற்றித்திரிந்து கொண்டு இருப்பதாக ஆம்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது[3]. இதையடுத்து போலீசார் நேற்று மாலை ஆம்பூர் உமர் சாலையில் மதரஸா என்ற இடத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அங்கு பதுங்கியிருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அவர் சரிவர பதிலளிக்காததால் போலீசார் அவரை ஆம்பூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். “ஆம்பூர் உமர் சாலையில் மதரஸா” என்று குறிப்பிடுவது வேடிக்கையாக இருக்கிறது. மதராஸவில் தங்கியிருந்த பயங்கரவாதி கைது என்று உண்மையை வெளியிட ஏன் மறைப்பு என்று தெரியவில்லை. மதரஸாக்கள் பயங்கரவாதத்திற்கு / தீவிரவாதங்களுக்கு உதவுகின்றன என்ற உண்மையினை மறைக்க அவ்வாறு செய்தியை வெளியிட்டிருக்கலாம். பி.டி.ஐ ஏற்கெனவே அவ்வுண்மையினை வெளியிட்டுள்ளது[4]. அச்செய்தி மற்ற ஆங்கில ஊடகங்களிலும் வெளியாகியுள்ளன[5].

ஆம்பூர் சாலை - உதாரணம்

ஆம்பூர் சாலை – உதாரணம்

.பி.போலீஸ் நிலையங்களில் வெடிகுண்டு மிரட்டல், வெடிகுண்டு வைத்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட பயங்கரவாதிகள்[6] / தீவிரவாதிகள்[7]: உத்தரபிரதேச ஆக்ரா தாலியான் காண்டி பகுதியை சேர்ந்தவர் சையது மாமூன் அலி. இவரது மகன் சையது முகம்மது அலி (வயது 37). இவர் மீது உத்தரபிரதேச மாநிலம் போலீஸ் நிலையங்களில் வெடிகுண்டு மிரட்டல், வெடிகுண்டு வைத்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவாகி உள்ளது. ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால், தர்கா, மற்றும் நிறுவனம் முதலியவற்றிற்கு தீவிரவாத தாக்குதல் மிரட்டல் விடுத்ததால் வழக்குகள் பதிவாகி உள்ளன[8]. ஆக்ரா, ஜெய்ப்பூர் குண்டுவெடிப்புகளிலும் தொடர்பு உள்ளது[9]. ஒரு இது தொடர்பாக சையது முகம்மது அலியை போலீசார் தேடி வந்தனர். ஆனால் போலீஸ் பிடியில் சிக்காமல் பல்வேறு மாநிலங்களில் விதவிதமான கெட்டப்பில் சையது முகம்மது அலி சுற்றித்திரிந்து வந்தார். இதனால் தீவிரவாதிகளுடன் சையத்துக்கு தொடர்பு இருக்கலாம் என்று அம்மாநில போலீசார் தேடப்படும் முக்கிய குற்றவாளியாக அவரை அறிவித்தனர். மேலும் சையத்தின் குடும்பத்தினர், நண்பர்கள் என அவரை சுற்றியுள்ளவர்களின் செல்போன் எண்ணின் டவரை போலீசார் தினமும் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் சையத் தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் சுற்றித்திரிவது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக தமிழக உள்துறைக்கு, உத்தரபிரதேச போலீசார் தகவல் கொடுத்தனர். உள்துறை அதிகாரிகள் உளவு துறை மூலம் வேலூர் மாவட்ட போலீசாரை உஷார்படுத்தினர்[10]. “புதிய தலைமுறை” டிவி பயங்கரவாதிகள் என்றே குறிப்பிடுகின்றது.

UP Terrorist arrested in Ambur தினத்தந்தி 17-10-2015

UP Terrorist arrested in Ambur தினத்தந்தி 17-10-2015

ஆம்பூர் மதரஸாவில் தங்கியிருந்த தீவிரவாதி கைது: எஸ்.பி. செந்தில்குமாரி உத்தரவின்பேரில் ஆம்பூர் டி.எஸ்.பி. கணேசன் தலைமையிலான போலீசார் சையது முகம்மது அலியின் அடையாளங்களை சேகரித்து, அவரை தேடி வந்தனர். இதற்கிடையில் ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையம் பின்புறம் உமர் ரோட்டில் சையத் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ஒரு மதரஸாவில் தங்கியிருந்தான் என்று பி.டி.ஐ கூறுகிறது[11]. இதையடுத்து டி.எஸ்.பி. கணேசன் தலைமையிலான போலீசார் அந்த பகுதியை நேற்றிரவு தங்கள் வளையத்துக்குள் கொண்டு வந்தனர். இதையடுத்து சையத்தை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவரை கைது செய்த அணைக்கட்டு காவல் போலீசார் ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், நேற்று முன்தினம் வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது சையத் என்பது தெரியவந்தது. கடந்த 14–ந் தேதி அடுத்தடுத்து 2 முறை இந்தி, ஆங்கில மொழியில் மாறி, மாறி போனில் மிரட்டல்கள் வந்தன. இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் சென்னை உள்பட பல்வேறு இடங்களை தொடர்பு கொண்டு விசாரணை மேற்கொண்டனர்[12].

புதியதலைமுறை - பயங்கரவாதிகள்

புதியதலைமுறை – பயங்கரவாதிகள்

ஆம்பூருக்கு அல்லது தமிழகத்திற்கு என்ன தொடர்பு?: எதற்காக சி.எம்.சி. ஆஸ்பத்திரிக்கு சையத் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்தார் என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதனால் சையத் தீவிரவாதிகளின் சிலிபர் செல் எனப்படும் உள்நாட்டு குழுக்களை சேர்ந்தவராக இருக்கலாம் எனவும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் சையத்துடன் தொடர்புடைய நபர்கள் வேறு யாராவது? தமிழகத்தில் பதுங்கியுள்ளனரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சையத் கைது செய்யப்பட்டது குறித்து உத்தரபிரதேச போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அம்மாநில போலீசார் வேலூருக்கு விரைந்துள்ளனர். பிடிபட்ட சையத் உத்தரபிரதேச போலீசாரிடம் ஒப்படைக்கப்படுவார் என தெரிகிறது. சையத் பிடிபட்டபோது அவரிடம் இருந்து 5 சிம்கார்டுகள், செல்போன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. செல்போன் எண் பட்டியலையும் சேகரித்த போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதியதலைமுறை - அணைக்கட்டு காவல் நிலையம்

புதியதலைமுறை – அணைக்கட்டு காவல் நிலையம்

விசாரணையில் வெளியாகும் குழப்பமான விவரங்கள்: காவல்நிலையத்தில் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ‘திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த முகமது மாமுன் அலி என்பவரின் மகன் சையது முகமது அலி என்றும் சிகிச்சை பெறுவதற்கு வேலூரில் தங்கியிருந்ததாகவும் அவன் தெரிவித்துள்ளான். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதற்கான எவ்வித ஆவணங்களும் அவனிடம் இல்லை. மேலும் அவனிடம் 5 சிம்கார்டுகள் இருந்தன. இவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். சிம் கார்டுகளை ஆய்வு செய்தபோது அதிலிருந்த ஒரு சிம்கார்டு மூலம் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவனை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அணைக்கட்டு காவல் நிலையத்திற்கு நேற்றிரவு போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு விடிய விடிய விசாரணை நடத்தினர். எஸ்பி செந்தில்குமாரி நேரில் சென்று விசாரணை நடத்தியதில், சையது முகமது அலி ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பேசினான். இதனையடுத்து இந்தி தெரிந்தவர்கள் வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடத்தியதில் வேலூர் சிஎம்சி அருகே உள்ள லாட்ஜில் தனது நண்பருடன் தங்கியிருந்தது தெரியவந்தது.

ஆம்பூர் குண்டுவெடிப்பு மிரட்டல் - கைது - உதாரணம்

ஆம்பூர் குண்டுவெடிப்பு மிரட்டல் – கைது – உதாரணம்

வேலூர் லாட்ஜுகளில் சோதனை: இதனையடுத்து, நேற்றிரவு வேலூரில் உள்ள ஒரு சில லாட்ஜ்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். லாட்ஜ்களில் தங்கியிருப்பவர்களின் விவரங்களை தீவிரமாக சேகரித்தனர். இதில் வட இந்திய நபருடன் தங்கியிருந்தவனை கைது செய்தனர். இருவரிடமும் நடத்திய விசாரணையில், இவர்களுக்கு ராஜஸ்தான், ஆக்ரா உள்ளிட்ட 3 இடங்களில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்பு இருப்பதாகவும், வேலூரில் வெடிகுண்டு வைக்க சதித்திட்டம் தீட்டியதாகவும் தெரிய வந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், இருவரையும் ரகசிய இடத்தில் வைத்து மேலும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். வேலூரில் யார் அவர்களுக்கு உதவி செய்தது? இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? இவர்களுக்கு வேறு எந்த அமைப்புடன் தொடர்பு உள்ளது? மேலும் இவர்களின் சதித்திட்டம் என்ன? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட சிம் கார்டுகளில் உள்ள செல்போன் எண்களை சைபர் கிரைம் பிரிவு போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். தொடர்ந்து நடைபெறும் விசாரணையில் வேலூரில் இருந்து அவர்களுக்கு உதவி செய்த பலர் சிக்குவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நோயாளிகள் போர்வையில் தங்கியிருந்து வேலூரில் குண்டுகள் வைக்க சதித்திட்டம் தீட்டிய தீவிரவாதிகள் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

© வேதபிரகாஷ்

17-10-2015

[1] தமிழ்.ஒன்.இந்தியா, வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஆம்பூரில் 2 தீவிரவாதிகள் கைது, Posted by: Mayura Akilan, Published: Friday, October 16, 2015, 16:59 [IST].

[2] Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/2-terrorists-nabbed-near-ambur-237880.html

[3] http://tamil.oneindia.com/news/tamilnadu/2-terrorists-nabbed-near-ambur-237880.html

[4] http://www.ptinews.com/news/6626972_Man-wanted-for-making-terror-threats-in-UP-held-in-TN.html

[5] Business Standard, Man wanted for making terror threats in UP held in TN, Press Trust of India , Vellore (TN) October 16, 2015 Last Updated at 22:22 IST.

[6] https://www.youtube.com/watch?v=PWxP66jhXx0

[7] மாலைமலர், சி.எம்.சி. ஆஸ்பத்திரிக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஆம்பூரில் பிடிபட்ட வாலிபர் தீவிரவாதியா? – ரகசிய இடத்தில் விசாரணை, பதிவு செய்த நாள் : வெள்ளிக்கிழமை, அக்டோபர் 16, 12:06 PM IST

[8] Syed Ahmed Ali had allegedly made terror threats to Taj Mahal in Agra, a dargah besides an institution in Lucknow. He had arrived here two days ago and stayed in a Madrasa in Ambur. http://www.business-standard.com/article/pti-stories/man-wanted-for-making-terror-threats-in-up-held-in-tn-115101601463_1.html

[9] தினகரன், ஆக்ரா, ஜெய்ப்பூரில் குண்டுவெடிப்பில் தொடர்பு: வேலூரில் கைதான தீவிரவாதியிடம் விசாரணை, அக்டோபர்.17, 20125. http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=173391

[10] http://www.maalaimalar.com/2015/10/16120645/CMC-hospital-bomb-threat-Ambur.html

[11] Intelligence Bureau officials alerted Tamil Nadu police about the presence of Ali in Ambur in a Madrasa. “We immediately began our probe and with the help of local people we identified Ali…Now Uttar Pradesh police are on their way to take this man into their custody through court,” the official added.

http://www.business-standard.com/article/pti-stories/man-wanted-for-making-terror-threats-in-up-held-in-tn-115101601463_1.html

[12] http://www.dailythanthi.com/News/Districts/Vellore/2015/10/17014634/CMC-Hospital-bomb-threat.vpf

அல்-உம்மா தீவிரவாதிகள் புழல் சிறையில் “ஹாலிவுட் ஸ்டைலில்” போலீஸார் மீது தாக்குதல், கலவரம், சிறைமாற்றம் – என்கவுண்டர் அச்சமும், ஹேபஸ் கார்பஸ் பெட்டிஷனும் முன்பே நடந்த கதை தான்!

செப்ரெம்பர் 27, 2015

அல்உம்மா தீவிரவாதிகள் புழல் சிறையில்ஹாலிவுட் ஸ்டைலில்போலீஸார் மீது தாக்குதல், கலவரம், சிறைமாற்றம்என்கவுண்டர் அச்சமும், ஹேபஸ் கார்பஸ் பெட்டிஷனும் முன்பே நடந்த கதை தான்!

முஸ்லிம்கள் கோவில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

முஸ்லிம்கள் கோவில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

புழல் சிறை மோதல் எதற்காக, என்கவுன்டருக்கான ஒத்திகையா…?- பிலால் மாலிக் சகோதரர் சந்தேகம்: பிலால் மாலிக் உள்ளிட்டவர்களை என்கவுன்டர் செய்யவே, புழல் சிறையில் போலீசார் மோதல் நாடகம் நடத்தி இருக்கலாம் என பிலால் மாலிக்கின் சகோதரர் கஜினி முகம்மதுசந்தேகம் எழுப்பியுள்ளார்[1]. “போலீஸ் பக்ருதீன், பிலால்மாலிக், பண்ணா இஸ்மாயில் உள்ளிட்டோர் இவர்கள் உயர் பாதுகாப்பு சிறையில் தனியாக அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் 25-09-2015 அன்று ஜெயிலர் இளவரசனை இவர்கள் தாக்கியதாகவும், அவரை காப்பாற்ற சென்ற வார்டன்கள் முத்துமணி, ரவிமோகன், செல்வின் தேவராஜ் ஆகியோர் அவர்களை திருப்பி தாக்கியதாகவும், பதிலுக்கு வார்டன்களை தீவிரவாதிகள் தாக்கியதாகவும் சிறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் காயம் அடைந்த சிறை அதிகாரிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறைத்துறை ஏடிஜிபி திரிபாதி, இரவு சிறைக்கு சென்று கைதிகளிடம் சமாதானம் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், டி.வியில் காயம்பட்ட சிறை அதிகாரிகளைத்தான் காட்டுகிறார்களே தவிர, போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், இஸ்மாயில் இவர்களை காட்டவில்லை”.

Five arrested in Melappalayam - Musims protest, argue

Five arrested in Melappalayam – Musims protest, argue

ஆயுதங்களுடன் இருக்கும் சிறை அதிகாரிகளை தாக்கும் அளவுக்கு நமது காவல்துறை பலவீனமானதா?: இப்படி கேள்வி கேட்டு தொடர்கிறார் கஜினி முகமது, “சிறைக்குள் வெவ்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள இவர்கள் எப்படி ஒன்றாக சேர முடியும். அப்படியே சேர்ந்தாலும் ஆயுதங்களுடன் இருக்கும் சிறை அதிகாரிகளை இவர்களால் தாக்க முடியுமா? அவ்வளவு பலவீனமானதா நமது காவல்துறை?’ என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்[2]. புழல் சிறை அதிகாரி இளவரசன் மிகவும் மோசமாக நடந்து கொள்வதாக குற்றம்சாட்டியுள்ள கஜினி முகம்மது[3], இந்த வழக்கை மெதுவாக நடத்தி வருவதாகவும், இருக்கிற கொலை வழக்கு அனைத்தையும் இவர்கள் மீது போட்டுள்ளதாகவும் போலீசார் மீதும் குற்றம் சாட்டியுள்ளார்[4]. இப்போது சிறையில் நடந்திருப்பதாக சொல்லப்படும் தாக்குதலில் போலீஸ் பக்ருதீன், பிலால்மாலிக், இஸ்மாயில் போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டிருக்கலாம் என கஜினி சந்தேகம் எழுப்பியுள்ளார். மேலும், இவர்களை சிறைக்கு மாற்றுவதாக அறிவித்திருப்பது வழக்கை நடத்த முடியாமல் என்கவுன்டர் செய்ய திட்டமிட்டிருப்பதுபோல் தெரிகிறது. தமிழக அரசு, கைதிகளை ஒரே மாதிரியாக அணுகி அவர்களை காப்பாற்ற வேண்டும் என்றும் கஜினி வேண்டுகோள் விடுத்துள்ளார்[5]. மாதம் ஒருமுறை இவர் சென்று வருவதினால், இவருக்கு மேலும் விசயங்கள் தெரியும் போலிருக்கிறது.

Fakrudhhin-Abdul Rahman-Mohammed Haneefa- Advani plot.fullஎன்கவுண்டர் அச்சமும், ஹேபஸ் கார்பஸ் பெட்டிஷனும்: பா.ஜ.க. மூ‌த்த தலைவ‌ர் எ‌ல். கே. அத்வானி கொலை முயற்சி வழக்கில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள பக்ருதீனை  நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ஆஜர்படுத்த காவ‌ல்துறை‌க்கு உத்தரவிட‌க் கோ‌ரி சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மனு தாக்கல் செய்யப்பட்டது[6], ஆனால் தள்ளுபடி செய்யப்பட்டது. தீவிரவாதிகள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு, இத்தகைய பீதியைக் கிளப்பி விடுவது வழக்கமான வேலையாக இருக்கிறது. ஆனால், குண்டு வைத்தது உண்மை, அத்தகைய தீவிரவாத எண்ணம் உள்ளது உண்மை, அமைதியைக் குலைக்க வேண்டும் என்ற திட்டம் தீட்டியது உண்மை; கொலைகள் நடந்திருப்பது உண்மை; குண்டுகள் வெடித்திருப்பது உண்மை; அப்பாவி மக்கள் இறந்திருப்பது உண்மை; எல்லாவற்றையும் மறைத்து ஒன்றுமே இல்லை, நடக்கவில்லை என்று சொல்லித் தப்பித்துக் கொண்டால், நடந்தது நடக்கவில்லை என்றாகுமா?[7]. நீதிமன்றத்திலேயே, இவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதற்கு ஒரு உதாரணம் கொடுக்கப்படுகிறது.

Chota-rajan-with-Dawoodநீதிமன்றத்தில் சட்டமீறல்கள்: அத்வானியைக் கொலை செய்ய திட்டமிட்ட ஜிஹாதிகளுள் ஒருவன் ஜாஹிர் ஹுஸைன் என்ற குற்றவாளி நீதிமன்றத்தில் செய்த கலாட்டாவால் பரப்பரப்பு ஏற்பட்டது. மாஜிஸ்ட்ரேட் முன்பு கொண்டுவரப்பட்ட அவன் பிளேடினால் தனது கழுத்தை அறுத்துக் கொள்ள முயன்றான். உடனே, போலீஸார் தடுத்து அவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சிறிய காயத்துடன் அவன் தப்பினான். கடந்த ஏப்ரல் மாதம் கூட இதே மாதிரி தற்கொலை முயற்சியில் அவன் ஈடுபட்டான்[8]. அப்பொழுது தன்னை விடுவிக்குமாறு முறையீடு செய்திருந்தான். ஆனால் நீதிபதி அவனது மனுவை தள்ளுபடி செய்தார்[9]. அதாவது, இவ்வாறு கலாட்டா செய்வதே அவர்களுக்கு வாடிக்கையாக இருக்கிறது என்பதற்காக எடுத்துக் காட்டப்படுகிறது. நீதிமன்றத்தையே மதிக்காதவர்கள் சிறைச்சாலையை, சிறை போலீஸாரை எப்படி மதிப்பர்?

gulshan-kumar-killer-Abdul Rauf Merchant

gulshan-kumar-killer-Abdul Rauf Merchant

முகமது அனிபா டிஎஸ்பியைத் தாக்குதல் (08-07-2013): திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள கட்டகாமன்பட்டி எடமலையான் கோவில் அடிவாரத்தில் பதுங்கியிருந்த அத்வானி செல்லும் பாதையில் குண்டு வைத்த வழக்கில் முகமது அனீபாவை, டி.எஸ்.பி. கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் திங்கள்கிழமை 08-07-2013 அன்று மடக்கி பிடித்தனர்[10]. அப்பொழுது தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்த முகமது அனீபா, டி.எஸ்.பி. கார்த்திகேயன் மீது வீசினார். இதில் டி.எஸ்.பி. கார்த்திகேயன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்[11]. இதனால் அந்த இடத்தில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவனை மடக்கி பிடித்த போலீசார், அவனிடம் வெடிமருந்து, ஜெலட்டின் குச்சிகள் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்தனர். வத்தலகுண்டு காவல்நிலையத்தில், தன்னை கொலை செய்ய முயற்சி செய்ததாகவும், வெடிமருந்து மற்றும் ஜெலட்டின் குச்சிகள் வைத்திருந்தாகவும், இந்து முன்னணி தலைவர்களை கொலை செய்ய திட்டமிட்டு தேசிய ஒருமைப்பாட்டை சீர்குலைக்க முயற்சி செய்தது உட்பட 5 வழக்குகள் முகமது அனீபா மீது டி.எஸ்.பி. கார்த்திகேயன் புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்டுள்ளது[12]. அன்று டி.எஸ்.பியை தாக்கியவர்களின் மனப்பாங்குதான், புழல் சிறையில் போலீஸாரைத் தாக்கியவர்களின் மனப்பாங்குடன் இயைந்து போகிறது. குற்றவாளிகள் மேன்மேலும் குற்றங்களை செய்து கொண்டே இருந்தால், ஒன்றும் செய்ய முடியாது என்ற போக்கும் அவர்களிடையே உள்ளது.

© வேதபிரகாஷ்

27-09-2015

[1] ஒன்.இந்தியா, புழல் சிறை மோதல் எதற்காக, என்கவுன்டருக்கான ஒத்திகையா…?- பிலால் மாலிக் சகோதரர் சந்தேகம், Posted by: Jayachitra, Published: Sunday, September 27, 2015, 12:21 [IST].

[2]  விகடன்.காம், புழல் சிறை மோதல் என்கவுன்டருக்கான நாடகமா? சந்தேகம் எழுப்பும் பிலால் மாலிக் சகோதரர், Posted Date : 16:05 (26/09/2015)

Last updated : 16:05 (26/09/2015).

[3] புழல் சிறைக்கு இவர்கள் மாற்றப்பட்டதில் இருந்து சிறை அதிகாரி இளவரசன் ரொம்பவும் மோசமாக நடந்து கொள்கிறார். நான் மாதம் ஒரு தடவை பார்க்க செல்வேன். என்னையே கடுமையாக திட்டுவார். http://www.vikatan.com/news/article.php?aid=52934

[4] http://tamil.oneindia.com/news/tamilnadu/bilal-malik-s-brother-questions-puzhal-prison-clash-incident-236563.html

[5] http://www.vikatan.com/news/article.php?aid=52934

[6] Claiming himself to be a friend of Fakruddin, M Abdulla of Chennai alleged that he was arrested by CB-CID SIT on November 2 and was being kept in “illegal” custody in violation of Article 21 and 22 of the Constitution.

 http://news.in.msn.com/national/article.aspx?cp-documentid=5580797

[7] https://islamindia.wordpress.com/2011/11/11/plan-to-kill-advani-arrest-haeabus-corpus-petition-legal-warangles/

[8]  http://zeenews.india.com/news/tamil-nadu/accused-in-advani-bomb-planting-case-causes-flutter-in-court_861146.html

[9]  http://www.business-standard.com/article/pti-stories/accused-in-advani-bomb-planting-case-causes-flutter-in-court-113070901058_1.html

[10]  http://www.dinamalar.com/news_detail.asp?id=753374

[11]  http://www.dnaindia.com/india/1858935/report-one-more-case-filed-for-trying-to-plant-bomb-during-lk-advani-s-yatra-in-tamil-nadu-in-2011

[12] http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=103304

ஆம்பூர் கலவரம்: போலீஸே போலீஸ் மீது நடவடிக்கை – ஆனால், போலீஸாரைத் தாக்கியவர்கள் மீது என்ன நடவடிக்கை? (2)

ஓகஸ்ட் 8, 2015

ஆம்பூர் கலவரம்: போலீஸே போலீஸ் மீது நடவடிக்கை – ஆனால், போலீஸாரைத் தாக்கியவர்கள் மீது என்ன நடவடிக்கை? (2)

POLIMER-NEWS_மார்டின் பிரேம்ராஜ் கைது

POLIMER-NEWS_மார்டின் பிரேம்ராஜ் கைது

ஆகஸ்ட்.5 வேலூர் கோர்ட்டில் ஆஜர்: ஷமீல் அகமதுவை கைது செய்தபோது, பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தெரிவித்த தகவல்களை வைத்தும், விசாரணை என்ற பெயரில் எந்தெந்த இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டார்? அப்போது யார் யார் எல்லாம் உடன் இருந்தார்கள்? ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டதா? காணாமல் போன பவித்ராவை கண்டுபிடிக்க எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டது? போன்ற கேள்விகளை வைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் தெரிவிக்கும், அனைத்து பதில்களையும் போலீசார் எழுத்துபூர்வமாகவும், வீடியோவிலும் பதிவு செய்து கொண்டனர். தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.

ஆம்பூர் கலவரம் 105 பேர் கைது, முஸ்லிம் பெண்கள் ஆர்பாட்டம்

ஆம்பூர் கலவரம் 105 பேர் கைது, முஸ்லிம் பெண்கள் ஆர்பாட்டம்

ஆகஸ்ட்.7 வரை விசாரணை: விசாரணையின் போது பதிலளித்த இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ், ’நான் ஷமில் அகமதுவை தனி அறைக்கு அழைத்து சென்று விசாரிக்கவில்லை. ஷமில் அகமதுவை அடிக்கவும் இல்லை. என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானது’’ என்று கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த சி.பி.சி.ஐ.டி. போலீசார், ‘‘அப்படியானால் பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் நடந்தது என்ன? என எழுதி தாருங்கள்’’ என்று கூறி ஒரு பேப்பரை கொடுத்தனர். ஆனால் இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜோ, ‘‘நான்தான் பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் எதுவும் நடக்கவில்லை என்று கூறுகிறேனே. பின்னர் நான் எதை எழுதி தருவது? எழுதி கொடுக்க வேண்டிய தகவல் என்னிடம் ஒன்றும் இல்லை’’ என்று கூறிவிட்டு சி.பி.சி.ஐ.டி போலீசார் கொடுத்த பேப்பரை திருப்பி கொடுத்துவிட்டார்[1]. தொடர்ந்து இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜிடம் விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக்கு பின்னர் அவர் வருகிற 7–ந் தேதி மாலை 4 மணிக்கு வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்படுகிறார்[2].

போலீசார் காயம்

போலீசார் காயம்

போலீஸே போலீஸ் மீது நடவடிக்கைஆனால், போலீஸாரைத் தாக்கியவர்கள் மீது என்ன நடவடிக்கை?: ஆம்பூர் முஸ்லிம்கள் புகார் கொடுத்ததின் ஆதாரமாக இவ்வாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப் பட்டு வருகிறார், செய்திகளை ஊடகங்கள் வெளியிடுகின்றனர். ஆனால், கலவரத்தில் ஈடுபட்டு, போலீஸாரையேத் தாக்கி, பெண் போலீஸாரை மானபங்கப்படுத்தி, பொது மக்களைத் தாக்கி, வாகனங்களைத் தாக்கி, எரித்தது, போக்குவரத்தைக் குலைத்தது, கலவரத்தில் ஈடுப்பட்டது, பொது சொத்தை நாசப்படுத்தியது போன்ற வேலைகளில் ஈடுபட்ட கலவரக்காரர்களின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 100 பேருக்கும் மேல் கைது என்று செய்தி வந்தது, பிறகு ஜாமீனில் விடுதலை என்றும் செய்தி வந்தது, ஆனால், கலவரக்காரர்கள் அவ்வாறு தாராளமாக, எவ்வாறு செயல்பட்டனர் என்ற விசாரணை விவரங்களைப் பற்றி ஏன் செய்திகள் வெளிவருவதில்லை? எல்லாவற்றிற்கும் முன்பாக முஸ்லிம் இணைதளங்களோ மார்டின் தான் கொலையாளி என்று தீர்மானித்துள்ளன[3]. “டெக்கான் குரோனிகள்” என்ற நாளிதழ் அவர் கொலையாளி என்று தீர்மானித்து அவ்வாறே குறிப்பிட்டது[4]. வழக்கம் போல “மனித உரிமைகள் இயக்கம்” போன்றவையும் ஆம்பூரில் உண்மையில் நடந்தது என்ன என்று அங்குள்ளவர்களிடம் பேட்டி கண்டு எழுதி வருகிறார்கள். ஆனால், அவர்களும், நோயின் மூலகாரணத்தை ஆராயாமல் இருக்கிறார்கள்.

ஆம்பூர் - தினமலர் - 02_07_2015_002_012

ஆம்பூர் – தினமலர் – 02_07_2015_002_012

ஷமீல் அகமதுவை பவித்ராவுடன் பழகுவதை ஏன் அவரது மனைவி, மாமனார், மாமியார், பெற்றோர் முதலியோர் தடுக்கவில்லை?: தன் மனைவி காணவில்லை என்று பழனி கொடுத்த புகார் மீது தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதால், இப்பிரச்சினை உருவாகியிருக்கிறது என்றால், திருமணம் ஆன ஷமீல் அகமது, ஏன் திருமணமான பவித்ராவுடன் தொடர்பு வைத்திருந்தான்? அவனது மனைவி, மாமனார், மாமியார், பெற்றோர் முதலியோர் தடுக்கவில்லையே? டெல்டா ஷூ கம்பெனியிலிருந்து, இருவரும் வேலை நீக்கம் செய்யப்பட்டபோதே, விசயம் எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டுமே?  மே-ஜூன் விவகாரங்களைப் பார்த்தால், நடு-நடுவே பல விசயங்கள் மர்மமாகவே இருக்கின்றன:

  • கடந்த மே மாதம் 17-ம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய பவித்ரா, ஈரோட்டில் உள்ள ஷமீலிடம் சென்றுவிட்டார். அப்படியென்றால், அவர்கள் திட்டமிட்டபடிதான் செய்திருக்கின்றனர்.
  • நடுவில் பழனி பவித்ராவை தேடி அலைகிறார். ஷமீல், சரவணன், புகழேந்தி முதலியோருடன் தொடர்பு கொண்டு விசாரிக்கிறார். அதாவது, பவித்ராவின் நண்பர்கள் என்று பழனிக்குத் தெரிந்திருக்கிறது என்றாகிறது.
  • மே.24-ம் தேதி பவித்ராவை காணவில்லை என்று பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் பழனி புகார் கொடுத்தார்.
  • ஒரு வாரம் (?) ஈரோட்டில் தங்கியிருந்த பவித்ராவும், ஷமீல் அகமதுவும் என்ன செய்து கொண்டிருந்தனர்?
  • ஜூன் மாதம் 2-வது வாரத்தில் பழனியின் செல்போனில் தொடர்புகொண்ட ஷமீல், “பவித்ராவை பேருந்தில் ஊருக்கு அனுப்பிவைக்கிறேன். அவரிடம் எதுவும் கேட்க வேண்டாம்”. என கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்துவிட்டார். ஆனால், ஆம்பூருக்கு வரவேண்டிய பவித்ரா சென்னைக்கு ஏன் சென்றாள்? ஷமீல் மட்டும் எப்படி தனியாக ஆம்பூருக்கு வரவேண்டும்? ஷமீல் என்றைக்கு ஆம்பூருக்கு வந்தார் என்று தெரியவில்லை.
  • பழனி ஷமீல் வீட்டிற்குச் சென்று சண்டை போடுகிறார். அவர்கள் தங்களுக்குத் தெரியாது என்று விரட்டி விடுகின்றனர். இதனால், ஷமீலின் மீது சந்தேகம் இருப்பதாக போலீஸிடம் பழனி சென்று சொல்லியிருக்கலாம்.
  • 15-06-2015 அன்று போலீஸார் விசாரணைக்கு ஷமீலைக் கூட்டிச் செல்கின்றனர்.
  • ஜூல.4 அன்று சென்னையில் பவித்ரா, சரவணன்-புகழேந்தி முதலியோருடன் போலீஸில் சிக்குகிறார்.
  • 02-06-2015 முதல் 04-07-2015 வரை சென்னையில் பவித்ரா எப்படி இருந்தாள்?
  • ஆக, பவித்ரா-ஷமீல் இருவரையும் எல்லாவற்றையும் மீறி ஊக்குவித்தது யார்?
  • சந்தேகிக்கப்படுவது போல, இதில் “லவ்-ஜிஹாத்” போன்ற விவகாரம் உள்ளதா அல்லது வேறு விவகாரங்கள் உள்ளனவா? அவ்வுண்மைகளை மறைக்க இப்பிரச்சினை திசைத்திருப்பப்படுகிறதா?
  • பெண்ணிய வீராங்கனைகள் ஒரு பெண்ணின் பிரச்சினை மற்றும் பெண் போலீஸாரே பாலியல் தொல்லைகளில் உட்படுத்தப்பட்டார்கள் எனும் போது, ஏன் மௌனமாக இருந்தார்கள், இருக்கிறார்கள்?
  • தேசிய ஊடகங்களும் இவற்றை கண்டுகொள்ளாதது வேடிக்கையாக இருக்கிறது.
  • இதற்கு மதசாயம் பூசப்படுவதாக “ராஜ் டிவி” கூறுகிறது[5].

© வேதபிரகாஷ்

08-08-2015

[1] http://www.maalaimalar.com/2015/08/06110912/ambur-violence-case-shameel-ah.html

[2] மாலைமலர், ஆம்பூர் கலவர வழக்கு: ஷமில் அகமதுவை தனி அறையில் விசாரிக்கவில்லைஇன்ஸ்பெக்டர் மார்ட்டின் தகவல், பதிவு செய்த நாள் : வியாழக்கிழமை, ஆகஸ்ட் 06, 11:09 AM IST.

[3] http://www.vkalathur.in/2015/06/7_28.html

[4] http://www.deccanchronicle.com/150704/nation-crime/article/cb-cid-yet-question-custody-killer-inspector

[5] https://www.youtube.com/watch?v=7RPBacw0F5Y

ஆம்பூர் கலவரம்: போலீஸே போலீஸ் மீது நடவடிக்கை – ஆனால், போலீஸாரைத் தாக்கியவர்கள் மீது என்ன நடவடிக்கை? (1)

ஓகஸ்ட் 8, 2015

ஆம்பூர் கலவரம்: போலீஸே போலீஸ் மீது நடவடிக்கை – ஆனால், போலீஸாரைத் தாக்கியவர்கள் மீது என்ன நடவடிக்கை? (1)

டெக்கான் குரோனிகள் - அவர் கொலையாளி என்று தீர்மானித்து அவ்வாறே குறிப்பிட்டது

டெக்கான் குரோனிகள் – அவர் கொலையாளி என்று தீர்மானித்து அவ்வாறே குறிப்பிட்டது

ஜூலை.19 அன்று மார்டின் பிரேம்ராஜ் [C. Martin Premraj] கைது செய்யப்படவேண்டும் என்று புகார் கொடுக்கப்பட்டது: ஜூன்.19 அன்று மார்டின் பிரேம்ராஜ் [C. Martin Premraj] கைது செய்யப்படவேண்டும் என்று ஆம்பூர் முஸ்லிம்கள் பிடிவாதமாக இருந்தனர், புகாரும் கொடுத்தனர். அவர் கைது செய்யப்பட்டதில் தாமதம் ஏற்பட்டதால் தான் கலவரம் ஏற்பட்டது என்றும் செய்திகள் வெளியாகின[1]. ஷமீல் அகமது மரணம் தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ் காணாமல் இருந்து, பிறகு கைது செய்யப்பட்டவுடன், சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிகொண்டா அடுத்த குச்சிபாளையத்தை சேர்ந்த பவித்ரா காணாமல் போனது தொடர்பான புகாரின்பேரில் ஆம்பூரை சேர்ந்த ஷமீல் அகமத்திடம் பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். ஜூன் 15 முதல் 18 வரை போலீஸ் கஸ்டடியில் ஷமீல் அகமத் இருந்தார்[2]. பிறகு அவர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.

ஆம்பூர் கலவரம் - மார்டின் இன்ஸ்பெக்டர்

ஆம்பூர் கலவரம் – மார்டின் இன்ஸ்பெக்டர்

ஷமீல்அகமது இறப்பு, தௌவீத் ஜமாத் ஆர்பாட்டம், மார்ட்டின் பிரேம்ராஜ் மருத்துவவிடுப்பு: ஜூன்.19 அன்று ஆம்பூரில் உள்ள பொது மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டார். ஜூன்.23ம் தேதி அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். ஜூன்.26ம் தேதி சென்னை ராஜிவ் காந்தி மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டார். அப்போது போலீசார் தாக்கியதில் படுகாயமடைந்த ஷமீல்அகமது, சிகிச்சை பலனின்றி ஜூன் 26ம் தேதி சென்னை ராஜிவ் காந்தி மருத்துவ மனையில் இறந்தார்[3].  தௌவீத் ஜமாத் [Thoweed Jamath] ஆட்கள் போலீஸ் ஸ்டேசன் முன்பு கடந்த ஜூன் 27ம் தேதி ஆர்பாட்டம் செய்தனர் இதனால் ஆம்பூரில் பயங்கர கலவரம் ஏற்பட்டது[4]. அன்றிலிருந்தே, மார்டின் உடல்நலம் சரியில்லை என்று மருத்துவ-விடுப்பில் சென்று விட்டார்[5]. இதையடுத்து டிஜிபி உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பிறகு வழக்கில் இவரது பெயர் சேர்க்கப்பட்டு[6] சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது[7]. ஒருபுறம் போலீஸார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைப் பெற்றுவந்தனர். பெண் போலீஸார் தாங்கள் எப்படி துரத்தப் பட்டனர், மானபங்கத்திற்கு உள்ளாகினர் என்றெல்லாம் கதறியபடி தங்களது அனுபவங்களை சொல்லி வந்தனர். ஆனால், மறுபுறம் இந்நடவடிக்கையும் தொடர்ந்தது.

இறந்த ஷமீல் அகமது, ஆம்பூர்

இறந்த ஷமீல் அகமது, ஆம்பூர்

ஜூன்.19 முதல் 26 வரை சிகிச்சை அளித்தது: ஷமீல் அகமது எட்டு நாட்களில், மூன்று மருத்துவமனைகளில் சிகிச்சைக்குட்படுத்தப் பட்டிருக்கிறார்.

சிகிச்சை தேதிகள் மருத்துவமனை, இடம் சிகிச்சை பெற்ற நாட்கள்
ஜூன்.19 முதல் 23. 2015 வரை ஆம்பூரில் உள்ள பொது மருத்துவமனை ஐந்து நாள் சிகிச்சை பெற்றுள்ளார்.
ஜூன்.23  முதல் 25. 2015 வரை அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் மருத்துவமனை இரண்டு / மூன்று நாள் நாள் சிகிச்சை பெற்றுள்ளார்.
ஜூன்.26. 2015 சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனை அன்று மாலை உயிரிழந்தார்.

அதனால், அங்கு இவருக்கு என்ன சிக்கிச்சை அளிக்கப்பட்டது, எவ்வாறு உயிரிழந்தார் என்பதற்கான, ஆவணங்கள் இருக்கும். எதனால், இறப்பு ஏற்பட்டது என்பதையும் மருத்துவரீதியில் இவற்றிலிருந்து அறிந்து கொள்ளலாம். போலீஸ் விச்சரணையின் போது மாமனார் என்.கே. முகமது கௌஸ் [N. K. Mohammed Ghouse, father-in-law of Shamim Ahmad] தான் ஷமீம் அகமதுவைப் பார்க்க தினமும் அங்கு சென்றுள்ளதாகவும், மார்டின் ஒரு விருந்தினர் மாளிகைக்கு, ஷமீம் அகமதுவை எடுத்து சென்றதாகவும் தெரிவித்தார்.  ஆனால் ஒரு பேட்டியில், ஜவஹருல்லா, மார்டின் தன்னுடைய வீட்டில் வைத்து விசாரணை நடத்தினார் என்கிறார்[8].

ஆம்பூர் கலவரம் - மார்டின் இன்ஸ்பெக்டர் கைது - மாலைமலர்

ஆம்பூர் கலவரம் – மார்டின் இன்ஸ்பெக்டர் கைது – மாலைமலர்

ஜூலை 31ம் தேதி மான் வேட்டையாடியதாக மார்டின் பிரேம்ராஜ் கைது: ஷமீல் அகமது இறந்த விசயம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜிக்கு 2 முறை சம்மன் அனுப்பப்பட்டது [the summons issued by the CB CID in the case under section 176 (inquiry by a magistrate into the cause of death)[9]]. ஆனால் அவர் ஆஜராகவில்லை, நண்பர்களுடன் தலைமறைவாக இருந்தார்[10]. மருத்துவவிடுப்பில் சென்றார் என்று முன்னரே குறிப்பிடப்பட்டது. போலீஸார் அவரைத் தேடி வந்தனர்[11]. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில்  அழகிய பாண்டியபுரம் வனச்சரக காடுகளில் மிளா / மான் வேட்டையாடியதாக [under Section 4 of the Wildlife Act ] மார்ட்டின் பிரேம்ராஜ் (50), பணி நீக்கம் செய்யப்பட்ட கான்ஸ்டெபில் சி. கிறிஸ்டோபர்(51), டி. ஐயப்பன் (46), என். கோபாலகிருஷ்ணன் (22), முதலியோர்[12] வனத்துறையினர் உரிய வனச்சட்டதின் கீழ் ஜூலை 31ம் தேதி கைது செய்யப்பட்டனர்[13]. 40 கி இறைச்சி, மான் தோல், கொம்புகள் முதலியவற்றுடன் இரண்டு வண்டிகள், துப்பாக்கி முதலியன கைப்பற்றப்பட்டன[14]. பிறகு நாகர்கோவில் / பாளையகோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்[15]. அதில் மார்டின் பிரேம்ராஜ் தேடப்பட்டு வந்த இன்ஸ்பெக்டர் ஆவர்[16]. இதைதொடர்ந்து நேற்று காலை சிபிசிஐடி போலீசார் பலத்த பாதுகாப்புடன் மார்ட்டின் பிரேம்ராஜை வேலூர் ஜே.எம்.2 கோர்ட் மாஜிஸ்திரேட் ரேவதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர்[17]. அவருக்கு 5 நாள் காவல் அனுமதிக்கும்படி சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்தனர். ஆனால் 3 நாள் அனுமதி அளித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்[18]. இதையடுத்து மார்ட்டின் பிரேம்ராஜை வேலூர் சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து எஸ்பி நாகஜோதி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்[19].

© வேதபிரகாஷ்

08-08-2015

[1] http://www.newindianexpress.com/states/tamil_nadu/Delay-in-Booking-Inspector-led-to-Ambur-Clash/2015/07/08/article2908517.ece

[2] http://www.newindianexpress.com/states/tamil_nadu/Cops-Kept-Youth-in-illegal-Custody-for-4-Days/2015/06/28/article2890411.ece

[3] http://www.dinamalar.com/news_detail.asp?id=1311782

[4]  தினமலர், ஆம்பூர் கலவர வழக்கு விவகாரம் இன்ஸ்பெக்டரிடம் 3 நாள் விசாரணை, ஆகஸ்ட்.8, 2015.

[5] http://www.newindianexpress.com/states/tamil_nadu/CB-CID-Launches-Manhunt-for-Inspector-in-Ambur-Case/2015/07/14/article2919051.ece

[6] http://www.deccanchronicle.com/150708/nation-crime/article/suspended-inspector-named-ambur-custody-death-absconding

[7] தினகரன், ஆம்பூர் ஷமீல் அகமது மரணம் குறித்து சஸ்பெண்ட் இன்ஸ்பெக்டரிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை, ஆகஸ்ட்.8, 2015.

[8]  ராஜ்-டிவி, கோப்பியம் நிகழ்ச்சி, https://www.youtube.com/watch?v=7RPBacw0F5Y

[9] http://www.thehindu.com/news/national/tamil-nadu/cbcid-takes-custody-of-pallikonda-inspector/article7505510.ece

[10]  தி இந்து, ஆம்பூர் கலவரத்தில் சஸ்பெண்ட் ஆன காவல் ஆய்வாளரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி: வேலூர் நீதிமன்றம் உத்தரவு, Published: August 6, 2015 08:02 ISTUpdated: August 6, 2015 08:04 IST.

[11] http://www.newindianexpress.com/states/tamil_nadu/CB-CID-Launches-Manhunt-for-Inspector-in-Ambur-Case/2015/07/14/article2919051.ece

[12]  The Hindu, Inspector suspended over Ambur clash held for hunting deer, Updated: August 1, 2015 05:53 IST.

[13] http://www.newindianexpress.com/states/tamil_nadu/CB-CID-to-Grill-Premraj-for-3-days/2015/08/06/article2960000.ece

[14] http://www.thehindu.com/news/national/tamil-nadu/inspector-suspended-over-ambur-clash-held-for-hunting-deer/article7487594.ece

[15] http://www.dailythanthi.com/News/Districts/Vellore/2015/08/05184106/Ambur-murder-case-of-a-young-man3-days-inspectorCipiciaiti.vpf

[16] During the questioning that followed it was found that they were C Christopher (51) of Kottricode, T Iyyappan (46) of Puthukadai, N Gopala Krishnan (22) of Puthukadai all from Kanyakumari district and C Martin Prem Raj (50) of Thirukoviloor in Villupuram district, said forest officials. All the four were booked under section 9 of Wild Life Protection Act on charges of trespassing into a reserve forest and poaching a sambar deer. They were arrested and were produced at the forest court, officials added. Of the arrested four Martin Prem Raj was an inspector of police who was on the look out list of Vellore police in connection with the Ambur riots in Vellore district recently.

http://m.newindianexpress.com/tamil-nadu/511278

[17] தினத்தந்தி, ஆம்பூர் வாலிபர் கொலை வழக்கு: இன்ஸ்பெக்டரை 3 நாட்கள் காவலில் எடுத்து சி.பி.சி..டி. போலீசார் விசாரணை வேலூர் கோர்ட்டு அனுமதி, மாற்றம் செய்த நாள்: வியாழன் , ஆகஸ்ட் 06,2015, 2:30 AM IST; பதிவு செய்த நாள்: புதன், ஆகஸ்ட் 05,2015, 6:41 PM IST.

[18]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81/article7506466.ece

[19] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=160119

ஆம்பூர் கலவரம் – ஷமீல் அகமது – பவித்ரா கூடாத தொடர்புகளில் மறைக்கப்படும் விவகாரங்கள் (2

ஓகஸ்ட் 8, 2015

ஆம்பூர் கலவரம் – ஷமீல் அகமது – பவித்ரா கூடாத தொடர்புகளில் மறைக்கப்படும் விவகாரங்கள் (2)

பவித்ரா-என் கணவனிடம் இருந்து எனக்கு விவாகரத்து வேண்டும்.

பவித்ரா-என் கணவனிடம் இருந்து எனக்கு விவாகரத்து வேண்டும்.

விவாகரத்து வேண்டும் என்று கேட்ட பவித்ரா[1]: தனது மனைவியை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை பழனி தாக்கல் செய்தார். இதனால், தனிப் படை அமைத்து பவித்ராவை போலீஸார் தேடினர். அம்பத்தூரில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த பவித்ராவை மீட்டனர். இதைத்தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், சி.டி.செல்வம் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு பவித்ரா நேற்று ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது நீதிமன்றத்தில் நடந்த விசாரணை வருமாறு[2]:

நீதிபதிகள்: நீ தான் பவித்ராவா?

பவித்ரா: ஆமாம், நான்தான் பவித்ரா.

நீதிபதிகள்: நீ யாருடன் செல்ல விரும்புகிறாய். பெற்றோருடனா அல்லது கணவருடனா?

பவித்ரா: பெற்றோருடன் செல்ல விரும்புகிறேன். ஆனால், எனக்கு விவாகரத்து வேண்டும். ‘என் கணவரிடம் இருந்து என் பெற்றோர் விவாகரத்து வாங்கித்தர வேண்டும்’ என்றும் நீதிபதியிடம் அவர் கூறினார்.

நீதிபதிகள், ‘உன்னுடைய பெற்றோருடன் செல்கிறாயா?’ என்று கேட்டார்கள். அப்போது கோர்ட்டு அறையில் இருந்த வக்கீல் சங்கத்தலைவர் பால்கனகராஜ், ‘இந்த பெண் காணவில்லை என்ற வழக்கு விசாரணையின் தொடர் நடவடிக்கையில் தான் ஆம்பூரில் கலவரம் ஏற்பட்டது’ என்று கூறினார். இதையடுத்து நடந்த விவாதம் பின்வருமாறு:-

நீதிபதிகள்:- பத்திரிகைகளில் வெளியான செய்திகளை படித்தோம். ஷமில் அகமதுவுக்கு திருமணமாகிவிட்டது. உனக்கும் திருமணமாகிவிட்டது. கணவர், குழந்தை உள்ளனர். அப்புறம் என்ன? இப்போது அந்த வாலிபரும் இறந்துவிட்டார். அவரது குடும்பமும் பாதிக்கப்பட்டிருக்கும். இதுபோன்ற பிரச்சினைகளினால் தான், மதக்கலவரம், சாதிக்கலவரம் நடக்கிறது. ஏற்கனவே திருமணம் நடக்காத ஆணும், பெண்ணும் வேறு மதங்களை சார்ந்தவர்களாக இருந்தாலும், சிறப்பு திருமணச் சட்டத்தின்கீழ் இருவருக்கும் திருமணம் செய்துவைக்கலாம்[3]. ஆனால், இங்கு இருவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளது. அப்படி இருக்கும்போது எப்படி இவர்களது திருமணத்தை ஏற்க முடியும்?  [இருவருக்கும் குழந்தைகள் உள்ளன என்ற விசயம் இங்கு வெளிப்படுகிறது. மேலும் இரு மதத்தினர் சம்பந்தப்பட்டிருப்பதால், இச்சட்டம் பற்றி குறிப்பிடுவது, அத்தகைய நிலை இருப்பதை அவர்கள் அறிந்துள்ளனர் என்று தெரிகிறது]

ஆம்பூர் பவித்ரா.- பழனி, இடையில் ஷமீல்

ஆம்பூர் பவித்ரா.- பழனி, இடையில் ஷமீல்

பிடிவாதமாக விவாகரத்து கேட்ட பவித்ரா[4]: நீதிபதிகள் எவ்வளவு அறிவுரை கூறியும், விவரங்களை எடுத்துக் கூறியும், பவித்ரா பிடிவாதமாக விவாக ரத்து வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தது அனைவரையும் திகைக்க வைத்தது.

பவித்ரா:- என் கணவனிடம் இருந்து எனக்கு விவாகரத்து வேண்டும்.

நீதிபதிகள்:- விவாகரத்து என்ன பெட்டிக்கடையில் கிடைக்கும் பொருளா? காசு கொடுத்து வாங்குவதற்கு? விவாகரத்து வேண்டும் என்றால் அதுதொடர்பாக வழக்கை தாக்கல் செய்ய வேறு நீதிமன்றம் உள்ளது. நினைத்தவுடன் விவாகரத்து கிடைத்துவிடுமா?

அரசு வக்கீல் தம்பித்துரை:- ஆம்பூரில் நடந்துள்ள கலவரத்தில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள சொத்துகள், வாகனங்கள் நாசமாகியுள்ளன.

பால்கனகராஜ்:- இந்த வழக்கை சாதாரண ஆட்கொணர்வு மனுவாக ஐகோர்ட்டு கருதக்கூடாது. ஏன் என்றால், ஏற்கனவே திருமணமான ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்வது தொடர்பான பிரச்சினைக்கு தெளிவான சட்டம் இல்லை. எனவே, இந்த வழக்கை அரிதான வழக்காக கருதி, சிறப்பு கவனம் செலுத்தி இதுபோன்ற பிரச்சினைகளில் போலீசார் எப்படி செயல்பட வேண்டும் என்று விதிமுறைகளை உருவாக்க வேண்டும்.

பவித்ரா, ஷமீல் அஹ்மது

பவித்ரா, ஷமீல் அஹ்மது

பவித்ராவுக்கு நீதிபதிகள் ஆலோசனை[5]: நீதிபதிகள்:- (பவித்ராவை பார்த்து) உனக்கு கணவர், குழந்தைகள் இருக்கின்றனர். அவர்களுடன் சந்தோஷமாக வாழவேண்டும். தேவையில்லாத பிரச்சினை எதற்கு? உனக்கு ஷமில் அகமது தெரியுமா?

பவித்ரா:- ஒரே கம்பெனியில் வேலை செய்யும்போது அவரை தெரியும்.

சென்னை உயர் நீதிமன்ற வழக் கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் (குறுக் கிட்டு): இது முக்கியமான வழக்கு என்பதால் இங்கே நாங்கள் எல்லாம் கூடியிருக்கிறோம். ஆம்பூர் சம்பவத்துக்கு இந்தப் பெண்தான் மூல காரணம். அங்கு நடந்த வன்முறையில் அரசுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏராள மானோர் கைது செய்யப் பட்டுள்ளனர். திருமணமான ஒரு பெண், திருமணமான ஆணுடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் சென்றுவிட்டால், அந்த வழக்கை எப்படி கையாள வேண்டும்? என்று போலீஸாருக்கு இந்த நீதிமன்றம் வழிகாட்டுதல்களை உருவாக்கித் தரவேண்டும். அது ஒரு முன்உதாரணமாக இருக்கும்[6].

நீதிபதிகள்: ஆம்பூரில் நடந்த சம்பவத்துக்கு நாங்களும் வருந்துகிறோம். பவித்ரா மேஜரான பெண். அவரை நாங்கள் கட்டுப்படுத்த முடியாது. அவர் பெற்றோருடன் செல்ல விரும்புகிறார்.

ஆர்.சி.பால்கனகராஜ்: ஆம்பூரில் இப்போது சுமுகமான சூழல் இல்லை. இந்நிலையில், பவித்ராவை அங்கு அனுப்பினால் அவருக்கு பாதுகாப்பாக இருக்காது. இதை கருத்தில் கொண்டு தாங்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்[7].

அரசு வக்கீல்:- அவரது கருத்தை இந்த வழக்கில் பதிவு செய்யக்கூடாது. ஏற்கனவே அவர் காணாமல்போனதாக பதிவு செய்யப்பட்ட கிரிமினல் வழக்கு போலீஸ் விசாரணையில் உள்ளது. அந்த விசாரணைக்கு பாதிப்பு வரக்கூடாது.

பால்கனகராஜ்:- தற்போது இவ்வளவு பெரிய பிரச்சினைக்கு இந்த பெண் காணாமல்போன சம்பவம் தான் காரணம். எனவே, இந்த பெண்ணை பெற்றோரிடம் தற்போது அனுப்பினால், தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்.

நீதிபதிகள்:- தற்போது பவித்ரா எங்கே வசிக்கிறார்?

பவித்ரா:- சென்னை அம்பத்தூரில் உள்ள ஒரு பெண்கள் விடுதியில் உள்ளேன்.

நீதிபதிகள்:- அதே விடுதியில் 2 வாரத்துக்கு தங்கி இருக்க வேண்டும். இவருக்கு தேவையான பாதுகாப்பை போலீசார் வழங்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.

டெல்டா ஷூ, ஆம்பூர்- ஷமில் அஹ்மது, பவித்ரா

டெல்டா ஷூ, ஆம்பூர்- ஷமில் அஹ்மது, பவித்ரா

ஜூலை 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பு[8]: இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘அம்பத்தூரில் ஒரு பெண்கள் விடுதியில் தங்கி இருந்து கடை ஒன்றில் வேலை செய்துவருவதாகவும், தன் பெற்றோருடன் செல்ல விரும்புவதாகவும் பவித்ரா கூறினார். ஆம்பூர் கலவரம் பற்றியும் இங்கே கூறினார்கள். எனவே இந்த வழக்கை வருகிற 23-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன். அன்று பவித்ரா நேரில் ஆஜராக வேண்டும். அதுவரை தற்போது அவர் தங்கி இருக்கும் விடுதியிலேயே தங்கியிருக்க வேண்டும். அவருக்கு தேவையான பாதுகாப்பை போலீசார் வழங்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.

© வேதபிரகாஷ்

08-08-2015

[1] தினத்தந்தி, ஆம்பூர் கலவரத்துக்கு காரணமான பவித்ரா சென்னையில் தங்கி இருக்க உத்தரவு, மாற்றம் செய்த நாள்: செவ்வாய், ஜூலை 07,2015, 5:15 AM IST; பதிவு செய்த நாள்: செவ்வாய், ஜூலை 07,2015, 4:36 AM IST

[2] தி இந்து, ஆம்பூர் பவித்ரா உயர் நீதிமன்றத்தில் ஆஜர்: 23-ம் தேதி வரை விடுதியில் தங்கியிருக்க உத்தரவு, Published: July 7, 2015 07:33 ISTUpdated: July 7, 2015 15:21 IST

[3] 4. Conditions relating to solemnization of special marriages

Notwithstanding anything contained in any other law for the time being in force relating to the solemnization of marriages, a marriage between any two persons may be solemnized under this Act, if at the time of the marriage the following conditions are fulfilled, namely:

(a) Neither party has a spouse living;

1[(b) Neither party-

(i) Is incapable of giving a valid consent to it in consequence of unsoundness mind; or

(ii) Though capable of giving a valid consent, has been suffering from mental disorder of such a kind or to such an extent as to be unfit for marriage and the procreation of children; or

(iii) has been subject to recurrent attacks of insanity 2[* * *]

(c) The male has completed the age of twenty-one years and the female the age of eighteen years;

3[(d) The parties are not within the degrees of prohibited relationship;

Provided that where a custom governing at least one of the parties permits of a marriage between them, such marriage may be solemnized, not withstanding that they are within the degrees of prohibited relationship; and ]

4[(e) Where the marriage is solemnized in the State of Jammu and Kashmir, both parties are citizens of India domiciled in the territories to which this Act extends.]

5[Explanation. -In this section, “customs”, in relation to a person belonging to any tribe, community, group or family, means any rule which the State Government may, by notification in the Official Gazette, specify in this behalf as applicable to members of that tribe, community, group or family;

http://www.vakilno1.com/bareacts/splmarriage1954/specialmarriageact.html

[4] http://www.dailythanthi.com/News/State/2015/07/07043612/Root-cause-of-the-Ambur-mishap-pavithra-ordered-to.vpf

[5] http://tamil.oneindia.com/news/tamilnadu/aambur-violence-pavithra-appear-madras-high-court-230417.html#slide161128

[6]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D-23%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81/article7394400.ece

[7] ஆம்பூருக்குச் சென்றால் அவருக்கு / பவித்ராவுக்கு பாதுகாப்பாக இருக்காது, என்பதும் நோக்கத்தக்கது. யாரால் அவருக்கு அத்தகைய பாதுகாப்பு பாதகம் ஏற்படும் நிலை ஏற்படும் என்றும் யோசிக்கத் தக்கது. முஸ்லிம் அமைப்புகள் கலவரத்திற்கு காரணம் பவித்ரா தான் என்ற பிரச்சாரத்தை, இணைதளம் மூலமும், டிவி-பேட்டிகள் (ராஜ்-டிவி) மூலமும் செய்துள்ளன.

[8] Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/aambur-violence-pavithra-appear-madras-high-court-230417.html#slide161128

ஆம்பூர் கலவரம் – ஷமீல் அகமது – பவித்ரா கூடாத தொடர்புகளில் மறைக்கப்படும் விவகாரங்கள் (1)

ஓகஸ்ட் 8, 2015

ஆம்பூர் கலவரம் – ஷமீல் அகமது – பவித்ரா கூடாத தொடர்புகளில் மறைக்கப்படும் விவகாரங்கள் (1)

ஆம்பூர் கலவரம் - குமுதம் ரிப்போர்டர் 10-11

ஆம்பூர் கலவரம் – குமுதம் ரிப்போர்டர் 10-11

குமுதம் ரிப்போர்டர் கொடுக்கும் விவரங்கள்[1]: ஷமீல் அகமது (26) ஈரோட்டைச் சேர்ந்த ஷாஜஹான் மற்றும் பரிதா பேகம் தம்பதியரின் மகன். ஷமீல் அகமதுக்கும், “இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின்”[2] ஆம்பூர் நகரத் தலைவர் கவுஸ் பாஷா மகள் முஸ்தரிக்கும் நவம்பர் 2014ல் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு முன்பே பவித்ராவுடன் (23) தொடர்பு இருந்திருக்கிறது, இதனால், ஷமீல் அதனை விடவில்லை. இவ்விசயம் தெரியவந்தவுடன் பிரச்சினையாகி இருக்கிறது. ஈரோட்டுக்கு இடம் பெயர்ந்தால், ஷமீல் மனம் மாறக்கூடும் என்று, அங்கு சென்றனர். அப்பொழுதுதான், பவித்ரா ஷமீலைத் தேடி 24-05-2015 அன்று ஈரோட்டுக்கு சென்றார். ஷமீல் தனியாக ஒரு வீடு பார்த்து, பவித்ராவை அங்கு தங்க வைத்திருக்கிறார். பழனிக்கு (29) ஷமீல் தான் பவித்ராவின் கள்ளக்காதலி என்பது தெரியாது. ஆனால், ஷமீல், பழனிக்கு போன் செய்து “பவித்ரா வீட்டுக்கு வந்துவிட்டாரா” என்று கேட்டபோது, “நீங்கள் யார்” என்று பழனி கேட்டார். அதற்கு ஷமீல், சென்னையில் பவித்ரா முகவரி தெரியாமல் நின்று கொண்டிருந்தபோது, தான் விசாரித்து ரெயிலில் ஏற்றிவிட்டதாகவும், பவித்ராதான், அவரது செல்போன் நெம்பரைக் கொடுத்ததாவும் கூறியுள்ளார். இந்த நெம்பர் மூலம் தான் போலீஸாற் ஷமீலைக் கண்டு பிடித்தனர். மேலும் போலீஸ் விசாரணையின் போது, ஷமீல் அருவருப்பான முறையில் பதில் கொடுத்ததாகத் தெரிகிறது. இவ்விவரங்களை “குமுதம் ரிப்போர்டர்” கொடுக்கிறது. “ஷமீல் அஹமதுவின் காதலி” என்றே இந்தியன் எக்ஸ்பிரஸ் தலைப்பிட்டு “காணவில்லை” என்று செய்தி வெளியிட்டது[3].  இம்முன்னுரையுடன் மற்ற செய்தி தொகுப்புகளைப் படிக்கும் போது, விசயங்கள் தெளிவாகின்றன.

ஆம்பூர் கலவரம் - குமுதம் ரிப்போர்டர் 12-13

ஆம்பூர் கலவரம் – குமுதம் ரிப்போர்டர் 12-13

தலைமறைவாக இருந்த ஆம்பூர் பவித்ரா கிடைத்தார்சென்னையில் பதுங்கியவரை கைது செய்தது போலீஸார்[4]: பவித்ரா செல்போனுக்கு செல்லும் எண்களை கண்காணித்த போலீஸார் சுரேஷின் நம்பரைக் கண்டு பிடித்தனர். அதிலிருந்து சரவணன் மற்றும் புகழேந்தியின் எண்களை கண்டு பிடித்தனர். சுரேஷை விசாரித்தபோது, அம்பத்தூரில் ஒரு பெண்கள் விடுதியில் இருப்பது தெரியவந்தது. இவ்வாறு, பவித்ராவை கண்டுபிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படையினர், அவரின் மொபைல் போன் எண் தொடர்புகள் அடிப்படையில், விசாரணையில் இறங்கினர். அதில், சென்னையில் அவர் பதுங்கியிருப்பது தெரியவந்தது. 04-07-2015 இரவு, சென்னைக்கு வந்த போலீசார், அம்பத்துார் பகுதியில், தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்த, பவித்ராவை மடக்கிப் பிடித்தனர். விசாரணையில், அம்பத்துாரில் உள்ள ஜவுளி கடை ஒன்றில், வேலை செய்து வருவதாகவும், இரு வாலிபர்கள் உதவி செய்ததாகவும் தெரிவித்தார். உடன், சென்னை கிண்டியில் ஒரு தொழிற்சாலையில் பணிபுரிந்த, இரு வாலிபர்களையும் பிடித்தனர். அவர்களில் ஒருவர், அரக்கோணம் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த சரவணன்; மற்றொருவர், திண்டுக்கல்லைச் சேர்ந்த சுரேந்திரன்.

ஆம்பூர் கலவரம் - பவித்ரா சென்னையில்.1

ஆம்பூர் கலவரம் – பவித்ரா சென்னையில்.1

மாஜிஸ்திரேட் முன்னர் ஆஜர் படுத்தப்பட்ட பவித்ரா: இதையடுத்து, 05-07-2015 மதியம், 12:30 மணிக்கு, அணைக்கட்டு அடுத்த வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்துக்கு, பவித்ராவை கொண்டு வந்த போலீசார், அங்கு பிற்பகல், 3:00 மணி வரை, அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, வேலுார் மாவட்ட எஸ்.பி., செந்தில்குமாரியும் உடனிருந்தார். பின், மாலை, 5:00 மணிக்கு வேலுார் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் மும்மூர்த்தி முன் ஆஜர்படுத்தினர். பவித்ராவை விசாரித்த மாஜிஸ்திரேட், அவரை மகளிர் காப்பத்தில் தங்கவைக்கும்படியும், இன்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படியும் உத்தரவிட்டார். இதையடுத்து, வேலுார் அடுத்த அரியூர் கிராமத்திலுள்ள, தொண்டு நிறுவனத்துக்குச் சொந்தமான பெண்கள் விடுதியில், பவித்ரா தங்க வைக்கப்பட்டார்.  இதற்கிடையில், பவித்ராவுக்கு உதவிய சரவணன் மற்றும் சுரேந்திரனை, அரக்கோணம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்ற போலீசார், அங்கு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆம்பூர் கலவரம் - பவித்ரா சென்னையில்.2

ஆம்பூர் கலவரம் – பவித்ரா சென்னையில்.2

பவித்ரா கடத்தப்பாட்டாள் என்றும் செய்தி[5]: பவித்ரா ஏற்கனவே வேலை பார்த்த நகை கடையில் விசாரணை நடத்தினர். அவர் பெங்களூரில் பதுங்கியுள்ளாரா என்று விசாரித்தனர். அதற்கு பலன் கிடைக்கவில்லை. இதனால் பவித்ராவின் செல்போன் எண் மூலம் விசாரணையில் இறங்கினர். அப்போது சென்னை கோயம்பேடு பகுதியில் பவித்ரா இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. நேற்று இரவு தனிப்படை போலீசார் சென்னை வந்தனர். கோயம்பேடு பஸ் நிலையம் அருகே பவித்ராவை தனிப்படை போலீசார் மீட்டனர். அவர் நேற்று இரவு வேலூர் கொண்டு வரப்பட்டார். ராணிப்பேட்டை அருகே உள்ள மேல்பாடி போலீஸ் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பவித்ராவை மீட்டபோது அவருடன் 2 வாலிபர்கள் இருந்தனர். 2 பேரையும் தனிப்படை போலீசார் நேற்று சென்னையில் மடக்கி பிடித்தனர். அவர்கள் அரக்கோணத்தை சேர்ந்த சரவணன், திண்டுக்கல்லை சேர்ந்த புகழேந்தி என்று தெரிந்தது. இவர்கள் இருவரும் கிண்டியில் வேலை பார்த்து வந்துள்ளனர். அவர்களை அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பவித்ரா கடத்தல் பின்னணியில் இவர்களுக்கு தொடர்பு இருப்பது உறுதியாகி உள்ளது[6]. அவர்களிடம் இதன் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இன்று பவித்ராவை வேலூர் ஐகோர்ட்டில் ஆஜர்படுத்த முடிவு செய்துள்ளனர். அப்போது பவித்ரா கடத்தல் சம்பவத்தில் பரபரப்பு தகவல் வெளிவரும். பவித்ராவுக்கு 5 வயதில் ஒரு மகள் உள்ளார். அவள் அம்மா எங்கே எனக் கேட்டு அழுகிறாள். விரைவில் பவித்ராவை ஒப்படையுங்கள் என போலீசாரிடம் பழனி கேட்டுக் கொண்டுள்ளார்.

டெக்கான் குரோனிகள் - அவர் கொலையாளி என்று தீர்மானித்து அவ்வாறே குறிப்பிட்டது

டெக்கான் குரோனிகள் – அவர் கொலையாளி என்று தீர்மானித்து அவ்வாறே குறிப்பிட்டது

போலீஸ் தப்பாக சித்தரிக்கிறது என்று குற்றஞ்சாட்டிய பவித்ரா: அரியூர் பெண்கள் விடுதியில் உள்ள பவித்ரா, நிருபர்களிடம் கூறுகையில், “எனக்கு ஜமில் அகமதுவை தெரியாது; பார்த்தது கூட இல்லை. அவரிடம், எந்த கள்ளத் தொடர்பும் இருந்ததில்லை. வேலை தேடி சென்னைக்கு சென்றபோது, மகளிர் விடுதியில் தங்கியிருந்தேன். போலீசார், என்னை தப்பான பெண்ணாக சித்தரிக்கின்றனர்,” என்றார். ஆனால், பிறகு, ஒப்புக்கொண்டாள்.தன்னைவிட வயதில் சிறிய ஷமீலுடன் கள்ள உறவை வைத்துக் கொண்டுள்ள இப்பெண்ணின் நிலை விசித்திரமாக உள்ளது. ஷமீலும், திருமணர்த்திற்குப் பிறாகும், அத்தகைய உறவைத் தொடர்ந்தது பல கேள்விகளை எழுப்புகிறது. ஷமிலைப் பொறுத்த வரையில், ஒருவேளை அவரது மதநம்பிக்கைகள் அத்தகைய பலதார உறவுகளை தடுக்காமல் இருக்கலாம், ஆனால், ஒரு பெண்-குழந்தைக்குத் தாயாக உள்ள பவித்ரா எப்படி, அத்தகைய உறவில் சிக்கினார் என்பது மர்மமாக இருக்கிறது. ஷமீல்-முஸ்தரிக்கும் குழந்தை இருக்கிறது என்று நீதிமன்ற விவாதம் மூலம் தெரிய வருகின்றது. ஆக இது தகாத உறவு தான், தெரிந்தே, இருவரும் வைத்துள்ளனர்.

ஆம்பூர் பவித்ரா.- பழனி, இடையில் ஷமீல்

ஆம்பூர் பவித்ரா.- பழனி, இடையில் ஷமீல்

ஜமீலுடன் கள்ளத்தொடர்பு உண்டு [7]: ஆம்பூர் டி.எஸ்.பி., கணேசன் கூறியதாவது: “இறந்து போன ஜமில் அகமது மற்றும் பவித்ரா இடையே ஏற்பட்ட கள்ளத் தொடர்பால், இருவரும் ஆம்பூரில் இருந்து ஈரோடு சென்று, அங்குள்ள நகை மற்றும் ஜவுளி கடையில் பணியாற்றியதோடு, தனிக்குடித்தனமும் நடத்தி உள்ளனர். அப்போது, பவித்ராவின் கணவர் பழனி, தன் மனைவியை ஜமில் அகமது கடத்திச் சென்று விட்டதாக, பள்ளிகொண்டா போலீசில் புகார் செய்தார். இதை அறிந்த ஜமில் அகமது, ஈரோட்டில் உள்ள வாடகை வீட்டை காலி செய்து விட்டு, பவித்ராவிடம், 300 ரூபாய் கொடுத்து, அவரை ரயில் ஏற்றி அனுப்பி உள்ளார். பவித்ரா சொந்த ஊருக்கு வராமல், வேலை தேடி சென்னைக்கு சென்று விட்டார். இது தொடர்பான முழு விவரத்தையும், போலீசாரிடம், பவித்ரா வாக்குமூலமாக தெரிவித்துள்ளார். இருந்தும், ‘ஜமில் அகமதுவை தெரியாது; பார்த்தது கூட இல்லை. எந்த உறவும் இல்லைஎன, நிருபர்களிடம், அவர் பொய் சொல்கிறார். பவித்ரா கொடுத்த வாக்குமூலத்தை, சென்னை உயர் நீதிமன்றத்தில், இன்று சமர்ப்பிப்போம்”, இவ்வாறு அவர் கூறினார்.

பவித்ரா-என் கணவனிடம் இருந்து எனக்கு விவாகரத்து வேண்டும்.

பவித்ரா-என் கணவனிடம் இருந்து எனக்கு விவாகரத்து வேண்டும்.

பவித்ரா மதம் மாற்றப்பட்டதாகதிடுக்தகவல் தொடர்பில் இருந்த 11 பேரிடம் விசாரணை[8]: வேலூர் ஆம்பூர் கலவர விவகாரத்தில் மாயமான பவித்ராவை போலீசார் மீட்டுள்ளநிலையில் அவர் குறிப்பிட்ட மதத்திற்கு மாற்றப்பட்டதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது………………பவித்ராவின் பழைய காதலர்கள் என கூறப்படும் அரக்கோணம் சரவணன் 26, சென்னை குன்றத்தூர் மனோகரன் 34, காட்பாடி சரவணபெருமாள் 40, ஈரோடு சசிதரன் 34, ஆரணி செங்கமலம் 35 உள்பட 11பேரிடம் விசாரணை செய்தனர். இதுகுறித்து, தனிப்படை போலீஸார் கூறியதாவது[9]: “ஆம்பூர் கலவரத்தின் முக்கிய காரணமான பவித்ரா குறிப்பிட்ட ஒரு மதத்துக்கு மாற்றப்பட்டார்[10]. அந்த மதத்தைச் சேர்ந்த சில இளைஞர்களுடன் பல கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளார். ஆனால் எதுவும் தெரியாது என பலரிடம் தெரிவித்து வருகின்றார். பவித்ராவின் பழைய காதலர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றோம். அவரது அழகுக்கு மயங்கி அவர் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்துள்ளனர். பழைய காதலர்களிடம் விசாரித்தால் ஷமில் அகமதுவின் தொடர்பு எவ்வளவு நாள் என்பது தெரிந்துவிடும்”. மேலும், பவித்ரா கணவர் பழனி கூறியதாவது: “என் அக்காள் மகள் பவித்ராவை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்தேன். அவரது சித்தி மகள் வேலைக்கு செல்வதை பார்த்து, பவித்ராவும் தோல் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றார். அங்கு, ஜமில் அகமதுவுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும், என் வீட்டில் தனிமையில் இருந்தனர். இதையறிந்த நான், பவித்ராவை கண்டித்தேன். இதனால், ஜமில்அகமதுவுடன் சென்று விட்டார். பவித்ராவை பிரிந்து வாடும் எனக்கும், குழந்தைக்கும் நிம்மதி இல்லை”. இவ்வாறு, அவர் கூறினார்[11].

© வேதபிரகாஷ்

08-08-2015

[1] குமுதம் ரிப்போர்டர், 109-07-2015, பக்கங்கள்.10-13.

[2] இதனால் தான், இவ்வமைப்பு முன்னின்று ஆர்பாட்டத்தை நடத்தியுள்ளது, பிறகு அது கலவரமாகி விட்டது.

[3] http://www.newindianexpress.com/states/tamil_nadu/Shameel-Ahmeds-Lover-Untraceable/2015/06/29/article2892446.ece

[4] தினமலர், தலைமறைவாக இருந்த ஆம்பூர் பவித்ரா கிடைத்தார்சென்னையில் பதுங்கியவரை கைது செய்தது போலீஸார், பதிவு செய்த நாள் : ஜூலை 05,2015,23:42 IST

[5] மாலைமலர், ஆம்பூர் கலவர பின்னணி: கடத்தப்பட்ட பவித்ரா சென்னையில் மீட்பு, மாற்றம் செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 05, 2:42 PM IST; பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 05, 11:52 AM IST.

[6] http://www.maalaimalar.com/2015/07/05115212/Ambur-riot-Background-In-Chenn.html

[7] http://www.dinamalar.com/news_detail.asp?id=1289719

[8] தினமலர், பவித்ரா மதம் மாற்றப்பட்டதாகதிடுக்தகவல் தொடர்பில் இருந்த 11 பேரிடம் விசாரணை, ஜூலை.7, 2015: 05:37.

[9] http://www.dinamalar.com/news_detail.asp?id=1290846

[10] இப்பிரச்சினைப் பற்றி யாரும் அலசக் காணோம். விவாக ரத்து கேட்கிறார், ஒருவேலை கொடுத்து விட்டார் என்ன செய்வார் என்பது பற்றியும் ஒன்றும் தகவல் இல்லை. பொலீஸார் கூறினர் என்று தினமலர் பொய்யான செய்தியை வெளியிட்டிருந்தால், அது இப்பொழுதைய நிலையில் இன்னொரு பெரிய பிரச்சினையாக இருக்கும்.

[11] முஸ்லிம் இணைதளங்கள் இதை சாடியுள்ளன. ஆனால், அதை மறுக்கவோ, அல்லது கூடா தொடர்புகளைப் பற்றி கண்டிக்கவோ, வருத்தப்படவோ இல்லை.

ஆம்பூர் கலவரம் – முஸ்லிம்கள் இந்துபெண்களை குறிவைப்பது ஏன் – அப்பிரச்சினை இல்லாதிருந்தால், இவ்வளவு நடந்திருக்குமா? (4)

ஓகஸ்ட் 7, 2015

ஆம்பூர் கலவரம்முஸ்லிம்கள் இந்துபெண்களை குறிவைப்பது ஏன்அப்பிரச்சினை இல்லாதிருந்தால், இவ்வளவு நடந்திருக்குமா? (4)

ஆம்பூர் பவித்ரா.- பழனி

ஆம்பூர் பவித்ரா.- பழனி – தம்பதியராக இருந்தவர்களை பிரித்தது எது?

இந்திய கூட்டுக் குடும்பங்கள், கணவன்மனைவி உறவுகள் மறக்கப்படுகின்றனவா?: இந்திய கூட்டுக் குடும்பங்கள், குடும்பங்கள், கணவன்-மனைவி உறவுகள், தாய்-குழந்தை பாச-பந்தங்கள், இவையெல்லாம் மறக்கப்படுகின்றனவா, மறுக்கப்படுகின்றனவா, மறைக்கப்படுகின்றனவா, அவ்வாறான நிலைக்கு யார் காரணம் என்று தான் இவ்விசயத்தில் கவனிக்க வேண்டியுள்ளது. இப்படி குறிப்பிட்டால், பழமைவாதம் என்று கூட முத்திரைக் குத்துவார்கள். பெண்களை அடிமைப்படுத்தும் வழி என்றும் விளக்கம் கொடுப்பார்கள். ஊடகங்கள், டிவி-சீரியல்கள் கூட இத்தகைய முறைகளை கிண்டலடிக்கின்றன, தாக்குகின்றன, ஏன் கேவலப்படுத்தவும் செய்கின்றன. கணவன்-மனைவி உறவுகள் தேவையில்லை, திருமண பந்தங்கள் தேவையில்லை, தாலி தேவையில்லை, விருப்பம் இருந்தால், எந்த பெண்ணும், எந்த ஆணுடனும் சேர்ந்து வாழலாம்[1], தேவையில்லை என்றால் பிரிந்து விடலாம், வேறு ஒருவரை நாடி போகலாம், என்றெல்லாம் பேசி, வாழ்க்கை நடத்தவும் ஆரம்பித்து விட்டார்கள். ஆனால், அத்தகைய கூடி வாழ்ந்த காலங்களில் குழந்தைகள் பிறந்தால், அவற்றை என்ன செய்வார்கள், யார் அவர்களைப் பார்த்துக் கொள்வார்கள் என்பது பற்றி அவர்கள் விளக்குவது கிடையாது. இல்லை, அப்பிரச்சினையே வரக்கூடாது என்று குழந்தைகளைப் பெற்றெடுத்துக் கொள்ளாமல் இருந்து விடுவார்களா? இதைப் போன்ற கேள்விகளுக்கு விடை இல்லை.

லிவ் இன் வாழ்க்கை

லிவ் இன் வாழ்க்கை – சேர்ந்து வாழும் வாழ்க்கை என்ற மேனாட்டு “விபச்சாரத்தை” ஆதரிக்கும் சில இந்திய அறிவுஜீவிகள்

பெருகி வரும் லிவ்இன் உறவுமுறை[2]: இக்கட்டுரை மாலைமலரிலேயே வந்துள்ளதால், இங்கு கொடுக்கப் படுகிறது. “இப்போது திருமணம் செய்யப் போகும் தம்பதியரோ அல்லது காதலித்துக் கொண்டிருக்கும் ஆண்பெண் இருவருமோ திருமணத்திற்கு முன்னரே சேர்ந்து வாழும் வகையிலான உறவை ஏற்படுத்தியுள்ளலிவ்இன்முறை திருமண பந்தத்தை புதியதொரு நிலைப்பாட்டிற்கு கொண்டு சென்றுள்ளது. மேற்கத்திய உலகில் பரவலாக இருந்து வந்த இந்த உறவு லிவ்இன் முறை, இன்று பல்வேறு கலாச்சாரங்களையும் சேர்ந்த திருமண உறவுகளிலும் ஊடுருவியுள்ளது. லிவ்இன் உறவு என்பது அடிப்படையாகவே ஒரு சட்ட ரீதியில் அங்கீகரிக்கப்படாத திருமணமாகவும் மற்றும் இருவர் ஒன்று சேர்ந்து வாழ்வது என்றும் கருதப்படுகிறது. லிவ்இன்உறவு இன்னும் பல நாடுகளில் அங்கீகரிக்கப்படாத உறவாகவே விளங்குகிறது. இதற்கான சட்டங்களும், விதிமுறைகளும் இன்னும் உருவாக்கப்படவில்லை. இவ்வாறு இரண்டு பேர் உறவில் திருமணமின்றி வாழ்வது கிழக்கத்திய கலாசாரங்களின் படி இன்னும் தடை செய்யபட்டதாகவே இருக்கின்றது. எப்படியாயினும் மேற்கத்திய கலாசாரத்தில் இதை ஏற்றுக் கொண்டு இளைஞர்களில் பெரும்பாலானோர் பின்பற்றும் செயலாக இந்த உறவு முறை உள்ளது. இதன் வசதிகள் மற்றும் பிரச்சனையின்மை காரணமாக பெரும்பாலான இளைஞர்கள் இந்த லிவ்இன் வாழ்க்கை முறையை தேர்ந்தெடுத்து வாழ்ந்து வருகின்றனர். திருமணம் அதிகமான நேரமும், பொருளாதாரமும் தேவைப்படும் மிகுந்த விலையுயர்ந்த உறவாகும். திருமணம் தோல்வியில் முடிந்தால் அதற்கு விவாகரத்து செய்வதற்கும் அதிக செலவு தான். அப்படி இருக்கையில்லிவ்இன்உறவு திருமணத்திற்குப் பின் நாம் எவ்வாறு வாழப் போகிறோம் என்பதை ஒத்திகை பார்ப்பதை போன்ற அனுபவமாக இருக்கும். அது மட்டுமல்லாமல் இந்த உறவு நமக்கு உகந்ததாய் இருக்குமா. இல்லையா என்பதை புரிந்து கொள்ளவும் தீர்மானிக்கவும் முடியும். விருப்பமிருந்தால் திருமணம் அல்லது எந்த சலனமுமின்றி பிரிந்து விடலாம் என்பதே இவ்வுறவின் சாராம்சமாகும். ஆனால் இந்த உறவைப் பற்றிய பார்வைகளும், எண்ணங்களும் ஒவ்வொருவருக்கும் வேறுபடுகின்றன. சுதந்திரமும் வளைந்து கொடுக்கும் தன்மையும் உடைய இந்த உறவு முறை தான் இளைஞர்களை வெகுவாக கவர்கின்றது. இந்த உறவில் வாழும் தம்பதிகள் சிக்கல்களில் பிடிபடாமல் திருமண சட்ட திட்டங்களில் உட்படாமல் வாழ்வதை விரும்புகின்றனர்”.

கற்பு, குஷ்பு, இந்தியா, குடும்பம்

கற்பு, குஷ்பு, இந்தியா, குடும்பம் – கற்ப்பைப் பற்றி விளக்கம் கொடுத்த சினிமா நடிகை.

லிவ்இன் நிஜமா, கானல் நீரா?: “லிவ்இன் உறவில் வாழ்பவர்கள் பிள்ளைகளை பெறுவதைப் பற்றியோ, புதிய உறவினர்களை கவனிக்கும் முறைக்காவோ அல்லது அனைத்தையும் பகிர்ந்து கொள்வது என எந்தவிதமான முன்னேற்பாடுகளும் செய்யத் தேவையில்லாததால், தொந்தரவுகள் இல்லாத உறவு முறையாக உள்ளது. இப்படித் தான் நாம் வாழ வேண்டும் என்ற கட்டாயமும் இதில் கிடையாது. இருவரது பொறுப்பையும் சரி சமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயமும் கூட இல்லை. அனைவரும் ஒரே நபருடன் நீண்ட காலம் வாழ வேண்டும் என்று எண்ண மாட்டார்கள். ஒரு நபருடன் சிறிது காலம் வாழ்ந்த பின் மிகவும் சோர்வுற்று வேறு நபருடன் வாழ வேண்டும் என்று எண்ணுகின்றனர். இப்படிப்பட்டவர்களுக்குலிவ்இன்முறையே மிக சிறந்த வழியாகும். திருமணத்துடன் ஒப்பிடும் போதுலிவ்இன்உறவை முறிப்பது மிகுந்த சுலபமான மற்றும் தொல்லை இல்லாத அனுபவமாக இருக்கும். பிரிவதற்கு முன் எந்த ஒரு சட்ட ரீத்யான செயல்களையும் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. உங்களது உணர்வுகளை மட்டும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளுதல் அவசியம். கடைசியாக மற்றும் மிகவும் முக்கியமான விபரம் என்னவென்றால்லிவ்இன்உறவில் விவாகரத்து தேவையில்லை. சில காலம் ஒன்றாக வாழ்ந்த பின்னும் இருவருக்குள்ளும் ஒத்துப் போகாவிடில் அவர்கள் பிரிந்து போவதற்கு முடிவு செய்து விட்டு, எந்த ஒரு சலனமுமின்றி பிரிந்து செல்லலாம். இதற்காக விவாகரத்து போன்ற விஷயங்களை நாடிச் செல்லத் தேவையில்லை[3].

Chastity-belt-wallpaper

Chastity-belt-wallpaper – கற்ப்பை எப்படித்தான் காப்பாற்றுவதோ?

ஆணை கற்பழிப்பாளியாக ஆக்குவது யார்?: மூன்று வயது குழந்தை கற்பழிக்கப்படுகிறது, இந்தியாவில் தினமும் இத்தனை பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள் என்றெல்லாம், பட்டியிலிட்டு, புள்ளி விவரங்களுடன் விவரங்களைத் தருகிறார்கள். ஆனால், பெண்கள் முறையாக ஆடை அணியவேண்டும், பள்ளி-கல்லூரிகளில் மாணவர்களுடன் பழகும் போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று யாராவது பேசினால், அவர்கள் மீது பெண்ணிய வீராங்கனைகள் பாய்கிறார்கள். மூன்று வயது குழந்தை கற்பழிக்க ஒரு ஆணுக்கு வக்கிரம் ஏன் வருகிறது என்று பொறுமையுடன் ஏன் ஆராயமல் இருக்கிறார்கள்? பந்த-பாசம், ஈவு-இரக்கம் முதலிய குணங்கள் இருந்தால், அவர்கள் அவ்வாறு செய்வார்களா? தாய்-சகோதரி முதலியவர்களோடு தானே, அம்மனிதனும் வாழ்கிறான், பிறகு, இன்னொரு பெண்ணை எப்படி தன்னுடைய பலிக்கடாவாகக் கருத முடியும், அவ்வாறே நடத்த முடியும்? அவ்வாறு ஒரு ஆண் உருவாகிறான் என்றால், அவனை உருவாக்குவது யார்? அவனுடைய தாயா, சகோதரியா, மனைவியா, மகளா, யார்?

Joint family - Illustration

Joint family – Illustration இத்தகைய அழகான கூட்டுக் குடும்பங்களைப் பிரிப்பது ஏன்?

பெண்கள் ஜாலியாக, சுதந்திரமாக வாழ வேண்டும் என்றால் என்ன?: நன்றாக சம்பாதிக்க வேண்டும், வாழ்க்கையினை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்தைப் பெண் பெறும் போது, அவள் மற்றவற்றைக் கொடுக்கத் தயாராகிறாள். புகழும் வேண்டும் எனும்போது, இன்னும் கொடுக்க தயாராகி விடுகிறாள். மேலும், இன்று குறுக்குவழி என்று ஏதாவது இருந்தால் அல்லது பணம், இன்பம், புகழ் முதலியவற்றை பெறுவதற்கு அத்தகைய முறைகள், வழிகள் இருந்தால், அவற்றைப் பின்பற்றவவும் தயங்காமல், தயாராக இருக்கும் பெண்களையும் பார்க்க முடிகிறது. இங்கு கற்பு என்று பேசினால், 100% கற்புடன் எந்த பெண்ணும் இருக்க முடியாது, இல்லை என்ற வாதங்களை வைக்கப்படுகிறது[4]. இந்தியாவில், திருமணத்திற்கு முன்பாகவே, பல பெண்கள் உடலுறவு வைத்துக் கொள்கிறார்கள். இதனை ஆய்வுகள் எடுத்துக் காட்டுகின்றன என்றும் எழுத ஆரம்பித்து விடுகிறார்கள்.  வாங்கும்-விற்கும் பொருட்களுக்கு தரநிர்ணயம், கட்டுப்பாடு, போன்ற முறைகளை வைத்துக் கொண்டிருக்கும் போது, பெண்களுக்கு ஏன் வைக்கக் கூடாது என்றால், ஆஹா, இது இந்தியாவில் தாலிபான்கள் வந்து விட்டார்கள் என்றும் விளக்கம் கொடுப்பார்கள்.

ஆம்பூர் பவித்ரா, ரிஷிதா, பழனி

ஆம்பூர் பவித்ரா, ரிஷிதா, பழனி – இக்குடும்பத்தை சீரழித்தது யார்? தாய்-குழந்தை விரோதத்தை உருவாக்கியது யார்?

பவித்ராவை வளர்த்து, பெரியாக்கியது அவளது பாட்டிதான். இப்பொழுது, அவளது மகளையும் வளர்ப்பது பாட்டிதான். இது கூட்டுக் குடும்பம் சிதறினாலும், இல்லையென்றாலும், உறவுகள் மறப்பதில்லை, மறுப்பதில்லை. அங்குதான், இந்திய பாரம்பரியம் வாழ்கிறது எனலாம். அப்பாட்டி, இதெல்லாம் என்னுடைய வேலையில்லை, நான் ஒன்றும் ஆயா இல்லை, இவ்வேளையை நான் பார்க்க முடியாது, என்றெல்லாம் பேச ஆரம்பித்தால், அப்பட்டியை யாராவது குறை கூற முடியுமா? பவித்ராவைப் பொறுத்த வரைக்கும், நாகரிகம், அந்நிய-மேனாட்டு தாக்கம், ஜாலியாக வாழ வேண்டும் என்ற போக்கு முதலியவை, திசை மாற வைத்து, சீரழித்துள்ளன. தன் மகளிடம் மிக்க பாசமும், அன்பையும் கொண்டுள்ள பழனியைப் பொறுத்த வரைக்கும், இன்றைக்கும், பவித்ராவை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பது போலிருக்கிறது. ஒருவேளை பழனியும் மற்ற பெண்களுடன் திரிய ஆரம்பித்திருந்தால், என்னவாகியிருக்கும்? பவித்ராவுக்கு, அதைச் சொல்லிக் காட்டி, வாதம் புரிய நன்றாக இருந்திருக்கும். நீதிமன்றத்தில், நீதிபதி அந்த அளவிற்கு காட்டமாக, அவளிடம் பேசியிருக்க முடியாது. ஒருவேளை, பழனியே மனு போட்டிருக்க தேவையில்லாமல் போயிருக்கும்.

© வேதபிரகாஷ்

07-08-2015

[1] http://cinema.dinamalar.com/tamil-news/30418/cinema/Kollywood/What-wrong-with-living-together-says-Nithya-Menon.htm

[2]  மாலைமலர், பெருகி வரும் லிவ்இன் உறவுமுறை, பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, நவம்பர் 30, 11:04 AM ISTஇ

[3] http://www.maalaimalar.com/2013/11/30110410/Mounting-Live-In-relationship.html

[4] குஷ்பு, “சென்னையிலுள்ள பெண்கள் செக்ஸ் பற்றிய மனத்தடைகளைக் கடந்து வருகிறார்கள். பப்களிலும் டிஸ்கோதேக்களிலும் ஏராளமான பெண்களைப் பார்க்க முடிகிறது. ஒரு பெண் தனது பாய்பிரெண்ட் பற்றி உறுதியாக இருக்கும் போது அவள் தனது பெற்றோரிடம் சொல்லிக் கொண்டே அவனுடன் வெளியே போகலாம். பெண்கள் திருமணமாகும் போது கன்னித்தன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்பது போன்ற எண்ணங்களிலிருந்து நமது சமூகம் விடுதலையாக வேண்டும். கல்வி பெற்ற எந்த ஆண்மகனும் தான் திருமணம் செய்யப் போகிறவள் கன்னித்தன்மையோடு இருக்க வேண்டும் என்று எதிர்பாக்க மாட்டான். ஆனால் திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்ளும் போது கர்ப்பமாகாமலும் பால்வினை நோய்கள் வராமலும் பெண் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும்” .

ஆம்பூர் கலவரம் – முஸ்லிம்கள் இந்துபெண்களை குறிவைப்பது ஏன் – அப்பிரச்சினை இல்லாதிருந்தால், இவ்வளவு நடந்திருக்குமா? (3)

ஓகஸ்ட் 7, 2015

ஆம்பூர் கலவரம்முஸ்லிம்கள் இந்துபெண்களை குறிவைப்பது ஏன்அப்பிரச்சினை இல்லாதிருந்தால், இவ்வளவு நடந்திருக்குமா? (3)

Pavitra-Pazhani Ambur

Pavitra-Pazhani Ambur

பவித்ராவின் மறுபக்கம் (நக்கீரன்)[1]: மாயமான பவித்ராவை மையங்கொண்டே ஷகீல் அகமது மரணமும், ஆம்பூர் கலவரமும் வெடித்திருக்கிறது. தற்போது பவித்ரா கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறார். பவித்ரா யார்? இவர் மாயமானது ஏன்? கண்டு பிடிக்கப்பட்டது எப்படி? என்று கேள்விகளை எழுப்பி பவித்ரா புராணம் பாடியியுக்கிறது நக்கீரன் பத்திரிக்கை. திருவண்ணாமலை மாவட்ட கண்ணமங்கலத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன்-செல்வி ஆகியோரின் மகள்தான் பவித்ரா. சிறுமியாக இருக்கும் போதே பவித்ராவை, குச்சிப்பாளையத்தில் இருக்கும் அவளது பாட்டி ராதாம்மாளிடம் வளர்க்கக் கொடுத்துவிட்டார்கள். அவர்தான் வளர்த்து 10 ஆம் வகுப்புவரை படிக்கவைத்தார். 10ஆம் வகுப்பில் ஃபெயிலான பவித்ராவுக்கு அதற்கு மேல் படிக்க ஆர்வம் இல்லை. ஒருவருடம் வீட்டிலேயே இருந்த அவரை, அவரது மாமா மகனான பழனிக்கு 7 வருடங்களுக்கு முன் கட்டிவைத்தனர்[2]. அப்போது பவித்ராவிற்கு வயது 17. அவரை விட பழனி 10 வயது மூத்தவர். திருமணமான 3 ஆம் வருடம் பவித்ராவிற்கு  ரிஷிதா என்ற பெண் குழந்தை பிறந்தது. இதன்பின் வீட்டில் சும்மா இருக்கப் பிடிக்கவில்லை என ஊர்ப்பெண்கள் சிலர் வேலைபார்க்கும்ஷூ’ கம்பெனிக்கு வேலைக்கு போனார் பவித்ரா.

பவித்ரா, ஷமீல் அஹ்மது

பவித்ரா, ஷமீல் அஹ்மது

பவித்ரா திசை மாறியதைப் பற்றி மாலைமலரின் விவரங்கள்: “சுறுசுறுப்பான கேரக்டர் உடைய பவித்ராவுக்கு குழந்தையை கவனித்துக் கொண்டு வீட்டில் இருக்க பிடிக்கவில்லை. எனவே வேலைக்கு செல்லப்போகிறேன் என்று அடம் பிடித்தார். இறுதியில் ஆம்பூர் பகுதியில் உள்ள , ’டெல்டா ஷூ கம்பெனிக்கு வேலைக்கு போனார் பவித்ரா. டெல்டா ஷூ பிரைவேட் லிமிடெட், பரிதா குழுமத்தைச் செர்ர்ந்த கம்பெனி[3]. அங்கிருந்து அவரது பாதை மாறும் என்று பழனியும் நினைக்கவில்லை. அவரது பெற்றோரும் நினைக்கவில்லை. உடன் பணிபுரிந்த பெண்களும், பவித்ராவின் தோழிகளும் அவரது மனம் தடம் மாற வழிவகுத்தனர். “என்னடி உன் புருசன் இப்படி கன்னங்கரேல்ன்னு இருக்கார். உன்னைவிட இத்தன வயசு மூத்தவரோட எப்படி குடும்பம் நடத்துறே” என்று கேட்டுக் கேட்டே உசுப்பேற்றினர்”, மாலை மலர் இவ்வாறு கூறுகிறது.

டெல்டா ஷூ, ஆம்பூர்- ஷமில் அஹ்மது, பவித்ரா

டெல்டா ஷூ, ஆம்பூர்- ஷமில் அஹ்மது, பவித்ரா

டெல்டா ஷூ கம்பெனியில், சமீல் அகமதுவிடம் தொடர்பு வைத்துக் கொண்டது: ஷூ கம்பெனிகள் சில பெண்கள் பல காரணங்களுக்காக பலருடன் தொடர்பு வைத்துக் கொள்ளும் பழக்கம் இருக்கிறது. அத்தகையோர் மற்றவர்களையும் தம்மை போல ஆக்க முயல்வது வழக்கம். அவ்விதத்தில் தான், பவித்ராவைப் பார்த்து இவ்வாறு கணைகளைத் தொடுத்தனர். அந்த கேள்விகள் பவித்ராவின் மனதில் அதுவரை தோன்றாமல் இருந்த கணவரின் வயதும் நிறமும் திடீரென தவறாக தெரிய தொடங்கியது. இதுவே கணவரிடம் இருந்து பவித்ராவை கொஞ்சம் கொஞ்சமாக பிரித்தது.  தனது அழகை உயர்வாக நினைத்த அவர் அங்கு பணிபுரிந்த ஷமில் அகமதுவுடன் பழகினார். இது அவரை தவறான வழிக்கு கொண்டு சென்றது என்று ஊடகங்கள் குறிப்பிட்டாலும், ஒரு மணமான பெண்ணுடன் பழக எப்படி மணமான ஷமில் அகமது ஒப்புக்கொண்டார், இயைந்து நடந்தார் என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது. ஓன்று இருவரும் திருமணம் ஆனவர்கள் மற்றும் வெவ்வேறு மதத்தினை சேர்ந்தவர்கள். மேலும், ஏற்கெனவே, லவ்-ஜிஹாத் போன்ற விவாதங்கள் நடந்து வருகின்றன என்பது தெரிந்திருக்கும். அதனையும் மீறி, இடங்கொடுத்திருக்கிறார் என்றால், ஷமீல் அகமதுக்கு ஏதோ உள்-நோக்கம் இருந்துள்ளது என்றாகிறது.

Pazhani with his daughter Rishitha- Ambur issue

Pazhani with his daughter Rishitha- Ambur issue

ஆம்பூரிலிருந்து ஈரோடுக்குச் சென்ற ஷமீல்பவித்ரா: மாலை மலர் தொடர்கிறது, “மலர் கணவரையும், குழந்தையையும் முற்றிலும் மறக்க தொடங்கினார். ஷூ கம்பெனியில் பவித்ராவின் தவறான நடவடிக்கையை அறிந்த நிர்வாகம் அவரை வேலையை விட்டு தூக்கியது. ஷமில் அகமதுவையும் நீக்கினர். அதன்பின்னர் ஷமில் அகமது ஈரோட்டுக்கு வேலைக்கு சென்றார்.  அதன்பின் பவித்ராவை ஷமில்அகமது ஈரோட்டில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்க வைத்துள்ளார். பின்னர் பயத்தினால் பவித்ராவிடம் ரூ.300– கையில் கொடுத்து அவரை குச்சிபாளையத்திற்கு செல்லும்படி அனுப்பி வைத்து உள்ளார்[4]. அவரது நினைவாகவே பவித்ரா இருந்தார். அவருடன் செல்போனில் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசிய படி இருந்தார். இதை அறிந்த அவரது கணவர் பழனி ஆத்திரம் அடைந்தார். ஒருநாள் செல்போனை பிடுங்கி எறிந்து உடைத்தார். இதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட வாக்குவாதத்தால் கணவருடனான விரிசல் அதிகமானது.  தனது மனவிருப்பப்படி நடந்து கொள்வதற்காக கணவரையும், குழந்தையையும் விட்டு பிரிந்து போக பவித்ரா முடிவு செய்தார்[5].  ஒரு வருடம் ஈரோட்டில் தனிகுடித்தனம் நடத்தியிருக்கிறார்கள் என்றால், எல்லோரிடத்திலும் அதிகமாகவே பொய் சொல்லியிருந்திருக்க வேண்டும்.

ஆம்பூர் பவித்ரா.- பழனி

ஆம்பூர் பவித்ரா.- பழனி

மனைவி பவித்ராவை தேடிய புருஷன் பழனி: மாலை மலர் தொடர்கிறது, “கடந்த 17.5.2015 அன்று வீட்டைவிட்டு சென்றார். பல இடங்களில் பவித்ராவை தேடினர். பழனியும் பவித்ரா பணிபுரிந்த இடங்களுக்கு சென்று விசாரித்தார். அப்போது ஷமில் அகமது, சரவணன், புகழேந்தி ஆகிய 3 பேருடன் பவித்ராவுக்கு பழக்கம் இருந்தது தெரிய வந்தது. அவர்களை பற்றி விசாரித்த பழனி அவர்களுடன் தனது மனைவி சென்றிருப்பாரா என்று தேடி அலைந்தார். கணவரையும், குழந்தையையும் பிரிந்த பவித்ராவோ நேராக ஈரோடு சென்றார். அங்கு ஷமில் அகமதுவை சந்தித்து பேசினார். தன்னுடன் இருக்க ஷமில் அகமது அனுமதிக்காததால் ரெயில் ஏறி பவித்ரா சென்னைக்கு சென்றார். அங்கு சரவணன், புகழேந்தி ஆகியோரின் உதவியை நாடினார். சினிமா வாய்ப்பு கேட்டும் அலைந்தார். ஒரு வழியாக அம்பத்தூரில் உள்ள துணிக்கடையில் ரூ.6 ஆயிரம் சம்பளத்துக்கு பவித்ரா வேலைக்கு சேர்ந்தார். அருகில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி இருந்தார்[6].  மூன்று பேருடன் பழக்கம் எனும்போது, எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை. நிச்சயமாக, இதை தீவிரமாக விசாரிக்க வேண்டியுள்ளது.

சமீல் அகமது காதலி காணவில்லை - இந்தியன் எக்ஸ்பிரஸ்.1

சமீல் அகமது காதலி காணவில்லை – இந்தியன் எக்ஸ்பிரஸ்.1

பழனி போலீஸாரிடம் புகார் கொடுத்ததும், சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கலும்: மாலை மலர் தொடர்கிறது, “மனைவியை தேடி அலைந்த பழனிக்கு ஷமில் அகமதுவின் வீடு தெரிந்திருந்ததால் அங்கு சென்றுஎன் மனைவியை எங்கேஎன்று கேட்டு தகராறு செய்துள்ளார். அது கைகலப்பாகவும் மாறியது. இருந்தபோதிலும் மனைவி பற்றி தகவல் தெரியாததால் 24.5.2015 அன்று பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் பழனி புகார் செய்தார். அதில்எனது மனைவி மாயமானதில் சரவணன், புகழேந்தி ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக அறிகிறேன். எனவே அவர்களிடம் இருந்து எனது மனைவியை மீட்டுத்தாருங்கள்என்று கூறி இருந்தார். சென்னை ஐகோர்ட்டிலும் தனது மனைவியை மீட்டுத்தருமாறு கேட்டு ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தார்”.  அழனி சென்னை ஐகோர்ட்டிலும் தனது மனைவியை மீட்டுத்தருமாறு கேட்டு ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தார் என்றதால், யாரோ அவருக்கு ஆலோசனை கொடுத்திருக்கிறார்கள்  அல்லது உதவியிருக்கிறார்கள் என்றாகிறது.

சமீல் அகமது காதலி காணவில்லை - இந்தியன் எக்ஸ்பிரஸ்.2

சமீல் அகமது காதலி காணவில்லை – இந்தியன் எக்ஸ்பிரஸ்.2

17.5.2015 அன்று ஆம்பூர் வீட்டை விட்டுச் சென்ற பவித்ரா 04-07-2015 அன்று சென்னையில் பிடிபட்டது:  மாலை மலர் தொடர்கிறது, “சந்தேகத்தின் பேரில் ஷமில் அகமதுவை பள்ளி கொண்டா போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணை முடிந்து திரும்பிய ஷமில் அகமது போலீசார் தாக்கியதாக கூறி ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். பின்னர் சிகிச்சை பலனின்றி இறந்தார். போலீசார் தாக்கிய தால்தான் ஷமில் அகமது இறந்ததாக கூறி நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. இதனால் பவித்ராவை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். செல்போன் உதவியுடன் பவித்ரா சென்னையில் இருப்பதை அறிந்த போலீசார் அங்கு சென்றனர். கடந்த ஜூலை 4-ந் தேதி இரவு பவித்ரா போலீசில் பிடிபட்டார். அவருக்கு உதவிய சரவணன், புகழேந்தி ஆகியோரும் பிடிபட்டனர்”.

Pazhani Ambur with his daughter Rishitha

Pazhani Ambur with his daughter Rishitha

தன்னை கடத்தவில்லை என்று பவித்ரா நீதிபதியிடம் கூறியதால் சரவணனும் புகழேந்தியும் தப்பினர்: மாலை மலர் தொடர்கிறது, “சென்னையில் சரவணன், புகழேந்தியிடம் சென்று பவித்ரா உதவி கேட்டது ஏன் பவித்ராவுக்கு அவர்கள் உதவியது ஏன் என்பது தெரியவில்லை. பவித்ரா மாயமானது தொடர்பாக கொடுத்த புகாரிலும், ஆட்கொணர்வு மனுவிலும்சரவணன், புகழேந்தி ஆகியோர் தனது மனைவியை கடத்தி சென்றிருக்கலாம்என்று பழனி கூறி இருந்தார். ஆனால் யாரும் தன்னை கடத்தவில்லை என்று பவித்ரா நீதிபதியிடம் கூறியதால் சரவணனும் புகழேந்தியும் தப்பினர். இருந்தபோதிலும் சரவணனையும், புகழேந்தியையும் பவித்ரா தேடி சென்று வேலை கேட்டது எப்படி நடந்தது பவித்ராவுக்கும் சரவணன், புகழேந்திக்கும் ஏற்கனவே தொடர்பு இருந்ததா என்பது புரியாத புதிராகவே உள்ளது. இதுபற்றிய உண்மை நிலை என்ன என்பது பின்னர்தான் தெரியவரும்”.  ஆம்பூரில் இவ்வளவு விவகாரங்கள் நடந்த நிலையில், எப்படி-ஏன் – எதற்காக இவ்விருவர், பவித்ராவை மறைந்து வாழ செய்ய வேண்டும்?

கணவன், மகளை ஏறேடுத்துப் பார்க்காத பத்னி பவித்ரா: மாலை மலர் தொடர்கிறது, தாய் பாசத்துக்கு ஏங்கும் மகளுக்காக காப்பகத்தில் பவித்ராவை சந்தித்து பேசவில்லை ஒரே வார்த்தையில் பதிலளித்த கணவர் பழனி சென்னையில் பிடிபட்ட பின்னர் ஐகோர்ட்டில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட பவித்ரா தனது கணவரையும், குழந்தையையும் ஏறெடுத்து பார்க்கவில்லை. நீதிபதியிடம், “எனது கணவரிடம் இருந்து எனக்கு விவாகரத்து வேண்டும்என்று அவர் கேட்ட கேள்வி நீதிபதி உள்பட கணவரையும் தூக்கி வாரிப்போட்டது. நீதிபதி எவ்வளவோ கூறியும் அதை காதில் வாங்கிக் கொள்ளாத பவித்ரா விவாகரத்து கேட்பதிலேயே குறியாக இருந்தார். இதைத் தொடர்ந்து அவரை காப்பகத்தில் தங்க வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி சென்னை காப்பகத்தில் பவித்ரா தங்க வைக்கப்பட்டார்”.  விவாகரத்து தான் குறி என்றிருக்கும் பவித்ராவின் போக்கு திடுக்கிட வைக்கிறது. கணவனைத் தவிர மூன்று பேருடன் தொடர்பு, சினிமாவில் நடிக்க முயற்சி என்றெல்லாம் பார்க்கும் போது, பவித்ராவின் மனநிலை என்ன என்பதை கவனிக்க வேண்டியுள்ளது.

அம்மா எப்போது வருவார் என்று கேட்டபடி  இருக்கும்                 மகள் ரிஷிதாவும், கண்டு கொள்ளாமல் இருக்கும் தாய் பவித்ராவும்: மாலை மலர் தொடர்கிறது, “பவித்ரா தனது மகள் ரிஷிதாவுக்காக மனம் மாறி தன்னுடன் சேர்ந்து வாழ வருவார் என்ற ஆசையில் பழனி இருக்கிறார். விசாரணைக்காக வேலூருக்கு பவித்ரா அழைத்து வரப்பட்ட போது தனது மகளுடன் பழனி அங்கு சென்றார். ஆனால் 2 பேரையும் பவித்ரா கண்டுகொள்ளவே இல்லை. அப்போது தாய் பாசத்துக்காக ஏங்கிய ரிஷிதாவை பார்த்து பலர் மனம் கலங்கினர். தற்போது ரிஷிதா குச்சிபாளையத்தில் தனது பாட்டியின் அரவணைப்பில் உள்ளார் என்றபோதிலும் அம்மா எப்போது வருவார் என்று கேட்டபடிதான் ரிஷிதா இருக்கிறார். அவருக்காக பழனியுடன் பவித்ரா சேர்வாரா பவித்ராவை பழனி சந்தித்து பேசி மனம் மாற்றுவாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக பழனியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியபோது, “பத்திரிகைக்காரங்களா…” என்று கேட்டுவிட்டு பதில் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தார். ஆனால் இணைப்பை துண்டிக்காமல் இருந்த அவரிடம், “உங்கள் மனைவி பவித்ராஎன்று ஆரம்பித்ததும், “சார் எம்பாட்டுக்கு நான் என் வேலை பார்த்துக்கிட்டு இருக்கேன் சார். என்னை விடுங்க…” என்று கூறினார். உங்கள் மகளுக்காக காப்பகத்தில் இருக்கும் உங்கள் மனைவியுடன் பேசினீர்களாஎன்று கேட்டபோது, “இல்லைஎன்று ஒரே வார்த்தையில் கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். நீதிபதி உத்தரவுபடி வருகிற 20-ந் தேதி வரை காப்பகத்தில் இருக்க வேண்டிய பவித்ரா மகளுக்காக கணவருடன் இணைவாரா”., என்று முடித்துள்ளது.

© வேதபிரகாஷ்

07-08-2015

[1] நக்கீரன், பவித்ராவின் மறுபக்கம், பதிவு செய்த நாள் : 8, ஜூலை 2015 (10:1 IST) ; மாற்றம் செய்த நாள் :8, ஜூலை 2015 (10:1 IST)

[2] http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=146393

[3] http://www.farida.co.in/group_companies.php

[4] http://www.dailythanthi.com/News/Districts/Vellore/2015/07/06012707/Pavithra-how-police-came-to-redeem.vpf

[5] http://www.maalaimalar.com/2015/07/12194252/Pavithra-track-changed-and-why.html

[6]  மாலைமலர், பவித்ரா தடம் மாறியது ஏன்? வெளிவராத புதிய தகவல், பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 12, 7:42 PM IST.