தடை உத்தரவை மீறி ஐதராபாத்தில் கலவரம் : துணை ராணுவப்படை குவிப்பு
மார்ச் 30,2010,00:00 IST
ஹைதராபாதில் மீண்டும் கலவரம்: இளைஞர் சாவு; தேர்வுகள் ஒத்திவைப்பு
First Published : 31 Mar 2010 02:18:46 AM IST
http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=India&artid=219825&SectionID=130&MainSectionID=130&SEO=…….81

ஓஸோமா பின் லேடனின் பேச்சின் எதிரொலியே, முஸ்லீம்கள் அல்லாத மக்கள் தாக்கப் படுவது என்ற கருத்து வலுப்படுவதாக தீவிரவாத-ஆராய்ச்சி வல்லுனர்கள் கூறுகின்றனர்.
எதிர்பார்த்தபடியே உள்ளூர்த்றை தனக்கேயுரித்தான வகையில் ‘இந்த கல்லெறி சம்பவங்கள் எல்லாம் சாதாரணமான சண்டை-தகராறு, கைகலப்பு விஷயங்கள். துரதிருஷ்டவசமாக இரண்டு குழுக்களிலும் மோசமானவர்கள் இருக்கிறர்கள்”.
“மண்டைக் காய்ந்த ரவுடிகள்” இந்த வன்முறையைத் தூண்டிவிட்டிருக்ககாம். அவர்கள் இதற்காக அதிகவிலை கொடுக்க வேண்டியிருக்கும். எந்த நிறக்கொடியைப் பறக்கவிடவேண்டும் என்பதற்கான ஏற்பட்ட “குழாயடி சண்டையைப் போன்றதுதான் இது”, என்றெல்லாம் அலட்சியமாகப் பேசியுள்ளார். இதுவே முஸ்லீம்கள் பாத்திக்கப் பட்டிருந்தால் வேறுவிதமாகப் பேசியிருப்பார் போல இருக்கிறது!
மறுபடியும் இந்திய செக்யூலரிஸம் வென்றுள்ளது.
|
என்னத்தான் உண்மைகளை மறைக்க முயன்றாலும் உண்மை வெளிச்சத்திற்கு வரத்தான் செய்யும் போலும்!

இதென்ன காஷ்மீரா ஹைதராபாதா?
அதாவது, குழாயடி – சாதாரண சண்டை, கை-கலப்பு என்றெல்லாம் உள்-துறை சொல்லியிருக்கிறதே, பிறகு ஏன் இந்த நிலை? மக்கள் ஏன் பட்டப்பகலில் நடந்து செல்லமுடியாத நிலை? சென்னையிலே குஷ்பு என்னவேண்டுமானாலும் பேச உச்சநீதிமன்றம் துணைக்கு வருகிறது! ஆனால் இங்கு?

சாதாரண குழாயடி சண்டைக்கு இவ்வளவு பாதுகாப்பா
பாவம், இவர் அத்தகைய நவீன ஆயுதத்துடன் இருக்க வேண்டிய நிலை மக்களுக்குப் புரியவில்லை! காஷ்மீரமாக இருந்தால், அந்த மெஹ்பூபா பிரியாணியே கொடுத்திருப்பார்!

இதென்ன காஷ்மீரா ஹைதராபாதா - அதாவது இந்தியர்கள் என்ன பாகிஸ்தானில் உள்ள ஹைதராபாதிலிருந்தா தண்ணீர் பிடுத்துக் கொண்டு வருகிறார்கள்?
இதென்ன காஷ்மீரா ஹைதராபாதா – அதாவது இந்தியர்கள் என்ன பாகிஸ்தானில் உள்ள ஹைதராபாதிலிருந்தா தண்ணீர் பிடுத்துக் கொண்டு வருகிறார்கள்?

ஒஹோ இந்த கலர் தான் பிடிக்கவில்லை போலும்
இந்த கலர் கொடிக்கு தான் இவ்வளவு கலாட்டா, கைகலப்பு……………….என்றால், உள்-துறை எதை மறைக்கிறது? யாருக்கு பாதுகாப்புக் கொடுக்கிறது?

ஐயோ தண்ணிர் பிடிக்கவே இவ்வளவு பிரச்சினையா அதுதான் உள்துறை சொல்லியிருக்கிறடு குழாயடிச் சண்டை என்று
அப்பாடொயோவ், ஒரு குடம் தண்ணீர் பிடித்துவர, இவ்வலவு பாதுகாப்பா? அங்கே பாருங்கள், அந்த வீரர் அந்த அளவிற்கு குண்டு பாயா-ஜேக்கிட் அணிந்து உட்கார்ந்திருக்கிறார். இந்த ஆணோ துண்டு-பனியனுடனும், அந்த பெண் சேலைக் கட்டியு ஒரு குடம் நீர் பிடித்துக் கொண்டு செல்கின்றனர்?
இந்தபெண் அந்த ருக்ஸானாவைவிட கேவலமானவளா?
இவளுக்கு ஏன் ஏ.கே. 47 கொடுக்கக் கூடாது?
அட, குறைந்த பட்சம், ஒரு குடம் நீர் ஆவது, பிடித்துக் கொடுத்திருக்கலாம் இல்லையா?

பிறகு இவர்கள் ஏன் இப்படி திகைத்து, பீதியில் இருக்கவேண்டும்
ஆமாம் அந்த அழகி சானியா அங்குதான் இருக்கிறாராமே?
போதாக்குறைக்கு பாகிஸ்தான் மாப்பிள்ளை வேறு!
அவரே, இப்பிரச்சினையைத் தீர்த்திருக்கலாமே?
ஐதராபாத்தில் தடை உத்தரவை மீறி, நேற்று மீண்டும் பல பகுதிகளில் கலவரம் வெடித்தது. இதையடுத்து, கலவரத்தை கட்டுப்படுத்துவதற்காக, ஏராளமான துணை ராணுவப்படையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் பல பகுதிகளுக்கு தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத், மார்ச் 30: ஆந்திரத் தலைநகர் ஹைதராபாதில் செவ்வாய்க்கிழமை மீண்டும் கலவரம் வெடித்தது. இதில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 9 பேர் காயமடைந்தனர். இதையடுத்து புதிய பகுதிகளுக்கும் கலவரம் பரவவே, புதிதாக 8 பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற ஊர்வலத்தில் ஏற்பட்ட வன்முறையில் 2 போலீஸ்காரர் உள்பட 8 பேர் காயமடைந்தனர். புதன்கிழமை வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
÷ஊரடங்கு அமலில் இருப்பதால் இந்தப் பகுதியில் உள்ள 140 தேர்வு மையங்களில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை முதல் தொடங்கவிருந்த உஸ்மானியா பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
அனுமன் ஜெயந்தி: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். இருப்பினும் ஹிந்து அமைப்புகள் சார்பில் நடத்தப்பட்ட ஊர்வலத்தில் வன்முறை வெடித்தது. முஷீராபாத் பகுதியில் ஊர்வலம் சென்றபோது கல்வீசி தாக்கப்பட்டது. இதில் 2 போலீஸ்காரர்கள் உள்பட 8 பேர் காயமடைந்தனர். இதையடுத்து ராமகோபால்பேட்டை, நல்லகுட்டா, சலீம்நகர் ஆகிய பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன. மத்திய படை போலீஸ் உடனடியாக வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கஹாஸ்குடா பகுதியில் உள்ள வழிபாட்டு தலம் தாக்கப்படுவதாக வதந்தி பரவியதை அடுத்து அங்கு கடைகள் அடைக்கப்பட்டன.
ஹைதராபாத் பழைய நகரப் பகுதியில் சனிக்கிழமை ஒரு வழிபாட்டுத் தலம் அருகே மற்றொரு மதத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது மதத்தின் கொடியை ஏற்ற முயன்றனர். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது இரு தரப்பினரும் கல்வீசித் தாக்கிக் கொண்டனர். போலீசார் குவிக்கப்பட்டு மோதல் தவிர்க்கப்பட்டது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இருதரப்பினரும் மீண்டும் மோதிக்கொண்டனர். அப்போது கல்வீச்சில் 36 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மாநில அரசின் வேண்டுகோளுக்கு இணங்க கூடுதலாக 1000 துணை ராணுவ வீரர்களை மத்திய அரசு அனுப்பி வைத்தது. கலவரத்தில் இதுவரை இருவர் உயிரிழந்தனர். 90 பேர் காயமடைந்தனர். கலவரம் தொடர்பாக இதுவரை 130 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணைக் குழு: வகுப்புக் கலவரம் குறித்து விசாரிக்க விசாரணைக் குழுவை ஹைதராபாத்துக்கு அனுப்ப சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையம் முடிவு செய்துள்ளது. விசாரணை அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று ஆணையத்தின் தலைவர் ஷபி குரேஷி தெரிவித்தார். ÷கலவரங்கள் தொடர்பாக முழு அறிக்கையை தாக்கல் செய்யுமாறு மாநில அரசிடம் கேட்டுள்ளோம் என்றார் அவர்.
ஆந்திரா, ஐதராபாத்தில் மூசாபவுலி என்ற இடத்தில், இரு தினங்களுக்கு முன், இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. சாலையோரத்தில் கொடி மரம் அமைப்பது தொடர்பான விவகாரத்தில் இந்த மோதல் வெடித்தது. இரு தரப்பிலும், ஒருவரை ஒருவர் கல் வீசி தாக்கினர். கத்தி குத்து போன்ற சம்பவங்களும் நடந்தன. வழிபாட்டு தலங்கள் தாக்கப்பட்டன. இந்த சம்பவத்தில் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஐதராபாத்தின் பல பகுதிகளுக்கும் கலவரம் பரவியது. பெட்ரோல் பங்க்குகள், கடைகள் போன்றவற்றை கலவர கும்பல் சூறையாடியது. இதைத் தொடர்ந்து, அந்த பகுதிகளில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கூடுதல் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
நேற்று ஆந்திர சட்டசபையில் இந்த பிரச்னை எதிரொலித்தது. ‘உளவுத் துறையின் தோல்வியே, இந்த கலவரத்துக்கு காரணம்’ என, எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டினர். உள்துறை அமைச்சர் சபீதா ரெட்டி கூறுகையில், ‘தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அமைதி திரும்புவதற்கு, அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும்’ என்றார். முதல்வர் ரோசய்யாவும், கலவரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். ஆனால், நேற்று பகலில் மீண்டும் பல பகுதிகளில் கலவரம் வெடித்தது. மொகல்புரா, லால் தர்வாசா போன்ற பகுதிகளில் கல்வீச்சு சம்பவங்கள் அரங்கேறின. குறிப்பாக, ஐதராபாத் பழைய நகரப் பகுதிகளில் இதனால் பெரும் பதட்டம் நிலவியது. தடை உத்தரவை பொருட்படுத்தாமல், பலர் வீதிக்கு வந்து, வன்முறையில் ஈடுபட்டனர். போலீசார், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு வன்முறையாளர்களை கலைத்தனர். இதையடுத்து, மேலும், 17 போலீஸ் ஸ்டேஷன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டது.
வன்முறையாளர்கள் எஸ்.எம்.எஸ்., மூலம் வதந்தியை பரப்பியதால், பெரும் பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து, ஐதராபாத் முழுவதும் துணை ராணுவப் படையினர் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 86 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கலவரம் தொடர்பாக, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா, உள்துறை அமைச்சர் சிதம்பரம் ஆகியோர், முதல்வர் ரோசய்யாவை போனில் தொடர்பு கொண்டு நிலைமை குறித்து விசாரித்தனர். கூடுதலாக துணை ராணுவப் படைகளும் ஐதராபாத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஐதராபாத்தில் அவ்வப்போது பெரிய அளவில் மதக் கலவரம் நடப்பது வழக்கமாக உள்ளது. கடந்த 1990ல் ஏற்பட்ட கலவரத்தில் 200 பேர் பலியாயினர். இருந்தாலும், கடந்த பத்தாண்டுகளாக பெரிய அளவில் மத கலவரம் எதுவும் நடக்கவில்லை. தற்போது மீண்டும் அங்கும் கலவரம் நடந்துள்ளது, பொதுமக்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அண்மைய பின்னூட்டங்கள்