Posted tagged ‘அனைத்து இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம்’

நள்ளிரவில் நோயாளி சிகிச்சைக்குச் சென்றபோது, ஹிஜாப் பற்றிய விவாதம் ஏன், நோயாளி இறந்தது எப்படி? (2)

மே 30, 2023

நள்ளிரவில் நோயாளி சிகிச்சைக்குச் சென்ற போது, ஹிஜாப் பற்றிய விவாதம் ஏன், நோயாளி இறந்தது எப்படி? (2)

மருத்துவர் மீது ஏதாவது நடவடிக்கை உண்டா?: அப்போதுபோராட்டத்தில் ஈடுபட்டவர்கள் புவனேஸ்வர்ராமை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசாரோ அவரை இதுவரை கைது செய்யவில்லை என்றும் மருத்துவர் மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டிற்கு மருத்துவகுழுமூலம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் போராட்டக்காரர்கள் சடலத்தை எடுத்து சென்று அடக்கம் செய்தனர். ஆனால், இன்னொரு பக்கம் தலைமறைவாக இருந்தவரை, தேடி பிடித்து கைது செய்தனர் என்றுள்ளது. அதே நேரத்தில் அந்த மருத்துவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டது என்று தெரியவில்லை.  இந்த விவகாரத்தில் சட்ட நடவடிக்கையை எடுக்குமாறு மாவட்ட வருவாய் அதிகாரிக்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார் என்றும் உள்ளது.

முஸ்லிம் தலைவர், முஸ்லிம் போன்றே அறிக்கை விட்டுள்ளது: “ஹிஜாப் அணிந்த மருத்துவரை மிரட்டிய பாஜக நபரை சட்டத்தின் அடிப்படையில் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்” என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்[1]. இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்[2], ”நாகை மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் நேற்று இரவு பணியிலிருந்த முஸ்லிம் பெண் மருத்துவர் ஹிஜாப் அணிந்திருந்தார் என்ற காரணத்தால் பாஜகவைச் சேர்ந்த புவனேஸ்வர ராம் என்பவர் முஸ்லிம் பெண் மருத்துவரிடம் தகராற்றில் ஈடுபட்டார் எனச் செய்திகள் மூலம் தெரியவருகிறது. இரவு நேரத்தில் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்ட நோயாளி ஒருவரைப் பரிசோதித்த முஸ்லிம் பெண் மருத்துவர், நோயின் தீவிரத்தை அறிந்து உடனே நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவை சேர்ந்த புவனேஸ்வர ராம் இரவு நேரப் பணியிலிருந்த ஒரு பெண் மருத்துவரிடம் வாக்குவாதம் செய்வது போன்ற காணொலி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

ஜவாஹிருல்லா கூறியது:ஒரு பெண் மருத்துவரிடம் இதுபோன்ற வெறுப்பு பேச்சைப் பேசுவதும், அவர் ஹிஜாப் அணிந்திருந்த காரணத்தால் அவரை மிரட்டுவதும் பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படுத்தும் செயலாகும். மேலும், மருத்துவர்கள், மருத்துவ சேவைப் பணியாளர்கள் மத்தியில் அமைதியின்மையை உருவாக்கி, அப்பகுதியில் நிலவிவரும் சமூக நல்லிணக்கதை சீர்குலைக்கும் நோக்கத்தில் இந்த பிரச்சினை எழுப்பப்பட்டுள்ளது. எனவே, பெண் மருத்துவரை மிரட்டிய நபரை தமிழ்நாடு மருத்துவ சேவைப் பணியாளர்கள் மற்றும் மருத்துவ சேவை நிறுவனங்கள் (வன்முறை மற்றும் சேதம் அல்லது சொத்து இழப்பு) சட்டம் 48/2008ன் கீழ் மற்றும் மத ரீதியான வெறுப்பு பேச்சுகளைப் பேசி பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படுத்த முயன்ற காரணத்தாலும் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்,” என்று ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்[3]. சீமானும் இதே போன்ற கருத்தை வெளியிட்டுள்ளார்[4].

சீமானின் இஸ்லாம் அதரவு அறிக்கை: நாகப்பட்டினம் மாவட்டத்தில் அரசு மருத்துவர் ஜன்னத்தை ஹிஜாப் விவகாரத்தில் மிரட்டிய பாஜக நிர்வாகிக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார். மேலும் திமுக அரசு, ஆர்.எஸ்.எஸ். ஆதரவு போக்குடன் செயல்படுவதாகவும் சீமான் குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பான சீமான் அறிக்கை: நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வரும் அன்புச்சகோதரி ஜன்னத் அவர்களை கடந்த 24 ஆம் நாள் இரவுநேரப் பணியின்போது அப்பகுதியை சேர்ந்த பாஜக நிர்வாகி புவனேஷ் ராம் மருத்துவமனையில் ஹிஜாப் அணியக்கூடாது என்று மிரட்டியுள்ளதோடு, ஹிஜாப்பை கழற்ற வேண்டுமென கூறி பணி செய்யவிடாமல் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. நாகை மாவட்டம் தமிழ்நாட்டில் இருக்கிறதா? அல்லது உத்தரபிரதேசத்தில் இருக்கிறதா? தமிழ்நாட்டை ஆள்வது திமுகவா? அல்லது பாஜகவா? என்று சந்தேகப்படும் அளவுக்கு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழ்நாட்டில் இந்துத்துவ அமைப்புகளின் மதவெறிச்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மதவெறியர்களின் மனிதவெறுப்புச் செயல்களை தடுத்து நிறுத்தாமல், அதற்கு துணைபோகும் திமுக அரசின் ஆர்எஸ்எஸ் ஆதரவுப்போக்கு வன்மையான கண்டத்திற்குரியது. உணவு, உடை, வழிபாடு உள்ளிட்டவை அடிப்படை தனிமனித உரிமையாகும். அதில் தலையிடுவதென்வது அருவறுக்கத்தக்க மனித வெறுப்பின் உச்சமாகும். வட இந்தியாவிலும், பாஜக ஆளும் மாநிலங்களிலும் மட்டுமே நிகழ்ந்த அத்தகைய மதவெறுப்பு கொடுஞ்செயல்கள் தற்போது தமிழ்நாட்டிலும் தொடங்கியிருப்பது வெட்கக்கேடானது.

லிஸ்ட் போட்டு ஆதரவு கொடுக்கும் சீமான்[5]:

  • என்ஐஏ கொடுஞ்சட்டத்தை நாடாளுமன்றத்தில் ஆதரித்தது,
  • நீண்டகால இசுலாமிய சிறைவாசிகள் விடுதலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது,
  • ஆர்எஸ்எஸ் சாகா வகுப்புகளை அனுமதித்தது,
  • பாஜகவின் கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்த துடிப்பது,
  • இசுலாமியர் மீதான வெறுப்பை விதைக்கும் திரைப்படங்களுக்கு பாதுகாப்பளிப்பது,
  • மாட்டுக்கறி உணவிற்கு தடைவிதிப்பது

என்று இசுலாமியர்களுக்கு எதிராக திமுக அரசு மேற்கொண்டுவரும் பச்சைத் துரோகச்செயல்களின் தொடர்ச்சியே, ஹிஜாப் அணியக்கூடாது என்று மிரட்டும் அளவிற்கு மிக மோசமான நிலையை தமிழ்நாடு எட்டுவதற்கு முக்கிய காரணமாகும். இந்துத்துவத்திற்கு ஆதரவான இத்தகைய நடவடிக்கைகள் அனைத்தும் பாஜகவின் பினாமி அரசாகவே திமுக அரசு செயல்படுவதையே வெளிப்படுத்துகிறது. அதுமட்டுமின்றி அரசு அலுவலகத்திற்குள் புகுந்து அரசு அலுவலரை கொலை செய்தது, அரசு மருத்துமனைக்குள் புகுந்து அரசு மருத்துவரை மிரட்டுவதென தொடரும் சமூக விரோதிகளின் வன்முறை வெறியாட்டங்கள் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்குலைந்துள்ளது என்பதையே காட்டுகிறது. ஆகவே, அடிப்படை மனித உரிமைக்கு எதிராக மதவெறியுடன் இழிசெயலில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி புவனேஷ்ராமிற்கு கடும் தண்டனைப் பெற்றுத்தர வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்[6].

29-05-2023 ‘மருத்துவ சீருடையில் பணிக்கு வராமல், ‘ஹிஜாப்அணிந்து வந்த பெண் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: 29-05-2023 அன்று, ‘மருத்துவ சீருடையில் பணிக்கு வராமல், ‘ஹிஜாப்’ அணிந்து வந்த பெண் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, பாரத் இந்து முன்னணி வலியுறுத்தி உள்ளது[7]. அதன் மாநில ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன், தலைமைச் செயலர் இறையன்புவிடம் அளித்துள்ள மனுவில் இதனை வலியுறுத்தியுள்ளார்[8]. மருத்துவ மனை, நொயாளி, நள்ளிரவில் சிகிச்சைக்கு வந்தது, நோயாளி சிகிச்சை பலனின்றி இறந்தது, முதலியவற்றைப் பற்றி எந்த விவரங்களையும் எந்த ஊடகமும் கொடுக்கவில்லை. சிகிச்சை பலனின்றி இறந்தார் என்றுள்ளது. குறிப்பிட்ட மருத்துவர் சண்டை போடுவதிலும், வீடியோ எடுப்பதிலும், அதனை உடனடியாக யாருக்கோ அனுப்புவதிலும் தான் மும்முறமாக இருந்தது தெரிகிறது. பிறகு, ஆவண தோரணையுடன், கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டு செல்போனில் பார்த்துக் கொண்டிருக்கிறார். மருத்துவர் போன்றே கணப்படவில்லை.

© வேதபிரகாஷ்

30-05-2023


[1] தமிழ்.இந்து, ஹிஜாப் அணிந்த மருத்துவரை மிரட்டிய பாஜக நபர் மீது சட்டப்படி நடவடிக்கை: ஜவாஹிருல்லா வலியுறுத்தல், செய்திப்பிரிவு, Published : 26 May 2023 02:44 PM, Last Updated : 26 May 2023 02:44 PM

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/996833-threatening-doctor-wearing-hijab-should-be-punished-according-to-law-jawahirullah.html

[3] தமிழ்.இந்துஸ்தான் டைம்ஸ், Hijab: ஹிஜாப் அணியக்கூடாது என மருத்துவரை மிரட்டிய பாஜக நிர்வாகிக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல், Pandeeswari Gurusamy, 27 May 2023, 16:55 IST

[4] https://tamil.hindustantimes.com/tamilnadu/seeman-insists-that-the-bjp-executive-who-threatened-the-doctor-not-to-wear-hijab-should-be-severely-punished-131685186096080.html

[5] தமிழ்.ஒன்.இந்தியா, ஹிஜாப் விவகாரம்: ஆர்.எஸ்.எஸ். ஆதரவுப் போக்கில் திமுக அரசு.. 6 பாயிண்டுகளை முன்வைக்கும் சீமான்!, By Mathivanan Maran Updated: Saturday, May 27, 2023, 11:21 [IST]

[6] https://tamil.oneindia.com/news/tamilnadu/hijab-row-seeman-blames-dmk-govt-support-to-rss-513636.html?story=1

[7] தினமலர், பெண் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க மனு, பதிவு செய்த நாள்: மே 30,2023 03:59

[8] https://m.dinamalar.com/detail.php?id=3334072

தமிழகத்தில் முஸ்லிம் கட்சிகள் உருவானது, மாறியது, கூட்டணியில் செயல்பட்டது (1960-2013) – பிஜேபியுடன் முஸ்லிம் கட்சி கூட்டு பற்றி ஒரு அலசல் கட்டுரை (1)

திசெம்பர் 15, 2013

தமிழகத்தில் முஸ்லிம் கட்சிகள் உருவானது, மாறியது, கூட்டணியில் செயல்பட்டது (1960-2013) – பிஜேபியுடன் முஸ்லிம் கட்சி கூட்டு பற்றி ஒரு அலசல் கட்டுரை (1)

முஸ்லிம் கட்சி - பிஜேபி கூட்டு

தமிழகத்தில்  பிஜேபியின்  கூட்டணி  அல்லது  பிஜேபியின்  கூட்டு: 2014 பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. தமிழ்நாட்டில் பா.ஜனதா தலைமையில் பல்வேறு கட்சிகளை சேர்த்து கூட்டணி அமைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. ஆகவே, இதில் திமுக, அதிமுத தங்களுக்கே உள்ள தோரணையில் இருப்பதினால், அவற்றுடன் கூட்டு இல்லை என்று தீர்மானமாகத் தெரிகிறது[1]. தமிழகத்தில், இதர திராவிடக் கட்சிகளை இழுக்கும் முயற்சியில், காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் இதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார். பா.ஜனதா கூட்டணியில் ம.தி.மு.க. சேர்வது உறுதியாகி இருக்கிறது. பா.ம.க., தே.மு.தி.க. கட்சிகளும் இதில் சேரும் என்று கூறப்படுகிறது. இது தவிர வேறு கட்சிகளையும் இந்த கூட்டணியில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

முஸ்லிம் கட்சிகள் தமிழகத்தில் கூட்டு

 

http://paraiyoasai.wordpress.com/8-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/

இத்தளத்தில் இருக்கும் படம் எடுத்தாளப்பட்டுள்ளது.

முஸ்லிம்களும், பிஜேபியும்: அனைத்து இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம் இந்த நிலையில் பாரதிய ஜனதா கூட்டணியில் சேர்ந்துள்ளது[2] தமிழகத்தில் மட்டுமல்ல தேசிய அளவிலும், முஸ்லிம்களின் அணுகுமுறையில் மாற்றம் இருப்பதைக் காணமுடிகிறது. ஆனால், முஸ்லிம்கள் மற்ற விசயத்தில் ஜாக்கிரதையுடன் தான் பிஜேபியை அணுகுவார்கள் என்பதை அறியலாம். அப்பாஸ் நக்வி போன்ற முஸ்லிம் தலைவர்கள் பிஜேபியில் நெடுங்காலமாக இருந்து வருகின்றனர். ஆனால், திராவிடப் பின்னணியில், ஒரு முஸ்லிம் கட்சி, பிஜேபியுடன் எப்படி செயல்படும் என்று பார்க்கவேண்டும். அரசியலில் இதெல்லாம் சகஜம் என்பது, முன்னர் என்.டி.ஏவில் திமுக இருந்தபோது, அதனுடன் இருந்த முஸ்லிம்கட்சிகள் எதிர்க்காமல் தொடர்ந்து திமுகவுடன் ஒட்டிக் கொண்டிருந்ததைப் பார்க்கமுடிந்தது.

அனைத்து  இந்திய  முஸ்லிம்  முன்னேற்ற  கழகம்  பிஜேபிக்கு  ஆதரவு  கொடுப்பது[3]: அனைத்து இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம் கட்சியின் தலைவர் சதக்கத்துல்லா, சென்னை பா.ஜனதா அலுவலகமான கமலாலயத்தில் வெள்ளிக்கிழமை (13-12-2013) நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் பொன். ராதாகிருஷ்ணனிடம் தனது கட்சியின் ஆதரவு கடிதத்தை வழங்கினார்[4]. இந்த நிகழ்ச்சியின் போது, காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன், பா.ஜனதா மாநில செயலாளர் வானதி சீனிவாசன், செயற்குழு உறுப்பினர் கே.டி. ராகவன் ஆகியோர் உடன் இருந்தனர். இது குறித்து பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: “பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சதக்கத்துல்லா தலைமையிலான அனைத்து இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம் இணைந்துள்ளது. வரும் பாராளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடிக்கு ஆதரவாக முஸ்லிம் மக்களிடம் அவர்கள் ஆதரவு திரட்டுவார்கள்.  டிசம்பர் 1-ஆம் தேதி தொடங்கியவீடுதோறும் மோடி, உள்ளம்தோறும் தாமரைஎன்ற பாத யாத்திரைக்கு தமிழகத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை 700-க்கும் அதிகமான கிராம பஞ்சாயத்துக்களில் இந்த யாத்திரை நிறைவு பெற்றுள்ளது. வீடுகள்தோறும் சென்று மக்களை நேரடியாகச் சந்திக்கும்போது மக்களின் பிரச்னைகள், கிராமங்களின் பிரச்னைகளை அறிந்து கொள்ள முடிகிறது. இந்த பாத யாத்திரை வரும் 22-ஆம் தேதி வரை நடைபெறும்”, இவ்வாறு அவர் கூறினார்[5]. தமிழ்நாட்டில் முதல் முறையாக முஸ்லிம் கட்சி ஒன்று பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்திருப்பது, அந்த கட்சியினருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது[6]. தமிழ்நாட்டில் முதல் முறையாக முஸ்லிம் கட்சி ஒன்று பாஜகவுக்கு ஆதரவு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது[7].

பிரதமர்  ராஜிநாமா  செய்ய  வேண்டும்பிஜேபி  ராதாகிருஷ்ணன்  கோருவது: உள்ளூர் விசயங்களை, இங்கு பிஜேபி பேசி வருவதைக் காணலாம். “தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றாலும் இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது, கைது செய்யப்படுவது போன்ற கொடுமைகள் தொடர்கின்றன. இப்போது மீண்டும் 180-க்கும் அதிகமான மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்தியாவின் இறையாண்மைக்கு இலங்கை அரசு சவால் விடுத்துள்ளது. இந்திய மீனவர்களை ஏன் காப்பாற்ற முடியவில்லை என்பதற்கு பிரதமர் மன்மோகன் சிங் விளக்கம் வேண்டும். இல்லையெனில் அவர் ராஜிநாமா செய்ய வேண்டும்”, என்றார் பொன். ராதாகிருஷ்ணன். இருப்பினும், இலங்கை அனுதாபிகள், அபிமானிகள் இதைப் பற்றி ஒன்றும் கண்டுகொள்ளாமல் இருப்பது நோக்கத்தக்கது.

மெரீனாவில்   நாளை  ஒற்றுமை   ஓட்டம்[8]: முன்னாள் துணைப் பிரதமர் வல்லபாய் பட்டேலுக்கு குஜராத்தில் 182 மீட்டர் உயரத்தில் உலகிலேயே மிக உயரமான இரும்பு சிலை அமைக்கப்பட உள்ளது. நாடு முழுவதும் 7 லட்சம் கிராம பஞ்சாயத்துக்களில் இருந்து விவசாயிகள் பயன்படுத்திய இரும்புப் பொருள்கள் பெறப்பட்டு அதன் மூலம் இந்த சிலை அமைக்கப்பட உள்ளது. இது குறித்த செய்தியை மக்களிடம் கொண்டு செல்வதற்காக பட்டேலின் நினைவு தினமான ஞாயிற்றுக்கிழமை (டிச. 15) காலை 8 மணிக்கு நாடு முழுவதும் சுமார் 1,500 இடங்களில் ஒற்றுமை ஓட்டம் நடைபெறவுள்ளது. சென்னை மெரீனா கடற்கரையில் கண்ணகி சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை நடைபெறும் இந்த ஒற்றுமை ஓட்டத்தில் பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன், ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஆர். நடராஜ், பாலச்சந்தர், சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் பால்கனகராஜ், புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, திரைப்படத் தயாரிப்பாளர் எஸ், தாணு, நடிகை ரேணுகா உள்ளிட்டோர் இதில் பங்கேற்க இருப்பதாக பட்டேல் சிலை அமைப்புக் குழுவின் தமிழக ஒருங்கிணைப்பாளர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

அரசியலில்  தீண்டத்தகாதக்   கட்சி  எதுவும்  இல்லை: அரசியலில் இதெல்லாம் சகஜம் என்பது போல, அரசியலில் தீண்டத்தகாதக் கட்சி எதுவும் இல்லை என்ற தத்துவமும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தேவையான போது, இந்திய அரசியல் கட்சிகள், பின்பற்றி வருகின்றன. செக்யூலரிஸம் எப்படி அவரவர்களுக்கு ஏற்றபடி மாற்றியமைத்துக் கொண்டு, அனுபவித்து வருகின்றனரோ, அதேபோலத்தான் இந்த அரசியல் தீண்டாமை, ஒதுக்குதல் முதலியனவும். காங்கிரஸ், நாட்டைத் துண்டாடிய முஸ்லிம் லீக், கிருத்துவ மதவெறிக்கட்சி கேரளா காங்கிரஸ் முதலியோர்களுடன் கூட்டு வைத்துக் கொள்ளும்போது, எந்த அறிவாளியும், அரசியல் பண்டிதனும் அதனைத் தட்டிக் கேட்டதில்லை. ஆனால், பிஜேபி அகாலிதளத்துடன் கூட்டு வைத்துக் கொண்டால், அதனை மதவாதம் என்று கூக்குரல் இட ஆரம்பித்து விடுகிறார்கள். சிவாஜி சிங் சௌஹான் பதவி ஏற்கும் விழாவில், சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டுள்ளார். ஜெகன் மோகன் ரெட்டியும் “மோடி தீண்டத்தகாதவர் அல்ல”, என்கிறார்[9], தங்களையும், தங்கள் கொள்கைகளையும் ஏற்கும் யாருடனும் கூட்டணி வைக்க தயாராக இருப்பதாக ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்[10]. டில்லியில் நிருபர்களிடம் பேசிய அவர், மோடி குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், அரசியலில் யாரும் தீண்டத்தகாதவர்கள் அல்ல என்றும், தங்களையும், தங்கள் கொள்கைகளையும் ஏற்கும் யாருடனும் கூட்டணி வைக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்[11].

வேதபிரகாஷ்

© 15-12-2013


[5] தினமணி, பாஜககூட்டணியில்முஸ்லிம்முன்னேற்றக்கழகம், By dn, சென்னை, First Published : 14 December 2013 03:29 AM IST

[6] மாலைமலர், தமிழ்நாட்டில்முதல்முறையாகபா.ஜனதாகூட்டணியில்முஸ்லிம்கட்சி: பொன்.ராதாகிருஷ்ணன்முன்னிலையில்சேர்ந்தது, பதிவு செய்த நாள்: சனிக்கிழமை, டிசம்பர் 14, 10:21 AM IST.

[11] தினமலர், மோடிதீண்டத்தகாதவர்அல்ல: ஜெகன், பதிவு செய்த நாள் : டிசம்பர் 14,2013,18:31 IST