Posted tagged ‘அழகிய இளம் பெண்கள்’

காதலிக்க மறுத்த இளம்பெண்களை கொலை செய்தால், நோக்கம் காதல் இல்லை – “ஜில்டெட் லவ்” என்று கேவலப்படுத்த வேண்டாம், ஜிஹாதி கொலையை செக்யூலரிஸமாக்க வேண்டாம்!

செப்ரெம்பர் 15, 2016

காதலிக்க மறுத்த இளம்பெண்களை கொலை செய்தால், நோக்கம் காதல் இல்லை – “ஜில்டெட் லவ்” என்று கேவலப்படுத்த வேண்டாம், ஜிஹாதி கொலையை செக்யூலரிஸமாக்க வேண்டாம்!

love-me-or-else-i-kill-you-jilted

ஜில்டெட் ஆளா, கொலைகரனா? ஆங்கில ஊடகங்களின் உணர்ச்சியற்றத் தன்மை: காதல் எப்படி என்று ஆங்கில ஊடகங்கள் கிண்டலாக விமர்சித்திருப்பது திகைப்பாக இருக்கிறது. இது தமிழகத்தில் நடந்துள்ள நான்காவது “ஜில்டெட்”[1], அதாவது காதலில் விடப்பட்ட கொலையாகும், “This is the fourth such brutal killing by jilted lovers in Tamil Nadu in the last four months” – என்று மலையாள மனோரமா குறிப்பிட்டுள்ளது[2].  இதையே மற்ற ஆங்கில ஊடகங்களும் பின்பற்றியுள்ளன[3]. “இந்தியா டுடே” போன்ற பத்திரிக்கைக் கூட அவ்வாறு வெளியிட்டுருப்பது[4], லவ்-ஜிஹாதை மறைக்கும் போக்காகவே தெர்கிறது. இது காதலே இல்லை, பிறகு எங்கு காதலி திடீரென்று, காதலை உதறப் போகிறாள்?  ஒருதலைகாதல் என்பது முதலில் காதல் என்று வர்ணிப்பதே கொடூரமாகும். அதனை காதலி விட்டுவிட்டாள், உதறிவிட்டாள் [to reject or cast aside (a lover or sweetheart), especially abruptly or unfeelingly] என்றெல்லாம் குறிப்பிடுவது கேவலமாகும்[5]. நாஜுக்காக அப்படி சொன்னாலும், இது வவ்-ஜிஹாதில் உருவாக்கப்பட்ட ஜிஹாதி கொலைதான். ஒருதலை காதல் எல்லாம் “ஜில்டெட்” ஆகிவிடாது[6], ஏனெனில், இது திட்டமிட்டு செய்த கொலை. உண்மையில் “ஜிஹாதி கொலை” ஆகும். கொலை செய்யப்பட்டிருப்பதைக் கூட கண்டிக்காமல், உணர்ச்சியற்றத் தன்மையில், இவ்வாறு செய்தியை வெளியிட்டிருப்பதை என்னவென்று சொல்வது என்றே தெரியவில்லை.

love-me-or-else-i-kill-you-jilted-love

லவ்-ஜிஹாத் கொலைகளை செக்யூலரிஸமாக்கக் கூடாது: குரூர காதல் கொலைகளில் கூட செக்யூலரிஸத்தை ஊடகங்கள் நுழைக்க முயற்சிக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. கிருத்துவப் பெண்கள் “லவ்-ஜிஹாதில்” சிக்கிக் கொண்டபோது, மலையாள மனோரமா வக்காலத்து வாங்கியது. ஆனால், இப்பொழுது, ஒரு இந்து இளம்பெண் கொலைசெய்யப் பட்டிருந்தாலும் “ஜில்டெட்” என்று நக்கல் அடிக்கிறது. காதலிக்க மறுத்ததற்காக பெண்களை கயவர்கள் கொலை செய்கிறார்கள் என்றால், அவர்களின் நோக்கம் காதல் இல்லை என்று மெத்தப் படித்த இந்த ஊடகக் காரர்களுக்குத் தெரியாதா என்ன? பிறகு ஏன் இத்தகைய போக்கை கடைப் பிடுஇக்கின்றன. ஜிஹாதி கொலைகளை செக்யூலரிஸமாக்க முயல்வது, கொலைக்காரர்களுக்கு ஒத்துழைப்பது மற்றும் கொலை செய்வதற்கு சமானம் என்றே சொல்லலாம்.

love-me-or-else-i-kill-you-jilted-love-blood

பாமக ராம்தாஸின் அறிக்கை பொறுப்புள்ளதாக இருக்கிறது: மனித நேயத்திற்கு எதிரான இந்த மிருகச் செயல் கண்டிக்கத்தக்கது. தன்யாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஒருதலைக் காதல் என்ற பெயரில் அரங்கேற்றப்படும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது[7]: “கோவை மாவட்டம் அன்னூர் தென்னம்பாளையத்தைச் சேர்ந்த தன்யா என்ற இளம் பெண் அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். அவருக்கு பக்கத்து வீட்டில் வாழ்ந்து வந்த ஜாகீர் என்ற இளைஞர் காதல் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக  பின்தொடர்ந்து வந்து தொல்லை கொடுத்து வந்த நிலையில், ஜாகீரை தன்யாவின் பெற்றோர் பலமுறை கண்டித்துள்ளனர். அத்துடன் தன்யாவுக்கு திருமண ஏற்பாடுகளையும் செய்தனர். கடந்த 10 நாட்களுக்கு தன்யாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் விரைவில் திருமணம் நடைபெறவிருந்தது. இந்த நிலையில் நேற்று தன்யா வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த ஜாகீர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தன்யாவை சரமாரியாக கத்தியால் படுகொலை செய்திருக்கிறான்.

love-me-or-else-i-kill-you

ஒருதலைக் காதல் தறுதலைகளின் வெறிச் செயல்களால் ஏற்படும் பாதிப்புகளை உணர வேண்டும்: தன்யாவுக்கு நடந்த கொடுமையை என்ன தான் வார்த்தைகளில் வர்ணித்தாலும் அதன் முழுமையான தீவிரத்தை உணர வைக்க முடியாது. பெற்றெடுத்து ஆசை ஆசையாய் வளர்த்து, படிக்க வைத்து, பணிக்கு அனுப்பி, திருமணம் நிச்சயித்து மகளின் எதிர்காலம் குறித்த கனவுகளுடன் திருமண ஏற்பாடுகளில் ஈடுபட்டு வந்த தன்யாவின் பெற்றோருக்கு இந்த கொலை எத்தகைய அதிர்ச்சியையும், வலியையும் தந்திருக்கும் என்பதை கற்பனை செய்து பார்ப்பதன் மூலம் தான், ஒருதலைக் காதல் தறுதலைகளின் வெறிச் செயல்களால் ஏற்படும் பாதிப்புகளின் முழுமையான பரிமாணத்தை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d

காதலிக்க மறுத்ததற்காக பெண்களை கயவர்கள் கொலை செய்கிறார்கள் என்றால், அவர்களின் நோக்கம் காதல் இல்லை: தமிழ்நாட்டில் கடந்த இரண்டரை மாதங்களில் மட்டும் சென்னை சூளைமேடு பொறியாளர் சுவாதி, விழுப்புரம் வ. பாளையம் மாணவி நவீனா, கரூர் பொறியியல் கல்லூரி மாணவி சோனாலி, தூத்துக்குடி ஆசிரியை பிரான்சினா, விருத்தாசலம் பூதாமூர் செவிலியர் புஷ்பலதா கடைசியாக தன்யா என இளம் பெண்கள் ஒருதலைக் காதல் தறுதலைகளின் வெறிக்கு இரையாகி தங்கள் உயிரை இழந்திருக்கின்றனர்.  எந்த தாய்க்கும் பிள்ளைகளை கொல்ல மனம் வராது என்பது எப்படி உண்மையோ, அதேபோல் மனப்பூர்வமாகவும், உண்மையாகவும் காதலிக்கும் யாருக்கும் அன்பு வைத்தவரை கொலை செய்ய மனம் வராது என்பதும் உண்மை. ஆனால், காதலிக்க மறுத்ததற்காக பெண்களை கயவர்கள் கொலை செய்கிறார்கள் என்றால், அவர்களின் நோக்கம் காதல் இல்லை என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வர்.

%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d

அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை: இத்தகைய மோசமான கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும், இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமாக உள்ளது. ஆனால், ஒருதலைக் காதல் என்ற பெயரில் அரங்கேற்றப்படும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது கவலையளிக்கிறது. ஒருதலைக் காதல் தறுதலைகளால் உயிரிழந்த 6 பேரில், விருத்தாசலம் புஷ்பலதா என்பவர் மட்டும் தனசேகர் என்ற மிருகத்தால் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பாலியல் சீண்டலுக்குள்ளாக்கப்பட்டதால் ஏற்பட்ட அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார். மீதமுள்ள 5 பேரும் மிகவும் கொடூரமான முறையில் வெட்டியும், உயிருடன் எரித்தும் படுகொலை செய்யப்பட்டனர். இக்கொலைகள் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தின. ஆனால், அரசோ தமிழகத்தில் இத்தகைய கொடுமைகள் நடந்ததாகவே காட்டிக் கொள்ளவில்லை. அதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் தான் பாலியல் சீண்டல் கொலைகள் தொடர்கின்றன.

danya-killed-by-jakir-14-09-2016

புற்றுநோயைப் போல பரவி வரும் பாலியல் சீண்டல் கொலைகள் தடுக்கப்பட வேண்டும்: தமிழகத்தில் புற்றுநோயைப் போல பரவி வரும் பாலியல் சீண்டல் கொலைகள் தடுக்கப்பட வேண்டும்.  பெண்களை பின்தொடர்ந்து வந்து பாலியல் தொல்லை மற்றும் சீண்டல்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை அளிப்பதன் மூலம் தான் இதை சாதிக்க முடியும். பெண்களின் பாதுகாப்புக்காக 2013 ஆம் ஆண்டு தமிழக அரசு அறிவித்த 13 அம்சத் திட்டத்தின் நான்காவது அம்சமாக பாலியல் பலாத்காரம் செய்பவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.  பெண்களை பின்தொடர்ந்து சென்று தொல்லை தருபவர்களையும் இச்சட்டப்படி தண்டிக்க வேண்டும்”, என குறிப்பிட்டுள்ளார்[8].

© வேதபிரகாஷ்

15-09-2016

[1] Malayala Manorama online, Spurned youth hacks Keralite woman to death in Coimbatore, attempts suicide, Thursday 15 September 2016 05:49 PM IST, By Onmanorama Staff

[2] http://english.manoramaonline.com/news/just-in/spurned-youth-hacks-kerala-woman-death-coimbatore-murder.html

[3] India Today, Tamil Nadu: Jilted lover kills girl, attempts suicide later Pramod Madhav ,  Posted by Shruti Singh, Coimbatore, September 15, 2016 | UPDATED 10:28 IST.

[4] http://indiatoday.intoday.in/story/tamil-nadu-coimbatore-jilted-lover-kills-girl-attempts-suicide/1/764735.html

[5] The Hindusthan times, 23-year-old woman hacked to death by jilted man in Coimbatore, HT Correspondent, Hindustan Times, Chennai, Updated: Sep 15, 2016 17:42 IST.

[6] http://www.hindustantimes.com/india-news/23-year-old-woman-hacked-to-death-by-jilted-man-in-coimbatore/story-gwtfpzIcPxRtO8CAXSMYyI.html

[7] தினமணி, ஒருதலைக் காதல் என்ற பெயரில் பெண்களுக்கு எதிராக தொடரும் வன்முறைகளை அரசு கட்டுப்படுத்த வேண்டும்: ராமதாஸ், By DIN  |   Last Updated on : 15th September 2016 12:24 PM

[8] http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2016/sep/15/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE-2565102.html?pm=home

தர்காவில் இமாம் ஒரு பெண்ணை கற்பழித்தது – பேயோட்டுகிறேன் என்று கொக்கோகத்தில் ஈடுபட்ட ஹக் கையும் களவுமாக பிடிபட்டான்!

ஓகஸ்ட் 31, 2016

தர்காவில் இமாம் ஒரு பெண்ணை கற்பழித்தது – பேயோட்டுகிறேன் என்று கொக்கோகத்தில் ஈடுபட்ட ஹக் கையும் களவுமாக பிடிபட்டான்!

two priests of Ajmer dargah arrested for rape 27-08-2016தர்காக்களில் நடப்பது என்ன?: இந்தியாவில் பொதுவாக தர்காக்களுக்கு குழந்தைகளைக் கூடிச் சென்று மந்திரித்தால், குழந்தைக்கு நல்லது, எதையாவது கண்டு பயந்தது அல்லது எந்த தீய சக்தியும் அணுகாது போன்ற நம்பிக்கைகளில் அவ்வாறு செய்கின்றனர். பெண்களும் பேய்-பிசாசு பிடித்துள்ளது அல்லது அவர்கள் ஒருமாதிரி பைத்தியம் பிடித்தது போல நடந்து கொண்டால், ஏதோ கெட்டகாற்றினால், ஆவியினால் அவ்வாறு நடந்து கொள்கிறாள் மந்திரித்தால் எல்லாம் சரியாகி விடும் என்று தர்காவுக்குக் கூட்டிச் செல்கின்றனர். தர்காக்களில் இதற்கான பிரத்யேக அறை, பூஜைசெய்ய இமாம் போன்றோர் இருக்கின்றனர். ஆனால், இவர்கள் சிறுமிகள், பெண்கள் முதலியோரை பாலியல் ரிதியில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு சீரழிக்கப் படுகின்றனர். வெளியே சொன்னால் கொன்று விடுவேன், விலக்கி வைத்து விடுவேன் என்று பயமுருத்தியே, விவகாரங்களை மறைத்து விடுகின்றனர். எப்பொழுதாவது எல்லைகளை மீறும் போது, தொடர்ந்து பெண்கள் பாலியல் தொல்லைக்குள்ளாகும் போது, பொறுக்கமுடியாமல், புகார் கொடுக்கும் போது உண்மைகள் வெளிவருகின்றன. அதுபோலத்தான், பிஜ்னோர் இமாம் விசயமும் உள்ளது.

Maulana Anwarul Haq booked for rape 19-08-2016பிஜ்னோர் இமாம் மாட்டிக் கொண்டது: மௌலானா அன்வருல் ஹக் [Maulana Anwarul Haq (40)] பிஜ்னோர் நகரத்தின் தலைமை இமாமாக [head Imam of Jama Masjid in Chah Siri, Bijnor city] இருக்கிறான். அரசியல் ஆதரவும் இருப்பதால், அதே தோரணையில் உலா வந்து கொண்டிருந்த நேரத்தில் தான், ஒரு பெண் உருவில் பிரச்சினை வந்தது. ஆகஸ்ட்.19, 2016 வெள்ளிக்கிழமை அன்று அவனை சிலர் நன்றாக அடித்துள்ளனர். அதனால் தான் விவகாரம் வெளியே வந்துள்ளது. ஆகஸ்ட்.12 2016 வெள்ளிக்கிழமை அன்று கிராடாபூரைச் சேர்ந்த 30 வயதுள்ள ஒரு பெண்ணை பேய்-பிசாசை வெளியேற்றுகிறேன் என்ற சாக்கில் கற்பழித்துள்ளான்[1] என்று பிறகு தெரிய வந்தது. முதலில் பயந்த அப்பெண் பிறகு தனது கணவனிடம் நடந்ததை கூறியுள்ளாள். இதனால், அவள் கணவன் மற்றும் சிலர் அந்த இமாமை அடித்துள்ளனர்.

Maulana Anwarul Haq caught on video for rape with woman 19-08-2016தர்காவில் கற்பழித்த இமாம்: முன்னர் அக்கணவன் தன் மனைவிக்கு பேய் பிடித்திருக்கிறது, அதனை நீக்க வேண்டும் என்று தான், இமாமிடம் தன் மனைவியைக் கூட்டிச் சென்றுள்ளான். பொதுவாக முஸ்லிம்கள் அவ்வாறு நம்பிக்கைக் கொண்டிருப்பதால், அவ்வாறு செய்துள்ளான். இமாம் அதற்கு தர்காவில் சில பரிகாரங்கள் முதலியவை செய்ய வேண்டும் என்று அவர்களை ஹரித்வாருக்கு கூட்டிச் சென்று சென்று ஒரு ஹோட்டலில் தங்க வைத்துள்ளான். இமாம் அவளை ஹரித்வாரில் உள்ள கலியூர் தர்காவுக்கு [Kaliyar Sharif dargah in Haridwar] கூட்டிச் சென்று அங்கு மயக்க மருந்து கொடுத்து கற்பழித்துள்ளான். பிறகு தன் கணவனுக்கு தெரிவித்தால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டியும் உள்ளான். இதனால், அப்பெண் விசயத்தை வெளியில் சொல்லவில்லை போலும். முஸ்லிம்கள் இப்படித்தான் உண்மைகளை மறைத்து விடுகிறார்கள் போலும்.

Maulana Anwarul Haq Imam caught on video for rape 19-08-2016ருசி கண்ட பூனை மறுபடியும் சென்றது: ருசி கண்ட பூனை சும்மாயிருக்காது என்பது போல, அந்த இமாம், மறுபடியும் அப்பெண்ணை அனுபவிக்க விரும்பினான் போலும். அதனால், ஆகஸ்ட்.19, 2016 அன்று ஹக், குர்ரம் என்ற தனது உதவியாளுடன், அப்பெண் வீட்டில் தனியாக இருக்கும் போது சென்றுள்ளான். அதாவது, பக்‌ஷிவாலா கிராமத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு அப்பெண்ணை வருமாறு அழைத்துள்ளான்[2]. குர்ரத்தை வெளியே நிறுத்து வைத்து, உள்ளே சென்றுள்ளான். உடம்பை பரிசோதனை செய்ய வேண்டும் என்று தன்னுடைய வேலையை ஆரம்பித்துள்ளான். சிறிது நேரத்தில் அப்பெண்ணின் கணவன் வந்தபோது, குர்ரம் அவனை உள்ளே செல்ல தடுத்துள்ளான். இதனால், சந்தேகமடைந்த கணவன், கோபத்துடன் கதவைத் தள்ளிக் கொண்டு, உள்ளே சென்றபோது, இமாம் தன் மனைவியைக் கட்டித்தழுவி சேட்டைகளை செய்து கொண்டிருந்ததைக் கண்டான். அவன் தன்னுடைய உடைகளையும் கழட்டியிருந்தான். அரை நிர்வாண கோலத்தில் இமாம் மற்றும் தன் மனைவி என்று கண்டதால், கோபத்துடன் கத்தி, விவரத்தைக் கேட்டுள்ளான். மனைவி உண்மையினை கூறினாள். இதனால், அவன் சத்தம் போட, அருகில் உள்ளவர்கள் வந்து, அவனை அடித்துள்ளனர். அடிப்பதை தடுக்கும் இமாமையும் அந்த வீடியோவில் காண முடிகிறது. இக்காட்சியை வீடியோ, புகைப்படமும் எடுத்துள்ளனர்[3]. இவ்வளவு நடந்தும், அவர்கள் இவ்விவகாரத்தை போலீஸில் சொல்லவில்லை.

Maulana Anwarul Haq Imam booked for rape 19-08-2016கையும் களவுமாக மாட்டிக் கொண்ட இமாம்: ஒரு இமாம், மௌலானா, முஸ்லிம் மதகுரு இவ்வளவு வக்கிரத்துடன் நடந்து கொண்டுள்ளான்[4]. ஏற்கெனவே மயக்க மருந்து கொடுத்து கற்பழித்ததுடன், மறுபடியும், மந்திரிக்கிறேன் என்று அழைத்துள்ளான். போதாகுறைக்கு, யாரும் உள்ளே வரக்கூடாது என்று ஒரு ஆளை வேறு நிற்கவைத்துள்ளான். இதெல்லாம் அவனின் குரூர காமத்தையே வெளிப்படுத்துகிறது. இமாம் மற்றும் அப்பெண் உள்ளே இருப்பதை எல்லோரும் பார்க்கின்றனர், கணவன் விசயம்  என்ன என்று கேட்கிறான், மனைவி சொல்கிறாள், கணவன் “நீயெல்லாம் ஒரு முஸ்லிமா?” என்று கொதித்து அடிக்க ஆரம்பிக்கிறான். இவையெல்லாம் அந்த விடியோக்களில் தெரிகிறது[5]. இப்பொழுதும் கையும் களவுமாக பிடிபட்டும், அதிகாரத் தோரணையில் வாதிடுகிறான், மறுக்கிறான், திரும்பத் தாக்க முனைந்துள்ளான்[6]. போதாகுறைக்கு ஐந்தாறு பேர் வீடியோவும் எடுத்துள்ளனர்[7]. எல்லோர் முன்னிலையில், இத்தனையும் நிகழ்ந்தேறியுள்ளன[8]. பெண்களுக்கு எல்லாம் உரிமைகள் உள்ளன, தர்காவுக்குள் பென்கள் நுழைய அனுமதிக்க வேண்டும் என்று இன்னொரு புறம் போராட்டம் நடைபெறுகிறது. நீதிமன்றங்கள் தலையிடுகின்றன. ஆனால் அதே நேரத்தில், தர்காக்களில் நடக்கும் இத்தகைய கற்பழிப்புகளைப் பற்றி மூச்சு விடாமல் இருப்படு வேடிக்கையாக இருக்கிறது.

Najibabad, imam caught in videoகற்பழிக்கப்பட்ட பெண், கணவன், படமெடுத்த மற்றவர் மீது பொய் புகார் கொடுத்த இமாம்: மௌலானா அன்வருல் ஹக் அப்பகுதியில் அதிகாரம் மிக்க ஆள் என்பதனால், அவர்களைக் கூப்பிட்டு மிரட்டினான். மேலும், இமாம் வீடியோ உட்பட அப்படங்களை கொடுக்குமாறு அழுத்தம் கொடுத்து மிரட்டியுள்ளான். ஆனால், எடுத்தவர்கள் மறுத்தனர். இதனால், ஹக் அவர்கள் மீதே போலீஸிடம் புகார் கொடுத்து, எப்.ஐ.ஆர் போட வைத்துள்ளான்[9]. அந்த கணவன் மற்றும் நான்கு நபர்கள் மீது, தன் மனைவியுடன் அவர்கள் தவறாக நடந்து கொண்டதாகவும், ரூ.50,000/- மற்றும் நகைகளை எடுத்துச் சென்றதாகவும் புகார் கொடுத்தான்[10]. இதற்குள் அச்சம்பவத்தைப் பற்றிய வீடியோ இணைதளங்களில் பரவ ஆரம்பித்தது. இதனால், போலீஸார் திகைத்தனர். ஏற்கெனவே கற்பழிப்புகள் அதிகமாகி, உபியில் பெருத்த சர்ச்சை கிளம்பியுள்ளதால், உரிய நடவடிக்கை எடுக்குமாறு போலீஸாருக்கு உத்தரவிடுப்பட்டுள்ளது. இமாம் என்றதால், தயங்கினாலும், விடீயோ ஆதாரங்கள் வெளிவந்து விட்டதால் நடவடிக்கை எடுக்குமாறு மேலிடத்திலிருந்து உத்தரவு வந்தது.

© வேதபிரகாஷ்

31-08-2016

Maulana Anwarul Haq Imam demanded death sentence for Kamalesh Tiwari

[1] Indian Express, Bijnor Jama Masjid imam booked for rape, Written by Manish Sahu | Lucknow | Published:August 27, 2016 12:56 am

[2] IndiaTVnews, Bijnor Jama Masjid’s head Imam booked for rape, India TV News Desk, Bijnor [Published on:27 Aug 2016, 12:03:56].

[3] Daily.Bhaskar.com, Bijnor Jama Masjid Head Imam Rapes Woman on the Pretext of ‘Rescuing Her from Evil Spirits’!, Poornima Bajwa Sharma | Aug 27, 2016, 16:25PM IST

[4] timesofahmad., India: Bijnor Jami’a Masjid imam booked for rape, Times of Ahmad | News Watch | UK deskSource/Credit: IB Times, By Asmita Sarkar | August 27, 2016.

http://www.uttarpradesh.org/uttarpradesh/bijnor-rape-police-caught-maulana-red-handed-3814/

[5] http://www.uttarpradesh.org/uttarpradesh/bijnor-rape-police-caught-maulana-red-handed-3814/

[6] http://timesofahmad.blogspot.in/2016/08/india-bijnor-jamia-masjid-imam-booked.html

[7] Z-news, What a pervert! Bijnor imam caught on camera during rape – Watch shocking video, Last Updated: Saturday, August 27, 2016 – 19:56.

[8] http://zeenews.india.com/news/uttar-pradesh/what-a-pervert-bijnor-imam-caught-on-camera-during-rape-watch-shocking-video_1923153.html

[9] http://indianexpress.com/article/cities/lucknow/bijnor-jama-masjid-imam-booked-for-rape-2998311/

[10] http://www.indiatvnews.com/news/india-bijnor-jama-masjid-s-head-imam-booked-for-rape-345516

மோடியை விமர்சித்த முஸ்லிம் நடிகை கொலை செய்யப்பட்டாள் – மிஸ்டர் மோடி காஷ்மீரை எங்களுக்கு கொடுத்து விடுங்கள் என்று கேட்டவள்!

ஜூலை 19, 2016

மோடியை விமர்சித்த முஸ்லிம் நடிகை கொலை செய்யப்பட்டாள் – மிஸ்டர் மோடி காஷ்மீரை எங்களுக்கு கொடுத்து விடுங்கள் என்று கேட்டவள்!

How-qandeel-was killed by his brother-shot dead in Multan

15-07-2016 வெள்ளிக்கிழமை அன்று கொலை செய்யப்பட்டது: இந்நிலையில்தான் 15-07-2016 வெள்ளிக்கிழமை இரவு அவர் தனது வீட்டில் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டுள்ளார்[1]. சனிக்கிழமை என்று சில பாகிஸ்தான் நாளிதழ்கள் கூறுகின்றன. ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் குடும்ப வீட்டில் வைத்து அவருடைய குரல்வளையை நெரித்துக் கொன்றதை சகோதரர் வாசீம் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் ஒத்துக்கொண்டார் என்கிறது தமிழ்.பிபிசி[2]. பாகிஸ்தானிலேயே, முதலில் அவள் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டாள் என்று செய்திகள் வெளியாகின[3]. அவரது சகோதரர் வசீம் அவரை கழுத்தை நெரித்துக் கொன்றிருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது[4]. அவர் வீட்டிலிருந்து தப்பி ஓடி விட்டார். அவரை தேடி வந்த போலீசார், 16-07-2016 சனிக்கிழமை இரவு பஞ்சாப்  மாகாணத்தில் உள்ள  தேரா  காசி கான் பகுதியில் கைது செய்தனர். பிபிசியின் படி “ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் குடும்ப வீட்டில் வைத்து அவருடைய குரல்வளையை நெரித்துக் கொன்றதை சகோதரர் வாசீம் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் ஒத்துக்கொண்டார்”, என்றால், 16-07-2016 சனிக்கிழமை இரவு பஞ்சாப்  மாகாணத்தில் உள்ள  தேரா  காசி கான் பகுதியில் கைது செய்தனர் என்பது சரியாக இருக்க முடியும். இது வெள்ளிக்கிழமையில் நடந்த ஜிஹாதி கொலை என்பதனை மறைக்க முயல்வது போல தெரிகிறது.

Qanteel Bloch - brother killerகொலைசெய்த சகோதரன் கூறியது: கைது செய்யப்பட்ட பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் வசீம் பேசும்பொழுது தெரிவித்ததாவது, “எனது தங்கைக்கு மயக்க மருந்து குடுத்து அவர் உறங்கும் பொழுது கழுத்தை நெரித்துக் கொன்றேன. சமூக வலைதளங்களில்   அவளது நடவடிக்கைகள் மூலம் எங்கள் குடும்பத்திற்கு தீராத அவப்பெயரை உண்டாக்கி விட்டாள். பலூச் இனத்திற்கே எனது தங்கையால் அவப்பெயர் வந்து விட்டது. ஆபாசப் படங்களைப் போட்டு எங்களது சமூகத்தை அவர் கேவலப்படுத்தி வந்தார்[5]. மேலும் மதகுரு முஃதி காவியுடன் அவள் புகைப்படம் எடுத்துக் கொண்டதும் முக்கியமான ஒன்றாகும். நான் அவளைக் கொன்றதே அவளுக்கு தெரியாது. அவளுக்கு மயக்க மருந்தை மாத்திரை வடிவில்   கொடுத்து விட்டு அவள் உறங்கும் பொழுது கழுத்தை நெறித்துக் கொன்றேன்”, இவ்வாறு அவர் தெரிவித்தார்[6]. இந்தக் கொலை குறித்து கருத்து தெரிவித்த வசீமின் தந்தை முஹம்மத் அஷீம், இந்த கொலையை வசீம் அவனது சகோதரன் முக்கமது அஸ்லம் சஹீனின் தூண்டுதலின் பேரில் செய்தான் என்று தெரிவித்தார். இந்நிலையில் குவாந்தீல் பலூச்சின் உடலை அவரது சொந்த ஊரான சாசாதார்தின் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இது குறித்து விசாரித்த காவல்துறையினர். குடும்பத்திற்கு அவமானம் ஏற்படுத்தும் விதத்தில் நடந்துகொண்டதாக அவரது அண்ணனே பலோச்சை ஆணவக் கொலை செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்[7]. பாகிஸ்தானில், சமீபத்தில் ஆணவக்கொலைகள் அதிகரித்து வருவதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், பிரபல மாடல் அழகி கொலை செய்யப்பட்டிருப்பது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது[8]. ஆண்டொன்றுக்கு 100க்கும் மேலான கொலைகள் நடக்கின்றன.

qandeel marriage certificateகௌரவ கொலையா, மதக்கொலையா, ஜிஹாதி கொலையா – பின்னணி என்ன?: பாகிஸ்தானிய ஊடகங்களே இக்கொலையை பலவிதமாகச் சித்தரித்துள்ளன. மனித உரிமை குழுக்கள் இதனை கௌரவக் கொலையாக கருதுகின்றன. இதனை எதிர்த்து ஆர்பாட்டமும் நடத்தியுள்ளனர். ஆனால், குவான்தீன் ஒரு முஸ்லிம் பெண்ணாக இருந்து மாடல், நடிகை என்றெல்லாம் உலா வந்ததாலும், பேஸ்புக்கில் பலரை விமர்சித்ததாலும், அவள் இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிராக இருந்தாள் என்று மதவாதிகள் தீர்மானித்திருந்தனர். அந்நிலையில் அவள் கொலை செய்யப் பட்டிருந்தால், அதனை மதக்கொலை எனலாம். ஆசார இஸ்லாத்தை நீர்த்தாள், பர்தாவிலிருந்து வெளிவந்தாள், ஹிஜாபை துறந்தாள், இஸ்லாமாக வாழவில்லை என்று அவளை அடுக்கடுக்காக குறைகூறி குற்றஞ்சாட்டியுள்ளனர். அவளது சகோதரன் கொடுத்த விளக்கம், மற்றும், அவளை கொலை செய்தலால், சுவர்க்கத்தின் கதவு தனக்காக திறந்திருக்கிறது என்றேல்லாம் பேசியதைப் பார்த்தால், இது ஒரு ஜிஹாதி கொலை என்று தோன்றுகிறது[9]. “அவளைக் கொன்றதற்காக நான் வருத்தப்படவில்லை. மாறாக பெருமைப்படுகிறேன். என்னுடைய பெற்றோர் மற்றும் உறவினர்களின் மனவருத்தத்தை நீக்கியதற்காக, சுவர்க்கத்தில் ஒரு இடத்தைப் பெற்றுள்ளேன். நான் என்னுடைய குடும்ப மானத்தைக் காத்துள்ளேன், நான் எந்த டண்டனைக்கும் தயாராக உள்ளேன்”, என்றான்[10]. ஆக ஒரு ஜிஹாதி பேசுவதைப் போல பேசியுள்ளான்[11].

Qandeel-Baloch-admits-her-marriageகுவான்தீல் பலூச்சின் வீடியோ பேச்சுகள்: பாகிஸ்தான் ட்ரிப்யூன் கீழ்கண்ட ஐந்து வீடியோக்களை தொகுத்து வெளியிட்டுள்ளது[12]. பொறுமையாக அவற்றை கேட்கும் போது, ஒரு முஸ்லிம் என்ற நிலையில் அவர் பேசியுள்ளது தெரிகிறது. அவளது சகோதரன், இவற்றைக் கேட்டிருந்தால், நிச்சயமாக அவன் கொன்றிருக்க மாட்டான். ஆனால், அதே நேரத்தில் அடிப்படைவாத முஸ்லிம், ஒரு பெண் இவ்வளவு தைரியசாலியாக, அறிவாளியாக இருப்பதையும் விரும்பியிருக்க மாட்டான்.கஊழலைத் தட்டிக் கேட்டதால், அரசியல்வாதிகளும் அதிருப்தி அடைந்திருப்பார்கள்.

எண் வீடியோ விவரம் நேரம் – நிமிடம்-நொடி விடியோ லிங்
1 பேஸ்புக்கில் தன்னை வெறுத்தவர்களை, தைரியமாக நேர்கொண்டு பதில் அளித்தாள். 1.46 https://www.facebook.com/OfficialQandeelBaloch/videos/714341198710635/
2 பாகிஸ்தான் தோற்றதற்கு ஷஹீத் அப்ரிதை திட்டியது. 1.34 https://www.facebook.com/OfficialQandeelBaloch/videos/788099754668112/
3 முஸரப், இம்ரான் கான் முதலியோரது அரசியல் ஊழலைப் பற்றி விமர்சித்தது. 2.04 https://www.facebook.com/OfficialQandeelBaloch/videos/749377201873701/
4 இந்திய பிரதமர் நரேந்திர மோடியை கேள்வி கேட்டது. 5.16 https://www.facebook.com/OfficialQandeelBaloch/videos/785186261626128/
5 தனக்குத்தானே, ஒரு நிலையை ஏற்படுத்திக் கொண்டது. 0.49 https://www.facebook.com/OfficialQandeelBaloch/videos/707321109412644/

அவள் பேசும் விதம், அவள் பாகிஸ்தான் மற்றும் இந்தியா அரசியல் நிகழ்வுகளை நன்றாக அறிந்திருக்கிறாள் என்று தெரிகிறது. இந்தியாவில் கூட எந்த நடிகையும் இந்த அளவுக்கு தைரியமாக பதில் சொல்லியிருக்க முடியாது.

© வேதபிரகாஷ்

19-07-2016

With mufti - Qanteel Bloch

[1]http://www.dinamani.com/world/2016/07/17/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81/article3533905.ece

[2] பிபிசி.தமிழ், பாகிஸ்தான் மாடல் அழகியை கொலை செய்த அவரது சகோதரர் கைது, 17 ஜூலை 2016.

[3] https://jang.com.pk/latest/138693-qandeel-baloch-shot-dead-in-multan; http://atv.com.pk/qandeel-baloch-shot-dead/

[4] http://www.bbc.com/tamil/global/2016/07/160717_pak_model_brother

[5] தமிழ்.ஒன்.இந்தியா, பலூச் இனத்தின் அவமானச் சின்னம் என் தங்கை.. பாக். அழகியின் அண்ணன் வாக்குமூலம், By: Sutha, Updated: Monday, July 18, 2016, 11:38 [IST]

[6] http://tamil.oneindia.com/news/international/qandeel-balooch-killing-she-was-drugged-before-murder-258248.html

[7] நியூஸ்.7.டிவி, நிர்வாண சவால் விடுத்த பாகிஸ்தான் மாடல் அழகி ஆணவக்கொலை!, July 17, 2016.

[8]  http://ns7.tv/ta/qandeel-baloch-case-brother-held-pakistan-celebritys-murder.html

[9] http://edition.cnn.com/2016/07/18/asia/pakistan-qandeel-baloch-brother-confession/

[10]  “I have no regrets. Instead I am proud of what I did,” he added. “I have earned a place in heaven by relieving the agony of my parents and family.” Waseem, who said he has decided not to hire a lawyer, recorded his confessional statement in court on Sunday. “I saved my family’s honour and I’m ready for any punishment,” he said.

http://www.samaa.tv/pakistan/2016/07/qandeels-brother-says-he-earned-a-place-in-heaven-by-killing-her/

[11] samaa.tv/pakistan, Qandeel’s brother says he earned “a place in heaven” by killing her, July 18, 2016, By: Samaa Web Desk

[12] http://tribune.com.pk/story/1143002/5-times-qandeel-baloch-brutally-honest/

 

ஆம்பூர் கலவரம் – ஷமீல் அகமது – பவித்ரா கூடாத தொடர்புகளில் மறைக்கப்படும் விவகாரங்கள் (2

ஓகஸ்ட் 8, 2015

ஆம்பூர் கலவரம் – ஷமீல் அகமது – பவித்ரா கூடாத தொடர்புகளில் மறைக்கப்படும் விவகாரங்கள் (2)

பவித்ரா-என் கணவனிடம் இருந்து எனக்கு விவாகரத்து வேண்டும்.

பவித்ரா-என் கணவனிடம் இருந்து எனக்கு விவாகரத்து வேண்டும்.

விவாகரத்து வேண்டும் என்று கேட்ட பவித்ரா[1]: தனது மனைவியை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை பழனி தாக்கல் செய்தார். இதனால், தனிப் படை அமைத்து பவித்ராவை போலீஸார் தேடினர். அம்பத்தூரில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த பவித்ராவை மீட்டனர். இதைத்தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், சி.டி.செல்வம் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு பவித்ரா நேற்று ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது நீதிமன்றத்தில் நடந்த விசாரணை வருமாறு[2]:

நீதிபதிகள்: நீ தான் பவித்ராவா?

பவித்ரா: ஆமாம், நான்தான் பவித்ரா.

நீதிபதிகள்: நீ யாருடன் செல்ல விரும்புகிறாய். பெற்றோருடனா அல்லது கணவருடனா?

பவித்ரா: பெற்றோருடன் செல்ல விரும்புகிறேன். ஆனால், எனக்கு விவாகரத்து வேண்டும். ‘என் கணவரிடம் இருந்து என் பெற்றோர் விவாகரத்து வாங்கித்தர வேண்டும்’ என்றும் நீதிபதியிடம் அவர் கூறினார்.

நீதிபதிகள், ‘உன்னுடைய பெற்றோருடன் செல்கிறாயா?’ என்று கேட்டார்கள். அப்போது கோர்ட்டு அறையில் இருந்த வக்கீல் சங்கத்தலைவர் பால்கனகராஜ், ‘இந்த பெண் காணவில்லை என்ற வழக்கு விசாரணையின் தொடர் நடவடிக்கையில் தான் ஆம்பூரில் கலவரம் ஏற்பட்டது’ என்று கூறினார். இதையடுத்து நடந்த விவாதம் பின்வருமாறு:-

நீதிபதிகள்:- பத்திரிகைகளில் வெளியான செய்திகளை படித்தோம். ஷமில் அகமதுவுக்கு திருமணமாகிவிட்டது. உனக்கும் திருமணமாகிவிட்டது. கணவர், குழந்தை உள்ளனர். அப்புறம் என்ன? இப்போது அந்த வாலிபரும் இறந்துவிட்டார். அவரது குடும்பமும் பாதிக்கப்பட்டிருக்கும். இதுபோன்ற பிரச்சினைகளினால் தான், மதக்கலவரம், சாதிக்கலவரம் நடக்கிறது. ஏற்கனவே திருமணம் நடக்காத ஆணும், பெண்ணும் வேறு மதங்களை சார்ந்தவர்களாக இருந்தாலும், சிறப்பு திருமணச் சட்டத்தின்கீழ் இருவருக்கும் திருமணம் செய்துவைக்கலாம்[3]. ஆனால், இங்கு இருவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளது. அப்படி இருக்கும்போது எப்படி இவர்களது திருமணத்தை ஏற்க முடியும்?  [இருவருக்கும் குழந்தைகள் உள்ளன என்ற விசயம் இங்கு வெளிப்படுகிறது. மேலும் இரு மதத்தினர் சம்பந்தப்பட்டிருப்பதால், இச்சட்டம் பற்றி குறிப்பிடுவது, அத்தகைய நிலை இருப்பதை அவர்கள் அறிந்துள்ளனர் என்று தெரிகிறது]

ஆம்பூர் பவித்ரா.- பழனி, இடையில் ஷமீல்

ஆம்பூர் பவித்ரா.- பழனி, இடையில் ஷமீல்

பிடிவாதமாக விவாகரத்து கேட்ட பவித்ரா[4]: நீதிபதிகள் எவ்வளவு அறிவுரை கூறியும், விவரங்களை எடுத்துக் கூறியும், பவித்ரா பிடிவாதமாக விவாக ரத்து வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தது அனைவரையும் திகைக்க வைத்தது.

பவித்ரா:- என் கணவனிடம் இருந்து எனக்கு விவாகரத்து வேண்டும்.

நீதிபதிகள்:- விவாகரத்து என்ன பெட்டிக்கடையில் கிடைக்கும் பொருளா? காசு கொடுத்து வாங்குவதற்கு? விவாகரத்து வேண்டும் என்றால் அதுதொடர்பாக வழக்கை தாக்கல் செய்ய வேறு நீதிமன்றம் உள்ளது. நினைத்தவுடன் விவாகரத்து கிடைத்துவிடுமா?

அரசு வக்கீல் தம்பித்துரை:- ஆம்பூரில் நடந்துள்ள கலவரத்தில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள சொத்துகள், வாகனங்கள் நாசமாகியுள்ளன.

பால்கனகராஜ்:- இந்த வழக்கை சாதாரண ஆட்கொணர்வு மனுவாக ஐகோர்ட்டு கருதக்கூடாது. ஏன் என்றால், ஏற்கனவே திருமணமான ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்வது தொடர்பான பிரச்சினைக்கு தெளிவான சட்டம் இல்லை. எனவே, இந்த வழக்கை அரிதான வழக்காக கருதி, சிறப்பு கவனம் செலுத்தி இதுபோன்ற பிரச்சினைகளில் போலீசார் எப்படி செயல்பட வேண்டும் என்று விதிமுறைகளை உருவாக்க வேண்டும்.

பவித்ரா, ஷமீல் அஹ்மது

பவித்ரா, ஷமீல் அஹ்மது

பவித்ராவுக்கு நீதிபதிகள் ஆலோசனை[5]: நீதிபதிகள்:- (பவித்ராவை பார்த்து) உனக்கு கணவர், குழந்தைகள் இருக்கின்றனர். அவர்களுடன் சந்தோஷமாக வாழவேண்டும். தேவையில்லாத பிரச்சினை எதற்கு? உனக்கு ஷமில் அகமது தெரியுமா?

பவித்ரா:- ஒரே கம்பெனியில் வேலை செய்யும்போது அவரை தெரியும்.

சென்னை உயர் நீதிமன்ற வழக் கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் (குறுக் கிட்டு): இது முக்கியமான வழக்கு என்பதால் இங்கே நாங்கள் எல்லாம் கூடியிருக்கிறோம். ஆம்பூர் சம்பவத்துக்கு இந்தப் பெண்தான் மூல காரணம். அங்கு நடந்த வன்முறையில் அரசுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏராள மானோர் கைது செய்யப் பட்டுள்ளனர். திருமணமான ஒரு பெண், திருமணமான ஆணுடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் சென்றுவிட்டால், அந்த வழக்கை எப்படி கையாள வேண்டும்? என்று போலீஸாருக்கு இந்த நீதிமன்றம் வழிகாட்டுதல்களை உருவாக்கித் தரவேண்டும். அது ஒரு முன்உதாரணமாக இருக்கும்[6].

நீதிபதிகள்: ஆம்பூரில் நடந்த சம்பவத்துக்கு நாங்களும் வருந்துகிறோம். பவித்ரா மேஜரான பெண். அவரை நாங்கள் கட்டுப்படுத்த முடியாது. அவர் பெற்றோருடன் செல்ல விரும்புகிறார்.

ஆர்.சி.பால்கனகராஜ்: ஆம்பூரில் இப்போது சுமுகமான சூழல் இல்லை. இந்நிலையில், பவித்ராவை அங்கு அனுப்பினால் அவருக்கு பாதுகாப்பாக இருக்காது. இதை கருத்தில் கொண்டு தாங்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்[7].

அரசு வக்கீல்:- அவரது கருத்தை இந்த வழக்கில் பதிவு செய்யக்கூடாது. ஏற்கனவே அவர் காணாமல்போனதாக பதிவு செய்யப்பட்ட கிரிமினல் வழக்கு போலீஸ் விசாரணையில் உள்ளது. அந்த விசாரணைக்கு பாதிப்பு வரக்கூடாது.

பால்கனகராஜ்:- தற்போது இவ்வளவு பெரிய பிரச்சினைக்கு இந்த பெண் காணாமல்போன சம்பவம் தான் காரணம். எனவே, இந்த பெண்ணை பெற்றோரிடம் தற்போது அனுப்பினால், தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்.

நீதிபதிகள்:- தற்போது பவித்ரா எங்கே வசிக்கிறார்?

பவித்ரா:- சென்னை அம்பத்தூரில் உள்ள ஒரு பெண்கள் விடுதியில் உள்ளேன்.

நீதிபதிகள்:- அதே விடுதியில் 2 வாரத்துக்கு தங்கி இருக்க வேண்டும். இவருக்கு தேவையான பாதுகாப்பை போலீசார் வழங்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.

டெல்டா ஷூ, ஆம்பூர்- ஷமில் அஹ்மது, பவித்ரா

டெல்டா ஷூ, ஆம்பூர்- ஷமில் அஹ்மது, பவித்ரா

ஜூலை 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பு[8]: இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘அம்பத்தூரில் ஒரு பெண்கள் விடுதியில் தங்கி இருந்து கடை ஒன்றில் வேலை செய்துவருவதாகவும், தன் பெற்றோருடன் செல்ல விரும்புவதாகவும் பவித்ரா கூறினார். ஆம்பூர் கலவரம் பற்றியும் இங்கே கூறினார்கள். எனவே இந்த வழக்கை வருகிற 23-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன். அன்று பவித்ரா நேரில் ஆஜராக வேண்டும். அதுவரை தற்போது அவர் தங்கி இருக்கும் விடுதியிலேயே தங்கியிருக்க வேண்டும். அவருக்கு தேவையான பாதுகாப்பை போலீசார் வழங்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.

© வேதபிரகாஷ்

08-08-2015

[1] தினத்தந்தி, ஆம்பூர் கலவரத்துக்கு காரணமான பவித்ரா சென்னையில் தங்கி இருக்க உத்தரவு, மாற்றம் செய்த நாள்: செவ்வாய், ஜூலை 07,2015, 5:15 AM IST; பதிவு செய்த நாள்: செவ்வாய், ஜூலை 07,2015, 4:36 AM IST

[2] தி இந்து, ஆம்பூர் பவித்ரா உயர் நீதிமன்றத்தில் ஆஜர்: 23-ம் தேதி வரை விடுதியில் தங்கியிருக்க உத்தரவு, Published: July 7, 2015 07:33 ISTUpdated: July 7, 2015 15:21 IST

[3] 4. Conditions relating to solemnization of special marriages

Notwithstanding anything contained in any other law for the time being in force relating to the solemnization of marriages, a marriage between any two persons may be solemnized under this Act, if at the time of the marriage the following conditions are fulfilled, namely:

(a) Neither party has a spouse living;

1[(b) Neither party-

(i) Is incapable of giving a valid consent to it in consequence of unsoundness mind; or

(ii) Though capable of giving a valid consent, has been suffering from mental disorder of such a kind or to such an extent as to be unfit for marriage and the procreation of children; or

(iii) has been subject to recurrent attacks of insanity 2[* * *]

(c) The male has completed the age of twenty-one years and the female the age of eighteen years;

3[(d) The parties are not within the degrees of prohibited relationship;

Provided that where a custom governing at least one of the parties permits of a marriage between them, such marriage may be solemnized, not withstanding that they are within the degrees of prohibited relationship; and ]

4[(e) Where the marriage is solemnized in the State of Jammu and Kashmir, both parties are citizens of India domiciled in the territories to which this Act extends.]

5[Explanation. -In this section, “customs”, in relation to a person belonging to any tribe, community, group or family, means any rule which the State Government may, by notification in the Official Gazette, specify in this behalf as applicable to members of that tribe, community, group or family;

http://www.vakilno1.com/bareacts/splmarriage1954/specialmarriageact.html

[4] http://www.dailythanthi.com/News/State/2015/07/07043612/Root-cause-of-the-Ambur-mishap-pavithra-ordered-to.vpf

[5] http://tamil.oneindia.com/news/tamilnadu/aambur-violence-pavithra-appear-madras-high-court-230417.html#slide161128

[6]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D-23%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81/article7394400.ece

[7] ஆம்பூருக்குச் சென்றால் அவருக்கு / பவித்ராவுக்கு பாதுகாப்பாக இருக்காது, என்பதும் நோக்கத்தக்கது. யாரால் அவருக்கு அத்தகைய பாதுகாப்பு பாதகம் ஏற்படும் நிலை ஏற்படும் என்றும் யோசிக்கத் தக்கது. முஸ்லிம் அமைப்புகள் கலவரத்திற்கு காரணம் பவித்ரா தான் என்ற பிரச்சாரத்தை, இணைதளம் மூலமும், டிவி-பேட்டிகள் (ராஜ்-டிவி) மூலமும் செய்துள்ளன.

[8] Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/aambur-violence-pavithra-appear-madras-high-court-230417.html#slide161128

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (9)

நவம்பர் 19, 2014

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (9)

Mamta with Muslims encouraging terrorism

Mamta with Muslims encouraging terrorism

மம்தாவின் மறைப்பு வேலைகள் (05-11-2014 அன்றைய பேச்சு)[1]: இவ்வளவு நடந்தும், மம்தா இவ்விசயத்தை அரசிய ரீதியிலேயே திரித்து விளக்கம் கொடுத்துக் கொண்டுருக்கின்றார். 05-11-2014 (புதன்கிழமை) கட்சியின் தொண்டர்களுக்கு முன்பாக 24-பர்கானாவில் பேசும்போது, “துர்கா பூஜை மற்றும் ஈத் பண்டிகைகளின் போது கூட குண்டு வெடித்தது, ஆனால் யாரும் பாதிக்கப் படவில்லை. தீவிரவாதிகள் ஒரு தனி இனத்தைச் சேர்ந்தவர்கள், அவர்களுக்கு எந்த மதமும் கிடையாது……… ஆனால், மேற்கு வங்காளத்தில் மக்களை மதரீதியில் பிரிக்கும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நான் பங்களாதேசத்தை விரும்புகிறேன், ஆனால், எல்லை ஊடுருவல்களை எதிர்க்கிறேன்…………..ஆனால், ஊடுருவல்கள் நடக்கும் எல்லைகளுக்கு யார் காவல்?”, என்று வினவினார். அதாவது, தேசிய எல்லை பாதுகாப்புப் படையினர் தாம் பொறுப்பு என்ற தோணியில் பேசினார். “எல்லா முஸ்லிம்களும் ஜிஹாதிகள் போல குறிப்பிடுகிறார்கள். ஆனால், எல்லைகளைத் தாண்டி எனது மாநிலத்தில் வந்து பிரச்சினையைக் கிளப்புகிறார்களே, ஏன்”, என்று கேட்டுவிட்டு, “நாங்கள் சுவாமி விவேகானந்தரின் தத்துவத்தை நம்புகிறோம். விவேகானந்தர் ஒரு முஸ்லிம் வீட்டிற்குச் சென்று ஹுக்கா புகைத்தார், தனது ஜாதி போய் விட்டதா என்று உறுதி செய்தார். உங்கள் மதத்தை விரும்புங்கள், அதே போல மற்ரவர்களின் மதங்களையும் விரும்புங்கள்”, என்று உபன்யாசம் செய்தார். எல்லாம் சரிதான், ஆனால், முஸ்லிம்கள் அவ்வாறில்லையே? பிறகு அவர்களுக்குத்தானே இந்த அறிவுரைகளை சொல்ல வேண்டும்?

mamta's secularism and swami vivekananda

mamta’s secularism and swami vivekananda

ஷேக் அஸினாவுக்கு மம்தா என்ன பதில் சொல்வார்?: பங்களாதேச பிரதம மந்திரி இவ்விவகாரத்தில் கூறியிருப்பது நோக்கத்தக்கது[2], “பங்களாதேசத்துத் தீவிரவாதிகள் மேற்கு வங்காளத்தில் தாராளமாகத் தங்கியிருப்பதும், அவர்கள் எங்களது அரசுக்கு எதிராக செயல்படுவதும், மிக்க வருத்தத்தை அளிக்கிறது”. முதலில் அவர்கள் இந்தியாவிலிருந்து வெளியேற்றப் படவேண்டும் என்றார். “மேற்கு வங்காளத்தில் தாராளமாகத் தங்கியிருக்க” எப்படி மம்தா மற்றும் முந்தைய அரசியல்வாதிகள் உதவியிருக்க வேண்டும்? இதே நேரத்தில், ஜம்மு-காஷ்மீரத்தில் சட்டத்திற்குப் புறம்பாக “இடம் பெயந்த வேலையாட்கள்” என்ற ரீதியில் தங்கியிருக்கும் பங்காளதேசத்தவர்களும் பிடிபட்டுயுள்ளனர்[3]. இதில் பங்காளதேசத்து இரட்டை வேடங்களையும் கவனிக்க வேண்டும், ஏனெனில், அங்கு வேலையில்லை, இடமில்லை போன்ற காரணங்களை வைத்துக் கொண்டு, பங்களாதேசத்து ராணுவமே, மக்களை இந்தியாவிற்குள் விரட்டியடிக்கின்றது என்ற குற்றச்சாட்டும் உள்ளது. முன்பு ஊடுருவல் ஏன் என்றதற்கு, தமது நாட்டில், மக்கள் பொங்கி வழிகின்றனர், அவ்வாறு வழியும் போது, சிதறி மக்கள் பக்கத்தில் உள்ள இந்திய பகுதிகளில் சிந்தத்தான் செய்வார்கள், என்று தத்துவ விளக்கம் அளிக்கப் பட்டது. ஆனால், அவர்கள் மக்களாக இல்லாமல், முஸ்லிம்களாக இருந்து, அவர்கள் அவ்வாறே அடிப்படைவாதத்துடன் இருந்து, ஜிஹாதிகளுடன் சேந்து, இந்தியவிரோத செயல்களில் ஈடுபடும் போது தான், அத்தகைய சிதறல்கள், இயற்கையானது அல்ல, திட்டமிட்டு செய்யப் படும் வேலை என்றாகிறது.

Burdwan blast timeline Telegraph

Burdwan blast timeline Telegraph

பெங்காளிஎனப்படுகின்ற இந்திய முஜாஹித்தின் திட்டமும், ஜே.எம்.பியின் ஜிஹாதிவடிவமைப்பும்: மேற்கு வங்காளம், அசாம் மற்றும் பங்காளதேசம் இவற்றை இணைத்து ஒரு செயல்திட்டத்தை, பாகிஸ்தானை ஆதரமாகக் கொண்டு இயங்கி வரும் இந்திய முஜாஹித்தீன் இணைதள பரிமற்றங்கள், இ-மெயில் உரையாடல்கள் மூலம் கடந்த ஜூலை 2013 காலத்திலேயே வெளிவந்தது. இவற்றில் பங்கு கொண்டவர்கள் – அஹமது சித்திபாபா அல்லது யாஸின் பட்கல், ஆபீப் ஜிலானி மோடா, மீட்ஜா ஷாதாப் பேக், அசதுல்லா அக்தர் முதலியோர். அது பி.என்.ஜி “bng” என்று குறிப்பிடப்பட்டுள்ளது, மேற்கு வங்காளத்தைக் குறிக்கும் என்று, அந்த பெங்காளி -“Bengali”- திட்டத்தை ஆராய்ந்த என்.ஐ.ஏ குழுவினர் எடுத்துக் காட்டினர். ஜே.எம்.பியும் அதே முறையில் 2007லிருந்து செயல்பட்டு வந்துள்ளது. பர்த்வான் குண்டுவெடிப்பு வழக்கில் ஷைகுல் இஸ்லாம் அல்லது அப்துல்லா அசாமில் கைது செய்யப் பட்டான். இவன் ஷகீல் அஹமது அல்லது ஷமீன் என்கின்ற ஜே.எம்.பியின் கூட்டாளி. இவர்கள் எல்லோருமே, ஒருவரையொருவர் அறிந்தவர்களே. யாஸின் பட்கல் கொல்கொத்தாவில் கைது செய்யப் பட்டு, விடுவிக்கப் பட்டதும், திட்டத்தின் அங்கமாக இருக்கலாம். சுமார் 50 மேற்கு வங்காள அரசில்வாதிகள் இவர்களுடன் தொடர்பு கொண்டுள்ளனராம். ஆகவே, “பெங்காளி” எனப்படுகின்ற இந்திய முஜாஹித்தின் திட்டமும், இந்த ஜே.எம்.பியின் ஜிஹாதி-வடிவமைப்புடன் ஒத்துப் போகிறது.

Burdwan bomb making cartoon

Burdwan bomb making cartoon

40 அரசியல்வாதிகளின் தொடர்பு, 27 வழிதடங்கள், 57 தீவிர அமைப்புகள்: பர்த்வான் குண்டுவெடிப்புத் தொழிற்சாலை விசயத்தில் சுமார் 40 அரசியல்வாதிகள் சம்பந்தப் பட்டிருப்பதாக என்.ஐ.ஏ அதிகாரி தெரிவித்துள்ளார்[4]. இதை மம்தா பேனர்ஜியை சந்தித்த போதும் என்.ஐ.ஏ.அதிகாரிகள் சொல்லியிருக்கிறார்கள். பங்காளதேசத்திலிருந்து, உள்ளே நுழைந்து, வெளியே செல்ல 27 வழிதடங்களை உபயோகப்படுத்தியதையும் கண்டறிந்துள்ளார்கள். அவையாவன –

  1. ஒரு மாவட்டத்திலிருந்து, இன்னொரு மாவட்டத்திற்குள் நுழைவது-வெளியே செல்வது.
  2. ஒரு மாநிலத்திலிருந்து, இன்னொரு மாநிலத்திற்குள் நுழைவது-வெளியே செல்வது.
  3. நேபாளம் மற்றும் பங்களாதேசம் நாடுகளின் எல்லைகளில் உள்ள பிரதேசங்களுக்குள் நுழைவது-வெளியே செல்வது.

மேற்கு வங்காளத்தில் மொத்தம் 57 தீவிர அமைப்புகளை பர்த்வான், மூர்ஷிதாபாத், பிர்பும், ஜல்பைகுரி, கொச்-பிஹார், ஹௌரா, வடக்கு மற்ரும் தெற்கு 24-பர்கானா மாவட்டங்களில் ஏற்படுத்தியுள்ளார்கள். இவை உபி, பிஹார், ஜார்கெண்ட் மற்றும் சிக்கிம் மற்றும் நேபாளம் மற்றும் பங்களாதேசம் முதலிய இடங்களுக்குச் சென்று வர ஏதுவாக அமைத்திருக்கிறார்கள்[5]. 2007-14 வரை, இந்த அளவிற்கு அவர்களால் முடிந்துள்ளது என்றால், உள்ளூர்வாசிகள் எந்த அளவிற்கு ஒத்துழைத்துள்ளார்கள் என்பதும் தெரிகிறது. அதாவது முஸ்லிம்கள், முஸ்லிம்கள் என்ற வகையில் தான் உதவி, செயபட்டிருக்கிறார்களே அன்றி, இந்தியர்களாக அவர்களைக் காட்டிக் கொடுக்கவில்லை. முஸ்லிம்கள், முஸ்லிம் தீவிரவாதிகளை, தீவிரவாதிகளாகவே கருதவில்லை. ஜிஹாதிகளை ஷஹீதுகளாக/உயிர்த்தியாகிகளாகத்தான் பார்த்து வருகின்றனர் என்பது புரிகிறது.

Women involvement in bomb making etc

Women involvement in bomb making etc

இளம் ஜோடிகள் ஜிஹாதியில் ஈடுபட்டுள்ள விசயம்[6]: இவ்வழக்கில் பல இளம் ஜோடிகள் ஈடுப்பட்டுள்ளது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 12-ஜோடிகள்  இதில் சம்பந்தப் பட்டிருப்பதுஇரான் மற்றும் இராக் நாடுகளில் ஈடுபடுத்தப் படும் பெண் ஜிஹாதிகள் மற்றும் ஐசிஸ் வேலைப்பாடு போன்று தோன்றுகிறது. இருப்பினும், முஸ்லிம்கள் பிரச்சினை போன்று செக்யூலரிஸ ஊடகங்கள், அறிவிஜீவிகள், சமூகவியல் பண்டிதர்கள் முதலியோர் மௌனம் காக்கின்றனர்.

  1. பாத்திமா-ஸஜித்.
  2. ஆயிஸா-யூசுப்.
  3. மோனியா பேகம்- தல்ஹா ஷேக்
  4. ரஸியா பீவி – ஷகில் அஹமது.
  5. அலினா பீவி – ஹஸான் சாஹிப்
  6. சமீனா-நஸிருல்லாஹ்
  7. அலிமா-ஹலான்
  8. கைஷா-நயீம்
  9. செலினா பேகம்- கலாம்.
  10. ரபியா-ஹபிபூர்
  11. சய்மா-லத்தீப்
  12. கதீஜா-ஷேய்க்கு

இப்படி 12 ஜோடிகள் வெடிகுண்டு ஜிஹாதியில் பயிற்சி பெற்றுள்ளதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. ஆனால், இதில் ஆண்களில் பெரும்பாலோர் வங்காளதேசத்தினராக இருப்பதும், பெண்கள் இந்தியர்களாக இருப்பதும் வியப்பை அளிக்கிறது. மேலும் இந்திய பெண்களின் விவரங்கள் அறியப்படாமல் இருக்கின்றன. இவர்கள் எப்படி ஒட்டு மொத்தமாக ஜிஹாதி சித்தாந்தாத்தை ஏற்று வேலை செய்ய ஆரம்பித்தார்கள் என்பது புதிராக உள்ளது. என்.ஐ.ஏ, உள்துறை அமைச்சகத்திற்க்கு கொடுத்துள்ள ஆரம்ப கட்ட அறிக்கையில் ஜே.எம்.பி பற்றியோ, ஷேக் ஹஸீனா மற்றும் காலிதா ஜியா இவர்களை கொல்ல சதி போன்ற விவரங்களைக் குறிப்பிடவில்லையாம். ஆனால், வெடிகுண்டு தயாரிப்பு ஜிஹாதில் ஈடுபட்ட 14 பெண்களின் அடையாளத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்களாம்! அசாம் முதலமைச்சர் தருண் ககோய் செய்தியாளர்களிடம் 04-11-2014 (செவ்வாய்கிழமை) சொன்னதாவது[7], “ஜே.எம்.பி இங்கு முஸ்லிம் பெண்களிடம் பர்கா / பர்தா துணிகளை விற்கும் போர்வையில் ஒரு பெண்கள் பிரிவை ஏற்படுத்த முயன்றுள்ளார்கள். பார்பேடா மற்றும் நல்பாரி ஊர்களில் உள்ள இளைஞர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று ஜிஹாதி பயிற்சி பெற்றுள்ளனர்.” அதாவது, முஸ்லிம் பங்களாதேசத்து பெண்களும், இந்திய மாநிலங்களில் நுழைந்து ஜிஹாதிகளுக்கு உதவி வருகிறார்கள் என்று தெரிகிறது[8]. பெண்கள் ஜிஹாதிகளாக மாறுவது, ஜிஹாதிகளாக வேலை செய்வது, இப்படி ஜோடிகளாக இணைந்து வேலை செய்வது, ஒரு திட்டமிட்ட மனப்பாங்கை, தீர்மானமாக உள்ள போக்கைக் காட்டுகிறது.

பெண் ஜிஹாதிகள் உருவாகும், உருவாக்கும் முறை: மேற் குறிப்பிட்ட 12-ஜோடிகளிடம் மேற்கொண்ட விசாரணையில் அறியப் படுவதாவது[9]:

  1. பெண்களை வைத்து பெண்களை இந்த வேலைக்கு அமர்த்துகிறார்கள். முஸ்லிம் பெண்கள் என்பதாலும், சட்டம்-காவல் துறையினர் உடனடியாக அவர்களிடம் விசாரணை, சோதனை முதலியவற்றை மேற்கொள்ள முடியாது. பர்கா அணிந்து கொண்டிருப்பதால், பலதுறைகளில் அவர்களது அடையாளம் மறைக்கப் படுகிறது.
  2. முதலில் மதரீதியில் ஆரம்பித்து ஊக்குவிப்பது, அவர்களது மனங்களை மாற்றி நம்பிக்கையை ஏற்படுத்துவது, பிறகு ஜிஹாதிக்கு தயார் செய்வது.
  3. முதலில் உடல் பயிற்சி, சித்தாந்த வகுப்புகள், சொற்பொழிவுகள், முதலியவற்றில் ஈடுபடுத்துதல்.
  4. மதத்திற்காக எதையும் செய்வேன் என்ற நிலையை உருவாக்குவது – ஷயீத் தத்துவத்தை ஏற்க வைத்தல்.
  5. பிறகு படிப்படியாக துப்பாக்கி சுடுதல், குண்டுகள் தயாரித்தல் முதலியவற்றைச் சொல்லிக் கொடுத்தி, ஜிஹாதியில் ஈடுபடுத்துதல்.
  6. அதற்கான ரசாயனப் பொருட்கள் வாங்குவது, ஜாக்கிரதையாகக் கொண்டு வருவது, அதற்கு பர்கா உடையை பயன்படுத்துவது.
  7. பணத்திற்காக, கள்ளநோட்டுகளை உபயோகித்தல், விநியோகித்தல், மாற்றுதல் முதலியவற்றில் ஈடுபடுத்துதல்.
  8. பயிற்சி பெற்ற பெண்கள், மற்ற பெண்களுக்கு பயிற்சி கொடுப்பது. இதற்கு வீடியோக்கள், புத்தகங்கள் முதலியவை அதிகமாகப் பயன் படுத்தப் படுவது.
  9. முடிந்த வரையில் குடும்பம் அல்லது நெருங்கிய உறவினர்களை இச்செயல்களில் ஈடுபடுத்துதல்.
  10. எந்த நேரத்திலும் ரகசியத்தைக் காப்பது – அல்லாவின் பெயரால் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொள்வது, ஜிஹாதிகளுக்குக் கட்டுப்படுவது முதலியன.

© வேதபிரகாஷ்

16-11-2014

[1] http://www.newindianexpress.com/nation/Mamata-Plays-Down-Blast-Lambasts-BJP/2014/11/06/article2509368.ece

[2] Prime Minister Sheikh Hasina said it was painful to know that “Bangladesh’s terrorists are getting sanctuary in West Bengal and hatching a conspiracy against the government.”

http://www.thehindu.com/todays-paper/tp-national/hasina-urges-india-to-flush-out-bangladeshi-militants/article6554208.ece

[3] http://www.thehindu.com/news/cities/kolkata/bengali-migrant-workers-released-by-jk-police/article6551473.ece

[4] In their report to NIA DG Sharad Kumar, sleuths hinted at the involvement of at least 40 politicians helped these terrorists gain a foothold in Bengal.

[5] http://timesofindia.indiatimes.com/city/kolkata/NIA-hints-at-link-of-40-netas-with-terror-module/articleshow/44964492.cms

[6] Yatish Yadav, NIA Probe in Burdwan Finds Jihad a Family Business in West Bengal, Published in Indian Express: 02nd Nov 2014 06:07:00 AM

[7] http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-otherstates/bangladesh-outfit-trying-to-set-up-womens-wing-in-assam/article6565371.ece

[8] Assam Chief Minister Tarun Gogoi on Tuesday said that terror outfit Jamaat’ul Mujahideen of Bangladesh (JMB) was trying to establish a women’s wing in the state under the garb of selling burkhas to Muslim women. Assam districts of Barpeta and Nalbari. He said some youth from these two districts had also gone abroad for undergoing training in jihadi activities.

[9] http://www.newindianexpress.com/thesundaystandard/NIA-Probe-in-Burdwan-Finds-Jihad-a-Family-Business-in-West-Bengal/2014/11/02/article2503641.ece

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (2)

ஒக்ரோபர் 17, 2014

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (2)

 

Abdul Hakim alias Hassan at Burdwan hospital.

Abdul Hakim alias Hassan at Burdwan hospital.

குண்டு தயாரிப்பு தொழிற்சாலை நடத்தும் ஜிஹாதிகள்: “பர்த்வானில் வீடு ஒன்றில் தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை தயாரித்தபோது, திடீரென குண்டுகள் வெடித்து சிதறியதில் 2 தீவிரவாதிகள் பலியாகினர்”, என்று போலீஸாரே ஒப்புக் கொண்ட பிறகு, இதைப் பற்றி மற்றவர்கள் ஆராயத் தொடங்கினர்.  அதன் மூலம் பல விசயங்கள் வெளிவந்தன. ஜமாத்-உல்-முஜாஹித்தீன் வங்காளதேசம் [Jamaat-ul-Mujahideen Bangladesh (JMB)] இந்திய முஜாஹித்தீன் [ Indian Mujahideen (IM)] மற்றும் அல்-ஜிஹாத் [ Al Jihad, a new outfit with bases in Pakistan] பாகிஸ்தானின் புதிய ஜிஹாதி இயக்கம் முதலியன இந்த குண்டு தயாரிப்பு தொழிற்சாலையில் தொடர்பு கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது[1]. அதாவது அண்டைநாடுகளிலுள்ளா ஜிஹாதி அமைப்புகள் கைகோர்த்துக் கொண்டு வேலை செய்கின்றன என்றும் தெரிகிறது. இருப்பினும், முஸ்லிம்கள் இவ்வாறு தீவிரவாத செய்களில் ஈடுபட்டு வருவதை, மற்ற முஸ்லிம்கள் கண்டிப்பதாகத் தெரியவில்லை. மாறாக அவர்களுக்கு உதவி வருவது தான், விசாரணையில் மறுபடி-மறுபடி தெரிய வருகிறது.

Hasan Molla - burdwan-blast

Hasan Molla – burdwan-blast

தீவிரவாத குற்றங்களில் அரசியல் நுழைப்பது: இது பற்றிய விவரங்கள் வெளி வந்தாலும், திரிணமூல் காங்கிரஸ்காரர்கள் தங்களுக்கும், அதற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று உறுதியாக வாதித்து வருகின்றனர். கம்யூனிஸ்ட் மற்றும் பிஜேபி கட்சியினர், என்.ஐ.ஏ இதில் புலன் விசாரணை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால், திரிணமூல் காங்கிரஸ் போலீஸார் தகுந்த நடவடிக்கை எடுத்தது மட்டுமல்லாது, இவ்விசயத்தில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதால், மத்திய அரசு, என்.ஐ.ஏ மூலம் மூக்கை நுழைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியதோடு, அதற்கு ஆதரவாக, ஒரு ஆர்பாட்டத்தையும் நடத்தியுள்ளனர். பதிலுக்கு பிஜேபி ஒரு ஆர்பாட்டத்தை நடத்தியுள்ளது. ஜிஹாதிகளின் கைவேலை மற்றும் அதன் தீவிரத்தைக் கண்டுகொள்ளாமல் இப்படு அரசியல் செய்து வருவது நடுநிலையாளர்களைத் திடுக்கிட வைத்துள்ளது. ஏற்கெனவே, திரிணமூல் காங்கிரஸ்காரர்கள், முஸ்லிம்களுக்கு பலமுறைகளில் தாஜா செய்து வருகிறார்கள் – பங்களாதேச அகதிகளை உள்ளே நுழைய வசதி செய்து தருகிறார்கள்; தேர்தல் ரேஷன் அட்டை, அடையாள அட்டை, முதலியவற்றைக் கொடுத்து அவர்களது குடியுரிமையினையும் உறுதி செய்து வருகிறார்கள்;

Madrasha Dinia Madania at Khakhragarh, Burdwan.

Madrasha Dinia Madania at Khakhragarh, Burdwan. Courtesy – twocircles

டு சர்க்கிள்ஸ் நெட்வொர்க் கொடுக்கும் விவரங்கள்[2]: இது முஸ்லிம் சார்புடைய இணைதளம் என்பதால், அவர்களது கருத்தையும் அறியும் வண்ணம் அவர்களது தகவல்கள் கொடுக்கப் படுகின்றன. மதரஸாவை தவறான முறையில் அடையாளங் காணப்பட்டுள்ளது என்பது இவர்களின் வாதம். இருப்பினும் அவர்கள் கொடுக்கும் விவரங்கள் மற்றும் மேலும் வெளிவரும் விவரங்கள் அவர்களது வாதத்திற்கு ஒவ்வாததாக இல்லை. 11-10-2014 அன்று TCN குழு அங்கு வந்தபோது பதட்டமான நிலையிருந்தது. போலீஸ்கார்ர்கள் அங்கு அதிகமாக குவிந்ததும், ஊடகக் காரர்கள் வந்ததும், அங்கிருக்கும் மக்களுக்கு சங்கடமாக இருந்தது. ஷாநவாஜ் கான் என்கின்ற சோடு [Shahnawaz Khan alias Chhotu] என்பவன் தான் இறந்த உடல்கள் மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்ல போலீஸாருக்கு உதவினான். அவன் அங்கு பிளம்பராக வேலை செய்து வருகிறான். பர்த்வான் போலீஸ் கமிஷனர் – சையது மொஹம்மது ஹொஸைன் மீரஜஜ்[ Burdwan district police chief Syed Muhammad Hossain Meerza], கூடுதல் எஸ்பி – தருண் ஹால்தர் [Additional SP Tarun Halder], SDPO அம்லன் குசும் கோஷ் [SDPO Amlan Kusum Ghosh], அப்துல் கபூர் [IC of Burdwan Abdul Gaffar] முதலியோர் அங்கு வந்தனர். சோதனையிட்ட போது, கீழ்கண்டவை கெண்டெடுக்கப் பட்டன[3]:

  • 59 உடனடி தயாரிப்பு வெடிகுண்டுகள் – உள்ளுரில் தயாரிக்கப்பட்டவை [59 improvised explosive devices (IEDs) or home-made bombs],
  • 55 உடனடி தயாரிப்பு கை-வெடிகுண்டுகள் [55 improvised hand grenades],
  • எக்கச்சக்கமான ஜிலேடின் குச்சிகள் [an undeclared number of gelatine sticks],
  • ரசாயனப் பொருட்கள் [chemicals],
  • குண்டுவெடிப்பு-குண்டுகள் தயாரிப்பது பற்ரிய புத்தகங்கள் [explosives-making literature],
  • சிறு-குறும் புத்தகங்கள் [pamphlets, etc.]
  • எரிந்த நிலையில் காணப்பட்ட காகிதங்களில் ஜிஹாத், செசன்யாவில் உள்ள நமது சகோதர்களுக்கு சலாம், முஜாஹித்தீன், ஜவாஹிரி…….போன்ற வார்த்தைகள் இருந்தன [.partially burnt papers that had Bangla script, some of which mention words and phrases such as “mujahid” and “salaam to our brothers in Chechnya”. Police said the pamphlets also mention “Zawahiri”, the al Qaida leader Ayman Al Zawahiri].

இப்படி பெரிய அதிகாரிகள் எல்லோரும் முஸ்லிம்களாக இருக்கும் போது தான், போலீஸார் ஒருவேளை அப்படி நடந்து கொண்டார்களா, என்ற கேள்வியும் எழுகின்றது.

Shahnawaz Khan alias Chhotu, a local plumber, one of the persons to enter the rented house after the blast.

Shahnawaz Khan alias Chhotu, a local plumber, one of the persons to enter the rented house after the blast. Courtesy – twocircles

மதரஸாவில் குண்டுகள், ஆயுதங்கள் முதலியவை எப்படி இருக்கும்?: குறிப்பிட்ட வீடு மாநில சி.ஐ.டி எட்டு நாட்களுக்கு 08-10-2014 முன்னர் சீல் வைத்துவிட்டு சென்றனர், ஆனால், இப்பொழுது 16-10-2014 அன்று என்.ஐ.ஏ திறந்து சோதனை நடத்திய போது 30 வெடிகுண்டுகள், வெடி மருந்து மற்ற சம்பந்தப் பட்ட பொருட்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன[4]. சிமுலியா [ madrasa at Simulia ] என்ற இடத்தில் இருந்த மத்ரஸாவில் தேடும் பணியில் ஈடுபட்டபோது தான் இவை கிடைத்துள்ளன. சிமுலியா கிராமம் பர்த்வான் மாவட்டத்தில், மங்கள் கோட் என்ற இடத்தில் உள்ளது. 12-10-2014 அன்று அங்கு நடத்திய சோதனையில் –

  • காற்று துப்பாக்கி மூலம் வெடிக்கப் பட்ட குண்டுகளின் பாகங்கள் [Air gun pellets],
  • கூர்மையான ஆயுதங்கள் [sharp-edged weapons],
  • பணம் பெற்றுக் கொண்டற்கான ரசீதுகள் [money receipts],
  • ஜிஹாதி இலக்கியங்கள் [jihadi literature],
  • குறிப்பாக நல்ல இறப்பை அடைவது எப்படி என்ற வங்காள மொழியில் உள்ள புத்தகம் [including a Bengali book titled, “How To Die A Good Death”],

முதலியவை கண்டெடுக்கப் பட்டுள்ளன[5]. இதனால், அந்த மதரஸா ஜிஹாதிகளின் மையமாக, தலைமையகமாக செயல்பட்டு வந்தது உண்மையாகிறது[6]. மேலும் முக்கிய குற்றாவாளியான யூசுப் செயிக்கின் இரண்டு உறவினர்களும் கைது செய்யப் பட்டனர். ஹபிபுர் செயிக் என்பவன் அமீனா பீபி கொடுத்த எச்சரிக்கையின் படி கௌஸருடன் மூர்ஷிதாபாதில் உள்ள பாபர் பாக் என்ற மறைவிடத்திலுருந்து தப்பியோடி விட்டான். பிறகு  புதன் கிழமை அன்று போல்பூர் நகரத்தில் புறப்பகுதியில் முலுக் என்ற இடத்தில் பிடிபட்டான். இவன் கௌஸாரின் மைத்துனன், இந்த பயங்கரவாத கும்பலின் தீவிரமான வேலையாள், சிமுலியா மதரஸாவில் பயிற்சி அளிக்கும்  நிபுணர்களூள் ஒருவன் என்று பல அவதாரங்களைக் கொண்டுள்ளான்.[7].  மதரஸாக்கள் தீவிரவாதத்தை வளர்க்கின்றன என்று சொன்னால், சில முஸ்லிம்கள் சண்டௌக்கு வருகிறார்கள், இல்லை காரசாரமாக விவாதிக்க வருகிறார்கள், ஒரு நிலையில் மிரட்டவும் செய்கிறார்கள். ஆனால், இவ்வாறு நடக்கும் செய்திகள் வௌம் போது, மௌனியாகி விடுகிறார்கள்.

பர்கா பேக்டரி - கடை

பர்கா பேக்டரி – கடை

இன்னொரு வீட்டில் சோதனை: 08-10-2014 அன்று பாத்சாஹி தெருவில் உள்ள ரிஸ்வான் செயிக்கின் [Rizwan Sheikh] வீட்டை ரெயிட் செய்து, இரண்டு பெண்களை கைது செய்தனர். அப்பொழுது அந்த வீடு காலியாக இருந்தது. அங்கிருந்தவர்கள், கட்டிட வேலை செய்பவர்கள் என்று சொல்லிக் கொண்டவர்கள் சென்றுவிட்டனர். அவர்களில் ஒருவன் தான் ரெசூல் என்கின்ற ஜிஹாதி. ஆனால், 16-10-2014 அன்று தேசிய புலனாய்வு நிறுவனம் [the National Investigation Agency (NIA) ] மற்றும் தேசிய பாதுகாப்பு வீரர்கள் குழு [the National Security Guards (NSG) ] இவற்றின் மோப்ப நாய்கள் உதவியுடன் இந்த குண்டுகளைக் கண்டுபிடித்துள்ளனர். அதனால் தான் மாநில எதிர்கட்சிகள், திரிணமூல் காங்கிரஸ்காரர் சம்பந்தப் பட்டிருப்பதால், போலீஸும் பாரபட்சமாக நடந்து கொள்கிறது என்று குற்றஞ்சாட்டியுள்ளனர்[8]. முதலமைச்சர் இவ்விசயத்தில் மெத்தனமாக இருப்பதும் வியப்பாக இருக்கிறது. தீவிரவாதத்தை எப்படி ஒடுக்க வேண்டும் என்றில்லாமல், சம்பந்தப் பட்ட அரசியல்வாதிகளை பாதுகாக்க நடந்து கொள்வது போல தான், நிகழ்சிகள் அங்கு நடந்து வருகின்றன.

© வேதபிரகாஷ்

17-10-2014

[1] http://bdnews24.com/bangladesh/2014/10/09/burdwan-blast-exposes-jmb-hit-squad

[2] http://twocircles.net/2014oct15/1413358352.html#.VEB9lfmSynU

[3] http://twocircles.net/2014oct15/1413358352.html#.VEB9lfmSynU

[4] http://www.ndtv.com/article/india/burdwan-blast-case-30-grenades-found-from-house-sealed-by-bengal-police-607941

[5] http://www.dnaindia.com/india/report-ammunition-recovered-from-house-in-west-bengal-2026809

http://zeenews.india.com/news/india/burdwan-blast-nia-team-expresses-security-concern-centre-to-send-bsf-company_1485663.html[6]

[7]  Habibur Shiekh — an alleged operative of the terror module and ‘trainer’ at the Simulia madrassa — was nabbed from Muluk on the outskirts of Bolpur town on Wednesday. He had fled his hideout in Murshidabad’s Baburbagh, along with Kausar, soon after being tipped off by Amina Bibi within minutes of the Khagragarh blast on October 2. Habibur is a relative of Kausar’s brother-in law Kader Shiekh of Dakshin Nimra village — a stone’s throw from the home of President Pranab Mukherjee’s elder sister. A resident of Muluk, Habibur used to frequent the President’s native village, Kirnahar. In fact, Mukherjee was in the village for Durga Puja when the IEDs exploded in Khagragarh http://timesofindia.indiatimes.com/india/NIA-makes-first-arrest-in-Bardhaman-blast-probe/articleshow/44831211.cms

[8] http://indianexpress.com/article/india/india-others/bjp-on-offensive-bengal-says-no-terror-link-found-in-burdwan-blast/

முஸ்லிம்கள் “யுவன் சங்கர் ராஜாவின்” மதம் மாற்றம் பற்றி மற்றவர்கள் அலசுவதை எதிர்ப்பதேன் – அவர்கள் பயப்படுவது எதற்காக (2)?

பிப்ரவரி 13, 2014

முஸ்லிம்கள் “யுவன் சங்கர் ராஜாவின்” மதம் மாற்றம் பற்றி மற்றவர்கள் அலசுவதை எதிர்ப்பதேன் – அவர்கள் பயப்படுவது எதற்காக (2)?

 

இப்பெண்ணல்தான் யுவன் மதம் மாறினாரா

இப்பெண்ணல்தான் யுவன் மதம் மாறினாரா

முஸ்லிம்களுக்கான  தனித்த  அடையாளம்  எதுவும்  இன்றி  வந்திருந்தார்: இந்நிலையில் யுசரா பங்கு கொண்ட வரவேற்பு நிகழ்ச்சி பற்றி செய்தி ஒன்று இப்படி வந்துள்ளது. ஒரு தயாரிப்பாளர் பட்டியல் சேகர் மகனும், இயக்குனர் விஷ்ணுவர்த்தனின் தம்பியுமான நடிகர் கிருஷ்ணாவுக்கும், கோவையைச் சேர்ந்த கைவல்யாவுக்கும் கோவையில் திருமணம் நடந்தது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்தது. நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என திரையுலமே திரண்டு வந்து வாழ்த்தியது. இதில் எல்லோருடைய கவனத்தையும் கவர்ந்தவர் யுவன் சங்கர் ராஜா. அவர் முஸ்லிமாக மாறிவிட்டார் என்ற தகவல் பரவியிருந்த நேரத்தில் அவரது வருகை முக்கியமாக பார்க்கப்பட்டது. செய்திகளில் வந்தது போன்று அவர் தாடி எதுவும் வைத்திருக்கவில்லை. முஸ்லிம்களுக்கான தனித்த அடையாளம் எதுவும் இன்றி நீல நிற ஜீன்ஸ், வெள்ளை சட்டை அணிந்து வழக்கம்போல “எளிமையாக” வந்திருந்தார். ஆனால் முகத்தில் உற்சாகம் இல்லை.

 

அல்லாஹ் வெறும் சாந்தத்தையும், அமைதியையும் மட்டும் கொடுக்கவில்லையாம். யுவனின் விரல் பிடித்து நடக்க ஒரு அழகான யுவதியையும் கொடுத்திருப்பதாக கூறுகிறார்கள்

அல்லாஹ் வெறும் சாந்தத்தையும், அமைதியையும் மட்டும் கொடுக்கவில்லையாம். யுவனின் விரல் பிடித்து நடக்க ஒரு அழகான யுவதியையும் கொடுத்திருப்பதாக கூறுகிறார்கள்

அருகில்  சிகப்பு  நிறத்தில்  துப்பட்டா  அணிந்த  ஒரு  முஸ்லிம்  பெண்  அடிக்கடி  யுவனிடம்  நெருக்கமாக  பேசிக்  கொண்டிருந்தார்: வந்தவர் மேடையில் ஏறி மணமக்களை வாழ்த்திவிட்டு சிறிது நேரம் மேடையில் நின்று கொண்டிருந்தார். அவர் அருகில் சிகப்பு நிறத்தில் துப்பட்டா அணிந்த ஒரு முஸ்லிம் பெண் நின்று கொண்டிருந்தார். அடிக்கடி யுவனிடம் நெருக்கமாக பேசிக் கொண்டிருந்தார். யுவன் மூன்றாவதாக திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண்ணா? அல்லது அந்த பெண்ணின் உறவுக்கார பெண்ணா அவர் என்று எல்லோரும் முணுமுணுத்தார்கள். இதுபற்றி சில பத்திரிகையாளர்கள் விஷணுவர்த்தனிடம் கேட்டபோது அவர் எனது நண்பர்களில் ஒருவர் அவ்வளவுதான் என்று சுருக்கமாக சொல்லிவிட்டு திருமண வேலைகளில் பிசியாகிவிட்டார். திருமணத்துக்கு வந்தவர்கள் எதுவும் பிடிபடாமல் சந்தேகத்தோடு சென்றனர். இதனால் வரவேற்பு நடந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பத்திரிகையாளர்கள் ஏன் நேரிடையாக அந்த பெண்ணிடமோ, யுவராவிடமோ கேட்கவில்லை என்பதும் விசித்திரம் தான்!

 

Yuvanshankar-Raja-Islam

Yuvanshankar-Raja-Islam

முஸ்லிமாக  மாறி  ஒன்றிற்கு  மேலாக  மனைவியை  வைத்துக்கொள்ள  சினிமாக்காரர்கள்  பயன்படுத்தி  வருகிறார்கள்[1]: இந்தியா ஒரு செக்யூலரிஸ நாடு, ஒருவர் எந்த மதத்தையும் பின்பற்றலாம். அதனால், மதம் பற்றிப் பிரச்சினை இல்லை. அதிலும் சினிமாக்காரர்கள் மதம் மாறுவதிலும் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அது அவர்களுக்கு ஒரு சட்டையைக் கழட்டி, இன்னொரு சட்டையை மாட்டிக் கொள்வது போலத்தான். ஆனால், சினிமாக்காரர்கள் மதம் மாறுவது எப்பொழுதுமே பலதார திருமண விசயமாகத்தான் இருந்து வந்துள்ளது. அதிலும் முஸ்லிமாக மாறி ஒன்றிற்கு மேலாக மனைவியை வைத்துக் கொள்ள அது பயன் படுத்தப் பட்டு வருகின்றது. இதை கிஷோர் குமார், தர்மேந்திரா போன்ற பிரபல நடிகர்கள் கூட பின்பற்றினார்கள். கிஷோர் குமாருக்கு நான்கு மனைவிகள் – ரூமா குஹா தாகுர்தா, மதுபாலா (முஸ்லிம்), யோகிதா பாலி, லீனா சந்தவர்கர். தர்மேந்திராவுக்கு பிரகாஷ் கௌர், ஹேமாமாலினி முதலியோர்.   இந்து திருமணச் சட்டத்தின்படி இரண்டு மனைவிகளை வைத்துக் கொள்ள முடியாது அல்லது முதல் மனைவி இருக்கும் போது இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடியாது என்பதால் தான், இந்தியாவில் நடிகர்கள் மட்டுமல்ல மற்றவர்களும் இஸ்லாத்திற்கு மாறுவது குறுக்குவழி போல பின்பற்றி வருகிறார்கள்[2]. இதைப்பற்றியும் பகுத்தறிவு ஜீவிகள், முற்போக்குவாதிகள், பரந்த-விரிந்த பொதுவுடமைக்காரர்கள், ஜனநாயக தோழர்கள், அதிநவீனசித்தாந்திகள் முதலியோர் ஒன்றும் சொல்லாமல் இருப்பதும் தெரியவில்லை.

தொழுகை செய்கின்றவன் எல்லோரும் முஸ்லிம் தான் (பெருநியூஸ்): “பெருநியூஸ்” என்ற ஒரு முஸ்லிம் இணைதளம் இதைப் பற்றி ஒரு விளக்கமே கொடுத்துள்ளது, “ஒருவர் எந்த நாட்டை சேர்ந்தவராயிருந்தாலும் எந்த சமூகத்தை சார்ந்தவராக இருந்தாலும் , எந்த நிறத்தை உடையவராக இருந்தாலும் , எந்த மொழியை பேசினாலும் எல்லாம் வல்ல ரஹ்மான் நம்மைப் படைத்த ஏக இறைவனுக்கு அடி பணிந்து நடக்கிறாரோ அவர் தான் முஸ்லிம்!! எந்த ஒரு மனிதனும் பிறப்பால் முஸ்லிமாவதில்லை; இஸ்லாத்தை கடைப்பிடிப்பதன் மூலம்தான் ஒருவன் முஸ்லிமாகிறான், முஸ்லிம் வீட்டில் பிறந்த ஒருவன் இஸ்லாத்தை பின்பற்றுவதை விட்டுவிட்டால் அவன் முஸ்லிம் இல்லை. முஸ்லிமுக்கும் காஃபிருக்கும் இடையே உள்ள உடன்படிக்கையே தொழுகை தான். அதனை எவன் விட்டு விடுகின்றானோ அவன் காஃபிராகி விட்டான். (ஆதாரம்: அஹ்மத், திர்மிதி). தொழுகையைத்தவிர மார்க்க விஷயத்தில் எதை விடுவதினாலும் ஒருவன் காஃபிராகிவிடுவான் என்று நபித்தோழர்கள் கருதவில்லை. (ஆதாரம்: திர்மிதி). அருமை சகோதரர் யுவன் சங்கர் ராஜாவுக்கு அல்லாஹ் தவ்பீக் செய்துள்ளான் எனவே இவர் இஸ்லாத்தை படிப்படியாக சரியாக உணர்ந்து கொண்டு மிக்க மகிழ்ச்சியுடன் நல்லதொரு முஸ்லிமாக , இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஆக்கிக்கொண்டு தொடர்ந்து நேர்வழியில் நிலைத்திருக்க எல்லாம் வல்ல ரஹ்மான் அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன் .. இந்த பதிவைப் படிப்பவர்களும் துஆ செய்யுங்கள் .. இன்ஷா அல்லாஹ்”. என்று யுவராவை வரவேற்றுள்ளது . குறிப்பு: இந்த பதிவில் முஸ்லிம்களுக்கும், முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் ஒரு சில படிப்பினைகளோ, செய்திகளோ, நினைவூட்டல்களோ உள்ளது[3], என்றும் சேர்க்கப்பட்டுள்ளது.

 

யுவன்  ஷங்கர்  ராஜா  இஸ்லாத்திற்கு  மாறியது  ஏன்…? இயக்குநர்  அமீர் விளக்கம்! பணம், புகழ், போதை மட்டுமே வாழ்க்கை இல்லை,பொதுவாக வாழ்க்கையின் முதல்பாதியில் அமைதியாக இருப்பவர், இரண்டாம் பாதியில் ஆட்டம் போடுவார். அதுபோன்று தான் இப்போது நீயும் செய்கிறாய். என் அனுபவத்தில் சொல்கிறேன், இந்த வாழ்க்கை உனக்கு வேண்டாம். புகழ், பணம், போதை மட்டுமே வாழ்க்கை இல்லை. சினிமாவில் பாதிபேரோடு வாழ்க்கை வெறுமையாக இருக்கிறது. சினிமாவில் மிச்சமாவது இந்த வெறுமை மட்டும்தான். ஒருத்தர் சினிமாவில் எவ்வளவு ஜெயிச்சாலும் அவர்களுக்கு வாழ்க்கையில் ஏதாவது ஒரு குறை இருக்கும் என்று என்னால் முடிந்தளவுக்கு அட்வைஸ் செய்தேன்.என் தேடுதலுக்கான விடை இஸ்லாம் மதத்தில் இருக்கிறது. ஒருநாள் என்னிடம் தான் முழுவதுமாக இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டேன் என்று யுவன் கூறினார். ஏன்? என்று கேட்டபோது என் மனதில் நிம்மதி இல்லை, அமைதி இல்லை, என்னுள் ஏகப்பட்ட குழப்பம் உள்ளது. இவை எல்லாவற்றுக்குமான விடையும், என்னுள் இருக்கும் தேடுதலுக்கான விடையும் இஸ்லாம் மதத்தில் உள்ளது. அதனால் தான் நான் இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டேன் என்று கூறினார். யுவன் இப்படி கூறுவதற்கு முன்பாக அவரை நான் ஒருமுறை சந்தித்தபோது, வாழ்க்கையில் அவர் எதையோ தொலைத்து தேடுவது போன்று எனக்கு தோன்றியது என்றார்[4].

யுவனை  தொடர்ந்து  இஸ்லாத்தைத்  தழுவப்போகும்   2   இளம்   ஹீரோக்கள்! தமிழ் சினிமா ரசிகர்களை பரபரப்புக்குள்ளாக்கிய யுவன் சங்கர் ராஜா, சமீபகாலமாக எந்த விழாக்களிலும் தலை காட்டுவதில்லை என்று கூறப்படுகிறது. சமீபத்தில் அவரது இசையில் உருவாகிக் கொண்டிருக்கும் ‘தரமணி’ படத்தின் செய்தியாளர் சந்திப்பிற்கும் அவர் வரவில்லை. காரணம்? மீடியாக்கள் கேட்கிற கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டுமே? அப்படியே மற்றொரு காரணம் அவர் புதிதாக தாடி வளர்த்து வருகிறாம். இதனால் இனி அவர் முழு இஸ்லாமியராக தோற்றமளிக்கப்போகிறாராம். தற்போது இவரைத் தொடர்ந்து தமிழ் திரையுலகத்தில் மேலும் சில நடிகர்கள் இஸ்லாத்தைத் தழுவப் போகிறார்களாம்[5]. இவர்கள் அத்தனை பேரும் யுவனின் நண்பர்கள் என்றும் சினிமா வட்டாத்தில் தகவல்கள் கசிந்துள்ளன. இதில் இரண்டு முன்னணி ஹூரோக்களின் பெயர்கள் பரவலாக பேசப்படுகின்றன. இவர்கள் இருவருமே யுவனின் இந்த மாற்றத்தையும் அவரது தைரியத்தையும் நேரில் பாராட்டியதுடன், ‘நாங்களும் உங்களை பின்பற்ற நினைத்திருக்கிறோம்’ என்று கூறிவருகிறார்களாம். கோடம்பாக்கத்தில் இன்னும் எத்தனை மாற்றங்கள் நிகழப்போகிறதோ? அதில் இரு ஹீரோக்களைப் கிசுகிசுவாக தகவல்கள் வெளியாகியுள்ளன[6].

1.   அப்பாவின் செல்லப் பிள்ளை என்று செல்லமாக அழைக்கப்படுகிறவர். இவரது முதல் படமே ஜெயமானதால் இன்றைய கோடம்பாக்கம் கொண்டாடும் நடிகர். அப்பா முஸ்லீமாக இருந்தாலும், அம்மா இந்து. அதன் காரணமாக இந்துவாகவே வளர்க்கப்பட்டவர் இவர். தனது பெயரை விரைவில் மாற்றிக் கொண்டு முழு இஸ்லாமியராக மாறப் போகிறாராராம்[7].

2.   இவரை தொடர்ந்து இன்னொரு ஹீரோவும் தன்னை இஸ்லாத்துக்குள் இணைத்துக் கொள்ள தயாராகி வருகிறாராம். இரண்டெழுத்து ஹீரோவான இவரை சிம்புவுக்கு போட்டியாக சில காலம் மீடியாக்கள் சித்தரித்து வந்தன[8].

இவர்கள் இருவருமே யுவனின் இந்த மாற்றத்தையும் அவரது தைரியத்தையும் நேரில் பாராட்டியதுடன், ‘நாங்களும் உங்களை பின்பற்ற நினைத்திருக்கிறோம்’ என்று கூறிவருகிறார்களாம். தினமணியும் “குசுகுசு”க்களில் இறங்கிவிட்டதா என்று தெரியவில்லை. பொதுவாக அறிவிஜீவிகள் மற்ற சித்தாந்திகள் எல்லாம் தினமலர், தினமணி என்றால் “பார்ப்பன நாளேடுகள்”, “பார்ப்பனத் தூக்கிகள்” “இரண்டையும் ஒழிப்போம்” என்றெல்லாம் கூறுவார்கள், எழுதுவார்கள், பிரச்சாரம் செய்வார்கள். ஆனால், அவர்களே இவற்றைக் குறிப்பிட்டு எழுதுகிறார்கள்.

வேதபிரகாஷ்

© 13-02-2014

 


[7] தினமணி, யுவனை  தொடர்ந்து  இஸ்லாத்தைத்  தழுவப்போகும்   2   இளம் ஹீரோக்கள்??, By Web Dinamani, சென்னை, First Published : 11 February 2014 07:33 PM IST

இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா முஸ்லிமாக மாறினார் – பெண் தராயாக இருக்கிறாளாம் – ஆர். எஸ். அந்தணன் தரும் வெளிவராத பின்னணி தகவல்கள்!

பிப்ரவரி 10, 2014

இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா முஸ்லிமாக மாறினார் – பெண் தராயாக இருக்கிறாளாம் – ஆர். எஸ்.அந்தணன் தரும் வெளிவராத பின்னணி தகவல்கள்!

ஆர். எஸ்.அந்தணன் தரும் வெளிவராத பின்னணி தகவல்கள்!

ஆர். எஸ்.அந்தணன் தரும் வெளிவராத பின்னணி தகவல்கள்!

3வது  திருமணத்திற்காக  மதம்  மாற்றம்?: தினமலர், “இந்தநிலையில் யுவன், சமீபத்தில் சிங்கப்பூரிலோ, மலேசியாவிலோ ஒரு பெரிய பணக்கார இஸ்லாம் வீட்டை பெண்ணை பார்த்ததாகவும், அவர்கள் இருவருக்கும் பிடித்து போக திருமணம் செய்ய முடிவெடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர் மூன்றாவது திருமணம் செய்யபோகும் பெண்ணிற்காகத்தான் அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறியிருப்பதாகவும் கூறப்படுகிறது”, என்று குறிப்பிட்டாலும், “. யுவனின் விரல் பிடித்து நடக்க ஒரு அழகான யுவதியையும் கொடுத்திருப்பதாக கூறுகிறார்கள்”, என்று ஆர். எஸ்.அந்தணன் விவரித்துள்ளார்[1].  இந்த அந்தணன் அல்லது பார்ப்பனன் எங்கிருந்து வந்தார் என்று தெரியவில்லை!

ஆர். எஸ்.அந்தணன் தரும் வெளிவராத பின்னணி தகவல்கள்!

ஆர். எஸ்.அந்தணன் தரும் வெளிவராத பின்னணி தகவல்கள்!

இது  குறித்து  யுவன்  சங்கர்  ராஜா  தனது  டுவிட்டரில், கூறியிருப்பதாவது: நான் இஸ்லாமை பின்பற்றுகிறேன்” இதனால் நான் பெருமை கொள்கிறேன். எனது இந்த முடிவினால் எனக்கும், எனது குடும்பத்தினருக்கும், குறிப்பாக எனது தந்தைக்கும் இடையே எந்தவொரு கருத்து வேறுபாடும் இல்லை. எனது குடும்பத்தினர் ஆதரவு அளித்துள்ளனர். அல்ஹம்துலில்லா ! (இறைவனுக்கு நன்றி!) இவ்வாறு யுவன்சங்கர் ராஜா கூறியுள்ளார்.  பிறரின் கட்டாயத்தின் பேரிலோ அல்லது திருமணத்திற்காகவோ தான் இஸ்லாத்துக்கு மாறவில்லை என்றும் தன்னுடைய ஆய்வின் அடிப்படையிலேயே இஸ்லாத்துக்கு மாறியதாக யுவன் சங்கர் ராஜா பத்திரிகை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Deccan chronicle Yuvansankar raja conversion

Deccan chronicle Yuvansankar raja conversion

டெக்கான்  க்ரோனிக்கல்  எனும்  ஆங்கில  பத்திரிகைக்கு  யுவன்  அளித்துள்ள பேட்டி:. அப்பேட்டியில் தான் கண்ட கனவுகள் மற்றும் தன்னுடைய கேள்விகளுக்கு விடை தேடிய போது அவை குர்ஆனில் கிடைத்ததாக கூறியுள்ள யுவன், தான் ஒன்றரை வருடத்திற்கு மேலாக இஸ்லாத்தை ஆய்வு செய்தே இம்முடிவை எடுத்ததாக கூறியுள்ளார். மேலும், ஊடகங்களில் வெளியாவதை போல் இயக்குநர் அமீர் உள்ளிட்ட யாருக்கும் இதில் எவ்வித பங்குமில்லை என்று கூறிய யுவன் இஸ்லாம் தன்னை தேர்ந்தெடுத்துள்ளது என்றே தாம் உணர்வதாக கூறியுள்ளார். மேலும், தன் தந்தை இளையராஜா முதலில் அதிர்ச்சியடைந்தாலும் பின் முழு மனதுடன் தன் மத மாற்றத்தை ஏற்று கொண்டதாகவும் தன் வீட்டில் ஊடகங்கள் குறிப்பிடுவது போல் எவ்வித பிரச்னையுமில்லை என்றும் கூறினார்.  தன் நண்பனின் திருமணம் ஒன்றில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை போட்டு  தான் முஸ்லீம் பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக வந்த செய்தி தவறு என்றும் யுவன் கூறினார். ஏ. ஆர். ரஹ்மானின் வழியை பின்பற்றி தாம் இஸ்லாத்திற்கு வரவில்லை என்றும் தன் ஆன்மாவின் முடிவு என்றும் யுவன் குறிப்பிட்டுள்ளார்[2].

அல்லாஹ் வெறும் சாந்தத்தையும், அமைதியையும் மட்டும் கொடுக்கவில்லையாம். யுவனின் விரல் பிடித்து நடக்க ஒரு அழகான யுவதியையும் கொடுத்திருப்பதாக கூறுகிறார்கள்

அல்லாஹ் வெறும் சாந்தத்தையும், அமைதியையும் மட்டும் கொடுக்கவில்லையாம். யுவனின் விரல் பிடித்து நடக்க ஒரு அழகான யுவதியையும் கொடுத்திருப்பதாக கூறுகிறார்கள்

இஸ்லாமியர்  ஆகிறார்  யுவன்! வெளிவராத  பின்னணி  தகவல்கள்[3]: ஆர்.எஸ்.அந்தணன் என்பவர் எழுதியுள்ளதாக இவ்விவரங்கள் கொடுக்கப் பட்டுள்ளன, “அம்மாவின் மரணம் அவர் எதிர்பாரதது. முற்றிலும் உடைந்து போன யுவன் பெரும்பாலும் வீட்டுக்கு வருதை தவிர்த்து ரெக்கார்டிங் தியேட்டரிலேயே கிடந்தார். உடன் பிறந்த சொந்தங்களால் கூட அவருக்கு அமைதியில்லை என்று கூறப்படுகிறது. நடுவில் சில நாட்கள் அவர் உறங்கவே இல்லையாம். இரவில் உறக்கம் வராமல் தவிப்பவர்களுக்குதான் அந்த வேதனை தெரியும். அதை நான்கைந்து நாட்கள் தொடர்ச்சியாக அனுபவித்தாராம் அவர். மனமே அமைதி கொள்என்று விரும்பி விரும்பி கேட்டாலும், சட்டென கேட்டுவிடுமா அது? இவரது வேதனையை அருகிலிருந்து கவனித்த நண்பர் ஒருவர் [எல்லாம் தெரிந்த அந்தணர் பெயரைக் குறிப்பிடவில்லை], இஸ்லாமியர்களின் வேத புத்தகமான குர் ஆன் புத்தகத்தை கொடுத்துஇதை படி. மனம் அமைதியடையும்என்றாராம் [குரான் படித்தால் சாந்தம் கிடைக்கும் என்றால் வளைகுடா நாடுகளில் அல்லடு இஸ்லாம் உள்ள இடங்களில் சாந்த இருக்க வேண்டும் ஆனால் குண்டுகள் தாம் வெடித்துக் கொண்டிருக்கின்றன]. உறக்கம் வராத ஒரு ஐந்தாவது நாளில் அந்த புத்தகத்தை விரித்தார் யுவன் [அந்தணர் சரியாக எண்ணிக் கொண்டே இருந்தார் போலும்]. மனம் விரட்டிக் கொண்டேயிருந்தது அவரை. மெல்ல அதை கயிற்றுக்குள் கட்டி இறுக்கினார் யுவன். ஏதோ ஒரு கட்டத்தில் அப்படியே மனம் உடைந்து அந்த புத்தகத்தின் மீது முகத்தை வைத்து அழ ஆரம்பித்தாராம்…. [புத்தகத்தைப் படித்து மனம் உடைந்ததா என்று தெரியவில்லை].

 

அல்லாஹ் வெறும் சாந்தத்தையும், அமைதியையும் மட்டும் கொடுக்கவில்லையாம். யுவனின் விரல் பிடித்து நடக்க ஒரு அழகான யுவதியையும் கொடுத்திருப்பதாக கூறுகிறார்கள்

அல்லாஹ் வெறும் சாந்தத்தையும், அமைதியையும் மட்டும் கொடுக்கவில்லையாம். யுவனின் விரல் பிடித்து நடக்க ஒரு அழகான யுவதியையும் கொடுத்திருப்பதாக கூறுகிறார்கள்

அல்லாஹ்  வெறும்  சாந்தத்தையும், அமைதியையும்  மட்டும்  கொடுக்கவில்லையாம்.   யுவனின்  விரல்  பிடித்து  நடக்க  ஒரு  அழகான  யுவதியையும்  கொடுத்திருப்பதாக  கூறுகிறார்கள். அதற்கப்புறம் அவர் எப்போது உறங்கினார் என்பது தெரியவில்லை. மீண்டும் அவர் எழுந்தபோது மனம் முற்றிலும் சாந்தமாகியிருந்ததாம். அவர் தேடிய நிம்மதி அன்றுதான் கிடைத்தது அவருக்கு. இதற்கப்புறம் அவர் தீவிரமாக அந்த புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தாராம். இப்போது தினமும் ஐந்து வேளை தொழுகிற அளவுக்கு அவர் இஸ்லாம் மார்க்கத்தால் ஈர்க்கப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். [இதுவரை ஏதோ எல்லாம் தெரிந்தால் பொல எழுதிவிட்டு இங்கு கூறுகிறார்கள் என்றுள்ளதால், கதைவிட்டுருக்கிறர்கள் என்று தெரிகிறது] விரைவில் அதிகாரபூர்வமாக தன்னை அந்த மதத்தில் இணைத்துக் கொள்ளும் முடிவில் இருக்கிறாராம் யுவன். அல்லாஹ் வெறும் சாந்தத்தையும், அமைதியையும் மட்டும் கொடுக்கவில்லையாம். யுவனின் விரல் பிடித்து நடக்க ஒரு அழகான யுவதியையும் கொடுத்திருப்பதாக கூறுகிறார்கள். [அதாவது ஒரு பெண்ணும் தயாராக இருக்கிறாள் என்று தெரிகிறது] எதுவாக இருப்பினும் நல்லதே. யுவன் எந்த மதத்திலிருந்தாலும், அவரது இசை எல்லா மதத்தினர் மத்தியிலும் இருக்கும். அது போதும்! -ஆர்.எஸ்.அந்தணன் [இப்படி அந்தணன் என்ற பெயரை உபயோகப் படுத்துவதிலிருந்து இது வேண்டுமென்றே ஒருவர் இப்படி எழுதியுள்ளது தெரிகிறது], இதை ஆங்கிலத்தில் இங்கு வெளியிட்டுள்ளனர்[4].

Yuvansankarraja converting to islam

Yuvansankarraja converting to islam

முஸ்லிம் ஆக வீட்டில்எதிர்ப்பு! யுவனின் இந்த செயலுக்கு அவரது அப்பா இசைஞானி இளையராஜா, அவரது சகோதரர்கள், சகோதரிகள், உறவினர்கள், சினிமா மற்றும் பிறதுறை நண்பர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நமக்கும், நமது குடும்பத்திற்கு இது சரிப்பட்டு வராது என்று எவ்வளவோ சொல்லியும் யுவன் தனது கொள்கையில் பிடிவாதமாக இருந்துள்ளார்[5] என்று தினமலர் கூறுகிறது. ஆனால், ஒன்றுமே பிரச்சினை இல்லை என்று யுசரா கூறுகிறார். இந்த முரண்பாடும் தெரிகிறது.

இரண்டாவது திருமணம் 2011

இரண்டாவது திருமணம் 2011

இளையராஜா  வெளியேற்றம்? எவ்வளவு சொல்லியும் யுவன் தனது கொள்கையில் பிடிவாதமாக இருந்ததால் ஒருகட்டத்தில் இளையராஜா வெறுப்படைந்து தி.நகரில் உள்ள தனது சொந்த வீட்டை விட்டு வெளியேறி சிலகாலம் தனது மூத்தமகன் கார்த்திக் ராஜாவின் வீட்டில் தங்கியிருந்துள்ளார். பிறகு யுவன் வந்து பேச, தான் மட்டும் வரமாட்டேன் என்று சொல்லி கார்த்திக்கையும் தன்னோடு அழைத்து வந்து பிறகு எல்லோரும் தற்போது ஒரே வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். இதேப்போன்று இளையராஜா ஒவ்வொரு முறையும் தனது வீட்டில் கொழு / கொலு வைத்து பிரபல பின்னணி பாடகர்களை எல்லாம் அழைத்து தன் வீட்டில் பாட வைப்பார். ஆனால் சென்றாண்டு கொழு / கொலு நடத்த கூடாது என்று யுவன் தெரிவித்துள்ளார்[6]. பின்பு கொழுவை தவிர்க்கும் நோக்கோடு அவசரமாக மும்பை கிளம்பி சென்றுள்ளார். ஆனால் இளையராஜா போனில் சத்தம் போட பிறகு அவசரஅவசரமாக மீண்டும் வீடு திரும்பியுள்ளார். தினமலர் கொழு என்று போட்டிருந்தாலும், அது கொலு என்று இருக்கலாம், அதாவது பொம்மைகளை வைத்து பாடுவதை எதிர்க்கும் அளவில் அடிப்படைவாதம் அப்பொழுதே ஏறிவிட்டதா? இவையெல்லாம் யுசரா டுவிட்டர் மற்றும் டெக்கான் குரோனிகள் முதலியவற்றில் சொன்னதிற்கு விரோதமாக இருக்கிறது.

இரண்டாவது திருமணம் திருப்பதியில் 2011

இரண்டாவது திருமணம் திருப்பதியில் 2011

குரான்  பரிசளித்த  அமீர்? யுவன் மதம் மாறிய பின்னர், அவருக்கு இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை பிரபல இயக்குநர் அமீர் பரிசளித்துள்ளதாகவும், தற்போது அந்த குரானை தான் யுவன் தினமும் படித்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது. யுவன் கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேலாகவே இஸ்லாம் மதத்தை பின்பற்றி வருகிறாராம். அவர்கள் மத வழக்கப்படி தினமும் 5 வேளை தொழுகை செய்தவதையும் கடைபிடித்து வருகிறாராம். தினமலர் இப்படி குறிப்பிட்டாலும், சிரித்துக் கொண்டே மறுத்ததாக டெக்கான் குரோனிகள் கூறுகிறது. ஆனால், பெயரைக் குறிப்பிடாமல் “இவரது வேதனையை அருகிலிருந்து கவனித்த நண்பர் ஒருவர்” என்று ஆர்.எஸ். அந்தணர் கூறியுள்ளார். இந்த அந்தணர் ஒரு

முதல் திருமணம் சுஜயா சந்திரன் 2005.

முதல் திருமணம் சுஜயா சந்திரன் 2005.

பார்ப்பனைப் போலள்ளாது, ஒரு துலுக்கனைப் போலவே நன்றாக எழுதியுள்ளார். ஆகவே, நண்பர் ஒரு முஸ்லிம் என்று தெரிகிறது, ஆக அவர் அமீரா அல்லது வேறொரு முஸ்லிமா என்பது விரைவில் தெரிந்து விடும்.

  1. இஸ்லாம் கடைபிடித்துக் கொண்டிருக்கிறார் என்றது, இல்லை முஸ்லிம் ஆகிவிட்டேன் என்றது.
  1. பெண்ணில்லை, விவாகம் செய்து கொள்ளவில்லை என்றது, ஆனால், அல்லாஹ் வெறும் சாந்தத்தையும், அமைதியையும் மட்டும் கொடுக்கவில்லையாம். யுவனின் விரல் பிடித்து நடக்க ஒரு அழகான யுவதியையும் கொடுத்திருப்பதாக கூறுகிறார்கள், என்றது,
  1. குடும்பத்தார் எதிர்க்கவில்லை என்றது, பிறகு எதிர்த்துள்ளார் என்று விவரங்கள் வெளிவருவது.
  1. ஆர். எஸ்.அந்தணன் தரும் வெளிவராத பின்னணி தகவல்கள் – என்று இணைதளத்தில் வெளியிடுவது!
  1. “இனியொரு.டாட்.காம்”, “தமிழ் நாட்டில் ஒடுக்கப்பட்ட தலித் சமூகத்திலிருந்து இசைத் துறைக்கு வந்து மில்லியன்கள் புரளும் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளரானவர் இளையராஜா.

 

  1. இளையாராஜா தன்னைத் தலித் என்று அழைத்துக்கொள்வதை எப்போதும் விரும்பியதில்லை. இந்துத்துவ தத்துவத்தின் சினிமா இசைக்காவலனைப் போன்று தன்னை வெளிப்படுத்திக்கொண்ட இளையராஜா ஆதிக்க சாதியோடு தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார்”, என்று ஆரம்பித்து[7],
  1. யுவன் சங்கர் ராஜாவின் பிரச்சினைக் குறிப்பிட்டு, “புதிய மதத்திலும் சாதி ஒடுக்குமுறையைச் சந்திக்கின்றனர். இந்துத்துவாவின் வேர்கள் அனைத்து மதங்களிலும் படர்ந்துள்ளன”, என்று முடித்துள்ளது. என்று முன்னமே எடுத்துக் காட்டியுள்ளேன்[8].
  1. ஒருவருடமாக ஆராய்ச்சி செய்கிறேன் என்பதெல்லாம் பொய். இரண்டு பெண்களுடன் தாம்பத்யம் நடத்த முடியாத நிலையில் ஏதோ ஒரு மூன்றாவது பெண் வலை விரித்திருக்கிறாள், விழுந்திருக்கிறாள். ஆகவே, முஸ்லிம் ஆனது வசதிக்காகத்தான்! அதில் ஆன்மீகமும் இல்லை, நம்பொஇக்கையும் இல்லை.
  1. ஆக, இதில் முஸ்லிம்களின் பங்கு வெளிப்படுகிறது.
  1. யுசரா தானாக மதம் மாறினாலும், திட்டமிட்டு முஸ்லிம்கள் மதம் மாற்றினாலும், இது ஒரு மோசடி என்றே தெரிகிறது.

வேதபிரகாஷ்

© 10-02-2014


[5] தினமலர்,  இஸ்லாமுக்குமதம்மாறியதுஏன் ? யுவன்சங்கர்ராஜாகுறித்துபுதியதகவல் ,பிப்ரவரி.10, 2014.

[7] இனியொரு.டாட்.காம்,  http://inioru.com/?p=39133

பர்வீன்-பைசூல் விவகாரம் – போலீசாருக்கு குழப்பமாம், ஊடகக்காரகள் தெளிவாக இருக்கிறார்களாம்!

ஜனவரி 8, 2014

பர்வீன்-பைசூல் விவகாரம் – போலீசாருக்கு குழப்பமாம், ஊடகக்காரகள் தெளிவாக இருக்கிறார்களாம்!

பைசூலின்  மீது  மறுபடியும்  புகார்: இந்த நிலையில், 30-12-2013 அன்று பகலில் நடிகை ராதா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து புதிய புகார் மனுவை கொடுத்தார். அந்த மனுவில், பைசூல் மீது கொடுத்த புகார் மனுவை வாபஸ் பெறவில்லை என்றும், தன்னை கடத்திச்சென்று, மகாபலிபுரத்தில் ஒரு லாட்ஜில் சிறை வைத்து அடித்து துன்புறுத்தி, மிரட்டியதால் புகாரை வாபஸ் பெற்றேன் என்றும், பைசூல் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்[1].  புகாரில் ராதா கூறியதாவது: பைசூல் என்னுடன் 6 வருடம் குடும்பம் நடத்தினார். திடீரென என்னை வீட்டைவிட்டு துரத்தி விட்டு, என் பணத்தையும் பறித்துக் கொண்டார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தேன். கடந்த 18ம் தேதி பைசூலின் உறவினர்  மாலிக், மற்றும் அவருடைய சகோதரர் ரஹ்மான் ஆகியோர் என் வீட்டுக்கு ஆசிட்டுடன் வந்தனர்[2].

புகார்  வாபஸ்  பெற  வேண்டும்,    இல்லையென்றால்  ஆசிட்  வீசி  கொன்று   விடுவோம்  என்று   மிரட்டல்: பைசூல் மீது கொடுத்துள்ள புகாரை வாபஸ் பெற வேண்டும், இல்லையென்றால் உன் முகத்தில் ஆசிட் வீசி கொன்று விடுவோம் என, மிரட்டினர். இதை தொடர்ந்து, உயிருக்கு பயந்து நானும் புகாரை வாபஸ் வாங்குவதாக தெரிவித்தேன். பின்னர், கத்தி முனையில் என்னை காவல் நிலையத்துக்குஅழைத்துச் சென்று வழக்கை வாபஸ் பெற வைத்தனர். மேலும், என்னை காரில் ஏற்றிக் கொண்டு, பைசூல் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றனர். அவரும் என்னை தொடர்ந்து மிரட்டியதுடன், காவல்துறையில் எனக்கு செல்வாக்கு உள்ளது, உன்னால் என்னை ஒன்றும் செய்ய முடியாது என கூறினார்.

போலீஸ் பாதுகாப்பு வேண்டும்: என்னிடம் ஆள் பலமும், பண பலமும் உள்ளது. உடனடியாக ஊரை காலிசெய்துவிடு என தொடர்ந்து மிரட்டினார். உயிருக்கு பயந்து அவரிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காக நானும், சரி என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி வீட்டுக்கு வந்துவிட்டேன். தற்போது என் உயிருக்கும், உடமைக்கும், ஆபத்து உள்ளது எனவே, போலீசார் எனக்கு உரிய பாதுகாப்பு அளித்து, பைசூலை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்[3].

போலீசாரைகுழப்பத்தில்ஆழ்த்திஇருக்கிறது: அவர் திடீரென்று இதுபோல் அதிரடி பல்டி அடித்து மீண்டும் ஒரு புகார் கொடுத்துள்ளது, போலீசாரை குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது. பாவம், தமிழ் ஊடகப் புலிகளுக்கு மட்டும் குழப்பமே இல்லாமல் தெளிவாக இருக்கீறார்கள் போலும். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியிலும், நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு சரியாக பதில் அளிக்காமல் நின்று கொண்டே இருந்தார். ஒருவேளை உட்காருவதற்கறொன்றும் இல்லை போலிருக்கிறது. இந்த விஷயத்தில் அடுத்தகட்டமாக உயர் போலீஸ் அதிகாரிகளை கலந்து ஆலோசித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று, வடபழனி போலீசார் கூறினார்கள்[4]. ஆமாம், இவ்விசயங்களுக்கு எல்லாம் இப்படி போலீஸ் சேவை சீரழிக்க வேண்டிய நிலையில் இருக்க வேண்டும் போலிருக்கிறது.

வேதபிரகாஷ்

© 08-01-2014


[3] தினகரன், பைசூல்மீதுநடிகைராதாமீண்டும்புகார் – முகத்தில்ஆசிட்வீசுவதாககூறிமிரட்டிவழக்கைவாபஸ்பெறவைத்தனர், 31-12-2013.

[4] மாலைமலர், தொழில்அதிபர்மீதானபுகாரைவாபஸ்வாங்கவில்லை: நடிகைராதாமீண்டும்புகார், பதிவு செய்த நாள் : செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 31, 9:19 AM IST

பெண் ஜிஹாதிகள் இந்தியாவின் மீது தாக்குதல் நடத்த லஷ்கர்-இ-தொய்பா சிறப்பு முகாம்களில் பயிற்சி!

ஜனவரி 4, 2012

பெண் ஜிஹாதிகள் இந்தியாவின் மீது தாக்குதல் நடத்த லஷ்கர்-இ-தொய்பா சிறப்பு முகாம்களில் பயிற்சி!

 

இந்தியாவில் தாக்குதல் நடத்த பெண்கள் பயங்கரவாதப் படை[1]: இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துவதற்காக 21 பெண்களைக் கொண்ட புதிய குழுவை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு உருவாக்கி வருவதாக இந்தியா ராணுவ வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை (03-01-2012) தெரிவித்தன[2]. ஐந்தாண்டுகள் முந்தைய சமாச்சாரம் என்றாலும், மறுபடியும் இப்பொழுது ஏதோ புதிய செய்தி போல இப்பொழுது வருவது வியப்பே!

 

லஷ்கர்-இ-தொய்பா சிறப்பு முகாம்களில் பயிற்சி! இந்தக் குழுவுக்கு துக்தரீன்-இ-தொய்பா (இந்தியாவிற்கு துக்கத்தைத் தரப்போகிறார்கள் போல) எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் காஷ்மீரில், திவாலியா என்ற இடத்தில் (முசபராபாதிற்கு அருகில்) இந்தக் குழு இயங்கி வருவதாகவும் அதனை லஷ்கர் அமைப்பு பயிற்சி கொடுப்பதாகவும் தெரிய வருகிறது[3]. இங்கு பெண்களுக்காக பிரத்யேகமான தீவிரவாத பயிற்சிப் பள்ளி இருக்கிறது[4]. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இயங்கிவரும் 42 பயங்கரவாத பயிற்சி முகாம்களில் பெண்கள் பயிற்சி பெற்று வருவதாக ஏற்கெனவே கூறப்பட்டு வந்தது[5].

 

தற்கொலைப் படையில் பெண் ஜிஹாதிகள்: ஐந்தாண்டுகளுக்கு முன்பே, பாதுபாப்பு அதிகாரிகளுடன் போரிட்டு தாக்குதலில் இடுபட்டவர்களின் சடலங்களை பார்த்தபோது, இளம்பெண் இருப்பதைப் பார்த்து இந்த உண்மை தெரிய வந்தது. இங்கு பயங்கரவாதப் பயிற்சி பெறும் பெண்கள் வேறு நாடுகளின் வழியாக காஷ்மீருக்குள் ஊடுருவத் திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  குறிப்பாக யூரி என்ற எல்லைப் பகுதிக் சவழியாக இந்தியாவில் நுழைந்து தாக்குதல் நடத்தப் போவதாக தெரிய வந்துள்ளது[6]. பெண்களைக் கொண்ட பயங்கரவாதக் குழுவை உருவாக்க வேண்டும் என்பது லஷ்கர் அமைப்பின் உயர்நிலைத் தலைவர்கள் மற்றும் மும்பை பயங்கரவாதத் தாக்குதலை நடத்திய ஷகியூர் ரெஹ்மான லக்வியின் நீண்டகாலத் திட்டமாகும். பல முக்கியத் தளபதிகள் கொல்லப்பட்டுவிட்டதால், காஷ்மீர் பகுதியில் அந்த அமைப்புக்கு இப்போது போதிய வலிமை இல்லை என்றும் கூறப்படுகிறது. காஷ்மீரை இந்தியாவிலிருந்து விடுதலை செய்து பாகிஸ்தானுடன் இணைப்பது இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும். இதைத் தவிர புல்வாமா முதலிய பகுதிகளில் உஸ்மான் பாய் அல்லது சோடா ரஹ்மான் என்பவனின் கீழ் இளைஞர்கள் தீவிரவாதத்திற்கு சேர்க்கப்பட்டு வருவதாக தெரிகிறது[7].

 

வேதபிரகாஷ்

04-01-2012


[7]