23-09-2022 அன்று கோவையில் கார் குண்டு வெடித்தது, சென்னையில் விசாரணை தொடர்ந்து நடந்து வருவது, 07-02-2023 அன்று வெடிப்பொருட்கள் செயலிழக்கச் செய்தது!
23-09-2022 அன்று கோவையில் கார் குண்டு வெடித்தது, சென்னையில் விசாரணை தொடர்ந்து நடந்து வருவது: கோவை கோட்டை சங்கமேஸ்வரா் கோயில் அருகே கடந்த ஆண்டு அக்டோபா் 23ஆம் தேதி 23-09-2022 அன்று கார் குண்டு வெடித்தது. இதில் அந்த காரை ஓட்டி வந்த ஜமேஷா முபீன் அங்கேயே உயிரிழந்தார். இதுதொடா்பாக என்ஐஏ குழுவினா் நடத்தி வரும் விசாரணையில் இதுவரை 11 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்நிலையில் இந்த வழக்கில் கைதாகி உள்ள முகமது அசாருதீன், அஃப்சா்கான், ஃபெரோஸ்கான், முகமது தெளபீக், ஷேக் இதயத்துல்லா, சனோஃபா் அலி, முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 7 பேரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ அதிகாரிகள் பூந்தமல்லி என்ஐஏ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனா். அதாவது, சென்னையில் தான் இந்த நீதிமன்ற வழக்கு விசாரணைகள் எல்லாம் நடந்து வருகின்றன. ஆனால், ஊடகங்கள் இவற்றைப் பற்ரியெல்லாம் கண்டு கொள்ளாமல், வேறு விவகாரங்களை ஐத்துக் கொண்டு வாத-விவாதங்கள், பட்டி மன்றங்கள் நடத்திக் கொண்டிருக்கின்றன.
சட்டப்படிநடந்துவரும்நீதிமன்றவிசாரணைகளில்காலதாமதம்ஏற்படுவது: இவ்வாறு சட்டப் படி வழக்குகளை விசாரிப்பது, கைது செய்யப் பட்டவர்களை விசாரிப்பது, வாக்குமூலம் வாங்குவது, அதை வைத்து, மறுபடியும் குறிப்பிட்ட இடங்களுக்குச் சென்று சோதனை செய்வது, விசாரிப்பது போன்றவை தொடர்ந்து நடந்து வருகின்றன. இவற்றில் இடையே காலதாமதம் ஏற்படுகிறது. செப்டம்பர் 2022ல் நடந்த குண்டுவெடிப்பிற்குப் பிறகு, நிச்சயமாக சம்பந்தப் பட்டவர்கள் உஷாராகியிருப்பர். இருக்கும் ஆதாரங்களை அழித்திருப்பர். ஆகவே, இவற்றையெல்லாம் மீறி, விசாரணை நடத்தி உண்மையை நிலை நாட்ட என்ஐஏ போன்றோர் மிக கடினமாக வேலை செய்ய வேண்டியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்த வரையில் முஸ்லிம்கள் என்ஐஏவையே எதிர்த்து ஆர்பாட்டம் செய்கின்றனர். சோதனைக்கு வந்தால், கலாட்டா செய்கின்றனர். இதனால், தமிழக போலீஸாரும் கூட வர வேண்டியுள்ளது. இதெல்லாம் இப்பொழுது வழக்கமாகி விட்டது. இதையெல்லாம் யாரும் கண்ட்ப்பதும் இல்லை. மிக சாதாரணமாக எடுத்துக் கொ/ல்கின்றனர் அல்லது கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றனர். இப்பொழுது கூட, இந்த விவகாரங்களை சில ஊடகங்கள் தான் வெளியிட்டுள்ளன.
பட்டாசுவாங்கியகடையில்என்ஐஏஅதிகாரிகள்செவ்வாய்க்கிழமை 07-02-2023 அன்றுசோதனை: கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தொடா்புடைய அசாருதீன் பட்டாசு வாங்கிய கடையில் என்ஐஏ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை 07-02-2023 அன்று சோதனை நடத்தினா். மனுவை விசாரித்த நீதிபதி அந்த 7 பேரையும் 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். அதன்படி அவா்கள் 7 பேரையும் கோவைக்கு வியாழக்கிழமை 02-02-2023 அன்று அழைத்து வந்தனா். கோவையில் அவா்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடா்ந்து ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். அப்போது கார் வெடிப்பு சம்பவம் தொடா்பான திட்டம் குறித்தும், ஜமேஷா முபீன் குறித்தும், இதில் வேறு எவருக்கேனும் தொடா்பு உள்ளதா என்பது குறித்தும் அவா்களிடம் விசாரணை நடத்தியதோடு, அவா்கள் தெரிவித்த தகவல்களை விடியோவாகவும் பதிவு செய்து கொண்டனா்.
23-09-2022 அன்று குண்டு வெடித்தது என்றால், 07-02-2023 அன்று செல்லும் பொழுது நிலை: அவா்கள் 7 பேரில் அசாருதீன் என்பவா் கோவையிலுள்ள ஒரு பட்டாசுக் கடையில் பட்டாசுகளை வாங்கி அவற்றிலிருந்து திரிகளை மட்டும் எடுத்துவிட்டு அந்த பட்டாசு மருந்துடன் வேறு ரசாயனங்களைச் சோ்த்து புதிதாக வெடிபொருள் தயாரித்திருந்தது விசாரணையில் தெரியவந்தது[1]. இதையடுத்து அசாருதீன் பட்டாசு வாங்கிய கடைக்கு அவரை செவ்வாய்க்கிழமை 07-02-2023 அன்று நேரில் அழைத்துச் சென்று என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினா்[2]. 23-09-2022 அன்று குண்டு வெடித்தது என்றால், 07-02-2023 அன்று செல்லும் பொழுது நிலை எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்க்கலாம். இதையெல்லாம், என்ஐஏவுக்கு கடினமாக இருந்தாலும், மற்றவர்களுக்கு சாதமாக இருக்கும். இத்தகைய அடைமுறை விவகாரங்களை சட்ட ஓட்டைகளாக்கி தப்பித்துக் கொள்ள முயல்வர்.
வெடிகுண்டுதயாரிக்கபயன்படுத்தப்பட்டுள்ளரசாயனங்கள்முதலியனபறிமுதல், சோதனைக்குஉட்படுத்தப்பட்டன: கார் வெடிப்பு நடந்த பின்னர் ஜமேஷா முபின் வீட்டில் நடந்த சோதனையில் 120 கிலோ எடையிலான வெடி பொருட்கள் இருந்தன. 109 வகையான அந்த பொருட்களை தேசிய புலனாய்வு முகமையினர் பறிமுதல் செய்தனர். இதில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படும் ரசாயன பொருட்களும் அடங்கும்[3]. இந்த ரசாயன மூலப் பொருட்களில் பொட்டாசியம் நைட்ரேட், நைட்ரோ கிளிசரின், ரெட் பாஸ்பரஸ், பிஇடிஎன் பவுடர் (பென்டேரித்ரிட்டால் டெட்ராநைட்ரேட் பவுடர்), அலுமினியம் பவுடர் ஆகியவை இருந்தன. தவிர, வயர்கள், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு ஆதரவு பொருட்கள் உள்ளிட்டவையும் இருந்ததை கண்டறிந்து பறிமுதல் செய்யப்பட்டது.வெடி பொருட்கள் ஆய்வக சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது[4]. அவையெல்லாம் வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படுத்தப் படும் பொருட்கள், ரசாயனங்கள் என்று நிரூபிக்கப் பட்டன. இருப்பினும், அவையெல்லாம் எப்படி தீவிரவாதிகள் வசம் செல்கின்றன என்பது புதிராக இருக்கிறது. உதாரனத்திற்கு நைரோ செல்லுலோஸ் வெடிகுண்டுகள் மலை, மலைபாறை, குவாரிக்களில் உபயோகிக்க, சாலைப் பணி முதலியவற்றிற்கும் விற்கப் படுகின்றன. ஆனால், அத்தகைய பொருள் முன்னர் சந்திர பாபு நாயுடு செல்லும் போது உபயோகப் படுத்தப் பட்டன.
ரசாயனங்கள்செயலிழக்கப்பட்டன: பறிமுதல் செய்த வெடி பொருட்கள் அவினாசி ரோட்டில் உள்ள என்ஐஏ தற்காலிக முகாம் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது[5]. நேற்று என்ஐஏ எஸ்பி ஸ்ரீஜித், வெடிகுண்டு அழிக்கும் நிபுணர் பாண்டே தலைமையிலான அதிகாரிகள் வெடி பொருட்கள் எடுத்து செல்லும் சிறப்பு வாகனத்தில் பறிமுதலான வெடிபொருட்களை கோவை மாவட்டம் சூலூர் தாலுகாவில் உள்ள சுல்தான்பேட்டையை அடுத்த கந்தம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தின் வெடி மருந்து குடோனிற்கு கொண்டு சென்றனர்[6]. அங்கு வெடி பொருட்கள் அழிக்கப்பட்டன[7]. வெடி பொருட்கள் அழித்தது தொடர்பான ஆதாரங்களை போலீசார் பதிவு செய்தனர். குறிப்பிட்ட சில வகையான வெடி பொருட்கள் தீ வைத்தும், சில பொருட்கள் மண்ணில் மூடியும் அழிக்கப்பட்டதாக தெரிகிறது[8]. வெடி பொருட்கள் அழிக்கப்பட்டபோது அந்த வளாகத்தில் தொழிலாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை[9]. வெளியே தெரியாமல் மிகவும் ரகசியமாக வெடி மருந்துகளை கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்பட்டது. இது தொடர்பாக அந்த வெடிமருந்து தொழிற்சாலையின் மேலாளர் கூறுகையில், “கோவையில்கைப்பற்றப்பட்டவெடிபொருட்கள்எங்கள்தொழிற்சாலையில்வைத்துசெயல்இழக்கச்செய்யப்பட்டன. காவல்துறையின்முக்கியஅதிகாரிகள்உட்பட 18 பேர்வந்திருந்தனர்,” என்றார்[10]. நீதிமன்ற வழிகாட்டுதலின்படி வெடிபொருட்களை செயலிழக்க செய்துள்ளனர்.
[5] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், கோவைவெடிவிபத்தில்கைப்பற்றப்பட்டவெடிமருந்துகள்அழிப்பு; என்ஐஏநடவடிக்கை, Velmurugan s, First Published Feb 7, 2023, 11:41 AM IST, Last Updated Feb 7, 2023, 11:41 AM IST.
நிலப்பிரச்சினை என்றால், கொலை செய்யப்பட்டது பிஜேபி மற்றும் கொலை செய்தவர்கள் பின்னணி வேறுவிதமாக இருப்பது எப்படி?
பரமக்குடியில் பட்டப்பகலில் வெட்டிக் கொலை, பதற்றம், சாலைமறியல்: ராமநாதபுரம், பரமக்குடியில் பா.ஜ., முன்னாள் கவுன்சிலர் முருகன், கொலை செய்யப்பட்ட வழக்கில், நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். முருகன் பெரிய கடை அஜாரில் தேங்காய் கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார்[1]. பரமக்குடியில் மார்ச் 19, 2013ல், ஈஸ்வரன் கோயில் முன், பா.ஜ., முன்னாள், நகராட்சி கவுன்சிலர் முருகன், 46, மெயின் பஜாரில் தனது வீட்டில் மதிய உணவை சாப்பிட்டு விரட்டு கடைக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் போது, இரண்டு மோட்டார் கைக்கிள்களில் வந்த நால்வர் வழிமறித்தனர். திடீரென்று “பைப்” குண்டுகளை வீசினர், ஆனால், அவை வெடிக்கவில்லை. தப்பித்து ஓட முயன்ற முருகனை நால்வரும் துரத்திச் சென்று, பயங்கர ஆயுதங்களால் கண்ட-துண்டமாக வெட்டிக் கொன்று ஓடிவிட்டனர்[2]. முருகனின் வெட்டப்பட்ட உடல் தெருவில் ரத்த வெள்ளத்தில் கிடந்தது. இவ்வளவும் பட்டப்பகலில் நடந்தது[3].
இதனால் பரமக்குடியில் பதற்றம் ஏற்பட்டது. கடைகள், குறிப்பாக, பஜார் தெருவில் மூடப்பட்டன. இதை கண்டித்து, வணிகர்கள் சங்கம், வியாபாரிகள் சங்கம், ஆர்.எஸ்.எஸ்., மற்றும் இந்து முன்னணி அமைப்பினர், மதுரை – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்[4]. குற்றவாளிகளை உடனே கைது செய்யவும், கொலைக்கான காரணத்தை கண்டறியவும் வலியுறுத்தி பொதுமக்கள் மாலை 4 மணியளவில் பரமக்குடி, ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது[5]. பட்டப்பகலில் இச்சம்பவம் நடந்ததால், பலர் பார்த்துக் கொண்டிருந்தனர். போலீஸார் அவர்கள் சொன்ன அடையாளங்களை வைத்து, கம்ப்யூட்டரில் படங்களை வரைந்து உருவாக்கி, அவற்றை மக்களிடம் காணித்து விசாரணையை நடத்தினர்[6].
ரபீக்ராஜா –இமாம் அலி கூட்டாளி, போலீஸ் பக்ருதீனின் நெருங்கிய தோஸ்த் எப்படி இதில் சம்பந்தப் பட்டான்: ஊடகங்களில் வந்துள்ள செய்திகளைத் தொகுத்துப் பார்த்ததில் கிடைத்துள்ள விவரங்கள் அவர்களது பின்னணியை வேறுவிதமாக எடுத்துக் காட்டுகிறது. கைது செய்யப்பட்ட நால்வர்[7] –
என். ராஜா முஹம்மது [N. Raja Mohamed (58)] – தற்போது சென்னை டி.நகரில் குடியிருந்து வரும் பரமக்குடி நாகூர் கனி மகன்[8],
எம். மனோஹரன் ராஜா முஹம்மதுவின் மைத்துனர் [his nephew M. Manoharan (41) of Paramakudi] – திருவள்ளுவர் நகர் முத்துச் சாமி மகன்[9],
எஸ். ரபீக் ராஜா அல்லது “வாழக்காய்” [‘Vazhakai’ alias S. Rafeeq Raja one of (35) two Madurai based mercenaries] – மதுரை காயிதேமில்லத் நகர் சுல்தான் அலாவுதீன் மகன்[10].
ஏ. சாஹுல் ஹமீது [A. Sahul Hameed (37) another mercenary] -மதுரை தாசில் தார் பள்ளிவாசல் தெரு அகமது மகன்[11].
இதில் ரபீக்ராஜா, பல்வேறு வெடிகுண்டு வழக்குகளில் போலீஸாரால் தேடப்படும் தீவிரவாதியும், இமாம் அலி கூட்டாளியுமான போலீஸ் பக்ருதீனின் நெருங்கிய தோஸ்த் என்பது குறிப்பிடத்தக்கது[12].
தீவிரவாதிகள் தயாரிக்கும் வெடிகுண்டுகள் கூலிப்படைக்குக் கிடைக்குமா?: ரபீக் ராஜா, சாஹுல் ஹமீது மற்றவர்கள் உபயோகப்படுத்திய குண்டுகள் ஆச்சரியமாக உள்ளது. அவை மேம்படுத்தப் பட்ட உள்ளுக்குள் வெடித்து சிதறும் குண்டு [Improvised Explosive Devices (IED-Pipe bombs) were stuffed with Gel 90 explosives] வகையைச் சேர்ந்தது என்பதுதாகும். அவர்கள் அவற்றை கோயம்புத்தூரில் வாங்கியதாகச் சொல்கிறார்கள்[13]. சம்பவம் நடந்த இடத்தில் கிடந்த இரண்டு பைப் வெடி குண்டுகளை செயலிழக்கச் செய்து, போலீஸார் புலனாய்விற்கு எடுத்துச் சென்றனர்.
பல்வேறு வெடிகுண்டு வழக்குகளில் தேடப்படும் ரபீக் ராஜா இங்கு எப்படி வந்தான்?: கோயம்புத்தூர், திருப்பத்தூர், மதுரை என்ற இடங்கள், அவற்றின் தொடர்புகள் விஷயத்தை வேறுவிதமாக மாற்றிக் காட்டுகிறது. கிடைத்துள்ள வெடிகுண்டுகள், வெறும் குண்டுகள் அல்ல. அப்படியென்றால், –
கோயம்புத்தூரில் அத்தகைய குண்டுகளைத் தயாரிப்பவர்கள் யார்?
எங்கு தயாரிக்கிறார்கள்?
அத்தகைய தொழிற்நுட்பம் எப்படி கிடைத்தது?
அதற்கான பொருட்கள் – குறிப்பாக ஜெல், எப்படி கிடக்கின்றன?
யார் அவற்றை வாங்கி, விநியோகிக்கின்றனர்?
கோயம்புத்தூரில் அப்படி அவை விற்க்கப்படுகின்றனவா?
இதில் ரபீக்ராஜா, பல்வேறு வெடிகுண்டு வழக்குகளில் போலீஸாரால் தேடப்படும் தீவிரவாதியும், இமாம் அலி கூட்டாளியுமான போலீஸ் பக்ருதீனின் நெருங்கிய தோஸ்த். உதவி எஸ்.பி., விக்ரமன் தலைமையில், தனிப்படையினர் விசாரித்தனர்[14]. இதில் சிக்கிய பரமக்குடி மனோகரன், ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். அதில், அவர் கூறியிருப்பது:பரமக்குடி வைகை நகர் சிவஞானம் என்பவர், 50 ஆண்டுகளுக்கு முன், 6.5 ஏக்கர் நிலம் வாங்கினார். அவர் இறந்த பின், நிலத்தை, அவரது மகன் கதிரேசன் பராமரித்தார். இதற்கிடையே, வேந்தோணியை சேர்ந்த எனது மாமா ராஜபாண்டி என்ற ராஜா முகம்மது, 58, அந்த நிலத்திற்கு, 2003ல், எனது பெயரில் போலியாக பத்திரம் தயாரித்தார். இது தொடர்பாக, பரமக்குடி கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு, கதிரேசன் மகன்கள் முருகன் (கொலை செய்யப்பட்டவர்), சிவக்குமாருக்கு சாதகமாக தீர்ப்பானது. நிலத்தை விற்க இருவரும் முயற்சித்தனர். அதை வாங்க வருபவர்களிடம் பிரச்னை செய்தோம். அதில் 3 ஏக்கரை, மதுரை மேலூர் ராஜாரபீக், 8 கோடி ரூபாய்க்கு வாங்கினார். அவரிடம் பிரச்னை செய்து, 85 லட்ச ரூபாய் பெற்றுக் கொண்டோம். பின், முருகன் குடும்பத்தினரிடம், ஒரு கோடி 50 லட்ச ரூபாய் கேட்டதற்கு, தரமறுத்துவிட்டனர். முருகன், “பணம் தரமாட்டோம்’ என்றதால், அவரை கொலை செய்ய, மதுரை கூலிப்படையினரை வரவழைத்து, 2 லட்ச ரூபாய் வழங்கினோம். கூலிப்படையை சேர்ந்த வாழக்காய் ரபீக்ராஜா, 35, (போலீஸ் பக்ரூதீனின் கூட்டாளி), சாகுல்ஹமீது, 37, மற்றும் ஒருவர் மூலம், முருகனை கொலை செய்துவிட்டு, நானும், மாமா ராஜா முகம்மதுவும் தப்பிவிட்டோம்.இவ்வாறு தெரிவித்து உள்ளார். மனோகரன், ராஜா முகம்மது, வாழக்காய் ரபீக்ராஜா, சாகுல்ஹமீதுவை, போலீசார் கைது செய்தனர்; கூலிப்படையை சேர்ந்த ஒருவரை தேடி வருகின்றனர்[15].
பரமக்குடி – இந்து-முஸ்லீம் பிரச்சினை, ஜாதி-கலவரம் என்றுள்ளது: பரமக்குடியில் 2011ல் ஜாதிக்கலவரம் ஏற்பட்டுள்ளது. அதில் போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தியதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். அங்கு அடிக்கடி கொலை நடப்பதும் சகஜமாகி உள்ளது. முஸ்லீம்களின் ஜனத்தொகை இங்கு கனிசமாகப் பெருகி வருவதால், புதிய பிரச்சினையாக இந்து-முஸ்லீம் பிரச்சினை எழுந்துள்ளது. இங்கு மாமா-மைத்துனன் முஸ்லீம்-இந்து என்று இருப்பது, வினோதமா, வேடிக்கையா, விபரீதமா என்று தெரியவில்லை. ஆனால், கொலை என்று முடிந்துள்ள போதில், சம்பந்தப் பட்டவர்களின் பின்னணி, சாதாரண நிலத்தகராறு என்பதனையும் கடந்து, செயல் பட்டுள்ள நிலையை நோக்கும் போது, வேறு ஆழ்ந்த சதிதிட்டம் இருக்குமோ சந்தேகிக்க வேண்டியுள்ளது.
யார் இந்த போலீஸ் பக்ருதீன்? – விவரங்கள்[16]: ரபீக்ராஜா, பல்வேறு வெடிகுண்டு வழக்குகளில் போலீஸாரால் தேடப்படும் தீவிரவாதியும், இமாம் அலி கூட்டாளியுமான போலீஸ் பக்ருதீனின் நெருங்கிய தோஸ்த் என்பது, இதர விஷயங்களை இணைக்கிறது. அத்வானியைக் கொல்ல திட்டமிடும் தீவிரவாதிகளின் பின்னணியைக் காட்டுகிறது. இதற்கிடையே, இந்த சதித் திட்டத்தின் பின்னணி குறித்து போலீஸ் தரப்பில் தகவல் வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: அத்வானியின் பாதையில் வெடிகுண்டு வைக்கும் திட்டத்தை உருவாக்கியவர் பக்ருதீன்தான். இவருக்கு போலீஸ் பக்ருதீன் என்ற பெயரும் உண்டு. இந்த போலீஸ் என்ற அடைமொழி பக்ருதீனுக்கு வந்ததற்கு ஒரு காரணம் உள்ளது. பக்ருதீனுக்கு 32 வயதாகிறது. மதுரையைச் சேர்ந்தவர். எட்டாவது வகுப்பு வரை படித்துள்ளார். இவரது தந்தை பெயர் சிக்கந்தர். இவர் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர். தந்தை போலீஸ் பணியில் இருந்ததால் பக்ருதீனின் பெயருடன் போலீஸ் என்ற பெயரும் ஒட்டிக் கொண்டதாம். தனது தந்தை போலீஸாக இருந்தபோது பக்ருதீன் முரட்டுத்தனமாக நடந்து கொள்வாராம். போலீஸாரிடம் கூட அவர் மோதலில் ஈடுபட்டுள்ளார். சப் இன்ஸ்பெக்டர் ஒருவரை முன்பு தாக்கியுள்ளார். இதேபோல பல போலீஸாரிடம் தகராறு செய்து அதுதொடர்பாக வழக்குகளும் உள்ளன.
இந்து முன்னணி தலைவர் ராஜகோபாலன் முன்பு மதுரையில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இவருக்கும் தொடர்பு இருப்பதாக அப்போது சந்தேகிக்கப்பட்டது. அல் உம்மா அமைப்பைச் சேர்ந்த இமாம் அலி மற்றும் ஹைதர் அலி ஆகியோர் மதுரை மேலூரில் நடந்த வெடிகுண்டு சம்பவ வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். கடந்த 2002ம் ஆண்டு மதுரையிலிருந்து பாளையங்கோட்டை சிறைக்குச் செல்லும் வழியில் திருமங்கலத்தில் போலீஸ் வேன் நின்றபோது, அதிரடியாக அங்கு வந்த இமாம் அலி, ஹைதர் அலியின் ஆதரவாளர்கள் போலீஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு இருவரையும் மீட்டுச் சென்றனர். இந்த சம்பவத்தில் முதல் முறையாக ஈடுபட்டார் பக்ருதீன். பின்னர் இமாம் அலி பெங்களூரில் தமிழக போலீஸ் படையால் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது இப்ராகிம் என்பவரும் சுட்டுக்கொல்லப்பட்டார். இவரது மைத்துனர்தான் பக்ருதீன். இமாம் அலி மீட்கப்பட்ட வழக்கில் கைதான பக்ருதீன் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்புதான் விடுதலையாகி வெளியே வந்தார். வந்தவர் முழு அளவில் மீண்டும் பழைய பாதைக்குத் திரும்பியுள்ளார். பக்ருதீன் மீது 22 வழக்குகள் உள்ளனவாம்.
பக்ருதீன் வெடிகுண்டுகள் தயாரிப்பில் நிபுணத்துவம் கொண்டவர் என்று கூறப்படுகிறது. இமாம் அலியிடமிருந்தே இவர் வெடிகுண்டுகள் தயாரிக்க கற்றுக் கொண்டார் என்று கூறப்படுகிறது. கோவை தொடர் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளை தயாரித்துக் கொடுத்தவர் இமாம் அலி என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய ஆலம்பட்டி சம்பவத்திலும் கூட பக்ருதீன்தான் வெடிகுண்டுகளைத் தயாரித்துக் கொடுத்துள்ளார். அத்வானி பாதையில் வெடிகுண்டு வைக்க தீர்மானித்த அவர் தனது செயலுக்கு அப்துல்லா மற்றும் பிலால் மாலிக்கை நாடி உதவி கோரியுள்ளார். அவர்களும் சம்மதிக்கவே திட்டத்தை விரைவுபடுத்தினர்.அவ்வழக்கு நடந்து வருகிறது.
மேம்படுத்தப்பட்ட உள்ளுக்குள் வெடித்து சிதறும் குண்டு: பைப் குண்டு, தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் பெருகி வருவதைப் பற்றி, முன்னர் சில இடுகைகளை இட்டுள்ளேன்[17]. திருப்பத்தூர் தொடர்பு அம்மோனியம் நைட்ரேட், குண்டு வெடிப்பு மற்றும் ஜோஸப் பாஸ்கர் – இவை நினைவிற்கு வருகின்றன[18]. கட்டுப்பாட்டில் இருக்கும் ரசாயனங்கள், அவற்றை வாங்குபவர்கள், குறிப்பிட்ட உபயோகம் தவிர, குன்டுகள் தயாரிக்கத் திருப்பி அனுப்பி வியாபாரம் செய்வது[19], உபயோகம், ஜெல், முதலியவை, பெரிய சதிதிட்டத்தைக் காட்டுகிறது[20].
[13] The team found that the mercenary gang had travelled up to Tirupur before committing the murder and could have purchased the pipe bombs from Coimbatore, sources said. Examination of two of the live bombs recovered from the scene showed that the Improvised Explosive Devices (IED-Pipe bombs) were stuffed with Gel 90 explosives. The special team is investigating into this aspect, the SP said.
சரித்திரத்தை அறியாத இந்தியர்கள்: சரித்திரத்தை சரியாக இந்தியர்கள் அறிந்து கொள்ளாததாலும், தவறாக எழுதப்பட்டுள்ள சரித்திரத்தைப் படித்தே தமது அறிவை வளர்த்துள்ளதாலும், இந்தியர்களுக்கு உண்மைகள் நிறையவே தெரியாமல் உள்ளன[1]. இன்று தீவிரவாதத்தை-பயங்கரவாதத்தை யாதொரு மதத்துடனும் இணக்கலாகாது என்று ஆவேசமாகப் பேசி ஆர்பாட்டம் செய்து வருகின்றனர், வற்புறுத்துகின்றனர்[2]. அத்தகைய ஆர்பாட்டங்கள், போராட்டங்களே பார்ப்பவர்களுக்கு அச்சத்தை ஊட்டுவதாக உள்ளது. அந்நிலையில் உண்மையைச் சொன்னால் கூட கோபித்துக் கொள்வார்களோ என்ற நிலையும் ஏற்பட்டுள்ளது. அதனால், நமக்கு ஏன் வம்பு என்று ஒதுங்கியும் இருக்கின்றனர். இப்படி மூளைசலவை செய்யப்பட்டும், மூளை மழுங்கியும் இந்தியர்கள் மீதுதான் – ராணுவ வீரர்கள் முதல் பாமர மக்கள் வரை – இத்தகைய தாக்குதல்கள் நடைப் பெற்று வருகின்றன.
உண்மையை மறைப்பவர்கள், மறுப்பவர்கள்: ஓட்டு வங்கி அரசியலில் பிழைக்கும் அரசியல் கட்சிகள் தெரிந்தும் உண்மைகளைப் பற்றி பேசவே பயப்படுகின்றன. ஊடகங்களை உபயோகப்படுத்திக் கொண்டு முன்னுக்கு முரணான செய்திகளை தந்தும், தேவையில்லாத விவாதங்களை ஒலி-ஒளிபரப்பியும், சாதாரண மக்களை ஏமாற்றி வருகின்றனர். உயிர்களை இழந்தவரிகளின் உறவினர்கள் தவிக்கும் போது, டிவியில் தாம் தோன்றலாம் என்ற எண்ணத்துடன், விளம்பர மோகத்துடனும், மெழுகு வர்த்தி ஏற்றி வரும் கூட்டமும் பெருகி வருகிறது[3]. ஆனால், எப்படி தீவிரவாதத்தை-பயங்கரவாத ஜிஹாதிகள் கத்தியிலிருந்து, பீரங்கி, துப்பாக்கி, வெடிகுண்டு என்று மாறி-மாறி தங்களது போர்களை நடத்தி வருகின்றனர் என்று அறியாமல் இந்தியர்கள் உள்ளதுதான் வருத்தப்பட வேண்டிய விஷயமாக உள்ளது.
ஐக்கிய ஜிஹாத் கவுன்சில் பின்னணியில் உள்ளதா?: ஐக்கிய ஜிஹாத் கவுன்சில் [the United Jehad Council (UJC)] என்ற தீவிரவாத அமைப்புதான் ஐதராபாத் வெடிகுண்டு வெடிப்புகளுக்குக் காரணம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஜதமைத்-உல்-முஜாஹித்தீன், ஜைஸ்-உல்-மொஹம்மது, மற்றும் அல்- பதர் என்ற மூன்று பயங்கரவாத ஜிஹாதி குழுக்கள் பிப்ரவரி 13ம் தேதி கூடிப்பேசி, பழிவாங்கும் விதமாக இந்த குண்டுவெடிப்புகளைச் செய்துள்ளதாகத் தெரிகிறது[4].
ஐந்து மறைமுகத்தாக்குதல் குழுக்கள் இந்த தில்குஷ் தொடர் குண்டு வெடிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். ஐதராபாதிலிருந்தே அதற்கான வெடிப்பொருட்கள் தருவிக்கப்பட்டிருக்கின்றன. தேசிய புலனாய்வு ஏஜென்ஸி இதன் விஷயமாக பீஹாருக்குச் சென்று விசாரிப்பதாகத் தெரிகிறது[5].
ஒரு கிலோ வெடிப்பொருள் உபயோகப்படுத்தியுள்ளனர். சிகப்பு மற்றும் பழுப்புந்நிற திரவங்களும் காணப்பட்டன. தாமதித்து வெடிக்கும் கடிகாரம் கொண்ட சாதனமும் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது[6].
நவீன உள்ளே வெடித்து சிதறும் குண்டுகள் தயாரிக்கும் விதம்[7]: மூன்று விதமான வெடிகுண்டுகள்:
சிறிய அளவில் பாக்கெட்டுகள் போன்ற உருவமுடையவை[8] (Package-Type Improvised Explosive Devices (IEDs).
வண்டிகளில் எடுத்து வந்து மோதி வெடிக்கும் வகை[9] [Vehicle Borne IEDs (VBIEDs)].
இத்தகைய குண்டுகளை ஜிஹாதிகள் தாராளமாக உபயோகித்து வருவது, நடந்துள்ள வெடிகுண்டு தீவிரவாத-பயங்கரவாத நிகழ்ச்சிகளினின்று தெரிந்து கொள்ளலாம். 150 மீட்டர் இடைவெளி வைத்து பைக்குகள் உள்ள இடத்தில் வைத்திருப்பதால், அவை வெடிக்கும் போது, அதன் விளைவால் பக்கத்தில் உள்ள பைக்குகளின் பெட்ரோல் டேங்குகள் வெடித்து, தீப்பிழம்பை உருவாக்கும். கூர்மையான பொருருட்கள் 30 அடி வரை இருக்கும் மக்களை தாக்கி பாதிக்கும்[11].
According to sources, terrorists used over one kg of ammonium nitrate — 400gm in one and 700gm in another — and packed them in aluminum containers with sharpnels. Sources, however, said not too many shrapnels were found from the spot. “Either few shrapnels were used or they were lost in the melee that followed the incident. A timer device, which could be a clock or a cellphone, is suspected to have been used in the circuit, while the charge to the detonator was given using a .3 volt or .9 volt battery. It’s a classic IED used by terror groups,” said an official from the National Bomb Data Centre[12].
ஒரு கிலோ அம்மோனியம் நைட்ரேட் – 400 கிராம் ஒன்றில், 700 கிராம் மற்றொன்றில் – பெட்ரோல் மற்றும் கூர்மையான ஆணிகள், பால்பேரிங்குகள் வைத்து, அலுமீனிய டப்பாக்களில் அடைத்து, அவை வெடிப்பதற்காக, செல்போன் அல்லது நேரத்திற்கு வெடிப்பதற்கான மின்னணு சாதனம் இணைக்கப்பட்டது. வெடிப்பதற்கான சாதனம் .3 volt or .9 volt பாட்டரியுடன் இணைக்கப்பட்டது. இத்தகைய தயாரிப்பு முந்தைய “இந்திய முஜாஹித்தீன்” தயாரிப்புக்களை ஒத்துள்ளது.
அம்மோனியம் நைட்ரேட் உரப்பொருளாக எளிதில் கடைகளில் விற்பக்கப்படுகின்றன. இதனை 94:6 என்ற விகிதத்தில் ஏதாவது ஒரு எளிதில் எரியும் தன்மைக் கொண்ட திரவத்துடன் கலந்தால், அது வெடிகுண்டு தயாரிக்கும் பொருளாகி விடும்[13]. அமெரிக்காவில் அம்மோனியம் நைட்ரேட் தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேற்படி அவற்றைத் தயாரித்து, சைக்கிள்களில் வைத்து விட்டுச் சென்றால், யாருக்கும் சந்தேகமே வராது என்று திட்டமிட்டு, இந்த ஜிஹாதிகள் உபயோகப்படுத்தி வருகின்றனர்[14].
தப்பிப் பிழைத்தவன் சந்தேகத்தில் உள்ளான்: அப்துல் வாசிப் மிர்ஜா (Abdul Wasif Mirza of Kala Pathar) ஆடைகளைவிற்றுவரும்நபர்மறுபடியும்வெடிகுண்டில்காயமடைந்துள்ளதுசோகமானகதையென்றேசொல்லலாம், ஏனெனில், கடந்த 2007 குண்டுவெடிப்பில்தனதுகாலைஇழந்தார்[15]. இரண்டுகுண்டுவெடிப்பிலும்அந்தஇடத்தில்இருந்துள்ளதாலும், தப்பித்துப்பிழைத்துள்ளதாலும், காலாபத்தர்என்றஏழுகி..மீதூரத்திலிருந்துஅங்குடீகுடிக்கவந்தேன்என்றுசொல்வதாலும்போலீசார்அவனைசந்தேகிப்பதாகத்தெரிகிறது[16].
வேதபிரகாஷ்
23-02-2013
[1] “வந்தார்கள் வென்றார்கள்” இப்பொழுது எழுதப்பட்டால், எப்படி எழுதப்படும் என்று யோசிக்கும் போதே உண்மை தெரிகிறது. நிச்சயமாக அந்த எழுத்தாளர் எழுத துணிவிருக்காது என்றே தெரிகிறது.
[2] விஜயும், கமல் ஹஸனும் சந்தோஷமாக இருப்பார்களா அல்லது மற்றொருத் திரைப்படம் எடுக்க துணிவைப் பெறுவார்களா என்றும் தெரியவில்லை.
[3] இதனை ஐதராபாத் விஷயத்தில் ஊடகங்களே ஒப்புக் கொண்டது வியப்பாக இருந்தது.
[4] Sources say that the United Jehad Council (UJC)could be behind the blast. UJC, comprising of militant outfits like Jamiat-ul-Mujahideen (JuM), Jaish-e-Mohammed (JeM) and Al Badr, met on February 13 to plan revenge on India following the execution of Parliament attack accused Afzal Guru.
[5] Sources informed that 5 sleeper cells were involved in carrying out the twin blasts in Dilsukh Nagar. The explosive used in the blast was bought in Hyderabad itself and a team of NIA officials will soon head to Darbhanga (Bihar) in search of clues, sources added.
[6] Reports say over 1 kg explosive was used in each bomb in Hyderabad. Also, red and grey liquid was found after the blasts and timer was used to carry out the dastardly incident.
[13] It is easy to put together an explosive using ammonium nitrate, which is even available in the market as fertiliser. All that is needed is to mix it with fuel oil in the ratio 94:6.
மும்பை குண்டுவெடிப்புகளில் லஸ்கர்-இ-தொய்பா, இந்திய-முஜாஹித்தீன் மற்றும் தடை செய்யப்பட்டுள்ள சிமி – சந்தேகிக்கப்படும் இயக்கங்கள்
குண்டு தயாரிப்பு விவரம்: உள்ளுக்குள்ளே வெடித்து நாசத்தை உண்டாக்கும் குண்டுகளை (IED = Internally explosive Devices) உருவாக்குதல், தயாரித்தல் (Ammonium Nitrate / RDX),”டைமர்” முதலிய மின்னணு கருவிகளை உபயோகித்தல் முதலிய முறைகளைப் பயன்படுத்தலில், குறிப்பிட்ட இஸ்லாமிய தீவிரவாதிக் குழுக்கள் வல்லுனர்களக இருக்கிறார்கள்[1]. கடந்த குண்டவெடிப்புகளில், இத்தகைய முறை கையாளப்பட்டுள்ளது. இப்பொழுதும் அதே முறை கையாளப்பட்டுள்ளது. மொத்தம் டிபன்-பாக்ஸுகளில் வைக்கப்பட்ட ஏழு குண்டுகள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது[2]. வழக்கம் போல அவை துணிபைகளில் வைக்கப்பட்டு வெடிக்கப்பட்டுள்ளன. இந்த குண்டுவெடிப்புகள் பீதியை உண்டாக்கவில்லை, மாறாக அழிவை உண்டாக்கவே செய்துள்ளன[3]. லஸ்கர்-இ-தொய்பா, இந்திய-முஜாஹித்தீன் மற்றும் தடை செய்யப்பட்டுள்ள சிமி (இந்திய இஸ்லாமிய இளைஞர் கூட்டமைப்பு) முதலியோர்களின் கைவேலை தெரிகிறது என்று வெடிகுண்டு வெடிக்கப்பட்ட இடங்களினின்று பெற்ற ஆதாரங்களை வைத்து எடித்துக்காட்டியுள்ளனர்[4]. அவர்களை கண்காணித்து வருவதாக புலன் விசாரணை செய்யும் குழுக்கள் கூறுகின்றன[5]. மும்பையில் இஸ்லாமிய தீவிரவாதிகள் குண்டுவெடிப்புகள் நடத்தியுள்ளது ஒன்றும் புதியதல்ல. புனாய்வுத்துறை மும்பை மறுபடியும் தாக்குதலுக்குள்ளாகும் என்று தெளிவாக எச்சரித்து இருந்தது[6]. ஆனல் உள்துறை அமைச்சகம் இதை மறுக்கிறது.
வழக்கம் போல முரண்பட்ட வெளியிடப்படும் அறிக்கைகள்: ஆளும் சோனியா கட்சித் தலைவர்கள் சட்டப்படி திவிரவாதிகளுக்கு உதவும் வகையில் முன்னுக்குமுணாகப் பேசுவது, அறிக்கைகள் விடுவது தொடர்கிறது. அவை முழுவதுமாக பொய் அல்லது நீதிமன்ற அவமதிப்பு அல்லது வழக்கை திசைத்திருப்பும், பாதிக்கும் என்று தெரிந்தே செய்து வருகிறார்கள். மும்பை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக மத்திய உளவுத்துறையோ, மாநில உளவுத்துறையோ எச்சரிக்கை எதையும் செய்யவில்லை. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். மும்பைக்கு 13-07-2011 நள்ளிரவில் வந்த ப.சிதம்பரம், குண்டுவெடிப்பு நடந்த இடங்களைப் பார்வையிட்டார். காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களையும் அவர் பார்த்து நலம் விசாரித்தார். 14-07-2011 அன்று காலை ப.சிதம்பரமும், மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவானும் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ப.சிதம்பரம் கூறுகையில், “இதுவரை 17 பேரின்மரணம்உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒருதுண்டிக்கப்பட்டதலைமீட்கப்பட்டுள்ளது. அதுயார்என்பதுஅடையாளம்காணப்பட்டுள்ளது. எனவேபலிஎண்ணிக்கை 18 ஆகஉயர்ந்துள்ளது. 131 பேர்காயமடைந்து 13 மருத்துவமனைகளில்அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 26 பேர்விடுவிக்கப்பட்டுவிட்டனர். 82 பேரின்நிலைமைஸ்திரமாகஉள்ளது. 23 பேர்மிகவும்கடுமையானகாயங்களைச்சந்தித்துள்ளனர். இவர்களில்சிலரின்நிலைகவலைக்கிடமாகஉள்ளது.
ஒன்றும் தெரியாமல் உள்துறை அமைச்சர் இருப்பதைவிட இல்லாமலேயே இருக்கலாம்: “நேற்றுநடந்தபயங்கரவாததாக்குதல்சம்பவம்குறித்துமுன்கூட்டியேஉளவுத்துறைஎச்சரிக்கைஎதுவும்எங்களுக்குஇல்லை. மாநிலஉளவுத்துறையோஅல்லதுமத்தியஉளவுத்துறையோஇதுகுறித்துஎந்தஎச்சரிக்கையையும்விடுக்கவில்லை. இதுதுரதிர்ஷ்டவசமானது. கிட்டத்தட்ட 30 மாதங்களுக்குப்பின்னர்மீண்டும்நாட்டில்தீவிரவாதம்திரும்பியுள்ளது. மும்பைமீண்டும்ஒருபயங்கரவாததாக்குதலைசந்தித்துள்ளது. இதற்காகநான்பெரிதும்வருந்துகிறேன். தாதர், ஓபராஹவுஸ், ஜவேரிபஜார்ஆகியஇடங்களில்மூன்றுகுண்டுகள்வெடித்தன. மூன்றுஇடங்களையும்நான்நேரில்பார்த்தேன். அதில்இரண்டுஇடங்களில்நடந்தகுண்டுவெடிப்புகள்மிகவும்சக்திவாய்ந்தவை. தாதரில்நடந்ததுசிறியஅளவிலானகுண்டுவெடிப்பு. மிகவும்திட்டமிட்டுஇந்ததாக்குதலைதீவிரவாதிகள்நடத்தியுள்ளனர்என்பதுதெளிவாகத்தெரிகிறது. இரவுமுழுவதும்குண்டுவெடிப்புநடந்தஇடங்களைபுலனாய்வுஅதிகாரிகள்தீவிரமாகஅலசிஆராய்ந்துள்ளனர். தடவியல்ஆதாரங்கள்சேகரிக்கப்பட்டுள்ளன.
உள்ளூர் அல்லது வெளியூர் தீவிரவாத இயக்கமா? இருப்பினும் மும்பை எதிர்-தீவிரவாத குழு மெத்தனமாகவே இருந்துள்ளது. முந்தைய குண்டுவெடிப்புகளைப் போல, இப்பொழுது இந்திய-முஜாஹித்தீன் போன்ற எந்த தீவிரவாத இயக்கமும் ஈ-மெயில் அனுப்பி பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் இந்திய-முஜாஹித்தீன் 14 இளைஞர்களை இந்த மூன்று குண்டுவெடிப்புகளில் உபயோகப்படுத்தியுள்ளதாக யூகிக்கப்படுகிறது. ராஞ்சியில் தேசிய புலனாய்வு பிரிவினர் சோதனையிட்டபோது, சிமியின் அங்கத்தினர்கள் அத்தகைய வேலைச் செய்ய திட்டமிட்டதாகத் தெரிகிறது. பெங்களூர் மற்றும் ஹைதரபாத் நகரங்களிலுள்ள அவர்களது கூட்டாளிகள் உதவியுள்ளார்கள். பிடிக்கப்பட்டுள்ள சல்மான் என்பவன் முன்னமே அவர்கள் அத்தகைய குண்டுவெடிப்புகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளான்[8]. சிறிய இடங்களை ரகசியமாகக் கண்காணிக்கும் கேமராக்களில் பிடிபட்டுள்ள காட்சிகளினின்று, குறிப்பிட்ட மூன்று நபர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளார்கள். அவர்களில் ஒருவன் முழுவதுமாக அடையாளங்காணபாட்டுள்ளான். அவர்களுடைய படங்கள் வரையப்படபோகின்றன. இருப்பினும், இம்முறை அவர் வெளியிடப்படாது என்று சொல்லப்படுகிறது. முந்தைய 26/11 குண்டுவெடிப்புகள் போல 13/7 அன்றும் உள்ளூர்வாசிகள் உதவியுள்ளார்கள் என்று தெரியவந்துள்ளது[9].
சந்தேகிக்கப்படும் மூன்று நபர்கள்: மும்பையில் கடந்த 13ந் தேதி நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய ஆதாரம் கிடைத்துள்ளது. குண்டுவெடிப்புக்கு முன்பு 3 மர்ம ஆசாமிகள் சந்தேகத்திற்குரிய முறையில் நடமாடியது தொடர்பான வீடியோ ஆதாரம் கிடைத்துள்ளது[10]. இந்த தகவலை மகாராஷ்டிர முதலமைச்சர் பிரிதிவிராஜ் சவான் தெரிவித்திருக்கிறார். அமைச்சரவை கூட்டத்தில் உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் இந்த தகவலை தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.தெற்கு மும்பை பகுதியில் தாதர், ஜாவேரி பஜார், ஓபரா ஹவுஸ் உட்பட 3 இடங்களில் கடந்த 13ந் தேதி நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 17 பேர் கொல்லப்பட்டனர். 133 பேர் காயமடைந்தனர்.
செல்போனில் பேசிக்கொண்டிருந்த அந்த மூவர்: இது தீவிரவாதிகளின் செயல் என்பது உறுதி செய்யப்பட்டது. குண்டுவெடிப்பு நிகழ்ந்த பகுதிகளில் கடைகள் மற்றும் வீதிகளில் வைக்கப்பட்டிருந்த வீடியோ கேமராக்களில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். ஒபரா ஹவுஸ் அருகே கவு ஹள்ளி என்ற இடத்தில் வீடியோ கேமராவில் 3 பேர் அந்தப் பகுதியில் 1 மணி நேரத்திற்கும் மேலாக நடமாடியதுகண்டுபிடிக்கப் பட்டது. அவர்கள் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அல்ல என்பது தெரிந்தது. மேலும் அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் செல்போன் மூலமே சுமார் 1 மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். எனவே இவர்கள் தீவிரவாதிகளாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இந்தியன் மொஜாகிதீன் அமைப்புதான் காரணமாக இருக்கும் என்று புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சந்தேகப்பட்டனர். ஆனால் இந்த தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் போலீசிடம் பிடிபடாமல் இருக்க செல்போனை கடந்த சில மாதங்களாக பயன்படுத்துவதில்லை. எனவே இந்த தாக்குதலை நடத்தியவர்கள் வேறு தீவிரவாத அமைப்பாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மூவரில் ஒருவன் இறந்து விட்டானா? மற்றொரு இடத்தில் கிடைத்த வீடியோ காட்சிகளை போலீசார் பார்த்தனர். அதில் ஒருவர் ஒரு பையை எடுத்துக் கொண்டு வேகமாக வாகன நிறுத்த இடத்தை நோக்கி செல்கிறார். சிறிது நேரத்தில் அவர் சென்ற பகுதியில் குண்டு வெடிக்கிறது. அந்த இடத்தில் மின்சார ஒயர்கள் பின்னப்பட்டு ஒருவர் பிணமாக கிடந்தார். வெடிகுண்டை எடுத்துச் சென்றவராக அது இருக்கலாம் என்று தற்போது போலீசார் சந்தேகிக்கின்றனர். அவர் கொண்டு சென்ற பையை போன்று அந்தப் பகுதியிலிருந்து மீட்கப்பட்டது. எனவே அவர் பையில் வெடிகுண்டை எடுத்துச் சென்றவராக இருக்க வேண்டும் என்று புலனாய்வுத் துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். வெடிகுண்டை வைத்து விட்டு அவர் திரும்புவதற்குள் முன்கூட்டியே வெடித்து விட்டதால் அவரும் பலியாகி இருக்கலாம் என்றும் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
மும்பை குண்டுவெடிப்பு-குஜராத் வர்த்தகர்களை குறி வைத்து நடந்த தாக்குதல்? குஜராத் வர்த்தகர்களை குறி வைத்து மும்பையில் நேற்று வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது[11]. கடந்த 2006ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி மும்பை புறநகர் ரயில்களில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. அதில் 200க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த குண்டு வெடிப்புகள் குஜராத்திகள் அதிகம் வசிக்கும் பகுதிகளான மலட், கான்டிவ்லி, பொரிவிலி ஆகிய பகுதிகளைக் குறி வைத்து நடத்தப்பட்டது. 13-07-2011 மும்பையில் நடந்த குண்டுவெடிப்புகளும் குஜராத் சமுதாயத்தினர், குறிப்பாக வர்த்தகர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் நடந்திருக்கிறது. எனவே இந்த முறையும் குஜராத் வர்த்தகர்களை குறி வைத்து தாக்குதல் நடந்திருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. ஏற்கனவே 2003ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி ஜவேரி பஜார், கேட்வே ஆப் இந்தியா ஆகிய பகுதிகளில் நடந்த தாக்குதல்களில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதேபோல 2003ல் கட்கோபர், 2003 மார்ச்சில் முலுந்த், 2003 ஜனவரியில் விலே பார்லே ஆகிய பகுதிகளிலும் குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டன. இங்கும் குஜராத்திகள் அதிக அளவில் வசிக்கிறார்கள். 2003 சம்பவத்திற்குப் பின்னர் பேசிய மகாராஷ்டிர முதல்வர் சுஷில் குமார் ஷிண்டே, குஜராத்திகளை குறி வைத்து குண்டுவெடிப்புகள் நடந்திருப்பதாக தெரியவில்லை என்று கூறியிருந்தார்.
தீவிரவாதிகளின் இலக்கு ஏன்? அதேசமயம், குஜராத்திகளை குறி வைத்துத்தான் பெரும்பாலும் குண்டுவெடிப்புகள் நடத்தப்படுவதாக கூறுகிறார் மும்பை மாநகர குஜராத்தி சமாஜ் தலைவர் ஹேம்ராஜ் ஷா. இதுகுறித்து அவர் கூறுகையில், ஜவேரி பஜார் பகுதி கமிஷனர் அலுவலகத்திற்கு மிகவும் அருகில் உள்ளது. ஓபரா ஹவுஸ் பகுதியில் உள்ள கவ் காலி, தாதரில் உள்ள கபூதர்கானா ஆகியவை மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளாகும். மாலை நேரங்களில் இங்குமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த பகுதிகளைக் குறி வைத்து தாக்குதல் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது என்கிறார் ஷா. சில்லறை வியாபாரிகள் நலச் சங்கத்தின் தலைவர் விரேன் ஷா கூறுகையில், ஓபரா ஹவுஸ், ஜவேரி பஜார் பகுதிகளில் தங்க மற்றும் வைர நகை வியாபாரிகள் பெருமளவில் உள்ளனர். இவர்கள் அனைவருமே குஜராத்திகள்தான். இங்கு குண்டுவெடிப்புகள் நடந்திருப்பதைப் பார்க்கும்போது குஜராத்திகளைக் குறி வைத்தே தாக்குதல் நடந்திருப்பதாக சந்தேகிக்க வேண்டியுள்ளது. அதேசமயம், மக்கள் நெருக்கமான பகுதிகளை தீவிரவாதிகள் குறி வைத்துள்ளதாகவும் கருத முடியும் என்றார்.
மும்பை குண்டுவெடிப்பின்போது தகவல் தொடர்பு செயலிழப்பு: சவாண்[12]: மும்பையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த அடுத்த 15 நிமிடங்களுக்கு உயர் அதிகாரிகள் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. தகவல் தொட ர்பு சாதனங்கள் அனைத்தும் முழு மையாக செயலிழந்து விட்டன என்று மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவாண் தெரிவித்தார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை பேசிய சவாண் மேலும் கூறுகையில், குண்டு வெடிப்பு நடந்த அடுத்த 15 நிமிடங்களுக்கு எந்த ஒரு தகவல் பரிமாற்றமும் மேற்கொள்ள இயலவில்லை. இதனால் காவல் துறை உயர் அதிகாரிகளையோ, நிர்வாக உயர் அதிகாரிகளையோ தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
தீவிரவாதிகளுக்கு துணையாக அவ்வாறு நிறுவனங்கள் செய்துள்ளனவா? வேறு எந்த வகை சாதனங்களையும் தகவல் தெரிவிக்க பயன்படுத்த இயலாத நிலை இருந்ததால், நிலைமை மேலும் மோசமாகிவிட்டது. எனவே, இதுபோன்ற நேரங்களில் செயற்கைகோள் துணையுடன் இயங்கும் தொலைத் தொடர்பு சாதனங்களையோ அல்லது எந்த சூழ்நிலையிலும் பாதிக்காத வகையில் அமைந்த சாதனங்களையோ பயன்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம். இந்த நிலை மீண்டும் ஏற்படக் கூடாது. எனவே, இதுகுறித்து தேசிய பாதுகாப்பு அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசியுள்ளேன் என்றார்.
26/11ற்கு பின்னரும் நவீனப்படுத்தப்படவில்லை என்று புலம்பும் மஹாராஷ்ட்ர முதல்வர்: அவர் மேலும் கூறுகையில், காவல்துறையினருக்கான சாதனங்களும் மேம்படுத்தப்பட வேண்டியது அவசியமாக உள்ளது. முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். ஆனால் இது தொடர்பாக அமைக்கப்பட்ட ராம் பிரதான் குழு பரிந்துரைத்த எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. காவல் துறையை நவீனப்படுத்துவதற்கான குழு பரிந்துரைகள் எதையும் நாம் நினைத்த அளவில் அமல்படுத்த இயலவில்லை என்றார். உளவுப் பிரிவினர் சரியான நேரத்தில் உரிய தகவல் தரவில்லை என்பதை ஏற்க முடியாது என்ற சவாண், அதுபற்றி கூறுகையில், ஆனால் அப்பிரிவின் திறனை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கூட இது தொடர்பாக விவாதிக்கப்பட்டது என்றார் சவாண்.
[1] இவர்கள் எல்லாமே முஸ்லீம்களாக இருப்பதனால், புலன் விசாரணைக் குழுக்கள், போலீஸ் முதலியோர் அரசியல் நிர்பந்தங்களினால், முரணான செய்திகளை ஊடகங்களுக்கு கொடுத்து, அதன் மூலம் வழக்கில் தீவிரவாதிகளுக்கு சந்தேகத்தின் அடைப்படையில் அல்லது போதிய ஆதாரங்கள் இல்லை என்று விடுதலை அடைகிறார்கள். பிறகு மற்ற வழக்குகளில் அவர்களை சிறையில் வைத்துள்ளார்கள். அல்லது பைலில் வெளியில் வந்ததும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வளைகுடா நாடுகளில் (துபாய், கடார்..) சென்று மறைந்து வாழ்கிறார்கள் மற்றும் தொடர்ந்து இத்தகைய தீவிரவாத செயல்களை செய்து வருகிறார்கள்.
அண்மைய பின்னூட்டங்கள்