Posted tagged ‘அக்ரம் கான்’

மொஹம்மது அக்ரம் கான், என்ற பிடோபைல் ஐதராபாதில் கைது செய்யப்பட்டான்!

திசெம்பர் 18, 2015

மொஹம்மது அக்ரம் கான், என்ற பிடோபைல் ஐதராபாதில் கைது செய்யப்பட்டான்!

Akram Khan pedophile arested in Hyderabadநிர்பயா வழக்கில் குற்றவாளியின் பெயரை மறைப்பது ஏன்?: நிர்பயா வழக்கில், கொடூர கற்பழிப்பில் ஈடுபட்டுள்ளவன், சிறுவன், 18 வயதுக்கு கீழானவன் என்று அவன் விடுவிக்கப்படலாம் என்ற செய்தி வந்து கொண்டிருக்கிறது. சட்டப்படி அவன் குற்றம் புரிந்திருந்தாலும், சிறுவன் என்ற முறையில் தப்பித்து விடுவான் என்ற நிலையுள்ளது. மேலும் குறிப்பாக அவன் முஸ்லிம் என்பது ஊடகங்களிலிருந்து அறவே மறைக்கப்படுகின்றன. சில ஊடகங்கள் மறைமுகமாக, அவன் மதத்திற்குத் திரும்பியுள்ளான், தினமும் நான்கு முறை தொழுகை செய்கிறான், தாடி வளர்த்துள்ளான், ரம்ஜான் மாதத்தில் உபவாசம் இருக்கிறான் என்று விளக்குகின்றன[1]. அதாவது, அவன் ஒரு முஸ்லிம் என்பதை வெளியே சொல்வதை தவிர்த்து வருகின்றன. தி இன்டிபென்டென்ட் போன்ற இங்கிலாந்து நாளிதழ் கூட அவன் ஒரு முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்று குறிப்பிடுகிறது வேடிக்கையாக இருக்கிறது[2]. செக்யூலரிஸத்தில் ஊறியுள்ள மற்றவர்களும் இதைப் பற்றி வாய் திறக்கக் காணோம். ஆனால், இப்பொழுது பிடோபைல் விவகாரத்தில், பெயரைக் குறிப்பிட்டு அதிரடியாக செய்திகளை வெளியிட்டாலும், முரண்பாடுகளுடன் உள்ளது வேடிக்கையாக இருக்கிறது.

Mohammed Akram Khan pedophile arrested in Hyderabad - arguing.மொஹம்மது அக்ரம் கான் மனைவியுடன் சண்டை போட்டு வந்தான்: இந்ந்திலையில், ஒரு சிறுமியை பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபடுத்திய ஒருவனைப் பற்றிய செய்தி அது கொண்டிருக்கிறது. ஹைதராபாதில், சுன்னே கி பட்டி, ஜஹானுமா ஏரியாவில், மொஹம்மது அக்ரம் கான் (46) தனது மனைவியுடன் வாழ்ந்து வந்தான். ரியல் எஸ்டேட்டில் ஈடுபட்டிருந்ததால் கணிசமாக சம்பாதித்து வந்தான். மேலும், தனது வீட்டிலேயே, நான்கு குடும்பங்களுக்கு வாடைகைக்கும் விட்டிருந்தான். இது வரை, இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளன. இவனுக்கும், இவனது மனைவிக்கும் அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்தது. இதனால், அவன் தன்னை அடிப்பதாக அவன் மீது புகார் கொடுத்து வழக்கும் [registered 498 a (domestic violence) IPC case against him] பதிவாகியுள்ளது. இதனால், அபவனுடன் சேர்ந்து வாழாமல், அருகிலேயே வேறு வீட்டில் வசிந்து வந்தாள்[3].

Mohammed Akram Khan pedophile arrested in Hyderabadசிசிடிவி வைத்து கண்காணித்த மனைவி: மேலும், அவனுக்கு பெண்களிடம் தொடர்பு இருந்ததாக கணவனின் நடத்தையில் சந்தேகம் பட்டு, அவனுக்குத் தெரியாமல், மனைவி வீட்டில் சிசிடிவி வைத்திருந்தாள்[4]. ஒரு நான்கு வயது பெண்ணை பாலியல் ரீதியில் தாக்கும் போது, அது அவனையும் அறியாமல் பதிவாகியது. ஆறு வயது என்று சில ஊடகங்கள் கூறுகின்றன[5]. அதனைப் பார்க்க முயன்ற போது, தன்னால் முடியாதலால், ஒரு நாள் டெக்னிஸியனைக் கூப்பிட்டு, பதிவாகியுள்ளவற்றைக் காண்பிக்கச் சொன்னபோது, அந்த விவகாரம் தெரிய வந்தது. அச்சிறுமியை கூப்பிடுவது, பேசுவது, சாக்கிலெட் கொடுப்பது, பிறகு தகாத முறையில் செக்ஸில் ஈடுபடுவது என்று எல்லாம் தெரிந்தது[6]. இதையெல்லாம் பார்த்துத் திகைத்து விட்டாள். இருப்பினும், முதலில் இதை மற்றவர்களிடம் சொல்ல தயங்கினாள்[7]. இதனால், வெளியே சொல்ல மறுத்தாள் என்றும் மற்ற ஊடகங்கள் கூறுகின்றன. மற்ற பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகப் பட்டதற்கு கொதித்த அப்பெண், எப்படி ஒரு சிறுமியை பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தியதைப் பார்த்த பிறகும், மறைக்கத் துணிந்தாள் என்பதும் திகைப்பாக இருக்கிறது.

வீடியோ பற்றி வெளியே அறிவித்தது மனைவியா, நண்பனா, விடியோ டெக்னிஸியனா?: போலீஸாரிடம் வீடியோ பற்றி தெரிவிப்பது பற்றி இருவிதமாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த வீடியோவை அவனது நண்பர் நகல் எடுத்ததாகத் தெரிகிறது. இதை அவர் போலீஸீடம் ஒப்படைத்ததால் கைது செய்யப்பட்டதாக, முதலில் செய்தி வந்தது. இறகு, அந்த வீடியோ பதியைப் பார்த்த மனைவியால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு, போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டான் என்றும் செய்தி உள்ளது[8]. ஹைதராபாதில் போலீஸாரார் குற்றவாளிகளைக் கண்காணிப்பதற்காக பல இடங்களில் சிசிடிவிகளைப் பொறுத்தியுள்ளனர். அதுமட்டுமல்லாது, சிசிடிவி டெக்னிஸியன்களுக்கும், குற்றங்கள் எப்படி நடக்கின்றன, அவ்வாறு நடந்தால், எப்படி அறிவது போன்றவற்றைப் பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியபோது, ஒமர் என்ற   சிசிடிவி டெக்னிஸியன் இதைப் பற்றி கூறினான். குறிப்பிட்ட பெண்ணுக்கு உதவும் போது, கண்ட காட்சியை விவரித்தான்[9].

வாதம் புரிந்து கைதான மொஹம்மது அக்ரம் கான்: மேலும் கடந்த ஒரு மாத காலமாக வீட்டுக்கு வராமல், வேறெங்கேயோ தங்கியிருந்தான். போலீஸார் அவனை பிடித்து விசாரித்தபோது, தான் ஒரு பிடோபைல் என்பதனை ஒப்புக்கொண்டான். ஆனால், முதலில் தன் மீது எந்த குற்றமும் இல்லை, அந்த சிறுமிதான், மிகவும் அருகில் வந்தாள்[10], அதை கேட்டாள் என்றெல்லாம் வாதம் புரிந்தான். விடியோவில் இவன் வாதிப்பது வேடிக்கையாக இருந்தது. ஒருவேளை, நிர்பயா குற்றவாளியான அவனைப் போலவே தான் ஒரு முஸ்லிம் என்ற ரீதியில் இவன் அவ்வாறு வாதித்தானா என்ற எண்ணம் அதனால் எழுகின்றது. ஆனால், வீடியோ பதிவில் அவனது செயல் அப்பட்டமாகத் தெரிந்ததால், போலீஸார் நடவடிக்கையில் இறங்கினர்[11]. ஹைதராபாதில், சுன்னே கி பட்டி, ஜஹானுமா ஏரியாவில், இவன் அவ்வாறு ஈடுபட்டபோது, சிசிடிவி மூலமாக பார்த்தபோது பிடிபட்டான். இதனால், இந்திய குற்றவியல் சட்டப் பிரிவுகள் 377 (unnatural offence), 363  (punishment for kidnapping), 366, 419, [Section 377, Section 363, Section 366, Section 419 of IPC] மற்றும்நிர்பயா சட்டம் பிரிவு 534 (A) (1) (i)  [534 (A) (1) (i) of Nirbhaya Act], மற்றும் பிரிவு 6 பொகோசோ சட்டம் [Section 6 of POCSO (Protection of Children from Sexual Offenses) Act] முதலிவற்றின் கீழ் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டான்[12].

© வேதபிரகாஷ்

18-12-2015

[1] According to the report, counselors and officers at the facility say that the man has reformed and is a model inmate. He has turned to religion, offering namaz 5 times a day, growing a beard as well as keeping the fast during the period of Ramzan.

http://www.dnaindia.com/india/report-nirbhaya-case-religious-juvenile-unwilling-to-leave-reform-home-2103589

[2] The juvenile, who belongs to a Muslim family that lives near the town of Islam Nagar,…………….

http://www.independent.co.uk/news/world/asia/juvenile-in-delhi-gang-rape-and-murder-case-pleads-not-guilty-to-charges-8515369.html

[3]  Times of India, Businessman subjects minor girl to unnatural sexual abuse, Srinath Vudali,TNN | Dec 17, 2015, 11.18 PM IST.

[4] http://www.ndtv.com/hyderabad-news/man-caught-on-cctv-abusing-minor-girl-in-hyderabad-1256320

[5] http://www.abplive.in/crime/46-year-old-man-caught-on-cctv-abusing-minor-girl-arrested-261760

[6] To the shock of the technician, Akram has been abusing the four year old through unnatural sex just beyond anyone’s imagination. He has been luring the victim by giving her chocolate. Surprisingly, the wife also kept quite by not alert the police,” Deputy Commissioner of police (South Zone) V Satyanarayana told TOI. The victim is a neighbour to the accused and he is also accused of being in touch with other woman.

http://timesofindia.indiatimes.com/city/hyderabad/Businessman-subjects-minor-girl-to-unnatural-sexual-abuse/articleshow/50224559.cms

[7] http://www.sakshipost.com/index.php/news/politics/69910-man-caught.html?psource=Feature

[8] http://www.abplive.in/crime/46-year-old-man-caught-on-cctv-abusing-minor-girl-arrested-261760

[9] Later, the two watched the footage and a shocked wife chose to not report about it. However, the incident came into light when the police in the southern zone as part of community policing, set up CCTV at various places and conducted an an awareness programme for CCTV technicians. During the awareness program, Omar narrated about Akram’s incident

http://www.sakshipost.com/index.php/news/politics/69910-man-caught.html?psource=Feature

[10] http://www.newkerala.com/news/2015/fullnews-163740.html

[11] http://www.ibnlive.com/news/india/hyderabad-man-accused-of-sexually-assaulting-four-year-old-girl-blames-the-child-for-the-crime-1178612.html?utm_source=IBNLive_Article_From_This_Section_Widget&utm_medium=clicks&utm_campaign=ibnlive_article_page

[12] http://www.thehansindia.com/posts/index/2015-12-18/Wife-catches-hubby-raping-minor-193868