Archive for the ‘ஹுஜி’ category

ஜாகிர் நாயக்கின் அடிப்படைவாத இஸ்லாம் பயங்கரவாத-தீவிரவாதம், ஜிஹாதி-பயங்கரவாதங்களை பெருக்கி, முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாதிகளாக்கும் விதம்!

ஜூலை 9, 2016

ஜாகிர் நாயக்கின் அடிப்படைவாத இஸ்லாம் பயங்கரவாத-தீவிரவாதம், ஜிஹாதி-பயங்கரவாதங்களை பெருக்கி, முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாதிகளாக்கும் விதம்!

bangladesh-attack-map-data01-07-2016 கடைசி வெள்ளிக்கிழமை அன்று வந்த ஜிஹாதிதீவிரவாதிகள்: வங்கதேச தலைநகர் டாக்காவில், கடந்த வாரம் ஜூலை.1, 2016 அன்று, “புனித” ரம்ஜான் மாதத்தில் கடைசி வெள்ளிக்கிழமை அன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், ஹோலே ஆரிசன் பேக்கரி சிக்கியது. தூதரங்கள் இருக்கும் அப்பகுதியை ஜிஹாதிகள் தேர்ந்தெடுத்தனர் என்று தெரிகிறது. இரவு, சுமார் 8.45 மணி அளவில் துப்பாக்கிகளோடு உள்ளே “அல்லாஹு அக்பர்” என்று கத்திக் கொண்டே நுழைந்தவர்கள், எல்லோரையும் பிணைகைதிகளாகக் கொண்டனர்[1]. இந்தியர் ஒருவர் உட்பட  22 பேர் பலியானார்கள் – இவர்களில் பெரும்பாலானவர் வெளிநாட்டவர்கள். அவர்களில் –

இத்தாலியர்  .      – 9

ஜப்பானியர்   ..     – 7

வங்காளதேசத்தவர் .– 2

அமெரிக்கர்    ..    – 1

இந்தியர்     .      – 1

போலீஸ்காரர் ….    – 2

தீவிரவாதிகள் முதலில் குரான் வசனங்களை கூறச்சொன்னார்கள். அதாவது, முஸ்லிம்களா இல்லையா என்று அவ்வாறு தீர்மானித்தார்கள் போலும்! சொன்னவர்களை வெளியே விட்டார்கள். மறுத்தவர்களை ஒருவர்-ஒருவராகக் குத்திக் கொலை செய்ய ஆரம்பித்தனர்[2].

The faces of dhaka-assilantsகொல்லப்பட்ட தீவிரவாதிகள்: துப்பாக்கிகளுடன் வந்த ஏழு தீவிரவாதிகளும் சுட்டு கொல்லப்பட்டனர்:

  1. மீர் சமேஷ் மோபேஷ்வர்.
  2. ரோஹன் இம்தியாஸ்.
  3. நிப்ரஸ் இஸ்லாம்.
  4. கைரூல் இஸ்லாம்.
  5. ரிபான்.
  6. சைஃபுல் இஸ்லாம்.

இரண்டு பேர்  பிடிபட்டு கைது செய்யப்பட்டனர். ஐசில் / ஐசிஸ் இத்தாக்குதலுக்கு ஒப்புக்கொண்டது. இரவு முழுவதும், அரசு விரைவு நடவடிக்கை வீஎஅர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை தொடர்ந்து நடந்தது. அடுக்த்த நாள் காலை, சுமார் 7 மணியளவில், உள்ளே நுழைந்து, தீவிரவாத்கள் ஆறுபேரை சுட்டுக் கொன்றது. 13 பேர் விடுவிக்கப்பட்டனர், 20 பிணங்கள் கண்டெடுக்கப்ப்ட்டன. இந்த தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் இரண்டு பேர், மும்பையில் மத போதகர் ஜாகிர் நாயக் பேச்சில் தாங்கள் கவரப்பட்டதாக கூறினர். தீவிரவாதிகளில் ஒருவனான ரோகன் இம்தியாஸை, மும்பையை சேர்ந்த, பிரபல இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சுக்கள் தாக்குதலுக்கு தூண்டியதாக செய்தி வெளியாகியது. பேஸ்புக்கில் ரோகன் இம்தியாஸ், ஜாகீர் நாயக் போதனைகளை பரப்பி வவந்தது அம்பலமானது.

One of the victims killed at Holey Artisan Bakery, Dacca06-07-2016 ரம்ஜான் முடியும் நாளன்று மறுபடியும் தாக்குதல்: 06-07-2016 அன்று வங்கதேசத்தில் மீண்டும் தீவிரவாதிகள் என சந்தேகிக்கும் நபர்கள் தொழுகை நடைபெற்ற இடத்தில் தாக்குதல் நடத்திய நிலையில், ஜாகிர் நாயக்கின் பேச்சுக்களை ஆய்வுசெய்யுமாறு இந்தியாவிற்கு வங்காளதேசம் கோரிக்கை விடுத்து உள்ளது[3]. வங்காளதேச தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஹசானுல் ஹக், கூறுகையில் “ஜாகிர் நாயக், போதனைகள் குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் இல்லை. நாயக்கின் போதனைகள் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது தொடர்பாக விசாரிக்கப்படும். நாங்கள் முழு விவகாரத்தையும் விசாரணை செய்து வருகிறோம்,” என்று கூறியுள்ளார். ஜாகிர் நாயக் பேச்சுக்களை ஆய்வு செய்யுமாறு இந்திய அரசு மற்றும் தகவல்துறை அமைச்சகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது என்றும் ஹக் கூறியுள்ளார்[4]. இது தொடர்பாக அவரது போதனைகளை ஆய்வு செய்ய இந்தியாவிடம் வங்காளதேசம் கேட்டுக் கொண்டு உள்ளது. மத்திய மற்றும் மராட்டிய அரசு இதுதொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்ய போலீசை கேட்டுக் கொண்டு உள்ளது. அவருடைய பேச்சு வீடியோக்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே கடந்த 2012-ம் ஆண்டு ஜாகிர் நாயக் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் கலந்துக் கொண்டதும், மேடையில் இருவரும் ஒன்றாக தோன்றும் விவகாரமும் பெரும் சர்ச்சைக்குள்ளாகியது.

Zakir inspired terrorist in action in Bangladeshஜாகிர் நாயக்கின் தூண்டுதல், ஊக்குவிப்பு, பிரச்சாரம்: இதனையடுத்து, ஜாகிர் நாயக் குறித்த விவாதம் எழுந்தது. இந்நிலையில், மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறுகையில், “ஜாகிர் நாயக் குறித்து அனைத்து விவரங்களையும் மத்திய உள்துறை அமைச்சகம் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது. அவரது பேச்சு ஆட்சேபனைக்குரியது என்றார். மேலும், வங்கதேச தாக்குதல் கண்டனத்திற்குரியது. பயங்கரவாதத்திற்கு எந்த மதமும் கிடையாது. எந்த பகுதியும் கிடையாது. பயங்கரவாதத்திற்கு எதிராக அனைத்து உலக நாடுகளும் ஒன்று சேர வேண்டும்”, என்றார்[5]. இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு சூசகமாக தெரிவித்துள்ளார்[6]. இதற்குள், தில்லி டிவி-செனல்கள் ஜாகிர் நாயக்கைப் பற்றிய செய்திகளை வெளியிட ஆரம்பித்து விட்டது.

Zakir Digvijaya embracing, ...etc September 2012 videoதிக்விஜய சிங்கும், ஜாகிர் நாயக்கும் கட்டிப் பிடித்து மகிழும் நிகழ்ச்சி[7]: ஜாகிர் நாயக்குடன் செப்டம்பர் 2012 வருடத்தைய நிகழ்ச்சியில் ஒன்றாக தோன்றி அமைதிக்கான தூதர் என்று பாராட்டை வழங்கி சர்ச்சையில் சிக்கியுள்ளார் காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங். ஜாகீரை மிக்க மரியாதையும் “ஹுஜூர்” என்று விளிப்பதும், அவர் தான் அமைதியை கொண்டுவருகிறார் என்று பாராட்டுவதும், முஸ்லிம் போல சலாம் அடிப்பதும், கட்டிப்பிடிப்பதும் காட்சிகள் கொண்ட வீடியோ 07-07-2015 வியாழக்கிழமை இணைதளங்களில் உலாவ ஆரம்பித்தது[8]. முதலில் இதற்கு பதில் சொல்ல தப்பிய திக், பிறகு தன்னைக் காத்துக் கொள்ள வழக்கம் போல உளற ஆரம்பித்தார்.  சாத்வி பிரக்யா தாக்குரை ராஜ்நாத் சிங் சந்தித்தது தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளார்.

digvijaya-with-zakir-naik.transfer.transferசமாதான தூதுவர்என்று ஜாகிரை பாராட்டியது: நிகழ்ச்சியில் திக்விஜய் சிங் பேசுகையில் சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்கை “சமாதான தூதர் என்றும் அவரால் இந்தியா ஒன்றாக சமூகங்கள் கொண்டு உதவ முடியும்,” என்றும் கூறியுள்ளார். பயங்கரவாதிகளை ஊக்குவித்ததாக ஜாகிர் நாயக் மீது குற்றச்சாட்டு எழுந்து உள்ளநிலையில் திக்விஜய் சிங் பேச்சு விபரங்கள் பெரும் சர்ச்சையாகி உள்ளது. இதனையடுத்து பயங்கரவாதத்துடன் ஜாகிர் நாயக்கிற்கு தொடர்பு உள்ளது தொடர்பாக ஆவணங்கள் இருப்பின் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறிய திக்விஜய் சிங், விசாரணையை சந்திக்கவும் தயார் என்று கூறினார்[9].  இதனையடுத்து தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாகிய மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் விவகாரத்தை இழுத்து உள்ளார்[10]. இதுதொடர்பாக டுவிட்டரில் தகவல் வெளியிட்டு உள்ள திக்விஜய் சிங், “ஜாகிர் நாயக்குடன் மேடையை பகிர்ந்துக் கொண்ட காரணத்திற்காக நான் விமர்சனத்திற்கு உள்ளாகிஉள்ளேன், ஆனால் ராஜ்நாத் சிங் ஜி குண்டு வெடிப்பு குற்றவாளி பிரக்யா தாகுரை சந்தித்து பேசியது பற்றிய கருத்து என்ன? பிரக்யா தாகுர் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டவர் ஆனால் ஜாகிர் நாயக்கிற்கு எதிராக எந்த ஒரு வழக்கும் உள்ளதா? ஜாகிர் நாயக்குடன் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஜி மேடையை பகிர்ந்துக் கொண்டது தொடர்பான கருத்து என்ன?,” என்று கேள்விகளை எழுப்பியுள்ளார்.

© வேதபிரகாஷ்

09-07-2016

[1] ISIS terrorists shouted ‘Allahu Akbar’ as they hacked to death 20 foreign tourists in restaurant in Bangladesh – but spared those who could recite the Koran – before armoured troops moved in.By MIA DE GRAAF FOR DAILYMAIL.COM  and IMOGEN CALDERWOOD FOR MAILONLINE and AGENCIES

PUBLISHED: 17:01 GMT, 1 July 2016 | UPDATED: 15:40 GMT, 2 July 2016

[2] http://www.dailymail.co.uk/news/article-3670353/Gunmen-attack-restaurant-Dhakas-diplomatic-quarter-police-witness.html

[3] தமிழ்.ஒன்.இந்தியா, தீவிரவாதிகளை உருவாக்குகிறதா ஜாகிர் நாயக் போதனை..? இந்தியாவை ஆய்வு செய்ய சொல்கிறது வங்கதேசம், By: Veera Kumar, Published: Thursday, July 7, 2016, 15:30 [IST].

[4] http://tamil.oneindia.com/news/international/bangladesh-asks-india-examine-zakir-naik-s-sermons-257595.html

[5] தினமலர், ஜாகிர் நாயக் மீது நடவடிக்கை: வெங்கையா சூசகம், பதிவுசெய்த நாள். ஜூலை.7, 2016.18.01

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1559285

[7] Published on Jul 7, 2016, A video has emerged of the Congress veteran, Digvijay Singh sharing the stage with Zakir Naik who inspired terrorists with his vitriolic speeches. In the video from Semptember 2012, Digvijay Singh ; https://www.youtube.com/watch?v=lMLgC0fkZbI

[8] As Naik came under the scanner, Congress leader Digivjaya Singh was in the BJP’s line of fire after a 2012 video, showing him share a dais with the televangelist at an event to promote communal harmony, surfaced on Thursday 07-07-2016.

http://www.thehindu.com/news/national/mumbai-police-to-probe-preacher-zakir-naiks-speeches-devendra-fadnavis/article8819992.ece

[9] தினத்தந்தி, ஜாகிர் நாயக் விவகாரம்: பிரக்யா தாக்குரை ராஜ்நாத் சிங் சந்தித்தது தொடர்பாக திக்விஜய் சிங் கேள்வி,பதிவு செய்த நாள்: வெள்ளி, ஜூலை 08,2016, 2:36 PM IST; மாற்றம் செய்த நாள்: வெள்ளி, ஜூலை 08,2016, 2:36 PM IST

[10] http://www.dailythanthi.com/News/India/2016/07/08143637/Zakir-Naik-row-What-about-Rajnath-Singh-meeting-Pragya.vpf

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (10)

நவம்பர் 19, 2014

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (10)

huji Bangaladesh

huji Bangaladesh

என்.. (NIA) மற்றும் ஆர்..பி (RAB)சேர்ந்து வேலை செய்ய திட்டம்: இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படுகிற ஷேக் கவுசர், யூசுப் என்னும் இரண்டு பேர் உள்பட 12 பேர் தலைமறைவாக உள்ளனர். ஷேக் கவுசர், யூசுப் இவ்விருவரும் வங்காளதேச பிரஜைகள் என்பதால், என்.ஐஏ – தேசிய புலனாய்வு ஏஜென்சி படையினர் வங்காள தேசத்திற்கு சென்று விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். அதன்படியே, தேசிய புலனாய்வு பிரிவு மற்றும் மேற்குவங்க போலீஸ் அதிகாரிகள் நவம்பர் 9 அல்லது 10-ம் தேதியில் வங்காளதேசம் செல்வதாக உள்ளது. இருநாடுகளின் புலனாய்வு குழுக்கள் [the National Investigation Agency (NIA) and Rapid Action Battalion (RAB)] இவ்விசயத்தில் ஒன்றாக வேலை செய்யவும், விவரங்களைப் பரிமாறிக் கொள்ளவும் முடிவு செய்துள்ளன[1]. இந்த வழக்கில் தொடர்புடைய 5 குற்றவாளிகள் தொடர்பாக துப்பு தருவோருக்கு ரூ.10 லட்சமும், மீதி 7 குற்றவாளிகள் பற்றிய தகவல்கள் கொடுப்போருக்கு ரூ.5 லட்சமும் ரொக்கப்பரிசு வழங்குவதாக என்.ஐஏ ஏற்கெனவே அறிவித்துள்ளது. அதற்குள் சில முக்கியமான நிகழ்வுகள் நடந்துள்ளன.

Burdwan blast -Subramanian swami photo

Burdwan blast -Subramanian swami photo

12-11-2014 (புதன் கிழமை) அசாமில் அன்று அசாமில் விசாரணை: அசாமில் உள்ள பார்பேடா என்ற இடம், ஜிஹாதிகளின் புகலிடமாக உள்ளது போலும். என்.ஐ.ஏ இங்கு கீழ்கண்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டது[2]:

  1. கவான் புர்ஹா, கிராமத் தலைவர் [Gaon Burha (village headman)]
  2. ரஷீத் அலி அஹமது [Rashid Ali Ahmed],
  3. ஜஹிதுல் இஸ்லாம் [Jahidul Islam],
  4. படாஸி பேகம் [Batasi Begum],
  5. சைஃபுல் இஸ்லாம் [Saiful Islam] மற்றும்
  6. சைபர் அலி [Saibar Ali],

சஹனூர் ஆலம் [Sahanur Alam] பர்த்வான் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய சந்தேகிக்கப் படும் குற்றவாளியின் வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு மசூதியில் இவர்கள் இருந்ததனர்[3]. இவ்வாறு மசூதிகளில் தஞ்சம் அடைவது, ஒளிந்து கொண்டிருப்பது முதலியன புலன் விசாரணை செய்பவர்களுக்கு தர்ம சங்கடமாக, பிரச்சினையாக இருக்கிறது. சஹனூர் ஆலத்தின் மனைவி சுஜனா பேகம் [Sujana Begum] ஏற்கெனவே 07-11-2014 அன்று வெளியூர் பேருந்து நிலையத்தில் [interstate bus terminus -ISBT] கைது செய்யப் பட்டுள்ளாள்[4]. படாஸி பேகம் இவருக்கு நெருங்கிய நண்பராம். இப்பெண்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி கொடுக்கப் பட்டுள்ளது. ரஷீத் அலி அஹமது பல முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாதச் செயல்களுக்கு ஆள் சேர்த்துள்ளான். அவர்கள் எல்லோருமே “சதாலா” என்ற கிராமத்திலிருந்து மறைந்து விட்டதாக சொல்கிறார்கள். அதாவது, மாயமாகும் முஸ்லிம் இளைஞர்கள் இவ்வாறு ஜிஹாதிகளாக மாற்றப் படுகிறார்கள் போலும். சஹனூர் ஆலம் மறைந்திருந்தாலும், அவனது சகோதரன் ஜகாரியாவும் [Jakaria] ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளான்[5]. சஹனூர் ஆலம் வங்காளதேசத்திற்கு தப்பித்துச் சென்றுவிட்டதாகச் சொல்லப் படுகிறது[6]. ஆக மொத்தம் எட்டு பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். இவ்வாறு ஒரே குடும்பத்தில் உள்ளவர்கள், குறிப்பாக மனைவியும் கணவனுடன் சேர்ந்து தீவிரவாத வேலைகளில் ஈடுபட்டு வருவது இவ்வழக்கில் அதிகமாக தெரிய வருகிறது. அதாவது, ஜிஹாதி-குண்டு தயாரிப்பு-குண்டுவெடிப்பு முதலியன ஏதோ குடும்பத் தொழிலாகி விட்டது போலிருக்கிறது.

jmb - Bangala terror

jmb – Bangala terror

அகில இந்திய ஜனநாயகக் கூட்டணிக்கும் ஜிஹாதிகளுக்கும் தொடர்புள்ளதா?: அசாமில் அகில இந்திய ஜனநாயக் கூட்டணி கட்சி தனது ஆதிக்கத்தைச் செல்லுத்தி வருகிறது. பங்காளதேச எல்லைகளில் உள்ள மாவட்டங்களில் உள்ள முஸ்லிம்களின் ஆதரவைப் பெற்றுள்ளது. அசாம் சட்டசபையிலும் 26 எம்.எல்.ஏக்களைக் கொண்டுள்ளதுமசாமில் குறுகிய காலத்தில் அதிக வளர்ச்சியை இக்கட்சி கண்டுள்ளது. ஆனால், முஸ்லிம் கட்சிக்கும் [All India United Democratic Front (AIUDF)] இதற்கும் தொடர்புள்ளது என்று ஒரு டிவி-செனல் குறிப்பிட்டதால்[7], ஹைதர் ஹுஸைன் போரா [Haidar Hussain Bora] என்ற அக்கட்சியின் தலைவர், ஒரு அவதூறு வழக்கு தொடர்ந்திருப்பதாகக் குறிப்பிட்டார்[8]. “இந்தியா-டிவி” செனல் மீதும் வழக்குத் தொடரப் பட்டுள்ளது[9]. அச்செனல் “நியூஸ்-எக்ஸ்” என்று இன்னொரு தளத்தின் மூலம் தெரிய வருகின்றது[10]. அசாம் அனைத்து ஜனநாயக பேரவை மற்றும் ஜமைத் உலமா இ-இந்த் ஒரு இளைஞர் குழுவை சுக்சார், தூப்ரி மாவட்டம், அசாமிலிருந்து ஜிஹாதி பயிற்சி பெற பங்களாதேசத்தில் உள்ள ரங்கப்பூர் என்ற இடத்திற்கு, கடந்த ஜூன்-ஜூலை 2013 மாதங்களில் அனுப்பி வைத்ததாக “நியூஸ் எக்ஸ்” செனல் குறிப்பட்டது[11]. முதல் குழுவில் உள்ளவர்களை முன்னணி தலைவர்களே பிரத்யேகமாகத் தேர்ந்தெடுத்து அனுப்பினர் என்றும், இரண்டாவது குழு நவம்பர் 2013ல் சென்றது என்றும் குறிப்பிட்டது[12]. இத்தகைய பயிற்சியில் ஈடுபட்டுள்ள ஜிஹாதி நிறுவனங்கள் ஹுஜி, சிமி, மூல்தா – [ intelligence reports named jihadi organisations like HuJI, SIMI, MULTA.] முதலியன. அசாம் முதலமைச்சர் தருண் ககோய் செய்தியாளர்களிடம் 04-11-2014 (செவ்வாய்கிழமை) இதே மாதிரித்தான் சொல்லியிருந்தார்[13], “ஜே.எம்.பி இங்கு முஸ்லிம் பெண்களிடம் பர்கா / பர்தா துணிகளை விற்கும் போர்வையில் ஒரு பெண்கள் பிரிவை ஏற்படுத்த முயன்றுள்ளார்கள். பார்பேடா மற்றும் நல்பாரி ஊர்களில் உள்ள இளைஞர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று ஜிஹாதி பயிற்சி பெற்றுள்ளனர்.” முன்பு (29-10-2014) பிஜேபி, பஜ்ரங் தள் முதலியவை மௌலானா பதாருத்தீன் அஜ்மல் [Maulana Badruddin Ajmal ] கைது செய்யப் படவேண்டும் என்று போராட்டம் நடத்தின[14]. ஆனால் அக்கட்சி தங்களுக்கும் பங்களாதேசத்து ஜிஹாதி குழுமங்களுக்கும் எந்தவித தொடர்புகளும் இல்லை என்று அறிவித்துள்ளது[15].

 

வங்காளதேசத்தின் மெத்தனம்

வங்காளதேசத்தின் மெத்தனம்

ஜே.எம்.பியின் அம்ஜத் அலி சென்னைக்குத் தப்பிச் சென்றான் என்றது ஆனால் கைது என்றது (10-11-2014): ஜே.எம்.பியின் அம்ஜத் அலி ஷேக்கிற்கு [Amjad Ali Sheikh] அடைக்கலம் கொடுத்து உதவியதற்காக, சஸ்ஹஸ்த்ரா சீமா பல் [Sashastra Seema Bal] என்ற மத்திய அரசு போலீஸ் பிரிவைச் சேர்ந்த ராணுவ வீரனிடம் 10-11-2014 அன்று விசாரணை நடத்தப் பட்டது[16]. இவன் உத்திரப் பிரதேசத்தில் உள்ள பஸ்தி வழியாக சென்னைக்குத் தப்பிச் செல்ல, அந்த வீரன் அம்ஜத் அலி ஷேக்கிற்கு உதவியுள்ளான்[17]. தில்லியில் அவனுக்கு இடம் கொடுத்துள்ளான், தில்லியிலிருந்து அவன் சென்னைக்குத் தப்பிச் சென்றுள்ளான்[18]. அதாவது, சென்னையில் இத்தகைய ஆட்களுக்கு தங்கிக் கொள்ள அல்லது மறைந்து வாழ இடம் கொடுக்கப் படுகிறது என்று தெரிகிறது. ஏற்கெனவே, சென்னையில் உள்ள மூன்று நபர்களுடன் ரஜீயா பீபி மற்றும் ஷகீல் அஹமது தொடர்பு கொண்டு பலமுறை பேசியுள்ளனர். இதையறிந்து தான், என்.ஐ.ஏ சென்னையில் உள்ள அந்த மூன்று நபர்களை விசாரித்தது. ஆகவே சென்னையில் “ஸ்லீப்பர் செல்கள்” உள்ளனவா அல்லது அறிந்தே ஜிஹாதிகளுக்கு, இங்குள்ள அடிப்படைவாதி முஸ்லிம்கள் உதவுகிறார்களா என்ற விசயம் நோக்கத்தக்கது. ஜே.எம்.பியின் அம்ஜத் அலி இப்பொழுது சென்னையிலுள்ளானா அல்லது வேறெங்காவது தப்பித்துச் சென்று விட்டானா எ இருக்கின்று தெரியவில்லை. அம்ஜத் அலி ஷேக் 10-11-2014 (திங்கட்கிழமை) கைது செய்யப்பட்டதாக “டெயிலி மெயில்” குறிப்பிடுகின்றது[19]. இவர்களுக்கு ஜார்கண்டிலும் தொடர்பு இருப்பதால், அங்கும் விசாரணை நடந்து கொண்டிருக்கின்றது.

அல்-உம்மா சிமி ஹிஹாதின் பல உருவங்கள்

அல்-உம்மா சிமி ஹிஹாதின் பல உருவங்கள்

சென்னையில் வாழும் குல்ஷன் பீபி என்றபோதைமருந்து ராணி[20]: என்.ஐ.ஏ குல்ஷன் பீபி என்ற “போதைமருந்து ராணி”யைத் தீவிரமாகத் தேடி வருகிறாதாம். கொல்கொத்தாவிலிருந்து சென்னைக்கு ஓடிவந்துவிட்ட அந்த பெண்மணி இப்பொழுதும் தனது “ரிமோட் கன்ட்ரோல்” மூலம் “போதைமருந்து வியாபாரத்தை” செய்துவருவதாக, என்.ஐ.ஏ-துப்பறிவாளர்களுக்குத் தெரியவந்துள்ளது. ஆனால், சென்னை போலீஸாருக்கோ, போதைமருந்து தடுப்புத்துறையினருக்கோ, அப்பெண்மணியைப் பற்றிய எந்த விவரங்களும் தெரியாமல் இருக்கிறது. ஆனால், மே.1.2014 குண்டுவெடிப்புக்கு முன்னர், இரண்டு ஜே.எம்.பி தீவிரவாதிகள் தங்க சென்னையில் இடம் கொடுத்துள்ளார். அவள் கிழக்குக் கடற்கரையில் மஹாபலிபுரம் வரையில் உள்ள ரிசார்ட்டுகளில் போதைமருந்து ஜல்ஸா பார்ட்டிகளை நடத்தியிருப்பதாகவும் கூறுகிறார்கள். பி.பி.ஓக்கள் மற்றும் கே.பி.ஓக்களில் வேலை செய்யும் இளம் ஆண்கள்-பெண்கள் தவிர, திரைப்பட உலகில் உள்ளவர்களும், இவளது வாடிக்கையாளர்களாம். ஆகஸ்ட்.1,1993 அன்று உத்தம் மண்டல் என்ற சி.பி.எம் தோண்டர், இந்த பெண்மணி ஒரு உருது பள்ளிக்கு வந்திருந்த போது எதிர்ப்புத் தெரிவித்தால் குரூரமாக அடித்துக் கொல்லப்பட்டார். அப்பொழுது குல்ஷன் பீபி கைது செய்யப் பட்டாலும், பிறகு ஒரு சி.பி.எம் அமைச்சர் தயவால் தப்பி விட்டார். கொல்கொத்தாவில் தேசிய போதைமருந்து தடுப்புத்துறை மற்றும் போலீஸாரின் தொல்லை தாங்காமல், சென்னைக்கு தனது ஜாகையை மாற்ரிவிட்டதாக தெரிகிறது. எல்லொருக்கும் லஞ்சம் கொடுத்து கொல்கொத்தா-சென்னை ரயில்வழியில் தனது ஆட்சியை நடத்தி வருகிறாராம்[21]. இவ்வழக்கில் ஏற்கெனவே ஒரு குல்ஷன் பீபி கைது செய்யப் பட்டிருக்கிறாள், ஆனால், அவள் வேறு. பாகிஸ்தானில், இதே பெயரில் இன்னொரு போதை மருந்து ராணி இருக்கிறாள். அவளும் வேறு, ஆக இந்த சென்னையில் இருக்கும் ராணி யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.

 முந்தைய சென்னையுடனான தொடர்புகள்: முர்ஷிதாபாத்தில் உள்ள உயிரிழந்த ஷகீல் அஹமதுவின் வீட்டையும் சோதனையிட்டு, முக்கிய ஆவணங்கள் மற்றும் குண்டு தயாரிப்புக்கான முக்கிய கருவிகளை பறிமுதல் செய்தனர். இந்த சோதனையிலும், மேற்கொண்டு தேசிய புலனாய்வு நடத்திய விசாரணையிலும் சென்னையை சேர்ந்த மூன்று பேருக்கு குண்டுவெடிப்பில் தொடர்பு உள்ளதாக அதிர்ச்சி தகவலை தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. அந்த மூன்று பேருக்கும் தேசிய புலனாய்வு அமைப்பு சம்மன் அனுப்பியுள்ளது. சென்னை வடபழனி பகுதியை சேர்ந்த அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது. இது சென்னைவாசிகளுக்கு அதிர்ச்சி அளிக்கவில்லை போலும். பொறுப்பான முஸ்லிம்களும் கண்டு கொள்ளவில்லை போலும். இதுதவிர, நேரில் விசாரணை நடத்த தேசிய புலனாய்வு அமைப்பின் தலைவர் பி.வி.ராமசாஸ்திரி ஐதராபாத்திலிருந்து சென்னை வந்தார்[22]. சென்னையில் தங்கியிருந்து மூன்று பேரிடமும் அவர் நேரில் விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.  இது தவிர சென்னை கௌஹாத்தி எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பிலும் இவர்களது சம்பந்தம் உள்ளதாக தெரிகிறது.

© வேதபிரகாஷ்

17-11-2014

[1] http://www.hindustantimes.com/india-news/nia-bangladesh-s-rab-may-share-info-on-probe/article1-1285465.aspx

[2] http://zeenews.india.com/news/west-bengal/nia-summons-village-headman-4-others-in-burdwan-blast-probe_1498105.html

[3] A NIA team led by Superintendent of Police Debojit Hazarika during their search in the village yesterday had directed the five to present themselves at the NIA office in Guwahati as they had attended a prayer meeting in a house in the village which was close to the one of Sahanur Alam, one of the main accused in the Burdwan blast case, they said.

http://zeenews.india.com/news/west-bengal/nia-summons-village-headman-4-others-in-burdwan-blast-probe_1498105.html

[4] Batasi Begum is a close friend of Sahanur’s arrested wife Sujana Begum, they said adding, Rashid Ali Ahmed was called as many youths were missing from his Chatala village.

http://zeenews.india.com/news/west-bengal/nia-summons-village-headman-4-others-in-burdwan-blast-probe_1498105.html

[5] In continuation of their search operation at Chatala village, the NIA searched Sahanur’s house yesterday (11-11-2014) for the third time, quizzed his father and brother about the accused. Alam is absconding and the NIA has recently declared a reward of Rs five lakh for anyone giving information leading to his arrest. Alam’s wife Sujana Begam was arrested in Guwahati on November 7 from the ISBT. So far eight persons, including Sujana and Sahanur’s brother Jakaria have been arrested in this connection.

http://zeenews.india.com/news/west-bengal/nia-summons-village-headman-4-others-in-burdwan-blast-probe_1498105.html

[6] http://timesofindia.indiatimes.com/india/Sahanur-might-have-fled-to-Bangladesh-NIA-says/articleshow/45104798.cms

[7] The All India United Democratic Front (AIUDF) has slammed a criminal defamation case against a private news channel which had recently broadcast news about party’s alleged involvement with Jehadi elements.

http://twocircles.net/2014nov12/1415811473.html#.VGQtdPmSynU

[8] Meanwhile, the Badruddin Ajmal-led All India United Democratic Front (AIUDF) has filed a criminal case against a national TV channel on Monday. The party’s Dhubri district unit registered the case against the channel after accusing it of airing ‘defamatory’ content. Haidar Hussain Bora, an AIUDF leader, said, “A case has been registered. Seven officials of the TV channel have been accused of maligning the party’s image.”

http://timesofindia.indiatimes.com/india/Sahanur-might-have-fled-to-Bangladesh-NIA-says/articleshow/45104798.cms

[9] http://www.milligazette.com/news/11249-maulana-badruddin-ajmal-slaps-defamation-on-newsx-tv-channel

[10] http://twocircles.net/2014nov12/1415811473.html

[11] The New Delhi-based news channel, News X, claimed leaders of Assam’s All India United Democratic Front (AIUDF) and a leading Islamist organisation, Jamiat Ulama-e-Hind, had sent a group of youths from Sukchar area in the state’s Dhubri district for Jihadi training from terrorist organisations in Bangladesh’s Rangpur in June-July last year. http://bdnews24.com/bangladesh/2014/10/29/assam-youths-undergo-jihadi-training-in-bangladesh

[12] The channel, quoting intelligence reports, also said apart from the first batch of youths, the leaders of the AIUDF and the Jamiat Ulama-e-Hind personally handpicked the members of the second team that went to Bangladesh last November.

http://bdnews24.com/bangladesh/2014/10/29/assam-youths-undergo-jihadi-training-in-bangladesh

[13] http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-otherstates/bangladesh-outfit-trying-to-set-up-womens-wing-in-assam/article6565371.ece

[14] http://indianexpress.com/article/india/india-others/bjp-bajrang-dal-bandh-demanding-aiudf-leader-ajmals-arrest-cripples-life-in-assam/

[15] http://www.thehindu.com/news/national/other-states/aiudf-refutes-links-with-bangladesh-jihadi-groups/article6547627.ece

[16] http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2830582/India-reveals-terror-plot-Bangladesh-tip-shows-terrorists-active-Jharkhand.html

[17] http://www.ndtv.com/article/india/nia-questions-soldier-who-reportedly-sheltered-key-burdwan-blast-suspect-619456

[18] After the blast in Burdwan on October 2, which was believed to be an accident, Sheikh reportedly fled to Delhi, where he was allegedly given shelter by the soldier. From Delhi, Sheikh reportedly escaped to Chennai through Basti in Uttar Pradesh. “The soldier helped Sheikh in this too,” sources said.

[19] http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2830582/India-reveals-terror-plot-Bangladesh-tip-shows-terrorists-active-Jharkhand.html

[20] http://www.newindianexpress.com/nation/Police-Clueless-as-Terror-Trail-Leads-to-Chennai-Drug-Queen/2014/11/16/article2525871.ece

[21] NIA is looking for a “drug queen” from Kolkata, now reportedly based in Chennai. Gulshan Bibi, who fled to Chennai years ago, still runs, through remote control, the narcotics business and sleuths have found connections between her and Islamic terrorists, said NIA sources. However, the police in Chennai have no clue about the drug queen. But NIA sources in Kolkata said Gulshan provided shelter to two Jamaat-ul-Mujahideen (JUMB) terrorists, who visited Chennai before the May 1 blasts at the Central railway station. Sources said she conducted rave parties in resorts at Mahabalipuram on the East Coast Road. Besides young men and women working in various call centres, BPOs and KPOs, her clientele reportedly included members of the film industry. On August 12, 1993, Uttam Mondal, a CPM worker protested the presence of a narcotics den in an Urdu medium school in Dakshindari in eastern Kolkata. Mondal, who used to tutor poor students, was brutally killed for taking on the drug mafia. Gulshan was arrested but due to the intervention of a CPM minister, went scot free. With the NCB and the Kolkata police hot on her trail, she shifted to Chennai. With money power growing, she could reportedly bribe police not only in Tamil Nadu and West Bengal but also states along the Kolkata-Chennai train route.

[22] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=113757

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (6)

ஒக்ரோபர் 25, 2014

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (6)

Porous border WB with BD haven for terrorists and infiltrators

Porous border WB with BD haven for terrorists and infiltrators

மேற்கு வங்காளம் ஜிஹாதித்துவத்தின் மையமாகிறது: மேற்கு வங்காளம், வங்காளதேசத்துடன் 2220 கி,மீ மற்றும் இந்தியாவுடன் 4095 கி,மீ தூரம் எல்லைகளைக் கொண்டுள்ளது. ஆனால், பல இடங்களில் நுழையும் வழிகள் இருப்பதால், 1947 மற்றும் 1972 ஆட்சிகள்-நாடுகள் மாறினாலும், முஸ்லிம்கள்- வேலைக்கு வருபவர்கள், அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள் என பலர் மேற்கு வங்காளத்தில் நுழைந்து, இந்தியாவில் பரவிக் கொண்டிருக்கின்றனர். கால்நடைகளைக் கவருவது, கள்ளநோட்டுகளைப் புழக்கத்தில் விடுவது, தங்கம்-போதை மருந்து கடத்துவது போன்ற காரியங்களில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். அவ்வாறு வரும் பணம் ஜிஹாதிகளுக்குச் செல்கிறது. 2009ல் ஐந்து வருடங்களுக்கு முன்னர் யாசின் பட்கல் கொல்கத்தாவில் போலி நோட்டுகளை வைத்திருந்தான் என்பதற்காக சிறப்பு போலீஸ் படையினரால் பிடிபட்டான், ஆனால், அவனது அடையாளம் தெரியாமல் போலீஸார் விட்டுவிட்டனர்[1]. ஏனெனில் அவர்கள் சஹீத் ஹுஸைன் [ Zahid Hussein] என்பவன் தான் அதில் ஈடுபட்டிருந்தான் என்று கவனம் வைத்திருந்தனர். பர்த்வான், வங்காளாதேசம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு அருகில் இருப்பதால், ஜிஹாதிகள் அங்கு வழக்கமாக வந்து தங்களது திட்டங்களைப் பற்றிப் பேசி செல்வதுண்டு. இந்த குண்டுவெடிப்பில் சம்பந்தப் பட்ட அறுவர் அசாமில் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது. மேலும் பர்த்வானில் முஸ்லிம்கள் அதிகம் வசிப்பதால், அவர்களுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை. போதாகுறைக்கு உள்ளூர் அரசியல்வாதிகளின் ஆதரவும் இருக்கிறது. திரிணமூல் காங்கிரஸின் ராஜ்ய சபை அங்கத்தினரான அஹமது ஹஸன் இம்ரான் [TMC’s Rajya Sabha member Ahmed Hassan Imran] பலவழிகளில் சம்பந்தப் பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது[2]. ஆனால், ஓட்டுவங்கி என்பதற்காக, மம்தா முஸ்லிம் விசயங்களில் மெத்தனமாகவே செயல்பட்டு வருகிறார்.

Burdwan blast - politics WB

Burdwan blast – politics WB

மம்தா மற்றும் புத்ததேவ் மதரஸாக்களை அணுகும் முறைகள்: மதரஸாக்களை மையமாக வைத்துக் கொண்டு, இத்தனை இஸ்லாமிய தீவிரவாத செயல்கள் நடத்தப் பட்டாலும், மம்தா பானர்ஜி அசையாமல், தாங்கள் செயல்பட்ட விதம் சரிதான் என்பது போல பேசி வந்தார். ஆனால், உள்நாட்டில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் இதைப் பற்றிய விவரங்கள் அலசப்பட்டதும்[3], குறிப்பாக மாநில போலீஸார் பாரபட்சமாக நடந்து கொண்டனர், குண்டுதயாரிப்பு பற்றிய ஆதாரங்களை அழித்து விட்டனர் போன்ற செய்திகள், மேலாக, சீல் வைத்த இடத்திலேயே குண்டுகள் கண்டெடுகக்கப் பட்டன என்று தெரியவந்ததும், அவருக்கு முகத்தில் ஈயாடவில்லை. ஆகவே, மம்தா பானர்ஜியும் வேறு வழியில்லாமல், பதிவு செய்யப் படாத கரேழிகளை / மதரஸாக்களை [ kharezi (unrecognised) madrasas] சோதனையிடுமாறு ஆணையிட்டுள்ளார்[4]. ஆனால், அவரது அணுகுமுறை முஸ்லிம்களை அனுசரித்து, தாஜா செய்யும் போகில் உள்ளது[5]. அதாவது மௌல்வி, இமாம் மற்றும் மைஜெம்களை விவரங்களைக் கொடுக்குமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது[6]. “திருடனிடமே சாவியைக் கொடுப்பது” போன்ற வேலையில் மம்தா ஈடுபட்டிருப்பது, அவரது அறிவீனத்தைக் காட்டுகிறதா அல்லது தொடர்ந்து கடைபிடிக்கும் “செக்யூலரிஸம்” போன்ற வியாதியைக் காட்டுகிறதா என்று புரியவில்லை. புத்ததேவ் பட்டாச்சார்ஜி ஐ.பி.ஐ பணித்து விவரங்களை சோதனை செய்யச் சொன்னால், மம்தாவோ இம்மாதிரி செய்கிறார்[7].

பர்த்வானில் மதரஸா ஆதரவு கூட்ட 20-10-2014

பர்த்வானில் மதரஸா ஆதரவு கூட்ட 20-10-2014

எல்லா மதரஸாக்களை இழிவுபடுத்த வேண்டாம் (20-10-2014): எல்லா மதரஸாக்களையும் இழிவு படுத்த வேண்டாம் என்று ஜமாத் உலிமா-இ-ஹிந்த 20-10-2014 அன்று குண்டு வெடித்த பர்த்வானிலேயே பெரிய கூட்டம் போட்டு அரசைக் கண்டித்தது[8]. வழக்கம் போல, முஸ்லிம்கள் ஏன் ஜிஹாதிகளாக இருக்கிறார்கள் என்ற உண்மையினை மறைக்கும் வகையில் அவர்கள் பேசினார்கள். சித்திகுல்லா சௌத்ரி என்ற என்று ஜமாத் உலிமா-இ-ஹிந்தின் மாநில பொது செயலாளர், மேற்கு வங்காளத்தில் உள்ள மதரஸ்ஸாக்களை அவ்வாறு தீவிரவாதம் அல்லது நிர்வாகமின்மை என்று பழிபோட்டு மூடிவிட மூடியாது. மாறாக, அவை புதுப்பிக்கப் பட்டு, ஒழுங்காக வகுப்புகள் மற்றும் போதனைகள் நடத்தப் படவேண்டும், என்றார்[9].  மதரஸாக்களில் குண்டுகள் தயாரித்தது, வெடிபொருட்கள் வாங்கி வைத்தது, வெடிகுண்டுகளே வைத்திருந்தது, கீழே சுரங்கபாதை இருந்தது, பெண்கள் உபயோகப் படுத்தப் பட்டது……..என்ற விசயங்களைப் பற்றி கவலைப் படவில்லை. மதரஸாக்கள் புதிப்பிக்கப் பட்டால், குற்றங்கள் மறைந்துவிடுமா?

jmb - Bangala terror

jmb – Bangala terror

என்...வின் முதல் அறிக்கை (24-10-2014): பர்த்வான் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு வங்கதேசத்தில் இயங்கி வரும் ஜமாத்-உல்-முஜாஹித்தீன் என்ற பயங்கரவாத அமைப்புடன் [Jamaat-ul-Mujahideen Bangladesh (JMB).] தொடர்பு இருப்பதாக தேசியப் புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) தெரிவித்துள்ளது[10]. இதுகுறித்து அந்த அமைப்பு வெள்ளிக்கிழமை இரவு (24-10-2014) விடுத்துள்ள அறிக்கை: பர்த்வான் குண்டுவெடிப்பு தொடர்பாக முதல்கட்ட விசாரணை முடிவடைந்துள்ளது. இந்தக் குண்டுவெடிப்பில் காயமடைந்த அப்துல் ஹக்கிம் மற்றும் இரண்டு பெண்கள் இதுதொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். விசராணையில், அவர்களுக்கும் வங்கதேசத்தில் செயல்பட்டு வரும் ஜமாத்-உல்-முஜாஹிதீன் அமைப்புக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் வெடிபொருள்களைத் தயாரித்து அந்த அமைப்புக்கு அனுப்பி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்தத் பயங்கரவாத அமைப்பின் நடவடிக்கையை என்.ஐ.ஏ. தீவிரமாக கண்காணித்து வருகிறது[11]. இந்த வழக்கு தொடர்பாக தற்போது தலைமறைவாகியுள்ள ஜமாத்-உல்-முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த நபர் குறித்து தகவல் அளிப்போருக்கு சன்மானம் வழங்கப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

huji Bangaladesh

huji Bangaladesh

தொழிற்சாலை வைத்து நடத்தும் அளவிற்கு ஊக்குவிப்புகள், ஆதரவுகள், உதவிகள், முதலியவை இருந்துள்ளன: முன்னதாக, என்.ஐ.ஏ. இயக்குநர் சரத்குமார் வெள்ளிக்கிழமை காலையில் பர்த்வான் சென்று, குண்டு வெடிப்பு நிகழ்ந்த வீடு, “பர்கா தொழிற்சாலை” முதலியவற்றை நேரில் ஆய்வு செய்தார். இந்நிலையில், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்யவுள்ளார். கிடைத்துள்ள ஆதாரங்கள் முதலியவற்றையும் ஆராய்ந்துள்ளார். தொழிற்சாலை வைத்து நடத்தும் அளவிற்கு ஊக்குவிப்புகள், ஆதரவுகள், உதவிகள், முதலியவை இருந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளன. எல்லைகளைக் கடந்த ஜிஹாதி எந்ட்வொர்க் வலையும் அறியப்பட்டுள்ளது. ஆனால், இவையெல்லாம், ஏற்கெனவே எடுத்துக் காட்டப் பட்ட தகவல்கள் தாம். இருப்பினும், அரசு, போலீஸார் மற்றவர் அவர்களுக்கு உதவி செய்து வருவதால், தாராளமாக ஜிஹாதி வேலைகள் நடந்து வருகின்றன. இவ்விசயத்தில் சம்பந்தப்பட்டவர்கள், தலைமறைவாகியுள்ளவர்கள் மற்றவர்கள் பற்றிய விவரங்களைக் கொடுத்தால் உரிய சன்மானம் கொடுக்கப்படும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது[12].

Eight JMB arrested for militant snatching in Bangladedsh

Eight JMB arrested for militant snatching in Bangladedsh

ஆந்திர சிமி, வங்கிக் கொள்ளை, பர்த்வான் குண்டுவெடிப்பு தொடர்புகள்: சென்னை தொடர்புகள் தவிர, இப்பொழுது ஆந்திர தொடர்புகளும் வெளிவருகின்றன. தடை செய்யப் பட்ட சிமி இயக்கத்தினர்களின் வேலைகள் வெளிப்படுகின்றன. பிப்ரவரி 2014ல் தெலிங்கானாவில் உள்ள கரிம்நகரில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி சொப்படண்டி கிளையில் துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் நுழைந்து ரூ.46 லட்சம் கொள்ளையெடித்துக் கொண்டு சென்றனர். நடந்த வங்கிக் கொள்ளைக்கும், பர்த்வான் குண்டுவெடிப்பு கூட்டத்திற்கும் தொடர்பு இருக்கிறது என்று தெரிய வந்துள்ளது[13]. கரீம்நகர் போலீஸார், கந்த்வா ஜெயிலிலிருந்து தப்பித்துச் சென்ற நான்கு சிமி இயக்கத்தினர் தான் அந்த வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டனர் என்று கூரியுள்ளனர். என்.ஐ.ஏ வங்கியில் கேமராபதிவுகளை ஆராய எடுத்துச் சென்றுள்ளனர்[14]. ஆக முஸ்லிம்கள் எல்லா மாநிலங்களிலும் தீவிரவாதிகளுக்கு உதவி வருகிறார்கள் என்பதும் தெரியவருகின்றது. தங்களது நண்பர்கள், உறவினர்கள் அவ்வாறு தொடர்பு கொண்டிருக்கும் போத் கண்டிக்காமல், போலீஸாரிடம் தெரிவிக்காமல், தொடர்ந்து முஸ்லிம்கள் என்ற விதத்தில் தீவிரவாதத்திற்கு துணைபோவதும் குற்றம் என்பது அவர்கள் உணரவேண்டும்.

© வேதபிரகாஷ்

25-10-2014

[1] http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2787086/West-Bengal-India-s-new-terror-haven-Bangladesh-border-creates-major-channel-militants-fake-currency.html

[2] MAIL TODAY EXCLUSIVE: Letter reveals TMC leader’s role in riots  By Soudhriti Bhabani in Kolkata – With opposition parties squarely blaming the Mamata Banerjee-led government for its ignorance towards terror modules operating from the rural outskirts, an exclusive document revealed startling facts about the TMC’s Rajya Sabha member Ahmed Hassan Imran and his alleged connection with communal violence that took place in South 24 Parganas district in February last year. A confidential document revealed that Ahmed Hassan Imran was the mastermind behind the communal conflict at Naliakhali village where an unruly mob set afire over 100 huts and ransacked several households.  Read more: http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2787086/West-Bengal-India-s-new-terror-haven-Bangladesh-border-creates-major-channel-militants-fake-currency.html#ixzz3H7JN5C4t
Follow us: @MailOnline on Twitter | DailyMail on Facebook

[3] http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2798542/illegal-madrasas-west-bengal-having-links-international-jehadi-outfits.html

[4] http://indianexpress.com/article/india/india-others/mamata-government-orders-survey-of-madrasas/

[5] http://indianexpress.com/article/cities/kolkata/buddha-redux-didi-orders-survey-of-kharezi-madrasas/99/

[6] The Mamata Banerjee government’s move is reminiscent of one taken by her predecessor Buddhadeb Bhattacharjee in 2003, albeit with a difference. While Bhattacharjee had asked the Intelligence Branch (IB) of the state police to conduct the survey, the present government is roping in maulavis, imams and muazzems for information on the madrasas.

http://indianexpress.com/article/india/india-others/mamata-government-orders-survey-of-madrasas/

[7] http://indianexpress.com/article/cities/kolkata/buddha-redux-didi-orders-survey-of-kharezi-madrasas/

[8] http://indianexpress.com/article/cities/kolkata/dont-malign-all-madrasas/

[9] Claiming that such attacks on madrasas will not help the community, Siddiqullah Chowdhury, general secretary of the state committee of the Jamiat Ulema-e-Hind said no madrasa in West Bengal should be closed down either on account of panic or as an administrative measure. Urging all madrasas to resume normal classes and teachings, Chowdhury said any attack on madrasas will have serious repercussions.

http://indianexpress.com/article/cities/kolkata/dont-malign-all-madrasas/

[10] தினமணி, பர்த்வான் குண்டுவெடிப்பு: வங்கதேச பயங்கரவாத அமைப்புக்குத் தொடர்புஎன்... தகவல், By dn, புது தில்லி/ கொல்கத்தா; First Published : 25 October 2014 02:22 AM IST

[11]http://www.dinamani.com/india/2014/10/25/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5/article2492151.ece

[12] http://zeenews.india.com/news/india/burdwan-blast-ieds-made-by-jamaat-ul-mujahideen-were-for-use-in-bangladesh-says-nia_1489189.html

[13] http://www.firstpost.com/india/links-bank-robbery-burdwan-blast-probed-nia-1770183.html

[14] In the robbery, four gun-wielding men were seen entering the SBI branch at Choppadandi mandal headquarters before decamping with Rs 46 lakh in cash. “We have the data (footage and other information on the bank robbery),” he said when asked if any team had visited the bank to collect more information. The Burdwan blast case pertains to an explosion at a rented house at Khagragarh in Burdwan town on October 2 in which two men believed to be members of Jamaat-ul-Mujahideen Bangladesh died.

காஷ்மீர் ஜிஹாதிகளின் அனைத்துலக தீவிரவாத மையமாகிறதா?

ஒக்ரோபர் 24, 2011

காஷ்மீர்  ஜிஹாதிகளின் அனைத்துலக தீவிரவாத மையமாகிறதா?

   


பள்ளி-கல்லூரி மாணவர்கள் ஜிஹாதில் ஈடுபடுவது: இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள் சிமி முதலியன தடை செய்யப் பட்ட பிறகு, பல அவதாரங்களில் செயல்பட்டு வருகின்றன. அரேபிய நாடுகளில் மக்களாட்சி என்ற கொள்கையில் ஈர்க்கப்பட்டு, முஸ்லீம்களே வீதிகளில் வந்து போராடி வருகின்ற நேரத்தில், எங்கே தங்கள் செல்வாக்கு போய்விடுமோ என்ற பயத்தில், மென்மையான இலக்குகளில் ஒன்று என்று கருதப்படும் இந்தியாவில் தமது குண்டு வெடிப்புகளை அவ்வப்போது, ஜிஹாதிகள் செய்து வருகின்றனர். அத்தகைய அந்நியநாட்டு ஜிஹாதிகள் “இந்தியன் முஜாஹிதீன்” என்ற பெயரில் கடந்த ஆண்டுகளில் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தி, ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை ஈவு-இரக்கம் இல்லாமல் கொன்று குவித்தனர். “உள்ளுக்குள் வெடித்து சிதறவைக்கும் வெடிகுண்டு வகையில் குண்டு”களைத் தயாரிப்பது, குண்டுகளை தேர்ந்தெடுத்த இடங்களில் வைப்பது, டைமர் மூலம் வெடிக்க வைப்பது, ஊடகங்களுக்கு இ-மெயில் அனுப்பித் தெரிவிப்பது முதலிய செயல்பாட்டினை அதில் காணலாம். இருப்பினும், இத்தகைய தீவிரவாத-பயங்கரவாத செயல்களில் சிறுவர்கள்-இளைஞர்கள் ஈடுபட்டு வருகிறார்களே என்று முஸ்லீம் சமூகத்தில் உள்ள பெரியவர்கள் கண்டிப்பதாகவோ, தடுப்பதாகவோ தெரியவில்லை. ஆனால், சில இயக்கங்கள் அவர்களை தேர்ந்தெடுத்து, ஊக்குவித்து, குடும்பதிலிருந்து பிரித்து, மற்ற ஆசைகளைக் காட்டி அத்தகைய செயல்களில் ஈடுபடுத்தி வருவதைக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் ஜிஹாதிகளால், தாலிபான்களால் உபயோகப்படுத்தப் படும் அதே முறையை, பயிற்சியை அவர்களுக்கு அளிக்கிறார்கள்.

முஸ்லீம் அடையாளங்களை மறைத்து செயல்படுவது: கசாப்பின் வேஷத்தைப் பற்றி முன்பொரு பதிவில் விளக்கியிருந்தேன். அவன் அழகாக மழித்துவிட்டு / சேவ் செய்துவிட்டு, நீல நிறம் ஜீன்ஸ்-சர்ட் போட்டுக் கொண்டு, நெற்றியில் குங்குமம், கையில் கயிறு சகிதம் வந்து, வழியில் உள்ளவர்களிடம் “நமஸ்தே” என்று குசலம் விசாரித்து, பிறகு தான், தன்னுடைய குரூர உருவத்தைக் காட்டி சுட்டுக் கொள்ள ஆரம்பித்தான். அதே முறை தான் காஷ்மீரத்தில் சில தீவிரவாதிகளைப் பற்றி விசாரித்தபோது அம்முறை அங்கும் செயல்படுத்தப் படுவதைக் காணலாம்.அதனால் தான்  இக்காரியங்களில் இளைஞர்கள் மற்றும் இளைஞ்சிகள் பயன்படுத்தப் படுகின்றனர். அதிலும் குறிப்பாக படித்தவர்கள், தாடி-மிசை-குல்லா என்று இஸ்லாத்தை அடையாளம் காட்டாத, அவையெல்லாம் இல்லாமல், அழகாக ஜீன்ஸ்-குள்ளசர்டுகளைப் போட்டுக் கொண்டு ராஜா, தேவ் ….. போன்ற இந்து பெயர்களையும் சேர்த்துக் கொண்டு செயபட்டு வருகிறார்கள். அதற்கு முன்பு, அவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டு, பயிற்சி கொடுக்கப் பட்டு, ஜிஹாதி என்ற “புனிதப் போரை” நடத்த மூளைசலவை செய்து தயார்படுத்துகின்றனர்.

இ-மெயில்களில் விளையாடும் இளம் தீவிரவாதிகள்: இ-மெயில்கள் மூலம் திசைத்திருப்ப அல்லது சாட்டரீதியாக வழக்குகளை பலமிழக்க வேண்டுமென்றே பல இடங்களிலிருந்து இ-மெயில்கள் அனுப்பப்படுவது, அதற்கு ஊடகங்கள் துணைபோவதும் தெரிய வந்துள்ளது. சமீபத்தில் சுப்ரீக் கோர்ட் வளகத்தில் குண்டு வெடித்த பிறகு பல இ-மெயில்கள் அனுப்பப்பட்டன. இரண்டாவது மற்றும் நான்காவது இ-மெயில்கள் கொல்கத்தாவிலிருந்து ஒரு டிவி செனலுக்கு Chottuminaliayushman@gmail.com என்ற பெயரில் அனுப்பப்பட்டதாகத் தெரிகிறது[1]. அதே நேரத்தில் இரண்டாவது இ-மெயில் கிஸ்த்வார், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலிருந்து வந்தது என்றும் செய்தி வந்துள்ளது[2]. இன்னொரு இ-மெயில் அஹமதாபாதிலிருந்து “சோட்டு” [Chhotoo Minani Ayushman[3]] என்ற பெயரில் அனுப்பட்டது[4]. மூன்றாவது இ-மெயில்சஹீத் அலி ஹூரி என்ற பெயரில், இந்தியன் முஜாஹிதீன் தரப்பில் URL|killindian@yahooID என்ற அடையாளத்தில் அனுப்பப்பட்டுள்ளது[5]. இரண்டு இடங்களிலிருந்து வந்ததாக உள்ள இ-மெயில்களை ஆராய்ந்தபோது, அவை ஆசம்கர், உத்திரபிரதேசம் மற்றும் காக்ஸ் பஜார், பங்களாதேசம் என்ற ஊர்களிலிருந்து வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. சிட்டகாங் மற்றும் காக்ஸ் பஜார் ஹுஜியின் பயிற்சி முகாம்கள் இருக்கும் இடங்கள் ஆகும். இதிலிருந்து தான், ஹுஜியின் தொடர்பு கண்டுபிடிக்கப்பட்டது[6].

எட்டாவது படிக்கும் அமீர் அப்பாஸ் ஹுஜியின் சார்பாக இ-மெயில் அனுப்பினான்: டில்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் கடந்த மாதம் செப்டம்பர் 7ம் தேதி அன்று நடந்த குண்டு வெடிப்பில் 15 பேர் இறந்தனர்[7]. இந்த வழக்கில் சிறப்பு புலனாய்வுப்பிரிவு காவல்துறையினர் [The National Investigation Agency (NIA)] தீவிர விசாரணை நடத்தி காஷ்மீரைச் சேர்ந்த அமீர் அப்பாஸ் தேவ் என்ற 8- ஆம் வகுப்பு மாணவன் உள்பட 3 பேரை அக்டோபர் 7ம் தேதி கைது செய்தனர். கைதான மாணவன் அமீர் குண்டு வெடிப்பு பற்றிய தகவல்களை பத்திரிகை அலுவலங்களுக்கு ஹுஜியின் சார்பாக [Bangladesh-based Harkat-ul-Jihad-e-Islami (HuJI)] இ-மெயில் அனுப்பியது தொடர்பாக அவனை காவல்துறையினர் கைது செய்தனர்[8]. கைதான மாணவர் அமீர் அப்பாஸ் தேவ் நீதிமன்ற உத்தரவின்படி நீதிமன்ற காவலில் காவல்துறை விசாரணையில் இருந்து வருகிறார்.  இதற்கிடையே மாணவனின் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் அவனிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டியது இருப்பதால், அவனுக்கு காவலை நீட்டித்து தரவேண்டும் என்று சிறப்பு பாதுகாப்பு படையினர் நேற்று அவனை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோரிக்கை விடுத்தனர். அதைத்தொடர்ந்து சிறப்பு காவல்துறையினரின் கோரிக்கையை ஏற்று மாணவன் அமீரின் நீதிமன்ற காவலை சிறப்பு நீதிமன்ற நீதிபதி எச்.எஸ்.ஷர்மா 7 நாட்கள் நீட்டித்து அதாவது வரும் 14- ஆம் தேதி வரை காவல்துறை காவலில் விசாரிக்க அனுமதி அளித்தார்.

   

திட்டமிட்ட யுனானி மருத்துவர் காஷ்மீரிமாணவர் வாசிம் அக்ரம் மாலிக்[9]: இந்த நிலையில், காவல்துறை விசாரணையில் டில்லி குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டு வந்த வங்காளதேசத்தில் யுனானி மருத்துவக்கல்லூரியில் படித்து வரும் காஷ்மீரி மாணவர் வாசிம்அக்ரம் மாலிக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. செப்டம்பர் 7 அன்று வாசிம் டில்லியில் இருந்துள்ளான்[10]. அதைத்தொடர்ந்து அவனை கைது செய்யும் நடவடிக்கையில் அந்நாட்டு காவல்துறையினருடன் தொடர்பு கொண்டு சிறப்பு பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து மருத்துவக்கல்லூரி மாணவரை இந்தியா-வங்காள தேச எல்லையான டாகா அருகே அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்து, இந்திய பாதுகாப்பு படையினரிடம் நேற்று ஒப்படைத்தனர்.

   

வீட்டில் மொபைல் போன்கள் ஆவணங்கள் சிக்கின: இதில், முக்கிய மூளையாக செயல்பட்ட கிஷ்த்வாரைச் சேர்ந்த இளைஞர் வாசிம் அகமதுவிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது கிடைத்த தகவல்கள் அடிப்படையில், தேசிய புலனாய்வு அமைப்பினர், சிறப்பு விமானம் மூலம் நேற்று முன்தினம் மாலை ஜம்முவுக்கு வந்தனர். அன்கிருந்து கிஷ்த்வாருக்கு ஹெலிகாப்டரில் சென்று, வாசிம் அகமது வீட்டில் சோதனை நடத்தியபோது. மூன்று மொபைல்போன்கள், மற்றும் சில ஆவணங்களைக் கைப்பற்றினர்[11]. குறிப்பாக பணம் பட்டுவாடா செய்ய விவரங்கள் அடங்கிய ஆவணங்கள் சிக்கின[12]. இவற்றுக்கும், டில்லி ஐகோர்ட் குண்டு வெடிப்பிற்கும் முக்கிய தொடர்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே, விரைவில் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் பற்றிய முக்கிய விவரங்கள் ஓரிரு நாளில் வெளிவரும் என தெரிகிறது. மேலும், இதுவரை நடந்த விசாரணையில், இந்த குண்டுவெடிப்பில் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பிற்கு தொடர்பு உள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது[13]. இருப்பினும் வாசிம் அக்ரத்தின் பெற்றோர் அவன் குற்றமற்றவன் என்று வாதிடுகின்றனர்[14]. இரண்டு பேர்களில் யார் இ-மெயில் அனுப்பியது என்று என்.ஐ.ஏவால் சொல்லமுடியவில்லை என்றும் வாதம் உள்ளது[15].

   
   

ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி அஷர் அலி சொன்ன விவரங்கள்: டில்லி குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு தீவிரவாதிகளுடன் நேரடியாக தொடர்பு வைத்திருந்த பாகிஸ்தானை சேர்ந்த அவரிடம் பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் ஹிஸ்புல் முஜாகிதீன் என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்த அஷர் அலி என்பவர் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடையவர் என்று காவல்துறையினரிடம் அக்ரம் தெரிவித்தார். அவர் தற்போது காஷ்மீர் மாநிலத்தில் கோத்பால்வால் சிறையில் உள்ளார். அவரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்த நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அஷர் அலியிடம் விசாரித்தபோது, வாசிம் அக்ரமின் சகோதரன் ஜுனைத் என்பவனும் தீவிரவாத குழுவில் உள்ளான் என்று தெரிவித்தான். படித்துக் கொண்டிருந்த அவன் திடீரென்று காணாமல் போய்விட்டதால், அவனது பெற்றோர் போலீஸாரிடம் புகாரும் கொடுத்துள்ளனர்[16]. இப்படி இரண்டு மகன்களும் தீவிரவாதத்தில் ஈடுபட்டிருக்கும் போது அவர்கள் குற்றமற்றவர்கள் என்று வாதிடுவது எப்படி என்று தெரியவில்லை[17].

பல காதலிகளுடன் பேசிக் கொண்டே, ஜிஹாதியைப் பற்றியும் படித்த வாசிம் அக்ரம் மாலிக்: வாசிம் அக்ரம் மாலிக்கிடம் போலீஸார் விசாரித்தபோது அவன் சொன்ன விவரங்கள், எவ்வாறு இளைஞர்கள் ஜிஹாதிகளால் மூலைசலவை செய்யப்படுகிறது என்று தெரிகிறது. துப்பாக்கியை எடுத்துக் மொண்டு காஷ்மீர் காடுகளில் திரிந்து தான் ஜிஹாத்தில் ஈடுபட வேண்டும் என்பதில்லை. பல கார்ல்-ஃபெரெண்டுகளுடன் / பண் நண்பர்கள் / காதலிகள் ஃபேஸ்புக்கில் ஒரு கம்ப்யூட்டரில் பேசிக்கொண்டே, இன்னொரு கம்ப்யூட்டரில் அல்லது வின்டோவில் ஒசாமா பின் லேடன், அயம் அல் ஜவஹிரி, அன்வர் அல் அவ்லகி போன்ற ஜிஹாதி தலைவர்களைப் பற்றியும் விவாதிக்கும் திறன் கொண்டவன் என்று விளாக்கினான்[18]. அதாவது மனத்தை எவ்வாறு மாற்றி, பதப்படுத்தி, சித்தாந்த ரீதியில் தாங்கள் செய்வது ஒன்றும் தவறில்லை என்ற நிலைக்குக் கொண்டு வந்து, பிறகு குண்டுகளை வைத்து, வெடிக்கப் பயிற்சிக் கொடுக்கப்படுகிறது[19]. ஆகவே, முஸ்லீம் பெற்றோர்கள், பொறுப்புள்ள பெரியோகள் இவ்வாறு முஸ்லீம் இளைஞர்கள் மாறுவதை கண்டு பிடித்து தடுக்க வேண்டும், ஏனெனில் நாளைக்கு அவர்கள், தங்கள் சமூகத்தையே அழிக்க முற்பட்டாலும், முற்படலாம். அதாவது “ஜிஹாதி” முஸ்லீம்களுக்குள் கூட நடக்கலாம். யார் பெரிய ஜிஹாதி என்ற போட்டி வரலாம். அப்பொழுது எல்லோருடைய கதியும் அதோ கதிதான்.

குண்டு வெடிப்பில் மூன்று பேருக்கு தேடுதல் நோட்டீஸ்: ஜுனைத் அக்ரம் மாலிக் (19) வாசிம் அக்ரமின் தம்பி, ஷகிர் ஹுசைன் ஷேக் என்கின்ற சோடா ஹாஃபிஸ் (26), மற்றும் அமீர் அலி கமல் (25) என்ற மூவருக்கு தேடுதல் பிடிப்பு அறிக்கை அனுப்பப்படுள்ளது. மூன்றாமவன் 2005லிருந்து, காஷ்மீரத்தில் தீவிரவாத வேலைகளில் ஈடுபட்டு வருகிறான்[20]. ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகள் ஏற்கெனெவே காஷ்மீர் வழியாக, பங்களாதேசத்துடன் இணைப்பு ஏற்படுத்தி, பிறகு தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் இணைப்பு ஏற்படுத்த வேண்டும் என்பது தான் அவர்களது திட்டம், இதற்கு முஸ்லீம் நாடுகள் அமோகமாக ஆதரவுடன் உதவி வருகின்றன. மேற்காசியாவில், ஜனநாயகம், குடியரசு போன்ற ரீதியில் முஸ்லீம்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், தென்கிழக்காசிய அடிப்படைவாதிகள் அவர்களுக்கு உற்சாகத்தைக் கொடுப்பதாக உள்ளது. குறிப்பாக இந்தோனேசிய பயங்கரவாதம், தீவிரவாதம் வெளிப்படையாக, ஆனால், திறமையாக வேலை செய்து வருகின்றது. இதற்கு ஆதரவும் இருப்பதால், அதன் மூலம் தமது ஆதிக்கத்தைப் பெருக்கிக் கொள்ள முயல்கின்றனர்.

வேதபிரகாஷ்

24-10-2011


[1] The second and the fourth Indian Mujahideen (IM) e-mails in the Delhi High Court blast case have been traced to Kolkata. The e-mails were sent from Chottuminaliayushman@gmail.com to a TV channel.

http://ibnlive.in.com/news/delhi-blast-two-im-emails-traced-to-kolkata/183773-3.html

[2] A second unverified email received today by different media organisations allegedly from Indian Mujahideen said that the group takes responsibility for Wednesday’s Delhi High Court blast in which 12 people were killed and over 76 were injured. Yesterday, HuJI, an outlawed  terrorist group with a base in Pakistan took responsibility for the blast. The mail was traced to a cyber cafe in Kishtwar, Jammu and kashmir

http://www.hindustantimes.com/Read-Indian-Mujahideen-mail-claiming-Delhi-blast/Article1-743144.aspx

[4] Investigators were groping for leads on Wednesday’s blast at Delhi High Court even as an email was sent to a TV channel claiming that the attack was carried out by Indian Mujahidin and not HuJI and threatening attacks on shopping complexes on Tuesday (13-09-2011). The email sent by one Chhotu, an alleged IM operative, was traced to Ahmedabad.

http://articles.timesofindia.indiatimes.com/2011-09-09/india/30134439_1_huji-mail-im-emails-new-email

[5] Third email after Delhi blast ‘decoded’ Earlier, the Delhi Police claimed to have decoded the third email sent after the Delhi High Court blast. This email sent by someone claiming to be Saeed Ali Al Hoori of Indian Mujahideen from aURL|killindian@yahooIDclaimed the next attack would be at 1.8.5.13.4.1.2.1.4. But this is more like a kindergarten riddle: read A for 1, H for 8, E for 5 and you have Ahmedabad. Read more at: http://indiatoday.intoday.in/story/delhi-hc-blast-third-email-warns-of-attack-in-ahmedabad/1/150641.html

[6] In what is viewed as a positive lead, agencies are probing two calls made on the evening of the blast from two different places in Uttar Pradesh to Bangladesh. Highly placed sources said they have managed to track calls made from Pilkhuwa and Azamgarh in UP to Cox’s Bazar and Chittagong in Bangladesh.Both these calls were made from a PCO between 5 pm and 6 pm on the day of the blast. Both Chittagong and Cox’s Bazar have Harkatul-Jihad al-Islami (HuJI) training camps and it is in these camps that some key IM members are said to have taken refuge.

[7] வேதபிரகாஷ், கத்தியிலிருந்துகுண்டுவெடுப்புவரைமாறிவரும்ஜிஹாதின்தன்மை!, https://islamindia.wordpress.com/2011/09/11/transformation-of-jihadi-terror/

[8]

[12] Looking for some ‘concrete’ evidence connecting the ‘missing’ links in the Delhi High Court blast case probe, the National Investigation Agency (NIA) has seized three mobile phones and some documents, including papers relating to money transaction, from residence of one of the accused Wasim Ahmed Malik in Jammu and Kishtwar.

[15] Unfortunately, the absurdity of the NIA’s allegations against Mr Malik is only symptomatic of its pathetic handling of the probe into the blast. Even when the agency arrested Abid Hussain and Amir Abbas – the two boys from Kishtwar who allegedly sent the email claiming responsibility for the attack – it provided only sketchy details, failing to pinpoint which of the two had sent the email.

Read more at:http://indiatoday.intoday.in/story/delhi-hc-blast-probe-nia-claim-questionable/1/154392.html

[16] According to sources, NIA officials had recently quizzed Azhar and found that Wasim’s teenaged brother Junaid had been initiated into terrorism. Junaid allegedly disappeared a year ago and his family has lodged a missing person report. Intelligence agencies suspect that Junaid has been operating from somewhere in the Kashmir Valley.

[18] For Wasim, the idea of jehad is not picking up a gun and fighting in the jungles of Jammu and Kashmir; he is highly radicalised but without overt symbols attached to it. He can discuss his multiple girlfriends with as much ease as he can discuss Osama bin Laden, Ayman al Zawahiri and Anwar al Awlaki.He has no qualms about opening Facebook in one window and chatting with girlfriends and simultaneously reading about international jehad in the second window on his computer,” said a source who is privy to his interrogation details.

http://www.hindustantimes.com/India-news/NewDelhi/Malik-believed-in-action-did-recee-of-HC-himself/Article1-760830.aspx

[20] The fugitives include 19-year-old Junaid Akram Malik, younger brother of Wasim Akram Malik. Wasim, a medical student in Bangladesh, is presently in NIA custody in Delhi. The other two are Shakir Hussain Sheikh alias Chota Hafiz (26) and Amir Ali Kamal (25). While Sheikh has been active in the Kashmir Valley since 2005, Kamal has been operating since 2008.

http://timesofindia.indiatimes.com/india/NIA-issues-wanted-notice-for-3-Hizbul-terrorists-in-Delhi-HC-blast-case/articleshow/10446851.cms