குல்ஷன்குமார் கொலையாளி சிறையில் தாக்கப்பட்டான்: அபு சலீமை முஹமது தோஸா சிறையிலேயே தாக்கினான்!
அப்துல் கய்யூம் சேய்க் குல்ஷன்குமார் கொலை வழக்கிலிருந்து மும்பை நீதிமன்றத்திலிருந்து 14-07-2010 அன்று விடுதலை செய்யப்பட்டான்[1]. அடுத்த வாரத்திலேயே, இன்னொருவன் தாக்கப்படுகிறான் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.
அபு சலீமை தாவூத் இப்ராஹிமின் ஆள் முஹமது தோஸா என்பவன் ஆர்தர் சாலை ஜெயிலிலேயே இன்று காலை (சனிக்கிழமை 24-07-2010) ஒரு கூர்மையான ஆயுதத்தினால் தாக்கினான்[2]. கழுத்திலும், தோளிலிலும் ரத்தம் சொட்டச்சொட்ட, மருத்துவமனைக்கு அபு சலீம் எடுத்துச் செல்லப்பட்டான். அபு சலீம் 1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பு, 1997 குல்ஷன்குமார் கொலை[3] முதலிய வழக்குகளுக்காக கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். முஹமது தோஸாவும் 1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதியாவான். இது வெறும் சிறைச் சண்டையா[4] அல்லது திட்டமிட்ட கொலை சதியா என்று போலீஸார் திகைத்துள்ளனர்.
கடந்த 1993ம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராகிமின் கூட் டாளி அபு சலீம். போர்ச்சுகல் நாட்டில் தலைமறைவாக இருந்த அபு சலீம் கைது செய்யப்பட்டு, இவரது காதலி மோனிகா பேடியுடன் டில்லிக்கு 2006ம் ஆண்டு அழைத்து வரப்பட்டார்.
[1] வேதபிரகாஷ்,அப்துல் கய்யூம் சேய்க் குல்ஷன்குமார் கொலை வழக்கிலிருந்து மும்பை நீதிமன்றத்திலிருந்து 14-07-2010 அன்று விடுதலை செய்யப்பட்டான், https://islamindia.wordpress.com/அப்துல்-கய்யூம்-செய்க்-க/
[2] Read more at: http://www.ndtv.com/article/india/abu-salem-attacked-by-dawood-men-in-mumbai-jail-39419?cp
[3] http://ibnlive.in.com/news/abu-salem-attacked-by-dawood-henchman-in-jail/127408-3.html?from=tn
[4] http://www.ibtimes.com/articles/38058/20100724/mustafa-dossa-dawood-ibrahim-abu-salem-gang-war-india-attack.htm
அண்மைய பின்னூட்டங்கள்