Posted tagged ‘அடிப்படைவாதி’

மயிலாடுதுறையில் நடப்பது என்ன? போலீஸாரை துப்பாக்கிக் காட்டி மிரட்டும் முஸிம்களுக்கு யார் தைரியம் கொடுத்தது? (1)

மே 11, 2022

மயிலாடுதுறையில் நடப்பது என்ன? போலீஸாரை துப்பாக்கிக் காட்டி மிரட்டும் முஸிம்களுக்கு யார் தைரியம் கொடுத்தது?  (1)

19-04-2022 கவர்னருக்கு கருப்புக் கொடி, கொம்புகள் எறிந்தது: 19-04-2022 அன்று தமிழக கவர்னர் மயிலாடுதுறை வந்தபோது, போலீஸார் முன்பே, திக-வகையறாக்கள் கூடி, ஆர்பாட்டம் செய்து, கொம்புகளை வீசி எறிந்தனர். அத்தகைய வன்மம் ஏன், எப்படி, எதற்காக வெளிப்படுகிறது என்பதனை ஆராய வேண்டும். தினம்-தினம் சட்டசபையிலேயே கவர்னர் தேவையில்லை என்று முதலமைச்சரே பேசுவது, மசோதாக்கள் போடுவது என்றெல்லாம் செய்து வரும் போது, மற்றவர்களுக்கும் மரியாதை இல்லாமல் போகும். ஆனால், இவையெல்லாம் பெரிய சட்டமீறல், தேசவிரோதம் ஆகும் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். கவர்னர் பாதுகாப்பு அதிகாரி, தமிழக போலீஸுக்கு நடவடிக்கை எடுக்கும் படி கடிதம் அனுப்பியுள்ளார். அந்நிகழ்ச்சி அமைதியாக மறக்கப் படுகிறது. அதே மயிலாடுதுறையில் போலீஸாரை எதிர்த்து மிரட்டும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் கைது செய்யப் பட்டுள்ளனர். இத்தகைய நிகழ்ச்சிகள் இரண்டு ஆண்டுகளாகத் தொடர்கின்றன. என்.ஐ.ஏ.வும் நடவடிக்கை எடுத்து வருகிறது. விவரங்கள் வெளியே வந்தாலும், தமிழக ஊடகங்கள் இவற்றை அமுக்கப் பார்க்கிறது. முஸ்லிம்கள் என்பதால், திமுக ஆட்சி செய்திகளில் கூட குறைவாகவே வருவது போல கவனித்துக் கொள்கிறது போலும். இத்தகைய, இஸ்லாமிய அடிப்படைவாதத்தை தமிழகத்தில் வளர்ப்பது என்ன நன்மை பயக்கும்?

மார்ச் 2022 – தமிழக முஸ்லிம் கர்நாடக நீதிபதிகளை மிரட்டுவது: ஹிஜாப் வழக்கில் கடந்த மார்ச் 15ம் தேதி தீர்ப்பு வழங்கிய கர்நாடகா உயர்நீதிமன்றம், அரசின் சீருடை சட்டத்திற்கு அனைவரும் உட்பட்டவர்களே என்பதால், ஹிஜாப் அணிவதற்கான தடை உத்தரவு தொடரும் என உத்தரவிட்டது. மேலும்இது தொடர்பான பல்வேறு மனுக்களை கர்நாடகா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.  இந்நிலையில் ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கிய கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி, நீதிபதி கிருஷ்ணா எஸ் தீட்சித் மற்றும் நீதிபதி ஜே எம் காசி ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்தது.  மூன்று நீதிபதிகளுக்கு கொலைமிரட்டல் விடுத்து,  சமூக வலைதளங்களில் பரவிய காணொளி தொடர்பாக, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மீது விதான் சவுதா காவல்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.  இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த ரஹமத்துல்லா என்பரை மதுரையில் இருந்து விசாரணைக்கு கர்நாடகா போலீசார் அழைத்து வந்துள்ளதாக அம்மாநில உள்துறை அமைச்சர் அரகா ஞானேந்திரா தெரிவித்துள்ளார்[1]. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறை ஒத்துழைப்பு அளித்துள்ளதாகவும், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர்  அவரை எட்டு நாட்கள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது என்று அவர் கூறினார்[2]. இதனிடையே கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து, கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளுக்கும் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

21-02-2022 அன்று போலீஸார் ஐந்து முஸ்லிம் இளைஞர்களை கைது செய்தது: முஸ்லிம் இளைஞர்கள் சட்டவிரோதமாக செயல்படுவது திகைப்பாக இருக்கிறது.

  1. மயிலாடுதுறை மாவட்டம், நீடூரைச் சேர்ந்தவர் சாதிக் பாஷா, 38.
  2. அதே மாவட்டத்தில் உள்ள, இலந்தனகுடியைச் சேர்ந்தவர் ஜஹபர் அலி, 58.
  3. இவர்களது கூட்டாளிகள், கோவை முகமது ஆஷிக், 29;
  4. காரைக்கால் முகமது இர்பான், 22;
  5. சென்னை அயனாவரம் ரஹ்மத், 29.

இவர்கள், தமிழகத்தில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி வருவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பிப்., 21 காலை 11:00 மணியளவில், மயிலாடுதுறை ரயில் நிலையம் அருகே, சாதிக் பாஷா மற்றும் அவரது கூட்டாளிகள் சென்ற, ‘ஸ்கார்பியோ’ கறுப்பு நிற காரை, போலீசார் மடக்கினர்[3].  அப்போது, போலீசாரிடம் துப்பாக்கியை காட்டி, அவர்கள் மிரட்டினர்[4]. துப்பாக்கி நீட்டி மிரட்டும் அளவுக்கு அவர்களுக்கு எப்படி தைரியம் கிடைக்கிறது, தயாரானார்கள் என்ற கேள்வி எழுகின்றது. முதலமைச்சருக்கு இவையெல்லாம் தெரியாதா, எப்படி அமைதியாக இருக்கிறார் என்று தெரியவில்லை. பின், ஐந்து பேரும் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களுக்கு பின்னணியில் பயங்கரவாத அமைப்பு இருப்பது பற்றி, மத்திய புலனாய்வு அமைப்பான, ஐ.பி., சார்பில், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ரகசிய தகவல் அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில், தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அப்படியென்றால், அதன் தீவிரத்தை நன்றாக அறிந்து கொள்ளலாம். அந்த அளவுக்கு வன்மத்தை வளர்த்து விட்டது மாநில அரசும், சித்தாந்தமும், தினம்-தினம் மத்திய அரசுக்கு எதிராக பேசி வரும் பேச்சுகளும் காரணம் என்று புரிந்து கொள்ளலாம்.

துப்பாக்கிக் காட்டி போலீஸாரை மிரட்ட தைரியம் எப்படி வந்தது?: தமிழகம் காஷ்மீர் ஆகும் என்றெல்லாம் பேசுவது, அயல்நாட்டில் முஸ்லிம்கள் பாதிப்பு என்றால் இங்கு ஆர்பாட்டம் செய்வது, அந்நிய தேசவிரோத இயக்கங்களுக்கு ஆதரவாக பேசுவது-எழுதுவது-பிரச்சாரம் செய்வது என்றெல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன. இவற்றை தீவிரவாதம், அடிப்படைவாதம், தேசவிரோதம்  என்றெல்லாம் பார்க்காமல், அதெல்லாம் முஸ்லிம்கள் பிரச்சினை, யாரும் தலையிடக் கூடாது, தலையிட்டால், விமர்சித்தால் மிரட்டப் படுவார்கள், தாக்கப் படுவார்கள் போன்ற மனோபாவத்தை உண்டாக்குவது தான், போலீஸாரை துப்பாக்கிக் காட்டி மிரட்டியது.

முகமது ஆசிக் கைது 27-02-2021: மயிலாடுதுறை அருகே ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினருடன் தொடர்பில் இருந்த கோவை இளைஞரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர்[5].. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 7 இளைஞர்கள், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தலைமை ஏற்றுக்கொண்டு குழுவாக செயல்பட்டு வந்தனர்[6]. இவர்கள் கோவையை சேர்ந்த இந்து மத தலைவர்களை கொலை செய்வதற்காக சதி திட்டம் தீட்டி வந்தனர்[7]. இதுகுறித்து கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கடந்த 2010ஆம் ஆண்டு 7 பேரையும், என்ஐஏ அதிகாரிகள் கைதுசெய்த நிலையில், பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்[8]. இந்த வழக்கு, பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், வழக்கில் முதல் குற்றவாளியான முகமது ஆசிக் என்பவர் பிணையில் வெளியானது[9] முதல் தலைமறைவாக இருந்து வந்தார். வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கலான நிலையில் விசாரணைக்கு ஆஜராகும்படி நீதிமன்றம் ஆசிக்கிற்கு சம்மன் அனுப்பி இருந்தது[10]. எனினும் அவர் விசாரணை ஆஜராகாததால், அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டம் நீடுரில் கோழிக்கடையில் பதுங்கியிருந்த ஆசிக்கை 27-02-2021 அன்று நள்ளிரவு என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். தொடர்ந்து, அவர் விசாரணைக்காக சென்னை அழைத்துச் சென்றனர்.

© வேதபிரகாஷ்

11-05-2022


[1] மாலைமலர், ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல்தமிழகத்தை சேர்ந்தவர் கைது, பதிவு: மார்ச் 23, 2022 06:07 IST; மாற்றம்: மார்ச் 24, 2022 01:27 IST.

[2] https://www.maalaimalar.com/news/national/2022/03/23060702/3604832/A-man-from-Tamil-Nadu-who-had-allegedly-issued-death.vpf

[3] தினமலர், .எஸ்., ஆதரவாளர்களுக்கு நிதியுதவி: பின்னணியை விசாரிக்கிறது என்..., Updated : மே 11, 2022  09:01 |  Added : மே 11, 2022  09:00

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=3027224

[5] டாப்.தமிழ்.நியூஸ், மயிலாடுதுறை அருகே .எஸ்..எஸ் வழக்கில் தொடர்புடைய இளைஞர் கைதுஎன்.. அதிகாரிகள் நடவடிக்கை!,  By NEWSDESK Fri, 28 May 2021 2:22:36 PM.

[6]https://www.toptamilnews.com/districts/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/youth-arrested-in-connection-with-isis-case-near/cid4926959.htm

தினமணி, .எஸ். அமைப்புடன் தொடா்புஜாமீனில் வெளிவந்து தலைமறைவானஇளைஞா் மயிலாடுதுறை அருகே கைது, By DIN  |   Published On : 28th May 2021 11:13 PM  |   Last Updated : 28th May 2021 11:13 PM

[7] தினமணி, .எஸ். அமைப்புடன் தொடா்புஜாமீனில் வெளிவந்து தலைமறைவானஇளைஞா் மயிலாடுதுறை அருகே கைது, By DIN  |   Published On : 28th May 2021 11:13 PM  |   Last Updated : 28th May 2021 11:13 PM

[8] https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/2021/may/28/the-youth-who-came-out-on-bail-in-connection-with-the-organization-was-arrested-near-mayiladuthurai-3631508.html

[9] இ.டிவி.பாரத், தலைமறைவு குற்றவாளி கைதுதேசிய புலனாய்வு முகமை அதிரடி, Published on: May 28, 2021, 3:31 PM IST

[10] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/nagapattinam/the-culprit-involved-in-the-isis-case-has-been-arrested/tamil-nadu20210528153155208

கோயம்புத்தூரில் ஶ்ரீலங்கை குண்டுவெடிப்பு, ஐசிஎஸ் முதலிய தொடர்புகள் – கோவையில் தமிழக போலீஸார் மற்றும் என்.ஐ.ஏ விசாரணை [4]

ஜூன் 15, 2019

கோயம்புத்தூரில் ஶ்ரீலங்கை குண்டுவெடிப்பு, ஐசிஎஸ் முதலிய தொடர்புகள்கோவையில் தமிழக போலீஸார் மற்றும் என்.ஐ.ஏ விசாரணை [4]

NIA raid- Dinamalar coverage

ஒரு பக்கம் முகமதியர் எதிர்ப்பு தெரிவித்தனர் என்றும், இன்னொரு பக்கம்இது குறித்து  பேச விருப்பம் இல்லைஎன்றும் செய்திகள்[1] : அசாருதீன் வசிக்கின்ற பகுதிகளில் உள்ள நபர்களோ, அவரது வீட்டில் உள்ளவர்களோ இது குறித்து [இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தினை போலவே தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகம் மற்றும் கேரளாவில் நிகழ்த்த வேண்டும் எனும் நோக்கில் செயல்படுவதாகவும், அப்பாவி இளைஞர்களை மூளைச் சலவை செய்து குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்த்த ஆள் திரட்டும் வேளைகளில் ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டு இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது] பேச விருப்பமில்லை என்று தெரிவிக்கின்றனர்[2]. பயங்கரவாத தடுப்பு சட்டம், பிரிவு 18, 18பி,38,39 அதாவது தீவிரவாத இயங்கங்களோடு தொடர்பில் இருப்பது , உதவி செய்வது, பயங்கரவாத கருத்துக்களை பரப்புவது போன்ற குற்றங்கள் அடிப்படையில் மொகமது அசாருதீன் கைது செய்யப்பட்டதாக தேசிய புலனாய்வுத் துறை குறிப்பிடுகின்றது. அசாருதீன் வசிக்கின்ற பகுதிகளில் உள்ள நபர்களோ, அவரது வீட்டில் உள்ளவர்களோ இது குறித்து பேச விருப்பமில்லை என்று தெரிவிக்கின்றனர். பயங்கரவாத தடுப்பு சட்டம், பிரிவு 18, 18பி,38,39 அதாவது தீவிரவாத இயங்கங்களோடு தொடர்பில் இருப்பது, உதவி செய்வது, பயங்கரவாத கருத்துக்களை பரப்புவது போன்ற குற்றங்கள் அடிப்படையில் மொகமது அசாருதீன் கைது செய்யப்பட்டதாக தேசிய புலனாய்வுத் துறை குறிப்பிடுகின்றது.

NIA raid- Karumbuk kadai

பாரூஹ் கொலைவழக்கில் சம்பந்தம் கொண்டவர்கள் முதலியன[3]: விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட மற்ற நபர்களில் ஒருவரான 26 வயதுடைய அக்ரம் சிந்தா குனியமுத்தூரில் வசித்து வருகின்றார். கோவையில் நகைக்கடை வைத்துள்ளதாக கூறப்படும் இந்த நபரின் மீது முன்னதாக கொலைக் குற்றச்சாட்டு உள்ளது. கோவையில் இறை மறுப்பு கொள்கை கொண்ட பாரூஹ் என்பவர், கடவுள் மறுப்பு கொள்கைகளை சமூக வலைதளத்தில் பரப்பி வருகின்றார் என அவர் கொலை செய்யப்பட்டார். அந்த கொலை வழக்கில் அக்ரம் சிந்தா, சம்பந்தப்பட்டு இருப்பதாக வழக்கு உள்ளது. விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட இப்ராகிம், ஐஎஸ்ஐஎஸ் காசர்கோடு வழக்கில் கைது செய்யப்பட்ட ரியாஸ் அபுபக்கரோடு நெருக்கமாக இருந்துள்ளதாக தேசிய புலானய்வு துறை குறிப்பிடுகின்றது. ரியாஸ் அபுபக்கர் தேசிய புலனாய்வுத் துறையினரால் விசாரணை செய்தபோதுதான் சஹ்ரான் ஹாஷிமின் உரைகளை ஒரு வருடத்திற்கும் மேலாக கேட்டு வருவதாக கூறியதோடு, கேரளாவில் தற்கொலை குண்டுவெடிப்புக்கு தான் தயாராக இருந்ததாக ஒப்புக்கொண்டதால் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வுத் துறை முன்னரே செய்தி வெளியிட்டு இருந்தது. அந்த நபரோடு இப்ராகிம் நெருக்கமாக இருந்துள்ளதாலும், அசாருதீன் குழுவில் இருந்ததாலும் இவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்[4].

NIA raid- Anbu Nagar Uggadam

இந்த சோதனையில் தேசிய புலனாய்வுத் துறை அதிகாரிகள் ஈடுபடவில்லை மாறாக மாநகர காவல் துறையின் நுண்ணறிவுப் பிரிவினர் இந்த சோதனைகளை நடத்தினர்[5]: இந்த சோதனையில் தேசிய புலனாய்வுத் துறை அதிகாரிகள் ஈடுபடவில்லை மாறாக மாநகர காவல் துறையின் நுண்ணறிவுப் பிரிவினர் இந்த சோதனைகளை நடத்தினர். ஆக, நாளைக்கு மோடி சொல்லித்தான், நடத்தப் பட்டது என்று சொல்லமாட்டார்கள் என்று நம்பலாம்! மேலும், இவர்கள் இலங்கையில் குண்டு வெடிப்புகளை நிகழ்த்திய சஹ்ரான் ஹாஷிமின் செயல்களை புகழ்ந்து வருவதாக தகவல் கிடைத்ததாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, இந்தப்பகுதிகளில் சோதனைகள் நடைபெற்று கொண்டிருப்பதால் இங்குள்ள மக்கள் இதுகுறித்து பேசத் தயங்குகின்றனர். பெயர் வெளியிட விரும்பாத நபர் ஒருவர், இந்த நபர்கள் யாரும் பெரிய பொருளாதார பின்புலம் கொண்டவர்கள் இல்லை. இதற்கு முன்பு, இவர்கள் யாரும் பெரிய அளவில் வெளியில் செயல்பட்டதாகவும் தெரியவில்லை. இதுபோன்ற நபர்கள் சமூக ஊடகங்களில் செய்யப்படுவது அவர்களின் குடும்பங்களுக்குக்கூட தெரியாது, விசாரணைகளால் அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் அச்சமுற்று இருக்கின்றனர் என்றார்[6].

NIA raid- Al Ameen colony

மின்னணு உபகரணங்கள் கைப்பற்றப் பட்டன: கைது செய்யப்படும்போது 14 மொபைல் போன்கள் 29 சிம் கார்டுகள் 10 பேன் டிரைவ்கள் 3 லேப்டாப், ஆறு மெமரி கார்டுகள், 4 கார்ட் டிஸ்குகள் ஒரு இண்டர்நெட் டாங்கில், 13 சிடிகள் / டிவிடி, 300 ஏர் கன் பில்லெட்ஸ்  பல டாக்குமெண்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன[7]. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் சமூக ஜனநாயக கட்சியின் சில துண்டு பிரசுரங்கள் ஸ்கேனரின் கீழ் இருந்தன[8]. மீட்கப்பட்டதன் அடிப்படையில் விசாரணைகள் தொடங்கியுள்ளது.  இந்த வழக்கு மே 30 தேதி கோயம்புத்தூரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 32 வயது முகம்மது அஷாருதீன் மேலும் 5 பேர் தலைமையிலான குழு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் சித்தாந்தத்தை சமூக ஊடகங்களில் பிரசாரம் செய்து இளைஞர்களை  கவர்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

NIA raid- Anbu Nagar, 2nd street, Uggadam

இஸ்லாமிய பிரபாகரன் தேவையில்லை: இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள மோதல் தொடர்ந்தால் மீண்டும் ஒரு முஸ்லிம் பிரபாகரன் உருவாகிவிடுவார் எனவே மக்கள் எச்ரிக்கையுடன் இருக்க வேண்டும் என அந்நாட்டு அதிபர் சிறிசேனா எச்சரித்துள்ளார். ஈஸ்டர் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து இலங்கையில் பல்வேறு மாவட்டங்களில் கடைகள் அடித்து நொறுக்கப்படும், தாக்கப்படும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்தன. வடமேற்கு மாநிலங்களில் உள்ள 4 மாவட்டங்களில் கடைகளையும், மசூதியையும் ஒரு கும்பல் அடித்து நொறுக்கி சேதப்படுத்தியைத் தொடர்ந்து பெரும் வன்முறை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் பிறகு சில நாட்கள் சகஜ நிலை திரும்பியபோதும் ஆங்காங்கே சில இடங்களில் மோதல்கள் நடந்த வண்ணம் இருந்தன. இந்தநிலையில், முல்லைத்தீவு பகுதிக்கு சென்ற அதிபர் சிறிசேனா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது[9]: “நாடு தற்போது பிரிந்து இருப்பது உண்மை தான். இதனை ஏற்றுக் கொள்ளதான் வேண்டும். ஆனால் இது நாட்டுக்கு நல்லதல்ல. அனைத்து சமூக மக்களிடமும் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டிய தேவை தற்போதுள்ளது. மீண்டும் ஒரு முஸ்லிம் பிரபாகரன் பிறப்பதற்கு மக்கள் அனுமதித்து விடக்கூடாது. இது நாட்டுக்கு நல்லதல்ல. நாம் பிரிந்து நின்றால் ஒட்டுமொத்த நாட்டுக்கும் இழப்பு தான். இதில் எந்த மாற்றமும் இல்லை. நாட்டை பற்றி கவலைப்படாமல் சில அரசியல்வாதிகள் வரவுள்ள தேர்தலை மனதில் கொண்டு செயல்படுகின்றனர். மக்கள் அவர்களின் ஆசைகளுக்கு இரையாக வேண்டாம்,” இவ்வாறு அவர் பேசினார்[10].

NIA raid- the background of three

இஸ்லாமிய பிரபாகரன் தமிழகத்திற்கும் ஆபத்துதான்: இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகளில் பெரும்பான்மையானவர்கள் திருகோணமலையைச் சேர்ந்தவர்கள்.இவர்களை மீளக்குடியேற்றுவது மிகமிக அவசியம். இந்தியா தமிழர்கள் மீதான அக்கறையில் மீள்குடியேற்றத்தை நடத்தாவிட்டாலும் தனது சொந்த நலன்களைப் பாதுகாக்க அதனைச் செய்யவேண்டும். இல்லாவிடின் இலங்கையின் கிழக்கில் இருந்து வெடிமருந்துகள் ஏற்றிய மத அடிப்படைவாதத் தற்கொலைக் கொலையாளிகளின் படகுகள் இந்திய கிழக்குக் கரையோரத் தளங்களை, இந்திய கடற்படையை, கப்பல்களைத் தாக்கின என்ற செய்திகள் வர அதிக காலம் எடுக்காது. இந்தியாவின் பாதுகாப்பு மட்டுமல்ல பொருளாதாரமும் கேள்விக்குறியாகிவிடும்.

NIA raid- Karumbuk kadai

குண்டுவெடிப்பு ஜிஹாதிகள் கண்டறியப் பட்டு ஒழிக்கப் படவேண்டும்: கோயம்புத்தூரில் உள்ள முகமதியர்கள் இவ்வாறு தொடர்ந்து பயங்கரவாத தீவிரவாத செயல்களில் திட்டமிட்டு ஈடுபட்டு வருவது மிகவும் திகைப்பாக உள்ளது. கொல்வது என்ற சித்டாந்தத்துடன் தமிழகத்தில் இத்தகைய கூட்டம் தொடர்ந்து வேலை செய்வது நிச்சயமாக மனிதத்தன்மையற்ற தன்மையினை எடுத்துக் காட்டுகிறது. மதத்தின் பெயரால் அவர்களே குண்டு வெடிப்பு மூலம் அல்லது மற்ற தீவிரவாத பயங்கரவாத செயல்களால் கொல்ல வேண்டும் என்ற கொள்கையை இன்றும் செயல்படும் இந்த நம்பிக்கையாளர்கள் நிச்சயமாக ஒரு குரூர மனப்பாங்கு கொண்டவர்களாகத்தான் இருக்க வேண்டும். மனிதர்களை மனிதர்கள் கொல்வதனால் சொர்க்கத்திற்கு போக முடியும் என்ற நம்பிக்கையை வளர்ப்பது ஒரு பெரிய குரூரமான் பைத்தியக்காரத்தனம் போன்றது தான். ஒருவேளை வெறி பிடித்த குரூரக் கொலைக்காரனுக்குக் கூட கொஞ்சம் இரக்கம் இருக்கலாம். ஆனால் தற்கொலை மூலம் மற்றவர்களையும் கொல்லும் எண்ணம் எப்படி மனங்களில் உருவாகும் என்பது ஆச்சரியமாக உள்ளது.

NIA raid- Vincent Road

தற்கொலை ஜிஹாதிகளை வளர்ப்பது, வைத்துக் கொள்வது அபாயகரமானது: ஆகவே தமிழகத்தில் இத்தகைய கூட்டத்தினரை வளர்த்தது, வளர்ப்பது அபாயகரமானது, மனிதர்களுக்கு ஒவ்வாதது. ஆகவே எல்லா நிலைகளிலும் இவர்கள் கண்டறியப்பட்டு அவர்களை தனிமைப்படுத்த வேண்டும் அல்லது சட்டட்தின் முன்னர் கொண்டவரப்பட்டு, முறையாகத் தண்டிக்கப்படவேண்டும். இல்லை அவர்கள் இங்கே வாழ தகுதியற்றவர்கள் என்று கூட தீர்மானிக்கலாம். இன்றைய காலகட்டத்தில் ஏகப்பட்ட பிரச்சினைகள் இருக்கும் நேரத்தில், ஜிஹாத் என்ற சித்தாந்தத்தில் இத்தகைய கொடுமைகளை உண்டாக்குபவர்களை எதிர்கொள்வது. என்பது சாதாரண மக்களால் முடியாத ஒன்று. ஆகவே, முளையிலேயே அவை கிள்ளியெறியப் படவேண்டும்.

© வேதபிரகாஷ்

14-05-2019

IS inked arrested fromTN by NIA 22-05-2019

[1] பிபிசி.தமிழ், கோவையில் கைது செய்யப்பட்டது .எஸ் பயங்கரவாதிகளா? நடந்தது என்ன?, 14 ஜூன் 2019

[2] https://www.bbc.com/tamil/india-48636958

[3] பிபிசி.தமிழ், கோவையில் கைது செய்யப்பட்டது .எஸ் பயங்கரவாதிகளா? நடந்தது என்ன?, 14 ஜூன் 2019

[4] https://www.bbc.com/tamil/india-48636958

[5] பிபிசி.தமிழ், கோவையில் கைது செய்யப்பட்டது .எஸ் பயங்கரவாதிகளா? நடந்தது என்ன?, 14 ஜூன் 2019

[6] https://www.bbc.com/tamil/india-48636958

[7] என்.டி.டிவி.தமிழ், ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தின் மாஸ்டர்மைண்ட் முகம்மது அசாரூதின் கைது, தமிழ்நாடு | Edited by Saroja | Updated: June 13, 2019 12:16 IST

[8] https://www.ndtv.com/tamil/isis-mastermind-with-link-to-sri-lanka-attacker-mohammed-azarudeen-arrested-in-tamil-nadu-2052511

[9] தி.தமிழ்.இந்து, ‘முஸ்லிம் பிரபாகரன் உருவாகி விடுவார்’’ – இலங்கை அதிபர் சிறிசேனா எச்சரிக்கை, Published : 09 Jun 2019 17:10 IST; Updated : 09 Jun 2019 17:10 IST

[10] https://tamil.thehindu.com/world/article27703942.ece

இந்திய முஜாஹிதீன் அமைப்பின் யாசின் பட்கல் கைது பற்றி விமர்சித்த கமால் ஃபரூக் சமாஜ்வாடி கட்சி செயலர் பதவியிலிருந்து நீக்கப்பட்டது ஏன்?

செப்ரெம்பர் 5, 2013

இந்திய முஜாஹிதீன் அமைப்பின் யாசின் பட்கல் கைது பற்றி விமர்சித்த கமால் ஃபரூக் சமாஜ்வாடி கட்சி செயலர் பதவியிலிருந்து நீக்கப்பட்டது ஏன்?

Niaz Ahmad Farooqui, Kamal Faruqui and mahmood Madani

யாசின் பட்கல் முஸ்லிமா, முஜாஹித்தீனா, ஜிஹாதியா, தீவிரவாதியா – யார், அவன் பெயர் அஸதுல்லா அக்தர், ஹட்டி, தானியல், முஹம்மது அஹமது சித்திபாபா அல்லது வேறெது – இப்படி கேள்விகளை எழுப்பும் நோக்கம் என்ன என்ற தலைப்பில் இப்பிரச்சினை அலசப்பட்டது[1].  கமால் ஃபரூக்கின் விஷமத்தனமான பேச்சின் தன்மை எடுத்துக் காட்டப்பட்டது[2]. இவ்விசயத்தில் கர்நாடகா, பீகார், உபி தொடர்புகள் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆதரவு கட்சிகளின் தேர்தல் முடிவுகளை பாதிக்கும் அளவில் சென்று விட்டன[3]. இந்தியாவில் பல இடங்களுக்குச் சென்று வந்துள்ளதில், பலர் உதவிய விஷயங்களும் வெளி வந்தன[4]. ஊடகங்கள் அவனுக்கு உதவும் விதமும் எடுத்துக் கட்டப் பட்டது[5]. இதனால், வேறு வழியில்லாமல், கமால் ஃபரூக்கை செயலர் பதவியில் இருந்து சமாஜ்வாடி கட்சி நீக்கியுள்ளது.

Kamaal farouqi at MSO 2008

கமால் ஃபரூக் நீக்கப் பட்டதன்  பின்னணி: இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதி யாசின் பட்கல் கைது நடவடிக்கை தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்திருந்த கமால் ஃபரூக்கை செயலர் பதவியில் இருந்து சமாஜ்வாடி கட்சி நீக்கியுள்ளது[6]. இந்திய- நேபாள எல்லையில் அண்மையில் இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதி யாசின் பட்கல், கூட்டாளியுடன் கைது செய்யப்பட்டார். இந்தக் கைது நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்திருந்த கமால் ஃபரூக், பட்கலை கைது செய்தது அவர் செய்த குற்றத்தின் அடிப்படையிலா? அவர் இஸ்லாமியர் என்பதற்காக எனக் கேள்வி எழுப்பியிருந்தார்[7]. யாசின் பட்கலுக்கு ஆதரவாக கமால் ஃபரூக் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன[8]. தனது பேச்சின் தன்மையை அறிந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டதாகவும் செய்தி வந்தது[9]. ஆனால், அதற்குள் அவரது பேச்சின் தன்மையினால் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் இவரின் பேச்சு மதநல்லிணக்கத்திற்கு எதிராக உள்ளதாக எழுந்த புகாரின் பேரில், இன்று கட்சி செயலர் பொறுப்பில் இருந்து கமால் ஃபரூக் நீக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது[10].

Kamaal farouqi - Muslim Students Organization - MSO

யாசின் பட்கல்லுக்கு பரிந்து பேசுவது ஏன்?:சமஜ்வாதி கட்சியின் தலைவர் கமால் பரூக்கி என்பவர், “அவன்  தீவிரவாதி  என்றால்  விடக்கூடாது. ஆனால்அவன்  முஸ்லிம்  என்றதால்  மட்டும்  கைது செய்யப் பட்டிருந்தால்,  பிறகு  எச்சரிக்க  வேண்டியுள்ளதுஏனெனில்  அது முஸ்லிம்  சமுதாயத்திற்கு  ஒரு  தவறான சமிஞையை  அனுப்புகிறதுஆகவே  அவன்  கைது செய்யப்பட்டது  குற்றத்தின்  அல்லது  மதத்தின் அடிப்படையிலா  என்பதை  விளக்க  வேண்டும்”,  இப்படி பேசியதும்[11][2], அங்கு மடி-கணினி வாங்க வந்த மாணவர்களுக்கு ஒன்றும் புரியவில்லையாம். உடனே, கூட இருந்த ராம்கோபால் யாதவ், “பட்டகல் ஒரு தீவிரவாதி தான், ஆகவே அவன் அவ்வாறுதான் நடத்தப்படுவான்”, என்றார். பிடிபட்ட தீவிரவாதி முஸ்லிம் என்றதும், மற்றொரு முஸ்லிம், உடனே இஸ்லாத்தைத் தூக்கிப் பிடிப்பது ஏன் என்று தெரியவில்லை. சாதாரண நேரத்தில், “தீவிரவாதிகள் எல்லோரும் முஸ்லீம்கள் என்று குறிப்பிடுவது தவறாகும்”, என்கின்றவர்கள் இப்பொழுது இப்படி பரிந்து கொண்டு பேசுவது அவன் முஸ்லிம் என்பதாலா அல்லது தீவிரவதியாக உள்ள முஸ்லிமுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தாலா?

anti_terrorism_muslim_conference_Islam-means-peace

இஸ்லாமியர்களை இலக்கு வைத்து கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது: இந்திய முஜாஹிதீன் அமைப்பின் யாசின் பட்கல் கைது செய்யப்பட்டுள்ளதை உத்தரப்பிரதேச மாநில ஆளும் சமாஜ்வாடி கட்சி இவ்வாறு விமர்சித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவரான கமால் ஃபரூக் –

  • யாசின் பட்கலை போலீசார் மதத்தின் அடிப்படையில் கைது செய்தனரா?
  • அல்லது குற்றத்தின் தன்மையின் அடிப்படையில் கைது செய்தனரா?

என்பது பற்றி விளக்கம் வேண்டும். அண்மைக்காலமாக இஸ்லாமியர்களை இலக்கு வைத்து கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில்தான் யாசின் பட்கல் கைது நடவடிக்கையும் அமைந்துள்ளது என்று கூறியுள்ளார். பொறுப்பில்லாமல் இவர் இப்படி பேசியுள்ளது முஸ்லிமின் மனப்பாங்கு எப்படியுள்ளது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. முஸ்லிம் இப்படி முஸ்லிமாகவே செயல்படுவதைத்தான் அடிப்படைவாதம், வகுப்புவாதம், இந்தியவிரோதம் என்று எளிதில் அறியப்பட்டாலும், செக்யூலரிஸம் என்ற மாயாஜாலத்தில் மறைத்து விடுவர். சி.என்-ஐ.பி.என், டைம்ஸ்-நௌ, என்.டி-டிவி, ஹெட்லைன்ஸ்-டுடே முதலியவை இதை பெரிது படுத்தாது. கமால் பரூக்கியின் இந்தக் கருத்து அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினாலும்[12] யாரும் அவரை எதிர்க்கப்போவதில்லை, கண்டிக்கப்போவதில்லை. நல்லவேளை, இவரே ஒப்புக் கொண்டு விட்டார், கைது செய்யப்பட்டது யாசின் பட்கல் தான் என்று. ஏனெனில், கைது செய்யப்பட்டது அவனில்லை என்று செய்திகளும் வந்துள்ளன, அவனுடைய வக்கீலும் அவ்வாறே கூறுகிறாராம்!

bhatkal-brothers-riyaz-iqbal

இப்பொழுது நீக்கப் பட்டாலும், வேறு வழியில் உள்ளே கொண்டுவரப்படுவார் என்பது நிச்சயம். ஏனெனில் முல்லாயம் முஸ்லிம்களை வைத்துக் கொண்டுதான், ஆட்சியைப் பிடித்துள்ளார். ஆகவே, பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் அவ்வாறு செய்யமாட்டார்.

 

© வேதபிரகாஷ்

05-09-2013

 

 


[11] Responding to the arrest of the 30-year-old accused, who is wanted in several blast cases, Farooqui had yesterday said, “Is this arrest based on crime or religion?”. “If he is a terrorist, then he should not be spared but if he has been arrested just because he is a Muslim, then caution should be exercised as we don’t want to send a wrong message to the entire community that we are trying to malign the it’s image without a thorough investigation,” he had said.

http://www.business-standard.com/article/politics/sp-distances-itself-from-farooqui-remarks-on-bhatkal-arrest-113083100387_1.html