Archive for the ‘ஹக்கானி’ category

ஜாகிர் நாயக்கின் அடிப்படைவாத இஸ்லாம் பயங்கரவாத-தீவிரவாதம், ஜிஹாதி-பயங்கரவாதங்களை பெருக்கி, முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாதிகளாக்கும் விதம்!

ஜூலை 9, 2016

ஜாகிர் நாயக்கின் அடிப்படைவாத இஸ்லாம் பயங்கரவாத-தீவிரவாதம், ஜிஹாதி-பயங்கரவாதங்களை பெருக்கி, முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாதிகளாக்கும் விதம்!

bangladesh-attack-map-data01-07-2016 கடைசி வெள்ளிக்கிழமை அன்று வந்த ஜிஹாதிதீவிரவாதிகள்: வங்கதேச தலைநகர் டாக்காவில், கடந்த வாரம் ஜூலை.1, 2016 அன்று, “புனித” ரம்ஜான் மாதத்தில் கடைசி வெள்ளிக்கிழமை அன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், ஹோலே ஆரிசன் பேக்கரி சிக்கியது. தூதரங்கள் இருக்கும் அப்பகுதியை ஜிஹாதிகள் தேர்ந்தெடுத்தனர் என்று தெரிகிறது. இரவு, சுமார் 8.45 மணி அளவில் துப்பாக்கிகளோடு உள்ளே “அல்லாஹு அக்பர்” என்று கத்திக் கொண்டே நுழைந்தவர்கள், எல்லோரையும் பிணைகைதிகளாகக் கொண்டனர்[1]. இந்தியர் ஒருவர் உட்பட  22 பேர் பலியானார்கள் – இவர்களில் பெரும்பாலானவர் வெளிநாட்டவர்கள். அவர்களில் –

இத்தாலியர்  .      – 9

ஜப்பானியர்   ..     – 7

வங்காளதேசத்தவர் .– 2

அமெரிக்கர்    ..    – 1

இந்தியர்     .      – 1

போலீஸ்காரர் ….    – 2

தீவிரவாதிகள் முதலில் குரான் வசனங்களை கூறச்சொன்னார்கள். அதாவது, முஸ்லிம்களா இல்லையா என்று அவ்வாறு தீர்மானித்தார்கள் போலும்! சொன்னவர்களை வெளியே விட்டார்கள். மறுத்தவர்களை ஒருவர்-ஒருவராகக் குத்திக் கொலை செய்ய ஆரம்பித்தனர்[2].

The faces of dhaka-assilantsகொல்லப்பட்ட தீவிரவாதிகள்: துப்பாக்கிகளுடன் வந்த ஏழு தீவிரவாதிகளும் சுட்டு கொல்லப்பட்டனர்:

  1. மீர் சமேஷ் மோபேஷ்வர்.
  2. ரோஹன் இம்தியாஸ்.
  3. நிப்ரஸ் இஸ்லாம்.
  4. கைரூல் இஸ்லாம்.
  5. ரிபான்.
  6. சைஃபுல் இஸ்லாம்.

இரண்டு பேர்  பிடிபட்டு கைது செய்யப்பட்டனர். ஐசில் / ஐசிஸ் இத்தாக்குதலுக்கு ஒப்புக்கொண்டது. இரவு முழுவதும், அரசு விரைவு நடவடிக்கை வீஎஅர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை தொடர்ந்து நடந்தது. அடுக்த்த நாள் காலை, சுமார் 7 மணியளவில், உள்ளே நுழைந்து, தீவிரவாத்கள் ஆறுபேரை சுட்டுக் கொன்றது. 13 பேர் விடுவிக்கப்பட்டனர், 20 பிணங்கள் கண்டெடுக்கப்ப்ட்டன. இந்த தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் இரண்டு பேர், மும்பையில் மத போதகர் ஜாகிர் நாயக் பேச்சில் தாங்கள் கவரப்பட்டதாக கூறினர். தீவிரவாதிகளில் ஒருவனான ரோகன் இம்தியாஸை, மும்பையை சேர்ந்த, பிரபல இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சுக்கள் தாக்குதலுக்கு தூண்டியதாக செய்தி வெளியாகியது. பேஸ்புக்கில் ரோகன் இம்தியாஸ், ஜாகீர் நாயக் போதனைகளை பரப்பி வவந்தது அம்பலமானது.

One of the victims killed at Holey Artisan Bakery, Dacca06-07-2016 ரம்ஜான் முடியும் நாளன்று மறுபடியும் தாக்குதல்: 06-07-2016 அன்று வங்கதேசத்தில் மீண்டும் தீவிரவாதிகள் என சந்தேகிக்கும் நபர்கள் தொழுகை நடைபெற்ற இடத்தில் தாக்குதல் நடத்திய நிலையில், ஜாகிர் நாயக்கின் பேச்சுக்களை ஆய்வுசெய்யுமாறு இந்தியாவிற்கு வங்காளதேசம் கோரிக்கை விடுத்து உள்ளது[3]. வங்காளதேச தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஹசானுல் ஹக், கூறுகையில் “ஜாகிர் நாயக், போதனைகள் குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் இல்லை. நாயக்கின் போதனைகள் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது தொடர்பாக விசாரிக்கப்படும். நாங்கள் முழு விவகாரத்தையும் விசாரணை செய்து வருகிறோம்,” என்று கூறியுள்ளார். ஜாகிர் நாயக் பேச்சுக்களை ஆய்வு செய்யுமாறு இந்திய அரசு மற்றும் தகவல்துறை அமைச்சகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது என்றும் ஹக் கூறியுள்ளார்[4]. இது தொடர்பாக அவரது போதனைகளை ஆய்வு செய்ய இந்தியாவிடம் வங்காளதேசம் கேட்டுக் கொண்டு உள்ளது. மத்திய மற்றும் மராட்டிய அரசு இதுதொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்ய போலீசை கேட்டுக் கொண்டு உள்ளது. அவருடைய பேச்சு வீடியோக்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே கடந்த 2012-ம் ஆண்டு ஜாகிர் நாயக் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் கலந்துக் கொண்டதும், மேடையில் இருவரும் ஒன்றாக தோன்றும் விவகாரமும் பெரும் சர்ச்சைக்குள்ளாகியது.

Zakir inspired terrorist in action in Bangladeshஜாகிர் நாயக்கின் தூண்டுதல், ஊக்குவிப்பு, பிரச்சாரம்: இதனையடுத்து, ஜாகிர் நாயக் குறித்த விவாதம் எழுந்தது. இந்நிலையில், மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறுகையில், “ஜாகிர் நாயக் குறித்து அனைத்து விவரங்களையும் மத்திய உள்துறை அமைச்சகம் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது. அவரது பேச்சு ஆட்சேபனைக்குரியது என்றார். மேலும், வங்கதேச தாக்குதல் கண்டனத்திற்குரியது. பயங்கரவாதத்திற்கு எந்த மதமும் கிடையாது. எந்த பகுதியும் கிடையாது. பயங்கரவாதத்திற்கு எதிராக அனைத்து உலக நாடுகளும் ஒன்று சேர வேண்டும்”, என்றார்[5]. இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு சூசகமாக தெரிவித்துள்ளார்[6]. இதற்குள், தில்லி டிவி-செனல்கள் ஜாகிர் நாயக்கைப் பற்றிய செய்திகளை வெளியிட ஆரம்பித்து விட்டது.

Zakir Digvijaya embracing, ...etc September 2012 videoதிக்விஜய சிங்கும், ஜாகிர் நாயக்கும் கட்டிப் பிடித்து மகிழும் நிகழ்ச்சி[7]: ஜாகிர் நாயக்குடன் செப்டம்பர் 2012 வருடத்தைய நிகழ்ச்சியில் ஒன்றாக தோன்றி அமைதிக்கான தூதர் என்று பாராட்டை வழங்கி சர்ச்சையில் சிக்கியுள்ளார் காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங். ஜாகீரை மிக்க மரியாதையும் “ஹுஜூர்” என்று விளிப்பதும், அவர் தான் அமைதியை கொண்டுவருகிறார் என்று பாராட்டுவதும், முஸ்லிம் போல சலாம் அடிப்பதும், கட்டிப்பிடிப்பதும் காட்சிகள் கொண்ட வீடியோ 07-07-2015 வியாழக்கிழமை இணைதளங்களில் உலாவ ஆரம்பித்தது[8]. முதலில் இதற்கு பதில் சொல்ல தப்பிய திக், பிறகு தன்னைக் காத்துக் கொள்ள வழக்கம் போல உளற ஆரம்பித்தார்.  சாத்வி பிரக்யா தாக்குரை ராஜ்நாத் சிங் சந்தித்தது தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளார்.

digvijaya-with-zakir-naik.transfer.transferசமாதான தூதுவர்என்று ஜாகிரை பாராட்டியது: நிகழ்ச்சியில் திக்விஜய் சிங் பேசுகையில் சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்கை “சமாதான தூதர் என்றும் அவரால் இந்தியா ஒன்றாக சமூகங்கள் கொண்டு உதவ முடியும்,” என்றும் கூறியுள்ளார். பயங்கரவாதிகளை ஊக்குவித்ததாக ஜாகிர் நாயக் மீது குற்றச்சாட்டு எழுந்து உள்ளநிலையில் திக்விஜய் சிங் பேச்சு விபரங்கள் பெரும் சர்ச்சையாகி உள்ளது. இதனையடுத்து பயங்கரவாதத்துடன் ஜாகிர் நாயக்கிற்கு தொடர்பு உள்ளது தொடர்பாக ஆவணங்கள் இருப்பின் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறிய திக்விஜய் சிங், விசாரணையை சந்திக்கவும் தயார் என்று கூறினார்[9].  இதனையடுத்து தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாகிய மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் விவகாரத்தை இழுத்து உள்ளார்[10]. இதுதொடர்பாக டுவிட்டரில் தகவல் வெளியிட்டு உள்ள திக்விஜய் சிங், “ஜாகிர் நாயக்குடன் மேடையை பகிர்ந்துக் கொண்ட காரணத்திற்காக நான் விமர்சனத்திற்கு உள்ளாகிஉள்ளேன், ஆனால் ராஜ்நாத் சிங் ஜி குண்டு வெடிப்பு குற்றவாளி பிரக்யா தாகுரை சந்தித்து பேசியது பற்றிய கருத்து என்ன? பிரக்யா தாகுர் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டவர் ஆனால் ஜாகிர் நாயக்கிற்கு எதிராக எந்த ஒரு வழக்கும் உள்ளதா? ஜாகிர் நாயக்குடன் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஜி மேடையை பகிர்ந்துக் கொண்டது தொடர்பான கருத்து என்ன?,” என்று கேள்விகளை எழுப்பியுள்ளார்.

© வேதபிரகாஷ்

09-07-2016

[1] ISIS terrorists shouted ‘Allahu Akbar’ as they hacked to death 20 foreign tourists in restaurant in Bangladesh – but spared those who could recite the Koran – before armoured troops moved in.By MIA DE GRAAF FOR DAILYMAIL.COM  and IMOGEN CALDERWOOD FOR MAILONLINE and AGENCIES

PUBLISHED: 17:01 GMT, 1 July 2016 | UPDATED: 15:40 GMT, 2 July 2016

[2] http://www.dailymail.co.uk/news/article-3670353/Gunmen-attack-restaurant-Dhakas-diplomatic-quarter-police-witness.html

[3] தமிழ்.ஒன்.இந்தியா, தீவிரவாதிகளை உருவாக்குகிறதா ஜாகிர் நாயக் போதனை..? இந்தியாவை ஆய்வு செய்ய சொல்கிறது வங்கதேசம், By: Veera Kumar, Published: Thursday, July 7, 2016, 15:30 [IST].

[4] http://tamil.oneindia.com/news/international/bangladesh-asks-india-examine-zakir-naik-s-sermons-257595.html

[5] தினமலர், ஜாகிர் நாயக் மீது நடவடிக்கை: வெங்கையா சூசகம், பதிவுசெய்த நாள். ஜூலை.7, 2016.18.01

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1559285

[7] Published on Jul 7, 2016, A video has emerged of the Congress veteran, Digvijay Singh sharing the stage with Zakir Naik who inspired terrorists with his vitriolic speeches. In the video from Semptember 2012, Digvijay Singh ; https://www.youtube.com/watch?v=lMLgC0fkZbI

[8] As Naik came under the scanner, Congress leader Digivjaya Singh was in the BJP’s line of fire after a 2012 video, showing him share a dais with the televangelist at an event to promote communal harmony, surfaced on Thursday 07-07-2016.

http://www.thehindu.com/news/national/mumbai-police-to-probe-preacher-zakir-naiks-speeches-devendra-fadnavis/article8819992.ece

[9] தினத்தந்தி, ஜாகிர் நாயக் விவகாரம்: பிரக்யா தாக்குரை ராஜ்நாத் சிங் சந்தித்தது தொடர்பாக திக்விஜய் சிங் கேள்வி,பதிவு செய்த நாள்: வெள்ளி, ஜூலை 08,2016, 2:36 PM IST; மாற்றம் செய்த நாள்: வெள்ளி, ஜூலை 08,2016, 2:36 PM IST

[10] http://www.dailythanthi.com/News/India/2016/07/08143637/Zakir-Naik-row-What-about-Rajnath-Singh-meeting-Pragya.vpf

இந்திய முஸ்லிம்கள் ஐ.எஸ்சில் சேர்ந்து ஜிஹாதில் ஈடுபடுவது உள்ளூர் தீவிரவாதமா, அனைத்துலக தீவிரவாதமா?

நவம்பர் 23, 2015

இந்திய முஸ்லிம்கள் .எஸ்சில் சேர்ந்து ஜிஹாதில் ஈடுபடுவது உள்ளூர் தீவிரவாதமா, அனைத்துலக தீவிரவாதமா?

ஐ.எஸ் கொடி

ஐ.எஸ் கொடி

இந்திய முஸ்லும்கள் .எஸ்சில் சேர்வது உள்ளூர் தீவிரவாதமா, அனைத்துலக தீவிரவாதமா?: பாரீஸ் தாக்குதலை [13-09-2015 வெள்ளிக்கிழமை] தொடர்ந்து இந்தியாவில் ஐ.எஸ் இயக்கம் தாக்குதல் நடத்தும் வாய்ப்பு இருப்பதாக இந்தியா எச்சரித்து உள்ளது.  ஐ.எஸ் அமைப்பு இந்த வாரம் இந்தியாவில் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது என இந்திய உள்துறை கூறி உள்ளது. சிரியா, ஈராக்கில் இயங்கி வரும் ஐ.எஸ் அமைப்பில் குறைந்தது 23 இந்தியர்கள் இணைந்து உள்ளனர். இவர்களில் ஆறு பேர், மேற்கத்திய நாடுகளின் விமானத் தாக்குதல்களில் கொல்லப்பட்டனர்; ஒருவர், இந்தியா திரும்பிவிட்டார். இவர்கள், மஹாராஷ்டிரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்[1]. சிரியா மற்றும் ஈராக் நாடுகளில், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதிக்கத்தில் உள்ள பகுதிகளுக்கு அவர்கள் சென்றுள்ளனர். இவர்களில் ஆறு பேர், மேற்கத்திய நாடுகளின் விமான தாக்குதல்களில் கொல்லப்பட்டனர்; ஒருவர், இந்தியா திரும்பி விட்டார்.  இவர்கள், மஹாராஷ்டிரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள். மேலும், இந்தியாவில் உள்ள 150 பேர் ஐ.எஸ் பிரசாரத்தை தொடர்ந்து அந்த அமைப்பின் ஆதரவாளர்களாக செயல்பட்டு வருகின்றனர். அவர்களை இந்திய உளவுத்துறை கண்காணித்து வருகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

huji Bangaladesh

huji Bangaladesh

உள்ளூர் தீவிரவாதம்”, “உள்நாட்டில் வளர்ந்த தீவிரவாதம்”, “நாட்டுப்புற தீவிரவாதம்: இன்றைக்கு “உள்ளூர் தீவிரவாதம்”, “உள்நாட்டில் வளர்ந்த தீவிரவாதம்”, “நாட்டுப்புற தீவிரவாதம்” என்றெல்லாம் பேசப்படுகிறது. அதாவது, இஸ்லாமிய தீவிரவாதம் என்றால், அனைத்துலகில் செயல்படுகிறது என்ற எண்ணம் கூடாது. அந்தந்த நாட்டில், உள்ளூர் சமாசாரங்களுக்கு ஏற்பக்கூட அது செயல்படும், வேலை செய்யும் என்றுணர்த்த அவ்வாறான பிரச்சாரம் ஆரம்பிக்க வைக்கப்பட்டது. ஆனால், இணைதள விவகாரங்கள், கண்காணிப்புகள், தகவல் பரிமாற்றங்கள் முதலியன, இந்த உள்ளூர் தீவிரவாதிகள் அனைத்துலக தொடர்புகளுடன் தான் வேலை செய்கின்றனர் என்பது தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டின. முஸ்லிம்கள் எங்கு வாழ்ந்தாலும், அரேபிய-வளைகுடா நாடுகளுடன் தொடர்புகளை வைத்துள்ளனர். வேலை-வியாபாரம் முதலியவற்றைத் தாண்டி அவை வேலை செய்வது, பலமுறை கண்டறியப்பட்டுள்ளன. ஆனால், இது “அனைத்துலக தீவிரவாதம்” தான் என்பது, உலத்தில் பட இடங்களில் ஜிஹாதிகள் மேற்கொண்டு வரும் குரூர-கொடூர தாக்குதல்களிலிருந்து தெரியவருகிறது.

Protesters hold ISIS flag in Srinagar-TOI photo by Bilal Bahadur- October 2014

Protesters hold ISIS flag in Srinagar-TOI photo by Bilal Bahadur- October 2014

மதத்தலைவர்கள், ஷேக்குகள், பிரச்சாரகர்கள் வந்து போகும் போது, அவர்களுடன் தீவிரவாதிகளும் வருவது: இந்தியாவைப் பொறுத்த வரையில், ஒவ்வொரு முறை, மதத்தலைவர்கள், ஷேக்குகள், பிரச்சாரகர்கள் அங்கிருந்து வரும் போது, மதவிரும்பங்களுக்கு ஏற்பத்தான் அவர்கள் செயல்பட்டு வந்துள்ளனர். இஸ்லாம் வளர நிதியுதவி அளித்துள்ளனர். இதனால், மசூதிகள் பெருகின; முஸ்லிம் பிரிவுகளும் பெருகின; அரசியல் கட்சிகளும் வளர்ந்தன. இவையெல்லாம் நிதியுதவி பெறவே அவ்வாறு பிரிந்துள்ளது போல காட்டிக் கொள்வதும் தெரியவந்துள்ளது. ஏனெனில் மதரீதியில், விருப்பங்களில் ஒன்றாகத்தான் வேலை செய்து வந்துள்ளனர். இதே முறைதான் அயல்நாட்டு தொடர்பிகளிலும் வேலை செய்து வருகின்றன. மதத்தலைவர்கள், ஷேக்குகள், பிரச்சாரகர்கள் வந்து போகும் போது, அவர்களுடன் தீவிரவாதிகளும் வருவது திடுக்கிட வைப்பதாக உள்ளது. இது அஷ்ரப் அலி வழக்கில் தெரியவந்துள்ளது. கேரளாவுக்கு முன்பு 1980களில் ஷேக்குகள் வந்து சென்றபோது பிரசினை ஏற்பட்டதை நினைவு கூறலாம். அவர்கள் வியாபார நிமித்தம், சுற்றுலா என்ற போர்வைகளில் வந்து, மதப்பிரச்சாரத்தில் ஈடுபடுவது, மசூதிகள் கட்டுவதற்கு, நிதியுதவி கொடுப்பது போன்ற காரியங்களில் ஈடுபட்டுள்ளனர். வெறும் மதரீதியில் அவர்களது காரியங்கள் இருந்தால் பரவாயில்லை. அப்பொழுது மதமாற்றம் என்ற பிரச்சினை இருந்தது, இப்பொழுது தீவிரவாதம் என்று மாறியுள்ளது.

Indian Muslim youth become ISIS supporters, warriorsஎஞ்சினியர்கள் .எஸ் வேலையில் சேர்வதன் மர்மம் என்ன?: கடந்த பிப்ரவரி 2015ல் ஒன்பது இந்திய முஸ்லிம்கள் துருக்கியிலிருந்து நாடுகடத்தப்பட்டனர். பெங்களுருக்கு வந்தபோது, போலிஸார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். சுற்றுலா விசா மூலம் அவர்கள் பெங்களுரிலிருந்து டிசம்பர் 24,2014 அன்று இஸ்தான்புல் நகருக்குச் சென்றனர். ஜனவரி.30, 2015 அன்று துருக்கிய அதிகாரிகள் அவர்களை நாடுகடத்தியுள்ளனர்[2].

  1. இப்ராஹிம் நௌபல் – Ibrahim Nowfal, 24, from Hassan
  2. ஜாவித் பாபா – Javeed Baba, 24, from Khammam district, Telangana.
  3. மொஹம்மது அப்துல் அஹத் – Muhammed Abdul Ahad, 46, belonged to a family from Chennai
  4. மொஹம்மது அப்துல் அஹத்தின் மனைவி – his wife belonged to a family from Chennai
  5. மொஹம்மது அப்துல் அஹத்தின் ஐந்து குழந்தைகள் – their five children seven belonged to a family from Chennai[3].

மொஹம்மது அப்துல் அஹத் ஒரு கம்ப்யூட்டர் இஞ்சினியர் மற்றும் அமெரிக்காவில் 10 ஆண்டுகள் வேலை செய்தவர் என்று குறிப்பிடத் தக்கது[4]. அமெரிக்காவில் தங்கிவிட்டாலும், இன்னும் இந்திய பாஸ்போர்ட்டை வைத்திருக்கிறான் என்று போலீஸார் எடுத்துக் காட்டினர். இங்கு படித்தவர்கள் தீவிரவாதிகள் ஆகிறார்கள் என்பது முக்கியமல்ல, படித்தும் முஸ்லிம்களின் மனங்கள் மதவாதம், அடிப்படைவாதம், ஜிஹாதித்துவம் முதலியவற்றால் இருகிவிடுவதால், தீவிரவாதத்தில் ஈடுபடுவது, ஒரு தெய்வீக காரியமாக, கடவுளுக்கு செய்கின்ற காரியமாக மனவுவந்து செய்கிறார்கள். அவர்களது மனைவி, பேற்றோர், மற்றோரும் அறிந்தே உதவுகின்றனர். இது சித்தூரில் தீவிரவாதிகள் பிடிபட்டபோது தெரியவந்தது.

HSBC-drugs-and-terrorism-financing

HSBC-drugs-and-terrorism-financing

தீவிரவாதத்தையே, ஒரு தொழிலாக, உத்தியோகமாக, வியாபாரமாக, நடத்தும் விதம்:  ஒருவேளை, தீவிரவாதத்தையே, ஒரு தொழிலாக, உத்தியோகமாக, வியாபாரமாக, நடத்த தீர்மானித்து விட்டு, ஒரு கம்பனி போன்ற அமைப்பை உருவாக்கி வைத்தால், அக்கம்பெனிக்கும் பற்பலவிதமான ஆட்கள், தொழிலாளர்கள் என்று தேவைப்படுவார்கள் இல்லையா. ஒருவேளை, ஒரு கம்பெனி என்ன செய்கிறது என்று வெளிப்படுத்தாமல் அல்லது ஏதோ ஒருவேளையை செய்வது போல செய்து வந்தாலும், அக்கம்பெனிக்கு வரவு-செலவு பார்க்க, கம்பெனியின் கட்டிடம் பராமரிக்க, டீ-காபி மற்றும் உணவு சப்ளை செய்ய, என்று ஆட்கள் தேவைப்படுவார்களே? ஒரு வங்கி வைத்திருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம், அவ்வங்கியின் வேளை, பொது மக்கள், வியாபாரிகள், மற்ற முதலீட்டார்களிடமிருந்து பணத்தை சேமிப்பாகப் பெறுவது, அதனை அதிக வட்டிக்குக் கொடுப்பது என்று தானே வியாபாரம் செய்து வருகிறது. பணம் எப்படி வருகிறது, யாருக்கு என்ன காரியத்திற்குப் போகிறது என்பது பற்றி அவர்களுக்குக் கவலையில்லையே. உரிய ஆவணங்கள் இருந்தால் கடன் கொடுத்துவிட்டுப் போகிறார்கள். ஆக, தீவிரவாதத்தை ஒரு தொழிலாக, உத்தியோகமாக, வியாபாரமாக, நடத்தும் கம்பெனிகளும் சார்டர்ட் அக்கௌன்டென்ட், எஞ்சினியர்கள், டாக்டர்கள் என்று எல்லோரையும் வேலைக்கு வைத்துக் கொள்வார்கள்.  HSBC  வங்கி அதுபோலத்தான், தீவிரவாதிகளுக்கு உதவியுள்ளது.

Haqqani network affecting India

Haqqani network affecting India

நன்றாக சம்பளம் கொடுத்தால், எந்த வேலைக்கும் தயாராகத்தானே இருப்பார்கள்: அதிகமாக பணம் வரும்போது, சம்பளத்தையும் அதிகமாகக் கொடுத்து வந்தால், வேலை செய்பவர்கள் எந்த கவலையும் இல்லாமல் வேலை செய்து கொண்டே இருப்பார்கள். முஸ்லிம்களையே பெரும்பாலும் வேலைக்கு வைத்துக் கொண்டால், அவர்களிடயே யாருக்கு ஜிஹாதித்துவம் பிடித்திருக்கிறது, போராட தயாராக இருக்கிறார்கள் என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள். பிறகு நம்பிக்கைக்கு பாத்திரமாகி விட்டால், அவர்களை நன்றாக மூளைசலைவை செய்து, அவர்களுக்கு வேண்டியவற்றை, எல்லாம் கொடுத்து, கைப்பொம்மைகளாக்கி விட்டால், அவர்கள் மனித-வெடிகுண்டாகக் கூட வேலை செய்ய தயாராகி விடுவார்கள். அப்படித்தான், ஒருவன் சென்னையிலிருந்து சென்றவன் மனித-வெடிகுண்டாக வேலை செய்து செத்திருக்கிறான். ஆனால், அவன் குடும்பத்திற்கு லட்சங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். ஆகவே, யாரும் கவலைப்படாமல் அமைதியாகத்தான் இருப்பார்கள். மேலும், அவன் ஒரு ஷஹீதாகக் கருத ஆரம்பிக்கப்பட்டுவிடுவான். இப்படித்தான், பெங்களுர் மெஹ்தி மஸ்ரூர் பிஸ்வாஸ் ஐசிஸ்க்கு ஆள் சேர்க்கும் வேலையை ஆரம்பித்திருப்பான்.

© வேதபிரகாஷ்

23-11-2015

[1]  தமிழ்.ஒன்.இந்தியா, .எஸ்..எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர 2 தமிழக இளைஞர்கள் முயற்சிஅதிரடியாக நாடு கடத்தியது துருக்கி!!, Posted by: Mayura Akilan, Updated: Saturday, November 21, 2015, 11:54 [IST].

[2] Nine persons from India, including one from Hassan, have been deported by Turkey after they were allegedly caught trying to cross over to Syria to join the terror outfit ISIS, police say. The group is being questioned by Bengaluru police and central agencies after they arrived at the Kempegowda International Airport (KIA) on Sunday. According to police, they went to Istanbul from Bengaluru on tourist visas on December 24, 2014, and were sent back by the Turkish authorities on January 30.

http://timesofindia.indiatimes.com/india/Engineers-among-9-ISIS-bound-Indians-deported-by-Turkey/articleshow/46079886.cms

[3] Among those sent back from Turkey are engineers Ibrahim Nowfal, 24, from Hassan and Javeed Baba, 24, from Khammam district, Telangana. The remaining seven belonged to a family from Chennai – Muhammed Abdul Ahad, 46, his wife and their five children.

http://timesofindia.indiatimes.com/india/Engineers-among-9-ISIS-bound-Indians-deported-by-Turkey/articleshow/46079886.cms

[4] Police said Ahad has done masters in computer science from Kennedy-Western University, California, US, and worked in the US for more than 10 years. A senior police officer said Ahad had left India soon after doing his graduation in engineering and was settled in the US. “Two of his children are US citizens, but he still holds an Indian passport,” said the police officer.

http://timesofindia.indiatimes.com/india/Engineers-among-9-ISIS-bound-Indians-deported-by-Turkey/articleshow/46079886.cms

அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுதல், ஜிஹாதிகளாக் உருவாக்குதல், ஜிஹாதை-புனிதப்போரைத் தொடர்ந்து நடத்துதல் – பொகோ ஹரமின் கவர்ச்சியான-செக்ஸியான திட்டம் (3)

மே 10, 2015

அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுதல், ஜிஹாதிகளாக் உருவாக்குதல், ஜிஹாதைபுனிதப்போரைத் தொடர்ந்து நடத்துதல்பொகோ ஹரமின் கவர்ச்சியானசெக்ஸியான திட்டம் (3)

Nigerian refugees sit at a Chadian camp in the village of Klissoum near NDjamena March 28, 2015- Philippe Desmazes-Getty Images

Nigerian refugees sit at a Chadian camp in the village of Klissoum near NDjamena March 28, 2015- Philippe Desmazes-Getty Images

பெண்கள் ஜிஹாதிகளாக மாறும் முறை: மேற்கத்தைய படிப்பு முறை தேவையில்லை, அதை சொல்லிக் கொடுக்கும் பள்ளிகளை குண்டு வைத்து தகர்ப்போம், சிறுமிகள் மற்றும் பெண்கள் படிக்க வேண்டிய அவசியல் இல்லை. அவர்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்குச் சென்றால் தடுக்கப்படுவர், மீறீனால் சுட்டுத்தள்ளப்படுவர் என்றுதான் இன்றளவும் ஜிஹாதிக்குழுக்கள் நடந்து கொண்ட் வருகின்றனர். மலாலாவை வைத்து, மேற்கத்தைய ஊடகங்கள் பிரச்சாரம் செய்தாலும், பெர்ம்பான்மையான முஸ்லிம் பெண்கள் படிப்பறிவு இல்லாமல் தான் இருக்கின்றனர். மாறாக, இந்த ஜிஹாதிக் குழுக்கள் மற்ற ஜிஹாதிகளுக்கு எல்லாவிதங்களிலும் உதவச் சொல்கின்றனர். அத்தகைய முறையில் போதனை அளிக்கப்படுகிறது. அவர்களையும், ஜிஹாதில் பங்கு கொள்ளச் செய்கின்றனர். அவ்வாறு அல்லாவிற்கு முழுமையாக சரணாகதி அடைந்த பெண்கள், எல்லாவற்றையும் செய்ய அறிவுருத்தப் படுகிறாள். அந்நிலையில் தான், பல ஜிஹாதிகளுடன் உடலுறவு கொள்வது, குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது, குழந்தைகளை ஜிஹாதிகளாக வளர்த்துப் பெரியவர்களாக்க ஒப்புக் கொள்ளுதல் போன்ற நிகழ்வுகளும் ஏற்படுகின்றன.

Nigerian soldiers rescued these women and children from Boko Haram extremists.

Nigerian soldiers rescued these women and children from Boko Haram extremists.

ஜிஹாதிகளின்நல்ல குழந்தைகளைப் பெற்றெடுத்தல்: பொகோ ஹரம் என்ற இஸ்லாமிய ஜிஹாதி இயக்கம் பிடித்து வைக்கப்பட்டுள்ள வயதுக்கு வந்துள்ள சிறுமிகள், இளம் பெண்கள் முதலியோரை உடலுறவு கொண்டு, கர்ப்பமாக்கி, குழந்தைகளை பெற்றெடுக்க செய்யப் போவதாக அறிவித்துள்ளார்கள்[1]. இதன் மூலம் புதிய வீரியமுள்ள ஹிஹாதி வீரர்களை பிறப்பெடுத்து, உருவாக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளதாகப் பெருமையாகக் கூறிக் கொண்டனர். அதாவது குழந்தைகள் பிறந்ததும், அவை ஜிஹாதித்துவ பெண்மணிகளால் ஜிஹாத்-பாலூட்டி, அடிப்படைவாத-தாலாட்டி, இஸ்லாம்-சீராட்டி வளர்க்கப்படுவர். இதனால், அல்லா பெயரால் என்ன செய்யச் சொன்னாலும் செய்யக் கூடிய ரோபோக்களாகத் தயாராவர். அதனால், புதிய போராளிகள் கொண்ட பரம்பரை உருவாகும்[2]. அவர்கள் போர்ச்சுகீசியரும் இத்தகைய முறைகளை கோவாவில் பயன்படுத்தினர் என்பதனைக் கவனிக்கவேண்டும்[3]. கிருத்துவர்கள் மற்றும் முகமதியர்கள் மற்ற நாடுகளில் 100-200 ஆண்டுகளில் பலன் பெற அல்லது விளைவு ஏற்பட திட்டமிட்டு செய்யும் இத்தகைய செயல்களினால் ஏற்படும் தீங்குகள் அந்த்கந்த நாடுகளில் பிறகு தான் தெரியவரும்.

she says her husband was killed before she was abducted by Islamist extremists.

she says her husband was killed before she was abducted by Islamist extremists.

ஜிஹாதிகளை உருவாக்கும் எந்திரங்களாக பெண்கள் உபயோகப்படுத்தப் படல்: வடகிழக்கு நைஜீரியா, போர்னோ மாநிலத்தின் ஆளுனர் அல்-ஹாஜி காசிம் ஷேட்டிமா [Alhaji Kashim Shettima], சமீபத்தில் காமரூன் நாட்டு எல்லைகளில் உள்ள சம்பசி காடுகளிலிருந்து விடுவிக்கப்பட்ட 214 சிறுமிகள், இளம் பெண்கள், பெண்கள் முதலியோரை வேண்டுமென்றே, வலுக்கட்டாயமாக கற்பழித்து அனுப்பியுள்ளனர் என்று தெரிவித்தார்[4]. புரொபசர் பாபாதுன்டே ஓஸ்டோமேயின் [Professor Babatunde Osotimehin] என்ற ஐக்கிய நாடுகள் சங்க இயக்குனரும் இவ்விவரத்தை வெளியிட்டார். கருத்தரித்து குழந்தைகளைப் பெற்றெடுக்க தயாராக 214 பெண்கள் இருக்கிறார்களாம்[5]. இவர்களில் சிலருக்கு இரட்டை, மூன்று, நான்கு குழந்தைகளும் பிறக்க வாய்ப்புள்ளது. மதவெறி மற்றும் காழ்ப்புடன் இத்தகைய பேச்சுகளை பேசுகிறார்கள் என்பதனையும் கவனிக்கலாம். இதுவரை காப்பாற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 600ஐத் தாண்டியுள்ளது. இப்பொழுது 1,000ஐ எட்டுகிறது[6]. இவர்கள் கடந்த ஆண்டில் கடத்திச் செல்லப்பட்ட 234 பெண்களில் சேர்ந்தவர்கள் என்று கருதப்படுகிறது. 2014லிலிருந்து இத்தீவிரவாதிகள் 2,000ற்கும் மேற்பட்டவர்களைக் கடத்திச் சென்றுள்ளார்கள்.  மதரீதியில், இவ்வாறு பொம்மைகளைப் போல, அடிமைகளை விட மோசமான நிலையில் சொல்வதை செய்யும் மக்களை உருவாக்கும் எண்ணம் உலகத்திலேயே மோசமானது. இதனால், ஈவு-இரக்கம் இல்லாமல், மிகக்கொடுமையான, குரூரமான தீவிரவாத-பயங்கரவாத செயல்களை அவர்கள் மூலம் நிறைவேற்றப் போகிறார்கள் என்று தெரிகிறது.

Women demonstrating for the freedom of the girls abducted by Boko Haram

Women demonstrating for the freedom of the girls abducted by Boko Haram

மதவுரிமைகளில் மனிதவுரிமைகள் மறைந்து விடுகின்றன: பெண்களின் உரிமைகள் என்ற ரீதியில் ஆங்கில ஊடகங்கள் செய்திகள் மூலம் இவற்றை வெளியிட்டாலும், அவ்வூடகங்களின் நிருபர்கள், நிபுணர்கள் முதலியோர் கிறிஸ்தவர்களாக இருப்பதினால், இஸ்லாமிய அமைப்புகள், இஸ்லாம்-விரோத ரீதியில் செய்திகள் வெளியிடப்படுகின்றன என்று குற்றாஞ்சாட்டுகின்றன. அதே வேளையில், அல்-ஹஜிரா, கல்ப் செய்திகள் போன்ற இஸ்லாமிய ஊடகங்களிலேயே, பொகோ ஹராம், ஐசிஸ் போன்ற இயக்கங்களின் கொலைகள், கடத்தல்கள் முதலியவற்றை வெளியிட்டு வருகிறார்கள். அதனால், அவை பொய் என்றாகி விடாது. இதற்கும் மதரீதியில் விளக்கம் கொடுத்து, ஜிஹாதிகளை உயர்வாகப் பேசி, தற்கொலையாளிகளை “ஷஹீத்” என்று பாராட்டி, அத்தகைய செயல்களை அல்லாவுக்காக செய்யப் படபடுகின்றன என்றும் விவாதிக்கலாம். ஆனால், இருவகையான விளக்கங்கள், செய்தி வெளியீடுகள், பாதிக்கப் பட்ட மக்களின் துயரங்களை மாற்றிவிடப் போவதில்லை. ஹிஹாதிகளால் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் உயிர்கள் திரும்பக் கிடைக்கப் போவதில்லை. கற்பழிக்கப் பட்ட பெண்களின் தூய்மை, தாய்மை, மேன்மை முதலியவை அப்பெண்களுக்குக் கிடைக்கப் போவதில்லை. அல்லாவுக்கு அவர்கள் செய்த காரியங்கள் மகிழ்வூட்டலாம், ஷ்ஹீதுகள் நேரிடையாக சொர்க்கத்துக்குப் போகலாம், ஆனால், பாதிக்கப் பட்ட பெண்கள், இவ்வுலகத்தில் கஷ்டப்பட்டுக் கொண்டுதான் இருக்க வேண்டும். பிறகு அவர்களது சாபங்களுக்கு யார் பதில் சொல்லப்போவது? அப்பெண்களின் துயத்தை எடுத்துக் காட்டும் வீடியோ ஒன்று[7].

Women kidnapped by suspected Boko Haram militants

Women kidnapped by suspected Boko Haram militants

நைஜீரிய அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கை: கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் மதங்களினால் உலக மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களால் பழைய நாகரிகங்களின் ஆதாரங்களும் அழிக்கப்பட்டு வருகின்றன. சரித்திரம் ஆதாரங்கள், ஆராய்ச்சிகள் என்றெல்லாம் பேசும் மேற்கத்தைய நிபுணர்கள் இவ்விசயங்களில் அமுக்கமாகவே இருந்து வருகிறார்கள். இப்பொழுது, ஐசிஸ் மற்றும் பொகோ ஹராம் சமுதாயத்தைப் பலவழிகளில் பாதித்து வருகின்றன. பொருளாதார ரீதியில் சிறந்து விளங்க வேண்டிய நைஜீரியா, இப்பொழுது, பொகோ ஹராம் தீவிரவாதத்தால் சீரழிந்துள்ளது. உள்ளூர் ஆட்சியாளர்கள், முதலில் தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்தி, நாட்டின் பொருளாதாரத்தை சீரமக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

09-05-2015

[1] Ludovica Iaccino, Nigeria: Boko Haram impregnated girls ‘to guarantee new generation of fighters’, IBTimes, May 6, 2015 17:58 BST

[2] http://www.ibtimes.co.uk/nigeria-boko-haram-impregnated-girls-guarantee-new-generation-fighters-1500022

[3]  கோவாவில் ஆரம்பித்த அவர்களது கலப்பின மக்கள் உற்பத்தி முயற்சி, பல ஜாதிகளை உண்டாக்கின. காஸ்டா / ஜாதி என்ற பெயரே அவர்களால் தான் உருவாக்கப்பட்டு, இன்று இந்தியர்களை ஆடிப்படைத்து வருகின்றது.

[4] The governor of Borno state, north-eastern Nigeria, has said that terror group Boko Haram (now Iswap) deliberately impregnated the 214 girls recently rescued by the army in the Sambisa forest on the border with Cameroon. The girls were part of some 234 women and children freed after being kidnapped by the terrorists, who are believed to have abducted some 2,000 civilians since the beginning of 2014.

[5]http://www.theroot.com/articles/news/2015/05/_214_out_of_the_234_women_girls_rescued_from_boko_haram_are_reportedly_pregnant.html

[6] The news was broken early this week by our former Minister of Health, Professor Babatunde Osotimehin, now Executive Director of United Nations Population Fund. He said most of the girls rescued from Boko Haram camps were visibly pregnant. Another source put the actual figures of expectant mothers at 214. That was when the figure of those rescued stood at about 600.  Now, the number has hit at least 1,000.  So, it means more babies could be expected.  Of the identified 214 pregnant, some could be carrying twins, triplets, and possibly quadruplets.  It’s really an invasion! http://sunnewsonline.com/new/?p=118371

[7] http://www.telegraph.co.uk/news/worldnews/africaandindianocean/nigeria/11593573/They-told-us-if-we-didnt-come-with-them-they-would-beat-us.html

தலிபான் ஜிஹாதிகள் சையது பானர்ஜிக்கு கொடுத்த தண்டனை – காபிர்களுக்கும், திம்மிகளுக்கும் எச்சரிக்கை – ஹக்கானி குழு – தலிபான் ஒப்புக் கொண்டது!

செப்ரெம்பர் 15, 2013

தலிபான் ஜிஹாதிகள் சையது பானர்ஜிக்கு கொடுத்த தண்டனை – காபிர்களுக்கும், திம்மிகளுக்கும் எச்சரிக்கை – ஹக்கானி குழு – தலிபான் ஒப்புக் கொண்டது!

ஹக்கானி குழு – தலிபான் ஒப்புக் கொண்டது: ஹக்கானி என்ற இஸ்லாமிய இயக்கத்தின் பிரிவான தலிபான் குழுவொன்று தாம் தான் சுஷ்மிதா பானர்ஜியைக் கடத்திச் சென்று கொன்றதாக ஒப்புக் கொண்டுள்ளது. காரி ஹம்ஸா [Qari Hamza] என்ற அத்தீவிரவாதக் கூட்டத்தின் தொடர்பாளன் “தி டெய்லி பீஸ்ட்” [Daily Beast] என்ற நாளிதழுக்கு, “அவள் இந்திய உளவாளி என்பதால் நாங்கள் கொன்றோம். அவளைக் கடத்திச் சென்று மூன்று மணி நேரம் விசாரித்தோம். பிறகு கொன்றுவிட்டோம்”, என்று தெரிவித்துள்ளான்[1]. ஜலாலாபாதில் உள்ள இந்திய தூதரகத்தை சமீபத்தில் தாக்கியதும் இக்கூட்டம் தான். காரி ஹம்ஸா, “எங்களது விசாரணையில் அவள் மேலும் சில ஏஜென்டுகளின் பெயர்களை தெரியப்படுத்தியுள்ளாள். அவர்களையும் நாங்கள் விடமாட்டோம்”, என்று அறிவித்தான்[2]. இதே செய்தியை மற்ற நாளிதழ்களும் வெளியிட்டுள்ளன. ஆனால், “தி டெய்லி பீஸ்ட்” வெளியிட்டுள்ளது கீழ்கண்டவாறு உள்ளது[3]:

 ‘We Killed Sushmita Banerjee’ Says Renegade Taliban Militia

by Sami Yousafzai, Ron Moreau Sep 14, 2013 4:45 AM EDT

A brutal renegade Taliban militia says they interrogated, then killed, the Indian author, bizarrely claiming she was a spy. Sami Yousafzai and Ron Moreau report.

“We killed Sushmita Banerjee because she is an Indian spy,” the group’s spokesman, Qari Hamza, tells The Daily Beast exclusively. He admits that his men kidnapped, harshly interrogated, and then killed her. “We took her from her house, investigated her for three hours and then left her dead,” he says. “During our investigation Sushmita Banerjee also disclosed the names of other agents and we will go after them as well,” he adds. “We are against everyone who is engaged against the Afghans, the jihad and works with the American attackers.”

இந்திய ஊடகங்கள் மறைத்த விவரங்கள்: வழக்கம் போல, “அவளை சித்திரவதை செய்து” விசாரித்தோம், மற்றும் “நாங்கள் ஆப்கானியர்களுக்கு எதிராக யார் வேலை செய்தாலும் ஒழித்துவிடுவோம், ஜிஹாத் மற்றும் அமெரிக்கர்களுடன் வேலை செய்பவர்கள் அனைவரையும் எதிர்ப்போம்”, என்றதையும் மறைத்து செய்தியை வெளியிட்டுள்ளனர். அதுமட்டுமல்லாது, சுஷ்மிதா பானர்ஜி எவ்வாறு கடத்திச் செல்லப்பட்டார் என்பதையும் அந்நாளிதழ் விவரித்துள்ளது. நடு இரவில், 12 அடி உயரமான சுவரைத் தான்டி குதித்து, சுமார் 10-12 துப்பாக்கி ஏந்தியவர்கள் ஜான்பாஸ் கானின் வீட்டில் நுழைந்தனர். தூங்கிக்கொண்டிருந்த கானை துப்பாக்கி முனையில் எழுப்பிக் கண்களைக் கட்டிக் கட்டி போட்டு விட்டு, “கத்தினால் தொலைத்துவிடுவோம்”, என்று மிரட்டி, சுஷ்மிதாவைக் கடத்திச் சென்றனர். பக்கத்து அறையில் தூங்கிக் கொண்டிருந்த கானின் சகோதரர், காலையில் எழுந்த பார்த்த போதுதான் விவரத்தை அறிந்து கொண்டனர்.

துப்பாக்கிகளால் சுட்டுத்தான் எதையும் தெரிவித்துக் கொள்வார்கள்: விடியற்காலை 3 மணியளவில், அந்த கிராமத்தில் இருக்கும் ஒரு மூதாட்டி, “காலையில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. குழந்தை பிறந்ததால், அவ்வாறு கொண்டாடுகிறார்கள் போலிருக்கிறது என்று நினைத்தேன்”, என்றாளாம். ஆனால், உண்மையில் அது தலிபானின் தண்டனை நிறைவேற்றிய சத்தம் தான். நயப் கான் என்பவர், தான் இரவு உடையுடன் ஒரு பெண்ணின் உடல் சிதைந்த நிலையில் கண்டதை கூறினார்.  அப்பெண்ணின் முகம் குரூரமாகச் சிதைக்கப் பட்டிருந்தது[4]. சுமார் 15-20 முறை துப்பாக்கிகளால் சுடப்பட்டிருக்கலாம். அவள் சாதாரணமாக, ஆப்கன் பென்களைப் போல உடையணிமல் இருந்ததால், சுஷ்மிதா தான் என்று எளிதில் அடையாளம் கண்டு கொண்டனர்.

இந்திய பெண்ணின் மீது தாக்குதல், கொலை, எச்சரிக்கை[5]: தலிபானின் பெண்களை அடக்கும், அடக்கியாளும், ஆண்டு சித்திரவதை செய்யும், அவ்வாறு சித்திரவதை செய்து கொல்லும் போக்கை இன்னும் அறியாத இந்தியர்கள், இந்துக்கள், காபிர்கள் இருக்கலாம். தலிபான் ஜிஹாதிகள் சுஷ்மிதா பானர்ஜி என்ற எழுத்தாளரை, வீட்டுக்குள் நுழைந்து கணவரைக் கட்டி வைத்து விட்டு, வெளியே கொண்டு சென்று சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு, உடலை மதரஸா அருகில் போட்டுச் சென்றதாக செய்திகள் வந்துள்ளன[6]. இதன் மூலம், மறுபடியும் இந்திய மரமண்டைகளுக்குப் புரியும் வண்ணம் தலிபான் ஜிஹாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆமாம், உண்மையில் ஷரீயத் என்ற இஸ்லாமியச் சட்டத்தின் படி அவருக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்[7]. கான் சொன்னது, “நான் கதவை திறந்து போது, தலைப்பாகைகளுடன், முகங்களை மறைத்துக் கொண்டிருந்தார்கள். உடனே உள்ளே நுழைந்தார்கள்”, என்று கான் சொன்னதாக முன்னர் செய்தியை வெளியிட்டது[8].

சுஷ்மிதாபானர்ஜி, என்றசையதுபானர்ஜி கொலை செய்யப்பட்டவிதம்: ஷரீயத் என்ற இஸ்லாமியச் சட்டத்தின் படி அவருக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது என்பது கீழ்கண்ட செயல்களால் தெரிய வருகிறது[9]:

  • கணவனுக்குத் தெரிந்த நிலையில், அவரைக் கட்டிப் போட்டு, மனைவியை இழுத்துச் செல்லுதல் – அதாவது கணவாக இருந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது என்பதனை காட்டியது.
  • தலைமுடியை பிடுங்கியது[10] – குரூரமான செயல் – அதாவது பெண்ணின் அடையாளத்தை உருகுலைத்தல்.
  • 20 தடவை சுட்டது – ஒரு பெண்ணை நேருக்கு நேராக இத்தனை தடவை சுடவேண்டிய அவசியம் இல்லை, ஆனால், தலிபானின், ஷரீயத்தின், இஸ்லாத்தின் தண்டனை எப்படி அமூல் படுத்தப் படும் என்பதைக் காட்டவே அவ்வாறு சுட்டுள்ளனர்.
  • இத்தனையும் அவர் கட்டப்பட்டுள்ள நிலையில் நடந்துள்ளது – அதாவது சித்திரவதை படுத்தப் பட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

இவரது நாவல் திரைப்படம் ஆனது, ஆனல், உடல் பிணமானது: இப்பெண்ணின் நாவல் / புதினம், திரைப்படம் ஆகியிருக்கலாம். ஆனால், அத்தகைய படம் வந்ததா என்றே தெரியவில்லை என்பது நோக்கத்தக்கது. இன்றைக்கு, ரோஜா, மும்பை, விஸ்வரூபம் போன்ற படங்களை தடை செய் என்று தமிழகத்திலேயே முஸ்லீம்கள் ஆர்பாட்டம் செய்து வருகின்றனர். பிறகு, இப்படத்தின் கதி என்னவாயிற்று என்று தெரியவில்லை. இவரது நாவல் திரைப்படம் ஆகியிருக்கலாம், ஆனால், ஆவரது உடல் இப்பொழுது பிணமாகியுள்ளது என்பதுதான் உண்மை. ஆமாம், இஸ்லாம் அவருக்கு விடுதலை கொடுத்துள்ளது.

யார் இந்த ஹக்கானி?[11]: ஆப்கானிஸ்தானிய மவ்லவி ஜலாலுத்தீன் ஹக்கானி 1980களில் இந்த இயக்கத்தை ஆரம்பித்து தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்து வருகிறார். ஹக்கானி குழுவினர் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், அரேபிய வளைகுடா நாடுகள் மற்றும் அதற்கு அப்பால் தமது ஆதிக்கத்தைச் செல்லுத்தி ஆண்டு வருகின்றனர். இறக்குமதி, ஏற்றுமதி, கட்டுமானம், போகுவரத்து என்று எல்லா வியாபாரங்களிலும் நுழைந்து, கட்டப்பஞ்சாயத்து, கடத்தல், கந்துவட்டி, பணம் பிடுங்குதல் முதலியன செய்து, பணம் பெருக்கிவருகின்றன. போதைமருந்து, ஹவாலா, பணபரிமாற்றம், போன்ற எல்லா சட்டவிரோத செயல்களிலும் ஈடுபட்டுள்ளன. ஆனால், எல்லாவற்றையும் “ஜிஹாத்” போர்வையில் நடத்தி வருகின்றன.

© வேதபிரகாஷ்

15-09-2013


[1] Alleging she was an Indian spy, the Taliban group — Suicide Group of the Islamic Movement of Afghanistan — told a Western publication they were taking responsibility for the killing. This group was reportedly involved in the recent attack against the Indian Consulate in Jalalabad.”We killed Sushmita Banerjee because she was an Indian spy,” the group’s spokesman Qari Hamza told the Daily Beast, the online home of Newsweek magazine.

http://timesofindia.indiatimes.com/india/Taliban-group-We-killed-Sushmita-Banerjee-because-she-was-an-Indian-spy/articleshow/22583263.cms

[4] Although Banerjee’s face had been obliterated by several of the 15-20 bullets that police say her executioners had fired into her, Nayab immediately realized who the dead woman was.  “She was not wearing a normal Afghan village woman’s dress and chador,” he told The Daily Beast. “So I knew it was the Indian wife of Janbaz.”

http://www.thedailybeast.com/articles/2013/09/14/we-killed-sushmita-banerjee-says-renegade-taliban-militia.html

[9] “We found her bullet-riddled body near a madrassa on the outskirts of Sharan city this morning,” provincial police chief Dawlat Khan Zadran said, confirming earlier reports from Indian media. “She had been shot 20 times and some of her hair had been ripped off by the militants,” he said, adding that masked men had tied up the writer and her Afghan husband, local businessman Jaanbaz Khan, before executing her.

http://www.abc.net.au/news/2013-09-06/taliban-sushmita-banerjee-afghanistan-indian-authors/4939634

[11] Gretchen Peters, Haqqani Network Financing: The Evo;lution of an Industry, Harmony Program, The Compating Terrorism Center at West Point, July 2012.