Archive for the ‘எழுப்பும் நோக்கம்’ category

யாசின் பட்கல் முஸ்லிமா, முஜாஹித்தீனா, ஜிஹாதியா, தீவிரவாதியா – யார், அவன் பெயர் அஸதுல்லா அக்தர், ஹட்டி, தானியல், முஹம்மது அஹமது சித்திபாபா அல்லது வேறெது – இப்படி கேள்விகளை எழுப்பும் நோக்கம் என்ன (1)

செப்ரெம்பர் 2, 2013

யாசின் பட்கல் முஸ்லிமா, முஜாஹித்தீனா, ஜிஹாதியா, தீவிரவாதியா – யார், அவன் பெயர் அஸதுல்லா அக்தர், ஹட்டி, தானியல், முஹம்மது அஹமது சித்திபாபா அல்லது வேறெது – இப்படி கேள்விகளை எழுப்பும் நோக்கம் என்ன (1)

Yasin Bhatkal arrestedயாசின் பட்கல்லுக்கு பரிந்து பேசுவது ஏன்?: யாசின் பட்டகல் என்ற தேடப்பட்டு வரும் தீவிரவாதி, பீஹார்-நேபாள எல்லையில் உள்ள ரக்ஸால் என்ற சோதனைச் சாவடியில் 29-08-2013 (வியாழக்கிழமை) அன்று கைது செய்யப்பட்டான்[1]. அவனைப் பற்றி, சமஜ்வாதி கட்சியின் தலைவர் கமால் பரூக்கி என்பவர், “அவன் தீவிரவாதி என்றால் விடக்கூடாது. ஆனால், அவன் முஸ்லிம் என்றதால் மட்டும் கைது செய்யப்பட்டிருந்தால், பிறகு எச்சரிக்க வேண்டியுள்ளது ஏனெனில் அது முஸ்லிம் சமுதாயத்திற்கு ஒரு தவறான சமிஞையை அனுப்புகிறது. ஆகவே அவன் கைது செய்யப்பட்டது குற்றத்தின் அல்லது மதத்தின் அடிப்படையிலா என்பதை விளக்க வேண்டும்”, இப்படி பேசியதும்[2], அங்கு மடி-கணினி வாங்க வந்த மாணவர்களுக்கு ஒன்றும் புரியவில்லையாம். உடனே, கூட இருந்த ராம்கோபால் யாதவ், “பட்டகல் ஒரு தீவிரவாதி தான், ஆகவே அவன் அவ்வாறுதான் நடத்தப்படுவான்”, என்றார். பிடிபட்ட தீவிரவாதி முஸ்லிம் என்றதும், மற்றொரு முஸ்லிம், உடனே இஸ்லாத்தைத் தூக்கிப் பிடிப்பது ஏன் என்று தெரியவில்லை. சாதாரண நேரத்தில், “தீவிரவாதிகள் எல்லோரும் முஸ்லீம்கள் என்று குறிப்பிடுவது தவறாகும்”, என்கின்றவர்கள் இப்பொழுது இப்படி பரிந்து கொண்டு பேசுவது அவன் முஸ்லிம் என்பதாலா அல்லது தீவிரவதியாக உள்ள முஸ்லிமுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தாலா?

Niaz Ahmad Farooqui, Kamal Faruqui and mahmood Madaniஇஸ்லாமியர்களை இலக்கு வைத்து கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகிறது: இந்திய முஜாஹிதீன் அமைப்பின் யாசின் பட்கல் கைது செய்யப்பட்டுள்ளதை உத்தரப்பிரதேச மாநில ஆளும் சமாஜ்வாடி கட்சி இவ்வாறு விமர்சித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவரான கமால் ஃபரூக் –

  • யாசின் பட்கலை போலீசார் மதத்தின் அடிப்படையில் கைது செய்தனரா?
  • அல்லது குற்றத்தின் தன்மையின் அடிப்படையில் கைது செய்தனரா?

என்பது பற்றி விளக்கம் வேண்டும். அண்மைக்காலமாக இஸ்லாமியர்களை இலக்கு வைத்து கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில்தான் யாசின் பட்கல் கைது நடவடிக்கையும் அமைந்துள்ளது என்று கூறியுள்ளார். பொறுப்பில்லாமல் இவர் இப்படி பேசியுள்ளது முஸ்லிமின் மனப்பாங்கு எப்படியுள்ளது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. முஸ்லிம் இப்படி முஸ்லிமாகவே செயல்படுவதைத்தான் அடிப்படைவாதம், வகுப்புவாதம், இந்தியவிரோதம் என்று எளிதில் அறியப்பட்டாலும், செக்யூலரிஸம் என்ற மாயாஜாலத்தில் மறைத்து விடுவர். சி.என்-ஐ.பி.என், டைம்ஸ்-நௌ, என்.டி-டிவி, ஹெட்லைன்ஸ்-டுடே முதலியவை இதை பெரிது படுத்தாது. கமால் பரூக்கியின் இந்தக் கருத்து அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினாலும்[3] யாரும் அவரை எதிர்க்கப்போவதில்லை, கண்டிக்கப்போவதில்லை. நல்லவேளை, இவரே ஒப்புக் கொண்டு விட்டார், கைது செய்யப்பட்டது யாசின் பட்கல் தான் என்று. ஏனெனில், கைது செய்யப்பட்டது அவனில்லை என்று செய்திகளும் வந்துள்ளன, அவனுடைய வக்கீலும் அவ்வாறே கூறுகிறாராம்!

Kamaal farouqi - Muslim Students Organization - MSOசெக்யுலரிஸ முகமூடி அணிந்துள்ள நிதிஷ்குமார் முஸ்லிம் தீவிரவாதி பிடிபட்டதை அமுக்கி வாசிப்பது ஏன்?: ஜனதாதளம் (யுனைடெட்) யாசின் பட்கல் கைது செய்யப்பட்டதற்காகவும், அதற்காக பரிசு கொடுக்கப்பட்டதற்காகவும் எந்த கொண்டாட்டங்களும் கூடாது என்று தீர்மானித்து பின்வங்கியுள்ளதாம்[4]. அதாவது, அப்படி கொண்டாடினால், முஸ்லிம் ஓட்டுகள் கிடைக்காமல் போய்விடுமாம்! உண்மையிலேயே சரத் யாதவ், நிதிஷ்குமார் மற்றும் அத்தகைய செக்யூலரிஸப் புலிகளின் தத்துவம் அறிந்து புல்லரிக்கிறது. மிக விலையுயர்ந்த மீனை பிடித்திருக்கிறோம் என்று போலீஸார் மகிழ்ந்து பூரித்திருக்கும் நிலையில், நிதிஷ்குமார் போலீஸாரைப் பாராட்டக் கூடவில்லை. காரணம் வடக்கு பீஹார் பகுதிகளில் உள்ள முஸ்லிம் ஓட்டுகள் கிடைக்காமல் போய்விடுமோ என்று கவலைப்படுகிறாராம். அதுமட்டுமல்லாது, முதலில் பிஹார் போலீஸார் அவனை கைது செய்யக் கூட மறுத்ததால், என்.ஐ.ஏ மற்றும் உள்துறை அமைச்சகம் தலையீட்டால், அமைதியாக கைது செய்யப்பட்டான். இப்படி பீஹார் அரசியல்வாதிகள் விளையாடுவது ஆபத்தை விளைவிப்பதாகும்.

Kamaal farouqi at MSO 2008ராஜிய முறையில் ஒத்துழைப்பு மறுத்த நிதிஷ்குமார் அரசு: முதலில் மறுத்த பிஹார் போலீஸார், பிறகு என்.ஐ.ஏவுடன் சேர்ந்த கூட்டு “ஆபரேஷன்” என்று யாசின் பட்கல் மற்றும் அஸதுல்லா அக்தர் ரக்சாலிலிருந்து பீஹார் ராணுவ கேம்பிற்கு [Bihar Military Police (BMP) camp] தகுந்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டனர்[5]. மோதிஹரி நீதிமன்றத்தில் மூன்று நாட்களுக்கு “பிரயாண கைது” என்ற ரீதியில் அனுமதி பெற்று வெள்ளிக் கிழமை – 30-08-2013 அன்று சிறப்பு விமானம் மூலம், பாட்னாவிலிருந்து, தில்லிக்குக் கொண்டு வருவதற்குள் ஏகப்பட்ட அரசியல் நாடகம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பீஹாரில் நடந்தது என்பதை ஊடகங்களும் அமுக்கி வாசித்தது, யாரும் மோதிஹர் நீதிமன்றம் வரை சென்று, யாரையிம் பேட்டி காணவில்லை. யாரோ அவர்களுக்கு இட்ட ஆணைக்குக் கட்டுப்பட்டு நடப்பதைப் போல இருந்தது. ஏனெனில் அதே நேரத்தில் ஆசாராம் பாபு கைது விசயத்தில் 24×7 என்ற முறையில் செய்திகளை அறிவித்துக் கொண்டிருந்தார்கள். ஆகவே, ஒன்று நிதிஷ்குமாரே அதனை விரும்பவில்லை அல்லது அவ்வாறு விரும்பாதவர்கள் அவருக்கு ஆணையிட்டுள்ளனர்.

bhatkal-brothers-riyaz-iqbalமிகவும் விலயுயர்ந்த பிடிப்பான யாசின் பட்கல்லின் தீவிரவாத, குண்டுவெடிப்புகளின் விவரங்கள்: யாசின் பட்கலைப் பிடித்தது, மிக விலையுயர்ந்த கைது என்று பாதுபாப்பு, உளவுதுறை, போலீஸ் என்று எல்லோரும் நினைத்து, பாராட்டி வருகின்றனர். ஏனெனில் 2006லிருந்து 2011 வரை கீழ்கண்ட குண்டுவெடிப்புகளுக்குக் காரணமாக யாசின் உள்ளான் என்று கூறுகிறார்கள்:

PRIZED CATCH
India’s most-wanted terrorist Muhammad Ahmed Siddibappa Zarar, alias Yasin Bhatkal, had several identities: Shahrukh, Dr Imran, Sivanand, Asif, Yasin and Mohammed Ashraf.

  • Known for preparing bombs and exploding after planting those on bicycles and scooters, Yasin was the only top operative of the Indian Mujahideen (IM) to stay in India. Others took shelter in Pakistan and elsewhere after the crackdown by the Indian intelligence agencies.
  • The police from six states, including Karnataka and Delhi, are hoping to question Bhatkal in connection with the terror cases.
  • The Mumbai, Hyderabad and Gujarat police are also sending teams to Delhi to interrogate the 30-year-old. The Bangalore city police commissioner, Raghavendra Auradker, said the police would seek Yasin’s custody for questioning in terrorist activities in Bangalore and other places in Karnataka.

Yasin’s suspected involvement in blasts:

  • Ahmedabad, 2008
  • Surat, 2008
  • Jaipur, 2008
  • Delhi, 2008
  • Varanasi, 2010,
  • Chinnaswamy Stadium, Bangalore, 2010
  • German Bakery, 2011, Pune
  • Mumbai, 2011
  • Delhi High Court, 2011
  • Dilsukhnagar, 2013, Hyderabad
  • Bangalore, 2013

 

இந்தியன் முஜாஹிதீன் இயக்கம் மீதான வழக்குகள்2006 மார்ச் 7: வாராணசி குண்டு வெடிப்பு

2006 ஜூலை 11: மும்பை தொடர் குண்டு வெடிப்பு

2007 நவம்பர் 23: வாராணசி, ஃபைசாபாத், லக்னௌ நீதிமன்றங்களில்

நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல்

2007 ஆகஸ்ட் 25: ஹைதராபாத் இரட்டை குண்டு வெடிப்பு சம்பவங்கள்

2008 மே 13: ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பு

2008 ஜூலை 26: ஆமதாபாத் தொடர் குண்டு வெடிப்பு

2010 பிப்ரவரி 13: புணே ஜெர்மன் பேக்கரி வெடிகுண்டு தாக்குதல்

2010 ஏப்ரல் 17: பெங்களூரு சின்னசாமி விளையாட்டரங்க வெடிகுண்டு

தாக்குதல்

2011 ஜூலை 13: மும்பை தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல் சம்பவங்கள்

2011 செப்டம்பர் 7: தில்லி உயர் நீதிமன்ற வளாக வெடிகுண்டு தாக்குதல்

 

இருப்பினும், 2014-தேர்தல் என்ற நிலையில், பீஹார் அரசியல்வாதிகள் இதில் எதையோ மறைக்கப் பார்க்கின்றனர் என்று தெரிகிறது.

bhatkal_dubai-IM-operative-phonecallsவடக்கு பீஹாரில் சாதகமாக உள்ள இடங்கள் பறிபோய் விடும்: வடக்கு பீஹாரில், கணிசமான அளவில் முஸ்லிம்கள் ஓட்டு இருக்கிறது. ஆகவே, யாசின் பட்கல் கைது விவகாரத்தை பெரிது படுத்தினால் முஸ்லிம் ஓட்டு போய்விடும் என்று நிதிஷ்-அரசு பயப்படுகிறதாம். தர்பங்கா, மதுபனி, கதிஹர், பேடியா, புர்னியா, கிருஷ்ணகஞ் முதலிய லோக்சபை சீட்டுகள் பறிபோய்விடும் என்று விசுவாசிகள் எச்சரித்துள்ளார்களாம்[6]. சரி, இதில் யாதாவது உண்மையிருக்கிறாதா என்று பார்த்தால், பீஹாரில் இருக்கும் முஸ்லிம் மதகுருமார்கள் அதாவது, மௌல்வி, மௌலானா, ஹஜ் கமிட்டி தலைவர் போன்றவர்கள், “நாங்கள் தீவிரவாதத்தை எதிர்க்கிறோம். அது எந்த மதத்தைச் சார்ந்ததாக இருந்தாலும் சரி. ஆனால், அதனை இஸ்லாத்துடன் இணைப்பதை நாங்கள் எதிர்க்கிறோம். இதனால், அரசியல் ஆதாயத்திற்கு உபயோகப்படும் என்ற எண்ணத்தை விடவேண்டும்”, என்றும் கூறியுள்ளனர்[7]. அதே நேரத்தில், “இந்திய முஜாஹித்தீன் நடவடிக்கைகள் பற்றி ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்”, என்றும் கூறியுள்ளனர்[8].

  • மௌலானா சையது நிஜாமுத்தீன் – Maulana Syed Nizamuddin, head of Imarat Shariah, one of the most respected seats of Islamic affairs in the country. Maulana Nizamuddin, Octogenarian cleric also the general secretary of the All India Muslim Personal Law Board,
  • மௌலானா சமீம் அஹமது முனாமி – Maulana Shamim Ahmad Munami, head of Khanqah Munamia.
  • மௌலானா அனிசூர் ரஹமான் கஸ்மி – Maulana Anisur Rahman Qasmi, Phulwarisharif-based Imarat Shariah general secretary,Qasmi, also the chairman of Bihar State Haj Committee
  • அப்துல்லாஹ் ஹை – Dr A A Hai, who also organizes religious events at Masjid Abdul Hai,

இப்படி மிகப்பெரிய மௌலானாக்கள், மற்ற பெயர் குறிப்பிட விரும்பாத மௌல்விகள், காஜிக்கள் “ஜிஹாத்” என்பதனை தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்[9]. அதே மாதிரி “முஜாஹித்தீன்” என்பதற்கும் தவறான விளக்கம் கொடுக்கப்படுகிறது. அது இஸ்லாத்திற்கு விரோதமானது, என்றெல்லாம் விளக்கம் கொடுத்தார்கள்.

© வேதபிரகாஷ்

01-09-2013


[2] Responding to the arrest of the 30-year-old accused, who is wanted in several blast cases, Farooqui had yesterday said, “Is this arrest based on crime or religion?”. “If he is a terrorist, then he should not be spared but if he has been arrested just because he is a Muslim, then caution should be exercised as we don’t want to send a wrong message to the entire community that we are trying to malign the it’s image without a thorough investigation,” he had said.

http://www.business-standard.com/article/politics/sp-distances-itself-from-farooqui-remarks-on-bhatkal-arrest-113083100387_1.html

[4] The JD(U) has held back on celebrating the arrest of terror “prize catch” Yasin Bhatkal because of growing concerns that too much of drum-beating could adversely affect its electoral prospects in north Bihar where it is banking on the Muslim votes to see it through.

http://www.telegraphindia.com/1130901/jsp/bihar/story_17295670.jsp

[6] JD(U) strategists had worked out that the split with the BJP would help them get the Muslim votes in north Bihar. But the arrest of Bhatkal and his accomplice Asadullah Akhtar alias Haddi has forced them to rework their calculations for the Muslim-dominated seats in north Bihar — Darbhanga, Madhubani, Katihar, Motihari, Bettiah, Purnea and Kishanganj — ahead of the Lok Sabha election next year.

[7] Other clerics, reacting to slugfest between different political parties over the arrest of Yasin from Bihar-Nepal borders, said political parties should desist from thinking that the terror issue may make or mar their political fortune.

http://timesofindia.indiatimes.com/city/patna/Muslims-hate-terrorism-Indian-Mujahideen-Clerics/articleshow/22195020.cms

[8] The clerics also want that the Centre should come out with a whitepaper on Indian Mujahideen(IM) to enlighten people about this banned organization.

http://timesofindia.indiatimes.com/city/patna/Muslims-hate-terrorism-Indian-Mujahideen-Clerics/articleshow/22195020.cms

[9] Dr A A Hai, who also organizes religious events at Masjid Abdul Hai, said the philosophy of Mujahideen is absolutely misleading and anti-Islamic. Terrorism should be taken as a law and order problem and should not be politicized, he added.

http://timesofindia.indiatimes.com/city/patna/Muslims-hate-terrorism-Indian-Mujahideen-Clerics/articleshow/22195020.cms