Posted tagged ‘ஆக்கிரமிப்பு’

திருமா வளவனின் இந்து-விரோத பேச்சு – துலுக்கரின் நக்கல் கோஷம், கைதட்டல், பாராட்டுதல்களுடன் பேசிய தூஷண பேச்சு (1)

திசெம்பர் 9, 2017

திருமா வளவனின் இந்துவிரோத பேச்சுதுலுக்கரின் நக்கல் கோஷம், கைதட்டல், பாராட்டுதல்களுடன் பேசிய தூஷண பேச்சு (1)

Tiruma wants all Hindu temples demolished
இந்து கோவில்களை இடித்து தள்ள வேண்டும்திருமாவளவன் திடீா் ஆவேசம் (07-12-2017)[1]: பெரம்பூரில் ஜமாலியா என்ற இடத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சாபில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவா் தொல்.திருமாவளவன் 06-12-2017 அன்று பேசுகையில்[2], “இன்றைக்கு சிவன்கோவில்களும், பெருமாள் கோவில்களும் இருக்கின்ற இடம் எல்லாம் பௌத்த விகாரங்களாக இருந்தனபௌத்த விகாரங்களை இடித்துவிட்டு தரைமட்டம் ஆக்கி விட்டுத்தான் சிவன் கோவில்களைக் கட்டியிருக்கிறீர்கள், பெருமாள் கோவில்களைக் கட்டியிருக்கிறீர்கள். எனவே அதையெல்லாம் இடித்து, தரைமட்டமாக்கிவிட்டு அந்த இடத்தில் எல்லாம் பௌத்த விகாரங்களைக் கட்டவேண்டும். ….திருவரங்கநாதன் படுத்திருக்கின்ற இடத்தில் புத்த விஹாரத்தைக் கட்ட வேண்டும், காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் இருக்கின்ற இடத்தில் புத்த விகாரம் கட்டப்படவேண்டும் ….சொல்லிக் கொண்டே போகலாம்”.  இது பாலிமர் டிவி வீடியோவின் ஆதரமான பேச்சாகும். இதையே மற்ற இணைதள செய்திகளாக வெளிவந்துள்ளன[3]. அந்த பேச்சு ஆக்ரோஷமாக, தீவிரமாக இருந்தது திருமாவின் முகமே காட்டுக் கொடுத்தது. அவர் பேச்சுக்கு முஸ்லிம்களின் கைதட்டல் வேறு!

Tiruma, temples should be demolished-Samayam-07-06-2017

களப்பிரர்கள் காலத்தில் தான் தமிழக சின்னங்கள் அழிக்கப்பட்டன[4]: இதனால், நிச்சயமாக சாதாரண இந்துக்களும் திகைப்படைய, அவர்கள், திருமாவைக் கண்ண்டித்தனர். “தமிழன்” என்ற முறையில், ஒரு எதிர்ப்பு இவ்வாறு இருந்தது. திருமாவளவன் அவர்களே! உடனடியாக உங்கள் பெயரை மாற்றிக் கொள்ளவும். நேற்று (07/12/2017) ஸ்ரீரங்கப் பெருமாள் கோவிலையும், காஞ்சி அன்னை காமாட்சி கோவிலையும் இடித்து விட்டு பௌத்த விஹாரங்கள் கட்ட வேண்டும் என்று பேசிய  அந்தப் பேச்சிற்குப் பிறகு, “திருமாவளவன்” என்ற பெயரை வைத்துக் கொள்ள உங்களுக்கு எந்தத் தகுதியும் கிடையாது. காஞ்சி காமாட்சி கோவிலை இடித்து விட்டு பௌத்த கோவில் கட்டச் சொன்ன ஒரு நபரை தமிழனாக, தமிழக வரலாறு தெரிந்த எந்தவொரு தமிழனும் அங்கீகரிக்க மாட்டான்/கூடாது. காரணம், இதுவரை தமிழக வரலாற்றில் மிகமிக மோசமான காலமாக, தமிழனின் அடையாளங்கள் பெருமளவில் நசுக்கப்பட்ட காலமாக எல்லா வரலாற்று அறிஞர்களும் குறிப்பிடும் காலம் களப்பிரர்கள் காலம். இவர்கள் தமிழர்களின் வழிபாடு மற்றும் நம்பிக்கைகளுக்கு எதிராகவும், தமிழ் சொற்கள் மற்றும் எழுத்துகளில் கூட பெருமளவில் சிதைவினைக்  கொண்டு வந்தவர்கள் என்பதையும் எல்லா வரலாற்று ஆசிரியர்களும் ஒப்புக் கொள்கிறார்கள். இப்படியான களப்பிரர்கள் பின்பற்றிய மதம் தான் பௌத்தம் மற்றும் ஜைனம். இவர்கள் தான் தமிழகத்தினுள் பௌத்தம் நுழைய மூல காரணம்[5].

Tiruma, temples should be demolished-Newstm-07-06-2017

கரிகால் பெருவளத்தான் பெயரான திருமாவளவன் என்ற பெயரை வைத்துக் கொள்ள அருகதை இல்லை[6]: அந்த இணைதளம் தொடர்ந்தது, “ஆக, திருமாவளவன், தமிழனின் அடையாளத்தைப் பெருமளவில் அழித்த களப்பிரர்களைப் போல மீண்டும் தமிழனின் அடையாளங்களை அழிக்க மக்களைத் தூண்டி விடும் உங்களை எப்படி தமிழனாக ஏற்றுக் கொள்வது? எது தமிழனின் அடையாளம் என்று யோசிக்கிறீர்களா?

“கச்சி வளைக்கைச்சி காமக்கோட்டங்காவல்

 மெச்சி யினிதிருக்கு மெய்ச்சாத்தன்  கைச்செண்டு

கம்பக் களிற்றுக் கரிகாற் பெரு வளத்தான்

செம்பொற் கிரிதரித்த செண்டு”

மேலேயிருக்கும் பாடலில் பொருட்சுருக்கம், கச்சி என்ற காஞ்சியிலிருக்கும் வளையல் அணிந்த காமாட்சியை, கரிகால் பெருவளத்தான் என்ற சோழன் வந்து வணங்கினான் என்பதாம். கரிகாலச் சோழனின் காலம் களப்பிரர்களின் காலத்திற்கு முற்பட்டது. களப்பிரர்களுக்கு முன்பேவா சித்தார்த்தர் வந்து இங்கே கோவில் கட்டி விட்டுச் சென்றார்? அதுவும் மஹாயானம் தோன்றுவதற்கு முன்பே? கரிகால் பெருவளத்தான் பெயரான திருமாவளவன் என்ற பெயரை வைத்துக் கொண்டே அவன் வணங்கிய அன்னை காமாட்சியின் கோவிலை இடித்து, தமிழனின் அடையாளங்களை அழித்த களப்பிரர்களின் அடையாளத்தை மீண்டும் நிறுவத் தூண்டுகிறீர்களே…? நீங்கள் தமிழன்தானா? இல்லை தமிழன் பெயர் தாங்கிய சிங்களவனா? உங்களைத் தமிழினத் துரோகி என்று யாரேனும் அழைக்கும் முன், குறைந்தபட்சம் தமிழகத்தின் பெருமைமிகு கரிகாற் பெருவளத்தானின் இன்னொரு பெயரான திருமாவளவன் என்றப் பெயரை மாற்றிக் கொள்ளுங்கள்[7]. இல்லையெனில், பிற்காலத்தில் கரிகால் வளவன் ஒரு தமிழ்த்துரோகி என்று யாரேனும் தவறாகப் புரிந்து கொண்டாலும் கொள்வர்!” என்று முடித்தது.

Thiruma, frenzied speech- Eswaran responded

08-12-2017 அன்று விடுத்த திருமாவின் அறிக்கை[8]: இதற்குள் நிலைமை மோசமாகிறது என்று உணர்ந்த, திருமா, “டேமேஜ் கன்ட்ரோல்” போல ஒரு அறிக்கையை விடுத்ததும் வேடிக்கையாக இருந்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது[9]: “விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை ஜமாலியாவில் கடந்த 6–ந்தேதி தலித் மற்றும் இஸ்லாமியர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் நடந்தது. அதில், நான் பேசியதில் முன்னே இருந்த பகுதியையும் பின்னால் இருந்த பகுதியையும் வெட்டிவிட்டு இந்து கோவில்களை இடிக்கவேண்டும் என்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பி உள்ளனர். இது என் மீதும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மீதும் கலங்கம் சுமத்தும் உள்நோக்கத்தோடு செய்யப்பட்டுள்ளது. இதை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். என்னையும், விடுதலை சிறுத்தைகள் கட்சியையும் அவதூறு செய்யும் விதமாக வகுப்புவாத சக்திகள் பேசி வருகின்றன. அவர்களுடைய கூட்டுச்சதியின் காரணமாகத்தான் எனது பேச்சு வெட்டி சிதைக்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது. ராமர் கோவில் இருந்த இடத்தில் தான் பாபர் மசூதி கட்டப்பட்டது. எனவே, அதை இடித்து விட்டு அங்கே மீண்டும் ராமர் கோவிலை கட்டப்போகிறோம் என வகுப்புவாதிகள் பேசி வருகின்றனர்”.

Tiruma wants Hindu temples demolished

இந்த வாதம் சரி என்றால் பவுத்த சமண கோவில்களை இடித்து அந்த இடங்களில் தான் சிவன் கோவில்களும், பெருமாள் கோவில்களும் கட்டப்பட்டுள்ளன[10]: திருமா தொடர்ந்து கூறியது, “இந்த வாதம் சரி என்றால் பவுத்த சமண கோவில்களை இடித்து அந்த இடங்களில் தான் சிவன் கோவில்களும், பெருமாள் கோவில்களும் கட்டப்பட்டுள்ளன. அங்கே மீண்டும் பவுத்த விகார்களை கட்டுவோம் என கூறமுடியுமா? இந்த கேள்வியை தான் நான் எழுப்பினேன். இப்போது கோவில்கள் இருக்கும் இடத்தில் மீண்டும் பவுத்த விகார்களை கட்டவேண்டும் என்று சொல்வது எப்படி பொருத்தமற்ற வாதமோ, அப்படித்தான் அங்கே ராமர் கோவில் கட்டவேண்டும் என்று சொல்வதும் ஆகும். இதை தான் நான் சுட்டிக்காட்டினேன். அதை தான் திரித்து வெளியிட்டு இருக்கிறார்கள். எனது பேச்சை திரித்து அரசியல் லாபம் தேட வகுப்புவாதிகள் முற்படுவது தமிழ்நாட்டை எப்படியாவது ஒரு வன்முறை களமாக மாற்றிவிட வேண்டும் என்ற அவர்களுடைய நோக்கத்தை தான் வெளிப்படுத்துகிறது. பொய்களின் மூலமாகவும், அவதூறுகள் வாயிலாகவும் அரசியல் லாபம் தேட முயற்சிக்கும் வகுப்புவாத சக்திகள் இனியாவது தங்களை திருத்திக்கொள்ள வேண்டும்,” என்று முடிந்தது.

 Tiruma wants all Hindu temples demolished-clarification issued

சொதப்பலான அறிக்கையும், மேன்மேலும் இந்துவிரோதம் வெளிப்பட்ட விதமும்: மாலைமலர் பேட்டியில், “நான் வரலாற்று உண்மையைத்தான் பேசி இருக்கிறேன்”, என்றும் உள்ளது[11]. அதே போல தனது கருத்தில் இருந்து பின்வாங்க போவது இல்லை[12]. புத்த விஹாரங்கள் இருந்த இடத்தில் கோவில்கள் கட்ட்டப்பட்டிருப்பட்து குறித்து பல வரலாற்று சுவடுகளும் ஆய்வறிக்கைகளும் இருப்ப்பதாகவும் கூறினார்[13]. இச்செய்தியை முதலில் பாலிமர் டிவி தான் வீடியோவுடன் வெளியிட்டது[14].. இப்பொழுது அந்த வீடியோவை நீக்கி விட்டு, தினத்தந்திக்கு பேட்டி கொடுத்த வீடீயோவை சேர்த்து, செய்தி வெளியிட்டுள்ளது[15]. அதாவது, இங்கும் அகங்காரத் தொணி தான் உள்ளது. ஆனால், இவரது முகமதியர் சார்ந்த நிலைப்பாடு, ஏற்கெனவே, எஸ்.சிக்களிடம் அதிருப்தியையும், வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது. “தலித்-முஸ்லிம்” போர்வையில், இப்பொழுதெல்லாம், இவர் பேசி வருவது, அரசியல் ரீதியிலும், விரும்பப்படாமல் இருக்கின்றது.

© வேதபிரகாஷ்

09-12–2017

Tiruma donning Muslim

[1] இந்து கோவில்களை இடித்து தள்ள வேண்டும்திருமாவளவன் திடீா் ஆவேசம், TOI Contributor | Updated: Dec 7, 2017, 04:28PM IST

[2] https://www.youtube.com/watch?v=oyY3E5lC9tM

[3] https://tamil.samayam.com/latest-news/state-news/thirumavalavan-speech-against-hindu-temples/articleshow/61963414.cms

[4] newstm, தமிழினத் துரோகியா தொல்.திருமாவளவன்?, Posted Date : 11:04 (07/12/2017)

[5] http://www.newstm.in/Tamilnadu/1512665079313?Is-Thirumavalavan-a-traitor-of-tamilians-

[6] newstm, தமிழினத் துரோகியா தொல்.திருமாவளவன்?, Posted Date : 11:04 (07/12/2017)

[7] http://www.newstm.in/Tamilnadu/1512665079313?Is-Thirumavalavan-a-traitor-of-tamilians-

[8] தினத்தந்தி, இந்து கோவில்கள் பற்றி பேசியது என்ன? திருமாவளவன் அறிக்கை, டிசம்பர் 09, 2017, 01:45 AM

[9] http://www.dailythanthi.com/News/TopNews/2017/12/08230606/Thirumavalavan-report.vpf

[10] மாலைமலர், இந்து கோவில்களை இடிப்பதாக சொல்லவில்லை: திருமாவளவன் விளக்கம், பதிவு: டிசம்பர் 08, 2017 15:38; மாற்றம்: டிசம்பர் 08, 2017 15:39.

[11]http://www.maalaimalar.com/News/TopNews/2017/12/08153859/1133456/Thirumavalavan-says-he-did-not-tell-that-he-will-destroy.vpf

[12] புதியதலைமுறை, இந்துக்கள்ளின் மனதை புண்படுத்தும்படி பேசவில்லை: திருமாவளவன் விளக்கம், December 08, 2017, 01:08 pm.

[13] http://www.puthiyathalaimurai.com/news/politics/36786-the-hindu-temple-affair-was-misunderstood-thirumavalavan.html

[14] பாலிமர்.டிவி.செய்தி, இந்து கோவில்களை இடிக்க வேண்டும் என்பது தனது கருத்தல்லதிருமாவளவன் விளக்கம், 08-டிசம்பர்-2017 19:06

[15] https://www.polimernews.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5-2/

துருக்கம், துருக்கர், துலுக்கர், துலுக்கி முதலிய சொற்கள் பிரயோகம், அவற்றைப் பற்றிய விளக்கம் (4)

திசெம்பர் 1, 2017

துருக்கம், துருக்கர், துலுக்கர், துலுக்கி முதலிய சொற்கள் பிரயோகம், அவற்றைப் பற்றிய விளக்கம் (4)

Malikafur, Ranganatha, Tulukka nachi

முன்னுக்கு முரணான வர்ணனை கட்டுக்கதை என்பதனை வெளிப்படுத்துகிறது:

சொல்லப்பட்ட விவரங்கள் பெறப்படும் விவரங்கள்
1.       ஸ்ரீரங்கத்தை முஸ்லீம்கள் கொள்ளையிட்டுச் சென்ற போது டில்லி பாதுஷாவினால் கொண்டு செல்லப்பட்ட ஒரு ரங்கநாதன் விக்கிரக ஸ்ரீரங்கத்தை முஸ்லீம்கள் கொள்ளையிட்டனர்.

ஒரு ரங்கநாதன் விக்கிரகம், .டில்லி பாதுஷாவினால் கொண்டு செல்லப்பட்டது.

2.       விக்கிரகத்தின் மீது பாதுஷாவின் மகள் மனதைப் பறிகொடுத்து அப்பெருமானிடமே அடைக்கலமாகிவிட்டாள் பாதுஷாவின் மகள் மனதைப் பறிகொடுத்தது தில்லியில் என்றால், விக்கிரகம் அங்குதான் இருக்க வேண்டும்
3.       பின்னால் அந்த விக்கிரகத்தை மீட்டுக் கொண்டு வந்தபோது ….. அப்படியென்றால், தில்லி சுல்தான் ஶ்ரீரங்கத்தின் மீது இரண்டாம் முறை படையெடுத்து வந்து, விக்கிரகத்தை கொள்ளையெடித்தானா?
4.       பாதுஷாவின் மகளும் பிரிவாற்றாமையால் பின்தொடர்ந்து வந்து அந்த ரங்கநாதனிடமே ஐக்கியமாகிவிட …. இதன் படி பார்த்தால், மகள் ஶ்ரீரங்கம் வந்தாள், என்றாகிறது. நிச்சயமாக, துலுக்கன் தனது மகளை அப்படி அனுப்பப் பாட்டான், மாறாக கொலை செய்வான்.
5.       அப்பெண்ணுக்குத் துலுக்க நாச்சியார் என்றே பெயரிட்டு பெருமைபடுத்திப் போற்றித் துதித்தனர் வைணவர்கள். வைணவர்களுக்கு அந்த அளவுக்கு புத்தி பேதலித்து விட்டதா என்று தெரியவில்லை. ஸ்ரீரங்கத்தை முஸ்லீம்கள் கொள்ளையிட்டனர். ஒரு ரங்கநாதன் விக்கிரகம், .டில்லி பாதுஷாவினால் கொண்டு செல்லப்பட்டது. என்றெல்லாம் ஆரம்பித்து இப்படி முடிப்பதே விசித்திரமாக உள்ளது.

இது இந்து கோவில் என்பதால், அத்தகைய விளக்கமே தேவையில்லை. ஒருமசூதியில் அவ்வாறிருந்து, அங்கு விக்கிரகம் இல்லையென்றால், அத்தகைய விளக்கம் பொறுந்தும். எனவே, பொய்கதையை எப்படியெல்லாம் வளர்க்கிறார்கள் என்று தெரிகிறது.

Location of Tulukka nachi in temple

மேல்கோட்டையில் இன்னொரு துலுக்க நாச்சியார் / பீவிநாச்சியார்: “இதே போன்று கர்நாடக மாநிலத்தில் உள்ள மேல்க்கோட்டை திருநாராயணபுரத்தில் செல்லப்பிள்ளைப் பெருமாளிடம் இரண்டறக் கலந்த துலுக்க நாச்சியாரின் வரலாறும் மேற்படி நிகழ்வோடு  ஒப்பு நோக்கத்தக்கதாகும்”, என்றும் அக்குறிப்பு எடுத்துக் காட்டுகிறது. அப்படியென்றால், இரண்டு இடங்களிலும், துலுக்கர்கள் விக்கிரங்களை, கோவில்களை இடித்து எடுத்துச் சென்றுள்ளனர். இரண்டு இடங்களிலும், இரண்டு துலுக்கநாச்சிகள் ரங்கநாதனிடம் காதல் கொண்டு ஐக்கியமாகி இருக்கவேண்டும். வைணவர்கள் இவ்வாறு கதைகளைக் கட்டி விட்டாலும், துலுக்கர்கள் / முஸ்லிம்கள் இக்கதைகளை ஏற்றுக் கொள்வதில்லை. பிறகு இவர்கள் ஏன் இப்படி துலுக்கச்சியைக் கட்டிக் கொண்டு அழவேண்டும்? ஏற்கெனவே, மாலிகாபூர் வந்து இடிக்க முற்பட்டபோது, விக்கிரங்கள் மறைத்து வைக்கப் பட்டன, என்ற குறிப்புகள் உள்ளன, அந்நிலையில், செக்யூலரிஸத்தை வளர்க்கும் முறையில், இத்தகைய கட்டுக் கதைகளை வளர்க்க வேண்டிய அவசியம் இல்லை.

Bharathiyar, poem and Turukkar

பாரதியார் பாடல்களில் துருக்கர்: பாரதியும் துருக்கர் என்ற பிரயோகத்தை தன்னுடைய பாடல்களில் செய்துள்ளதைக் காணலாம். “நித்தம் திக்கை வணங்கும் துருக்கர்,என்று குறிப்பிட்டதை சிலர் திரிபு விளக்கம் கொடுக்கின்றனர். ஆனால், துருக்கரது கொடுமைகளை அறிந்துதான்,

 

 “தாய்த்திரு நாட்டைத் தறுகண் மிலேச்சர்,
பேய்த்தகை கொண்டோர், பெருமையும் வன்மையும்
ஞானமும் அறியா நவைபடு துருக்கர்  (வரிகள் 44-46)

என்று பாடினார். ஆனால், இப்பொழுது, சில செக்யூலரிஸ்டுகள் அல்லது துருக்கர் ஆதரவு கோஷ்டிகள்,

இதில் “நவைபடு துருக்கர்” என்பது, “நவைபுரி பகைவர்” என்று மாற்றப் பட்டிருக்கிறது.

 

சோதரர் தம்மைத் துருக்கர் ஆண்டழிப்ப
மாதரார் நலத்தின் மகிழ்பவன் மகிழ்க! (வரிகள் 83-84)

இதில் “துருக்கர் ஆண்டழிப்ப” என்பது “துரோகிகள் அழிப்ப” என்று மாற்றப் பட்டிருக்கிறது. திருமந்திரத்தில் எப்படி பாடல்களை எடுத்து, இடைசெருகல்கள் செய்தனரோ, அத்தகைய மோசடிகள் இப்பொழுதும் நடைபெறுகிறது.

Tamil muslim map, Joshua project

இந்துக்கள் கவனிக்க வேண்டிய விசயங்கள்: முகமதியர், தங்களை முஸ்லிம்கள் என்று குறிப்பிட வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார்கள், வற்புருத்தினார்கள். பிறகு, அரேபிய-உருது பிரயோகங்களின் மூலம் வரும் வார்த்தைகளைப் புகுத்தினார்கள். சுன்னி என்பதை சன்னி, மெக்காவை மக்கா என்றெல்லாம் சொல்ல வேண்டும் என்றார்கள். ஆனால் இந்துக்கள் அவற்றின் தன்மையினை அறிந்து கொள்ளவில்லை. அடிப்படைவாதத்தை, தம் மீது திணிக்கிறார்கள் என்பதனையும் உணரவில்லை. ஆகவே, கீழ் காணும் விவரங்களை கருத்தில் கொள்ளவேண்டும்:

  1. இந்துக்கள் துலுக்கர், துருக்கியர் முகமதியர், முசல்மான், முஸ்லிம், என இவர்களுடன் யாதாவது ஒரு முறையில், வழியில், சமயத்தில் உரையாடல், சந்திப்பு என ஆதாவது நிகழ்ந்திருந்தாலும், அவர்களைப் பற்றி சரிவர அறிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள்.
  2. துலுக்கர், துருக்கியர் முகமதியர், முசல்மான், முஸ்லிம் முதலியோர் 600 வருடங்கள் இந்தியாவின் பகுதிகளை ஆண்டுவந்தோம் என்ற மமதை இன்றும் இருக்கிறது.
  3. உண்மையில் இந்துக்கள் 200 ஆண்டுகளுக்கு முன்னர் மத்திரதரைக்கடல் நாடுகளில் இருந்தனர். 675 முதல் 710 வாக்கில் இஸ்லாத்தின் தாக்குதல்களால் தாக்குப் பிடிக்க முடியாமல் மதம் மாற்றப்பட்டனர்; கொலை செய்யப்பட்டனர்; மலைகள், காடுகள் போன்ற மறைவிடங்களில் வாழ்ந்தனர்.
  4. சோழர்கள் காலம் (13ம் நூற்றாண்டு வரை) வரையில் அவர்களால் தென்னிந்தியாவில் ஆதிக்கம் செல்லுத்த முடியவில்லை.
  5. அவர்கள் இந்துக்கள் பற்றி எதிர்மறையான விசயங்கள் தெரிந்து வைத்திருப்பதால், அடிக்கடி விமர்சித்தில் ஈடுபடுகிறார்கள்.
  6. ஆனால், இந்துக்களில் பெரும்பாலோருக்கு, இஸ்லாத்தைப் பற்றி ஒன்றும் தெரியாது.
  7. துருக்கியர் முகமதியர், முசஸமான், முஸ்லிம் என்ற வார்த்தைகளுக்கு உள்ள வேறுபாடு தெரியாது.
  8. உருவ வழிபாடு பற்றி இந்துக்களை அதிகமாக விமர்சிப்பார்கள். ஆனால், அவர்களது உருவ வழிப்பாட்டை பற்றி அப்படியே மறைத்து, மற்றவர்களை குறைகூறுவார்கள்.
  9. பௌத்தம் மத்திரதரைக்கடல் நாடுகளில் அதிகமாகப் பரவியிருந்ததால், அதன் தாக்கம் கிருத்துவம் ,மற்றும் இஸ்லாம் இரண்டின் மீதும் அதிகமாக இருக்கும்.
  10. பௌத்தம் ஏற்கெனவே, இந்துமதத்தில் உள்ளவற்றை தலைகீழாக மாற்றியுள்ளதால், இஸ்லாத்தில் அத்தகைய பழக்க-வழக்கங்களை எளிதாக அறிந்து கொள்ளமுடிகிறது.

எனவே இப்பொழுதுள்ள இந்துக்கள் தங்களது மதநூல்களை படிக்க வேண்டும் , பிறகு வ்அவர்கள் மதநூல்களை படிக்க வேண்டும். அப்பொழுதுதான், அவர்களுடன் சரியானபடி உரையாடல் நடத்த முடியும்.

 

© வேதபிரகாஷ்

30-11-2017

Sri Lankan Arabic inscription- clearly made from Hindu sculpture