Posted tagged ‘அமர் ஜோதி ஜவான்’

இந்திய சுதந்திரப் போரில் தியாகம் புரிந்தவர்களின் நினைவிடத்தை சூரையாடிய வெறிக்கொண்ட முஸ்லீம் இளைஞர்கள்!

ஓகஸ்ட் 15, 2012

இந்திய  சுதந்திரப்  போரில்  தியாகம்  புரிந்தவர்களின்  நினைவிடத்தை  சூரையாடிய 

வெறிக்கொண்ட முஸ்லீம் இளைஞர்கள்!

முஸ்லீம் இளைஞர்கள் வெறியுடன் அமர்ஜோதி ஜவான் நினைவகத்தை சேதப்படுத்தியது: மும்பையில் நடந்த கலவரத்தில் முஸ்லீம் இளைஞர்கள் சிறிதும் உண்மையினை உணராமல், இந்நாட்டின் தியாகிகளின் மகத்துவத்தை நினையாமல், வெறியுடன், வெறுப்புடன், காழ்ப்புடன் அமர் ஜோதி ஜவான் நினைவகத்தை கால்களால் உதைத்து, கொம்புகளால் / கம்பிகளால் அடித்து, உடைத்து சேதப்படுத்தினர்[1]. உடையாத “பைபர் கிளாஸ்” கண்ணடி பெட்டியையும் உடைத்து சூரையாடியுள்ளனர்[2]. அது மட்டுமல்லாது, அங்கு வைக்கப்பட்டிருந்த தலைகவசம் மற்றும் துப்பாக்கி முதலியவற்றையும் எடுத்துச் சென்றுள்ளனர்[3]. மும்பை கார்ப்பரேஷன் அதிகாரிகள் இன்றைக்குள் அதனை சீர் செய்ய வேண்டும் என்று தீர்மானித்தார்கள், ஆனால் முடியவில்லை[4].

அத்தகைய வெறிக்குக் காரணம் என்ன – யார் அப்படி அவர்களை வெறி கொள்ள செய்தனர்?: அடுல் காம்ப்ளே என்ற “மிட்-டே” என்ற நாளிதழைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் எடுத்த புகைப்படங்களில், அந்த வெறிகொண்ட முஸ்லீம் இளைஞர்கள் பதிவாகியுள்ளார்கள். அவர்கள் செயல்படும் விதத்திலிருந்தே, அவர்கள் எந்த அளவிற்கு வெறிகொண்டுள்ளார்கள் என்பதனையறியலாம். அஜ்மல் கசாப் போன்று ஆக்ரோஷமாக உள்ளான் என்று பார்த்தவர்களே கூறுகிறார்கள்[5]. அந்த அளவிற்கு முஸ்லீம் இளைஞர்களை வெறிகொள்ளச் செய்வது யார்?  நாட்டின் மேன்மையை, வீரர்கள் சுதந்திரத்திற்காகத் தியாகம் புரிந்தத்தையும் அறியாமல் அப்படி கால்களால் உதைத்து, கொம்புகளால் / கம்பிகளால் அடித்து, உடைத்துள்ளார்கள் என்றால் அந்நிலை மாறவேண்டும். அவர்கள் திருந்த வேண்டும், தம்முடைய நாட்டைப் பற்றிப் புரிந்து கொள்ளவேண்டும்.

அமர்ஜோதி ஜவான் நினைவகம் உருவாகிய வரலாறு: அமர் ஜோதி ஜவான் மெமோரியல் – அமர் ஜோதி ஜவான் நினைவகம் ட்ரில் ஹவல்தார் சய்யது ஹுஸைன் (Drill Havaldar Sayyed Hussein) மற்றும் சிப்பாய் மங்கள் சாதியா (Sepoy Mangal Cadiya) என்ற இரு இந்திய வீரர்களின் தியாகத்தைக் குறிக்கும் வகையில் நிறுவப்பட்டதாகும். இவ்விரு வீரர்களும் ஆங்லிலேயரை எதிர்த்து போராடி, 1857ல் நடந்த சிப்பாய் கலகத்தில் ஈடுபட்டவர்கள். 150 ஆண்டு நினைவு விழாவின் போது, 2009ல் ஆஜாத் மைதானத்தில் நிறுவப்பட்டது. அக்டோபர் 15, 1857 – தீபாவளி நாளன்று சார்லஸ் போர்ஜெட் (Charles Forjett, the then Superintendent of Police, Bombay Region) எனேஅ அப்பொழுதய கிழக்கிந்திய கம்பெனியின் போலீஸ் சூப்பிரென்டென்டின் உத்தரவு படி, கிரெக்கெட் கிளப் அருகில் உள்ள மைதானத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதனால்தான், அந்த இடம் “ஆஜாத் மைதான்” சுதந்திர மைதானம் என்று அழைக்கப்பட்டது. ரவீந்தர வைகர் (Ravindra Waikar) என்பவர்தாம், அந்த நினைவிடம் அமைக்கக் காரணமாக இருந்தவர். அப்பொழுதைய கமிட்டியின் தலைவராக இருந்து, நினைவகத்தை உருவாக்கத் திட்டமிட்டார். அந்நினைவிடம் சேதப்படுத்தப் பட்டதைக் குறித்து, அவர் மிகவும் வருத்தமடைந்தார். “அச்செயல் மிகவும் அசிங்கமானது, வெட்கப்படவேண்டியது, கண்டிக்க வேண்டியது”, என்று தனது கருத்தை வெளியிட்டார்.

சேதப் படுத்தியவர்களை கைது செய்ய போலீஸார் தீவிரம்:

Mumbai Crime Branch and local police are racing against each other to nab these hoodlums, knowing whoever makes these crucial arrests will reap rich professional rewards.“Of all the miscreants, these men are the most wanted. They have hurt the sentiments of the entire nation. They must be arrested on priority,” said a senior Crime Branch official, on condition of anonymity.

An officer from Azad Maidan police station said, “In such a scenario, it is better if these men surrender before the police reach them. By giving themselves up, they would be able to avoid the wrath of the police as well as the public.”

“These photographs have been circulated among our informers. We are in constant touch with them for leads. Every policeman is on the lookout for them at present. If we manage to arrest them before Independence Day, it will be our tribute to the freedom fighters,” he added.

The photographs caused a furore in social media networks. Readers across the nation condemned the act, some even comparing the vandals to 26/11 militant Ajmal Qasab.

Confirming the report, joint commissioner of police (crime) Himanshu Roy said, “This man (top-right) has insulted the national monument of India, and arresting him is our priority. Several Muslim leaders have also condemned the act.”

மும்பை கலவரக்காரர்களிலேயே, இவ்விருவரும் தான் இந்த நாட்டின் மதிப்பையே அவமதித்துள்ளார்கள்.அவர்களை கைது செய்ய வேண்டியதுதான் எங்களது தலையாயக் கடமையாக உள்ளது, என்று மும்பை போலீஸ் அதிகாரி கூறியுள்ளார்.

ஒவ்வொரு போலீஸாரிடமும் இப்படங்கள் உள்ளதால், அவர்கள் பிடிபட்டு விடுவார்கள் என்று நம்புகிறோம்.

மேலும் அவர்களாகவே வந்து சரண்டர் ஆகிவிட்டாலும் நல்லதுதான்.

சுதந்திரத்தினத்கிற்கு முன்பாகவாது, அவனைப் பிடித்துவிட வேண்டும். அப்படி செய்தால், அது அந்த தியாக-வீரர்களுக்கு செய்யும் உயர்ந்த மரியாதையாக இருக்கும்.

இப்படங்களைப் பார்த்தவர்களும் கொதித்துப் போயுள்ளார்கள். அக்மல் கசாப்புடன் ஒப்பிட்டி, அவர்களை தண்டிக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

 

 

இந்திய சுதந்திர போராட்டத்தில் இந்துக்கள்-முஸ்லீம்கள் இணைந்தே போரிட்டது: இந்திய சுதந்திர போராட்டத்தில் இந்துக்கள்-முஸ்லீம்கள் இணைந்தே சத்தியாகிரகம், அஹிம்சை முறைகளில் போரிட்டார்கள். ஜின்னா போன்றவர்கள், பாகிஸ்தான் கேட்கும் வரை அவர்கள் ஒற்றுமையாகத்தான் செயல்பட்டார்கள். அத்தகைய அஹிம்சை, சத்தியாகிரக, தியாக நினைவு சின்னங்களை, இப்படி வன்முறை, வெறி, காழ்ப்பு போன்ற உணர்வுகளுடன் சூரையாடுவதே அத்தகைய அஹிம்சை, சத்தியாகிரக, தியாக – முறைகளை நிந்திப்பதாகும், அவமதிப்பதாகும், தேசவிரோதமாகும். ஆகவே, இக்கால இந்திய முஸ்லீம்கள் தங்களது பிள்ளைகளுக்கு உண்மையான சுதந்திர உணர்வுகளை ஊட்டி வளர்க்க வேண்டும். அதைவிடுத்து, “நாங்கள் முஸ்லீம்கள், நாங்கள் இந்தியர்களிடமிருந்து மாறுபட்டவர்கள், நாங்கள் பாகிஸ்தானிற்காகத்தான் ………………………………….., பாகிஸ்தான் கொடிகளை ஏந்திக் கொண்டு இந்தியாவிலேயே போராடுவோம்……………………………………………..”, என்று வளர்த்து வந்தால், இத்தகைய வெறிதான் வரும், வளரும், பாதிக்கும்.

வேதபிரகாஷ்

15-08-2012


[5] The photographs caused a furore in social media networks. Readers across the nation condemned the act, some even comparing the vandals to 26/11 militant Ajmal Qasab.

http://www.mid-day.com/news/2012/aug/140812-Mumbais-most-wanted.htm