Archive for the ‘ஹுஜி பங்களா’ category

தமிழ் நாட்டில் ஜமைத் உல் முஜாஹித்தீன் [Jamiat ul Mujahideen] – பங்களாதேச தீவிரவாதம் மற்றும் ஐசிஸ் கைக் கோக்கிறதா?

ஒக்ரோபர் 15, 2019

தமிழ் நாட்டில் ஜமைத் உல் முஜாஹித்தீன் [Jamiat ul Mujahideen] – பங்களாதேச தீவிரவாதம் மற்றும் ஐசிஸ் கைக் கோக்கிறதா?

Bangladesh Terror.tentacles spread-jamiat ul mujahideen
தமிழ்நாட்டில் இஸ்லாமிய தீவிரவாதிகள் தொடர்ந்து கைதாவது: இலங்கையில் கடந்த ஆண்டு ஏப்ரல் 21-ந்தேதி ஈஸ்டர் பண்டிகையின் போது கிறிஸ்தவ தேவாலயங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்து சிதறியதில் பலத்த உயிர் சேதம் ஏற்பட்டது. 250-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் உலகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தமிழகத்திலும் அது போன்று சதி திட்டம் தீட்டப்பட்டதாகவும் அப்போது திடுக்கிடும் தவல்கள் வெளியானது. இந்த குண்டு வெடிப்புக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதையடுத்து நாடு முழுவதும் ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பில் இருந்தவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. பயங்கரவாதிகளுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை எடுப்பதற்காக உருவாக்கப்பட்ட தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். 26% தீவிரவாதிகள் தமிழகத்தில் கைது செய்யப் பட்டது கவனிக்கத் தக்கது.

Pakistan, terror funding

பாகிஸ்தானின் பண பட்டுவாடா, தீவிர ஊக்குவாதம் முதலியன: கூட்டத்தில் இதுவரை நாடு முழுவதும் பயங்கரவாதத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகள் பேசினார்கள். அப்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் கூறியதாவது[1]: “பயங்கரவாதத்திற்கு எதிராக பண பரிமாற்ற நடவடிக்கைகள் குறித்து நிதி நடவடிக்கை கண்காணிப்பு குழு என்ற சர்வதேச அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு ஏற்கனவே பாகிஸ்தானை பல்வேறு தடவை எச்சரித்துள்ளது. பாகிஸ்தான் மண்ணில் செயல்படும் பயங்கரவாதிகளை ஒடுக்குமாறு அந்த அமைப்பு கேட்டுக்கொண்டது. தற்போது அந்த சர்வதேச அமைப்பு பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கூடி பயங்கரவாதிகளுக்கு பண பரிமாற்றம் செய்யும் நாடுகள் பற்றி ஆய்வு செய்து வருகிறது. இது பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய நெருக்கடியை உருவாக்கி இருக்கிறது. பாகிஸ்தான் அரசு எப்போதும் பயங்கரவாதிகளுக்கு உதவி செய்வதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறது. பாகிஸ்தானின் இந்த செயல் நம் அனைவருக்கும் நன்றாக தெரியும். அதை சர்வதேச நாடுகளிடம் நிரூபிக்க இன்னும் போதுமான ஆதாரங்கள் தேவைப்படுகிறது. காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு வங்கிகள் மூலம் உதவி செய்வதை தேசிய புலனாய்வு அமைப்பு மிக திறமையாக கண்டறிந்துள்ளது. இதைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பயங்கரவாதிகளுக்கு செயல்பட முடியாத அளவுக்கு நெருக்கடியை உருவாக்கி இருக்கிறது. பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் தேவையான அளவுக்கு நிதி கொடுக்கிறது. இதற்கான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன,” இவ்வாறு அஜித்தோவல் கூறினார்[2].

ISIS 33 arrested from Tamilnadu-Puthiyathalaimurai-2

அதிகபட்சமாக தமிழகத்தில் மட்டும் 33 பேர் பிடிபட்டனர்: நாடு முழுவதும் ரகசியமாக செயல்பட்டு வந்த ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவாளர்கள் 127 பேர் கைது செய்யப்பட்டனர். அதிகபட்சமாக தமிழகத்தில் மட்டும் 33 பேர் பிடிபட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தமிழகத்தில் நாசவேலையில் ஈடுபடும் திட்டத்துடன் 33 பேரும் பல்வேறு பயங்கரவாத செயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட அதிர்ச்சி தகவல் வெளியானது. இலங்கை குண்டு வெடிப்பின்போது தற்கொலை படையாக மாறி தாக்குதல் நடத்திய பயங்கரவாதியான ஜக்ரான் ஹசீம் என்பவனின் வீடியோ பேச்சுக்களே தமிழக இளைஞர்களை மூளைச் சலவை செய்து பயங்கரவாத ஆதரவாளர்களாக மாற்றியதும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக டெல்லியில் நடந்த தேசிய புலனாய்வு முகமையின் கூட்டத்தில் தேசிய புலனாய்வு முகமை இயக்குனர் யோகேஷ் சந்தர் மோடி மற்றும் ஐ.ஜி. அசோக் மிட்டல் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார். சர்வதேச தீவிரவாத இயக்கமான ஐஎஸ் ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு உள்ளதாக சந்தேகிக்கப்படும் நபர்களை தொடர்ந்து கண்காணித்து வந்தோம். இதனடிப்படையில் தமிழகத்தைச் சேர்ந்த 33 பேர், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 19 பேர், கேரளாவை சேர்ந்த 17 பேர் மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த 14 பேர் உட்பட மொத்தம் 127 பேரை கைது செய்துள்ளோம்[3].

ISIS 33 arrested from Tamilnadu-Puthiyathalaimurai

ஜாஹ்ரன் ஹஸிம் என்பவரின் வீடியோ உரைகளைக் கேட்டு தான் தீவிரவாத எண்ணத்துக்கு வளர்த்தது: இதில், தமிழகம் மற்றும் கேரளாவில் கைதுசெய்யப்பட்டுள்ள தீவிரவாத இயக்க ஆதரவாளர்கள் தாங்கள் ஜாஹ்ரன் ஹஸிம் என்பவரின் வீடியோ உரைகளைக் கேட்டு தான் தீவிரவாத எண்ணத்துக்கு வந்ததாக தெரிவித்துள்ளனர்[4]. இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் தின தொடர் வெடிகுண்டு தாக்குதலில் மூளையாக செயல்பட்டது இதே ஜாஹ்ரன் ஹஸிம்தான். கைது செய்யப்பட்டுள்ள மற்றவர்களில் பெரும்பாலானோர் மதப் பிரச்சாரகர் ஜாகிர்நாயக்கின் பேச்சை வீடியோவில் கேட்டு, தீவிரவாத எண்ணத்தை வளர்த்து கொண்டதாக தெரிவித்துள்ளனர். இதுதவிர காலிஸ்தான் பயங்கரவாத இயக்கம் தொடர்பாகவும் எங்களுக்கு துப்பு கிடைத்துள்ளது[5]. சீக்கியர்கள் நடுவே இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுத்து வரும் இந்த அமைப்பு தொடர்பாக ஐந்து பேரை உத்தரபிரதேச மாநிலத்தில் கைது செய்துள்ளோம். இவ்வாறு அலோக் மிட்டல் தெரிவித்தார்[6].

Bangladesh Terror

தமிழகத்தில் வங்கதேசத்தை தலைமையிடமாக கொண்ட பயங்கரவாத அமைப்பானஜமாத் உல் முகாஜுதீன்: இதன்படி தமிழகத்தில் வங்கதேசத்தை தலைமையிடமாக கொண்ட பயங்கரவாத அமைப்பான “ஜமாத் உல் முகாஜுதீன்” என்கிற அமைப்பும் புதிதாக சதி திட்டங்களை தீட்டி செயல்பட்டு வந்திருப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் புர்கான் என்ற இடத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பினர் துப்பு துலக்கி வந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஜமாத் உல் முகாஜுதீன் பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பினர் பெங்களூரில் மூன்று மாதத்துக்கு முன்பு அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். இதில் மேற்கு வங்க குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய முகமது ரஹ்மான், கவுசர் ஆகிய இரண்டு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் தமிழ்நாட்டில் குண்டு வெடிப்புக்கு பயிற்சி பெற்றதாக திடுக்கிடும் தகவலை தெரிவித்தனர். கிருஷ்ணகிரி மலைப் பகுதியில் அதற்கான பயிற்சியை மேற்கொண்டதாகவும் கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், பயங்கரவாதிகள் இருவரையும் கிருஷ்ணகிரி மலைப் பகுதிக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது மலைப் பகுதியில் வெடிகுண்டு துகள்கள் சிக்கியது. ஜெலட்டின் குச்சிகளும் பிடிபட்டன. இது தொடர்பாக 2 பேரிடமும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.

Bangladesh Terror.tentacles spread

கிருஷ்ணகிரி மலைப்பகுதியில் வெடிகுண்டு சோதனை மற்றும் ராக்கெட் லாஞ்சரையும் செலுத்தி சோதனை: இந்த நிலையில் பயங்கரவாதிகள் இருவரும் கிருஷ்ணகிரி மலைப்பகுதியில் வெடிகுண்டு சோதனையுடன் சேர்த்து ராக்கெட் லாஞ்சரையும் செலுத்தி சோதனை நடத்தி இருக்கும் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது[7]. தமிழகத்தை பொறுத்தவரையில் ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவாளர்களே தொடர்ந்து பிடிபட்டு வந்த நிலையில், வங்கதேசத்தைச் சேர்ந்த “ஜமாத் உல் முகாஜுதீன்” பயங்கரவாத அமைப்பும் புதிதாக சதி செயல்களில் ஈடுபட்டு வந்திருப்பது உள்ளூர் போலீசார் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது[8]. கிருஷ்ணகிரி மலைப் பகுதியில் இந்த இயக்கத்தை சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகளும் தனியாக வந்து ராக்கெட் லாஞ்சர் சோதனையை நடத்தி இருக்க வாய்ப்பு இல்லை. இதன் பின்னணியில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. பெரிய அளவில் ‘நெட் வொர்க்’ அமைத்து செயல்பட்ட பின்னரே இரண்டு பயங்கரவாதிகளும் கிருஷ்ணகிரிக்கு வந்து சென்றிருக்கலாம் என்று தேசிய புலனாய்வு அமைப்பினர் கருதுகிறார்கள். இதனைத் தொடர்ந்து ராக்கெட் லாஞ்சரை செலுத்திய இரண்டு பயங்கரவாதிகளின் பின்னணியில் இருப்பவர்கள் யார்-யார் என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது[9]. ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்து கைது செய்யப்பட்டவர்களில் தமிழகத்தில்தான் அதிகம் பேர் பிடிபட்டுள்ளனர். இதனால் தேசிய புலனாய்வு அமைப்பினர் தமிழகத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்[10].

NIA chief etc

கிருஷ்ணகிரியில் யார் கண்ணிலும் படாமல் வேலை செய்தனர் என்பதே வியப்புதான்: கிருஷ்ணகிரி மலைப் பகுதிகளில் “அதை கண்டு பிடித்தேன், அதை கண்டு பிடித்தேன்,” என்று ஆராய்ச்சியாளர்கள் திரிந்து கொண்டே இருக்கிறார்கள். அவ்வப்பொழுது, செய்திகளும் வந்து கொண்டிருக்கின்றன. பிறகு, அவர்களையும் மீறி, ஏமாற்றி, தீவிரவாதிகள் பயிற்சி பெற்றனர், ராக்கெட் லாஞ்சர் விட்டனர் என்றால் திகைப்பாக இருக்கிறது. முன்னர், எல்.டி.டி.இக்கு, அம்பத்தூர் தொழிற்சாலைக்கு, ராக்கெட் லாஞ்சர் பாகங்கள் எல்லாம் சென்றது ஞாபகத்தில் இருக்கலாம். அதே போல, இப்பொழுது, ஹோசூரிலிருந்து அல்லது சுற்றியுள்ள தொழிற்சாலைலளில் அவை உற்பத்தி செய்யப் பட்டு, அவர்களுக்கு சப்ளை செய்யப் பட்டிருக்கலாம். தமிழ் நாடு மறுபடியும், இன்னொரு கோயம்புத்தூர் குண்டுவெடிப்பிற்கு இலக்காகாமல் இருந்தால் சரி.

© வேதபிரகாஷ்

15-10-2019

ISIS 33 arrested from Tamilnadu

[1] மாலைமலர், .எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்புதமிழ்நாட்டில் 33 பேர் கைது, பதிவு: அக்டோபர் 14, 2019 14:46 IST

[2] https://www.maalaimalar.com/news/district/2019/10/14144623/1265911/33-arrested-in-TN-contact-with-IS-Militants.vpf

[3] புதியதலைமுறை, ஐஎஸ் அமைப்புடன் தொடர்புதமிழகத்தில் 33 பேர் கைது, Web Team Published : 14 Oct, 2019 11:58 am

[4] http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/73127-connection-with-is-127-arrested.html

[5] தமிழ்.ஒன்.இந்தியா, தமிழகத்தில் 33 ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் கைது.. கிருஷ்ணகிரி மலையில் ராக்கெட் லாஞ்சர் சோதனை.. பகீர் தகவல்,

By Veerakumar, Updated: Monday, October 14, 2019, 18:35 [IST]

[6] https://tamil.oneindia.com/news/delhi/33-isis-supporters-arrested-from-tamilnadu-says-nia-365609.html

[7] தினத்தந்தி, தமிழ்நாட்டில் புதிய பயங்கரவாத அமைப்பு சதி திட்டம்ராக்கெட் லாஞ்சர் செலுத்தி பயிற்சி, பதிவு: அக்டோபர் 15, 2019 14:13 PM.

[8] https://www.dailythanthi.com/News/India/2019/10/15141354/New-terrorist-terror-plot-in-Tamil-Nadu-Rocket-Launcher.vpf

[9] மாலைமலர், தமிழ்நாட்டில் புதிய பயங்கரவாதிகள் சதி திட்டம்ராக்கெட் லாஞ்சர் செலுத்தி சோதனை நடத்தினர், பதிவு: அக்டோபர் 15, 2019 12:19 IST.

[10] https://www.maalaimalar.com/news/district/2019/10/15121902/1266070/New-Militants-plot-in-Tamil-Nadu.vpf

ஜாகிர் நாயக்கின் அடிப்படைவாத இஸ்லாம் பயங்கரவாத-தீவிரவாதம், ஜிஹாதி-பயங்கரவாதங்களை பெருக்கி, முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாதிகளாக்கும் விதம்!

ஜூலை 9, 2016

ஜாகிர் நாயக்கின் அடிப்படைவாத இஸ்லாம் பயங்கரவாத-தீவிரவாதம், ஜிஹாதி-பயங்கரவாதங்களை பெருக்கி, முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாதிகளாக்கும் விதம்!

bangladesh-attack-map-data01-07-2016 கடைசி வெள்ளிக்கிழமை அன்று வந்த ஜிஹாதிதீவிரவாதிகள்: வங்கதேச தலைநகர் டாக்காவில், கடந்த வாரம் ஜூலை.1, 2016 அன்று, “புனித” ரம்ஜான் மாதத்தில் கடைசி வெள்ளிக்கிழமை அன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், ஹோலே ஆரிசன் பேக்கரி சிக்கியது. தூதரங்கள் இருக்கும் அப்பகுதியை ஜிஹாதிகள் தேர்ந்தெடுத்தனர் என்று தெரிகிறது. இரவு, சுமார் 8.45 மணி அளவில் துப்பாக்கிகளோடு உள்ளே “அல்லாஹு அக்பர்” என்று கத்திக் கொண்டே நுழைந்தவர்கள், எல்லோரையும் பிணைகைதிகளாகக் கொண்டனர்[1]. இந்தியர் ஒருவர் உட்பட  22 பேர் பலியானார்கள் – இவர்களில் பெரும்பாலானவர் வெளிநாட்டவர்கள். அவர்களில் –

இத்தாலியர்  .      – 9

ஜப்பானியர்   ..     – 7

வங்காளதேசத்தவர் .– 2

அமெரிக்கர்    ..    – 1

இந்தியர்     .      – 1

போலீஸ்காரர் ….    – 2

தீவிரவாதிகள் முதலில் குரான் வசனங்களை கூறச்சொன்னார்கள். அதாவது, முஸ்லிம்களா இல்லையா என்று அவ்வாறு தீர்மானித்தார்கள் போலும்! சொன்னவர்களை வெளியே விட்டார்கள். மறுத்தவர்களை ஒருவர்-ஒருவராகக் குத்திக் கொலை செய்ய ஆரம்பித்தனர்[2].

The faces of dhaka-assilantsகொல்லப்பட்ட தீவிரவாதிகள்: துப்பாக்கிகளுடன் வந்த ஏழு தீவிரவாதிகளும் சுட்டு கொல்லப்பட்டனர்:

  1. மீர் சமேஷ் மோபேஷ்வர்.
  2. ரோஹன் இம்தியாஸ்.
  3. நிப்ரஸ் இஸ்லாம்.
  4. கைரூல் இஸ்லாம்.
  5. ரிபான்.
  6. சைஃபுல் இஸ்லாம்.

இரண்டு பேர்  பிடிபட்டு கைது செய்யப்பட்டனர். ஐசில் / ஐசிஸ் இத்தாக்குதலுக்கு ஒப்புக்கொண்டது. இரவு முழுவதும், அரசு விரைவு நடவடிக்கை வீஎஅர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை தொடர்ந்து நடந்தது. அடுக்த்த நாள் காலை, சுமார் 7 மணியளவில், உள்ளே நுழைந்து, தீவிரவாத்கள் ஆறுபேரை சுட்டுக் கொன்றது. 13 பேர் விடுவிக்கப்பட்டனர், 20 பிணங்கள் கண்டெடுக்கப்ப்ட்டன. இந்த தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் இரண்டு பேர், மும்பையில் மத போதகர் ஜாகிர் நாயக் பேச்சில் தாங்கள் கவரப்பட்டதாக கூறினர். தீவிரவாதிகளில் ஒருவனான ரோகன் இம்தியாஸை, மும்பையை சேர்ந்த, பிரபல இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சுக்கள் தாக்குதலுக்கு தூண்டியதாக செய்தி வெளியாகியது. பேஸ்புக்கில் ரோகன் இம்தியாஸ், ஜாகீர் நாயக் போதனைகளை பரப்பி வவந்தது அம்பலமானது.

One of the victims killed at Holey Artisan Bakery, Dacca06-07-2016 ரம்ஜான் முடியும் நாளன்று மறுபடியும் தாக்குதல்: 06-07-2016 அன்று வங்கதேசத்தில் மீண்டும் தீவிரவாதிகள் என சந்தேகிக்கும் நபர்கள் தொழுகை நடைபெற்ற இடத்தில் தாக்குதல் நடத்திய நிலையில், ஜாகிர் நாயக்கின் பேச்சுக்களை ஆய்வுசெய்யுமாறு இந்தியாவிற்கு வங்காளதேசம் கோரிக்கை விடுத்து உள்ளது[3]. வங்காளதேச தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஹசானுல் ஹக், கூறுகையில் “ஜாகிர் நாயக், போதனைகள் குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் இல்லை. நாயக்கின் போதனைகள் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது தொடர்பாக விசாரிக்கப்படும். நாங்கள் முழு விவகாரத்தையும் விசாரணை செய்து வருகிறோம்,” என்று கூறியுள்ளார். ஜாகிர் நாயக் பேச்சுக்களை ஆய்வு செய்யுமாறு இந்திய அரசு மற்றும் தகவல்துறை அமைச்சகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது என்றும் ஹக் கூறியுள்ளார்[4]. இது தொடர்பாக அவரது போதனைகளை ஆய்வு செய்ய இந்தியாவிடம் வங்காளதேசம் கேட்டுக் கொண்டு உள்ளது. மத்திய மற்றும் மராட்டிய அரசு இதுதொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்ய போலீசை கேட்டுக் கொண்டு உள்ளது. அவருடைய பேச்சு வீடியோக்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே கடந்த 2012-ம் ஆண்டு ஜாகிர் நாயக் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் கலந்துக் கொண்டதும், மேடையில் இருவரும் ஒன்றாக தோன்றும் விவகாரமும் பெரும் சர்ச்சைக்குள்ளாகியது.

Zakir inspired terrorist in action in Bangladeshஜாகிர் நாயக்கின் தூண்டுதல், ஊக்குவிப்பு, பிரச்சாரம்: இதனையடுத்து, ஜாகிர் நாயக் குறித்த விவாதம் எழுந்தது. இந்நிலையில், மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறுகையில், “ஜாகிர் நாயக் குறித்து அனைத்து விவரங்களையும் மத்திய உள்துறை அமைச்சகம் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது. அவரது பேச்சு ஆட்சேபனைக்குரியது என்றார். மேலும், வங்கதேச தாக்குதல் கண்டனத்திற்குரியது. பயங்கரவாதத்திற்கு எந்த மதமும் கிடையாது. எந்த பகுதியும் கிடையாது. பயங்கரவாதத்திற்கு எதிராக அனைத்து உலக நாடுகளும் ஒன்று சேர வேண்டும்”, என்றார்[5]. இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு சூசகமாக தெரிவித்துள்ளார்[6]. இதற்குள், தில்லி டிவி-செனல்கள் ஜாகிர் நாயக்கைப் பற்றிய செய்திகளை வெளியிட ஆரம்பித்து விட்டது.

Zakir Digvijaya embracing, ...etc September 2012 videoதிக்விஜய சிங்கும், ஜாகிர் நாயக்கும் கட்டிப் பிடித்து மகிழும் நிகழ்ச்சி[7]: ஜாகிர் நாயக்குடன் செப்டம்பர் 2012 வருடத்தைய நிகழ்ச்சியில் ஒன்றாக தோன்றி அமைதிக்கான தூதர் என்று பாராட்டை வழங்கி சர்ச்சையில் சிக்கியுள்ளார் காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங். ஜாகீரை மிக்க மரியாதையும் “ஹுஜூர்” என்று விளிப்பதும், அவர் தான் அமைதியை கொண்டுவருகிறார் என்று பாராட்டுவதும், முஸ்லிம் போல சலாம் அடிப்பதும், கட்டிப்பிடிப்பதும் காட்சிகள் கொண்ட வீடியோ 07-07-2015 வியாழக்கிழமை இணைதளங்களில் உலாவ ஆரம்பித்தது[8]. முதலில் இதற்கு பதில் சொல்ல தப்பிய திக், பிறகு தன்னைக் காத்துக் கொள்ள வழக்கம் போல உளற ஆரம்பித்தார்.  சாத்வி பிரக்யா தாக்குரை ராஜ்நாத் சிங் சந்தித்தது தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளார்.

digvijaya-with-zakir-naik.transfer.transferசமாதான தூதுவர்என்று ஜாகிரை பாராட்டியது: நிகழ்ச்சியில் திக்விஜய் சிங் பேசுகையில் சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்கை “சமாதான தூதர் என்றும் அவரால் இந்தியா ஒன்றாக சமூகங்கள் கொண்டு உதவ முடியும்,” என்றும் கூறியுள்ளார். பயங்கரவாதிகளை ஊக்குவித்ததாக ஜாகிர் நாயக் மீது குற்றச்சாட்டு எழுந்து உள்ளநிலையில் திக்விஜய் சிங் பேச்சு விபரங்கள் பெரும் சர்ச்சையாகி உள்ளது. இதனையடுத்து பயங்கரவாதத்துடன் ஜாகிர் நாயக்கிற்கு தொடர்பு உள்ளது தொடர்பாக ஆவணங்கள் இருப்பின் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறிய திக்விஜய் சிங், விசாரணையை சந்திக்கவும் தயார் என்று கூறினார்[9].  இதனையடுத்து தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாகிய மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் விவகாரத்தை இழுத்து உள்ளார்[10]. இதுதொடர்பாக டுவிட்டரில் தகவல் வெளியிட்டு உள்ள திக்விஜய் சிங், “ஜாகிர் நாயக்குடன் மேடையை பகிர்ந்துக் கொண்ட காரணத்திற்காக நான் விமர்சனத்திற்கு உள்ளாகிஉள்ளேன், ஆனால் ராஜ்நாத் சிங் ஜி குண்டு வெடிப்பு குற்றவாளி பிரக்யா தாகுரை சந்தித்து பேசியது பற்றிய கருத்து என்ன? பிரக்யா தாகுர் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டவர் ஆனால் ஜாகிர் நாயக்கிற்கு எதிராக எந்த ஒரு வழக்கும் உள்ளதா? ஜாகிர் நாயக்குடன் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஜி மேடையை பகிர்ந்துக் கொண்டது தொடர்பான கருத்து என்ன?,” என்று கேள்விகளை எழுப்பியுள்ளார்.

© வேதபிரகாஷ்

09-07-2016

[1] ISIS terrorists shouted ‘Allahu Akbar’ as they hacked to death 20 foreign tourists in restaurant in Bangladesh – but spared those who could recite the Koran – before armoured troops moved in.By MIA DE GRAAF FOR DAILYMAIL.COM  and IMOGEN CALDERWOOD FOR MAILONLINE and AGENCIES

PUBLISHED: 17:01 GMT, 1 July 2016 | UPDATED: 15:40 GMT, 2 July 2016

[2] http://www.dailymail.co.uk/news/article-3670353/Gunmen-attack-restaurant-Dhakas-diplomatic-quarter-police-witness.html

[3] தமிழ்.ஒன்.இந்தியா, தீவிரவாதிகளை உருவாக்குகிறதா ஜாகிர் நாயக் போதனை..? இந்தியாவை ஆய்வு செய்ய சொல்கிறது வங்கதேசம், By: Veera Kumar, Published: Thursday, July 7, 2016, 15:30 [IST].

[4] http://tamil.oneindia.com/news/international/bangladesh-asks-india-examine-zakir-naik-s-sermons-257595.html

[5] தினமலர், ஜாகிர் நாயக் மீது நடவடிக்கை: வெங்கையா சூசகம், பதிவுசெய்த நாள். ஜூலை.7, 2016.18.01

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1559285

[7] Published on Jul 7, 2016, A video has emerged of the Congress veteran, Digvijay Singh sharing the stage with Zakir Naik who inspired terrorists with his vitriolic speeches. In the video from Semptember 2012, Digvijay Singh ; https://www.youtube.com/watch?v=lMLgC0fkZbI

[8] As Naik came under the scanner, Congress leader Digivjaya Singh was in the BJP’s line of fire after a 2012 video, showing him share a dais with the televangelist at an event to promote communal harmony, surfaced on Thursday 07-07-2016.

http://www.thehindu.com/news/national/mumbai-police-to-probe-preacher-zakir-naiks-speeches-devendra-fadnavis/article8819992.ece

[9] தினத்தந்தி, ஜாகிர் நாயக் விவகாரம்: பிரக்யா தாக்குரை ராஜ்நாத் சிங் சந்தித்தது தொடர்பாக திக்விஜய் சிங் கேள்வி,பதிவு செய்த நாள்: வெள்ளி, ஜூலை 08,2016, 2:36 PM IST; மாற்றம் செய்த நாள்: வெள்ளி, ஜூலை 08,2016, 2:36 PM IST

[10] http://www.dailythanthi.com/News/India/2016/07/08143637/Zakir-Naik-row-What-about-Rajnath-Singh-meeting-Pragya.vpf

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (11)

நவம்பர் 19, 2014

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (11)

Mamta-Banmgla infiltration -NIA

Mamta-Banmgla infiltration -NIA

என்.. மேற்கு வங்காளத்தில் மிரட்டப் படுகிறதா?: திங்கட் கிழமை (10-11-2014) அன்று கொல்கொத்தாவில் என்.ஐ.ஏவின் அலுவலகத்திற்கு வெளியே ஒரு குண்டு வெடித்தது[1]. அது என்.ஐ.ஏவின் புலன் விசாரணை மற்றும் நடவடிக்கைகள் குறைத்து கொள்ள வேண்டும் அல்லது மெதுவாக வேலை செய்ய வேண்டும் என்று எச்சரிப்பதற்கானது என்று சொல்லப் படுகிறது. மேற்கு வங்காளத்தில் நடக்கும் குண்டுவெடிப்புகள் பற்றிய விவரங்கள் மறைக்கப் படுகின்றன. மெடியாப்ரஸ் என்ற இடத்தில் 2012க் குண்டுவெடிப்பு நடந்தபோது, அவ்வீட்டில் ஷகீல் அஹமது இருந்தான். அவன் தான் இப்பொழுது அக்டோபர் 2, 2014 அன்று குண்டுவெடித்ததில் கொல்லப்பட்டுள்ளான். பிப்ரவரி 2013ல் கார்டன் ரீச் என்ற இடத்தில் நடந்த குண்டுவெடிப்பில் ரஞ்சித் ஷீல் என்ற டி.எம்.எஸ் கவுன்சிலரின் மகன் கொள்ளப்பட்டுள்ளான். ஆனால், இவற்றின் விவரங்கள் மறைக்கப் படுகின்றன[2]. அப்துல் ஹகீம் என்பவன் காக்ராகர், பர்தவானில் இருந்த தொழிற்சாலையில், ராக்கெட் லாஞ்சர் தயாரிப்பதற்கான ஆய்வுக்கூடம் இருந்தது என்று ஒப்புக் கொண்டுள்ளான்[3]. இவ்விவரங்கள் உள்ளூர் பிஜேபி தலைவர் சித்தார்த நாத் சிங் [BJP leader Siddharth Nath Singh] கூறியுள்ளதாக வெளியிடுகிறது. உள்ளூர் விவகாரங்கள், உள்ளூர் ஊடகக் காரர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும், எனவே, அவற்றை பிஜேபி மூலம் தான் தெரிந்தது போல காட்டிக் கொள்வது ஏனென்று புரியவில்லை. ஊடகங்கள் இவ்வழக்கை அரசியலாக்குகின்றனவா அல்லது அரசியல்வாதிகளே அவ்வாறு செய்கின்றனரா என்று பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

sajid has many id cards issued by goi

sajid has many id cards issued by goi

சஜித் ஷேக் முதலியோர் கைது (08-11-2014: சனிக்கிழமை (08-11-2014) அன்று பர்த்வான் குண்டு தொழிற்சாலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாக தேடப்பட்டு வந்த சஜித் ஷேக் [Sajid Sheikh] பிதாநகர் போலீஸாரால் கைது செய்யப் பட்டு, என்.ஐ.ஏவிடம் ஒப்படைத்தனர்[4]. கடந்த இரண்டு தினங்களில் மூன்று பேர் சிக்கியுள்ளனர் –

  1. ஜியா உல் ஹக், காலிசக், மால்டா [Zia-ul-Haque of Kaliachak in Malda],
  2. சுஜனா பேகம், பார்பேடா, கௌஹாத்தி [Sujana Begum from Barpeta in Guwahati],
  3. இப்பொழுது சஜீத் [Sajid from the outskirts of Kolkata].

ஜியா உல் ஹக், தான் ஜே.எம்.பியின் சஜித் மற்றும் சகீப் போன்றோருடன் தொடர்புள்ளதை ஒப்புக் கொண்டான். இதேபோல, பங்களாதேசத்தில், சாதர் உபசிலா ரெயில் நிலையத்தில் அப்துன் நூர் என்ற தடை செய்யப்பட்ட ஜே.எம்.பியின் ஆள் மற்றும் அவனது கூட்டாளிகள் மூன்று பேர் வெவ்வேறு இடங்களில் விரைவு நடவடிக்கைப் படையினரால் [RAB] கைது செய்யப்பட்டனர். இத்தகைய எல்லைகளைக் கடந்த தீவிரவாதம் எப்படி கண்டுகொள்ளாமல் வளர்ந்து வர ஏதுவாகியது என்பது விசித்திரமாக இருக்கிறது. மாநில போலீஸார், உளவுத்துறை, மக்கள் குடியேற்றம் பிரிவு அதிகாரிகள் முதலியோர்களுக்குத் தெரியாமல் இந்த அளவிற்கு தொடர்ந்து எல்லைகளை ஊடுருவி மக்களும், பொருட்களும் சென்று வந்திருக்க முடியாது.

SIMI linkages and connections with clamaflouges

SIMI linkages and connections with camouflages

கேரளாவுக்கு வேலைக்குச் சென்ற கரீம் ஷேக் எப்படி பர்த்வான் குண்டுவெடிப்பில் இறந்தான்?: நாற்பது நாட்களுக்குப் பிறகு, கரீம் ஷேய்க் என்பவனுடைய உடல் [Karim Sheikh of Kaferpur village of Birbhum district] 12-11-2014 அன்று அடையாளம் காணப்பட்டுள்ளது[5]. அமிருல் ஹொஸைன் [Amirul Hossain] என்ற அவனது சகோதரன், உடல் மிகவும் அழுகிய நிலையில் இருந்ததால், அடையாளம் காணுவதற்கு கஷ்டமாக இருந்தது என்றார். கபேர்பூர், பர்த்வான் மாவட்டத்தைச் சேர்ந்த இவன் அக்டோபர் 2ம் தேதி குண்டுவெடிப்பில் இறந்தான். பிறகு அவனது உடல் குடும்பத்தாருக்கு இறுதி சடங்கு நடத்த கொடுக்கப்பட்டது[6]. குடும்பத்தார் கரீம் ஷேய்க்கின் தீவிரவாத நடவடிக்கைப் பற்றி தங்களுக்கு ஒன்றும் தெரியாது, கேரளாவிற்கு வேலை நிமித்தமாக சில மாதங்களுக்கு முன்னர் சென்று வந்தார் என்று தான் கூறுகின்றனர். ஆனால், கேரளாவுக்கு வேலைக்குச் சென்ற கரீம் ஷேக் எப்படி பர்த்வான் குண்டுவெடிப்பில் இறந்தான், என்பது விசித்திரமாக இல்லை போலும்! மேலும், கரீம் ஷேய்க் கேரளாவுக்கு வேலைத் தேடித்தான் சென்றானா அல்லது தீவிரவாதிகளுடன் தொடர்பு கொள்ள, பயிற்சி பெற சென்றானா என்று தெரியவில்லை. 9/11 குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட டேவிட் கோல்மென் ஹெட்லி, மூணாறில் உள்ள ஒரு விருந்தினர் மாளிகையில் தங்கியிருப்பது தெரிய வந்தது. எனவே தீவிரவாதிகளில் கேரள தொடர்புகள் விவரமாகத்தான் இருந்து வருகின்றன.

jmb - Bangala terror

jmb – Bangala terror

பங்களாதேசத்திலும் பர்த்வான் குண்டுவெடிப்பில் சம்பந்தப் பட்டவர்கள், கூட்டாளிகள் கைது (11-11-2014): பர்த்வான் குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளி என சந்தேகிக்கப்படும் ஷேக் சாதிக் என்ற சாஜித்தின் சகோதரர் முகமது முனாயமை வங்கதேச அரசு 11-11-2014 அன்று கைது செய்துள்ளது. மேற்கு வங்க போலீசார் சாஜித்தை கைது செய்தபின்னர், வங்கதேசத்தில் அதிவிரைவுப் படை பட்டாலியன் போலீசார் தீவிர சோதனை நடத்தி வந்தனர். இன்று அதிகாலையில் நடத்தப்பட்ட சோதனையில், நாராயண்கஞ்ச் துறைமுக நகரமான பராசிகண்டாவில் முனாயம் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் வங்கதேசத்தில் தடை செய்யப்பட்ட ஜமாத்துல் முஜாகிதீன் இயக்கத்தைச் சேர்ந்தவர் ஆவார்[7]. ஜே.எம்.பியின் தொடர்புகள் ஏற்கெனவே எடுத்துக் காட்டப் பட்டன. 2007ல் இது அங்கு தடை செய்யப் பட்டவுடன், இந்தியாவில் வேரூன்ற ஆரம்பித்தது, அதற்கு மேற்கு வங்காள முஸ்லிம் அரசியல்வாதிகள் நன்றாக உதவியுள்ளார்கள். மற்ற அரசியல் கட்சிக் காரர்கள் “முஸ்லிம் ஓட்டு வங்கி” என்ற ஒரே எண்ணத்தில், எல்லாவற்றையும் மறைத்து வைத்தனர். அதனால், எதேச்சையாக குன்டு வெடித்து அவர்களைக் காட்டிக் கொடுத்து விட்டது. அதிலும் அக்டோபர் 2, 2014 – காந்தி பிறந்த நாளில் குண்டு வெடித்து அம்பலமாகியது. மேற்கு வங்க மாநிலம், பர்த்வான் மாவட்டம் கராகார்க் நகரில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவரின் வீட்டில் கடந்த மாதம் 2-ம்தேதி குண்டு வெடித்தது. இதில் 2 பேர் பலியாகினர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு வங்காளதேசத்தைச் சேர்ந்த தீவிரவாதிகளின் சதித்திட்டம்தான் காரணம் என்பது தேசியப் புலனாய்வு அமைப்பினர் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில், இவ்விரங்கள் மேலும் தெரிய வந்துள்ளன.

mamta's secularism and swami vivekananda

mamta’s secularism and swami vivekananda

தீவிரவாதம், மதம், நிறம், சித்தாந்தம்: தீவிரவாதத்தைத் தனித்துப் பார்க்கவேண்டும், அதனை எந்த மதத்துடன் தொடர்புப் படுத்திப் பார்க்கக் கூடாது. அதற்கு வண்ணமும் கொடுக்கக் கூடாது என்றெல்லாம் இந்தியாவில் அடிக்கடி போதனைகள் செய்வது உண்டு. ஆனால், காவி தீவிரவாதம் என்று காங்கிரஸ்காரர்கள் பேசி, அது ஊடகங்களில் பிரயோகம் செய்யப் பட்டது. ஆனால், பச்சைத் தீவிரவாதம் என்று முஸ்லிம்களின் தீவிரவாதத்தையோ, சிவப்புத் தீவிரவாதம் என்று கம்யூனிஸ (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட், நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் முதலிய இத்யாதிகள்) தீவிரவாதத்தையோ, கருப்புத் தீவிரவாதம் என்று திராவிடக்குழுக்களின் தீவிரவாதத்தையோக் குறிப்பிடவில்லை. ஆனால், இவையெல்லாம் நன்றாகத் தெரிந்தவைதான். வடகிழக்கு மற்றும் ஒரிஸாவில் கிருத்துவத் தீவிரவாதம் கூட வெளிப்பட்டுள்ளது. ஆனால், அதுவும் நிறத்துடன் ஒப்பிடவில்லை. இப்பொழுது, பர்த்வான் குண்டுவெடிப்பு, குண்டுகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், மதரஸாக்களே அதற்கு உபயோகப் படுத்தப் பட்டது, பெண்கள், ஜோடி-ஜோடிகளாக குண்டுகள் தயாரிப்பு, விநியோகங்களில் ஈடுபட்டது என்று பல விசயங்கள் வெளிவந்து கொண்டிருந்தாலும் சித்தாந்தவாதிகள் மௌனமாகவே இருக்கிறார்கள். பல அரசியல்வாதிகள் தங்களுக்கு ஒன்றுமே தெரியாது என்பது போல நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

© வேதபிரகாஷ்

18-11-2014

[1] http://zeenews.india.com/news/india/explosion-outside-nia-office-in-kolkata-warning-against-burdwan-probe_1497114.html

[2] “Mamata tried to cover up all the bomb blasts at hideouts of JuMB in West Bengal. Prior to the Burdwan blast on October 2, there had been two explosions. One was at Metiabruz here at a home in 2012 which was then occupied by Shakil Ahmed, the JuMB terrorist who died in Burdwan blast. In February 2013, there was another blast at Garden Reach in which the son of a TMC councillor Ranjit Shil died.”

[3] Singh said that the injured JuMB terrorist Abdul Hakim, now in NIA custody, during interrogation, had revealed that the house at Khagragarh in Burdwan was a lab for manufacturing rocket launchers   also.

[4] http://indianexpress.com/article/india/india-others/burdwan-blast-mastermind-arrested/

[5] http://www.hindustantimes.com/india-news/second-victim-of-burdwan-blast-identified/article1-1285328.aspx

[6] http://www.business-standard.com/article/pti-stories/body-of-burdwan-blast-accused-handed-over-to-family-114111200723_1.html

[7] http://www.maalaimalar.com/2014/11/11231755/Bangladesh-arrests-Burdwan-bla.html