Posted tagged ‘ஆண்குறி சதை’

முருகேசனுக்கு சுன்னத் – அதாவது ஆண்குறி சதை அறுப்பு விழா!

ஒக்ரோபர் 3, 2010

முருகேசனுக்கு சுன்னத் – அதாவது ஆண்குறி சதை அறுப்பு விழா!

 

சுன்னத் செய்து கொண்ட முருகேசன்

முஸ்லீம் ஆட்சி திரும்பி விட்டதா? நீதிபதி கான் சொல்லி மூன்று நாட்கள்கூட ஆகவில்லை, “முஸ்லீம்கள் இந்தியாவை ஆண்டுள்ளனர், ஆளப்பட்டனர், இப்பொழுது ஆட்சியில் பங்கு கொண்டுள்ளனர்”! ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் பிளஸ்1 மாணவர் முருகேசனுக்கு, புதுக்கோட்டையை சேர்ந்த ராவுத்தர் என்பவர் சுன்னத் செய்ததால், அவரை அங்குள்ள இளைஞர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்[1].

sunnath-Can it be done for grown boy

sunnath-Can it be done for grown boy

சூப் கடையில் வேலை பார்த்த சிறுவனுக்கு சுன்னத்! ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியை சேர்ந்தவர் வலம்புரி. இவர் குடும்பத்துடன் தூத்துக்குடியில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகன் முருகேசன் (17). உறவினரான சலவைத் தொழிலாளி முருகன் வீட்டில் தங்கி, ஏர்வாடி பள்ளியில் பிளஸ்1 படித்து வருகிறார். தற்போது காலாண்டு விடுமுறையையொட்டி, இங்குள்ள புதுக்கோட்டையை சேர்ந்த ராவுத்தர் (30) என்பவரது சூப் கடையில் வேலை செய்து வந்தார்.

sunnath-cicumcision

sunnath-cicumcision

தர்காவில் சுன்னத் செய்வார்களா? இந்நிலையில் ராவுத்தர், தப்ஸ்[2] முழக்கத்துடன் நேற்று முருகேசனுக்கு மாலை அணிவித்து தர்காவிற்கு ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளார். இதன்பின் வீட்டுக்கு அழைத்து வந்த அவர், சுன்னத் செய்பவரை வைத்து முருகேசனுக்கு சுன்னத் நிகழ்ச்சியை நடத்தி உள்ளார்.

circumcision

circumcision

குதிரை ஏறும் ராவுத்தனின் பெயர்[3] கொண்ட முருகேசனுக்கு ராவுத்தரின் சுன்னத்: தகவலறிந்த மாணவரின் உறவினர் முருகன், ராவுத்தர் வீட்டுக்கு சென்று பார்த்த போது, சுன்னத் செய்யப்பட்ட நிலையில் இருந்த முருகேசனை கண்டு அதிர்ச்சியடைந்தார். உறவினர்கள் ராவுத்தரை பிடித்து ஏர்வாடி இன்ஸ்பெக்டர் தங்கதுரையிடம் ஒப்படைத்து புகார் செய்தனர். தூத்துக்குடியில் உள்ள மாணவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கீழக்கரை டி.எஸ்.பி., பெருமாள் ராமனுஜம் மாணவரிடம் விசாரணை நடத்தினார்.

சுன்னத் செய்து கொண்ட மாணவர்கூறியதாவது: முருகேசன் சொன்னதாவது, “பெற்றோர்கள் ஒப்புதல் அளிக்க மாட்டார்கள் என்ற காரணத்திற்காக யாரிடமும் தெரிவிக்காமல் சுன்னத் செய்து கொள்ள சம்மதித்தேன், இது என்னுடைய சுய விருப்பத்தின்படி நடந்தது”, என்றார். சுன்னத் செய்து கொள்ள பெற்றோர் அனுமதி தேவையா? சுன்னத் என்ன தமாஷுக்கு செய்து கொள்கிறார்களா? 10+1 படிக்கும் போதே தமிழகத்தில் சுன்னத் மகிமை சொல்லிக் கொடுக்கப்படுகிறதா? முருகேசன் சுன்னத் செய்து கொண்டது செக்ஸ் போன்ற துர்புத்தி காரணங்களுக்கா? அந்த வயசில் யார் அத்தகைய கருத்தை மனத்தில் ஊட்டியது?


[1] தினமலர், ஏர்வாடிமாணவருக்கு “சுன்னத்’ : புதுக்கோட்டை வியாபாரி மீது புகார், அக்டோபர் 02, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=97879

[2] பறை அடித்தல், ஏர்வாடி தப்ஸ் (தப்பு – பறை வாத்தியம்) என்றே சொல்வார்கள்.

[3] அருணகிரிநாதர் முருகனை தமது பாடல்களில், “குதிரை ஏறும் ராவுத்தனே” என்று விளித்துள்ளார்!