Archive for the ‘IED’ category

தீவிரவாத-பயங்கரவாத தடுப்பு விஷயத்தில் சோனியா அரசு தயங்குவது ஏன்?

பிப்ரவரி 23, 2013

தீவிரவாத-பயங்கரவாத தடுப்பு விஷயத்தில் சோனியா அரசு தயங்குவது ஏன்?

Afzal-Hyderabad-Kasab-nexus

ஷிண்டே ஏன் இப்படி இருக்கிறார்?: உள்துறை அமைச்சகம் கூறுவதிலிருந்து, உள்துறை அமைச்சர் பலமுறை முன்னுக்கு முரணாக பேசுவது, அவர் ஒன்று தமது துறையினைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறார் அல்லது அவரை யாரோ சுயமாக இயங்குவதற்கு தடையாக உள்ளனர் அல்லது பொம்மை மாதிரி ஆட்டிவைக்கின்றனர். கற்பழிப்பு சட்ட மசோதா விஷயத்தில் முழுக்க-முழுக்க சிதம்பரமே செயல்பட்டு இவர் ஓரங்கட்டப்பட்டது, அந்த நீதிபதி சொன்னதிலிருந்தும், சோனியவே அவரிடத்தில் மன்னிப்புக் கேட்டதிலிருந்தும் தெள்ளத்தெளிவானது. ஆகவே, தனது அமைச்சகம் இந்திய முஜாஹித்தீனின் கைவேலைத் தெரிகிறது என்றாலும், இவர் ஏதோ பொதுவாகத்தான் பேசி வருகிறார். லோக் சபா மற்றும் ராஜ்ய சபாக்களில் அவர் வாசித்த அறிக்கை ஒரு சடங்கு போன்று இருந்தது. சம்பந்தப்பட்டத் துறைகள், பாதுகாப்பு நிறுவன கள் முதலியவற்றின் பெயர்களைக் கூட சரியாக உச்சரிக்க முடியாமல் தடுமாறினார். வெடி குண்டு வெடித்ததும் ஏன் ஐதராபாத் செல்லவில்லை என்று கேட்டதிற்கு டிக்கெட் கிடைத்தல் செல்வேன், பாதுபகாப்பு விஷயமாக செல்லவில்லை என்றேல்லாம் உளறிக்கொட்டினார்[1]. வெளிப்படையாகத் தெரியும் தீவிரவாதத்தை, பயங்கரவாதத்தை கண்டிக்க, தடுக்க, அடைலளம் காட்டக் கூட்டத் தயங்குவது நன்றாகவே தெரிகின்றது.

Hyderabad blasts - locations with time

குண்டு வெடித்த இடங்கள், நேரங்கள்

தடயங்கள் குறிப்பாகக் காட்டினாலும் ஏன் நடவடிக்கை எடுக்கத் தயங்குகின்றனர்?: தடயத்துறை வல்லுனர்கள் பரிசோதித்து விட்டு, அம்மோனியம் நைட்ரேட், யூரியா, பெட்ரோல் முதலியவை உபயோகப்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்தனர்[2]. அதுமட்டுமல்லாது, மூன்று சந்தேகிக்கப்படும் நபர்கள் உத்திரபிரதேசம், பீஹார், ஜார்கெண்ட் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்ததும் போலீசார், தேசிய புலனாய்வுத்துறைக்கு உதவ தயாராகினர். ஐதராபாதிலேயே, ஒரு லாட்ஜில் தங்கி திட்டம் வகுத்ததையும் தெரிந்து கொண்டனர்[3].

IED - cycle bombs placed - locations

ஐ.ஈ.டி. விவரங்கள்

கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப் பட்டவன் எப்படி உலா வருகிறான்?: ரியாஸ் பட்டகல் என்பவன் பாகிஸ்தானிலிருந்து ஜிஹாதிகளை இந்தியாவில் இயக்கி வருகிறான் என்று வெளிப்படையாக செய்திகள் வந்துள்ளன. தடை செய்யப்பட்ட இயக்கங்கள் வெவ்வேறு பெயர்களில் இயங்கி வருகின்றன மற்றும் அதே அங்கத்தினர்கள் அவற்றில் உள்ளனர் என்றும் தெரிந்துள்ளனர். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. அவர்களை கண்காணிப்பதும் இல்லை. கள்ளநோட்டு விவகாரத்தில் வங்காளத்தில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப் பட்ட யாஸின் பட்டகல் தான் இப்பொழுது இந்தியாவில் செயல்படுகிறான், அவனது  உறவினன் ரியாஸ் பாகிஸ்தானில் உட்கார்ந்து கொண்டு ஆட்டுவிக்கிறான். கல்காத்தாவில் கைது செய்யப்பட்டு, ஆலிப்பூர் ஜெயிலில் இருந்த இவன் வெளியே வந்து இப்பொழுது குண்டுகள் வைத்துக் கொலை செய்கிறான்[4]. ஆனால், இந்தியா ஒன்றும் செய்வதில்லை. அதாவது இப்பொழுதைய சோனியா ஆட்சியாளர்கள் “சட்டப்படி செய்கிறோம்” என்று பாட்டிப்பாடி காலந்தள்ளி வருகின்றனர்.

CCTV images pointing to the suspects

சைக்கிளில் வந்தவர்கள் – குண்டு வைத்தவர்களா?

கள்ளநோட்டு கும்பலும், ஜிஹாதிகளும், போலீசாரும்: ஜிஹாதி கள்ள நோட்டு கும்பல், இந்தியா முழுவதும் தாராளமாக செயல் பட்டு வருகிறது. பலமுறை இவர்கள் எல்லா மாநிலங்களிலும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இருப்பினும், அவர்களது பின்னணி, அவர்களது விவரங்கள் புகைப்படங்கள் முதலியன இந்தியா முழுவதுமாக காவல்துறை, பாதுபாப்புத் துறை முதலியோருக்குக் கிடைக்கும் வகையில் விநியோகப்படுவதில்லை. இதனால், ஒரு மாநிலத்தில் குற்றம் செய்து விட்டு, மற்ர மாநிலங்க:உக்குச் சென்ரு விடுகின்றனர். அல்லது அண்டை நாடுகளான, நேபாளம், பங்களாதேசம், பாகிஸ்தான் என்று சுற்றி வருகின்றனர். துபாயில் ஜாலியாக அனுபவித்து விட்டு, இந்தியாவில் குரூரக் குற்றங்களை, கொலைகளை செய்து வருகின்றனர். இந்த கோணத்தில் தான் காஷ்மீர் விஷயமும் வருகின்றது. காஷ்மீரத்தை மையமாக வைத்துக் கொண்டு இந்த தீவிரவாத-பயங்கரவாத கும்பல்கள் ஊடுறுவி வருகின்றன. அங்கு அவர்கள் “சுதந்திரப் போராளிகள்” என்று உலா வருகின்றனர்.

IM-email-2010-1

இஃதிய முஜாஹித்தீனின் ஈ-மெயில்

மாலைநேரத்தில், கோவிலுக்குப் பக்கத்தில் குண்டுகள் வெடிப்பது ஏன்?: பெர்ம்பாலான ஜிஹாதி வெடிகுண்டுகள் மாலை நேரத்தில் தான் கூட்டமுள்ல பொது இடங்களில் மற்றும் கோவிலுகுப் பக்கத்தில் வெடித்துள்ளன. குறிப்பாக தீபாவளி நேரத்தில். புமின இடமான வாரணாசி போன்ற இடத்டிலும் வெடித்துள்ளன. ஆகவே, இது இந்துக்களுக்கு எதிரானது என்று வெளிப்படையாகவே தெரிகின்றது. இந்திய முஜாஹித்தீனும் இதனை முன்னர் ஈ-மெயில்களில் வெளிப்படையாகவே பதிவு செய்துள்ளனர். ஹாவிஸ் சையதும் வெளிப்படையாகவே பேசிவருகிறான். பிறகு, ஏன் சோனியா அரசு மெத்தனம் காட்டுகிறது?

Blasts taken place 2006-2013

ஆப்கானிஸ்தான் தாலிபான்கள், பாகிஸ்தான் தீவிரவாதிகள், காஷ்மீர பயங்கரவாதிகள் இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டால், இந்தியா என்ன செடய்யும்?: நேட்டோப் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற தீர்மானித்தாகி விட்டது[5]. இதை இந்தியா எதிர்த்தாலும், அமெரிக்கா கேட்பதாக இல்லை[6]. நேட்டோப் படை வெளியேற-வெளியேற[7] தாலிபான் மற்ற ஜிஹாதிகள் முழுவதுமாக சுதந்திரமாகி விடுவார்கள். அவர்களைத் தட்டிக் கேட்க யாரும் இருக்க மாட்டார்கள்[8]. குறிப்பாக இந்தியாவைத் தாக்குவோம் என்று அலையும் ஜிஹாதிகள் துணிச்சல் பெறுவார்கள். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் முதலியவற்றை ஆட்டிப் படைப்பார்கள். பாகிஸ்தான் எல்லை வழியாக ஊடுருவி இந்தியாவிற்குள் நுழையக் கூடும்[9]. ஆக வரும் ஆண்டுகளில் இத்தகைய குண்டு வெடிப்புகள் இன்னும் அதிகமாகும் என்று ராணுவ வல்லுனர்கள் எடுத்துக் காட்டுகின்றனர்[10]. காஷ்மீரத்தில் இன்னும் கிளர்ச்சிகள், போராட்டங்கள் அதிகமாகும். அதனை ஊக்குவித்து, அந்த ஜிஹாதிகள் இந்தியாவிற்குள் வருவார்கள், குண்டுகளை வெடிப்பார்கள் அப்பொழுது அவர்களை எப்படி இந்தியா எதிர்கொள்ளும்? அவர்களை சமாளிக்க என்ன யுக்தியை, பலத்தை வைத்துக் கொண்டுள்ளது என்றெல்லாம் அவர்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

Key players in the blasts

இவர்களை பிடிக்க முடியாதா?

வேதபிரகாஷ்

23-02-2013


[1] Explaining why he didn’t reach Hyderabad soon after the blasts took place, Shinde said in the Rajya Sabha that it was for the security reasons that he decided not to leave immediately. “If VIPs go there (blast sites) then police have to concentrate on securing the VIPs which is not right. VIPs should not be visiting the spot of such incidents, police should be given freedom to carry out investigation and gather evidences,” he said.

[2]  Initial forensic samples from blast sites indicate use of ammonium nitrate, urea and petrol. The investigators are probing three specific names as suspected by Hyderabad police. One suspect belongs to Uttar Pradesh, second from Bihar and third from Jharkhand. The police are helping NIA on suspected link to a January 18 raid on a Hyderabad lodge from where a guest staying under a false name escaped hours before the raid. The Hyderabad police are treating this as one of the key leads.

[3] The police are helping NIA on suspected link to a January 18 raid on a Hyderabad lodge from where a guest staying under a false name escaped hours before the raid. The Hyderabad police are treating this as one of the key leads.

[4] Mohammed Ahmed Siddibapa Mohammed Zarrar alias Yasin Bhatkal, who is said to be heading the operations of Indian Mujahideen in India, has dodged the bumbling intelligence agencies on at least three occasions. He was first arrested and jailed in Kolkata’s Alipore jail between December 2009 and February 2010 in a case of fake currency seizure.

Read more: http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2283048/Indian-Mujahideen-head-jailed-2009-got-bail-cops-did-know-terror-links.html#ixzz2LjIERYiR

[5] NATO’s plan is to shift full responsibility to Afghan forces for security across the country by the middle of next year and then withdraw most of the alliance’s 130,000 combat troops by the end of 2014, Rasmussen said.

[6] India is one of the most vocal supporters of continued engagement and has given Afghanistan more than $2 billion since the US-led invasion in 2001 overthrew the Taliban regime, which sheltered virulently anti-Indian militants.

http://www.infowars.com/india-fears-for-afghanistan-after-nato-withdrawal/

[9] The security agencies fear that such forces may resurface and India may become one of their targets. Most of the forces operating from Nepal can go back to Afghanistan and unless the situation is kept under check with proper international and regional cooperation, the problem could become immense for India.

[10] Once NATO forces pull out, several splinter groups will try to take over control of the troubled nation and this could lead to immense instability in the region, which could be fatal to India.

http://www.rediff.com/news/report/natos-afghan-pull-out-may-prove-costly-for-india/20121015.htm

வெடிகுண்டுகளும் ஜிஹாதிகளின் தயாரிப்பும்: கத்திகளினின்று நவீனமாகியுள்ள யுத்தத் தந்திரங்கள்!

பிப்ரவரி 23, 2013

வெடிகுண்டுகளும் ஜிஹாதிகளின் தயாரிப்பும்: கத்திகளினின்று நவீனமாகியுள்ள யுத்தத் தந்திரங்கள்!

Hyderabad-blast-2013-IM

சரித்திரத்தை அறியாத இந்தியர்கள்: சரித்திரத்தை சரியாக இந்தியர்கள் அறிந்து கொள்ளாததாலும், தவறாக எழுதப்பட்டுள்ள சரித்திரத்தைப் படித்தே தமது அறிவை வளர்த்துள்ளதாலும், இந்தியர்களுக்கு உண்மைகள் நிறையவே தெரியாமல் உள்ளன[1]. இன்று தீவிரவாதத்தை-பயங்கரவாதத்தை யாதொரு மதத்துடனும் இணக்கலாகாது என்று ஆவேசமாகப் பேசி ஆர்பாட்டம் செய்து வருகின்றனர், வற்புறுத்துகின்றனர்[2]. அத்தகைய ஆர்பாட்டங்கள், போராட்டங்களே பார்ப்பவர்களுக்கு அச்சத்தை ஊட்டுவதாக உள்ளது. அந்நிலையில் உண்மையைச் சொன்னால் கூட கோபித்துக் கொள்வார்களோ என்ற நிலையும் ஏற்பட்டுள்ளது. அதனால், நமக்கு ஏன் வம்பு என்று ஒதுங்கியும் இருக்கின்றனர். இப்படி மூளைசலவை செய்யப்பட்டும், மூளை மழுங்கியும் இந்தியர்கள் மீதுதான் – ராணுவ வீரர்கள் முதல் பாமர மக்கள் வரை – இத்தகைய தாக்குதல்கள் நடைப் பெற்று வருகின்றன.

IM-IED-Jihad-terror

உண்மையை மறைப்பவர்கள், மறுப்பவர்கள்: ஓட்டு வங்கி அரசியலில் பிழைக்கும் அரசியல் கட்சிகள் தெரிந்தும் உண்மைகளைப் பற்றி பேசவே பயப்படுகின்றன. ஊடகங்களை உபயோகப்படுத்திக் கொண்டு முன்னுக்கு முரணான செய்திகளை தந்தும், தேவையில்லாத விவாதங்களை ஒலி-ஒளிபரப்பியும், சாதாரண மக்களை ஏமாற்றி வருகின்றனர். உயிர்களை இழந்தவரிகளின் உறவினர்கள் தவிக்கும் போது, டிவியில் தாம் தோன்றலாம் என்ற எண்ணத்துடன், விளம்பர மோகத்துடனும், மெழுகு வர்த்தி ஏற்றி வரும் கூட்டமும் பெருகி வருகிறது[3]. ஆனால், எப்படி தீவிரவாதத்தை-பயங்கரவாத ஜிஹாதிகள் கத்தியிலிருந்து, பீரங்கி, துப்பாக்கி, வெடிகுண்டு என்று மாறி-மாறி தங்களது போர்களை நடத்தி வருகின்றனர் என்று அறியாமல் இந்தியர்கள் உள்ளதுதான் வருத்தப்பட வேண்டிய விஷயமாக உள்ளது.

21 Indian Mujahideen men, accused in various serial bomb blast cases, being taken to the Maharashtra Control of Organised Crime Act court in Mumbai on 17-02-2009

ஐக்கிய ஜிஹாத் கவுன்சில் பின்னணியில் உள்ளதா?: ஐக்கிய ஜிஹாத் கவுன்சில் [the United Jehad Council (UJC)] என்ற தீவிரவாத அமைப்புதான் ஐதராபாத் வெடிகுண்டு வெடிப்புகளுக்குக் காரணம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஜதமைத்-உல்-முஜாஹித்தீன், ஜைஸ்-உல்-மொஹம்மது, மற்றும் அல்- பதர் என்ற மூன்று பயங்கரவாத ஜிஹாதி குழுக்கள் பிப்ரவரி 13ம் தேதி கூடிப்பேசி, பழிவாங்கும் விதமாக இந்த குண்டுவெடிப்புகளைச் செய்துள்ளதாகத் தெரிகிறது[4].

bhatkal-brothers-riyaz-iqbal

ஐந்து மறைமுகத்தாக்குதல் குழுக்கள் இந்த தில்குஷ் தொடர் குண்டு வெடிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். ஐதராபாதிலிருந்தே அதற்கான வெடிப்பொருட்கள் தருவிக்கப்பட்டிருக்கின்றன. தேசிய புலனாய்வு ஏஜென்ஸி இதன் விஷயமாக பீஹாருக்குச் சென்று விசாரிப்பதாகத் தெரிகிறது[5].

Hyderabad-IM-Suspects

ஒரு கிலோ வெடிப்பொருள் உபயோகப்படுத்தியுள்ளனர். சிகப்பு மற்றும் பழுப்புந்நிற திரவங்களும் காணப்பட்டன. தாமதித்து வெடிக்கும் கடிகாரம் கொண்ட சாதனமும் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது[6].

நவீன உள்ளே வெடித்து சிதறும் குண்டுகள் தயாரிக்கும் விதம்[7]: மூன்று விதமான வெடிகுண்டுகள்:

  1. சிறிய அளவில் பாக்கெட்டுகள் போன்ற உருவமுடையவை[8] (Package-Type Improvised Explosive Devices (IEDs).
  1. வண்டிகளில் எடுத்து வந்து மோதி வெடிக்கும் வகை[9] [Vehicle Borne IEDs (VBIEDs)].
  1. தற்கொலை / மனித வெடிகுண்டுகள்[10] [Suicide Bombs].

இத்தகைய குண்டுகளை ஜிஹாதிகள் தாராளமாக உபயோகித்து வருவது, நடந்துள்ள வெடிகுண்டு தீவிரவாத-பயங்கரவாத நிகழ்ச்சிகளினின்று தெரிந்து கொள்ளலாம். 150 மீட்டர் இடைவெளி வைத்து பைக்குகள் உள்ள இடத்தில் வைத்திருப்பதால், அவை வெடிக்கும் போது, அதன் விளைவால் பக்கத்தில் உள்ள பைக்குகளின் பெட்ரோல் டேங்குகள் வெடித்து, தீப்பிழம்பை உருவாக்கும். கூர்மையான பொருருட்கள் 30 அடி வரை இருக்கும் மக்களை தாக்கி பாதிக்கும்[11].

ied-cutout01

According to sources, terrorists used over one kg of ammonium nitrate — 400gm in one and 700gm in another — and packed them in aluminum containers with sharpnels. Sources, however, said not too many shrapnels were found from the spot. “Either few shrapnels were used or they were lost in the melee that followed the incident. A timer device, which could be a clock or a cellphone, is suspected to have been used in the circuit, while the charge to the detonator was given using a .3 volt or .9 volt battery. It’s a classic IED used by terror groups,” said an official from the National Bomb Data Centre[12]. ஒரு கிலோ அம்மோனியம் நைட்ரேட் – 400 கிராம் ஒன்றில், 700 கிராம் மற்றொன்றில் – பெட்ரோல் மற்றும் கூர்மையான ஆணிகள், பால்பேரிங்குகள் வைத்து, அலுமீனிய டப்பாக்களில் அடைத்து, அவை வெடிப்பதற்காக, செல்போன் அல்லது நேரத்திற்கு வெடிப்பதற்கான மின்னணு சாதனம் இணைக்கப்பட்டது. வெடிப்பதற்கான சாதனம் .3 volt or .9 volt பாட்டரியுடன் இணைக்கப்பட்டது. இத்தகைய தயாரிப்பு முந்தைய “இந்திய முஜாஹித்தீன்” தயாரிப்புக்களை ஒத்துள்ளது.

அம்மோனியம் நைட்ரேட் உரப்பொருளாக எளிதில் கடைகளில் விற்பக்கப்படுகின்றன. இதனை 94:6 என்ற விகிதத்தில் ஏதாவது ஒரு எளிதில் எரியும் தன்மைக் கொண்ட திரவத்துடன் கலந்தால், அது வெடிகுண்டு தயாரிக்கும் பொருளாகி விடும்[13]. அமெரிக்காவில் அம்மோனியம் நைட்ரேட் தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேற்படி அவற்றைத் தயாரித்து, சைக்கிள்களில் வைத்து விட்டுச் சென்றால், யாருக்கும் சந்தேகமே வராது என்று திட்டமிட்டு, இந்த ஜிஹாதிகள் உபயோகப்படுத்தி வருகின்றனர்[14].

தப்பிப் பிழைத்தவன் சந்தேகத்தில் உள்ளான்: அப்துல் வாசிப் மிர்ஜா (Abdul Wasif Mirza of Kala Pathar) ஆடைகளை விற்றுவரும் நபர் மறுபடியும் வெடிகுண்டில் காயமடைந்துள்ளது சோகமான கதையென்றே சொல்லலாம், ஏனெனில், கடந்த 2007 குண்டு வெடிப்பில் தனது காலை இழந்தார்[15]. இரண்டு குண்டு வெடிப்பிலும் அந்த இடத்தில் இருந்துள்ளதாலும், தப்பித்துப் பிழைத்துள்ளதாலும், காலாபத்தர் என்ற ஏழு கி..மீ தூரத்திலிருந்து அங்கு டீ குடிக்க வந்தேன் என்று சொல்வதாலும் போலீசார் அவனை சந்தேகிப்பதாகத் தெரிகிறது[16].

 

வேதபிரகாஷ்

23-02-2013


 


[1] “வந்தார்கள் வென்றார்கள்” இப்பொழுது எழுதப்பட்டால், எப்படி எழுதப்படும் என்று யோசிக்கும் போதே உண்மை தெரிகிறது. நிச்சயமாக அந்த எழுத்தாளர் எழுத துணிவிருக்காது என்றே தெரிகிறது.

[2] விஜயும், கமல் ஹஸனும் சந்தோஷமாக இருப்பார்களா அல்லது மற்றொருத் திரைப்படம் எடுக்க துணிவைப் பெறுவார்களா என்றும் தெரியவில்லை.

[3] இதனை ஐதராபாத் விஷயத்தில் ஊடகங்களே ஒப்புக் கொண்டது வியப்பாக இருந்தது.

[4] Sources say that the United Jehad Council (UJC)could be behind the blast. UJC, comprising of militant outfits like Jamiat-ul-Mujahideen (JuM), Jaish-e-Mohammed (JeM) and Al Badr, met on February 13 to plan revenge on India following the execution of Parliament attack accused Afzal Guru.

http://zeenews.india.com/news/andhra-pradesh/live-hyderabad-blasts-united-jehad-council-maybe-behind-the-operation_830723.html

[5] Sources informed that 5 sleeper cells were involved in carrying out the twin blasts in Dilsukh Nagar. The explosive used in the blast was bought in Hyderabad itself and a team of NIA officials will soon head to Darbhanga (Bihar) in search of clues, sources added.

[6] Reports say over 1 kg explosive was used in each bomb in Hyderabad. Also, red and grey liquid was found after the blasts and timer was used to carry out the dastardly incident.

[13] It is easy to put together an explosive using ammonium nitrate, which is even available in the market as fertiliser. All that is needed is to mix it with fuel oil in the ratio 94:6.

http://www.indianexpress.com/news/need-for-checks-on-ammonium-nitrate/1078444/