Archive for the ‘முகமது ஷானு’ category

பேஸ்புக் மூலம் பல பெண்களிடம் பழகி, பாலியல் பலாத்காரம் செய்து, மிரட்டி, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை பறித்தது!

பிப்ரவரி 4, 2015

பேஸ்புக் மூலம் பல பெண்களிடம் பழகி, பாலியல் பலாத்காரம் செய்து, மிரட்டி, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை பறித்தது!

With-FacebookCheated-and-deprived-women-jewelryFake_தினத்தந்தி

With-FacebookCheated-and-deprived-women-jewelryFake_தினத்தந்தி

நகை திருட்டு புகார் என்று ஆரம்பித்த விவகாரம்: சேலம் உள்பட பல இடங்களில் ‘’பேஸ்புக்’ போலி கணக்கில், டாக்டர் போல் நடித்து, பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்தவனை போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்து, 40 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்[1], என்று செய்தி வந்துள்ளன. 03-02-2015 அன்று இச்செய்தி டிவிசெனல்களில் காட்டப்பட்டது. சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் பிரபல வக்கீல் சகோதரர்கள் கூட்டுக்குடும்பமாக வசிக்கின்றனர். அவர்கள் தங்க நகைகளை தங்கள் தாயாரிடம் கொடுத்து வைத்திருந்தனர். இதில் தம்பி குடும்பத்தினரின் நகைகள் அப்படியே இருக்க, அண்ணன் குடும்பத்தினரின் நகைகள் 60 சவரனுக்கு மேல் காணாமல்போனது, அதிர்ச்சியைக் கொடுத்தது. இதுகுறித்து அந்த வக்கீல் குடும்பத்தினர் குரோம்பேட்டை போலீசில் புகார் செய்தனர்.  இவ்வாறு இப்பிரச்சினை “நகைத்திருட்டு” என்று ஆரம்பித்தது.

Facebook love - Islamic way

Facebook love – Islamic way

போலி டாக்டரிடம் சிக்கிக்கொண்ட வக்கீல் குடும்பத்துப் பெண்[2]: போலீசார் வக்கீல் வீட்டிற்கு சென்று விசாரித்தபோது, வக்கீலின் மகள்தான் நகையை எடுத்து வாலிபர் ஒருவரிடம் கொடுத்ததாக தெரிவித்தார். அதாவது, தன்னுடைய தோழி ஒருவருக்கு ‘பேஸ் புக்’ மூலம் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்க்கும் டாக்டர் முகமது ஷானு என்பவர் பழக்கமானார். இவர், தனக்கு கேரளாவில்  மந்திரவாதி ஒருவரை தெரியும். அவரிடம் நகைகளை கொடுத்து பூஜை செய்தால், குடும்ப பிரச்னைகள் தீர்ந்துவிடும் என கூறியுள்ளார்.  குடும்பத்தில் அப்படி என்ன பிரச்சினைகள் என்றும் தெரியவில்லை. வக்கீல்களால் சாதிக்க முடியாதத்தை மந்திரவாதி எப்படி சாதிப்பார் என்றும் தெரியவில்லை. முஸ்லிம்களுக்கு மந்திர-தந்திரங்களில் நம்பிக்கை உண்டா-இல்லையா என்றும் புரியவில்லை[3]. அதை நம்பிய வழக்கறிஞரின் மகள், வீட்டில் உள்ள நகைகளை கொஞ்சம் கொஞ்சமாக முகமது சானுவிடம் கொடுத்துள்ளார். தோழி மூலம் வக்கீல் குடும்பத்தில் நடக்கும் சில பிரச்சினைகளுக்கு தீர்வுகாண நகைகளை கேரளாவில் பூஜை செய்து கொண்டுவருவதாக கூறி வாங்கியுள்ளார். ஆனால், அவர்  நகைகளை திருப்பி தரவில்லை[4]. அதன் பின்னர் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என தெரிவித்தார்.

பல பெண்களிடம் பழகி, பாலியல் பலாத்காரம் செய்து, மிரட்டி, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை பறித்தது

பல பெண்களிடம் பழகி, பாலியல் பலாத்காரம் செய்து, மிரட்டி, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை பறித்தது

போலி டாக்டர் மலையாள மாந்தீரிகம் செய்வேன் என்று நகைகளைப் பெற்றது: மாந்தீரகம் செய்ய ஏன் முஸ்லிம் பெண் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று தெரியவில்லை. மேலும், மந்திர-தந்திர வேலைகள் செய்து விட்டு எப்படி நகைகளைத் திருப்பிக் கொடுக்கப்படும் என்பதும் தெரியவில்லை. இதை பெற்றோரிடம் மறைக்கவே வீட்டில் இருந்த நகை கொள்ளையடிக்கப்பட்டதாக நாடகமாடியது தெரிந்தது, என்று போலீசாருக்குத் தெரிந்தது. இதனால் “பேஸ்புக்” விவகாரங்களை ஆராய ஆரம்பித்தனர். இது தொடர்பாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின்பேரில், 2 தனிப்படை அமைக்கப்பட்டது. ஜிப்மர் மருத்துவமனையில் விசாரித்தபோது அதுபோல அங்கு யாரும் பணியாற்றவில்லை என தெரியவந்தது. போலீசார் முகமது ஷானுவின் செல்போன் நம்பரை வைத்து அவர் யார்? என்ற விவரங்களை சேகரித்தபோது மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தது.

பேஸ்புக் மூலம் பல பெண்களிடம் பழகி, பாலியல் பலாத்காரம் செய்து, மிரட்டி, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை பறித்தது

பேஸ்புக் மூலம் பல பெண்களிடம் பழகி, பாலியல் பலாத்காரம் செய்து, மிரட்டி, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை பறித்தது

பேஸ்புக் மூலம் ஏமாற்றி பெண்களுடன் உல்லாசம்[5]: முகமது ஷானுவின் உண்மையான பெயர் ரகுமத்துல்லா (வயது 27). அவர் விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் பகுதியை சேர்ந்த அசன்அலி என்பவரது மகன் என்றும், 10–ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர் எனவும் தெரியவந்தது. “பேஸ்புக்” தொடர்புகளை “சைபர்-கிரைம்” மூலம் கண்காணிக்கப்பட்டது. அவருடைய ‘பேஸ்புக்’ பக்கத்தில் யாராவது அவரை தொடர்பு கொள்கிறார்களா? என போலீசார் இரவு பகலாக கண்காணித்து வந்தனர். அப்போது டாக்டர் ஷானு என்ற பெயரில் ரகுமத்துல்லா சென்னை, சேலம், கன்னியாகுமரி, பெங்களூரு, திருநெல்வேலி என பல பகுதிகளிலும் பேஸ்புக் மூலம் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தது தெரியவந்தது. டாக்டர் என கூறியதால் பல இளம்பெண்கள் அவருடன் தொடர்பு கொண்டுள்ளனர். இதில் எளிதில் ஏமாறுபவர்களை தேர்வு செய்து அந்த பெண்ணுடன் செல்போனில் பேசி பழகி வந்துள்ளார். இதில் ஏமாறும் பெண்களுடன் உல்லாசமாக சுற்றிவிட்டு, கிடைக்கும் நகைகளை சுருட்டிக்கொண்டு அதை விற்று உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளார். எப்படி, அப்படி இளம் பெண்கள் எளிதாக ஏமாறுகிறார்கள் என்றும் தெரியவில்லை.

பெண்களிடம் பழகி, பாலியல் பலாத்காரம் செய்து, மிரட்டி, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை பறிப்பு

பெண்களிடம் பழகி, பாலியல் பலாத்காரம் செய்து, மிரட்டி, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை பறிப்பு

பேஸ்புக் பெண் நண்பர் போலி டாக்டரை ஓட்டலுக்கு அழைத்தது: அவரது பேஸ்புக்கை தொடர்ந்து கண்காணித்தபோது, தற்போது ஒரு இளம்பெண், அவருடன் தொடர்பில் இருப்பது தெரிந்தது. அந்த பெண்ணை சந்தித்த தனிப்படை போலீசார், ரகுமத்துல்லா பற்றிய விபரங்களை கூறியதும் அந்த பெண் அதிர்ச்சியடைந்தார். தன்னைக் காதலிப்பதாகத்தான் “பேஸ்புக்கில்” உரையாடி போன் நம்பர் முதலியவற்றை அவன்வாங்கியுள்ளதாகத் தெரிவித்தாள். இதனால், தொடர்ந்து ரகுமதுல்லாவிடம் சந்தேகம் வராதது போல பேசி அவரை வரவழைக்க அந்த பெண்ணிடம் போலீசார் அறிவுறுத்தினர். அதன்படி அந்த பெண், குரோம்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சில நாட்களுக்கு முன் ரகமதுல்லாவை வரவழைத்தார். அப்போது, அங்கு மாறு வேடத்தில் இருந்த தனிப்படை போலீசார், அவரை சுற்றி வளைத்து பிடித்தனர்[6].

போலி டாக்டரின் காம வலையில் சிக்கிய பேஸ்புக் நண்பிகள்: ரகமத்துல்லாவிடம் விசாரணை செய்தபோது, அவன் உண்மையினை ஒப்புக்கொண்டுள்ளான். இதுபற்றி போலீசார் கூறியதாவது, “இவர், டாக்டர் சானு என்ற  பெயரில் சென்னை, சேலம், கன்னியாகுமரி, பெங்களூர், திருநெல்வேலி என பல பகுதிகளிலும் பேஸ்புக் மூலம் பல பெண்களை நண்பர்களாக்கி  உள்ளார். தன்னை டாக்டர் என காட்டிக்கொண்டதால், பலர் அவருடன் நட்பு வட்டாரத்தில் இணைந்துள்ளனர்[7]. இதில் யார் எளிதில் ஏமாறுவார் என்பதை அறிந்து அந்த பெண்ணின் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு, அவர்களிடம் டாக்டர் போலவே நடித்து  பழகி வந்துள்ளார். இதில் ஏமாறும் பெண்களிடம் நகைகளை வாங்கி கொண்டு அதை விற்று உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளார். இவரிடம் ஏமாந்த  பெண்கள் போலீசில் புகார் செய்யாமல் இருந்ததால் இதுவரை போலீசில் சிக்கவில்லை”, என தெரிவித்தனர்.

 

போலி டாக்டர் கைது: இவரிடம் ஏமாந்த பெண்கள் அவமானம் காரணமாக போலீசில் புகார் செய்யாமல் இருந்ததால் தீராத விளையாட்டு பிள்ளையாய் தன்னுடைய லீலைகளை தொடர்ந்துள்ளார், என்று ஒரு நாளிதழ் கூறுகிறது. அப்படியென்றால், பாதிக்கப் பட்ட பெண்கள் எப்படி தங்களது குற்றவுணர்வை மறைத்துக் கொள்கின்றனர், பின்விளைவுகளை சரிசெய்து கொள்கின்றனர் என்பதும் வியப்புகுறிகளாக உள்ளன. ரகுமத்துல்லாவை கைது செய்த போலீசார், அவரை தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் சுமார் 40 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். பேஸ்புக் மூலம் இளம்பெண்கள் அறிமுகம் இல்லாத நபர்களுடன் தொடர்பு கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், அறிமுகத்தை செய்து வைக்கக் கூட்டம் வேலை செய்யும் போது, அவர்களையும் “சைபர் கிரைம்” வலையில் கண்காணிப்பப் படவேண்டும்.

பல பெண்களிடம் பழகி, பாலியல் பலாத்காரம் செய்து, அவர்களை மிரட்டி, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை பறித்தது, தெரியவந்தது[8]: இதில் தான் விவகாரங்கள் அடங்கியுள்ளன என்று தெரிகிறது. இப்பிரச்சினை பொதுவாகவும், இஸ்லாம் நோக்கிலும் ஆராய வேண்டியுள்ளது. பொதுவாக படித்த பெண்கள் ஏமாறுவார்களா என்பது பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது. அப்படி இளம்பெண்கள் எப்படி, ஏன், எவ்விதமாகத் தூண்டப் படுகிறார்கள் என்றும் நோக்கத்தக்கது. குடும்பத்தில் இளம்பெண்கள் மிகவும் கட்டுப்பாட்டோடுத் தான் வளர்க்கப் படுகிறார்கள். இன்றைய சூழ்நிலைகளில், சிறுமிகள், இளம்பெண்கள் முதலியோர் அடுத்த பையன்கள், வாலிபர்களுடன் பேசுவது, பழகுவது முதலியவை படித்த-நாகரிகமான குடும்பங்களில் அனுமதிக்கப் படுகிறது. ஆனால், “நட்பு” என்ற வட்டத்தில் தான் அது அனுமதிகிகப்படுகிறது. இருப்பினும், இணைத்தள விவகாரங்கள் அவர்களை கட்டுக்கடங்காமல் செய்ய தூண்டுகிறது. அதையே தொழிலாகக் கொண்டுள்ளவர்கள் வலைவீசும் போது, இத்தகைய பெண்கள் மாட்டிக் கொள்கிறார்கள் போலும். பழகிய பெண்களிடம் உடனே பாலியல் பலாத்காரம் செய்துவிட முடியாது. அதனால், பழகும் போதே வீடியோ எடுப்பது போன்ற விவகாரங்கள் இருந்தால், அவற்றை வைத்து மிரட்டி அவ்வாறு செய்திருக்க வேண்டும். அதற்குப் பிறகு மிரட்டி நகைகளைப் பறித்தல், முதலியன குற்றவாளிகளின் சாதாரண-வழக்கமான வேலைகள் தாம் என்பது தெரிந்த விசயமே.

© வேதபிரகாஷ்

04-02-2015

[1] தினமலர், ‘பேஸ்புக்கில் டாக்டராக நடித்து பெண்களை சீரழித்தவன் கைது : பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளை, சென்னை, புதன், 04-02-2015, பக்கம்.6.

[2] தினத்தந்தி, சேலம் உள்பட பல இடங்களில்பேஸ்புக்மூலம் பல பெண்களை ஏமாற்றி நகைகளை பறித்த போலி டாக்டர் கைது, பதிவு செய்த நாள்:புதன், பெப்ரவரி 04,2015, 1:50 AM IST; மாற்றம் செய்த நாள்: புதன், பெப்ரவரி 04,2015, 1:50 AM IST;

[3] சமீபத்தில் சவால்கள், அதைப் பற்றிய சுவரொட்டிகள், செய்திகள், வாதங்கள்-விவாதங்கள் எல்லாம் வெளிவந்தன.

https://islamindia.wordpress.com/2014/12/30/muslim-wizards-arrested-for-naked-ritual-performed-and-sexual-harassment/

[4] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=130284

[5] http://www.dailythanthi.com/News/State/2015/02/04015044/With-FacebookCheated-and-deprived-women-jewelryFake.vpf

[6] தினகரன், பேஸ்புக் மூலம் பழகி பெண்களிடம் நகை மோசடி போலி டாக்டர் பிடிபட்டார், சென்னை, 04-02-2015.

[7] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=130284

[8] http://www.dinamalar.com/district_detail.asp?id=1175536