தெலிங்கானாவில் தயாரிக்கப் பட்ட வெடிகுண்டுகள் கேரளாவில் பிடிபட்டது எப்படி? கர்நாடகாவில் குவாரி என்றால் கேரள வீட்டில் பதுக்கி வைப்பானேன்?

30-06-2023 செவ்வாய்கிழமை சாராய போதை தடுப்பு போலீசார் சோதனை: சமீப காலங்களில் குற்றங்கள் எல்லைகளைக் கடந்து தான் நடந்து கொண்டிருக்கின்றன. மாநிலத்திற்கு மாநிலம் அந்த மாடல், இந்த மாடல் என்றெல்லாம் சொல்லிக் கொண்டாலும், குற்றவாளிகள் தொடர்ந்து தங்களது மாடலில் தான் வேலை செய்து கொண்டிருக்கின்றனர். கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது[1]. என்ன நடந்தாலும், ஒன்றுமே நடக்கவில்லை என்பது போல, இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது இங்கு, காசர்கோடு மாவட்டத்தில் உள்ள அதுார் கிராமத்தில், மூலியூர் கிராம பஞ்சாயத்து, கள்ள சாராயம் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக கலால் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது[2]. காசர்கோடு என்றாலே சமீபகாலத்தில் அடிக்கடி குற்றங்கள் நடக்கும் இடம் என்பது போல, செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. போதைப் பொருட்கள், மருந்து, சாராயம் போன்றவற்றிற்கும் பிரபலமாக இருக்கிறது. ஆகையால், இங்கு போலீசார் சோதன் தொடர்ந்து இருந்து வருகிறது. இதை தொடர்ந்து, அங்கு கலால் துறையினர் வீடு வீடாக சென்று சோதனையில் ஈடுபட்டனர். செவ்வாய்கிழமை, 30-06-2023 நேற்று அதிகாலை, முகமது முஸ்தபா, 42, என்பவரது வீட்டுக்கு அதிகாரிகள் சென்ற போது, வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சொகுசு காரின் பின்புறம், ஏராளமான அட்டை பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை பார்த்தனர்[3].

30-06-2023 செவ்வாய்கிழமை வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு: வழக்கம் போல, அதில், கள்ள சாராய பாக்கெட்டுகள் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது[4]. ஆனால், சாராயப் பாக்கெட்டுகளுக்கு பதிலாக வெடிப்பொருட்கள் இருந்ததால், போலீஸார் திடுக்கிட்டனர். மே 31, 2023 கேரளாவின் காசர்கோடு பகுதியைச் சேர்ந்த முகமது முஸ்தபா என்பவரது வீட்டில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையின் போது, 2,800 ‘ஜெலட்டின்’ குச்சிகள், 7,000 ‘டெட்டனேட்டர்’கள், ஒரு ‘டைனமைட்’ உட்பட குவியல் குவியலாக பயங்கர வெடி பொருட்களுடன், ‘ஒயர் பண்டல்’களும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்[5]. இதை தொடர்ந்து, வீட்டுக்குள் நுழைந்து கலால் துறையினர் சோதனையிட்ட போது, குவியல் குவியலாக பயங்கர வெடி பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்[6]. இதனால், சாராய போதை தடுப்பு போலீசார் உடனடியாக அதுார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது[7].

போலீசார் சோதனையிட்டு, காரில் வீட்டில் வெடிகுண்டுகள், பொருட்கள் கண்டுபிடித்தனர்: இன்ஸ்பெக்டர் அனில் குமார் தலைமையில் போலீசார் வந்து சோதனையிட்டதில், முகமது முஸ்தபாவின் வீடு மற்றும் காரில், 13 பெட்டிகளில் 2,800 ஜெலட்டின் குச்சிகள், 7,000 டெட்டனேட்டர்கள், ஒரு டைனமைட் மற்றும் ஐந்து பண்டல் ஒயர்கள் கைப்பற்றப்பட்டன[8]. அவரிடம் இது பற்றி கேட்டபோது, கர்நாடகாவில், ‘கிரானைட்’ குவாரிகள் நடத்தி வருவதாகவும், அங்கு வெடி வைத்து தகர்க்க, வெடி பொருட்கள் சப்ளை செய்து வருவதாகவும் முகமது முஸ்தபா தெரிவித்தார்[9]. இவன் அடிக்கடி கர்நாடக பகுதிக்குச் சென்று வருவது தெரிந்தது. ஆனால், இதற்கான ‘லைசென்ஸ்’ எதுவும் தன்னிடம் இல்லை என, அவர் தெரிவித்தார்[10]. குவாரிகளுக்கு என்று சொல்லி இவ்வாறு வெடிப்பொருட்கள் வாங்குவதும், அவை, பிறகு வெடிகுண்டுகள் தயாரிக்க, வெடிகுண்டுகளாகவே உபயோகிக்கப் படுவது, தீவிரவாதிகளின் செயல்களிலிருந்து தெரிய வருகிறது.

குவாரி பயோகத்திற்கு என்று இத்தகைய வெடிகுண்டுகளை வாங்குவது: இது சுமார் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. பெரும்பாலான வெடிகுண்டு வழக்குகளில் அவ்வாறு தான் ஆதாரங்களும் வெளிப்பட்டுள்ளன. அட்டைப் பெட்டிகளின் மீது காணப்படும் விவரங்களிலிருந்து அவை மின்சாரம் மூலம் உடனடியாக வெடிக்கப் படும் வெடிகுண்டு [SAED (Electric Instantaneous Detonator)] என்று தெரிகிறது. ரெக்ஸ் REX என்பது, செல்லுலோஸ் நைட்ரேட் வகையறா போல் தோன்றுகிறது. இவை தெலிங்கானாவில் உள்ள தொழிற்சாலை [Salvo Explosives and Chemicals Pvt Ltd, Ankireddypalli (Vill), Keesara Mandal, Medchal-Malkajgiri Dist.,- 501301, Telangana] மூலம் தயாரிக்கப் பட்டது என்பதும் தெரிகிறது. ஆக, தெலிங்கானாவில் தயாரிக்கப் பட்ட வெடிப்பொருட்கள், கேரளாவுக்கு வந்துள்ளன, ஆனால், குவாரி கர்நாடகத்தில் உள்ளதாம்.

தற்கொலைக்கு முயற்சி: அவரது வீட்டை போலீசார் சல்லடை போட்டு சோதனையிட்ட போது, பதற்றத்துடன் இருந்த முஸ்தபா, திடீரென தன் கை மணிக்கட்டை, ‘பிளேடால்’ அறுத்து தற்கொலைக்கு முயன்றார்[11]. இதுவும் அத்தகைய தீவிரவாதிகள் கடைபிடிக்கும் உக்திதான். அவரை போலீசார் உடனடியாக காசர்கோடில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்[12]. உடனே, அவனுக்கு மறைமுகமாக உதவி கிடைக்கும். அவன் ஒத்துழைக்க மாட்டான். இல்லை, இச்செய்தி அப்படியே அமுக்கப் படும். இப்பொழுதே, இது பிடி.ஐ செய்தியாக இருப்பதால், எல்லா ஊடகங்களும் அப்படியே போட்டுள்ளன. இல்லையென்றால், இது ஏதோ சாதாரண உள்ளூர் செய்தியாகி அமுக்கப் பட்டிருக்கும். இந்நிலையில், அவருக்கு வெடி பொருட்கள் எங்கிருந்து கிடைத்தன என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்[13]. இது போன்ற வெடி பொருட்களை சேகரித்து வைக்க பல விதிகள் உள்ளன. அவற்றை வீடுகளிலும், கார்களிலும் சேகரித்து வைப்பது சட்டப்படி குற்றம்[14]. இவையெல்லாம் எல்லோருக்கும் தெரிந்த விசயம் தான் இருப்பினும், சொகுசு காரில் ஏற்று எடுத்துச் செல்லப் படுகிறது. வீடுகளில் சேகரிக்கப் படுகிறது. எனவே, சட்டவிரோதமாக வெடி பொருள் தயாரித்தல், பதுக்கி வைத்தல் ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் முஸ்தபா மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். இவருக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா, கேரளாவில் ஏதேனும் நாச வேலையில் ஈடுபட அவர் திட்டமிட்டுள்ளாரா என்ற கோணத்திலும் விசாரணை தொடர்கிறது. இவ்வாறாக செய்திகள் முடிகின்றன. இவற்றை யார் வாங்கினர் போன்ற விவரங்கள் எல்லாம் இனிமேல் தான் கண்டுபிடிப்பார்கள் போலிருக்கிறது.
© வேதபிரகாஷ்
01-06-2023

[1] தினமலர், வெடிபொருட்களுடன் கேரள நபர் கைது!, மாற்றம் செய்த நாள்: மே 30,2023 23:50; https://m.dinamalar.com/detail.php?id=3334630
[2] https://m.dinamalar.com/detail.php?id=3334630
[3] Onmanorama, 2,800 gelatin sticks, 7,000 detonators seized in Kasaragod; accused says he supplies explosives to quarries, Onmanorama Staff, Published: May 30, 2023 09:29 AM IST Updated: May 30, 2023 01:55 PM IST.
[4] Excise officers found around 2,800 gelatin sticks in 13 boxes, one dynamite, nearly 7,000 detonators, and five rounds of wires, said the officer. Some of them were recovered from his house, too.
https://www.onmanorama.com/news/kerala/2023/05/30/explosives-seized-in-kasaragod-one-arrested.html
[5] குமுதம், கேரளா: கள்ளச் சாராய வேட்டைக்கு சென்ற போலீஸ்: சோதனையில் சிக்கிய அதிர்ச்சிப் பொருட்கள், ஜூன் 1 2023.
[6] https://www.kumudam.com/news/tamilnadu/the-police-went-on-a-hunt-for-bootleg-liquor
[7] The Hindu, Huge quantity of explosives seized from a house in Kasaragod, May 30, 2023 06:12 pm | Updated 06:12 pm IST – KASARAGOD, THE HINDU BUREAU
[8] https://www.thehindu.com/news/national/kerala/huge-quantity-of-explosives-seized-from-a-house-in-kasaragod/article66911137.ece
[9] Economics Times, Kerala: Huge consignment of 2800 gelatin sticks, 6000 detonators seized in Kasargod, Mirror Now | 30 May 2023, 12:30 PM IST.
[10] https://economictimes.indiatimes.com/news/india/kerala-huge-consignment-of-2800-gelatin-sticks-6000-detonators-seized-in-kasargod/videoshow/100614704.cms?from=mdr
[11] Janam TV, Explosives seized in Kasaragod: 2,800 gelatin sticks and 7000 detonators recovered, accused tries to commit suicide, Janam Web Desk, May 30, 2023, 03:16 pm IST
[12] https://english.janamtv.com/news/kerala/58758/explosives-seized-in-kasaragod-2800-gelatin-sticks-and-7000-detonators-recovered-accused-tries-to-commit-suicide/
[13] AsiaNetNews, Explosive haul: 2800 gelatin sticks, 6000 detonators in Kerala’s Kasaragod, Aishwarya Nair, First Published May 30, 2023, 12:35 PM IST; Last Updated May 30, 2023, 2:08 PM IST.
[14] https://newsable.asianetnews.com/india/explosive-haul-2800-gelatin-sticks-6000-detonators-in-kerala-s-kasaragod-anr-rvgmd1

அண்மைய பின்னூட்டங்கள்