Posted tagged ‘அல்-பர்மவியாஹ்’

இஸ்லாத்தில் மசூதிகள் இடிக்கப் படுவதேன்?

செப்ரெம்பர் 4, 2010

இஸ்லாத்தில் மசூதிகள் இடிக்கப் படுவதேன்?

இஸ்லாத்தில் மசூதிகள் இடிக்கப் படுவது சாதாரண நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. அதாவது, வழிபாடு / நமாஸ் செய்வதற்கு ஒரு இடம் இருக்கவேண்டும், அது எந்த இடமாக வேண்டுமானாலும் இருக்கலாம். இருப்பினும் வசதிற்காக மசூதிகள் கட்டப்பட ஆரம்பித்தன. ஆகவே, சம்பிரதாயப்படி கட்டப்படாத மசூதிகள், சட்டத்திற்கு புரம்பாக / விரோதமாகக் கட்டபட்ட மசூதிகள், பிழையாக கட்டபட்ட மசூதிகள், சமாதிகளுக்கு மேல் கட்டபட்ட மசூதிகள், உருவ வழிப்பாட்டை அல்லது தனிநபர் வழிபாட்டை ஊக்குவிக்கும் வகையில் கட்டபட்ட மசூதிகள்,…………….முதலியவற்றை, இஸ்லாம் நாடுகளே இடித்துத் தள்ளுகின்றன. சில நேரங்களில் மதகுருமார்கள் எதிர்ப்புத் க்தெரிவித்தாலும், அத்தகைய இடிப்பு வேலைகள் சட்டமுறைப்படி நந்துகொண்டுதான் இருக்கிறது.

பாகிஸ்தானில் சட்டத்திற்கு விரோதமாகக் கட்டபட்ட மசூதி இடிக்கப்பட்டது[1] (02-08-2010): லாஹூரில், ஒரு ஜிஹாதி கூட்டம் ஒரி இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டு, மசூதி கட்ட ஆரம்பித்தது. ஆனால், புகாரின்படி ஆய்ந்தபோது, இம்திஸாம் இலாஹி ஜஸீர் என்பவனால், நீதிமன்றத்திலிருந்து அனுமதி ஆணை வாங்கியதாக காட்டப்பட்ட ஆவணம் பொலியானது / கள்ள ஆவணம் என்றதால், போலீஸார் பாதுகாப்புடன் அங்கு வந்த கட்டப்பட்ட மசூதியை இடித்தது அல்லாமல், அங்கிருந்த ஆட்களையும் கைது செய்தனர்.

இதே மாதிரி 70 மசூதிகள் உடைக்கப்பட்டனவாம்: ஜூன் 2004ல் தீமானித்தது படி, சட்டத்திற்கு விரோதமாக இஸ்லாமாபாதில் கட்டப் பட்டுள்ள 70 மசூதிகளை இடிக்க நகர நிர்வாகம் (ICT administration) அனுமதி கொடுத்தது[2].

பிழையாகக் கட்டப் மசூதி இடிக்கப்பட்டது: வடக்கு மெதினாவில் உள்ள அல்-பர்மவியாஹ் மாவட்டத்தில் உள்ள ஒரு மசூதி 03-09-2010 அன்று உடைக்கப்பட்டது. இந்த பழைய மசூதி தவறுதலாகக் கட்டப் பட்டிருப்பதனால், இஸ்லாம் மதத்திற்கான விஷயங்களை பார்த்துவரும் முஹம்மது அல்-அமீன் பின் கத்தாரி என்பவரின் ஒப்புதலோடு இடிக்கப்பட்டது[3].

சட்டத்திற்கு விரோதமாகக் கட்டபட்ட மசூதி பாதி இடிக்கப்பட்ட பிறகு நிறுத்தப்பட்டது[4]: அகர்பெய்ஜானில், பகு என்ற இடத்தில் சட்டத்திற்கு விரோதமாகக் கட்டபட்ட மசூதி ஒன்று இடிக்கப்படவேண்டும் என்று மாவட்ட நீதிமன்றம் ஆணையிட்டது, பிறகு அதனை உச்சநீதி மன்றமும் உறுதி செய்தது. அதன்படி அரசு அதனை உடைக்க ஆரம்பித்தது. பாதி உடைந்த நிலையில், இரானின் மதகுருமார்கள் தடுத்ததால், வேலை இப்பொழுது நிறுத்தப்பட்டுள்ளது.

சட்டத்திற்கு விரோதமாகக் கட்டபட்ட மசூதி[5] (20-08-2010): தென்னாப்பிரிக்காவில், லெனாசியா என்ற இடத்தில் தொழுகை புரிவதற்காக, ஒரு இடம் குத்தகைக்கு / நெடுங்கால வாடகைக்காகக் (லீஸ்) கொடுக்கப் பட்டது. ஆனால், முஸ்லீம்கள் அனுமதியின்றி, சட்டத்திற்கு புரம்பாக, அங்கு ஒரு மசூதியைக் கட்டியுள்ளனர். அதற்குள் குத்தலைக் காலம் முடிந்து விட்டதால், அரசாங்கள், சட்டத்திற்கு விரோதமாகக் கட்டபட்டுள்ள அந்த மசூதியை அகற்ற ஆணையிடப்பட்டுள்ளது.

ஆண்களும்-பெண்களும் சேர்ந்து சுற்றுவதாக இருப்பதால் மச்சுதி இடிக்கப்படவேண்டும்: மக்காவில் இருக்கும் மசூதியை இடித்துவிட்டு, ஆண்கள்-பெண்கள் கலக்காவண்ணம், ஒரு புதிய மசூதி கட்டப்படவேண்டும் என்று,  செயிக் அப்துக் ரஹ்மான் அல்-பராக் என்ற முஸ்லீம் மதக்கருக்கள் சொல்லியுள்ளார். காபவைச் சுற்றி வரும் போது ஆண்கள்-பெண்கள் சேர்ந்து சுற்றுவதை தவிக்க அவ்வாறு செய்யப்படவேண்டும் என்பது இவரது வாதம்.  அப்படி புதியதாகக் கட்டப்படும் மசூதி 10, 20, அல்லது 30 அடுக்குகள் இருக்கலாம். இப்பொழுதுள்ள மசூதி மூன்று மாடிகளைக் கொண்டதாகவுள்ளது[6]. ஆனால், இதை மறுத்தும் கருத்துகள் வந்துள்ளன[7]. அதாவது அவர் சொல்கின்றபடி, மசூதியை இடிக்கவேண்டிய அவசியம் இல்லை, அப்படி சொல்வதற்கும் அவருக்கு அதிகாரம் இல்லை என்ற மற்ற பண்டிதர்கள் சொல்கின்றனர்.

முஹம்மது நபி 28 வருடங்களாக வாழ்ந்ததாகக் கருதப் பட்ட வீடு செப்டம்பர் 2005ல் இடிக்கப்பட்டது[8].

அதைத் தவிர அல்-இமாம் அலி அல்-அரிதி என்ற அல்-மம் அலி பின் அல்-தாலிப் என்பவருடைய பேரனின் மசூதி, அவரது சமாதியின் மேல் கட்டப்பட்டிருந்ததால், நான்கு வருடங்களுக்கு முன்பு (2006?) இடிக்கப்பட்டது[9].

சவுதி அரேபியாவில் முஹமது நபியின் மசூதி இடிக்கப்பட்டது: கட்டுமான வசதிகள், சாலைப் போக்குவரத்து முதலிய வசதிகளுக்காக, சவுதி அரேபிய அரசு, முஹப்ம்மது நபியின் மசூதியை இடித்துள்ளார்கள். மேலும், இஸ்லாத்தில், சமாதிகளுக்கு மரியாதை செல்லுத்த்துதல், வணங்குதல், வழிபாடு செய்வது போன்ற பழக்கங்களுக்கு இடமில்லை, என்று ஆசாரமான இஸ்லாமிய மதக்குருக்கள் சொல்லியுள்ளார்கள்.

முஹமது நபியின் ஆணையின்படி பர்தே லேன் மசூதி உடைக்கப்பட்டது: டிசம்பர் 5, 2009ல், தெரிக்கி-இ-தாலிபான் பாகிஸ்தான் என்ற தாலிபானின் பிரிவு, தாங்கள்தாம், முஹமது நபியின் ஆணையின்படி பர்தே லேன், ராவல்பிண்டி மசூதியை உடைத்ததாக ஒப்புக்கொண்டனர்[10]. இதே மாதிரி, அவர்களது பணி மேலும் தொடரும் என்று வலியுர் ரெஹ்மான் மெசூத் என்ற அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.


[1] Daily Times, LDA demolishes illegal under-construction ‘mosque’, Monday, August 02, 2010, http://www.dailytimes.com.pk/default.asp?page=201082\story_2-8-2010_pg13_4

[2] http://archive.thepeninsulaqatar.com/component/content/article/347-pakistan-sub-continent/42954.html

[3] Saudi Gazzettee, A mosque with faulty design demolished for reconstruction in Madina , dated 03-09-2010;  http://www.saudigazette.com.sa/index.cfm?method=home.regcon&contentID=2010080279837

[4] Radio free Europe / Liberty, Azerbaijan Stops Mosque Demolition After Warning From Iranian Cleric, May 17, 2010 http://www.rferl.org/content/Azerbaijan_Stops_Mosque_Demolition_After_Warning_From_Iranian_Cleric_/2044059.html

[5] News-24, Illegal mosque to be demolished, 2010-08-20, http://www.news24.com/SouthAfrica/News/Illegal-mosque-to-be-demolished-20100820

[6] http://www.alarabiya.net/articles/2010/03/18/103406.html

[7] Abdul Rahman Shaheen, Correspondent, Saudi scholars reject call for demolition of Al Haram Mosque, http://gulfnews.com/news/gulf/saudi-arabia/saudi-scholars-reject-call-for-demolition-of-al-haram-mosque-1.602517

[8] http://www.jafariyanews.com/2k5_news/sep/5prophethome_destruction.htm

[9] Nabil Raza, Muslim hush over Saudi destruction of prophet (p) home shocking,

http://www.jafariyanews.com/2k5_news/sep/5prophethome_destruction.htm

[10] http://www.zopag.com/news/rawalpindi-mosque-demolished-on-prophet-muhammads-orders-pak-taliban/10904.html