இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா முஸ்லிமாக மாறினார் – பெண் தராயாக இருக்கிறாளாம் – ஆர். எஸ்.அந்தணன் தரும் வெளிவராத பின்னணி தகவல்கள்!
3வது திருமணத்திற்காக மதம் மாற்றம்?: தினமலர், “இந்தநிலையில் யுவன், சமீபத்தில் சிங்கப்பூரிலோ, மலேசியாவிலோ ஒரு பெரிய பணக்கார இஸ்லாம் வீட்டை பெண்ணை பார்த்ததாகவும், அவர்கள் இருவருக்கும் பிடித்து போக திருமணம் செய்ய முடிவெடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர் மூன்றாவது திருமணம் செய்யபோகும் பெண்ணிற்காகத்தான் அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறியிருப்பதாகவும் கூறப்படுகிறது”, என்று குறிப்பிட்டாலும், “. யுவனின் விரல் பிடித்து நடக்க ஒரு அழகான யுவதியையும் கொடுத்திருப்பதாக கூறுகிறார்கள்”, என்று ஆர். எஸ்.அந்தணன் விவரித்துள்ளார்[1]. இந்த அந்தணன் அல்லது பார்ப்பனன் எங்கிருந்து வந்தார் என்று தெரியவில்லை!
இது குறித்து யுவன் சங்கர் ராஜா தனது டுவிட்டரில், கூறியிருப்பதாவது: நான் இஸ்லாமை பின்பற்றுகிறேன்” இதனால் நான் பெருமை கொள்கிறேன். எனது இந்த முடிவினால் எனக்கும், எனது குடும்பத்தினருக்கும், குறிப்பாக எனது தந்தைக்கும் இடையே எந்தவொரு கருத்து வேறுபாடும் இல்லை. எனது குடும்பத்தினர் ஆதரவு அளித்துள்ளனர். அல்ஹம்துலில்லா ! (இறைவனுக்கு நன்றி!) இவ்வாறு யுவன்சங்கர் ராஜா கூறியுள்ளார். பிறரின் கட்டாயத்தின் பேரிலோ அல்லது திருமணத்திற்காகவோ தான் இஸ்லாத்துக்கு மாறவில்லை என்றும் தன்னுடைய ஆய்வின் அடிப்படையிலேயே இஸ்லாத்துக்கு மாறியதாக யுவன் சங்கர் ராஜா பத்திரிகை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
டெக்கான் க்ரோனிக்கல் எனும் ஆங்கில பத்திரிகைக்கு யுவன் அளித்துள்ள பேட்டி:. அப்பேட்டியில் தான் கண்ட கனவுகள் மற்றும் தன்னுடைய கேள்விகளுக்கு விடை தேடிய போது அவை குர்ஆனில் கிடைத்ததாக கூறியுள்ள யுவன், தான் ஒன்றரை வருடத்திற்கு மேலாக இஸ்லாத்தை ஆய்வு செய்தே இம்முடிவை எடுத்ததாக கூறியுள்ளார். மேலும், ஊடகங்களில் வெளியாவதை போல் இயக்குநர் அமீர் உள்ளிட்ட யாருக்கும் இதில் எவ்வித பங்குமில்லை என்று கூறிய யுவன் இஸ்லாம் தன்னை தேர்ந்தெடுத்துள்ளது என்றே தாம் உணர்வதாக கூறியுள்ளார். மேலும், தன் தந்தை இளையராஜா முதலில் அதிர்ச்சியடைந்தாலும் பின் முழு மனதுடன் தன் மத மாற்றத்தை ஏற்று கொண்டதாகவும் தன் வீட்டில் ஊடகங்கள் குறிப்பிடுவது போல் எவ்வித பிரச்னையுமில்லை என்றும் கூறினார். தன் நண்பனின் திருமணம் ஒன்றில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை போட்டு தான் முஸ்லீம் பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக வந்த செய்தி தவறு என்றும் யுவன் கூறினார். ஏ. ஆர். ரஹ்மானின் வழியை பின்பற்றி தாம் இஸ்லாத்திற்கு வரவில்லை என்றும் தன் ஆன்மாவின் முடிவு என்றும் யுவன் குறிப்பிட்டுள்ளார்[2].

அல்லாஹ் வெறும் சாந்தத்தையும், அமைதியையும் மட்டும் கொடுக்கவில்லையாம். யுவனின் விரல் பிடித்து நடக்க ஒரு அழகான யுவதியையும் கொடுத்திருப்பதாக கூறுகிறார்கள்
இஸ்லாமியர் ஆகிறார் யுவன்! வெளிவராத பின்னணி தகவல்கள்[3]: ஆர்.எஸ்.அந்தணன் என்பவர் எழுதியுள்ளதாக இவ்விவரங்கள் கொடுக்கப் பட்டுள்ளன, “அம்மாவின் மரணம் அவர் எதிர்பாரதது. முற்றிலும் உடைந்து போன யுவன் பெரும்பாலும் வீட்டுக்கு வருதை தவிர்த்து ரெக்கார்டிங் தியேட்டரிலேயே கிடந்தார். உடன் பிறந்த சொந்தங்களால் கூட அவருக்கு அமைதியில்லை என்று கூறப்படுகிறது. நடுவில் சில நாட்கள் அவர் உறங்கவே இல்லையாம். இரவில் உறக்கம் வராமல் தவிப்பவர்களுக்குதான் அந்த வேதனை தெரியும். அதை நான்கைந்து நாட்கள் தொடர்ச்சியாக அனுபவித்தாராம் அவர். மனமே அமைதி கொள்… என்று விரும்பி விரும்பி கேட்டாலும், சட்டென கேட்டுவிடுமா அது? இவரது வேதனையை அருகிலிருந்து கவனித்த நண்பர் ஒருவர் [எல்லாம் தெரிந்த அந்தணர் பெயரைக் குறிப்பிடவில்லை], இஸ்லாமியர்களின் வேத புத்தகமான குர் ஆன் புத்தகத்தை கொடுத்து ‘இதை படி. மனம் அமைதியடையும்’ என்றாராம் [குரான் படித்தால் சாந்தம் கிடைக்கும் என்றால் வளைகுடா நாடுகளில் அல்லடு இஸ்லாம் உள்ள இடங்களில் சாந்த இருக்க வேண்டும் ஆனால் குண்டுகள் தாம் வெடித்துக் கொண்டிருக்கின்றன]. உறக்கம் வராத ஒரு ஐந்தாவது நாளில் அந்த புத்தகத்தை விரித்தார் யுவன் [அந்தணர் சரியாக எண்ணிக் கொண்டே இருந்தார் போலும்]. மனம் விரட்டிக் கொண்டேயிருந்தது அவரை. மெல்ல அதை கயிற்றுக்குள் கட்டி இறுக்கினார் யுவன். ஏதோ ஒரு கட்டத்தில் அப்படியே மனம் உடைந்து அந்த புத்தகத்தின் மீது முகத்தை வைத்து அழ ஆரம்பித்தாராம்…. [புத்தகத்தைப் படித்து மனம் உடைந்ததா என்று தெரியவில்லை].

அல்லாஹ் வெறும் சாந்தத்தையும், அமைதியையும் மட்டும் கொடுக்கவில்லையாம். யுவனின் விரல் பிடித்து நடக்க ஒரு அழகான யுவதியையும் கொடுத்திருப்பதாக கூறுகிறார்கள்
அல்லாஹ் வெறும் சாந்தத்தையும், அமைதியையும் மட்டும் கொடுக்கவில்லையாம். யுவனின் விரல் பிடித்து நடக்க ஒரு அழகான யுவதியையும் கொடுத்திருப்பதாக கூறுகிறார்கள். அதற்கப்புறம் அவர் எப்போது உறங்கினார் என்பது தெரியவில்லை. மீண்டும் அவர் எழுந்தபோது மனம் முற்றிலும் சாந்தமாகியிருந்ததாம். அவர் தேடிய நிம்மதி அன்றுதான் கிடைத்தது அவருக்கு. இதற்கப்புறம் அவர் தீவிரமாக அந்த புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தாராம். இப்போது தினமும் ஐந்து வேளை தொழுகிற அளவுக்கு அவர் இஸ்லாம் மார்க்கத்தால் ஈர்க்கப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். [இதுவரை ஏதோ எல்லாம் தெரிந்தால் பொல எழுதிவிட்டு இங்கு கூறுகிறார்கள் என்றுள்ளதால், கதைவிட்டுருக்கிறர்கள் என்று தெரிகிறது] விரைவில் அதிகாரபூர்வமாக தன்னை அந்த மதத்தில் இணைத்துக் கொள்ளும் முடிவில் இருக்கிறாராம் யுவன். அல்லாஹ் வெறும் சாந்தத்தையும், அமைதியையும் மட்டும் கொடுக்கவில்லையாம். யுவனின் விரல் பிடித்து நடக்க ஒரு அழகான யுவதியையும் கொடுத்திருப்பதாக கூறுகிறார்கள். [அதாவது ஒரு பெண்ணும் தயாராக இருக்கிறாள் என்று தெரிகிறது] எதுவாக இருப்பினும் நல்லதே. யுவன் எந்த மதத்திலிருந்தாலும், அவரது இசை எல்லா மதத்தினர் மத்தியிலும் இருக்கும். அது போதும்! -ஆர்.எஸ்.அந்தணன் [இப்படி அந்தணன் என்ற பெயரை உபயோகப் படுத்துவதிலிருந்து இது வேண்டுமென்றே ஒருவர் இப்படி எழுதியுள்ளது தெரிகிறது], இதை ஆங்கிலத்தில் இங்கு வெளியிட்டுள்ளனர்[4].
முஸ்லிம் ஆக வீட்டில்எதிர்ப்பு! யுவனின் இந்த செயலுக்கு அவரது அப்பா இசைஞானி இளையராஜா, அவரது சகோதரர்கள், சகோதரிகள், உறவினர்கள், சினிமா மற்றும் பிறதுறை நண்பர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நமக்கும், நமது குடும்பத்திற்கு இது சரிப்பட்டு வராது என்று எவ்வளவோ சொல்லியும் யுவன் தனது கொள்கையில் பிடிவாதமாக இருந்துள்ளார்[5] என்று தினமலர் கூறுகிறது. ஆனால், ஒன்றுமே பிரச்சினை இல்லை என்று யுசரா கூறுகிறார். இந்த முரண்பாடும் தெரிகிறது.
இளையராஜா வெளியேற்றம்? எவ்வளவு சொல்லியும் யுவன் தனது கொள்கையில் பிடிவாதமாக இருந்ததால் ஒருகட்டத்தில் இளையராஜா வெறுப்படைந்து தி.நகரில் உள்ள தனது சொந்த வீட்டை விட்டு வெளியேறி சிலகாலம் தனது மூத்தமகன் கார்த்திக் ராஜாவின் வீட்டில் தங்கியிருந்துள்ளார். பிறகு யுவன் வந்து பேச, தான் மட்டும் வரமாட்டேன் என்று சொல்லி கார்த்திக்கையும் தன்னோடு அழைத்து வந்து பிறகு எல்லோரும் தற்போது ஒரே வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். இதேப்போன்று இளையராஜா ஒவ்வொரு முறையும் தனது வீட்டில் கொழு / கொலு வைத்து பிரபல பின்னணி பாடகர்களை எல்லாம் அழைத்து தன் வீட்டில் பாட வைப்பார். ஆனால் சென்றாண்டு கொழு / கொலு நடத்த கூடாது என்று யுவன் தெரிவித்துள்ளார்[6]. பின்பு கொழுவை தவிர்க்கும் நோக்கோடு அவசரமாக மும்பை கிளம்பி சென்றுள்ளார். ஆனால் இளையராஜா போனில் சத்தம் போட பிறகு அவசரஅவசரமாக மீண்டும் வீடு திரும்பியுள்ளார். தினமலர் கொழு என்று போட்டிருந்தாலும், அது கொலு என்று இருக்கலாம், அதாவது பொம்மைகளை வைத்து பாடுவதை எதிர்க்கும் அளவில் அடிப்படைவாதம் அப்பொழுதே ஏறிவிட்டதா? இவையெல்லாம் யுசரா டுவிட்டர் மற்றும் டெக்கான் குரோனிகள் முதலியவற்றில் சொன்னதிற்கு விரோதமாக இருக்கிறது.
குரான் பரிசளித்த அமீர்? யுவன் மதம் மாறிய பின்னர், அவருக்கு இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை பிரபல இயக்குநர் அமீர் பரிசளித்துள்ளதாகவும், தற்போது அந்த குரானை தான் யுவன் தினமும் படித்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது. யுவன் கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேலாகவே இஸ்லாம் மதத்தை பின்பற்றி வருகிறாராம். அவர்கள் மத வழக்கப்படி தினமும் 5 வேளை தொழுகை செய்தவதையும் கடைபிடித்து வருகிறாராம். தினமலர் இப்படி குறிப்பிட்டாலும், சிரித்துக் கொண்டே மறுத்ததாக டெக்கான் குரோனிகள் கூறுகிறது. ஆனால், பெயரைக் குறிப்பிடாமல் “இவரது வேதனையை அருகிலிருந்து கவனித்த நண்பர் ஒருவர்” என்று ஆர்.எஸ். அந்தணர் கூறியுள்ளார். இந்த அந்தணர் ஒரு
பார்ப்பனைப் போலள்ளாது, ஒரு துலுக்கனைப் போலவே நன்றாக எழுதியுள்ளார். ஆகவே, நண்பர் ஒரு முஸ்லிம் என்று தெரிகிறது, ஆக அவர் அமீரா அல்லது வேறொரு முஸ்லிமா என்பது விரைவில் தெரிந்து விடும்.
- இஸ்லாம் கடைபிடித்துக் கொண்டிருக்கிறார் என்றது, இல்லை முஸ்லிம் ஆகிவிட்டேன் என்றது.
- பெண்ணில்லை, விவாகம் செய்து கொள்ளவில்லை என்றது, ஆனால், அல்லாஹ் வெறும் சாந்தத்தையும், அமைதியையும் மட்டும் கொடுக்கவில்லையாம். யுவனின் விரல் பிடித்து நடக்க ஒரு அழகான யுவதியையும் கொடுத்திருப்பதாக கூறுகிறார்கள், என்றது,
- குடும்பத்தார் எதிர்க்கவில்லை என்றது, பிறகு எதிர்த்துள்ளார் என்று விவரங்கள் வெளிவருவது.
- ஆர். எஸ்.அந்தணன் தரும் வெளிவராத பின்னணி தகவல்கள் – என்று இணைதளத்தில் வெளியிடுவது!
- “இனியொரு.டாட்.காம்”, “தமிழ் நாட்டில் ஒடுக்கப்பட்ட தலித் சமூகத்திலிருந்து இசைத் துறைக்கு வந்து மில்லியன்கள் புரளும் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளரானவர் இளையராஜா.
- இளையாராஜா தன்னைத் தலித் என்று அழைத்துக்கொள்வதை எப்போதும் விரும்பியதில்லை. இந்துத்துவ தத்துவத்தின் சினிமா இசைக்காவலனைப் போன்று தன்னை வெளிப்படுத்திக்கொண்ட இளையராஜா ஆதிக்க சாதியோடு தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார்”, என்று ஆரம்பித்து[7],
- யுவன் சங்கர் ராஜாவின் பிரச்சினைக் குறிப்பிட்டு, “புதிய மதத்திலும் சாதி ஒடுக்குமுறையைச் சந்திக்கின்றனர். இந்துத்துவாவின் வேர்கள் அனைத்து மதங்களிலும் படர்ந்துள்ளன”, என்று முடித்துள்ளது. என்று முன்னமே எடுத்துக் காட்டியுள்ளேன்[8].
- ஒருவருடமாக ஆராய்ச்சி செய்கிறேன் என்பதெல்லாம் பொய். இரண்டு பெண்களுடன் தாம்பத்யம் நடத்த முடியாத நிலையில் ஏதோ ஒரு மூன்றாவது பெண் வலை விரித்திருக்கிறாள், விழுந்திருக்கிறாள். ஆகவே, முஸ்லிம் ஆனது வசதிக்காகத்தான்! அதில் ஆன்மீகமும் இல்லை, நம்பொஇக்கையும் இல்லை.
- ஆக, இதில் முஸ்லிம்களின் பங்கு வெளிப்படுகிறது.
- யுசரா தானாக மதம் மாறினாலும், திட்டமிட்டு முஸ்லிம்கள் மதம் மாற்றினாலும், இது ஒரு மோசடி என்றே தெரிகிறது.
வேதபிரகாஷ்
© 10-02-2014
[5] தினமலர், இஸ்லாமுக்குமதம்மாறியதுஏன் ? யுவன்சங்கர்ராஜாகுறித்துபுதியதகவல் ,பிப்ரவரி.10, 2014.
[7] இனியொரு.டாட்.காம், http://inioru.com/?p=39133
அண்மைய பின்னூட்டங்கள்