ஐசிஸ், அல்-குவைதா, இந்திய முஜாஹித்தீன் – இந்தியாவின் மீதான ஜிஹாதி தாக்குதல் அச்சுறுத்தல் – 712லிருந்து நடந்து வரும் ஜிஹாதிதான் – இந்துக்கள் எதிர்க்கொண்டே ஆகவேண்டிய நிலையாகிறது!
இந்தியாவின் மீது தாக்குதல் நடத்த வீடியோ ஆதாரம் வெளியானது: அய்மன் அல்- ஜவாஹரி [Ayman Al-Zawahari] என்ற அல்-குவைதாவின் படைத்தலைவனின் வீடியோ வெளியானப் பிறகு, இந்தியாவைத் தாக்க ஜிஹாதிகள் ஈடுபட்டுள்ள திட்டங்களைப் பற்றிய விவரங்கள் கிடைத்துள்ளன. ஊடகங்கள் இவற்றை ஏதோ புதியது போல வெளியிட்டு வந்தாலும், இவ்விவரங்கள் கடந்த 60 ஆண்டுகளுக்கு தெரிந்த விசயமே. இந்தியாவை முஸ்லிம் நாடுகளுடன் இணைக்க வேண்டும் என்ற நப்பாசை முஸ்லிம்களுக்கு பாகிஸ்தான் உருவானதிலிருந்தே இருந்து வருகிறது. கஜ்வா-இ-ஹிந்த் [Ghazwa-e-Hind] என்ற பெயரில் இந்தியாவின் மீதான கடைசியான போர் என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளனர். இந்த தீவிரவாத ஜிஹாதி சித்தாந்தம் மூலம் பல முஸ்லிம்களை மதரீதியில் கவர வைத்து, இந்தியாவின் மீதான தாக்குதலை மேற்கொண்டு, அதை காபிர்களின் பிடியிலிருந்து விடுபட வைத்து மறுபடியும், இஸ்லாமிய ஆட்சியை நிறுவ வேண்டும் என்று சொல்லிக் கொண்டு செயல் பட்டு வருகிறது. இந்திய துணைக்கண்டத்தில் ஜிஹாதி அஸ்திவாரம் அமைத்து அதன் மூலம் புனித போரைத் தொடர வேண்டும் [Jamaat Qaidat al-jihad fi’shibhi al-qarrat al-Hindiya or the Organisation of The Base of Jihad in the Indian Sub-Continent] என்று இவ்வியக்கம் தோற்றுவிக்கப் பட்டதாக ஜிஹாதிகள் கூறியிருக்கிறார்கள்[1]. இடைக்காலத்திலிருந்தே முகமதியர் இம்முறையைக் கையாண்டு வந்ததை நினைவுகூர வேண்டும்.
சுன்னி–ஷியா போராட்டமா, உலகத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலா?: அல்–கொய்தா தலைவன் பின்லேடன் பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத் நகரில் 2011ம் ஆண்டு மே 2–ந் தேதி அமெரிக்க படையினரால் கொல்லப்பட்டான், ஆனால், அவ்வியக்கம் தொடர்ந்து தீவிரவாதத்தை வளர்த்துக் கொண்டுதான் வந்துள்ளது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்பட பல்வேறு மத்திய கிழக்கு பகுதியில் செயல்பட்டு வரும் அல்-கொய்தா தீவிரவாத அமைப்பால்தான் ஐ.எஸ்.ஐ.எஸ். / ஐசிஸ் என்ற தீவிரவாத-பயங்கரவாத இயக்கம் தொடங்கப்பட்டது. அந்த தீவிரவாத இயக்கம் உலக நாடுகளுக்கே பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ். (இஸ்லாமிக் ஸ்டேட் இன் ஈராக் அண்டு சிரியா) என்ற தீவிரவாத இயக்கம் ஈராக் மற்றும் சிரியாவில் நுழைந்து அரசு படைகளை துவம்சம் செய்துவருகிறது. சுன்னி-சன்னி முஸ்லிம்களாக இருக்கும் இவர்கள், ஷியா முஸ்லிம்களைக் கொன்று வருகின்றனர். பாகிஸ்தானிலும் ஷியாக்கள் தொடர்ந்து கொல்லப்பட்டு வருவதை கவனிக்கலாம். இதற்கு பாகிஸ்தானின் ஆதரவும் இருந்து வருகின்றது. முன்பு இராக்-இரான் சணையிட்ட போது, அது உலக யுத்தமாக மாறுமா என்ற யேஷ்யம் இருந்தது. இப்பொழுது, மறுபடியும் இஸ்லாம் தீவிரவாதம் ஐசிஸ் போர்வையில் எல்லைகளைக் கடந்து செயல்பட்டு வருவதாலும், ஷியாக்களைக் கொன்று வருவதாலும், இரான் பதிலுக்கு தாக்குதலை ஆரம்பிக்குமோ என்ற பயம் இருந்து வருகிறது.
ஐசிஸ் உலக யுத்தத்திற்கு வழி வகுக்கிறதா?: தற்போது அல்–கொய்தாவை விட மிகவும் கொடிய தீவிரவாத இயக்கமாக கருதப்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தால் ஈராக் தேசமே நிலைகுலைந்து உச்சக்கட்ட குழப்ப நிலையில் தவிக்கிறது. ஐ.எஸ்.ஐ.எஸ்.சின் அபரிமிதமான வளர்ச்சி சவூதி அரேபியா, ஈராக், துருக்கி போன்ற அண்டை நாடுகளின் ஆட்சியாளர்களுக்கும் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால், அந்நாடுகளிலிருந்து தான் அதற்கு பணவுதவி கிடைத்து வருகிறது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். ஹக்கானி என்ற குழுமம் அதிக அளவில் பணவுதவி செய்து வருகிறது என்பது குறிப்பிடட்ய்ஹ் தக்கது[2]. ஒருவேளை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் ஈராக்கை கைப்பற்றி விட்டால் தங்கள் நாட்டின் மீதும் கை வைக்கலாம் என்று கருதி அங்குள்ள ஆட்சியாளர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தை ஒடுக்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறார்கள். அதற்கு எந்த அளவுக்கு பலன் கிடைக்கும் என்பது போகப் போகத்தான் தெரியும். அமெரிக்கா உள்பட உலக நாடுகளும் இந்த புதிய திவீரவாத-ஜிஹாதி தாக்குதல்களை எதிர்க்க களத்தில் இறங்கியுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ்.சின் வளர்ச்சி மத்திய கிழக்கு பகுதிக்கு மட்டுமின்றி உலக நாடுகளுக்கே அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்று உணரப்பட்டு விட்டது. முஸ்லிம்களும் அதனை உணர்ந்து விட்டார்கள். இந்நிலையில் இந்தியாவில் அல்-கொய்தாவின் கிளை தொடங்கப்படும் என்று அந்த அமைப்பின் தலைவன் அய்மான்-அல்-ஜவாஹிரி மிரட்டல் விடுத்துள்ளான்[3].
காலிபைட்டும், இந்தியாவை அதில் சேர்க்க கையாளும் மானசீக முறைகளும்: மியன்மார், அசாம், குஜராத், காஷ்மீரம் முதலிய இடங்களில் முஸ்லிம்களுக்கு இழைக்கப் படும் துன்பங்களுக்கு எதிராக இது செயல்படும் என்று அறிவித்துள்ளார்கள். இது முஸ்லிம்களின் உணர்வுகளைத் தூண்டி விடும் வேலையாக இருக்கிறது. பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பொய்யான புகைப்படங்களை வெளியிட்டு இந்தியாவில் கலவரம் மற்றும் தீவிரவாதத்தையும் வளர்த்து வருகின்றது. அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவன் அய்மான் அல் ஜவாஹிரி பேச்சு அடங்கிய 55 நிமிடம் ஓடுகிற வீடியோ யு-டியுப் உள்ளிட்ட இணையதளங்களில் வெளியாகி உள்ளது[4]. அல் கொய்தா இயக்கத்தின் புதிய கிளை தொடங்கப்பட்டுள்ளது. இது இந்திய துணைக்கண்டத்தில் காயிதத் அல் – ஜிஹாத் என்று அழைக்கப்படும். இது அங்கு புனித போர்க்கொடியை தூக்கிப் பிடிக்கும். இஸ்லாமிய ஆட்சியை திரும்ப கொண்டு வரும். ஷரியத் சட்டத்துக்கு அதிகாரம் வழங்கும். இந்திய துணைக் கண்டத்திற்கு இஸ்லாம் திரும்ப வேண்டும்.
ஆசியாவை இஸ்லாம் மயமாக்கும் முயற்சி: ஆக்கிரமிப்புக்கு முன்பு இந்தியா, இஸ்லாமிய உலகின் ஒரு அங்கமாகத்தான் இருந்தது. இந்திய துணைக்கண்டத்தில், பர்மாவில், வங்காளதேசத்தில், அசாமில், குஜராத்தில், ஆமதாபாத்தில், காஷ்மீரில் தீங்குகளிலிருந்து (இஸ்லாமியர்களை) காக்கும். காயிதத் அல் – ஜிஹாத்தில் உள்ள உங்கள் சகோதரர்கள் உங்களை மறக்கவில்லை. அவர்கள் உங்களை அநீதி, ஆக்கிரமிப்பு, துன்புறுத்தல், பாடுகளில் இருந்து விடுவிப்பார்கள். இந்த இயக்கம் இன்றைக்கு தோன்றி விடவில்லை. இது 2 ஆண்டுகளுக்கு மேலாக புனிதப் போராளிகளை திரட்டுவதற்கு எடுத்த முயற்சியின் பலனாக விளைந்திருக்கிறது. இது வெற்றி பெறும். முல்லா உமர் நம்பிக்கையாளர்களின் உத்தரவு இது. ஒசாமா பின்லேடனின் அழைப்பை புதுப்பித்து பிரகடனப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ள அமைப்பு இது. எதிரிகளுக்கு எதிராக புனிதப்போர் தொடுக்க வேண்டும். தனது சொந்த பூமியை மீட்டெடுக்க வேண்டும். தனது இறையாண்மையை மீட்க வேண்டும். என்று வீடியோவில் கூறப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. அல் கொய்தா இயக்கம் புதிய கிளையை தொடங்கியுள்ளது. என்று அமெரிக்க மீடியா மற்றும் உளவுத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தற்கொலைப் படை உருவாக்கும் முயற்சிகள்: அல்-குவைதா, இந்தியாவில் உள்ள இந்திய முஜாஹித்தீன் மற்றும் தடை செய்யப்பட்டுள்ள சிமி இவற்றின் உதவி கொண்டு ஃபிதாயீன் என்ற தற்கொலைப் படை அமைத்து இந்திய முக்கிய நகரங்களைத் தாக்கும் திட்டம் தெரிய வந்துள்ளது[5]. செயிக் என்ற இந்திய முஜாஹித்தீனின் தொழிற்நுட்ப ஆள் சஹரன்பூர் ரெயில் நிலைத்தில் வெள்ளிக்கிழமை (05-09-2014) அன்று பிடிபட்டான். தில்லி அதில் முக்கிய இடமாக உள்ளது, என்று அவனிடம் விசாரித்ததில் தெரிய வந்துள்ளது[6]. யாசின் பட்கல் பிடிபட்டபோது, இவன் நேபாளத்திற்கு ஓடிச் சென்று விட்டான். 2010ல் ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்பில் உபயோகப்படுத்திய வெடிப்பொருட்களை தான் பெற்றுக்கொண்டதாகவும் ஒப்புக்கொண்டுள்ளான். ஜம்மு-காஷ்மீர், கேரளா, அசாம், குஜராத், தமிழ்நாடு முதலிய மாநிலங்களில் அவர்களுக்கு உதவி கிடைத்து வர் உவதாகவும் தெரிகிறது. இதனால் அம்மாநிலங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கேரளா-காஷ்மீர் ஜிஹாதி இணைப்பு ஏற்கெனவே பல உண்மைகளை வெளிக்காட்டியுள்ளது. அதில் தமிழகத்தின் பங்கும் இருப்பது கவனிக்கத் தக்கது.
தேடப்பட்டு வரும் உலக குற்றவாளிகளை தெய்வீக மயமாக்கும் இஸ்லாமிய இறையியல்: அமெரிக்காவால் தேடப்படும் தீவிரவாதிகளின் பட்டியலில் இருக்கும் முதல் நபர் அல்–கொய்தா இயக்கத்தின் தலைவன் அய்மான் அல்–ஜவாஹிரி. இரண்டாவது இடத்தில் இருப்பவன் வேறு யாரும் அல்ல, ஈராக், சிரியா அரசுகளின் கண்களில் விரலை விட்டு ஆட்டிக் கொண்டிருக்கும் அபுபக்கர் அல்–பாக்தாதி தான். சன்னி பிரிவைச் சேர்ந்த இவன், அடுத்த ஒசாமா பின்லேடன் என்று அழைக்கப்படுகிறான். ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு தலைமை தாங்கும் 43 வயதான அல்–பாக்தாதி, பெரும்பாலும் தனது முகத்தை வெளிக்காட்டுவது இல்லை. தனது இயக்க தளபதிகள் மத்தியில் பேசும் போது கூட முகத்தை மூடிக் கொண்டிருப்பான். இதனால் இவரை மாயாவி ஷேக் (‘இன்விசிபிள் ஷேக்’) என்றும் கூறுகிறார்கள்[7]. இவ்வாறுதான் தீவிரவாத இறையியலை பயங்கரவாதிகள் வளர்த்து வருகிறார்கள். இது இஸ்லாமை சித்தாந்தமாகக் கொண்டு வளர்ந்து வரும் இளைஞர்களை எளிதில் ஜிஹாதில் ஈடுபட்டு, ஷஹீதுகளாக மாற வைக்கிறது.
இந்துக்களைக் கொல்ல தயாக இருக்கும் குரூர ஜிஹாதிகள்: ஜிஹாதிகள் இவ்வாறு வெளிப்படையாக இந்தியாவைத் தாக்க வேண்டும், இந்துக்களைக் கொல்ல வேண்டும் என்றெல்லாம் வெளிப்படையாக மிரட்டிக் கொண்டிருந்தாலும், முஸ்லிம் அமைப்புகள் ஏதோ தங்களுக்கு ஒன்றும் தெரியாது என்பது போல ஒரு புறம் ஜிஹாதிகளைக் கண்டிப்பது, மற்றும் இன்னொருப் பக்கம், ஆஹா இதெல்லாம் பிஜேபிக்குத்தான் சாதகமாக அமையும் என்றும் பேசுவதும்[8] படுவேடிக்கையாக இருப்பதுடன், அவர்களது போலியான மனப்பாங்கையும், இரட்டை வேடங்களையும் வெளிப்படுத்திக் காட்டுகிறது. இந்தியாவைப் பொறுத்த வரையில், பெரும்பாலான முஸ்லிம்களின் எண்ணங்களில் ஒரு பக்கம் சந்தோஷமும், அதே நேரத்தில் சுன்னி-ஷியா போராட்டங்கள், அதிகமான ஷியாக்கள் கொல்லப் படுவது, இரானை உசுப்பிடுமோ என்றும் பயந்து கொண்டிருக்கிறார்கள். ஷியாக்கள் பெரும்பான்மையாகக் கொண்ட இரான், இது வரையிலும் அமைதியாக இருப்பது கவனிக்கத் தக்கது.
குரூர ஜிஹாதித்துவத்தை மறைக்க இந்துத்வத்தின் போடும் பழிகள்: இந்துத்வவாதி மோடியின் கீழுள்ள பிஜேபி ஆட்சி இருப்பதினால், “இந்து ராஷ்ட்ரா” என்ற அவர்களது திட்டத்திற்குத்தான் இது உதவும் என்றும் திரித்து முஸ்லிம் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன[9]. சையீத் நக்வி என்றவரும் “ஏற்கெனவே மதரீதியில் பிளவு பட்டுள்ள இந்து-முச்லிம்களிடையே இது மேலும் தீயை வளர்க்கும்”, என்று இதே தோரணையில் எழுதியுள்ளார்[10]. ஆனால், இந்தியாவின் மீது எப்படி முகமதியர்கள் 712லிருந்து தாக்குதல்களை நடத்தியிருக்கிறார்கள் என்ற சரித்திரத்தைப் படித்துப் பார்த்தால், முஸ்லிம்களின் குரூரக்கொலை திட்டம், இந்துக்களை தாக்கியது, கொடுமைப்படுத்தியது, கோவில்களை இடித்தது என்ற பல உண்மைகள் வெளி வரும். ஆகவே, முகமதியர்கள் / முஸ்லிம்கள் ஏதோ சாத்துவிக சித்தர்கள், அஹிம்சை புத்தர்கள் என்ற ரீதியில் இவர்கள் வக்காலத்து வாங்கிக் கொண்டு வருவது மிகக்கேவலமான பிரச்சாரம் ஆகும். முதலில் இத்தகைய ஜிஹாதிகளை ஒழிக்க வேண்டும் என்று அவர்கள் குரல் கொடுக்க வேண்டுமே தவிர மறைமுகமாக அவர்களது குரூரச் செயல்களை நியாயப்படுத்துவது அவர்களுடன் சேர்ந்து செயல்படுவது போலத்தான் ஆகும்.
712லிருந்து நடந்து வரும் ஜிஹாதிதான் – இந்துக்கள் எதிர்க்கொண்டே ஆகவேண்டிய நிலையாகிறது!: இடைக்காலத்தில் இந்தியர்களின் / இந்துக்களின் ஆட்சியாதிக்கம் மத்தியத் தரைக் கடல் பகுதிகளில் இருந்து வந்துள்ளது. இஸ்லாம் வளர்ந்து கிழக்குப் பக்கம் பரவ ஆரம்பித்த போது, அது இந்தியர்களின் ஆதிக்கத்தைக் குறைக்க ஆரம்பித்தது. திடீரென்று தாக்கி கொள்ளை-கொலைகளில் ஈடுபட்டு வந்த முகமதிய படைகள் என்றுமே வஞ்சக முறைகளைத் தான் கையாண்டு வந்துள்ளன. 700 ஆண்டுகள் ஆட்சி, ஐரோப்பியர்கள் / இங்கிலாந்துவாசிகளிடம் சென்று, விடுதலைப் பெற்றப் பிறகு, இந்தியாவை காலிபைட்டில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் முஸ்லிம்களுக்கு இருந்து வந்துள்ளது. இதற்கு “கிலாபத் இயக்கத்திற்கு” காந்தி ஆதரவு தெரிவித்ததும் தீயில் எண்ணையை வார்த்தது போலாகியது. இப்பொழுதைய காலக் கட்டத்தில் ஐசிஸ் கிலாபத்தை மறுபடியும் நிலைநிறுத்த பாடுபடுவதும், காந்திய ஆதரவையும் கூர்மையாக ஆராய வேண்டியுள்ளது. செக்யூலரிஸவாதிகள் மேற்குறிப்பிட்டபடி, இந்துத்வத்தை குறைகூறி, இந்த குரூர-பயங்கரவாதத்தை ஆதரிக்க இப்பொழுதே ஆரம்பித்து விட்டன. இனி இந்திய ஊடகங்களில் அத்தகைய பிரச்சாரங்கள் அதிகமாகும். வழக்கம் போல கம்யூனிஸ்டுகளும் தங்களது வலையை வீச ஆரம்பிப்பார்கள். இஸ்லாமிய நிதியுதவி, வழ்க்ஷக்கம் போல கிடைக்கும். எனவே இந்துக்கள் தங்களது மீதான தாக்குதலை, புதிய யுத்தமுறையை நன்றாகப் புரிந்து கொண்டு, இத்தகைய விஷமப்பிரச்சாரவாதிகளை வெளிக்காட்ட வேன்டும், தனிமைப் படுத்த வேண்டும்.
வேதபிரகாஷ்
08-09-2014
[1] http://www.firstpost.com/india/al-qaeda-threat-not-just-kashmir-kerala-could-be-a-terror-hot-spot-too-1700487.html
[2] Gretchen Peters, Haqqani Network Financing: The Evolution of an Industry, Harmony Program, Combating Terrorism Centre, USA, 2012.
[3] http://www.dailythanthi.com/News/World/2014/09/04084404/Al-Qaeda-Announces-India-Wing—Ayman-al-Zawahri.vpf
[4] http://www.dailythanthi.com/News/India/2014/09/05144641/We-are-prepared-to-face-al-Qaeda-threat-IAF-chief.vpf
[5] http://www.deccanchronicle.com/140908/nation-crime/article/al-qaeda-plans-raise-suicide-squads-india-help-im-and-banned-simi
[6] http://www.deccanchronicle.com/140908/nation-crime/article/indian-mujahideen-operative-reveals-delhi-was-next-hit
[7] http://www.dailythanthi.com/News/World/2014/09/04084404/Al-Qaeda-Announces-India-Wing—Ayman-al-Zawahri.vpf
[8] http://gulfnews.com/opinions/columnists/al-zawahiri-s-call-will-only-make-things-easier-for-bjp-1.1381940
[9] Saeed Naqvi, Al Zawahiri’s call will only make things easier for BJP, Published: 20:00 September 7, 2014, http://gulfnews.com/opinions/columnists/al-zawahiri-s-call-will-only-make-things-easier-for-bjp-1.1381940
[10] http://www.risingkashmir.com/can-zawahiri-add-to-communal-cauldron-already-full/
அண்மைய பின்னூட்டங்கள்