அத்வானியைக் கொல்ல முயற்சி: கைது, கைது இல்லை, சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு, ஆள்கொணர்வு மனு!
அத்வானி கொலை முயற்சி: அத்வானி கொலை முயற்சி வழக்கில் பைப் வெடிகுண்டு வைத்த மதுரை நெல்பேட்டையைச் சேர்ந்த அப்துல்ரகுமான் என்ற அப்துல்லா (26), மற்றும் மதுரை சிம்மக்கல்லை சேர்ந்த இஸ்மத் (22), ஆகிய இருவரையும் சிறப்புப்படை போலீசார் கைது செய்தனர்[1]. இவர்களிடம் இருந்து குண்டு வைக்க பயன்படுத்திய ஆட்டோ ரிக்ஷா, டூவீலரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தலைமறைவாக இருக்கும் மேலும் பலரை தேடி வருகின்றனர். மொபைல் போன் மூலம் அம்பலம்: ஆலம்பட்டி பகுதியில் மொபைல் போன் உரையாடல்களை கண்காணித்த போலீசார், இவர்கள் இருவரையும் கைது செய்தனர். மதுரை மேலூரைச் சேர்ந்த இமாம் அலியின் கூட்டாளிகளான இவர்கள், மோட்டார் சைக்கிளில் வந்து, பாலத்தின் அடியில் குண்டு வைத்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்களிடம் புலன் விசாரணை நடக்கிறது.
Two Islamic fundamentalists — Abdul Rahman alias Abdullah (26) of Nelpettai and Ismath (22) of Simmakkal — said to be sympathisers of extremist Imam Ali, were arrested here on Tuesday in connection with the alleged attempt on BJP leader L K Advani’s life during his visit to the temple town last week. Sources said a third person was detained in rural Thirumangalam late on Tuesday night. A hunt is on for their accomplices[2]. |
இருவர் கைது, மற்றவர் தலைமறைவு: மதுரையில் பழக்கடை வைத்திருக்கும் அப்துல் ரகுமான் (சிக்கந்தர் பாட்சாவின் மகன், நெல்பேட்டை) மற்றும் ஆட்டோ ஓட்டுநர் இஸ்மத் (காஜா ஹுஸைனின் மகன், சிம்மக்கல்) ஆகிய இருவரையும் கைது செய்ததாகத் தெரிவித்த சிறப்புப் புலனாய்வுப் பிரிவு ஏடிஜிபி சேகர்[3], முன்னர் சுட்டுக் கொல்லப்பட்ட இமாம் அலியின் கூட்டாளிகள் இவர்கள் என்றும், அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். இவர்கள் மீது ஏற்கெனவே சிறு சிறு வழக்குகள் உள்ளன. இந்த வழக்கில் மேலும் சிலரை தேடி வருவதாகவும் அவர் தெரிவித்தார்[4].
கேரளாவிற்கு (பெங்களூருக்கு / ஆந்திராவிற்கு) ஏன் தப்பிச் செல்ல வேண்டும்? இதுகுறித்து ஏ.டி.ஜி.பி.,சேகர் கூறுகையில், “இந்த வழக்கில் முதல்கட்டமாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். எத்தனை பேர் சம்பந்தப்பட்டுள்ளனர், சதித்திட்டம் குறித்த முழுமையான தகவல்கள் இரண்டொரு நாளில் தெரியவரும்,” என்றார். இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் இருவர் கேரளாவிற்கு தப்பியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். போலீஸார் ஆவணங்களில் ஏற்கெனவே அத்தகையவர்களின் பட்டியல் உள்ளது[5]. அவர்களை கைது செய்ய சிறப்புபடை போலீசார் கேரள போலீஸ் உதவியை நாடியுள்ளனர். ஆனால் எங்களூர் அல்லது ஆந்திரபிரதேசத்தில் பதுங்கியிருக்கலாம் என சில ஊடகங்கள் கூறுகின்றன[6]. ஆகவே அத்தகைய குற்றங்கள் செய்பவர், குற்றஞ்சாட்டப்படுபவர், குற்றஞ்சாட்டப்பட்டுள்ளாவர் என அனைவரும் இவ்வாறு பதுங்குவது என்பது வாடிக்கையாகயுள்ள்து தெரிகிறது. அதாவது அவ்வாறு அவர்கள் சென்றால், உதவக்கூடியவர்கள், மறைந்துகொள்ள இடங்கள், வேண்டிய வசதிகள் முதலிய ஏற்பாடுகள் உள்ளன என்று தெரிகிறது. இதில் உள்ள அபாயத்தைக் கவனித்து முஸ்லீம் நண்பர்கள் இத்தகைய தீவிரவாதம், பயங்கரவாதம் இன்னும் இருப்பதை, வளர்வதை, வளர்ந்து வருவதை ஆதரிக்கக் கூடாது; அச்செயல்களில் ஈடுபடுபர்களுக்கு ஆதரவு / உதவி செய்யக் கூடாது. இடம்-பொருள்-பணம் கொடுத்து ஊக்குவிக்கக் கூடாது. இந்திய நாட்டு சரித்திரத்தில் முஸ்லீம்கள் ஆண்ட காலத்தில் இந்துக்களுக்கு என்ன சித்திரவதைகள், அவமானங்கள், தீங்குகள், கஷ்டங்கள், என்னவேல்லாம் நேர்ந்துள்ளதன என்பதனை நினைவில் கொண்டு, தேசப்பிரிவினை ஏற்பட்டுக் கூட இந்தியாவிலேயே இருப்போம் என்று முடிவு செய்த முஸ்லீம்கள் தகுந்த நடவடிக்கை எடுத்து இக்கால முஸ்லிம்களை மாற்றவேண்டும். சேர்ந்து வாழ பழகிக்கொள்ளவேண்டும்.
In a breakthrough in the case of pipe bomb that was planted on the scheduled route of BJP leader L.K. Advani, the special investigation team of the CB-CID arrested two persons on Tuesday. The accused were named as Abdul Rahman, 26, son of Sikkander Basha, of Nelpettai in Madurai and Ismath, 22, son of Khaja Hussain, of Simmakkal in Madurai. An official release[7] said the two were arrested for their “involvement in the perpetration of the crime.” Police said Rahman was related to Muslim fundamentalist Imam Ali who was killed in an encounter in Bangalore in September 2002. |
என்கவுண்டர் அச்சமும், ஹேபஸ் கார்பஸ் பெட்டிஷனும்: பா.ஜ.க. மூத்த தலைவர் எல். கே. அத்வானி கொலை முயற்சி வழக்கில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள பக்ருதீனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது[8].
தேடப்பட்டுவரும் குற்றாஞ்சாட்டப்பட்டவரின் நண்பரின் மனு: சென்னை மண்ணடி மூட்டைக்காரன் தெருவை சேர்ந்த எம்.அப்துல்லா தாக்கல் செய்த ஆள் கொணர்வு மனுவில், “நானும், பக்ருதீனும் நண்பர்கள். ஒரு வழக்கு தொடர்பாக சென்னை சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு பிரிவு காவல்துறையினரால் 2003ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டேன். அதே வழக்கில் பக்ருதீன் என்ற போலீஸ் பக்ருதீனும் (35) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அந்த வழக்கு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. உச்ச நீதிமன்றம் அளித்த ஜாமீன் அடிப்படையில் நான் வெளியே வந்துவிட்டேன். இந்த நிலையில், கடந்த 2ஆம் தேதி சென்னை சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாரால் பக்ருதீன் கைது செய்யப்பட்டார். தற்போது அவர்களின் அலுவலகத்தில் பக்ருதீன் சட்டவிரோதமாக அடைக்கப்பட்டுள்ளார். அவரை போலி ‘என்கவுண்ட்டர்’ மூலம் சுட்டுக்கொலை செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்[9].
தேசிய லீக் கட்சி (முஸ்லீம் அரசியல் கட்சி) எழுதிய கடிதம்: “இதுபற்றி நானும், எனது நண்பரும் இந்திய தேசிய லீக் கட்சியின் தமிழ்நாடு பொதுச்செயலாளர் ஜெ.அப்துல் ரகீமும், தமிழக அரசு மற்றும் டி.ஜி.பி.க்கு கடிதம் அனுப்பி பக்ருதீனை உடனடியாக விடுதலை செய்யும்படி கோரினோம். ஆனால் அவர் விடுதலை செய்யப்படவும் இல்லை. இதுவரை மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை. வாழும் உரிமைக்கு எதிராக போலீசார் செயல்பட்டு பக்ருதீனை அடைத்து வைத்துள்ளனர். அதோடு டி.கே.பாசு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டி நெறிமுறைகளும் மீறப்பட்டுள்ளன. எனவே பக்ருதீனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை வெளியே அனுமதிக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்”, என்று மனுவில் கூறியுள்ளார்[10]. இந்த மனு விசாரணைக்கு வந்தது.
போலீஸார் தரப்பில் சொல்லப்பட்டது: போலீஸார் தரப்பில், “பக்ருத்தீன் என்பவர் கைது செய்யப்படவும் இல்லை அல்லது சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்படவுமில்லை. ஆனால், தலைமறைவாகியுள்ளார்[11]. மனுதாரர் வேண்டுமென்றே இத்தகைய மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் கிஞ்சித்தேனும் எந்த ஆதாரமும் இல்லை[12]. அடிப்படையே இல்லாதது, வெறுமையானது, பொய்யானது[13]. ஆகவே தள்ளுபடி செய்யப்படவேண்டும்”. என்று வாதிடப்பட்டது.
நீதிபதிகள் தள்ளூபடி செய்தது: நீதிபதிகள் குறிப்பிட்ட கேள்விகள் கேட்டபோது மனுதாரர் தரப்பில் சரியான பதில் சொல்லப்படவில்லை. பக்ருதீனை போலீசார் கைது செய்ததை மனுதாரர் நேரில் பார்க்கவில்லை. இதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டு, மனுதாரர் குறிப்பிடும் பக்ரூதினை போலீசாரை கைது செய்யவில்லை என்றும் போலீசார் அவரை கைது செய்ய தேடி வருகிறார்கள் என்றும் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் தரப்பில் கூறியதை ஏற்றுக்கொள்கிறோம்[14]. மேலும், பக்ருதீன் கைது செய்யப்பட்டதற்கான ஆதாரம் எதையும் மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யவில்லை. அதனால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் அப்துல்லா தாக்கல் செய்த ஆள் கொணர்வு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்[15]. இப்பட்ரி நீதிமன்றங்களில், உள்ள சட்டங்களின் படி, வழக்குகளைத் தொடுத்து திசைத் திருப்பலாம். ஆனால், குண்டு வைத்தது உண்மை, அத்தகைய தீவிரவாத எண்ணம் உள்ளது உண்மை, அமைதியைக் குலைக்க வேண்டும் என்ற திட்டம் தீட்டியது உண்மை; எல்லாவற்றையும் மறைத்து ஒன்றுமே இல்லை, நடக்கவில்லை என்று சொல்லித் தப்பித்துக் கொண்டால், நடந்தது நடக்கவில்லை என்றாகுமா?
[8]Claiming himself to be a friend of Fakruddin, M Abdulla of Chennai alleged that he was arrested by CB-CID SIT on November 2 and was being kept in “illegal” custody in violation of Article 21 and 22 of the Constitution.
http://news.in.msn.com/national/article.aspx?cp-documentid=5580797
[11] In a counter affidavit in response to a Habeas Corpus plea filed by one M Abdullah, Inspector of CB-CID Madurai unit’s SIT R Krishnarajan said Bakrudeen was neither arrested nor detained illegally by the team as claimed by the petitioner but was absconding.
[12] Abdullah had come up with such “a bald and baseless” allegation only to defame CB-CID, the affidavit claimed.
அண்மைய பின்னூட்டங்கள்