Posted tagged ‘ஆதிலாபானு’

ஆதிலாபானு கொலை – சாத்தான்குளத்துக் கொலையை தொடர்ந்துள்ளது: தமிழகத்தில் கோஷ்டி போர் நடக்கிறாதா (1)?

நவம்பர் 21, 2010

ஆதிலாபானு கொலை – சாத்தான்குளத்துக் கொலையை தொடர்ந்துள்ளது: தமிழகத்தில் கோஷ்டி போர் நடக்கிறாதா (1)?

அளந்து கொடுக்கும் இந்திய ஆங்கில நாளிதழ்கள், ஆனால் அள்ளி வீசும் மலேசிய நாளிதழ்கள்: காதலும், கொலையும் இந்த கொலையின் பின்னணியில் இருப்பதாகத் தெரிகிறது, என்று “தி இந்து” மிகவும் சுருக்கமாக செய்தி வெளியிட்டிருப்பது வேடிக்கையிலும் வேடிக்கை[1]. டெக்கான் ஹரால்ட் ஓரளவிற்கு விஷயத்தைக் கொடுத்திருக்கிறது – “மலேசிய கோஷ்டி சண்டை தமிழகக் கொலைக்குக் காரணமகியது” [Malay feud leads to murder in TN], என்று தலைப்பிட்டு கொடுத்துள்ளது[2]. மலேசிய பெர்நாமா, “கோஷ்டி போர் மூன்று மலேசிய மக்கள் கொலைக்கு காரணாமாகியது” [Gang war led to Triple murder of Malaysians] என்று தலைப்பிட்டு கொடுத்துள்ளது[3]. முக்கியமாக ஆறு ஆண்கள் மற்றும் முன்று பெண்கள் இவ்விஷயத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்கள் விசாரணையில் மேலும் விவரங்கள் தரக்கூடும்[4]. அப்படியென்றால், அந்த முன்று பெண்கள் யார் என்று தெரியவில்லை. தாவூத் இப்ராஹிம், சோட்டா ஷகீல், முதலிய கோஷ்டிகள்தாம் மும்பை, துபாய் முதலிய இடங்களில் இருந்து கொண்டு அப்படி யுத்தங்களை நடத்துகின்றனர் என்று கேள்விப்பட்டதுண்டு. அவர்கள் போதை மருந்து கடத்தல், ஆயுதங்கள் கடத்தல், தீவிரவாதம், ஜிஹாத், விபச்சாரம், சிறுமிகள்-பெண்களை அதற்காக பெருமளவில் கடத்துதல், கள்ளப்பணத்தை அச்சடித்தல், விநியோகித்தல், திருட்டு டிவிடி போடு விற்றல், நடிக-நடிகையரை மிரட்டுதல், அவர்களிடம் பணம் வாங்குதல் என பல விவகாரங்களை, பல நாடுகளில் செய்து வருகின்றனர். அத்தகைய கலாச்சாரம், தமிழகத்திற்கும் வந்து விட்டதா?

கைது செய்யப்பட்டுள்ள ஆறு ஆண்கள் மற்றும் முன்று பெண்கள் யார்? இக்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் பெயர்கள், விவரங்கள் பலவாறு வெளிவந்துள்ளன. கைது செய்யப்பட்டுள்ள ஆறு ஆண்கள் – ஜெயக்குமாரையும் சேர்த்து, இவ்வாறு இருக்கலாம்:

1.   முனியசாமி, 

2.   சேக் தாஹாசத்,

3.   தமிமுல் அன்சாரி,

4.   சானவாஸ்,

5.   நாகூர் ஹூசைன்

1.   முனியசாமி (28), 

2.   சேக்கஜத் என்ற சூடானி (19),

3.   தமிமுல் அன்சாரி (21),

4.   சாநவாஸ் (20)

5.   நாகூர் உசேன் (19)

அந்த இரண்டு விவசாயிகள் யார்? இரு விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்[5]. ஆனால், அவர்கள் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை.

செய்திகளில் பெண்கள் பெயர்கள் இரண்டு / மூன்று இடங்களில்தான் வந்துள்ளன:

1.   சுந்தரி: சம்பவ தினத்தன்று (08-10-2010) மத்தியான பொழுதில் பக்கத்து வீட்டுக்காரரான சுந்தரி என்பவருடன் சமையல் சாமான்களும் சமையல் எரிவாயு உருளையும் வாங்குவதற்கு கடைக்கு போயிருக்கிறார்கள்[6].

2.   பக்கிரியம்மாள்: சாகுலின் பாட்டி பக்கிரியம்மாள் – இந்நிலையில் தோட்டத்தில் உள்ள உடல்களை அகற்றுமாறு பக்கிரம்மாள் போனில் சாகுலிடம் சண்டையிட்டுள்ளார்[7].

3.   மூன்றாவது பெண்: யார் என்று தெரியவில்லை! – ஆதிலாபானுவின் தாயார் – ஹம்சத் நிஷா?

மலேசியாவுக்குத் தப்பி விட்டவர்கள்:

1.   சாத்தான்குளத்தைச் சேர்ந்த சாகுல்,

2.   வாணி கிராமத்தைச் சேர்ந்த ஹர்ஷத்,

3.   ராமநாதபுரத்தைச் சேர்ந்த பொன். மணிகண்டன்

மற்றொரு குற்றவாளியான வாலாந்தரவை முனியசாமி தலைமறைவாக இருப்பதாகவும் கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் தெரிவித்தார்.

ஆதிலா கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது[8]: கடந்த 11ம் தேதியன்று வாடிப்பட்டி அருகே பாலத்துக்கு கீழ் ஒரு பெண், 2 குழந்தைகளின் சடலங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த வழக்கில் இறந்து போன ஆதிலாவின் கணவர் முத்துசாமி (எ) அகமதுவின் நண்பன் ஜெயக்குமார் முதல் கட்டமாக கைது செய்யப்பட்டான். ஜெயக்குமார் அளித்த தகவலின் அடிப்படையில் கொலையில் தொடர்புடைய –

6.   முனியசாமி,

7.   சேக் தாஹாசத்,

8.   தமிமுல் அன்சாரி,

9.   சானவாஸ்,

10.  நாகூர் ஹூசைன்

ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மலேசியாவுக்கு தப்பி ஓடிய சாகுல், அர்சத், மணிவண்ணன் ஆகியோரை கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலும் வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் லெட்சுமணன் தலைமையிலும் இரு தனிப் படை போலீஸார் குற்றவாளிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. இதில்  ஆதிலா பானுவின் குடும்ப நண்பரான ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரை வாடிப்பட்டி போலீஸார் செவ்வாய்க்கிழமை 16-11-2010 அன்று வாலாந்திரா பஸ் ஸ்டேன்டில் கைது செய்துள்ளனர்[9].

ஜெயக்குமாரின் வாக்குமூலத்தில் அறிவாதாவது: ஆதிலா பானுவின் கணவர் முத்துசாமி / அகமதுக்கும், இவனுக்கும் பத்தாண்டுகளுக்கு மேலாக பழக்கம் இருந்தது. அகமது வீட்டிற்கு அடிக்கடி சென்று குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்வான். கடந்த 20 நாட்களுக்கு முன்பு கியாஸ் சிலிண்டர் தீர்ந்து விட்டதாக ஆதிலாபானு கூறினார். உடனே தீபாவளி சமயமாக உள்ளதால் தட்டுப்பாடு உள்ளதால், குடோனில் கேட்டுப் பெற்றுத்தருவதாக சொன்னான். அந்நேரத்தில் அங்கு வந்த அத்தை மகன் முனியசாமி, அவள் பணக்காரப் பெண்ணாக உள்ளதால் கடத்திச் சென்று வைத்துக் கொண்டு தாயாரிடம் பணம் பறித்துக் கொண்டு பிறகு விட்டுவிடலாம் என்று தூபம் போட்டான். முதலில் ஜெயக்குமார் ஒப்புக்கொள்ளாததால், மூளைசலவை செய்வது போல பண ஆசைக் காட்டி மயக்கியதும், பிறகு ஒப்புக் கொண்டான். பிறகு மொட்டார் சைக்கிளில் ஆதிலா வீட்டிற்குச் சென்று, சிலின்டர் வாங்க கூப்பிட்டேன். அதன்படியே ஆதிலா தன்னுடைய குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு புறப்பட்டார். அவர்களை மொட்டார் கைக்கிளில் உட்கார வைத்துக் கொண்டு ஓட்டிச்சென்றேன்[10]. குடோனுக்கு அருகில் சென்றபோது ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் திடீரென ஒரு கறுப்புக்கார் வந்தது. ஜெயக்குமார் மோட்டார் சைக்கிளை நிறுத்தினான்.  காருக்குள் இருந்த சாத்தான்குளத்தை சேர்ந்த ஷாகுல் (29), மணிவண்ணன் (29), முகமது சர்ஜித் (30), முனியசாமி (30) ஆகியோர் இறங்கி ஓடிவந்து, ஜெயக்குமாரைத் தள்ளிவிட்டு, அவர்களைக் கடத்திக் ககண்டு சென்றுவிட்டனர். அதற்குப் பிறகு என்ன நடந்தது என்று அவனுக்குத் தெரியாது. பிணம் கிடைத்தப் பிறகுதான், அவள் கொலை செய்யப்பட்டதே தெரியும்[11] என்கிறான் ஜெயக்குமார்.

வேதபிரகாஷ்

© 21-11-2010


[1] A combination of factors, including enmity between Shahul and Adhila Banu while they were in Malaysia, a love affair and a murder, is said to be the motive behind the murders.

The Hindu, Five persons arrested in murder of mother and her two children, Sunday, Nov 21, 2010, http://www.hindu.com/2010/11/21/stories/2010112158400100.htm

[2] Deccan Chronicle, Malay feud leads to murder in TN, November 21st, 2010,

http://www.deccanchronicle.com/chennai/malay-feud-leads-murder-tn-072

[3] Bernama, Gang war led to Triple murder of Malaysians, says police, Nov.20, 2010, http://www.bernama.com/bernama/v5/newsgeneral.php?id=544350

[4] This follows the arrest of six men and three women whom the police believe cpuld shed light on the triple murder.

http://www.bernama.com/bernama/v5/newsgeneral.php?id=544350

[5] Police in India have detained two farmers in connection with the death of a Malaysian woman and her two children who had earlier gone missing in South India last Monday (08-11-2010). http://thestar.com.my/news/story.asp?file=/2010/11/14/nation/7427381&sec=nation

[8] தினமலர், ஆதிலா கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது, நவம்பர் 20, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=130240

[9] தினமணி, தாய், 2 குழந்தைகள் கொலை செய்யப்பட்ட வழக்கு: குற்றவாளிகளில் 3 பேர் மலேசியா தப்பி ஓட்டம்,, First Published : 18 Nov 2010 12:42:13 PM IST, http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Edition-Madurai&artid=333673&SectionID=137…….8D

[10] நான்கு பேர்கள் எப்படி மோட்டார் சைக்கிளில் சென்றார்கள் என்று தெரியவில்லை. மேலும், ஒரு மணமான முஸ்லீம் பெண் அப்படி செல்வாளா என்பது சந்தேகமே. எப்படியாகிலும், அவ்வாறு சென்றிருந்தால், பலரும் பார்த்திருப்பார்கள். அதைத் தெரிந்துதான் அவடர்கள் சென்றார்களா?

[11] இது பொய் என்பது, அவன் சாகுல் அமீதுடன் பேசியது – போனில் மற்றும் நேரில் – அவனே இவனுடன் முதலிய விஷயங்களில் தெரிகிறது.

அரை நிர்வாண கோலத்தில் ஆதிலாபானு மற்றும் குழந்தைகளின் பிணங்கள் கிடந்தன: கள்ளக்காதலர்கள் மோதல் காரணமா?

நவம்பர் 12, 2010

அரை நிர்வாண கோலத்தில் ஆதிலாபானு மற்றும் குழந்தைகளின் பிணங்கள் கிடந்தன: கள்ளக்காதலர்கள் மோதல் காரணமா?

இரண்டு குழந்தைகளுடன் தாய் கொலை: கள்ளக்காதலர்கள் மோதல் காரணமா? மதுரை மாவட்டம் வாடிபட்டி அருகே ராமநாதபுரத்தை சேர்ந்த பெண் இரண்டு குழந்தைகளுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். கள்ளக்காதலர்களின் மோதல் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர்[1]. ராமநாதபுரம் மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் ஆதிலாபானு (24). இவர் குப்பான்வலசையைச் சேர்ந்த முத்து மகன் முத்துச்சாமியை காதலித்து திருமணம் செய்தார். இதற்கு சாத்தான்குளத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருவரும் குப்பான்வலசையில் குடியேறினர். முத்துச்சாமி மதம் மாறி, அகமது என, பெயரை மாற்றிக்கொண்டார். இவர்களுக்கு முகமது அஸ்லம் (7) அஜிராபானு (5) என்ற குழந்தைகள் உள்ளனர்.

08-11-2010 அன்று மாயமான ஆதிலாபானு, குழந்தைகள்; வேலைக்காக முத்துச்சாமி அகமது மலேசியா சென்ற நிலையில், ஆதிலாபானுவுக்கு சிலருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கணவன், மனைவி இடையே மனகசப்பு ஏற்பட்டது. மூன்று மாதங்களுக்கு முன் (ஆகஸ்ட் 2010), தாய் ஹம்சத்நிஷா மற்றும் குழந்தைகளுடன் ராமநாதபுரம் பாரதிநகரில் ஆதிலாபானு குடியேறினார். கடந்த நவ., 8ம் தேதி ஆதிலாபானு, குழந்தைகள் மாயமாகினர். ஹம்சத்நிஷா கேணிக்கரை போலீசில் புகார் செய்தார். விசாரணையில், தனது மகளுடன் தொடர்புள்ள சிலர் மீது சந்தேகிப்பதாக தெரிவித்திருந்தார். அதாவது தாய்க்கு தனது மகளின் கள்ள உறவுகள் தெரிந்தே இருக்கிறது.

11-11-2010 அரை நிர்வாண கோலத்தில் ஆதிலாபானு மற்றும் குழந்தைகள் பிணங்கள் கிடந்தன:  இந்நிலையில், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி நான்குவழிச்சாலை மதுரை நோக்கிச் செல்லும் வழியில் கட்டக்குளம் பிரிவு தரைப்பாலத்தின் கீழ், நேற்று (11-11-2010) அரை நிர்வாண கோலத்தில் ஆதிலாபானு பிணமாக கிடந்தார். அருகே மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் பின்புறம் விராலிபட்டி பிரிவு பாலத்தின் கீழ், வெள்ளை வேட்டியில் சுருட்டி கட்டப்பட்ட நிலையில் குழந்தைகள் முகமது அஸ்லம், அஜிராபானுவின் உடல்கள் அழுகிய நிலையில் கிடந்தன. கேணிக்கரை இன்ஸ்பெக்டர் கணேசன், பானுவின் தாயை அழைத்துக்கொண்டு வாடிப்பட்டி சென்றார்.

நான்கிற்கும் மேற்பட்டோர் பானுவுடன் தொடர்பு வைத்திருந்ததனராம்: காதலுக்காக மதம் மாறி வந்த முத்துசாமியை இவ்வாறு மோசம் செய்யலாமா? கொலை சம்பவத்தில், கள்ளக்காதலர்கள் இடையே ஏற்பட்ட மோதலே காரணமாக இருக்கும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். நான்கிற்கும் மேற்பட்டோர் பானுவுடன் தொடர்பு வைத்திருப்பதாக தெரிவதால், இதில் யார் குற்றவாளி என்பதை கண்டறிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. முன்பு ஒரு இந்து தேவநாதன் செய்தலால், தான் மனம் மாறி முஸ்லீமாக மாறினேன் என்ற்யு பெருமையாக சொல்லிக் கொண்டது நினைவிற்கு வருகிறது. இப்பொழுது, அந்த மாதிரி மதம் மாறிய இந்துக்கள் என்ன சொல்வர்? இவளும்தான், ஒரு பெண்-தேவநாதன் போலத்தானே நான்கு பேரிடத்தில் சோரம் போயுள்ளாள்.

கதறி அழுத அகமது என்ற முத்துசாமி – காதல் கணவர்: மனைவி, குழந்தைகள் இறந்த தகவலை மலேசியாவில் உள்ள முத்துச்சாமிக்கு அவரது நண்பர்கள் தெரிவித்தனர். இதைக்கேட்ட அவர், போனில் கதறி அழுதுள்ளார். “இறந்தவர்களை பார்க்கும் இடத்தில் கூட நான் இல்லையே,” என, கதறியுள்ளார். முஸ்லீமாக மாறியும், இவரது காதல் பாவமாகத்தான் போய் விட்டது. இது என்ன காதலோ, மத மாற்றாமோ? இப்பொழுது அழுவதனால் காதல் புதுப்பிக்கப்படுமா அல்லது காதலி உயிர் பெற்றெழுவாளா, அகமது என்பாளா, முத்துசாமி என்பாளா? அல்லாவிற்கே வெளிச்சம்.

மைனர் காதல் மங்கியது, வெளிநாடு சென்ற சமயத்தில், பலருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது: தனது 16வது வயதில் வேறுபிரிவை சேர்ந்த முத்துச்சாமியை ஆதிலா பானு காதலித்ததற்கு ஊரார் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது மறைந்த மண்டபம் ஒன்றிய அ.தி.மு.க., செயலர் சீனிக்கட்டியின் கார் டிரைவராக முத்துச்சாமி பணியாற்றினார். சீனிகட்டியின் தாய் பசீர் அம்மாள் இவர்களது திருமணத்தை நடத்திவைத்தார். மைனர் வயதில் காதல் வசப்பட்ட ஆதிலா பானுவுக்கு, நாட்கள் கடந்த போது காதல் கசந்தது. கணவர் வேலைக்காக வெளிநாடு சென்ற சமயத்தில், பலருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

எதிர்ப்பு தெரிவித்த சாத்தான்குளத்தினர் இப்பொழுது என்ன சொல்லப்போகின்றனர்? முத்துசாமி ஆதிலா பானுவை காதலித்ததற்கு சாத்தான்குளத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அகமது ஆனவுடன் முகமது மலர்ந்து அமையாகி விட்டனர் போலும். அனால், பிறகு, மைனர் வயதில் காதல் வசப்பட்ட ஆதிலா பானுவுக்கு, நாட்கள் கடந்த போது காதல் கசந்த போது, கணவர் வேலைக்காக வெளிநாடு சென்ற சமயத்தில், பலருடன் தொடர்பு ஏற்பட்டபோது, ஏன் அவர்கள் கண்டுகொள்ளவில்லை? இது சமூகப் பிரச்சினை மட்டுமல்லாது, மற்ற பிரச்சினைகளும் சம்பந்தப்பட்டுள்ளன. குறிப்பாக அந்த இரு குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக் குறியாகிறது. இனியாவது, இத்தகைய பிரச்சினைகள் வராத மாதிரி செய்வதற்கு ஏதாவது வழி உண்டா?

வேதபிரகாஷ்

© 11-11-2010


[1] தினமலர், இரண்டு குழந்தைகளுடன் தாய் கொலை: கள்ளக்காதலர்கள் மோதல் காரணமா? பதிவு செய்த நாள்: நவம்பர் 11, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=124503