ஆதிலாபானு கொலை – சாத்தான்குளத்துக் கொலையை தொடர்ந்துள்ளது: தமிழகத்தில் கோஷ்டி போர் நடக்கிறாதா (2)?
ஷாகுல் சினிமா நடிகர்[1]: பிடிபட்ட கார் ஸ்கார்பியோ (டிஎன்65 கே 2223) ஷாகுல் என்பவனுக்கு சொந்தமானது. அவன் இந்தி படத்தில் வில்லனாக நடித்துள்ளானாம். சினிமாவில் நடித்தபோது எடுத்துக் கொண்ட படம் காரில் வைத்திருந்தானாம். காரைக் கைப்பற்றியபோது, இவ்விவரங்கள் தெரியவந்தன, மேலும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளிகளான ராமநாதபுரம் அருகே சாத்தான்குளத்தைச் சேர்ந்த சாகுல், வாணி கிராமத்தைச் சேர்ந்த ஹர்ஷத், ராமநாதபுரத்தைச் சேர்ந்த பொன். மணிகண்டன் ஆகிய 3 பேரும் மலேசியாவுக்குத் தப்பி விட்டதாகவும், மற்றொரு குற்றவாளியான வாலாந்தரவை முனியசாமி தலைமறைவாக இருப்பதாகவும் கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் தெரிவித்திருக்கிறார்.
கைது செய்யப்பட்ட இளைஞர்கள்: ராமநாதபுரம் பாரதிநகரை சேர்ந்த ஆதிலாபானு, அவரது மகன் முகமது அஸ்லாம் (7), மகள் ஹாஜிராபானு (5) ஆகியோர் கடந்த 8ம் தேதியன்று கடத்திக் கொலை செய்யப்பட்டனர். இக்கொலை தொடர்பாக முதலில் ஆதிலாபானுவின் குடும்ப நண்பர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். பிறகு வாடிப்பட்டி போலீசார் –
1. வாலாந்தரவையை சேர்ந்த துரைராஜ் மகன் முனியசாமி (28),
2. ராமநாதபுரத்தை சேர்ந்த அகமது உல்லா மகன் சேக்கஜத் என்ற சூடானி (19), (கீழக்கரை கல்லூரி பிகாம் 2ம் ஆண்டு மாணவர்),
3. நயினா முகமது மகன் தமிமுல் அன்சாரி (21),
4. பட்டினம்காத்தானை சேர்ந்த கலீம் மகன் சாநவாஸ் (20) (மதுரை தனியார் கல்லூரி பிகாம் 3ம் ஆண்டு மாணவர்),
5. சாத்தான்குளம் அக்பர் அலி மகன் நாகூர் உசேன் (19)
உள்ளிட்ட 5 பேர் கைது செய்ய்பட்டனர். இப்படி கல்லூரியில் படிக்கும் / படித்த இளைஞர்கள் கொலையில் பங்கு கொண்டுள்ளது வியப்பக உள்ளது. ஏனெனில், இவர்கள் எல்லோரும் கூலிப்படையினர் போலவோ அல்லது மணத்திற்காகவோ கொலை செய்பவர்களைப் போலத் தெரியவில்லை. குழந்தைகளையும் கொல்ல மனம் வந்துள்ளது என்றால், அந்த அளவிற்கு தூண்டுதலாக இருந்தது எதுவென்று தெரியவில்லை.
சாத்தான்குளம் கொலையும் அகமது-அமீத் பகையும்: அவர்களிடம் நடத்திய விசாரணையில் கொலை குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன[2]. இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான சாகுல் அமீத் / ஷாகுல் ஹமீத், மண்டபம் யூனியன் முன்னாள் தலைவர் சீனிக்கட்டியின் உறவினர். ஆதிலாபானுவின் கணவர் முத்துசாமி இவரிடம் டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2002ம் ஆண்டு சீனிக்கட்டியின் தங்கை மறுமகன் கொலை செய்யப்பட்டார். இவர் மலேசியாவில் வசிக்கும் ஷாகுல் அமீதுக்கு உறவினர் ஆவார். இக்கொலை வழக்கில் முத்துசாமி / அகமது முக்கிய சாட்சியாக இருந்தார். அரசு தரப்பு சாட்சியாக முத்துசாமி சேர்க்கப்பட்டார். வழக்கு விசாரணைக்கு வந்தபோது, முத்துசாமி பிறழ்சாட்சியம் அளித்தார். கொலையாளிகள் விடுதலையானார்கள். இதனால், முத்துசாமி மீது சாகுலுக்கு வெறுப்பு ஏற்பட்டது. இதனால், அதாவது சாதகமாக சாட்சி சொல்ல மறுத்தவிட்டதால், ஷாகுல் அமீதுக்கும் முத்துசாமி-அகமதுக்கும் விரோதம் ஏற்பட்டது.
மலேசியாவிலும் தகராறு: மலேசியாவில் சீனிக்கட்டி உறவினர் சாகுலும், முத்துச்சாமியும் தனித்தனியாக ஆனால் எதிரிதிரே ஓட்டல் நடத்தி வந்துள்ளனர். சாகுல் மாமிசக்கறிக்கடையும், உணவகவும் வைத்துள்ளான்[3]. கோலாலம்பூரில் முத்துசாமியும், சாகுலும் இப்படி எதிரெதிரே ஓட்டல் நடத்தியதால், முன்விரோதம் இவர்களுக்குள் தொழில் போட்டியாகவும் மாறியது. இதனால், கடந்த சில மாதங்கள் முன்பு தகராறு ஏற்பட்டதில், சாகுல் தாக்கியதில் முத்துச்சாமி காயமடைந்தார். இது தெரிந்த ஆதிலாபானு கோபமடைந்து, ஆகஸ்ட் 31ம் தேதியன்று குழந்தைகளுடன் ராமநாதபுரம் திரும்பினார். இந்நிலையில் ஆதிலாபானு, ராமநாதபுரம் வந்த ஆதிலா, கணவரின் நண்பர் ஜெயக்குமாரிடம் மலேசியாவில் நடந்த தகராறு குறித்து கூறியுள்ளார். மேலும், கணவரை தாக்கிய சாகுலின் கையை, ஆள் வைத்து வெட்டாமல் விடமாட்டேன் என கூறியுள்ளார்[4]. [வேறொரு இடத்தில், ‘எனது கணவரை சாகுல் அடித்துள்ளார். அவரை கொலை செய்யாமல் விடமாட்டேன்‘ என்றுள்ளது]. ஆகையால், “கொலை செய்ய வேண்டும்” என குடும்ப நண்பர் ஜெயக்குமாரிடம் தெரிவித்தார். இத்தகவலை ஜெயக்குமார் அத்தை மகன் முனியசாமியிடம் தெரிவித்துள்ளார். முனியசாமி இதை மலேசியாவில் உள்ள சாகுலுக்கு தெரிவித்தார்.
சாகுல் அமீது நேராக தமிழகத்திற்கு வந்து திட்டமிட்டு ஆதிலா-குழந்ர்கைகளைக் கொன்றது[5]: அதனால் சாகுல் அமீது, ஆதிலாபானுவை கொலை செய்ய திட்டமிட்டார். இதற்காக மலேசியாவிலிருந்து சொந்த ஊருக்கு வந்து, ஜெயக்குமாரை அணுகி ஆதிலாபானுவை கடத்தி பணம் பறிக்கலாம் என மூளைச்சலவை செய்தார். அதனால் ஜெயக்குமார் கடந்த 8ம் தேதியன்று மாருதி காரில் ஆதிலாபானுவை 2 குழந்தைகளுடன் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளைக்கு அழைத்து வந்தார். ஜெயக்குமார் வந்ததும் அவரை, சாகுல் தாக்கினார். ஜெயக்குமார் கீழே விழுந்தார்[6]. அங்கு ஸ்கார்பியோ காரில் தயாராக காத்திருந்த சாகுல், 3 பேரையும் காரில் வலுக்கட்டாயமாக ஸ்கார்பியோ (டிஎன்65 கே 2223) காரில் ஏற்றினர்[7].
பாட்டி பக்கீரம்மாள் தோட்டத்திற்கு சென்றது, கொன்றது, புதைத்தது: அந்த கார் சாகுலின் பாட்டி பக்கீரம்மாள் தோட்டத்துக்கு சென்றது. அங்கு காரில் உள்ள மியூசிக் சிஸ்டத்தை சத்தமாக வைத்தனர். சாகுல், நண்பர்கள் மணிவண்ணன், ஹர்சத், முனியசாமி ஆகியோருடன் சேர்ந்து ஆதிலாபானு மற்றும் 2 குழந்தைகளை தலையணையால் முகத்தை அழுத்தி கொலை செய்தனர்[8]. அந்த தோட்டத்தில் 2 இடங்களில் குழி தோண்டினர். ஒரு குழியில் ஆதிலாபானுவையும், மற்றொரு குழியில் 2 குழந்தைகளையும் போட்டு புதைத்தனர். மறுநாள் காலையில் சாகுல் உள்பட 4 பேரும் சென்னை சென்றனர். அங்கிருந்து மலேசியா செல்ல முயன்றனர். அப்போது முனியசாமிக்கு மட்டும் விசா கிடைக்கவில்லை.
விஷயம் தெரிந்த பக்கிரியம்மாள் செய்த தகராறு: பாட்டி என்ற நிலையில், பேரனுக்கு இப்படியா உதவுவார் என்பதும் புதிராக உள்ளது. முதலில் கொலைசெய்ததே மாபெரும் குற்றம், அதிலும், இளம்பெண் மற்றும் இரு குழந்தைகளைக் கொன்றதுகூட மறந்து விட்டு, பிணங்களைப் பற்றிக் கவலைப்படும் பாட்டி வினோதம்தான். இந்நிலையில் தோட்டத்தில் உள்ள உடல்களை அகற்றுமாறு பக்கிரியம்மாள் போனில் சாகுலிடம் சண்டையிட்டுள்ளார். கடந்த 10-11-1010 தேதியன்று காலை சாகுல் விமானம் மூலம் மதுரை வந்தார். அங்கிருந்து ஒரு காரில் பரமக்குடி வந்தார். அங்கு தயாராக இருந்த –
1. முனியசாமி (28),
2. சேக்கஜத் என்ற சூடானி (19),
3. தமிமுல் அன்சாரி (21),
4. சாநவாஸ் (20)
5. நாகூர் உசேன் (19)
ஆதிலா, குழந்தைகளை கொலை செய்ய வேதாரண்யம் சென்றனர். செல்லும் வழியில் மாருதி ஆம்னியை வாடகைக்கு பிடித்தனர். அதில், ஆதிலா, குழந்தைகளை ஏற்றினர். அவர்களுக்கு துணையாக முனியசாமியை ஏற்றினர். ஆம்னியை பின் தொடர்ந்து சென்றனர். வேதாரண்யத்தில் கொலை செய்ய சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
தாய், மகன், மகள் கொலை செய்தது: ஆம்னியில் இருந்த ஆதிலா, குழந்தைகளை ஸ்கார்பியோவிற்கு மாற்றினர். முனியசாமியை, ஆம்னியில் ஏறி ஊருக்கு செல்லும்படி கூறினர். பின், ஸ்கார்பியோவில் இரவு எட்டு மணிக்கு சாத்தான்குளம் புறப்பட்டனர். வரும் வழியிலேயே ஆதிலா, குழந்தைகளின் முகத்தில் தலையணையை வைத்து அமுக்கி சாகுல், மூவரையும் கொலை செய்தார்[9]. சாகுலின் பாட்டி பக்கீரம்மாளுக்கு சொந்தமான சவுக்கு தோப்புக்கு வந்தனர். அங்கு மூவரையும் குழி தோண்டி புதைத்தனர். கொலை சம்பவம் பக்கீரம்மாளுக்கு தெரிந்தது. அவர், பிணத்தை அப்புறப்படுத்தும்படி எச்சரிக்கை விடுத்தார். இதனால் உடல்கள் தோண்டியெடுப்பு: கடந்த நவ., 10 அன்று இரவு மீண்டும் சவுக்கு தோப்புக்கு வந்து மூவர் உடலையும் தோண்டி எடுத்தனர்[10]. உடல்களை சுமோ காரில் (டிஎன்65 எப் 3999) ஏற்றி, கொடைக்கானல் டம்டம் பாறைக்கு புறப்பட்டனர். இதையெல்லாம் தெரிந்திருந்த அந்த பாட்டி எப்படி சும்மா இருந்தார்? மதுரை நகருக்குள் வராமல் அலங்காநல்லூர் வழியாக வாடிப்பட்டிக்கு வந்தபோது விடியத் தொடங்கி விட்டது. காரில் இருந்த பிணங்களில் துர்நாற்றம் வீசத்கொடங்கியது. எனவே போலீஸ் சோதனைச் சாவடிகளில் மாட்டிக் கொள்வோம் என பயந்து பிணங்களை துணியில் சுற்றி ஆண்டிபட்டி மற்றும் விராலிப்பட்டியில் வீசிச்சென்றுள்ளனர். அதன்பிறகு சாகுல், மணிகண்டன், ஹர்சத் 3 பேரும் மலேசியா தப்பியுள்ளனர் (12-11-2010)[11].
வேதபிரகாஷ்
© 22-11-2010
See first posting, here:
https://islamindia.wordpress.com/2010/11/21/1238-adhila-murder-gang-war-or-religious-persecution/
[3] He owned a mutton shop and operated a food stall in Kula Lumpur, http://www.bernama.com/bernama/v5/newsgeneral.php?id=544350
[5] Their interrogation revealed that Shakul, the prime accused, also running a hotel in Malaysia, had flown to India and plotted to eliminate Adhila due to a running feud with Ahamed. Adhila was angry with Shakul because he had attacked her husband Ahamed a few months ago, an investigating officer said.
[6] ஜெயக்குமார் கூறியுள்ளதில் வேறுபாடு காணப்படுகிறது. கொலை நடந்ததே தஎரியாது என்றும் கூறியிருப்பது நோக்கத்தக்கது.
[8] கீழேயுள்ள மற்றொரு வர்ணனை மாறுபட்டிருப்பதை காணலாம். அதாவது கொலைசெய்யப்பட்ட இடத்தை மாற்றிக் காட்டப்படுகிறது.
[9] மேலேயுள்ள மற்றொரு வர்ணனை மாறுபட்டிருப்பதை காணலாம். அதாவது கொலைசெய்யப்பட்ட இடத்தை மாற்றிக் காட்டப்படுகிறது.
[10] மேலே குறிப்பிட்டபடியுள்ள, “கடந்த 10-11-1010 தேதியன்று காலை சாகுல் விமானம் மூலம் மதுரை வந்தார். அங்கிருந்து ஒரு காரில் பரமக்குடி வந்தார்”, என்பது முரணாக இருக்கிறது. இல்லை அதிகாலை வந்து மாலையில் கொலைசெய்து, இரவுக்கு வந்திருக்க வேண்டும்.
[11]தினகரன், கல்லூரி மாணவர் உள்பட 5 பேர் கைது, 21-11-2010, http://www.dinakaran.com/highdetail.aspx?id=20857&id1=13
அண்மைய பின்னூட்டங்கள்