23-10-2022 அன்றுஐஎஸ்பாணியில்தற்கொலைகுண்டுவெடிப்பில்ஈடுபட்டது: முபின் சம்பவத்தை அரங்கேற்றுவதற்கு முன்பு வீட்டிற்கு சென்று உடல் முழுவதும் முடிகளை மழித்து அகற்றி சேவ் செய்து விட்டு, தான் அணிந்திருந்த சட்டையை கழற்றி விட்டு வேறு சட்டை அணிந்து கொண்டு காரில் வெடிபொருட்களுடன் சதி திட்டத்தை நிறைவேற்ற புறப்பட்டதும் தெரியவந்தது[1] என்று தமிழக ஊடகங்கள் விவரிக்க ஆரமித்து விட்டன. பொதுவாக தற்கொலைப்படை தாக்குதல் நடத்துபவர்கள் தான் தங்கள் திட்டத்தை அரங்கேற்றுவதற்கு முன்பு உடல் முழுவதும் உள்ள முடிகளை முழுமையாக மழித்து சேவ் செய்வர்[2]. இந்த காட்சி கமலஹாசன் நடித்த விஸ்வரூபம் படத்திலும் வைக்கப் பட்டிருக்கும்[3], என்ற விளக்கத்தையும் சேர்க்கிறது இன்னொரு ஊடகம். தற்போது அதே நடைமுறையை ஜமேஷா முபின் பின்பற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது[4]. இவையெல்லாம், பாலஸ்தீனம், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற பகுதிகளில் உள்ள ஐசிஸ், அல்-குவைதா, தாலிபான் போன்ற தற்கொலை மனித குண்டாக மாறும் ஜிஹாதிகள், கையாலும் முறைகள் ஆகும். ஷஹீத் / தியாகியாக மாறுவதற்கான செயல்முறைகள் என்று தீவிரவாதிகள் / ஜிஹாதிகள் நம்புகின்றனர்[5]. இந்த விவரங்களும் ஒரு வாரம் கழித்து தான் செய்திகளாக வெளிவருகின்றன.
ஐசிஸ், ஜிஹாத்முதலியவாசகங்கள்கண்டுபிடிப்பு: ஜமேஷா முபின் வீட்டில் சோதனை நடத்தியபோது அவரது வீட்டில் இருந்து ‘சிலேட்’ ஒன்றை போலீசார் கைப்பற்றி உள்ளனர்[6]. அந்த சிலேட் தொடர்பான தகவல்களும் தற்போது வெளியாகி உள்ளன[7], தமிழ் ஊடகங்கள் செய்திகளை வெலியிட ஆரம்பித்தன. அந்த சிலேட்டில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன[8]. அதில் அரபு மொழியில் சில வாசகங்கள் இருந்தன[9]. மேலும் தமிழ்மொழியில் எழுதப்பட்டிருந்த வாசகத்தில், ‘அல்லாவின் இல்லத்தின் மீது கைவைத்தால் வேரறுப்போம்’ என்று கூறி இருந்தார். மேலும் மனித இனம் முஸ்லீம்கள் மற்றும் காபிர்கள் என பிரிக்கப்பட்டுள்ளது எனவும் எழுதப்பட்டுள்ளது. இது தீவிரமயமாக்களின் சாத்தியத்தை சுட்டிக்காட்டுகிறது என காவல்துறை தெரிவித்துள்ளது.மேலும் முபின் வெள்ளைத்தாளில் எழுதிய வாசகங்களையும் போலீசார் கைப்பற்றினார்கள். அதில் ஒரு தாளில், ‘ஜிகாத்தின் கடமைக்கான அழைப்பு’ என்று எழுதி இருந்தார். மேலும் ‘புனிதப் போரை நடத்துவது இளைஞர்கள், சிறுவர்கள் மற்றும் முதியவர்களின் கடமை’ என்றும் எழுதி இருந்தார். இந்த வாசகங்கள் ஜமேஷா முபின் தனது கைப்பட எழுதியுள்ளதாக தெரிகிறது. எனவே முபின் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர் என்பது உறுதியாகி உள்ளது, என பிறகு தமிழக ஊடகங்கள் செய்திகளை வெளியிட ஆரம்பித்து விட்டன.
தன்னிச்சையாகநடத்தப்பட்டதீவிரவாதசெயலா, கூட்டுமுயற்சியாபோன்றவாத–விவாதங்கள் – செய்திகள்: பிற மதங்களைச் சேர்ந்த கடவுள்களின் பெயர்கள், குடியுரிமை திருத்தம் சட்டம், கர்நாடகாவில் ஹிஜாப் சர்ச்சை, முஸ்லீம்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவது பற்றிய குறிப்புகள் கொண்ட விளக்கப்படம் – ஆகியவை கடந்த வாரம் கோவை கார் சிலிண்ட வெடிப்பில் உயிரிழந்த ஜமேஷா முபினின் வீட்டில் இருந்து தமிழக காவல்துறையினரால் மீட்கப்பட்ட குறைந்தது 4 டைரிகளில் தமிழில் கையால் எழுதப்பட்ட பதிவுகளில் ஒன்றாக உள்ளது. இவையெல்லாம், அடிப்படைவாதம், பயங்கரவாதம், தீவிரவாதம், முதலியவற்றை மனோதத்துவ ரீதியில் ஊக்குவிப்பதற்கு, அதிகமாக்குவதற்கு என்பதை அறிந்து கொள்ளலாம். இவை தானாக, தன்னிச்சையாக வந்து விடாது. இத்தனை வெடிமருந்து பொருட்கள் சேகரிக்க வேண்டும் என்பதிலிருந்தே நிச்சயமாக, ஒன்றிற்கும் மேற்பட்ட, பலர் சம்பந்தப் பட்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். இதுவரை ஆறுபேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
ஜிஹாதிபுத்தகங்கள், இலக்கியம்முதலியவைகண்டெடுப்பு: இவை ஹதீஸ் (சொற்கள், செயல்கள் மற்றும் முஹம்மது நபியின் மௌன அங்கீகாரம் பற்றிய பதிவு) மற்றும் ஜிஹாத் (இஸ்லாத்தின் எதிரிகளுக்கு எதிரான போராட்டம்) பற்றிய குறிப்புகளைக் கொண்டிருந்தன[10]. மனிதர்கள் முஸ்லீம்கள் மற்றும் முஸ்லீம்கள் அல்லாதவர்கள் என்று பிரிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு குறிப்பு கூறுகிறது[11]. அதுமட்டுமின்றி, ஜிஹாத் கடமை யாருக்கு இருக்கிறது, யாருக்கு அந்த கடமை இல்லை என்ற குறிப்பையும் போலீசார் கண்டுபிடித்தனர்[12]. இந்த பொருட்கள் தவிர, ஐஎஸ்ஐஎஸ் கொடியின் சின்னம் வரையப்பட்ட ஸ்லேட்டை போலீசார் மீட்டனர்[13]. ‘அல்லாஹ்வின் வீட்டின் மீது யார் கை வைத்தாலும் அவர்களை அழித்து விடுவோம்’ என்ற மற்றொரு ஸ்லேட்டும் கிடைத்தது[14]. இவை உருது மற்றும் தமிழில் எழுதப் பட்டிருந்தன[15]. ஆக இவையெல்லாம் அடிப்படைவாதம், பயங்கரவாதம், தீவிரவாதம், முதலியவற்றின் உச்சமாகும். எனவே இவையெல்லாம் திட்டமிட்ட செயல்கள் என்பதைத் தான் காட்டுகின்றன. தமிழகத்தை பொறுத்த வரையில், கோவையில் இது இரண்டாவது முறையாக இத்தகைய செயல் நிறைவேறியிருப்பதால், உன்னிப்பாக கவனிக்கப் பட்டு அலச வேண்டியுள்ளது.
முபீன்ஒருசுயமானதீவிரவாதி, அவனுக்குஅதிநவீனவெடிகுண்டுதயாரிக்கும்திறனும்இல்லை: “அவருடையஉக்கடம்வீட்டில்கண்டெடுக்கப்பட்டபெரும்பாலானபுத்தகங்கள்மற்றும்குறிப்பேடுகள்வெடிகுண்டுதயாரித்தல், ஜிஹாத்மற்றும்பிறமதங்களைப்பற்றியஅவரதுவெளிப்படையாகத்தெரிகிறது. நாங்கள்விசாரித்தகுற்றஞ்சாட்டப்பட்டஇருவரின்கருத்துப்படி, ஜமேஷாமுபீன்இந்தியமுஸ்லிம்கள்மற்றும்அவர்கள்எவ்வாறுஒடுக்கப்படுகிறார்கள்என்பதுகுறித்துதனதுகருத்தைவெளிப்படுத்துவார்,” என்று பாலகிருஷ்ணன் கூறினார். அவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டது புரிகிறது. முபீன் ஒரு சுயமான தீவிரவாதி என்று இதுவரை தங்கள் விசாரணையில் தெரியவந்துள்ளது, என்று தமிழக ஊடகங்கள் முடிவுக்கு வருகின்றன. அவை பெரும்பாலும் புத்தகங்கள் மற்றும் இணையத்தில் இருந்து பெறப்பட்டது. மேலும், அவருக்கு எந்த அதிநவீன வெடிகுண்டு தயாரிக்கும் திறனும் இல்லை.” என்று கூறினார். ஆனால், காஸ் சிலிண்டர் வெடிக்கும் அளவுக்கு, தொழிற்நுட்பம் தெரிந்து கொண்டது, அது வெடித்து, அவனே பலியானது நிதர்சனமாக உள்ளது.
வேதபிரகாஷ்
05-11-2022
[1] தினத்தந்தி, கோவையில்கார்வெடிப்பு: முபின்ஐ.எஸ். பயங்கரவாதி…! அதிர்ச்சிதரும்பின்னணி, நவம்பர் 4, 3:31 pm
[5] ஈரான், ஈராக் போன்ற நாடுகளில், மூளைசலைவை செய்ய, வீடியோக்கள் காண்பிக்கப் படுகின்றன. அவற்றைப் பார்க்கும் இளைஞர்கள் அதுபோலவே தயாராகின்றனர். உயிதியாகம் செய்து, ஷஹீதாக, சொர்க்கம் செல்வதற்கு தயாராகிறார்கள். அவ்வாறே, அவர்களுக்கு போதனையும் செய்யப் படுகிறது.
[6] மாலைமுரசு, ஜமேஷாமுபீன்வீட்டில்கண்டெடுக்கப்பட்டமுக்கியஆவணங்கள்…ஐஎஸ்ஐஎஸ்அமைப்புடன்தொடர்பா?!!, webteam, Nov 4, 2022 – 17:5
[12] Times Now, Coimbatore car blast: Documents talking about jihad, kafirs and Muslims recovered from Jamesha Mubin’s house, Times Now Bureau, Updated Nov 3, 2022 | 02:01 PM IST
[14] Republic TV, In Coimbatore Blast Case, Docs On ‘Jihad’ & Radicalisation Found At Deceased Mubin’s House, Last Updated: 3rd November, 2022 16:31 IST
பெண், உலேமா முன்பு வரக்கூடாதா – கேரள இஸ்லாமிய முசலியார் மாணவி மேடைக்கு வந்ததற்கு திட்டிக் கண்டிந்து கொண்ட விவகாரம்!
கடவுளின் தேசமான கேரளாவில் மாணவி மேடைக்கு வந்தது சர்ச்சையானது: “கடவுளின் தேசம்” என்று பறைச்சாற்றிக் கொள்ளும் கேரளாவில், சிறுமியை இஸ்லாமிய உலேமா உதாசீனப் படுத்தியுள்ளது திகைப்பாக உள்ளது. அதிக படிப்பறிவு உள்ள மாநிலமும் கேரளா தான். பிறகு, ஏன், எதற்கு இந்த முரண்பாடு? கேரளாவில் 10 வகுப்பு மாணவியை மேடைக்கு அழைத்து விருது வழங்கியதற்காக விழா அமைப்பாளர்களை முஸ்லிம் மத குரு ஒருவர் கண்டித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், மத குருவின் செயலுக்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது[1]. சமஸ்தா கேரளா ஜெம் இய்யதுல் உலமா (அனைத்து கேரள உலமா அமைப்பு) என்பது கேரள சன்னி மத குரு சங்கமாகும். இந்த அமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவர் 10 வகுப்பு மாணவியை மேடைக்கு அழைத்து சான்றிதழை பெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது பெரும் பரபரப்பு மற்றும் சர்ச்சையை கிளப்பியுள்ளது[2]. கேரள மாநிலம் மல்லாபுரத்தில் மதரஸா கட்டிடத்தின் திறப்பு விழாவின் போது இந்த சம்பவம் நடந்துள்ளது[3]. இந்த விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பனக்காடு செய்யது அப்பாஸ் அலி ஷிஹாப் தங்கல், பத்தாம் வகுப்பு மாணவிக்கு விருது வழங்கினார்[4].
முசலியார்மேடையில்இருக்கும்போதுபெண்கள்வரக்கூடாதாம் – கோபித்துக்கொண்டுதிட்டியஉலேமா: வழக்கம் போல முதலமைசர் மற்றும் ஆளும் கட்சியினர் அமைதியோடு இருந்தனர். “குர்ஆன்கட்டளைகளைமீறிமுஸ்லிம்பெண்கள்தனிமையில்தள்ளப்படுவதற்குஇச்சம்பவம்இன்னொருஉதாரணம்,” என கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது தன் ட்விட்டர் பக்கத்தில் வேதனையோடு தெரிவித்துள்ளார்[5]. கேரள சமூகவலைதளங்களில் வைரலான ஒரு காணொளியே ஆளுநரையும் சங்கடப்படுத்தியுள்ளது[6]. கேரளத்தின் மளப்புரத்தில் சமஸ்தா கேரளா ஜெம் இய்யத்துல் உலமா அமைப்பின் சார்பில் சாதனை மாணவிகளுக்கு விருது வழங்கப்பட்டது. இதில் மதரஸா பள்ளியில் (அரபு பாடம்) பயிலும் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவருக்கும் விருது வழங்கப்பட்டது. மதரஸா நிர்வாகி அந்த மாணவியின் பெயரைச் சொல்லி விருது வாங்க வர மேடைக்கு அழைத்தார். மாணவியும் மேடைக்கு வந்தார். இதைப் பார்த்ததும் சமஸ்தா ஜெம் இய்யத்துல் உலமா அமைப்பின் செயற்பாட்டாளர் எம்.டி.அப்துல்லா முசலியார், பத்தாம் வகுப்புப் படிக்கும் பெண்ணை எப்படி பொதுமேடைக்கு அழைக்கலாம். என்னைப் போன்ற மதக்குருக்களை மேடையில் வைத்துக்கொண்டே நீங்கள் இப்படிச் செய்யலாமா? என சிறுமியை மேடைக்கு அழைத்தவரை கடுமையாகத் திட்டினார்.
உங்களுக்குமதவிதிகள்தெரியாதாஎனவும்எச்சரித்தார்: இந்த சிறுமியை அழைத்ததற்குப் பதில் அவரது பெற்றோரை அல்லவா அழைத்திருக்க வேண்டும் எனவும் அப்துல்லா முசலியார் திட்டும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலானது. அதைத் தொடர்ந்து சிறுமி கீழே அனுப்பப்பட்டு, அவரது பெற்றோர் மேடைக்கு வந்தனர். இது சிறுமியை அவமதிக்கும் விதத்தில் உள்ளதாக சமூக ஆர்வலர்களின் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்நிலையில் இதுகுறித்து கருத்துத் தெரிவித்திருக்கும் கேரள மகளிர் ஆணையத் தலைவர் சதிதேவி, “படித்தவர்கள்அதிகம்நிறைந்த, பெண்கள்அதிகம்வாழும்கேரளத்தில்இந்தசம்பவம்நடந்திருக்கிறது. சமூகத்தைபலதலைமுறைகளுக்குகீழ்நோக்கிஇழுப்பவர்களிடம்இருந்துமக்கள்விழிப்படையவேண்டும்,” என அறிக்கை வெளியிட்டுள்ளார். இதனிடையே காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகளின் மூத்த நிர்வாகிகள் பலரும் இதற்கு எதிராகவும், இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். இருப்பினும் இவ்விவகாரத்தை அமுக்கி வாசித்தனர்.
பெண்கள்தனிமைப்படுத்தப்படவேண்டும்என்பதுவிதியல்ல: கேரள ஆளுநர் ஆரிப் முகமதுகான் தன் ட்விட்டர் பக்கத்தில்[7], “திருக்குரானின்கட்டளைகளையும்மீறி, முஸ்லிம்பெண்கள்தனிமையில்தள்ளப்படுவதற்குஇந்தசம்பவமும்ஒருஉதாரணம். முஸ்லிம்குடும்பத்தில்பிறந்ததால்தகுதியானவிருதைப்பெறும்போதுமேடையில்அவமானப்படுத்தப்பட்டதைப்பார்க்கும்போதுவருத்தமாகஉள்ளது. மதகுருமார்கள்குரானின்கட்டளையைமீறியும், அரசியலமைப்புசட்டத்தைமீறியும்முஸ்லிம்பெண்களைதனிமைப்படுத்துவது, அவர்களின்ஆளுமையைநசுக்குவதுஆகியவற்றுக்குஇதுவும்ஒருஉதாரணம்,” என வேதனையோடு கூறியுள்ளார்[8]. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்[9]. இதனிடையே இந்தச் சம்பவத்தைக் கடுமையாகச் சாடியுள்ள கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், ஆளும் தரப்பையும் இது குறித்து கேள்வி எழுப்பி உள்ளார்[10]. இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்[11], “இந்தவிவகாரத்தில்கேரளாஆளும்தரப்பினர்மௌனம்குறித்துவருத்தம்அளிக்கிறது. அரசியல்வாதிகள்மட்டுமின்றிஅனைவருமேஇந்தவிவகாரத்தில்மௌனம்காக்கின்றனர். நமதுவீட்டுப்பெண்களின்மரியாதைமற்றும்கண்ணியம்பாதுகாக்கஅனைத்துக்கட்சிகளும்இதுகுறித்துப்பேசவேண்டும். இந்தவிவகாரத்தில்அவர்களைவிட (கேரளஅரசு) நான்அதிகம்பேசிஉள்ளேன்,” என்றார்[12].
அடிப்படைவாதஇஸ்லாமில்பெண்கள்தனிமைப்படுத்தப்படுகின்றனர்: முஸ்லிம் பெண்கள் வெளியே வரக்கூடாது, ஆண்களுக்கு சமமாக எல்லா காரியங்களிலும் ஈடுபடக் கூடாது, காஜி, மௌலானா, உலேமா முன்பாக முகத்தைக் காட்டிக் கொண்டு வரக் கூடாது, பர்தா / ஹிஜாப் அணிந்து கொள்ள வேண்டும், முகத்தையும் மூடிக் கொள்ள வேண்டும் என்றெல்லாம், தலிபன் போன்ற அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள் ஆணையிடுவதை செய்திகளாகப் படிக்கலாம். விமான பயணங்களில் பெண்கள் தனியாக பயணிக்க கூடாது. வேலைக்கு செல்லக்கூடாது. டிரைவிங் லைசென்ஸ் எடுக்க தடை. தனியே வெளியே நடமாடக்கூடாது. உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை மறைக்கும் புர்கா அணிய வேண்டும் என பெண்களை வீட்டில் முடக்கும் வகையிலான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் பூங்காக்களில் ஆண்கள், பெண்கள் சேர்ந்து செல்ல தடை விதிக்கப்பட்டது. அதாவது ஆண்கள், பெண்கள் தனித்தனியே தான் பூங்காக்களுக்கு செல்ல முடியும். வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் மட்டும் பெண்கள் பூங்காக்களுக்கு செல்ல முடியும். மற்ற நான்கு நாட்கள் ஆண்கள் செல்ல வேண்டும். இந்நிலையில் தான் தற்போது ஓட்டல், ரெஸ்டாரண்ட்களில் ஆண்கள், பெண்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளது[13]. ஆப்கனில் மேற்கு பகுதியில் உள்ள ஹெராத் மாகாணத்தில் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. கணவன்-மனைவி உள்பட எத்தகைய உறவாக இருந்தாலும் கூட ஆண்கள், பெண்கள் தனித்தனியே தான் அமர்ந்து சாப்பிட வேண்டும்[14]. இதுபற்றி ஆப்கனின் நல்லொழுக்கத்துறை அமைச்சகம் கூறுகையில், ‛‛உணவகங்களில்ஆண்கள், பெண்களைபிரித்துஉணவுசாப்பிடஅறிவுறுத்தப்பட்டுள்ளது,” என்றார்
[3] விகடன், `பெண்களைபரிசுபெறமேடைக்குஅழைக்கக்கூடாது!’ – கேரளஇஸ்லாமியதலைவரின்செயலால்கொதித்தகவர்னர், சிந்து ஆர், Published:12 May 2022 6 PMUpdated:12 May 2022 6 PM.
[7] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், பெண்கள்மேடைக்குவரக்கூடாது..!! இந்தகாலத்தில்இப்படிஒருஇசுலாமியஅமைப்பா.? கொந்தளிக்கும்ஆளுநர், Ezhilarasan Babu, Chennai, First Published May 13, 2022, 1:44 PM IST; Last Updated May 13, 2022, 1:44 PM IST
[9] தினமணி, மலப்புரத்தில்சிறுமிஅவமதிப்புவிவகாரம்: அரசியல்தலைவா்களின்மெளனம்ஏமாற்றமளிக்கிறது, By DIN | Published On : 13th May 2022 03:01 AM | Last Updated : 13th May 2022
பாகிஸ்தான் நடிகை கொலை – ஆணவக் கொலையா, கௌரவ கொலையா, மதக்கொலையா, ஜிஹாதி கொலையா – பின்னணி என்ன?
பவுசியாஅஷீம், குவாந்தீல்பலூச்ஆகி, நடிகை–மாடல்ஆனது: பாகிஸ்தானைச் சேர்ந்தவர் குவாந்தீல் பலூச் (26). இவரது இயற்பெயர் பவுசியா அஷீம். பாகிஸ்தானில் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருபவர். அத்துடன் மாடலிங்கிலும் ஈடுபட்டு வருகிறார். மாடலிங்கில் ஈடுபட ஆரம்பித்தவுடன் தனது பெயரை குவாந்தீல் பலூச் என்று மாற்றிக் கொண்டார். மாடலிங்கில் அவருக்கு கிடைத்த புகழை விட சமூக வலைதளங்களில் அவரால் வெளியிடப்பட்ட அவரது வீடியோக்கள் மற்றும் ஏடாகூட”செல்பி” புகைப்படங்கள் மூலம் அவரது ரசிகர் கூட்டம் பெருகியது[1]. அத்துடன் முகநூலில் வெளியிட்ட அவரது சர்ச்சைக்குரிய சுய விளம்பரம் தேடும் கருத்துக்கள் மூலமும் புகழ்பெற்றார்[2]. கடந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது பாகிஸ்தான் அணி இந்தியாவை தோற்கடித்தால் நிர்வாண நடனம் ஆடத்தயாராக இருப்பதாக கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். அந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதால் பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் அப்ரிதியை திட்டி தீர்த்து வீடியோ வெளி யிட்டார். அண்மையில் அவரது சர்ச்சைக்குரிய இசை ஆல்பம் ஒன்றும் வெளியானது. ஆனால், பழமைவாதிகளால் அவர் கண்டனத்திற்கு உள்ளாகியிருந்தார்.
இந்தியதொலைக்காட்சியின் ‘பிக்பாஸ்’ ரியாலிட்டிஷோவில்பங்கேற்கஅவருக்குஅழைப்புகொடுத்தது: சமூகவலைத்தளம் மூலம் உல களாவிய அளவில் அவர் பிரபலமானதால் இந்திய தொலைக் காட்சியின் ‘பிக்பாஸ்’ ரியாலிட்டி ஷோவில் பங்கேற்க அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. பாகிஸ்தான் நட்சத்திரங்களில் இணையத்தில் அதிகம் தேடப்படும் 10 பேரில் ஒருவராக குவான்டீல் பிரபலமடைந்தார். பழமைவாதிகள் அவருக்கு நேரடியாக கொலை மிரட்டல் விடுத்தனர். இதன்காரணமாக கராச்சியில் வசித்து வந்த அவர் பாதுகாப்பு கருதி முல்தானில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றார். அவருக்கு உடன் பிறந்த 2 சகோதரிகளும் 5 சகோதரர்களும் உள்ளனர். குவான்டீலின் சமூக வலைத்தள வாழ்க்கையை குடும்பத்தினர் விரும்பவில்லை[3]. வெளியில் பெரிய அளவில் புகழ் பெற்ற போதும் அவரது மாடலிங் தொழில் மற்றும் சமூக வலைதள நடவடிக்கைகளுக்கு அவரது குடும்பத்தார் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்து வந்தது. மாடலிங் தொழிலை விட்டு விலகும்படி அவரது சகோதரர் மிரட்டல் விடுத்து வந்ததாக கூறப்பகிறது.
முஃப்திஅப்துல்குவாயின்நிலை: அண்மையில் இம்ரான்கான் கட்சியை சேர்ந்தவரும், மத குருவுமான முஃப்தி அப்துல் குவாய் [member of Central Ruet-e-Hilal Committee, Mufti Abdul Qawi] என்பவருடன் செல்ஃபி எடுத்து, அதனை ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படங்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன. இந்தியாவில் இத்தகைய படங்களை வைத்து, ஊடகங்கள் “இன்னொரு நித்தியானந்தா” என்றெல்லாம் விவரிப்பர். படங்களுடன் செய்திகளை வெளியிட்டு கலாட்டா செய்வர். ஆனால், இவ்விசயத்தில் அமுக்கப் பார்க்கின்றன போலும். இதனைத் தொடர்ந்து முஃப்தி அப்துல் குவாய் மத நடவடிக்கைகளில் ஈடுபடத் தடை விதிக்கப்பட்டது மற்றும் மத்திய ருயத்-இ-ஹிலால் கமிட்டி உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டார் [4]. குவாந்தீல் இம்ரான் கானை சந்திக்க வேண்டும் என்று தன்னிடம் சொன்னதாகவும், ஆனால், அச்சந்திப்பு நிகழவில்லை என்றும் முப்தி கூறினார். ஆனால், இத்தகைய “மரியாதை கொலைகளை” இஸ்லாம் அனுமதிப்பதில்லை மற்றும் பலூச்சின் கொலையை ஷரியத்தின் படியும் நியாயப்படுத்த முடியாது என்றார்[5]. மேலும் தான் பலுச்சை நல்வழிபடுத்த அறிவுறுத்தியதாகவும், பாவம் செய்யக்கூடாது என்று போதித்ததாகவும் கூறினார்[6]. இது (பலூச்சின் கொலை) ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்றார்[7]. இவரை போலீஸார் விசாரிக்க வேண்டுமா, கூடாது என்பது பற்றி மாறுபட்ட கருத்து நிலவுகிறது[8]. ஆக இறுதியில் இஸ்லாமிய அடிப்படைவாதம் தான் விஞ்சியது என்றாகிறது.
தென்னாப்பிரிக்கா, வளைகுடாமற்றும்ஐரோப்பியநாடுகளுகளில்வேலைசெய்தது (2007-2012): பௌசியா ஆஸீம் மார்ச்.1, 1990ல் பிறந்தாள். 2003-04ல் 14 வயதில் எட்டாவது படிக்கும் போதே, ஒரு பையனை காதலித்தாள், ஓடிப்போய் கல்யாணம் செய்து கொள்ள நினைத்தாள், ஆனால் நடக்கவில்லை, அவன் ஏமாற்றி விட்டான் என்றெல்லாம் பாகிஸ்தான் ஊடகங்கள் கூறுகின்றன[9]. இதனால், தான் தனித்து இருக்க விரும்பினாள். அந்த ஏமாற்றம் திருப்பு முனையாக அமைந்தது. ஒரு பேருந்து கம்பெனியில் சேர்ந்து வேலை செய்தாள். 2007ல், அதாவது 17 வயதில் தென்னாப்பிரிக்காவுக்கு தைரியமாக சென்று வேலைக்கு சென்றாள். பிறகு, வளைகுடா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று வேலை செய்துள்ளாள். அப்படியென்றால், அவளுக்கு அந்த அளவுக்கு துணொவும், தைரியமும் இருந்திருக்க வேண்டும். யாராவது உதவினார்களா போன்ற விவரங்கள் தெரியவில்லை. பிறகு தான் பாகிஸ்தானுக்கு வந்து நடிப்பு மூலம் தனது திறமைகளை வெளிகாட்டத் தீர்மானித்தாள்[10]. அப்படியென்றால், பத்தாண்டுகளில் அவள் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாள், உழைத்திருப்பாள் என்பதை கவனிக்க வேண்டும். 2013க்குப் பிறகு தான் அவள் பிரபலமடைந்தாள். வழக்கம் போல தமிழ் ஊடகங்கள் இவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், “நிர்வாண சவால் புகழ் பாகிஸ்தான் மாடல் கொலை!” என்று தலைப்பிட்டுதான் செய்திகளை வெளியிட்டுள்ளன.
காதல்போல, திருமணமும்தோல்வியில்முடிந்தது (2008-09): குவான்டிலுக்கு 17 வயதிலேயே அவரது பெற்றோர் ஆஷிக் ஹுஸைன் என்பவருக்கு திருமணம் 2008ல் செய்து வைத்தனர்[11]. 2009ல் ஒரு குழந்தை பிறந்தது. ஒரு வருடத்திலேயே அந்த பந்தம் முறிவுக்கு வந்தது. அது ஒரு காதல் திருமணம், பலூச் தனக்கு காதல் கடிதங்களை ரத்ததினால் எழுதினாள் என்றெல்லாம் அவர் சொன்னார்[12]. அவள் தனக்கு பங்களா வேண்டும் என்றெல்லாம் கேட்ட்டாள், அவளுக்காக தான் அதிகமாக செலவிழக்க வேண்டியிருந்தது என்றெல்லாம் குற்றஞ்சாட்டினார். அவளே பல நாடுகளுக்குச் சென்று வேலை செய்து சம்பாதித்துள்ளாள் எனும் போது, கணவனிடம் ஏன் பணம் கேட்க வேண்டும் என்ற கேள்வியும் எழுகின்றது. அவர் மேலும், பலூச் மூன்று திருமணங்கள் செய்து கொண்டால் என்றும் கூறினார்[13]. தினம் தினம் தன்னை கணவர் அடித்து சித்ரவதை செய்ததாக குவான்டில் கூறியுள்ளார்[14]. சீறிய வயதான, அழகான மனைவியுடன் அவரால் வாழ முடியவில்லை என்றால், அவர் மீது ஏதோ தவறுள்ளது என்ற் தெரிகிறது. அவருடன் குடும்பம் நடத்த முடியாமல், குழந்தையுடன் ஆப்கானிஸ்தானில் உள்ள தாரூல் அமானில் போய் அகதியாக வாழ்க்கை நடத்தி வந்தார். பின்னர் தாய்நாடு திரும்பிய குவான்டில், அடிக்கடி சர்ச்சைக்குரிய படங்களை வெளியிட்டு வந்தார்[15].
17லிருந்து 26 வயதில்மூன்றுதிருமணம்செய்துகொண்டு, ஒருபையனைப்பெற்றநடிகை: தெஹ்ரிக் இன்சாப் கட்சியின் தலைவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான இம்ரான்கானை காதலிப் பதாகவும் அவரை திருமணம் செய்ய காத்திருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் குவான்டீல் பகிரங்கமாக அறிவித்தார். இதனிடையே குவான்டீலுக்கு ஏற்கெனவே 3 முறை திருமணமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இது குறித்து அவர் கூறியபோது பெற்றோர் வற்புறுத் தலால் இளம் வயதில் கட்டாய திருமணம் செய்து விவகாரத்து பெற்றுவிட்டதாகக் தெரிவித்தார். அவருக்கு 7 வயதில் ஒரு மகன் இருப்பதையும் ஒப்புக்கொண்டார்[16]. இதெல்லாம் வழக்கம் போல, பிரபலமடைய அவள் கடைபிடித்த யுக்திகள் என்றே தோன்றுகிறது. சில வாரங்களுக்கு முன்னர் தனக்கு கொலை மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன என்று உள்துறை அமைச்சர் மற்றும் டி.எஸ்.பியிடம் புகார் கொடுத்திருந்தார்[17]. ஆனால், அரசு நிச்சயமாக கண்டுகொள்ளவில்லை என்றே தெரிகிறது.
[4] விகடன், நிர்வாணசவால்புகழ்பாகிஸ்தான்மாடல்கொலை!, Posted Date : 13:46 (16/07/2016).
[5] Earlier today, Qawi said that neither Islam permits killing for ‘honour’ nor Qandeel Baloch’s murder could be justified through sharia. While talking to the media in a mosque in Multan’s Qadeerabad, Qawi said that none could justify murder for ‘honour’ of the family in light of Islam and murderer Wasim should be punished.
[10] Back in 2003-04, when she was still in the eighth grade, she fell in love with a boy and they both decided to elope together. Unfortunately, the day Fouzia fled her home the boy she was in love with ditched her. This betrayal marked a turning point in the model’s life who then decided to become completely self-reliant in life. She joined a bus transport company as a hostess and braved the grim challenges of life. Back then, she was reportedly in touch with her family. However, she later decided to move on with her life and joined show business with a new name Qandeel Baloch. In 2007, she went to South Africa to earn money for herself. She later worked in the Middle East and various European countries before opting to return back to Pakistan to work on her acting skills.
[16] தி.இந்து, பாகிஸ்தான்நடிகைகவுரவகொலை: இந்தியகிரிக்கெட்அணிக்குசவால்விடுத்தவர், Published: July 16, 2016 16:06 ISTUpdated: July 17, 2016 11:43 IST.
[17] Weeks before her murder, however, Qandeel had notified the Interior Minister and Senior Superintendent of Police in Islamabad about the threatening calls she had been receiving, and had requested security.
இந்தியாவின் மீதான கலாச்சார தாக்குதல்: FHM என்ற மாத பத்திரிக்கை அக்கால தமிழ் சரோஜாதேவி / கொக்கரக்கோ பொன்றதாகும்[1]. நிர்வாணம், செக்ஸ்[2], புரோனோகிராபி போன்றவைகளை வைத்துக் கொண்டு வியாபாரம் நடத்தி வருகிறது[3]. ஆங்கிலத்தில் வெளிவருவதால் பலருக்கு அந்த சங்கதிகள் தெரிய வராது. ஆனால், மேனாட்டு தாக்கம், நேரிடையாக ஏற்கெனெவே இறக்குமதி செய்யப்பட்டு விட்டதால், இனி இந்தியாவிலும் அத்தகையவை தயாரிக்கப் படும், விற்கப்படும் என்பதில் ஆச்சரியப் படுவதற்கு இல்லை[4]. பொறுப்பான ஆட்சியில் இருக்கும் மன்மோஹன் சிங், அவரை கைப்பவையாக வைத்து ஆட்சி புரிந்து வரும், கத்தோலிக்க சோனியா மெய்னொ உண்மையிலேயே இந்தியாவின் மீது அக்கரையுள்ளவராக இருந்தார் இவ்வாறான பத்திரிக்கை சுதந்திரம் கொடுத்திருக்க மாட்டார். ஆனால், இவற்றின் மூலம் தான் கோடான கோடி வியாபாரம் பல வழிகளில் செய்ய முடியும் என்றாகி விட்ட பிறகு மேன்மேலும் இத்தகைய தொழில்கள் நடந்து கொண்டுதான் இருக்கும்.
இந்தியா-பாகிஸ்தான் இளைஞர்கள் இந்த நிர்வாண படத்தைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டுமாம்! பத்திரிக்கை ஆசிரியர் கபீர் சர்மா மறுபடியும் நிர்வாண புகைப்படம் உண்மையென்றும், அதனை
What has raised more eyebrows was her arm sporting the initials ISI – the acronym for Inter Services Intelligence, Pakistan’s spy agency[5].
Nuclear-armed India and Pakistan have gone to war three times and the ISI has been routinely accused by New Delhi of masterminding militant attacks on Indian soil.
Sharma said the idea had been to take an ironic swipe at India’s obsession with the ISI.
A tag line on the cover which points to the initials, reads: “Hand in the end of the world too?”
“People, especially young people in both countries, want to move past this kind of thinking,” the editor said.
“It’s a very powerful picture – it took a lot of guts for her to do that. It shows a powerful, sexy woman not afraid to speak her mind.”
பிரசுரிக்க நியாயப்படுத்தியும் விளக்கம் கொடுத்துள்ளார்[6]. “அணுசக்தி கொண்ட இந்தியா-பாகிஸ்தான் நாடுகள் மூன்று முறை போரிட்டுள்ளன. புதுதில்லி ஐ.எஸ்.ஐ.யை நாட்டில் நடக்கும் தீவிரவாத செயல்களுக்கெல்லாம் காரணம் என்று குற்றஞ்சாட்டி வருகிறது. இந்தியாவின் அத்தகைய மனப்பாங்கைத் துடைக்கத்தான் இப்படத்தில்வீணா மாலிக்கின் தோளில் ஐ.எஸ்.ஐ வார்த்தைகள் எழுதி, “இதுதான் உலகத்தின் முடிவா?” என்ற கேள்வியையும் எழுப்பியிருக்கிறோம்”,” என்று சொல்லியிருப்பதிலிருந்து குட்டு வெளிப்பட்டு விட்டது. இந்த நிர்வாண படத்தைப் பார்த்து இந்தியா-பாகிஸ்தான் இளைஞர்கள் என்ன, எப்படி, எவ்வாறு கடந்த காலத்தை மறந்து கற்றுக் கொள்ளப் போகிறார்கள் என்று பார்ப்போம்.
எப்படி நிர்வாண போட்டோ எடுக்கப்பட்டது[7]: “நவம்பர் 23ம் தேதி வெர்சொவா அரம்நகரிலுள்ள ஸ்டூடியோவில் இந்த போட்டோ எடுக்கப்பட்டது. விஸால் சாக்ஸேனா என்ற புகைப்படக்காரர், மேக்கப்காரார், ஸ்டைல்-ஆலோசகர் மற்றும்
இப்படி பல ஆண்களுக்கு முன்னால் தைரியமாக நின்று போஸ் கொடுக்கிறார்கள் என்பதிலிருந்து, எல்லாவற்றையும் துறந்து விட்டனர் என்றே தெரிகிறது. பிறகு வெட்கப்படுவதிலேயோ, மறுப்பதிலேயே என்ன இருக்கிறது? அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, கற்பு என்றெல்லாம் விவாதிக்கப் போகிறார்களா என்ன?
துணையாளிகள் என்று எட்டு பேர் அப்பொழுது இருந்தனர். அதைத்தவிர வெளியில் இருந்த பத்து பேர்களுக்கும், நாங்கள் அத்தகைய படத்தை எடுக்கப் போகிறோம் என்று நன்றாகத்தெரியும். மதியம் அந்த சூட்டிங் ஆரம்பித்தது, 6.30க்கு முடிந்தது, வீணா சென்று விட்டார். உண்மையில் நாங்கள் இரண்டு விதமான புகைப்படங்கள் எடுத்தோம். ஒன்று பத்திரிக்கையின் அட்டையில் பிரசுரிக்கப்பட்டது, மற்றொன்று ஒரு கையெரி குண்டை தனது பற்களில் கடித்துக் கொண்டு நிற்பது போன்ற போஸ். அது மிகவும் பிரச்சினைக்குள்ளாகும் என்று அதனை தவிர்த்து விட்டோம். இதற்காக வீணாவை நாங்கள் நேரிடையாகவே தொடர்பு கொண்டோம். அவரது ஆட்கள் மூலம் செல்லவில்லை. ஈ-மெயில் தொடர்பிலேயே ஒப்பந்தத்தை செய்து கொண்டோம்.
முதல் நிர்வாணப்படத்தின் விவரம்: முன்னமே சொன்னபடி, இரண்டு நிர்வாண புகைப்படங்கள் எடுக்கப் பட்டன. இது முதல் படம் –
இடுப்பின் கீழ் கருப்பு நிற ஜட்டி அணிந்து கொண்டு, அதன் மீது, ராணுவத்தினர் அணியும் பெல்டை அணிந்துள்ளார்.
மேலே நிர்வாணமாக உள்ளார். இடது கையை வலது தோள் கீழே பிடித்துக் கொண்டு மார்பகங்களை லாவகமாக மறைத்துள்ளார்.
இடது தோள்பட்டையில் ISI / ஐ.எஸ்.ஐ. என்று கருப்பு மையால் எழுதப்பட்டுள்ளது.
வலது கையை மடக்கி உயர்த்தி பிடித்துள்ளார். இதனால் வலது மார்பகத்தை லாவகமாக மறைத்துள்ளார்.
வலது கையில் ஒரு கையெரி குண்டை வைத்துக் கொண்டு, பற்களால் கடிப்பது போல பிடித்துள்ளார்.
இடது பக்கத்தில் “Hand in the end of the world too?”என்று அச்சிடப்பட்டுள்ளது. “கையில் இருப்பது உலகத்தின் முடிவாகுமா?” – இக்கேள்வி கையினால் எழுதப்பட்ட கோடு ISI / ஐ.எஸ்.ஐ.யை நோக்கி குறியிடப்பட்டுள்ளது.
இப்படித்தான் இக்கால இளைஞர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்றால், பதிலுக்கு, யாதாவது ஒரு இந்திய நடிகையை, உதாரணமாக கத்ரினா கைபை இப்படி நிர்வாணமாக நிற்க வைத்து, தோள்பட்டையில் சி.பி.ஐ / ரா என்று எழுதி புகைப்படம் வெளியிடுவார்களா?
[4] சென்ற வருடம், பப், இளைஞிகள் குடி, கும்மாளம் முதலியவற்றை சோனியா மெய்னோ, ரேணுகா சௌத்ரி, அம்பிகா சோனி முதலியோர் ஆதரித்து பேசியுள்ளதை கவனத்தில் கொள்ளவும். அப்பொழுது, இவர்களது ஆபாசத்தை, விரசத்தை, கொக்கோகத்தை, ராம் சேனாவின் மீது பழி போட்டு தப்பித்துக் கொண்டது. இல்லை ஒருவேளை ராம்சேனாவே சோனியாவின் உருவாக்கமோ என்றும் சந்தேகம் எழுகின்றது. இப்பொழுது எப்படி ராம்தேவ், அன்னா ஹஜாரே போன்றோர் எல்லாம் சோனியாவின் கைப்பாவை என்றும், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் / ஆதாரவாளர்கள் என்றும் மாறி-மாறி பரஸ்பர குற்றச்சாட்டுகள் செய்திகள் வந்டு கொண்டிருக்கின்றனவோ, அதுபோல இந்த நாடகமும் இருக்கலாம்.
பாகிஸ்தானிய நடிகை நிர்வாணமாக போஸ் கொடுத்தது எப்படி?
வீணா மாலிக் பாகிஸ்தானிய கவர்ச்சி நடிகை மற்றும் பல பிரச்சினைகளில் சிக்கியுள்ளவர்: பாகிஸ்தான் ஒரு இஸ்லாமிய நாடு. அங்கு பெண்கள் பர்தாவில் இருக்க வேண்டும். இருப்பினும், மேனாட்டு நாகரிகம் பரவியுள்ளதால், படித்த பெண்கள் நாகரிகமாகவே இருக்கிறார்கள், உடையணிகிறார்கள். இருப்பினும், இஸ்லாமிய மதகுருமார்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறர்கள். வீணா மாலிக் ஒரு நாகரிகமான பாகிஸ்தானிய நடிகை. ராவல்பிண்டியில் 1978ல் ஒரு பாலிஸ்தானிய ராணுவ வீரருக்குப் பிறந்தவர். பள்ளியில் கூடைபந்து விளையாடி, பிறகு பி.ஏ வரைப் படித்துள்ளதாக தெரிகிறது. பாகிஸ்தான் சினிமாக்களில் நடித்துள்ள இவர், பிக்-பாஸ்-4 நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனார்[1]. அடிக்கடி நிர்வாண போஸ் கொடுப்பது, கிரிக்கெட் வீரர்களுடன் உல்லாசமாக இருப்பது முதலியவ அவருக்கு பொழுது போக்கு எனலாம்.
நிர்வாணத்திலும் போட்டா-போட்டி போடும் நடிகை: இந்தியாவில் ராக்கி சாவந்த் எனும் சர்ச்சைக்கு பெயர் பெற்ற நடிகைக்கு தானும் சளைத்தவர் இல்லை என்பது போல், அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவது வீணா மாலிக்குக்கு வழக்கம்தான்[2]. இந்தியாவில் கலர்ஸ் டிவி நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு கலந்து கொண்டு அதன் மூலம் பெரும் பிரபலமானவர் வீணா மாலிக். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல ஆண் போட்டியாளர்களுடன் நெருக்கமான நட்பை ஏற்படுத்தி சலசலப்பையும் ஏற்படுத்தியவர் வீணா மாலிக்[3]. ஏற்கெனவே அதே எப்.எச்.எம் பத்திரிக்கையின் அட்டைப் படத்தில் அதே மாதிரி நிர்வாணப்படம், தோளில் ஐ.எஸ்.ஐ முத்திரையுடன் வெளி வந்துள்ளது. இப்பொழுது இரண்டாவது முறை. வித்தியாசம், இது முழு நிர்வாணம், அவ்வளவு தான்! முன்பு முகமது ஆசிப்புடன் சுற்றி வந்தார்[4]. அட்டைபடத்தில் கிடைப்பது, இணைத்தளத்தில் கிடைப்பது அனைவருக்கும் சொந்தம் தான். ஆகவே,
நிர்வாணமாக போஸ் கொடுக்கிறார்கள் என்றால், பெண்கள் ஆகட்டும், நடிகைகள் ஆகட்டும், துணிந்து விட்டார்கள் என்பதுதான் உண்மை. அதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. மனத்துணிவு மற்றும் ஏதாவது ஒரு விதத்தில் பணம், புகழ் கிடைக்கும் என்றால் அவ்வாறு வெய்கிறார்கள், வற்புறுத்தினாலும் செய்வதுண்டு.
இந்த போட்டோ டூவிட்டர் மற்றும் பேஷ்புக் இணைய தளங்களில் வெளியாகியுள்ளது ஒன்றும் ஆச்சரியம் இல்லை. இதெல்லாம் பிரச்சார யுக்தியேயன்றி வேறெந்த சகசியமோ, வேடிக்கையோ விளையாட்டோ இல்லை. அவர் ஐ.எஸ்.ஐ. உளவுத்துறை முத்திரையுடன் நிர்வாண போஸ் கொடுத்து இருப்பதால் பாகிஸ்தானில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது[5]. இதற்கு கடும் கண்டனமும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. ஆனால், வழக்கம் போல நமது “தி ஹிந்து” இதற்கும் வக்காலத்து வாங்கிக் கொண்டு விளக்கம் அளித்துள்ளது.
உண்மைகளை மறைக்க, மக்களின் மனங்களைத் திசைத் திருப்ப பிரச்சார யுக்தி: “அவரது தோள்பட்டையில் கருப்பு நிறத்தில் ஐ.எஸ்.ஐ. என்று எழுத வைத்தது என்னுடைய ஐடியா தான். இது வெறும் ஜோக்குக்காக செய்யப்பட்டது. இந்தியாவில் நாங்கள் இவ்வாறு ஜோக் அடிப்பதுண்டு. ஏதாவது தவறாக ஆகிவிட்டால், அதற்கு காரணம் ஐ.எஸ்.ஐ. தான் பின்னணி என்போம்”, என்று FHM பத்திரிக்கை ஆசிரியர்
யுத்தத்தில் அல்லது இக்கால நிலவரப்படி சொல்வதானால், தீவிரவாதத்தில் ஈடுபட்டுள்ள நாடுகள் தங்களது அக்கிரமமான கொடூரங்களை மறைக்க பலவிதமான பிரச்சார யுக்திகளை கையாளுவதுண்டு. அதாவது, பரப்பரப்பான செய்தியை வெளியிட்டு பரப்பி, மக்களின் மனங்களை திசைத் திருப்பி விடுவர். வாயில் வெடிகுண்டு, தோள்பட்டையில் ஐ.எஸ்.ஐ என்பதெல்லாம் அதைத்தான் காட்டுகிறது.
கபீர் சர்மா விளக்கம் அளித்தார்[6]. இதற்கிடையே, அந்த பத்திரிகைக்கு நான் நிர்வாண போஸ் கொடுக்க வில்லை என நடிகை வீணாமாலிக் மறுப்பு தெரிவித்துள்ளார். நான் ஆடையுடன்தான் கவர்ச்சி போஸ் கொடுத்தேன். ஆனால் அது நிர்வாணமாக மார்பிங் செய்து மாற்றி அமைத்து வெளியிடப்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் டி.வி.க்கு பேட்டி அளித்துள்ளார்[7]. மேலும், தனது கையில் ஐ.எஸ்.ஐ. என்ற, பாகிஸ்தான் உளவுத்துறையின் முத்திரையை ஒரு நகைச்சுவை கலந்த வேடிக்கைக்காகதான் பச்சை குத்தியிருந்தேன். அதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் கூறியுள்ளார். ஆனால் வீணாமாலிக் கூறியிருப்பதை பத்திரிகை நிர்வாகம் மறுத்துள்ளது.
26/11 துயரத்தை, பயங்கரத்தை, குரூரத்தை பிளேஷ் டான்ஸினால் மறைக்க முடியுமா? 26/11 அன்று கொல்லப்பட்டவர்களின் ஆத்மா எப்படி சாந்தி அடையும்? அவர்களது உற்றார்-உறவினர்களது துயரத்தை எப்படி தீர்க்க முடியும்? அந்த பயங்கரத்தை, குரூரத்தை எப்படி தவிக்க அல்லது நீக்க முடியும்? இதெற்கெல்லாம் பதில் சொல்லாமல், தீர்வு காணாமல், வெட்கங்கெட்ட பெண்கள் / ஆண்கள் அதே சி.எஸ்.டி. ஸ்டேஷனில் நடனம் ஆடுகின்றனர். கேட்டால், “பிளேஷ் டான்ஸ்” என்ரு டிவி-ஊடகங்கள் பிரச்சாரம் செய்கின்றன. பிளேஸ் டான்ஸினால் தீவிரவாதத்தை மறைக்க முடியுமா? பிறகு காஷ்மீரத்தில் சென்ரு ஆடவேண்டியது தானே? ஆகவே, இது இந்தியர்களை ஏமாற்ற செய்யப்படும் ஒரு பிரச்சாரமே ஆகும்.
எப்படி நிர்வாண போட்டோ எடுக்கப்பட்டது: “நவம்பர் 23ம் தேதி வெர்சொவா அரம்நகரிலுள்ள ஸ்டூடியோவில் இந்த போட்டோ எடுக்கப்பட்டது. விஸால் சாக்ஸேனா என்ற புகைப்படக்காரர், மேக்கப்காரார், ஸ்டைல்-ஆலோசகர் மற்றும்
இப்படி பல ஆண்களுக்கு முன்னால் தைரியமாக நின்று போஸ் கொடுக்கிறார்கள் என்பதிலிருந்து, எல்லாவற்றையும் துறந்து விட்டனர் என்றே தெரிகிறது. பிறகு வெட்கப்படுவதிலேயோ, மறுப்பதிலேயே என்ன இருக்கிறது? அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, கற்பு என்றெல்லாம் விவாதிக்கப் போகிறார்களா என்ன?
துணையாளிகள் என்று எட்டு பேர் அப்பொழுது இருந்தனர். அதைத்தவிர வெளியில் இருந்த பத்து பேர்களுக்கும், நாங்கள் அத்தகைய படத்தை எடுக்கப் போகிறோம் என்று நன்றாகத்தெரியும். மதியம் அந்த சூட்டிங் ஆரம்பித்தது, 6.30க்கு முடிந்தது, வீணா சென்று விட்டார். உண்மையில் நாங்கள் இரண்டு விதமான புகைப்படங்கள் எடுத்தோம். ஒன்று பத்திரிக்கையின் அட்டையில் பிரசுரிக்கப்பட்டது, மற்றொன்று ஒரு கையெரி குண்டை தனது பற்களில் கடித்துக் கொண்டு நிற்பது போன்ற போஸ். அது மிகவும் பிரச்சினைக்குள்ளாகும் என்று அதனை தவிர்த்து விட்டோம். இதற்காக வீணாவை நாங்கள் நேரிடையாகவே தொடர்பு கொண்டோம். அவரது ஆட்கள் மூலம் செல்லவில்லை. ஈ-மெயில் தொடர்பிலேயே ஒப்பந்தத்தை செய்து கொண்டோம்.
படத்தை பார்க்க ஆவலாக உள்ள நடிகை: நவம்பர் 29ம் தேதி அவர் அனுப்பியுள்ள ஈ-மெயிலில், “நவம்பர் 23ம் தேதி எடுத்த படங்களுக்காக நான் சந்தோஷமடைந்தேன். பத்திரிக்கையின் அட்டைப்படத்தைப் பார்க்க ஆவலாக உள்ளேன்”, என்று சொல்லியுள்ளார். கபீர் சர்மா அன்று நடந்த புகைப்படம் எடுக்கும் நிகழ்வை வீடியோவும் எடுத்துள்ளதாகவும், அது அத்தாட்சியாகவும் விளங்குகிறது என்கிறார்[8]. இதனால் விளம்பரம் அதிகம் கிடைக்கும் என்று இவ்வாறு வீணா மறுப்பதாக கூறப்படுகிறது. வீணா மாலிக்குடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி தான் அவரது நிர்வாணபடம் எடுத்து பிரசுரிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ்.ஐ. முத்திரை தெரியாத வகையில் மிகவும் மெல்லியதாக தான் வரைந்தோம். ஆனால் வீணாமாலிக்தான் அதை மிகவும் பெரிதாக வரையும்படி கேட்டுக் கொண்டார் என கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் எதிர்ப்பு, நடவடிக்கை: நடிகை வீணாமாலிக் நிர்வாண படம் குறித்து பாகிஸ்தானின் பழமைவாத மதகுரு மவுலானா அப்துல் குவாய் கூறும்போது,
இஸ்லாமில் இவையெல்லாம் அனுமதிப்பதில்லை என்றால், எதற்காக முஸ்லீம்கள் அதிகமாக “புரொனோகிராபி’ இணைதளங்களை அதிகமாகப் பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை. எப்பொழுது சர்வே எடுத்தாலும், அதிகமாக கிளிக் செய்பவர்கள் அவர்கள் தாம் என்று தெரிகிறது.
வீணாமாலிக்கின் செயல் அனைத்து முஸ்லிம்களுக்கும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார். ஆனால் அதற்கு அந்நாட்டு டிவி-ஸோவிலேயே, “இதைவிட/தன்னைவிட நிறைய பிரச்சினைகள் நாட்டில் உள்ளன”, என்று கிண்டலாக பதிலளித்தாராம்! உள்துறை மந்திரி ரகுமான் மாலிக் கருத்து தெரிவிக்கையில், “முதலில் அந்த படம் உண்மையானதா அல்லது போலியானதா என்பதை அறிய வேண்டும். நான் அந்த புகைப்படத்தைப் பார்க்கவில்லை. உண்மையானால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்”, என்று தெரிவித்துள்ளார்[9].
சூபியா மதானி / சூஃபியா மௌதனி, அப்துல் நாசர் மதானியின் மனைவி. சலாவுத்தீன் மற்றும் உமர் என்ற இரண்டு பையன்களின் தாய். அழகான முகத்தில் தீவிரவாதத்தின் நிறம் தெரிவதில்லை, ஆனால், காஷ்மீரத்தில் அத்தகைய அழகிய ரோஜாக்களே வெடிகுண்டுகளாக செயல்பட்டது, ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் எப்படி இஸ்லாத்தில் தீவிரவாதிகளாக மாற்றப்படுகின்றனர் என்று தெரியவருகிறது. மூளைச்சலவை செய்ய-செய்ய யாராக இருந்தாலும், திவிரவாதியாக மாற்றலாம், என்று இஸ்லாத்தில் கண்டுபிடித்துள்ளனர். “குரான்” என்று சொல்லி, ஜிஹாத் போர் ஒரு முஸ்லீமின் கடமை, சொர்க்க வாசல் தயாராகத் திறந்திருக்கிறது…………….என்றெல்லாம் சொன்னால், ஜிஹாத்கிகள் கிளம்பி விடுகிறார்கள்.
Soofiya-maudhany
soofiya_madani_14.12.09
கணவனது தாக்கம்: ஆரம்பகாலத்தில், சூபியா தனது வாழ்க்கையை சந்தோஷமாகத்தான் கழித்திருப்பாள். ஆனால், பிறகு, அவனது கொள்கையை அறிந்திருப்பாள். நிச்சயமாக, தனது கணவினின் தாக்கம் இவளிடத்தில் இருந்திருக்க / ஏற்பட்டிருக்க வேண்டும். ஆரம்பத்தில் மறுத்தாலும், பிறகு, கணவனுடன் ஒத்துப்போனாள் என்பது நிகழ்ச்சிகள் எடுத்துக் காட்டுகின்றன. குழந்தைகள் பிறந்தபிறகு, மனம் மாறியிருக்கலாம், ஆனால், மறுபடியும் தாக்கம் ஏற்பட்டுள்ளது, அவளுடைய வார்த்தைகள், நடத்தைகள் காட்டுகின்றன எனலாம்.
madani-and-soofiya
பஸ் எரிப்பு வாக்குமூலத்தில் கூறியிருப்பது: கலமசேர் பஸ் வழக்கில் கைது செய்யப்பட்டபோது, அந்த நிலையில் சூபியா மதானி போலீசில் அளித்து உள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:- “கோவைசிறையில்அடைக்கப்பட்டுஇருந்தஅப்துல்நசர்மதானியைபோலீசார்கடுமமையாகசித்ரவதைசெய்தனர். அங்குஅவர்பட்டகஷ்டமேஎன்னைகுற்றவாளிஆக்கியது”. அதாவது, உண்மையில் கஷ்டப்படுத்தப்பட்டானா அல்லது சர்க்கரை முதலிய வியாதிகளினால், சிகிச்சைப் பெற்றுவந்ததால், ஒன்பது ஆண்டுகளில் உடல் இளைத்தான என்றுதான் பார்க்கவேண்டும். ஆனால், சிறைவாசம், போலீஸ் கைது, என தனக்கும் வரும்போது, தன்னைகத் தற்காத்துக் கொள்ளவே வேண்டியுள்ளது.
Soofiya Maudhany
மதானியைப் பற்றிய சிடியில் சூபியா சொன்னது: மதானியின் மனைவி சூபியா அளித்துள்ள பேட்டியில், “ஒன்பதுஆண்டுகளுக்குமுன்விசாரணைக்காகஅழைத்துச்செல்லப்பட்டகணவர், கோவைசிறையில்உள்ளார். அவரைசந்திக்கும்போதெல்லாம், எனக்குதைரியமூட்டுவார்; அவரதுஉடல்நிலைமோசமாகஉள்ளது. சிறைக்குசென்றபோதுஅவரதுஎடை 116 கிலோ; தற்போது 46 கிலோவாககுறைந்துவிட்டது. முறையானசிகிச்சைஇல்லாததேஇதற்குகாரணம்,” என, குற்றம் சாட்டியுள்ளார். இறுதியில், “சட்டம், ஜனநாயகத்தின்மீதுநம்பிக்கைஉள்ளவர்கள், மதானியின்சிறைவாசத்தைநிச்சயம்கண்டிப்பார்கள்‘” என்ற வர்ணனையுடன் படம் முடிகிறது.
soofia-12-2009
soofiya-madani-dec.2009
21-06-2002 அன்று கோவை சிறையில் நடந்த நிகழ்ச்சி: சூபீயா தனது உதவியாளன் நௌஸத் மற்றும் இன்னொருவனுடன் தனது கணவனைப் பார்க்க வருகிறாள். பெண்போலீஸார்கள் சோதனையிட்டபோது, சூபியா செல்போன் மற்றும் சிம்கார்டுகளை உள்ளே எடுத்துச் செல்வது கண்டுபிடிக்கப்படுகிறது. உடனே, வாக்குவாதத்தில் ஈடுபட்ட சூபியா, பெண்காவலர்களையும் மற்ற காவலர்களையும் மிரட்டுகிறாள். தான் நினைத்தால், அவர்களையெல்லாம் தொலைத்து விடுவேன் என்று மிரட்டுகிறாள். நௌஸத் பெண்காவலர்களை அவர்களுடைய சட்டைகளைப் பிடித்து இழுக்கிறான். இதனால், ஆண்-போலீஸார் வந்து அவர்களை, வலுக்கட்டாயமாக, சிறை வளாகத்திலிருந்து வெளியேற்றுகின்றனர். ஆனால், வெளியே வந்தபிறகும், போலீஸாரைத் திட்டி, மிரட்டிவிட்டுச் செல்கின்றனர்
soofiya madhani with children in kairali tv
ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப் பதிவு செய்தல்: போலீஸார், இவ்வாறு அவமதிக்கப்பட்டதால், அவர்கள், சூபியா மற்றும் நௌஸத் மீது ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப் பதிவு செய்கின்றனர். அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தது, பெண்-போலீஸாரை பலாத்காரம் செய்தது, போலீஸாரை மிரட்டியது முதலியவற்றிற்காக இபிகோ ரசத்துகளின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், அரசியல் செல்வாக்கினால், அவ்வழக்கு என்னவாயிற்று என்று தெரியவில்லை.
கோவை பணி செய்ய விடாமல் தடுத்து, சிறைவார்டன்களை மிரட்டிய மதானி மனைவி மீதான வழக்கில் இருதரப்பு வாதம் துவங்கியது. கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட, கேரள மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மதானி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 2002ல் மதானியை பார்க்க வந்த அவரது மனைவி சூபியாவுக்கும், சிறைக்காவலர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. சிறைக்காவலர்களை மிரட்டி, பணி செய்ய விடாமல் தடுத்ததாக சூபியா மீது ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு ஜே.எம்.எண்: 3 கோர்ட்டில் நடக்கிறது.சாட்சி விசாரணை முடிந்த நிலையில், நேற்று இருதரப்பு வாதம் துவங்கியது. சூபியா சார்பில் வக்கீல் மோகன் ஆஜராகி வாதிட்டார். தொடர்ந்து, அரசு தரப்பு வாதத்துக்காக வழக்கை மே 9ம் தேதிக்கு மாஜிஸ்திரேட் புளோரா ஒத்திவைத்தார்.
மதானி தம்பதியரின் அரசியல் செல்வாக்கு, பலம்: குற்றாஞ்சட்டப்பட்ட தீவிரவாதி-பயங்கரவாதி மதானி 1998-ஆம் அண்டு நடந்த கோவைத் தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக அல்லது சிலர் சொல்லும்படியாக, விசாரணைக் கைதியாகக் கருதப்பட்டு சிறையில் தண்டனையை சகல வசதிகளுடன் அனுபவித்துக் கொண்டிருந்தான். எனவே, சூபியா குற்றஞ்சாட்டியபடி எப்படி எடை 116 கிலோ; தற்போது 46 கிலோவாககுறைந்துவிட்டது. என ஆச்சரியமாக உள்ளது. உடம்பு சரியாகவில்லை என்பதனால், சிகிச்சையளித்து, மருத்துவர்களின் ஆலோசனைப்படி, உணவைக் குறைத்துக் கொண்டான் என்பதுதான் உண்மை.
சூபியாவை பார்க்கும் முதலமைச்சர்: ஜூன் 2, 2005 அன்று அப்போதைய காங்கிரஸ் முதல் மந்திரி உம்மன் சாண்டி மதானியின் வீட்டிற்கே சென்று அவரது மனைவியையும் தந்தையையும் சந்தித்த போது, சூபியா சிறையில் நடந்த பிரச்சினைகளைப் பற்றி சொல்லி, ஆவன செய்யுமாறு கேட்டுக் கொண்டாள். அதன்படியே, “மனிதாபிமான” அடிப்படையில் அவள் கணவனுக்கு விடுதலை கிடைக்க ஆவன செய்வதாக உறுதியளித்தார். அதுமட்டுமல்லாது, மார்ச்சு 14, 2006 அன்று, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ கட்சியினரைக் கொண்ட கேரள சட்டசபை, மனிதாபிமான அடிப்படையில் மதானியை விடுதலை செய்ய வேண்டும் என்று ஒருமனதாகத் தீர்மானத்தையும் நிறைவேற்றியது வினோதமாக இருந்தது.
சிறைக்கு ஆட்களை அனுப்பி விசாரித்தது, கருணாநிதியிடம் பரிந்துரைத்தது: அதன் பிறகு கேரள முதல்வர் அச்சுதானந்தன் தன்னுடைய அமைச்சர்கள் சிலரை கோவை சிறையில் மதானியை சந்தித்து வேண்டியது செய்யப்படும் என்று சொல்லி அனுப்பினார். பிறகு, ஜூன் 10, 2006 அன்று கேரள முதல்வர் அச்சுதானந்தனே நேரிடையாகச் சென்னைக்கு வந்து, தமிழக முதல்வர் கருணாநிதியை சந்தித்து, மதானியை “உடல்நல” காரணங்களுக்காக விடுதலை செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். தமிழக முதல்வர் விடுதலை செய்ய மறுத்தாலும், சிறைச்சாலையிலேயே மதானியின் ஆயுர்வேத மருத்துவத்திற்கு சகல வசதிகளையும் செய்து கொடுத்தார்.
தச்சாங்கரி மனைவி –சூபியா மதானி -நஸீர் தொடர்பு – வென்னலா வீடு[1]: புலானாய்வு குழுவினர் டோமின் ஜெ. தச்சங்கரி மற்றும் அப்துல் நாசர் மதானி இவர்களுக்குள்ள தொடர்பை கண்டறிந்துள்ளனர். வென்னலா என்ற இடத்திலுள்ள ஒரு வீட்டைப் பற்றி விசாரித்ததில் அந்த தொடர்பு வெளிப்படுகிறது. தச்சாங்கரியின் மனைவி மற்றும் மதானியின் மனைவி 2006 மற்றும் 2007 முறையே அந்த வீட்டை “ரியான் ஸ்டூடியோ” என்ற பெயரில் வாடகைக்கு எடுத்துள்ளனர் கருகபிள்ளி என்ற கொச்சியிலுள்ள வீட்டிற்கு இடம்பெயரும் முன்னர், இருவருமே இந்த விட்டில் நான்கு மாதங்கள் தங்கியுள்ளதாகத் தெரிகிறது. இன்னொரு சோதனையில் இதே வீடுதான் திருட்டு விசிடி தொழிற்சாலையாக பயன்படுத்தப்பட்டு வந்தது தெரிந்தது. அது மட்டுமல்லாது இந்த வோட்டில்தான், மதானி நஸீரை சந்தித்துள்ளதாகத் தெரிகிறது. அக்டோபர் 15, 2007ல் மதனி இந்த வீட்டிற்கு குடிபெயந்தார். இந்தவீடு ஒரு NRI. பெண்மணிக்குச் சொந்தமானது என்றும் அவருடைய சகோதரர் வீட்டை நிர்வாகித்து வருகிறார் என்றும் தெரிகிறது.
மனைவிகள் பங்குதாரர்களாக இருக்கும் போது, ஒரு கணவன் அடுததவர் மனைவி மீது நடவடிக்கை எடுப்பாரா? தச்சாங்கரியின் மனைவி மற்றும் மதானியின் மனைவி 2006 மற்றும் 2007 முறையே அந்த வீட்டை “ரியான் ஸ்டூடியோ” என்ற பெயரில் வாடகைக்கு எடுத்துள்ளனர். அந்த நிறுவனத்திற்கு பங்குதாரர்களாகவும் இருந்துள்ளனர். இத்தகைய உறவு இருக்கும்போது, எப்படி ஒரு கணவன் அடுததவர் மனைவி மீது நடவடிக்கை எடுப்பார்? கலமசேரி பஸ் வழக்கை விசாரிப்பதில், இந்த டோமின் ஜெ. தச்சங்கரி உள்ளார்[2], பிறகு, எப்படி அவரால் பாரபட்சமின்றி, அவ்வழக்கை விசாரிக்கமுடியும்? பி. எம். வர்கீஸை தனது ஆதிக்கத்தால் / தாக்கத்தால் பணியவைக்கமாட்டார் என்று என்ன நம்பிக்கையுள்ளது?
கேரளாவில் தமிழக பஸ் எரிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் அப்துல் மதானியின் மனைவி சூபியா மதானியிடம், கோவை பிரஸ் கிளப்பில் குண்டு வைத்தது தொடர்பாக, தமிழக போலீசார் விசாரணை நடத்தினர்.
கடந்த 2005ம் ஆண்டில் தமிழக பஸ் ஒன்று, கேரளாவில் உள்ள கலமசேரியில் எரிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில், மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் அப்துல் மதானியின் மனைவி, சூபியா மதானிக்கு தொடர்பு இருப்பது, சமீபத்தில் கைதான லஷ்கர் -இ- தொய்பா பயங்கரவாதி நசீரிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.
இதை தொடர்ந்து, பஸ் எரிப்பு வழக்கில் 10வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சூபியா மதானி, கைது செய்யப்பட்டு நேற்று முன்தினம் அலுவாலியா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். முன்னதாக, இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான இரண்டு நபர் குழு, திரிக்கராவில் உள்ள போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகத்தில், சூபியா மதானியிடம் விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் வட்டாரங்கள் கூறுகையில், “பஸ் எரிப்பு வழக்கை தவிர, கோவை பிரஸ் கிளப்பில் குண்டு வைத்த வழக்கில், நசீர் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படுகிறார். எனவே, இது தொடர்பாக ஏதேனும் முக்கிய தகவல்கள் கிடைக்குமா என்பதற்காகவே போலீசார், சூபியா மதானியிடம் விசாரணை நடத்தினர்’ என்றனர்.
மதானிக்குஆதரவாக “கைதியின்கதை‘ ஆவணப்படம் “சிடி‘யாகவெளியீடு: கோவை: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் மதானி, முஸ்லிம் சிறைவாசிகளுக்கு ஆதரவாக, “கைதியின் கதை’என்ற ஆவணப்படம் வெளியிடப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு நெருங்கும் வேளையில், “சிடி’ வெளியிடப்பட்ட பின்னணி என்ன என்பது குறித்து உளவுப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர். கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், கேரள மக்கள் ஜனநாயக கட்சியினர் நிறுவனர் அப்துல்நாசர் மதானி (41) சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருடன் 167 குற்றவாளிகள் மீதான விசாரணை தனி நீதிமன்றத்தில் முடிந்தது; தீர்ப்புக்காக வழக்கு காத்திருக்கிறது. இந்நிலையில், “கைதியின் கதை’ (மதானி மற்றும் முஸ்லிம் சிறைவாசிகள் குறித்த ஆவணப்படம்) என்ற தலைப்புடன், 45 நிமிட படம் “சிடி’யாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், மலையாளம், ஆங்கில மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தை, “மீடியா ஸ்டெப்ஸ்’ என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது; “ஆலூர் ஷானவாஸ்’ என்பவர் இதை தயாரித்துள்ளார். இப்படத்தில், மதானியின் பள்ளி பருவம், ஆவேசமான அரசியல் மேடைப்பேச்சு, மத ரீதியான போதனைகள் இடம்பெற்றுள்ளன. “சங்க் பரிவார்’ அமைப்புக்கு எதிராக 1991ல், “இஸ்லாமிக் சேவா சங்’ அமைப்பை துவக்கியது; வெடிகுண்டு தாக்குதலில் மதானியின் கால் ஊனமடைந்தது தொடர்பான, விளக்கங்கள், காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
[1]Ajay Kanth, Kerala: Nexus between Thachankary, Madani?, First Published : 07 Jul 2010 01:58:28 AM IST; Last Updated : 07 Jul 2010 09:17:01 AM IST
[2] It is said that the Karnataka Police had already handed over such information to the police team hat had visited Bangalore earlier, which included Inspector General Tomin J Thachankery and Assistant Commissioner of Police PM Varghese, who was heading the probe the Kalamssery bus-burning case. http://www.dailypioneer.com/222931/Nazeer-planned-communal-riots.html
காஷ்மீர் கல்லடி கலாட்டாவில் பெண்களும் ஈடுபடுவது, எதிர்ப்பா, வீரமா, தீவிரவாதமா?
பெண்களும் கல்லடிக்கிறார்கள்: காஷ்மீர் தெருக்களில் நடக்கும் கல்லடி கலாட்டாவில் பெண்களும் இறங்கிவிட்டார்கள். இவர்கள் எல்லோரும் ருக்ஸானாக்களா, மெஹ்பூபா முஃப்திகளா என்று இனிமேல்தான் தெரியவரும். முன்பு, கல்லடி கலாட்ட வீரர்களுக்கு ஒருநாலைக்கு ரூ.300/- முதல் 600 வரை பணம் கொடுக்கப்பட்டது. அதேபோல, ஒருவேளை பெண்களுக்கும் அளிக்கப் படுவதால், வீட்டிற்குல் சும்மா கிடப்பதைவிட, இவ்வாறு கல்வீசி காசு சேர்க்கலாம் என்து இறங்கி விட்டார்களா என்று அவர்கள்தாம் தெரியப்படுத்தவேண்டும்.
INDIA-KASHMIR-UNREST
போலீஸாரை, பாதுகாப்பு வீரர்களின் மீது கல்லடிப்பது ஈடுபடுவது, எதிர்ப்பா, வீரமா, தீவிரவாதமா: ஏற்கெனெவே பிரச்சினையாகி, இப்பொழுதுதான் அமைதி திரும்பியிருக்கிறது, என்ற நிலையில், உடனே வெள்ளிக்கிழமையிலிருந்து 30-07-2010, இப்படி புதிய தாக்குதல் ஆரம்பித்துவிட்டது. அவர்கள் கல்லடிப்பதிலிருந்து, அவர்கள் வேடிக்கைக்காக அடிக்கவில்லை, ஏதோ தீர்மானமாக, ஒரு குறிக்கோளுடன் அடிப்பதாக, முகபாவம் நன்றாகவே காட்டுகிறது. முன்பு மனித குண்டுகளாகவே செயல்பட்ட ஜிஹாதி-பெண்கள், இப்படி, கல்லடி ஜிஹாதிகளாக மாறுங்கள் என்ற், யாராவது, ஆணையிட்டிருக்கிறார்களா என்பதும், இனிமேல்தான் தெரியவரும்.
Woman-also-stonepelt
பெண்களை முன்னிருத்தி போராட்டம் செய்வது, பின்னிருந்து ஆண்கள் ரகளையில் ஈடுபட்டு, கலவரத்தை உண்டாக்குவது, பிறகு கட்டு மீறும்போது, துப்பாக்கி சூடு என்றாகும்போது, ஏதாவது சாவு என்றாகும் போது, மனித உரிமைகள் மீறல்……………..என்றெல்லாம் பிரச்சினைகளை வைத்துக் கொண்டு, மறுபடியும் கலாட்டா செய்வது………………இனி இதை “கல்லடி ஜிஹாத்” என்று கூட சொல்லலாம்!
பர்கா இல்லாமல் பாடம் சொல்லித்தர வரக்கூடாது என்று தடை செய்யப்பட்ட ஷிரின் மிட்யா என்ற 24 வயதான இளம்பெண் கல்லூரி ஆசிரியர் கடைசியில் தனது போராட்டத்தில் வென்று விட்டார்[1]. அக்கல்லூரி யூனியன் பெண் ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் பர்கா அணிந்து கொண்டுதான் வரவேண்டும் என்று கடந்த ஏப்ரல் மாதத்தில் ஆணையிடப்பட்டது. இதனால் எட்டு பெண்கள் சங்கடமான நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். ஆனால், ஷிரின் வெளிப்படையாக, தான் அவ்வாறு பர்கா அணிய முடியாது, ஏனெனில் அத்தகைய உடைக்கட்டுப்பாடு ஊனிவர்ஸிடி டிராண்ட் கமிஷன் சரத்துகளில் இல்லை என வாதிடினார்.
Burqa-teacher-wins-her-stand
சையத் சம்ஸுல் ஆலம், அலியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் சொல்லிப்பார்த்தார். ஆனால், அடிப்படைவாதம் கொண்ட யூனியன் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால், நிலைமையை மேற்கு வங்காள சொறுபான்மை நல அமைச்சர் அப்துர் சட்டார் என்பவருக்குத் தெரியப்படுத்தினர். உடனே, அவர் ஷிரீனை வகுப்புகளை எடுக்குமாறு பணிக்கப்பட்டார்[2]. இருப்பினும், என்றைக்கு இருந்து என்று இன்னும் சொல்லப்படவில்லை! யூனியனில் காரியதரிசி ஹசனூர் ஜமான் (Hasanur Zaman) என்பவர், தேவையில்லாமல், ஊடகங்களுக்கு இப்பிரட்சினையை எடுத்துச் சென்று ஏதோ ஒரு பிரச்சினை போன்று உருவாக்கிவிட்டார்[3] என்று மறுபடியும் அந்த பெண்ணையே குற்றஞ்சாட்டினார்!
பர்கா இல்லாமல் வந்த கல்லுரி பெண் ஆசிரியருக்குத் தடை: கல்கத்தாவில் அமூல்!
ஷிரின் மிட்யா என்ற 24 வயதான இளம்பெண் கல்லூரி ஆசிரியர். கடந்த மூன்று மாதங்களாக கல்லூரியில் தடை விதிக்கப்பட்டுள்ளதால் பாடம் எடுக்க முடியாமல் இருக்கிறார். காரணம். அலியா பல்கலைக்கழகம் சொல்லாவிட்டாலும், அக்கல்லூரி யூனியன் சொல்வதால், பர்கா இல்லாமல் அவர் வகுப்பிற்குச் செல்லமுடியாது, பாடம் சொல்லித்தரமுடியாது.
அவர் சொல்வதாவது, “யூனிவர்ஸிடி கிராண்ட்ஸ் கமிஷன், உடைபற்றிய கட்டுப்படு பற்றி ஒன்றும் சொல்லவில்லை. மேலும் இது பர்காவைப் பற்றியப் பிரச்சினை இல்லை. என்னுடைய சுய-விருப்பத்தைப் பொறுத்த விஷயமாகிறது”.
தர்கா கூத்துகளை எதிர்க்கும் இஸ்லாம், எப்படி இந்த திராவிட கூத்துகளை ஒத்துக்கொள்கிறது?
முஸ்லீம்கள் ஏதாவது ஒரு விஷயம், பிரச்சினை, பொருள், சின்னம்………….தங்களுக்கு சாதகமாக உள்ளது என்றால், அது எத்தகைய இஸ்லாம்-விரோதமாக இருந்தாலும் அமைதியாக இருந்து விடுவர். அதே விஷயம், பிரச்சினை, பொருள்………….இஸ்லாமுக்கு விரோதமாக இருக்கிறது என்று, இன்னொரு இடத்தில் பயங்கரமாக விளக்கி, இமாந்தாரர்களை மிரட்டுவர். இத்தகைய இருநிலைகள் ஏன் என்று தெரியவில்லை.
மசூதி வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் நினைவிடம்: சென்னை 05-06-2010 – ஞாயிற்றுக் கிழமை: காயிதே மில்லத்தின் 115வது பிறந்தநாளை முன் னிட்டு அவரது நினைவிடத்தில், முதல்வர் கருணாநிதி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நிறுவனருமான காயிதே மில்லத்தின் 115வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. சென்னை திருவல்லிக் கேணி நெடுஞ்சாலையில் உள்ள வாலாஜா மசூதி வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் நினைவிடத்தில், நேற்று காலை 9:20 மணிக்கு வந்த கருணாநிதி, மலர் போர்வை வைத்து மரியாதை செலுத்தினார். அவருடன் ஸ்டாலின், அமைச்சர்கள் உடனிருந்தனர். காலை 11 மணிக்கு அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா கட் சிப் பிரமுகர்களுடன் காயிதே மில்லத் நினைவிடத்திற்கு வந்து மலர் போர்வை வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது, அ.தி.மு.க., சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில செயலர் அன்வர்ராஜா, முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், முன்னாள் அமைச் சர்கள் பன்னீர்செல்வம், ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
இதுமட்டும் இஸ்லாம் ஆகுமா-திமுக
திராவிட நம்பிக்கைகள், சடங்குகள், வழிபாடுகள்: தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, ஆரூண் எம்.பி., உள் ளிட்ட காங்கிரசாருடன் காயிதே மில்லத் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, தன் கட்சியினருடன், காயிதே மில்லத் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். இந்திய யூனியன் முஸ் லிம் லீக் மாநில தலைவர் காதர் மொய்தீன், முன் னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர், இந்திய தேசிய லீக் மாநில தலைவர் இனாயதுல்லா, பொதுச்செயலர் ஜகிருதீன் அகமது உள்ளிட்ட பல் வேறு கட்சித் தலைவர்கள் காயிதே மில்லத் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
இதுமட்டும் இஸ்லாம் ஆகுமா-அதிமுக
இஸ்லாமியருக்கு திருமாவின் அறிவுரை: இந் நிலையில் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கண்ணியத் தமிழர் காயிதேமில்லத் அவர்களின் 115ம் பிறந்த நாளில் (ஜூன்- 5, 2010) இஸ்லாமியப் பெருங்குடி மக்களுக்கும் இன்னபிற சிறுபான்மைச் சமூகத்தினருக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழக அரசியலில் போற்றுதலுக்குரிய பெருந்தலைவராக விளங்கிய கண்ணியத் தமிழர் காயிதே மில்லத் அவர்கள் இஸ்லாமியச் சமூகத்தினருக்கு மட்டுமின்றி அனைத்து ஒடுக்கப்பட்ட உழைக்கும் சமூகத்தினருக்காகவும் பாடுபட்ட மிகச் சிறந்த ஜனநாயகச் சிந்தனையாளராவார். அன்னைத் தமிழை இந்தியாவின் ஆட்சிமொழியாக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் முழங்கிய தமிழ்ப் பற்றாளராவார். இந்து, முஸ்லிம் என்கிற மதவெறி உணர்வுகளைத் தூண்டி அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் வன்முறைகளுக்கு ஊக்கமளித்தோருக்கிடையில், அத்தகைய மதவெறி உணர்வுகளுக்கெதிராக சமூக நல்லிணக்கத்தை முன்னெடுத்துச் சென்றவர். அதாவது, இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காகவும் இந்திய தேசிய நலன்களுக்காகவும் தொடர்ந்து களப்பணியாற்றியவர்.
திருமா-முல்லா-2010
அத்தகைய மாமனிதரின் கனவுகளை நனவாக்கும் வகையில் இஸ்லாமியப் பெருங்குடி மக்கள் யாவரும் அரசியல் சக்தியாக அணிதிரள வேண்டும். கண்ணியத் தமிழரின் ஜனநாயகச் சிந்தனைகளையும் சமூக நல்லிணக்க அணுகுமுறைகளையும் போற்றிப் பாதுகாத்திட அவர்தம் பிறந்தநாளில் அனைவரும் உறுதியேற்போம் என்று கூறியுள்ளார்.
இந்தியாவில் முஸ்லீம் பெண்கள் பர்தாவில் / பர்காவில் / ஹிஜாபில் இருக்கவேண்டும், ஆண்களுடன் சேர்ந்து வேலை செய்யக் கூடாது,…………………………இப்படி ஏகப்பட்ட சரத்துகள், கட்டுப்பாடுகள்!
Fashion style from Pakistan
ஆனால், பாகிஸ்தானிய பெண்கள் எப்படி இருக்கிறார்கள்?
Fashion design product Pakistan
ஃபேஷன் ஷோவிலே கலந்து கொள்வார்களா?
Pakistan_women
அட இவர்கள் பாகிஸ்தானியர்களா?
sara-deshi-jewelry
ஓஹோ நகைகளும் அணிவார்களா? இப்படி முதுகையும் காண்பிர்ப்பார்களா?
அண்மைய பின்னூட்டங்கள்