ஹாஜி அலி தர்காவுக்குள் செல்ல வேண்டும் என்ற போராட்டம் ஏன் சனிபகவான் நோவில்-நுழைவு பிரச்சினையைப் பின்பற்றி எழவேண்டும்?
இந்து பெண்களை பின்பற்றித்தான் முஸ்லிம் பெண்கள் போராட வேண்டுமா?: சனி பகவான் கோவிலை அடுத்து மும்பையில் உள்ள ஹாஜி அலி தர்காவுக்குள் சென்று வழிபட வேண்டி பெண்கள் போராட்டம் நடத்தியுள்ளனர் என்று தமிழக ஊடகங்கள் செய்தியை வெளியிட்டதைப் படிக்கும் போது, அப்படியே, செக்யூலரிஸத்தில் திளைப்பது போன்றிருந்தது. மகாராஷ்டிரா மாநிலம் அகமது நகரில் உள்ள சனி பகவான் கோவிலுக்குள் நுழைய பெண்களுக்கு அனுமதி இல்லை. இந்நிலையில் அந்த கோவிலுக்குள் நுழைய 500 பெண்கள் முயன்றனர். ஆனால் அவர்கள் கோவில் வளாகத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இந்நிலையில் மும்பையில் கடலுக்குள் இருக்கும் ஹாஜி அலி தர்காவுக்குள் நுழைய அனுமதி கோரி முஸ்லீம் பெண்கள் 29-01-2016 வியாழக்கிழமை அன்று போராட்டம் நடத்தினர்[1] என்று ஊடகங்கள் தொடர்ந்தன. குறிப்பாக முஸ்லீம் பெண் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக வரலாற்று சிறப்புமிக்க இந்த தர்காவிற்குள் நுழைய அனுமதிக்க கோரி சில மகளிர் அமைப்புகளும் போராட்டத்தில் இணைந்துள்ளன[2].

Mumbai: Women stage a protest demanding entry to Haji Ali Dargah in Mumbai on Thursday. PTI Photo by Shashank Parade (PTI1_28_2016_000180B)
ஆர்பாட்ட கத்தல்கள் செக்யூலரிஸத்தனமாக இருந்தது: தர்கா வாசலில் கூடிய பெண்கள் ஆணாதிக்கத்திற்கு எதிராக கோஷமிட்டனர்[3]. அப்படி என்னத்தான் கோஷமிட்டார்கள் என்று சொல்லவில்லை. ஹாஜி அலி தர்காவுக்குள் நுழைய முயற்சித்தனர். போலீசார் அவர்களை கைது செய்தனர்[4]. ஆனால், கோவிலுக்குள் செல்ல முயன்ற பெண்கள் யார், தர்காவுக்குள் நுழைய போராடிய பெண்கள் யார் என்று குறிப்பிடாமல், ஊடகங்கள் மறுபடியும், செக்யூலரிசத்தைப் பூசி மெழுகிவிட்டன. இனி அப்பெண்கள் ஏந்திய பதாகைகளில் என்ன இருந்தன என்று பார்ப்போம்:
- “கோலுக்கு போவோம், தர்காவுக்கு போவோம், எந்த அப்பனுக்கு என்னாகப்போகிறது”.
- அவரவர் உரிமைகளுக்காக உலகத்தில் போராடுவோம், சேர்ந்தே போராடுவோம்”
- சகோதரிகள் கேட்கிறார்கள் விடுதலை; மகள்கள் கேட்கிறார்கள் விடுதலை; தாய்மார்கள் கேட்கிறார்கள் விடுதலை; மனைவியர் கேட்கிறார்கள் விடுதலை;
- நாட்டில் பெண்கள் அவமானப்படுத்தப் பட்டால் கேடு விளையும்; இதயத்தின் மீது கை வைத்து சொல்லுங்கள், இது நியாயமா?”
இதெல்லா செக்யூலரிஸத் தனமாக இருக்கிறது வியப்பாக இருக்கிறது. ஆனால், கோவிலுக்குள் செல்ல முயன்ற பெண்கள் இந்து பெண்கள், தர்காவுக்குள் நுழைய போராடிய பெண்கள் முஸ்லிம் பெண்கள் என்றறியலாம்.

Indian activists take part in a protest against a ban on women entering its inner sanctum of the Haji Ali mosque, in Mumbai on January 28, 2016. A landmark mosque in Mumbai is facing pressure to overturn a ban on women entering its inner sanctum, a move that could set a precedent on gender restrictions to places of worship in the deeply religious country. A Muslim women’s rights group is locked in a bitter legal battle with trustees of Mumbai’s Haji Ali Dargah, built in the 15th century and popular not only with Muslims but Hindu devotees and sight-seeing tourists. AFP PHOTO / PUNIT PARANJPE / AFP / PUNIT PARANJPE (Photo credit should read PUNIT PARANJPE/AFP/Getty Images)
ஐந்திய பெண்மணிகளை “செக்ஸ்–சர்வே” என்று “இந்தியா–டுடே” அவமதிக்கும் போது, பென்கள் ஏன் போராடுவதில்லை?: பெண்களுக்கு இந்நாட்டில் பலவித உரிமைகள் இருக்கின்றன. இன்றைய தேதியில் செக்ஸ் விசயங்களில் கூட தாராளமாக இருக்க விரும்புகிறார்கள். இந்திய பெண்களின் வீரத்தை எடுத்துக் காட்டும் வகையில், பப்புக்கு போவோம், குடிப்போம், யாருடன் வேண்டுமானாலும், குடித்து-கும்மாளம் போடுவோம் என்றெல்லாம் பேசிய பெண்களிடம் பேட்டிக் கண்டு டிவி-செனல்களில் போட்டுக் காட்டினார்கள். “செக்ஸ்-சர்வே” போர்வையில் “இந்தியா டுடே” பெண்களை வேசித்தனமான சித்தரிப்பதை[5] இப்போராட்டப் பெண்கள் எதிர்ப்பதில்லை. மாறாக, குஷ்பு போன்ற நடிகைகள் ஆமோதிப்பதை நீதிமன்றங்களும் ஒப்புக்கொள்வதைப் போன்று தீர்ப்புகள் கொடுக்கப் படுகின்றனன்றன. ஆனால், கடந்த ஆண்டுகளில் மற்ற விசயங்களில், பெண்கள் இவ்வாறு தெருக்களில் வந்து போராடியதில்லை. ஆனால் வழிபாட்டு விசயத்தில் மட்டும் அப்படியென்ன அவசரம், அவசியம் வந்துவிட்டது என்று தெரியவில்லை.
ஷாபானு வழக்கு போது இப்பெண்களுக்கு உணர்வு வரவில்லை: குறிப்பாக ஷா பானு வழக்கு நடந்து கொண்டிருந்தபோது, இத்தகைய விழிப்புணர்வு குறைவாகவே இருந்தது. சில பெண்கள் கருத்துகளைக் கூறியதோடு நிறுத்திக் கொண்டார்கள். 1987களில் குறிப்பிட்ட மற்றும் ஷா பானு வழக்கில், சிவில் முறை (Code of Civil Procedure) சட்டப்பிரிவு 125ன் படி, விவாகரத்து செய்யப்படும் மனைவுக்கு, ஜீவனாம்சம் கொடுக்கப்படவேண்டும் என்றுள்ளது. ஆனால், மொஹம்மது அஹம்மது கான் அவ்வாறு தரமுடியாது என்றபோது, ஷா பானு எதிர்த்து மேல்முறையீடு செய்தபோது, உச்சநீதிமன்றம் தகுந்த ஜீவனாம்சம் கொடுக்கப்படவேண்டும் என்று உறுதி செய்தது[6]. இதனையடுத்து முஸ்லிம்கள் தங்கள் மதவிவகாரங்களில் அரசு தலையிடக்கூடாது என்று ஆர்பாட்டம் செய்தனர். முஸ்லிம்களை தாஜா செய்ய, அப்பொழுதைய ராஜிவ் காந்தி அரசு, ஒரு புதிய சட்டத்தை [முஸ்லிம் பெண்களின் விவாகரத்து சட்டம் 1987] எடுத்து வந்தது. அதேபோல, இப்பொழுதும், சிறுமிகளின் திருமணத் தடுப்புச் சட்டம் 2006 (the Prohibition of Child Marriage Act, 2006) எங்களுக்கு செல்லுபடியாகாது, எங்கள் சட்டப்படிதான், நாங்கள் திருமணம் செய்து வைப்போம் என்றால் அரசு என்ன செய்யும் என்று நோக்கத்தக்கது. மேலும், இப்பொழுது மோடி அரசு இருப்பதால், பிரச்சினை அடக்கித்தான் வாசிக்கப்படும்.
பொது சிவில் சட்டம் பற்றி பேசினால் எதிர்க்கிறார்கள்!: தில்லி இமாம் நீதிபதிகளின் காலகளை உடைப்பேன் என்றெல்லாம் பேசியபோது, இந்தியாவின் மூன்று மாநிலங்களில் உள்ள நீதிமன்றங்கள் அவரை கைது செய்ய சம்மன் இட்ட போதும், எந்த போலீஸ் அதிகாரியும் கைது செய்யவில்லை. ஏனெனில், அப்பொழுதைய ராஜிவ் காந்தி அரசு முஸ்லிம்களின் அடிப்படைவாதத்திற்கு பயந்து, மெத்தனமாகவே செயல்பட்டது. “யுனிபார்ம் சிவில் கோட்” என்கின்ற எல்லோருக்கும் “பொது சிவில் சட்டம்” என்று சர்லா முத்கல் உச்சநீதி மன்ற தீர்ப்பின் போதும், படித்த பெண்கள் கருத்துகளை சொன்னதோடு அடங்கிக் கிடந்தனர். இவ்விதமான போராட்டங்களை நடத்தவில்லை. ஏன், இப்பொழுதும், போராடும் பெண்கள் அவ்விசயங்களை எடுத்துக் கொள்ளவில்லை. எனவே, இப்பொழுது, முஸ்லிம் பெண்கள், கோவில் விவகாரங்களில், இந்து பெண்கள் போராட்டம் நடத்திய பிறகு, தாமும் இறங்கியிள்ளது உண்மையான ஆர்வத்தின் மேலா, அல்லது செக்யூலார் சக்திகள் தூண்டிவிட்டு, அதற்கேற்றப்படி நடக்கும் நாடகமா என்ற சந்தேகம் எழுகின்றது. ஏனெனில், முஸ்லிம்களின் நம்பிக்கைகள், சட்டங்கள் முதலியவை தனியானவை, வித்தியாசமாவை, மாறுபட்டவை என்று முஸ்லிம்கள் உறுதியாக இருக்கும் நிலையில், மும்பை ஐகோர்ட், சபரிமலை வழக்கில், சுப்ரீம் கோர்ட் வழங்கும் தீர்ப்பை பொறுத்து செயல்பட முடிவு செய்து உள்ளது[7] என்பது வியப்பாக உள்ளது. அப்படியென்ன, இந்திய நீதிமன்றங்கள் செக்யூலரிஸ ரீதியில் தீர்ப்புகள் கொடுக்கின்றனவா என்ன? ஷா பானு தீர்ப்பு விசயத்திலேயே, இந்தியாவில் சட்டம் செக்யூலரிஸ ரீதியில் செயல்பட முடியாது என்பதனை மெய்ப்பித்து விட்டது. பொது சிவில் சட்டட்தைப் பற்றி பேசினாலே, அது ஏதோ இந்துத்துவ அல்லது பிஜேபியின் சதி போன்றுதான் சித்தரிக்கப்படுகிறது. பிறகு, இப்போது, மும்பை நீதிமன்றம் இப்படி சொல்லியிருப்பதும் வேடிக்கைதான்!
2011-ம் ஆண்டு முதல் ஹாஜி அலி தர்காவுக்குள் பெண்கள் அனுமதிக்கப் படுவதில்லை: கடந்த 2011-ம் ஆண்டு முதல் ஹாஜி அலி தர்காவுக்குள் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அப்படியென்றால், முன்னர் எப்படி அனுமதித்தார்கள்? இஸ்லாமிய மத குரு, அடக்கம் செய்யப்பட்ட சமாதி அருகே பெண்கள் வருவது பெரும் பாவம் செய்வதற்கு சமம் என கூறி, ஹாஜி அலி தர்கா நிர்வாகம் பெண்களுக்குத் தடை விதித்தது. இது தொடர்பாக பாரதிய முஸ்லிம் பெண்கள் அமைப்பு தொடர்ந்த வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இது குறித்து போராட்டத்தில் கலந்து கொண்ட இஸ்லாமிய அறிஞர் டாக்டர் ஜீனத் சவுகத் அலி [Zeenat Shaukat Ali, professor of Islamic Studies at St Xavier’s College, Mumbai] கூறுகையில், “இஸ்லாத்தில் எந்த இடத்திலும் பெண்கள் இடுகாட்டிற்கு செல்ல கூடாது என்று சொல்லப்படவில்லை. பெண்களை ஒதுக்குவது இஸ்லாத்தின் வழிமுறைகளுக்கு எதிரானது. இந்து, முஸ்லிம் என எல்லா இடத்திலுமே ஆணாதிக்கத்தின் வெளிப்பாடுதான் பெண்களை புறக்கணிப்பது. இந்திய அரசியல் அமைப்பு, அனைவரும் சமம் என்கிறது. இஸ்லாமும் அதைத்தான் சொல்கிறது[8]. இவர் மும்பை செயின்ட் சேவியர் கல்லூரியில் பேராசிரியராக இருக்கின்றார். நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷா, மகள் பாத்திமா தங்களின் தந்தையுடன் அனைத்து இடங்களுக்கும் சென்றனர். அதே போன்று தான் எங்களுக்கும் அனைத்து இடங்களுக்கும் செல்ல இஸ்லாம் அனுமதி அளித்துள்ளது. இஸ்லாம் ஆண்களையும், பெண்களையும் சரிசமமாகவே பார்க்கிறது”, என்றார்[9]. இதேபோல மற்ற முஸ்லிம் பெண்களும் கூறினர்[10].
வேதபிரகாஷ்
03-02-12016
[1] Read more at: http://tamil.oneindia.com/news/india/muslim-women-now-seek-entry-into-haji-ali-dargah-245575.html
[2] தினத்தந்தி, மும்பை ஹாஜி அலி தர்காவிற்குள் செல்ல அனுமதிக்க கோரி முஸ்லீம் பெண்கள் போராட்டம், மாற்றம் செய்த நாள்: வெள்ளி, ஜனவரி 29,2016, 10:44 AM IST; பதிவு செய்த நாள்: வெள்ளி, ஜனவரி 29,2016, 10:44 AM IST
[3] அதிர்வு, தர்காவுக்குள் நுழைய தடை முஸ்லிம் பெண்கள் போராட்டம், Jan 30, 2016 12:00:00 AM.
[4] http://www.vikatan.com/news/india/58261-muslim-women-now-seek-entry-into-haji-ali-dargah.art
[5] http://www.dailyo.in/politics/sex-in-india-india-today-sex-survey-2016-relationships-bedroom-sunny-leone-pornography-tinder-whatsapp/story/1/8763.html
[6] http://indiankanoon.org/doc/823221/
[7] தினமலர், ஹாஜி அலி தர்காவில் பெண்களுக்கு அனுமதி?, ஜனவரி.18, 2016.22:11.
[8] விகடன், சனி பகவான் கோவிலை தொடர்ந்து ஹாஜி அலி தர்காவுக்குள் நுழைய பெண்கள் முயற்சி !, Posted Date : 11:35 (29/01/2016)
[9] தமிழ்.ஒன்.இந்தியா, மும்பை ஹாஜி அலி தர்காவுக்குள் நுழைய அனுமதி கோரி முஸ்லீம் பெண்கள் போராட்டம், Posted by: Siva Published: Friday, January 29, 2016, 16:13 [IST].
[10] http://www.hindustantimes.com/mumbai/scholars-divided-over-allowing-women-in-haji-ali-dargah/story-i4xqsED5CNXYznod3kafcI.html
அண்மைய பின்னூட்டங்கள்