Posted tagged ‘அத்வானி’

சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலைவழக்கு: முக்கியஎதிரி “போலீஸ்’ பக்ருதீன் துப்பாக்கி முனையில் கைது!

ஒக்ரோபர் 5, 2013

சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு: முக்கிய எதிரிபோலீஸ்பக்ருதீன் துப்பாக்கி முனையில் கைது!

Fakruddin alias Police Fakruddin - The Hindu photo

Fakruddin alias Police Fakruddin – The Hindu photo

போலீசாரால் மும்முரமாகத் தேடப்பட்டவர்களில் ஒருவன் பிடிபட்டான்: சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய எதிரியான “போலீஸ்’ பக்ருதீன் என்று அழைக்கப்படும் பக்ருதீன் வெள்ளிக்கிழமை (04-10-2013) பிடிபட்டார்[1]. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் ரமேஷ், சேலத்தில் கடந்த ஜூலை 19-ஆம் தேதி இரவு அவரது அலுவலகத்தின் முன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை குறித்து சேலம் மாநகர போலீஸார் விசாரணை செய்தனர். வழக்கின் முக்கியத்துவம் கருதி, விசாரணை சி.பி.சி.ஐ.டி. சிறப்புப் புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. மகேஷ்குமார் அகர்வால் தலைமையில் தனிப்படை போலீஸார் வழக்கை விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாகவும், பெங்களுரில் பாஜக அலுவலகம் அருகே வெடிகுண்டு வைத்த வழக்கு, மதுரையில் அத்வானி செல்லவிருந்த பாதையில் வெடிகுண்டு வைக்கப்பட்ட சம்பவம் ஆகியவை தொடர்பாகவும் –

  1. மதுரை நெல்பேட்டையைச் சேர்ந்த போலீஸ் பக்ருதீன் (35),
  2. பிலால் மாலிக் (25),
  3. திருநெல்வேலி மேலப்பாளையத்தைச் சேர்ந்த பன்னா இஸ்மாயில் (38),
  4. நாகூரைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக் (45)

ஆகியோரை போலீஸார் தேடி வந்தனர்[2]. மேலும் தேடப்படும் 4 பேரையும் பற்றி தகவல் தெரிவித்தால் ரூ. 20 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும் டி.ஜி.பி. அலுவலகம் அறிவித்தது. போலீஸார் இவ்விசயத்தில் அதிக அளவில் தேடுதல் முயற்சிகள், யுக்திகளைக் கையாண்டுள்ளது. ஒரு லட்சம் போஸ்டர்கள் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் அச்சடித்து “பிடித்துக் கொடுத்தால் ரூ.5 லட்சம் பரிசு” என்று அறிவித்தது. தொலைக்காட்சிகளிலும் அறிவிக்கப்பட்டது[3].

போலீஸ் பக்ருதீன்,  - அல்-உம்மா,

போலீஸ் பக்ருதீன், – அல்-உம்மா,

ஏற்கெனவே கைதானவர்கள்: பலவித வன்முறை, தீவிரவாத குரூரக் காரியங்களுக்காகவும், குற்றங்களுக்காகவும் ஏற்கெனவே கைதானவர்களின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

  1. கே. பீர் மொஹித்தீன் [K Peer Mohideen (39)],
  2. ஜே. பஷீர் அஹமது [ J Basheer Ahmed (30)]
  3. சையது மொஹம்மது புஹாரி என்கின்ற கிச்சான் புஹாரி [Syed Mohammed Buhari alias Kitchan Buhari (38) ]

முதலியோர் ஏற்கெனவே பெங்களூரு பொலீஸாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்[4]. அத்வானி கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டு வரும் நாகூர் அனீபா என்கின்ற மொஹம்மது அனீபாவை ஜூலை 9, 2013 அன்று திண்டுகல்லில், வத்தலகுண்டு என்ற இடத்தில் மறைந்திருந்தபோது, போலீஸார் கைது செய்துள்ளனர்[5].

போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக், அபுபக்கர் சித்திக்  - அல்-உம்மா,

போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக், அபுபக்கர் சித்திக் – அல்-உம்மா,

தமிழ்நாடு-ஆந்திரா எல்லைப் பகுதியில் துப்பாக்கி முனையில் பிடிப்பட்டார்: இந்நிலையில் சென்னை பெரியமேடு பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருப்பதி திருக்குடை ஊர்வலத்துக்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதில் இந்து அமைப்புகளின் தலைவர்கள் பங்கு கொள்வதால், அவர்களை இலக்காக வைத்து தாக்குதல் நடக்கக் கூடும் என்றதால், முக்கியமான பகுதிகளில் மாநில உளவுப்பிரிவு போலீஸார், மதவாத தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார், க்யூ பிரிவு போலீஸார், ஒருங்கிணைந்த குற்ற புலனாய்வுப் பிரிவு போலீஸார் ஆகியோர் தமிழ்நாடு-ஆந்திரா எல்லைப்பகுதியில் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சூளையில் ஒருங்கிணைந்த குற்ற புலனாய்வுப்பிரிவு போலீஸார் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு சந்தேகப்படும்படியாக ஒரு நபர் நிற்பதை பார்த்தனராம். உடனே அந்த நபரை அப்பிரிவின் இன்ஸ்பெக்டர் பிடிக்க முயன்றதாகத் தெரிகிறது. ஆனால் அந்த நபர், இன்ஸ்பெக்டரை தள்ளிவிட்டு ஓட முயன்றாராம். இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த இன்னொரு இன்ஸ்பெக்டர் துப்பாக்கி முனையில், அந்த இளைஞரை மடக்கிப் பிடித்தார். அவனிடத்தில் மூன்று மொபைல் போன்கள், சில சிம் கார்டுகள், தமிழ்நாட்டின் வரைப்படங்கள், ஆவணங்கள் முதலியவை கண்டெடுக்கப்பட்டன[6]. அவரிடம் விசாரணை செய்ததில், அவர் போலீஸாரால் கடந்த இரண்டரை ஆண்டுகளாக தேடப்படும் போலீஸ் பக்ருதீன் என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் அவரை ரகசிய இடத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். பக்ருதீனின் கூட்டாளிகள் யாரேனும் சென்னையில் இருக்கின்றனரா என போலீஸார் பல்வேறு இடங்களில் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.

Dinamalar-TN-Jihadis-arrest.6தீவிரவாதியின் புராணம் – போலீஸ் பக்ருதீன் வளர்ந்தது எப்படி?[7]:  மதுரை நெல்பேட்டையை சேர்ந்தவன் பக்ருதீன். இவனது தந்தை சிக்கந்தர் அலி போலீஸ் ஏட்டாக பணியாற்றினார். இதனால் போலீஸ்காரர் மகன் பக்ருதீன் என அழைக்கப்பட்ட பக்ருதீனுக்கு நாளடைவில் ‘போலீஸ்‘ பக்ருதீன் ஆனான். தமிழகத்தில் எப்படி அவனவன் தனக்காகப் பட்டத்தை வைத்துக் கொள்கிறானோ, அதுபோல, தீவிரவாதிகளும் வைத்துக் கொள்வதில் ஒன்றும் வியப்பில்லைதான். தாயார் சையது மீரா. சகோதரர்கள் 2 பேர். முகம்மது மைதீன் பீடி,சிகரெட் வியாபாரம் செய்துவருகிறார். மற்றொரு சகோதரர் தர்வீஸ் மைதீன் மீது 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அத்வானியை குண்டுவைத்து கொல்ல முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டான் பக்ருதீன்.  நெல்பேட்டையை சேர்ந்த பெண்ணை பக்ருதீன் திருமணம் செய்த நிலையில், சில மாதங்களிலேயே மனைவியைவிட்டு பிரிந்துவிட்டான். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. அல் உம்மா இயக்கத்தின் முக்கிய நிர்வாகி இமாம் அலிக்கு நெருக்கமானவன் பக்ருதீன். 1995ல் விளக்குத்தூண் ஸ்டேஷனில் அடிதடியில் ஈடுபட்டதாகவும், பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதே ஆண்டில் திடீர்நகரில் கொலை முயற்சி வழக்கு, 1996ல் அனுப்பானடியில் அழகர் என்பரை கொலை செய்ததாகவும், மீனாட்சி கோயிலில் வெடிகுண்டு வைத்ததாகவும், மதிச்சியத்தில் கொலை வழக்கும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், அவன் ஜாலியாக சுற்றிவந்துள்ளான், தொடர்ந்து குரூரக் குற்றங்களை செய்து வந்துள்ளான்.

CBCID_NOTICE7.3.2002ல்  துப்பாக்கியால் சுட்டு இமாம் அலியை தப்பவைத்ததாக திருமங்கலம் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 2010ல் விளக்குத்தூணில் கொலை முயற்சி மற்றும் உதவி கமிஷனர் வெள்ளத்துரையை மிரட்டியது உள்ளிட்ட 2 வழக்குகள், 2011ல் பாஜ மூத்த தலைவர் அத்வானியை குண்டு வைத்து கொல்ல முயன்றதாக திருமங்கலம் தாலுகா போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 30 வழக்குகளுக் கும் மேல் பக்ருதீன் மேல் பதிவு செய்யப்பட்டுள்ளது. குண்டு தயாரிப்பதில் கில்லாடி: இமாம் அலி தப்பிய வழக்கில் 37 பேருக்கு தண்டனை வழங்கப்பட் டது. 7 பேருக்கு 7 ஆண்டும், 32 பேருக்கு 5 ஆண்டுகளும் தண்டனை விதிக் கப்பட்டது. இவர்களில் இமாம் அலி, சீனியப்பா, மாங்காய் பஷீ, முகம்மது இப்ராகீம் ஆகியோர் பெங்களூரில் 2002 செப்.29ல் சுட்டுக்கொல்லப்பட்டனர். 7 ஆண்டு தண்டனை பெற்ற போலீஸ் பக்ருதீன் ஐகோர்ட்டில் அப்பீல் செய்தான். அங்கும் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டது. பின்னர் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தான். இதன் பேரில் 2010ல் ஜாமீனில் வெளியே வந்தவன் பின்னர் போலீசில் சிக்கவில்லை, அதாவது தப்பிச்சென்றான் என்று சொல்லாமல் ஊடகங்கள் எடுத்துக் காட்டுகின்றன. பக்ருதீன் தனது கூட்டாளிகளை சேர்த்துக்கொண்டு மிகப்பெரிய ரிமோட் குண்டை  தயாரித்து 2011 அக்.28ல் பாஜ மூத்த தலைவர் அத்வானி வரும் பாதையில் வைத்தான். அதிர்ஷ்டவசமாக இதை முன்கூட்டியே போலீ சார் பார்த்து அகற்றியதால் அத்வானி தப்பினார். அப்போது கைப்பற்றப்பட்ட குண்டு, தயாரித்த தொழில்நுட்பத்தை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதன் பின்னரே போலீஸ் பக்ருதீன் எவ்வளவு ஆபத்தானவன் என்பதை போலீ சார் உணர்ந்து தீவிரமாக தேட துவங்கினர். பாவம், இத்தனை கொலைகள் செய்தும் அவனது, குரூர மனப்பாங்கை போலீசாரால் கண்டுப் பிடிக்க முடிவில்லை என்றல், அதனை என்றென்பது?

TN POLICE announcementகுரூரக் கொலைகள் செய்யும் மது அருந்தாத ஒழுக்கமான ஜிஹாதி:  இந்த வழக்கில் 8 பேர் சிக்கியும் பக்ருதீன் சிக்கவில்லை. அடுத்தடுத்து கொலைகள்: ஊர் சுற்றிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதில் பக்ருதீன் ஆர்வம் கொண்டவன். அதாவது சுற்றிக் கொண்டே தீவிரவாத கொலைகளை செய்வான் போலும்! அவனுக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை. ஏதோ ஒழுக்கமான ஜிஹாதி போன்ற சித்தரிப்பு, திகரன் செய்துள்ளது. 2013 ஏப்.3ல் பெங்களூரில் பாஜ அலுவலகம் அருகே வெடிகுண்டு வெடித் தது, ஜூலை முதல் தேதி வேலூரில் இந்து முன்னணி மாநில செயலாளர் வெள்ளையப்பன், 19ம் தேதி சேலத்தில் தமிழக பாஜ பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் ஆகியோர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.  தேடப்பட்டு வரும் பக்ருதீன் மீது இந்த கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.  நெல்லை கிச்சான் புகாரியுடன் சேர்ந்து பெங்களூர் குண்டு வெடிப்பில் ஈடுபட்டான் பக்ருதீன் என தகவல் வெளியானது. இதற்கிடையே மதுரை மேலமாசி வீதியில் பால்கடைக்காரர் சுரேஷ் கொலையிலும் போலீஸ் பக்ருதீன் தலைமையிலான கும்பல் செய்தது தெரிந்தது. அப்போது போலீசார் விசாரித்தபோதுதான் அவன் மதுரைக்கு அடிக்கடி வந்து சென்றதும், நண்பர்கள் பலரது வீடுகளில் தங்கியிருந்ததும் தெரிந்தது.  பக்ருதீனுடன்  கூட்டாளிகள் பிலால்மாலிக், பன்னா இஸ்மாயில், அபுபக்கர் சித்திக் ஆகியோர் மிக நெருக்கமாக செயல்பட்டுள்ளனர். பிலால் மாலிக் இந்து மக்கள் கட்சி தலைவர் காளிதாஸ் 2005 ஜூன் 22ல் மதுரையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையவன். அப்போது அவருக்கு 17 வயது என்பதால், மைனர் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தான்[8]. பின்னர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது அங்கு மோதலில் ஈடுபட்டதாக வழக்கு உள்ளது.

ISI-Residence-putur-DC.3 Bana Ismail wifeநெல்லை சைவத்தின் இருப்பிடமா, ஜிஹாதிகளிம் குகையா என்ற நிலையில் நெல்லை கும்பலுடன் நெருக்கம்: முகம்மது அனிபா நெல்லை மாவட்டம் தென்காசியை சேர்ந்தவன். தென்காசி நகர் இந்து முன்னணி தலைவர் குமாரபாண்டியன் 2006ல் கொலை செய்யப்பட்டார். இதன் எதிரொலியாக நெல்லை நகர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் மைதீன் ஷேக்கான் கொல்லப்பட்டார். குமார பாண்டியன் கொலை வழக்கில் முகம்மது அனிபா குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இந்த 2 கொலை வழக்கு குற்றவாளிகளும் 2007 ஆகஸ்ட்டில் மோதிக்கொண்டதில் 6 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இவ்வழக்கிலும் முகம்மது அனிபா முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளான். இவ்வழக்கில் தலைமறைவாக இருக்கவும், விசாரணை, ஜாமீன் பெற்றபோதும் மதுரையில் பதுங்கியிருக்க பக்ருதீன் உதவினான். இந்த பழக்கம் நெல்லையை சேர்ந்த பலருடன் நெருக்கமாக பழக பக்ருதீனுக்கு முகம்மது அனிபா மூலம் வாய்ப்பு கிடைத்தது. இப்படித்தான் கிச்சான் புகாரியுடன் பக்ருதீனுக்கு பழக்கம் ஏற்பட்டது.

chittoor-puttur-jihadi-hideout-Dinamani.2தமிழக ஜிஹாதிகளுக்கு உதவுவது யார்?: ஊடகங்கள் இப்படி ஜிஹாதிகளின் புராணம் பாடினாலும், தமிழகத்தில் உள்ளவர்களின் ஆதரவு இல்லாமல், அவர்கள் இவ்வாறு தொடர்ந்து குரூரக் குற்றங்களை செய்து கொண்டிருக்க முடியாது. அதிகார, அரசியல் மற்றும் மதவாத சக்திகளின் உதவியில்லாமல் நிச்சயமாக, இத்தகைய கூட்டுக் குற்றங்கள், சதி திட்டங்கள், திட்டமிட்ட கொலைகள் முதலியன நடத்தப்பட முடியாது[9]. எல்லா காரியங்களுக்கும் பணம் தேவைப் படுகிறது. பணம் இல்லாமல், தீவிரவாதச் செயல்களைச் செய்யமுடியாது. அதற்கும் மேலாக, இன்று “லாஜிஸ்டிக்ஸ்” என்று பேசப்படுகின்ற உதவிகள் அவர்களுக்குக் கிடைக்காமல், அத்தகைய காரியங்களை செய்யவே முடியாது. அதற்கு லட்சக் கணக்கில், ஏன் கோடிக்கணக்கில் செலவாகிறது. ஆகவே, யார், எப்படி அத்தகைய பெரிய பண பரிவர்த்தனைகளை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று கவனித்தாலே, இந்த ஜிஹாதிகளை, முஜாஹித்தின்களை, மதவெறியர்களைக் கண்டு பிடித்து விடலாம்.

ISI-Residence-putur-DC.4எவ்விதத்திலும் உதவும் சித்தாந்திகள் தங்களது போக்கை மாற்ரிக் கொள்ள வேண்டும்: இந்திய செக்யூலரிஸவாதிகள் சாவிலும் அந்த பாரபட்சத்தைக் கடைப் பிடிக்க ஆரம்பித்துள்ளார்கள். இது திராவிட, நாத்திக, கம்யூனிஸ சித்தாந்திவாதிகளின் செயல்முறைகளுடன் ஒத்துப் போவதைப் பார்க்கமுடிகிறது[10]. மேலப்பாளையத்தில், போலீசார் சோதனை செய்யச் சென்றபோது, முஸ்லீம்கள் அதனால் தான், தாங்கள் ஏதோ சட்டங்களுக்கு உட்படாத மனிதர்கள் போலக் காட்டிக் கொண்டார்கள், போலீசாரை மிரட்டினார்கள்[11]. சென்னையில் ஆர்பாட்டம், ஊர்வலம் என்று கூட்டங்களைக் கூட்டினார்கள்[12]. இதற்கெல்லாம், லட்சக் கணக்கில் பணத்தைக் கொடுத்து உதவுவது யார் என்று ஆராய்ந்தாலே உண்மையை அறிந்து கொள்ளலாம். பெங்களூரு குண்டுவெடிப்பு இவர்களின் கூட்டுசதிமுறைகளை அம்பலமாக்கியுள்ளது[13]. நிகழ்சிகளை கோர்வையாக படிக்கும் சாதாரண மனிதனுக்குக் கூட, தமிழக ஜிஹாதிகளின் மனப்பாங்குப் புரிந்து விடும்[14], இருப்பினும் தமிழக அறிவுஜீவிகள் அதனை கண்டுகொள்ள மறுக்கிறது.

® வேதபிரகாஷ்

05-10-2013


[2] Mr. Nicholson said three persons – Fakruddin alias ‘Police’ Fakruddin, Bilal Malik and Hanifa – were the main conspirators in the plan to blow up the convoy of Mr. Advani. They were present at the scene of crime and escaped on seeing the police.

[3] This is perhaps for the first time in the crime history of Tamil Nadu that as many as one lakh posters have been printed by police announcing a cash prize of Rs five lakh (totalling Rs 20 lakh) on heads of each of the four suspects — ‘Police’ Fakruddin (35), Bilal Malik (25), Panna Ismail (38), and Abu Backer Siddique (45). The posters in Tamil and English are being displayed at vantage points across Tamil Nadu to get inputs from the public on the accused.

[4] In the Bangalore BJP office blast case, K Peer Mohideen (39), J Basheer Ahmed (30) and Syed Mohammed Buhari alias Kitchan Buhari (38) all belonging to Tamil Nadu have already been arrested by Karnataka police.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/cbcid-launches-information-drive-in-advani-pipe-bomb-case/article5119231.ece

[5] Armed police personnel stormed into a hideout at Batlagundu in Dindigul district early on Monday and apprehended Nagoor Hanifa alias Mohamed Hanifa (35), one of the prime suspects who allegedly conspired to eliminate Bharatiya Janata Party leader L.K. Advani and attempted to blow up his convoy near Madurai on October 28, 2011.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/sit-nabs-prime-suspect-in-plot-to-blow-up-advanis-convoy/article4895641.ece

[6]  Three mobile phones, a few SIM cards, some diagrams and sketches of the state map and other documents were seized

http://timesofindia.indiatimes.com/city/chennai/Accused-in-pipe-bomb-plot-against-L-K-Advani-held/articleshow/23543208.cms

[8] இப்பொழுதைய கற்பழிப்பு வழக்கிலும் ஒரு முஸ்லீம் தான் சிக்கியுள்ளான். மற்றவர்களுக்கு தூக்குத் தண்டனை கொடுக்கப்பட்டாலும், இவனுக்கு சீர்திருத்தப் பள்ளியில் அனுமதிப்பு என்பதை கவனிக்க வேண்டும். இந்நிலையில் தான் அப்பாவி முஸ்லீம்கள் கைது செய்யப் படுகிறார்கள் என்றெல்லாம் வக்காலத்து வாங்கி வருகிறார்கள். அதற்கு, கேவலமாக உள்துறை மந்திரியும் ஒத்து ஊதுகிறார்.

http://secularsim.wordpress.com/2013/07/16/if-terror-is-secularized-why-not-act-and-rules-in-secular-india/

அத்வானி வெடிகுண்டு கொலை முயற்சி – ஒருபக்கம் கைது, மறுபக்கம் ஜாமின், டிஎஸ்பி தாக்கப்படுதல் முதலின….

ஜூலை 11, 2013

அத்வானி வெடிகுண்டு கொலை முயற்சி – ஒருபக்கம் கைது, மறுபக்கம் ஜாமின், டிஎஸ்பி தாக்கப்படுதல் முதலின….

Fakrudhhin-Abdul Rahman-Mohammed Haneefa- Advani plot.full

நீதிமன்றத்தில் சட்டமீறல்கள்: அத்வானியைக் கொலை செய்ய திட்டமிட்ட ஜிஹாதிகளுள் ஒருவன் ஜாஹிர் ஹுஸைன் என்ற குற்றவாளி நீதிமன்றத்தில் செய்த கலாட்டாவால் பரப்பரப்பு ஏற்பட்டது. மாஜிஸ்ட்ரேட் முன்பு கொண்டுவரப்பட்ட அவன் பிளேடினால் தனது கழுத்தை அறுத்துக் கொள்ள முயன்றான். உடனே, போலீஸார் தடுத்து அவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சிறிய காயத்துடன் அவன் தப்பினான். கடந்த ஏப்ரல் மாதம் கூட இதே மாதிரி தற்கொலை முயற்சியில் அவன் ஈடுபட்டான்[1]. அப்பொழுது தன்னை விடுவிக்குமாறு முறையீடு செய்திருந்தான். ஆனால் நீதிபதி அவனது மனுவை தள்ளுபடி செய்தார்[2].

Fakrudhhin-Abdul Rahman-Mohammed Haneefa

முகமது அனிபா டிஎஸ்பியைத் தாக்குதல் (08-07-2013): திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள கட்டகாமன்பட்டி எடமலையான் கோவில் அடிவாரத்தில் பதுங்கியிருந்த அத்வானி செல்லும் பாதையில் குண்டு வைத்த வழக்கில் முகமது அனீபாவை, டி.எஸ்.பி. கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் திங்கள்கிழமை 08-07-2013 அன்று மடக்கி பிடித்தனர்[3]. அப்பொழுது தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்த முகமது அனீபா, டி.எஸ்.பி. கார்த்திகேயன் மீது வீசினார். இதில் டி.எஸ்.பி. கார்த்திகேயன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்[4]. இதனால் அந்த இடத்தில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவனை மடக்கி பிடித்த போலீசார், அவனிடம் வெடிமருந்து, ஜெலட்டின் குச்சிகள் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்தனர். வத்தலகுண்டு காவல்நிலையத்தில், தன்னை கொலை செய்ய முயற்சி செய்ததாகவும், வெடிமருந்து மற்றும் ஜெலட்டின் குச்சிகள் வைத்திருந்தாகவும், இந்து முன்னணி தலைவர்களை கொலை செய்ய திட்டமிட்டு தேசிய ஒருமைப்பாட்டை சீர்குலைக்க முயற்சி செய்தது உட்பட 5 வழக்குகள் முகமது அனீபா மீது டி.எஸ்.பி. கார்த்திகேயன் புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்டுள்ளது[5].

Fakrudhhin-Abdul Rahman-Mohammed Haneefa- Advani plot

ஒரு பக்கம் கைது,  மறுபக்கம்  3 பேருக்கு ஜாமின்: மதுரை அலும்பட்டி பாலத்தில் 2011ஆம் ஆண்டு அக்டோபர் 28ம் தேதி அத்வானி யாத்திரை மேற்கொண்ட போது அவரை கொல்லும் திட்டத்துடன் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குண்டு வைக்க உதவியதாக, 2011 நவம்வர் 1ல், மதுரை நெல்பேட்டை அப்துல்லா, சிம்மக்கல் தைக்கால் தெரு ஆட்டோ டிரைவர் இஸ்மத் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கொடுத்த தகவல்படி, இமாம்அலி கூட்டாளிகள் “போலீஸ்’ பக்ருதீன், பிலால்மாலிக் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது[6]. இவர்கள் தலைமறைவாக உள்ள நிலையில், கடந்தாண்டு மார்ச்சில், கூட்டாளி ஹக்கீம் கைது செய்யப்பட்டார்.  இந்தாண்டு மார்ச் 27ல், “போலீஸ்’ பக்ருதீன் சகோதரர் நெல்பேட்டை தர்வீஸ் மைதீன், மதுரை வில்லாபுரம் சையது, குப்புப்பிள்ளை தோப்பு முஸ்தபா கைது செய்யப்பட்டனர். மார்ச் 29ல், குண்டு வைக்க, பைப் வாங்கிக் கொடுத்ததாக, திருநகர் ஜாகீர் உசேன்கைது செய்யப்பட்டார்[7]. தென்காசியில் வடக்கு மவுண்ட் ரோட்டில் வசித்து வந்த முகமது அனீபா மீது இந்து முன்னணி நகர தலைவர் குமார்பாண்டியன் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட மோதலில் அவரது சகோதரர்கள் 3 பேரும் கொல்லப்பட்டனர். இது தொடர்பான வழக்குகளிலும் முகமது அனிபா முக்கிய குற்றவாளியாவார்[8].

Mohammed Haneefa arrested - Advani murder plot

குற்றவாளிகள் விஷயத்தில் அரசியல் விளையாட்டு கூடாது: அத்வானியைக் கொண்டு வைத்து கொலைச்செய்ய முயன்றான் என்று காங்கிரஸார் அல்லது நாத்திகக் கட்சியினர் திமுக முதலியன சந்தோஷமாக இருந்து விடமுடியாது. குண்டுவெடிப்பில் தன் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டிருக்கிறார். அது திராவிட, தமிழ்சித்தாந்தங்களிடம் ஊறியிருந்ததால் இன்றளவும் காங்கிரஸாரால் கிரகித்துக் கொள்ள முடியவில்லை. திராவிட சித்தாந்திகளுக்கும், காங்கிரஸ்காரர்கள்ளுக்கும் மோதல்கள் இருந்து கொண்டுதான் உள்ளது. அதேபோல இந்திராகாந்தி கொலை செய்யப்பட்ட போது, சீக்கிய தீவிரவாதம் தலைத்தூக்கியது. சீக்கிய படுகொலைகளுக்குப் பின்னர் சீக்கியர் காங்கிரஸின் நிரந்தர எதிரிக்கள் ஆனார்கள். இப்பொழுது, ராகுல் காந்தி சரப்ஜித் சிங்கின் அந்திமக் கிரியைகளில் பங்கு கொண்டதால் மட்டும் ஒட்டு மொத்த சீக்கிய சமூகம் அவர்களுக்கு இழைத்த அநீதிகளை மறந்துவிடப் போவதில்லை. இதற்காக பிஜேபிகாரர்களுகும் சந்தோஷப்பட்ட முடியாது.

November 2011 - BJP demonstrated against terrorism

தொடர்ந்து குற்றவாளிகள் குற்றங்களை செய்வது ஏன்?: குற்றத்தைப் பழக்கமாகக் கொண்டுள்ளவர்களின் (habitual offenders / regular charge-sheeters / involved in multiple offences) இத்தகைய செயல்களை சட்டங்களை நிறைவேற்றுபவர்கள் மட்டுமல்லாது மற்றவர்களும் கூர்ந்து கவனிக்க வேண்டும். தொடர்ந்து கொலைகள் செய்து வருபவன்  சாவதற்கு தயாராக இருக்கிறான் என்பது தெரிகிறது. அதிலும் முஸ்லிம் என்பதால் ஜிஹாதித்துவத்தில் ஊறியப்பிறகு, தியாகி விட்டதால் இனி அதே மனநிலையில் அழிவுகளில் தான் அவன் ஈடுபடுவான். அத்தகைய போக்கு இவர்களில் காணப்படுகிறது. இதனால், மேன்மேலும் போலீஸார் வழக்குகள் போட்டுக் கொண்டிருந்தால் என்ன பயனும் இல்லை. மேலும் கொலைக் குற்றங்களில் ஈடுபட்டுள்னர் என்றறிந்தும் மற்ற முஸ்லிம்கள் கண்டிக்காமல் இருப்பது நோக்கத்தக்கது. அதாவது மற்றவர்களுக்குக் குற்றவாளிகளாக, கிரிமினல்களாக இருந்தாலும் அவர்களைப் பொறுத்த வரைக்கும் “ஜியாதி” மற்றும் “ஷஹீத்” என்ற நிலையில் வைத்து விட்டதால் அமைதியாக இருக்கிறார்கள். இது இந்திராகாந்தி-ராஜிவ்காந்தி கொலையாளிகளை வீரர்களாகக் கருதி வழிபடுவதைப் போன்றதே ஆகும். மாறாக, நீதிமன்ற மறுப்பு, போலீஸ் தடைகளை மீறி அத்தகைய கிரிமினல் குற்றவாளிகளை பத்தாண்டு சிறைவாசம் முடிந்தால் விடுவிக்கவேண்டும் என்று வெளிப்படையான கோரிக்கை வைத்து ஆர்பாட்டம் நடத்துவதையும் காணலாம். இவையெல்லாம் பத்து-பதினைந்து  நாட்களில் நடக்கின்றன.

நடக்கும் நிகழ்சிகள் காட்டுவது என்ன?: பொதுமக்கள், தொடர்ந்து கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்ற செய்திகளைப் படித்து மரத்து போயிருக்கிறார்கள். குண்டுவெடிப்புகள், குரூரக் கொலைகளைக் கூட அடிக்கடிக்காட்டி, பிரபலப்படுத்தி, உணர்ச்சியற்றத் தன்மையினை உருவாக்கி விட்டனர்.

01-07-2013 (திங்கட்கிழமை): வெள்ளையன், இந்து முன்னணி கொலை[9]

04-07-2013 (வியாழக்கிழமை): அத்வானி கொலை முயற்சி வழக்கில் சையது சகாபுதீன், தர்வீஸ் முகைதீன், முஸ்தபா ஆகியோருக்கு ஜாமின் வழங்கப்பட்டது[10].

07-07-2013 (ஞாயிற்றுக்கிழமை): தமுமுக நீதிமன்ற மறுப்பு, தடைகளை மீறி ஊர்வலம், ஆர்பாட்டம்.

08-07-2013 (திங்கட்கிழமை): சிறப்பு புலனாய்வுபிரிவு போலீசார் தென்காசி முகமது அனீபாவை திருமங்கலம் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். அவரை வருகிற 22–ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி பன்னீர் செல்வம் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து முகமது அனீபா சிறையில் அடைக்கப்பட்டார்[11].

கேரளாவில் கம்யூனிஸ்டுகளுக்கும் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்திகளுக்கும் அடிதடி, மோதல்கள், கொலைகள் கூட இருந்து வந்தன. அதே போன்ற நிலை இன்று இந்து முன்னணி, பிஜேபி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் முஸ்லிம்கள் இடையே கொலைகள் ஏற்பட்டு வருகின்றன. அதாவது, நேரிடையான மோதல்கள் இல்லாமல், திட்டமிட்ட கொலைகளாக நடந்து வருகின்றன.

குற்றவாளிகளின் மனோதத்துவ அலசல்: சுருக்கமாக, கீழ்கண்ட நிலைகளை இக்குற்றவாளிகளின் போக்கில் காணலாம்:

  • குற்றம் செய்ய மனநிலையை ஏற்படுத்திக் கொள்வது – தூண்டுதல்
  • தொடர்ந்து அதே குற்றத்தை செய்வது – குற்றஞ்செய்ய மனநிலை ஸ்திரமான நிலை
  • சட்டங்களை செயல்படுத்துவர்களைத் தாக்குதல்
  • நீதிமன்றத்திலேயே, நீதிபதிக்கு முன்பாக சட்டமீறல் காரியங்களை செய்வது.
  • தற்கொலை செய்துகொள்ள முயல்வது அல்லது அம்மாதிரி நடிப்பது.
  • “காவலில் இறப்பு” என்ற நிலை உருவாக அழுத்தத்தை ஏற்படுத்துவது.
  • இந்த குற்றவாளிகளுக்கு தொடர்ந்து சட்டரீதியில் ஆதரவு, பாதுகாப்புக் கொடுப்பது.
  • பொய்யான வழக்குகள் போட்டு திசைத் திருப்புவது[12].
  • இக்குற்றவாளிகளின் குடும்பங்களை கவனித்துக் கொள்வது, ஆதரிப்பது, உதவுவது.

ஆகவே, இவையெல்லாம் ஒரே நாளில், ஒரே மாதத்தில், ஒரே ஆண்டில் தீர்மானித்து செயல்படுத்தும் காரியமல்ல. அவ்வாறு இவ்வுலகத்தில் எந்த மனிதனையும் தயார் படுத்து விடமுடியாது. ஏனெனில், எந்த மனிதனும் இறப்பதற்கு தயாராக இல்லை என்பதுதான் உண்மை. அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் தாம் எவனுக்கும் இருக்கும் ஆனால், மாறாக இறக்கத் தயாராகிரான், தயாராகி விட்டான் என்றால் அது இப்பொழுது காணப்படுகின்ற ஜிஹாதித்துவத்தைத் தான் எடுத்துக் காட்டுகிறது.

வேதபிரகாஷ்

© 11-07-2013


[9] வேலூரில் இந்து முன்னணி செயலாளர் படுகொலை: 5 வெடிகுண்டுகள் பறிமுதல், பதிவு செய்த நாள் –

ஜூலை 02, 2013  at   10:28:57 AM; http://puthiyathalaimurai.tv/five-bombs-seized-in-vellore

வேலூரில் ஹிந்து முன்னணி அமைப்பின் மாநில செயலாளர் வெள்ளையன் கொலை செய்யப்பட்ட இடத்தில் 5 வெடிகுண்டுகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அவை அனைத்தும் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வேலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு பின்புறம், நேற்று பிற்பகல் 3 மணியளவில் ஹிந்து முன்னணி அமைப்பின் மாநில செயலாளர் வெள்ளையன் படுகொலை செய்யப்பட்டார். தகவலறிந்த காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.வெள்ளையன் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, வேலூரில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனிடையே, வேலூரில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலை அறநிலையத்துறை கையகப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மாவட்டம் முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்த ஹிந்து முன்னணி அழைப்பு அழைப்பு விடுத்திருந்தது. திட்டமிட்டபடி அந்தப் போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

[10] இவ்வழக்கில் சையது சகாபுதீன், தர்வீஸ் முகைதீன், முஸ்தபா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.இவ்வழக்கில் தலைமறைவாக இருப்பவர்களுக்கும் எங்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என மனுவில் குறிப்பிட்டிருந்தனர். இதை விசாரித்த நீதிபதி ஆர். மாலா, மனுதாரர்கள் மூவரும் மறு உத்தரவு வரும் வரை திருச்சி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் (எண் 1) தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

http://dinamani.com/tamilnadu/2013/07/05/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/article1668100.ece

அத்வானியைக் கொல்ல முயற்சி: கைது, கைது இல்லை, சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு, ஆள்கொணர்வு மனு!

நவம்பர் 11, 2011

அத்வானியைக் கொல்ல முயற்சி: கைது, கைது இல்லை, சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு, ஆள்கொணர்வு மனு!

அத்வானி கொலை முயற்சி: அத்வானி கொலை முயற்சி வழக்கில் பைப் வெடிகுண்டு வைத்த மதுரை நெல்பேட்டையைச் சேர்ந்த அப்துல்ரகுமான் என்ற அப்துல்லா (26), மற்றும் மதுரை சிம்மக்கல்லை சேர்ந்த இஸ்மத் (22), ஆகிய இருவரையும் சிறப்புப்படை போலீசார் கைது செய்தனர்[1]. இவர்களிடம் இருந்து குண்டு வைக்க பயன்படுத்திய ஆட்டோ ரிக்ஷா, டூவீலரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தலைமறைவாக இருக்கும் மேலும் பலரை தேடி வருகின்றனர். மொபைல் போன் மூலம் அம்பலம்: ஆலம்பட்டி பகுதியில் மொபைல் போன் உரையாடல்களை கண்காணித்த போலீசார், இவர்கள் இருவரையும் கைது செய்தனர். மதுரை மேலூரைச் சேர்ந்த இமாம் அலியின் கூட்டாளிகளான இவர்கள், மோட்டார் சைக்கிளில் வந்து, பாலத்தின் அடியில் குண்டு வைத்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்களிடம் புலன் விசாரணை நடக்கிறது.

Two Islamic fundamentalists ­— Abdul Rahman alias Abdullah (26)  of Nelpettai and Ismath (22) of Simmakkal — said to be sympathisers of extremist Imam Ali, were arrested here on Tuesday in connection with the alleged attempt on BJP leader L K Advani’s life during his visit to the temple town last week. Sources said a third person was detained in rural Thirumangalam late on Tuesday night. A hunt is on for their accomplices[2].

இருவர் கைது, மற்றவர் தலைமறைவு: மதுரையில் பழக்கடை வைத்திருக்கும் அப்துல் ரகுமான் (சிக்கந்தர் பாட்சாவின் மகன், நெல்பேட்டை) மற்றும் ஆட்டோ ஓட்டுநர் இஸ்மத் (காஜா ஹுஸைனின் மகன், சிம்மக்கல்) ஆகிய இருவரையும் கைது செய்ததாகத் தெரிவித்த சிறப்புப் புலனாய்வுப் பிரிவு ஏடிஜிபி சேகர்[3], முன்னர் சுட்டுக் கொல்லப்பட்ட இமாம் அலியின் கூட்டாளிகள் இவர்கள் என்றும், அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். இவர்கள் மீது ஏற்கெனவே சிறு சிறு வழக்குகள் உள்ளன. இந்த வழக்கில் மேலும் சிலரை தேடி வருவதாகவும் அவர் தெரிவித்தார்[4].

 

கேரளாவிற்கு (பெங்களூருக்கு / ஆந்திராவிற்கு) ஏன் தப்பிச் செல்ல வேண்டும்? இதுகுறித்து ஏ.டி.ஜி.பி.,சேகர் கூறுகையில்,இந்த வழக்கில் முதல்கட்டமாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். எத்தனை பேர் சம்பந்தப்பட்டுள்ளனர், சதித்திட்டம் குறித்த முழுமையான தகவல்கள் இரண்டொரு நாளில் தெரியவரும்,” என்றார். இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் இருவர் கேரளாவிற்கு தப்பியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். போலீஸார் ஆவணங்களில் ஏற்கெனவே அத்தகையவர்களின் பட்டியல் உள்ளது[5]. அவர்களை கைது செய்ய சிறப்புபடை போலீசார் கேரள போலீஸ் உதவியை நாடியுள்ளனர்.  ஆனால் எங்களூர் அல்லது ஆந்திரபிரதேசத்தில் பதுங்கியிருக்கலாம் என சில ஊடகங்கள் கூறுகின்றன[6]. ஆகவே அத்தகைய குற்றங்கள் செய்பவர், குற்றஞ்சாட்டப்படுபவர், குற்றஞ்சாட்டப்பட்டுள்ளாவர் என அனைவரும் இவ்வாறு பதுங்குவது என்பது வாடிக்கையாகயுள்ள்து தெரிகிறது. அதாவது அவ்வாறு அவர்கள் சென்றால், உதவக்கூடியவர்கள், மறைந்துகொள்ள இடங்கள், வேண்டிய வசதிகள் முதலிய ஏற்பாடுகள் உள்ளன என்று தெரிகிறது. இதில் உள்ள அபாயத்தைக் கவனித்து முஸ்லீம் நண்பர்கள் இத்தகைய தீவிரவாதம், பயங்கரவாதம் இன்னும் இருப்பதை, வளர்வதை, வளர்ந்து வருவதை ஆதரிக்கக் கூடாது; அச்செயல்களில் ஈடுபடுபர்களுக்கு ஆதரவு / உதவி செய்யக் கூடாது. இடம்-பொருள்-பணம் கொடுத்து ஊக்குவிக்கக் கூடாது. இந்திய நாட்டு சரித்திரத்தில் முஸ்லீம்கள் ஆண்ட காலத்தில் இந்துக்களுக்கு என்ன சித்திரவதைகள், அவமானங்கள், தீங்குகள், கஷ்டங்கள், என்னவேல்லாம் நேர்ந்துள்ளதன என்பதனை நினைவில் கொண்டு, தேசப்பிரிவினை ஏற்பட்டுக் கூட இந்தியாவிலேயே இருப்போம் என்று முடிவு செய்த முஸ்லீம்கள் தகுந்த நடவடிக்கை எடுத்து இக்கால முஸ்லிம்களை மாற்றவேண்டும். சேர்ந்து வாழ பழகிக்கொள்ளவேண்டும்.

In a breakthrough in the case of pipe bomb that was planted on the scheduled route of BJP leader L.K. Advani, the special investigation team of the CB-CID arrested two persons on Tuesday. The accused were named as Abdul Rahman, 26, son of Sikkander Basha, of Nelpettai in Madurai and Ismath, 22, son of Khaja Hussain, of Simmakkal in Madurai. An official release[7] said the two were arrested for their “involvement in the perpetration of the crime.” Police said Rahman was related to Muslim fundamentalist Imam Ali who was killed in an encounter in Bangalore in September 2002.

என்கவுண்டர் அச்சமும், ஹேபஸ் கார்பஸ் பெட்டிஷனும்: பா.ஜ.க. மூ‌த்த தலைவ‌ர் எ‌ல். கே. அத்வானி கொலை முயற்சி வழக்கில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள பக்ருதீனை ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ஆஜர்படுத்த காவ‌ல்துறை‌க்கு உத்தரவிட‌க் கோ‌ரி சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மனு தாக்கல் செய்யப்பட்டது[8].

தேடப்பட்டுவரும் குற்றாஞ்சாட்டப்பட்டவரின் நண்பரின் மனு: சென்னை மண்ணடி மூட்டைக்காரன் தெருவை சேர்ந்த எம்.அப்துல்லா தாக்கல் செய்த ஆள் கொணர்வு மனுவில், “நானும், பக்ருதீனும் நண்பர்கள். ஒரு வழக்கு தொடர்பாக சென்னை சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு பிரிவு காவ‌‌ல்துறை‌யினரா‌ல் 2003ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டேன். அதே வழக்கில் பக்ருதீன் என்ற போலீஸ் பக்ருதீனும் (35) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அந்த வழக்கு மீதான விசாரணை உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் நிலுவையில் உள்ளது. உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் அளித்த ஜாமீன் அடிப்படையில் நான் வெளியே வந்துவிட்டேன். இந்த நிலையில், கடந்த 2ஆ‌ம் தேதி சென்னை சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாரால் பக்ருதீன் கைது செய்யப்பட்டார். தற்போது அவர்களின் அலுவலகத்தில் பக்ருதீன் சட்டவிரோதமாக அடைக்கப்பட்டுள்ளார். அவரை போலி ‘என்கவுண்ட்டர்’ மூலம் சுட்டுக்கொலை செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்[9].

தேசிய லீக் கட்சி (முஸ்லீம் அரசியல் கட்சி) எழுதிய கடிதம்: “இதுபற்றி நானும், எனது நண்பரும் இந்திய தேசிய லீக் கட்சியின் தமிழ்நாடு பொதுச்செயலாளர் ஜெ.அப்துல் ரகீமும், தமிழக அரசு மற்றும் டி.ஜி.பி.க்கு கடிதம் அனுப்பி பக்ருதீனை உடனடியாக விடுதலை செய்யும்படி கோரினோம். ஆனால் அவர் விடுதலை செய்யப்படவு‌ம் இல்லை. இதுவரை மாஜிஸ்திரேட்டு ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ஆஜர்படுத்தப்பட‌வில்லை. வாழும் உரிமைக்கு எதிராக போலீசார் செயல்பட்டு பக்ருதீனை அடைத்து வைத்துள்ளனர். அதோடு டி.கே.பாசு வழக்கில் உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் பிறப்பித்த வழிகாட்டி நெறிமுறைகளும் மீறப்பட்டுள்ளன. எனவே பக்ருதீனை ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ஆஜர்படுத்தி அவரை வெளியே அனுமதிக்க காவ‌ல்துறைக்கு உத்தரவிட வேண்டும்”, எ‌ன்று மனு‌வி‌‌ல் கூ‌றியு‌ள்ளா‌ர்[10]. இந்த மனு விசாரணைக்கு வந்தது.

போலீஸார் தரப்பில் சொல்லப்பட்டது: போலீஸார் தரப்பில், “பக்ருத்தீன் என்பவர் கைது செய்யப்படவும் இல்லை அல்லது சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்படவுமில்லை. ஆனால், தலைமறைவாகியுள்ளார்[11]. மனுதாரர் வேண்டுமென்றே இத்தகைய மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் கிஞ்சித்தேனும் எந்த ஆதாரமும் இல்லை[12]. அடிப்படையே இல்லாதது, வெறுமையானது, பொய்யானது[13]. ஆகவே தள்ளுபடி செய்யப்படவேண்டும்”. என்று வாதிடப்பட்டது.

நீதிபதிகள் தள்ளூபடி செய்தது: நீதிபதிகள் குறிப்பிட்ட கேள்விகள் கேட்டபோது மனுதாரர் தரப்பில் சரியான பதில் சொல்லப்படவில்லை. பக்ருதீனை போலீசார் கைது செய்ததை மனுதாரர் நேரில் பார்க்கவில்லை. இதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டு, மனுதாரர் குறிப்பிடும் பக்ரூதினை போலீசாரை கைது செய்யவில்லை என்றும் போலீசார்  அவரை கைது செய்ய தேடி வருகிறார்கள் என்றும் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் தரப்பில் கூறியதை ஏற்றுக்கொள்கிறோம்[14]. மேலும், பக்ருதீன் கைது செய்யப்பட்டதற்கான ஆதாரம் எதையும் மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யவில்லை. அதனால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் அப்துல்லா தாக்கல் செய்த ஆள் கொணர்வு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்[15]. இப்பட்ரி நீதிமன்றங்களில், உள்ள சட்டங்களின் படி, வழக்குகளைத் தொடுத்து திசைத் திருப்பலாம். ஆனால், குண்டு வைத்தது உண்மை, அத்தகைய தீவிரவாத எண்ணம் உள்ளது உண்மை, அமைதியைக் குலைக்க வேண்டும் என்ற திட்டம் தீட்டியது உண்மை; எல்லாவற்றையும் மறைத்து ஒன்றுமே இல்லை, நடக்கவில்லை என்று சொல்லித் தப்பித்துக் கொண்டால், நடந்தது நடக்கவில்லை என்றாகுமா?


[8]Claiming himself to be a friend of Fakruddin, M Abdulla of Chennai alleged that he was arrested by CB-CID SIT on November 2 and was being kept in “illegal” custody in violation of Article 21 and 22 of the Constitution.

 http://news.in.msn.com/national/article.aspx?cp-documentid=5580797

[11] In a counter affidavit in response to a Habeas Corpus plea filed by one M Abdullah, Inspector of CB-CID Madurai unit’s SIT R Krishnarajan said Bakrudeen was neither arrested nor detained illegally by the team as claimed by the petitioner but was absconding.

[12] Abdullah had come up with such “a bald and baseless” allegation only to defame CB-CID, the affidavit claimed.

பன்றிக்காக வைத்த டிடோனேடரை வெடிக்க வைத்த அப்பாவி சிறுவன் அப்துல் முஜீத்!

நவம்பர் 5, 2011

பன்றிக்காக வைத்த டிடோனேடரை வெடிக்க வைத்த அப்பாவி சிறுவன் அப்துல் முஜீத்!

பள்ளிக்குச் செல்லாத அப்துல் மஜீத் குப்பைத்தொட்டியிலிருந்து டிடோனேரை எடுத்தல்: திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்த பண்பொழி கிராமத்தில் மு.ந.அ.தெருவைச் சேர்ந்தவர் முகமது அன்சாரி மகன் அப்துல் முஜீத்.  முகமது அன்சாரி. அவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்[1].  அப்துல் முஜீத் (14) அவ்வூர் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று அவன் பள்ளிக்கு செல்லாமல் விடுமுறை எடுத்து வீட்டில் இருந்துள்ளான். மாலையில் அவன் வீட்டில் இருந்த நேரத்தில் குண்டு வெடிக்கும் சத்தம் போல் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், அருகில் இருந்த பள்ளிவாசலில் இருந்தவர்கள் முஜீபின் வீட்டுக்கு ஓடிவந்து பார்த்தனர். அப்போது வீட்டுக்குள் பேட்டரி கட்டைகள், வயர் துண்டுகள், டெட்டனேட்டர் உள்ளிட்ட பொருட்கள் சிதறியும், அப்துல் முஜீப் ரத்த காயங்களுடனும் இருந்துள்ளான். உடனடியாக அவனை தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

மற்றொரு செய்தி: இன்று மாலை, வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருக்கையில், அங்கு கிடந்த பொருளை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வருகிறார். அதில் 2 வயர்கள் இணைக்கப்பட்டிருந்ததால், அதற்கு அவன் மின் இணைப்பு கொடுத்துள்ளான். அப்போது, அது திடீரென்று வெடித்தது[2]. இந்த சம்பவத்தில், முஜீத்தின் கை, கால் என உடலின் பல பாகங்களில் பயங்கர அடிபட்டது. இதனையடுத்து, அவன் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். சம்பவம் குறித்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

போலீஸார் விசாரணை: மாணவன் கையில் டெட்டனேட்டர் எப்படி வந்தது என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்தென்காசி டிஎஸ்பி பாண்டியராஜன் சம்பவ இடத்தை பார்வையிட்டு உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு, கைரேகை பிரிவு சிறப்பு படையினர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதாரி, டிஐஜி வரதராஜு உள்ளிட்டோர் பண்பொழி வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்[3].  பள்ளி மாணவன் கையில் டெட்டனேட்டர் குச்சி கிடைத்தது எப்படி, சிறுவர்கள் கைக்கு கிடைக்கும் வண்ணம் இதனை யாரும் ரோட்டில் போட்டு சென்றார்களா என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பன்றி வெடிக்கும் அத்வானிக்கும் என்ன தொடர்பு[4]? என்ற தலைப்பில் இப்படி ஒரு இணைத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது பன்றியைக் கொல்ல வாங்கும் வெடிகூட எப்படி குப்பையில் கிடைக்கிறது, அதை எப்படி சிறுவன் எடுக்கிறான், எடுத்தவன், வயர்களை இணைக்கிறான் என்றெல்லாம் தெரியவில்லை. அவ்வாறு சிறுவர்கள் அறிவில்லாமல் இருக்கும் போது, மற்றவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். குப்பைத்தொட்டியில் எளிதாக கிடைக்கும் வகையில் வைத்திருக்கக் கூடாது அல்லது போட்டிருக்கக் கூடாது. இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த நெல்லை சரக டிஐஜி வரதராஜு, ரூரல் எஸ்பி விஜயேந்திர பிதாரி உட்பட காவல்துறையினர் விசாரணை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு லோக்கல் முதல் நேஷனல் வரை உள்ள அனைத்து பத்திரிக்கையாளர்களும் குவிய ஆரம்பித்தனர். அத்தனை பத்திரிக்கையாளர்களுக்கும் பேட்டி அளித்த டிஐஜி வரதராஜூ கூறும்போது, “முதற்கட்ட விசாரணையில் சில தகவல்கள் கிடைத்துள்ளன. இன்னும் சிறிது நேரத்தில் இங்கு எப்படி டெட்டனேட்டர் வந்தது தகவல் தெரிந்து விடும். இச்சம்பவத்திற்கும் மதுரையில் அத்வானி ரத யாத்திரையில் கைப்பற்றப்பட்ட பைப் வெடி குண்டு சம்பவத்திற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது” என்று உறுதியாக கூறினார். சமீபத்தில் டில்லி குண்டுவெடிப்பில் சம்பந்தமாக இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்[5].

பன்றி வெடியால் அப்பாவி சிறுவன் காயம்: அப்பாவி சிறுவன் தெரியாமல் செய்திருக்கும் பட்சத்தில் முதலில் இப்படி சொல்லியிருக்க வேண்டிய அவசியமேயில்லை. “ஆனால் பரப்பரப்பு செய்திகளைக் கொடுத்து மட்டுமே பழக்கப்பட்ட நமது பத்திரிக்கையாளர்கள் இச்சம்பவத்தையும் மதுரை சம்பவத்தையும் தொடர்பு படுத்தி கதை எழுத ஆரம்பித்தனர்”, என்கிறது அந்த இனைத்தளம்[6]. மேலும், “ஆனால் அங்கு கைப்பற்றப்பட்ட டெட்டனேட்டர் குச்சி பன்றியைக் கொல்ல ஒருவர் பயன்படுத்தியது என்பது தற்போதைய விசாரணையில் தெரிய வந்து உள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது”, என்றும் கூறுகிறது[7]. பன்றியைக் கொன்றுவிட்டு அல்லது அவ்வாறு உபயோகப் படுத்திய பிறகு, ஏன் அப்படி டிடோனேடரை அஜாக்கிரதையாக விட்டுவிட்டுச் சென்றனர் என்றும் தெரியவில்லை.

எளிதாகக் கிடைக்கும் வெடிப்பொருட்கள், வன்முறை, மனப்பாங்கு வளரும் விதம்: பன்றியைக் கொல்ல, கிணறு தோண்ட, பாறைகளை உடைக்க, ரோடு போட, குவாரிகளில் உபயோகப்படுத்த என பல காரியங்களுங்கு வெடிப்பொருட்கள் எளிதாகக் கிடைக்கிறது என்று தெரிகிறது. ஆகவே, அவ்வாறு வெடிப்பொருட்களை வாங்குபவர்கள் எதற்கு உபயோகிப்பார்கள் என்று தெரியவில்லை. மற்ற வகை வெடிப்பொருட்கள், ரசாயனப் பொருட்கள் எப்படி கிடைக்கின்றன என்று ஏற்கெனவே விளக்கியுள்ளேன்[8]. தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் பரவியுள்ளதால் தான் சிறுவர்களுக்கு அத்தகைய எண்ணம் வருகிறது. கத்தியைப் பார்த்தவுடன் கழுத்தை வெட்ட வேண்டும் என்று யாருக்கும் எண்ணம் வராது. அப்படி வந்தால், அத்தகைய காட்சிகளைப் பார்த்து, மனத்தில் பதிய வைத்துக் கொண்டதாலும், மனம் அதற்கேற்றப்படி பழகிப்போனதாலும் பயமின்றி அத்தகைய மனம் உருவாகி விடுகிறது. இன்றைய திரைப்படங்களிலேயே, வெடிகுண்டுகளை வீசித் தாக்குவது போல, குண்டுகள் வெடிப்பது போன்ற வன்முறைக் காட்சிகளைக் காட்டுகிறார்கள். சிறுவர்கள் விளையாடும் கணினி விளையாட்டுகளில் பெரும்பாலாக துப்பாக்கியை வைத்து சுடுவது, வெடிகுண்டுகளை வீசித் தாக்குவது, குண்டுகள் வெடிப்பது, மனிதர்களை கண்டபடி சுட்டுக் கொல்வது………….என்றுதான் உள்ளன. அவ்வளவு ஏன் சிறுவர்களுக்கு துப்பாக்கி பொம்மைகள் அல்லது பொம்மைத் துப்பாக்கி வாங்கிக் கொடுக்கும் அளவிற்கு பெற்றோர்களே தயாராக உள்ளார்கள். அஹிம்சை பேசும் நாட்டில் தூக்க்குத் தண்டனைத் தேவையா என்று கேட்கும் தமிழ்நாட்டில்[9], முதலில் இத்தகைய எண்ணம் வராமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

வேதபிரகாஷ்

05-11-2011


[2] தினமலர், நெல்லையில்குண்டுவெடிப்பு : மாணவன்காயம், நவம்பர் 03, 2011, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=342812

[6] The Hindu, Boy injured in mysterious blast, Tirunelveli, November 5, 2011

A mysterious explosion near Tenkasi on Thursday evening in which a school boy sustained injuries has triggered suspicion among the police that the explosive material might have been meant for use against senior Bharatiya Janata Party leader L.K. Advani during his Jan Chetna Yatra at Tenkasi, but discarded later.

http://www.thehindu.com/news/cities/Madurai/article2600388.ece

[8] வேதபிரகாஷ், தமிழகத்தில்வெடிகுண்டுதயரிப்பு, வெடிப்பொருட்கள்உபயோகம், வெடிகுண்டுகலாச்சாரம் (2), http://dravidianatheism2.wordpress.com/2011/10/29/bomb-blasts-in-tamilnadu-manufacture-logistics/

[9] இன்று டிவியில் “வீரவாண்டி” படம் ஓடிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன்.